Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Tamil Drama   - நாடகத் தமிழ > Tamil Cinema -  தமிழ் திரைப் படம் > உன்னைப்போல் ஒருவன் - விமர்சனம் - கு.கண்ணன், பெரியார் திராவிடர்கழகம்

CONTENTS OF
THIS SECTION

உன்னைப்போல் ஒருவன் in Thats Tamil

கலைப்படமாக இருந்தாலும் கொலைப்படமாக இருந்தாலும் மக்களுக்கான படமாக இருக்கவேண்டும்... மக்களைப் பிரதிபலிக்கும் படமாக இருக்கவேண்டும். அவையே மக்களின் வரவேற்பைப் பெறும். இதுதான் நல்ல சினிமாவுக்கான பார்முலா. அதை கமல்ஹாஸன் இந்த முறை முயன்று பார்த்து ஜெயித்தும் காட்டியிருக்கிறார்.

"தீவிரவாதத்தின் விளைவுகள் உடனடியாக மக்களைத் தாக்குகின்றன... ஆனால் அந்தத் தீவிரவாதத்தைத் தந்தவர்களுக்கோ தண்டனைகள் தாமதமாக, வலிக்காமல் வழங்கப்படுகின்றன... தீவிரவாதத்துக்கு உடனடி தண்டனை தீவிரவாதமே..." என்ற ஒரு தனி மனிதனின் கோபம்தான் 'உன்னைப்போல் ஒருவன்'.

திருவாளர் பொதுஜனங்களுள் ஒருவரான கமல்ஹாஸன் பல நாள் முயன்று, ஒரு சுபநாளில் வெடிகுண்டு தயாரித்து முடிக்கிறார். ஒரு நாள் காலை அவற்றைக் கருப்புப் பைகளில் வைத்து காவல் நிலையம், ரயில், ஷாப்பிங் மால் என நகரின் முக்கியப் பகுதிகளிலெல்லாம் வைக்கிறார்.

பின்னர் கூலாக கடைவீதிக்குப் போய் மனைவி போட்டுக் கொடுத்த பட்டியலில் உள்ள காய்கறிகள் வாங்கிக் கொண்டு, பாதி கட்டி முடித்த ஒரு கட்டடத்தின் உச்சிக்குப் போகிறார். ஒரு பலகையை விரித்துப் போட்டு, கையோடு கொண்டு வந்திருக்கும் அத்தனை கம்ப்யூட்டர் சாதனங்களையும் பரப்பி, அசெம்பிள் செய்து, நிதானமாக மாநகர காவல்துறை கமிஷனர் மோகன்லாலுக்கு போன் செய்கிறார். தான் குண்டு வைத்திருக்கும் விவரங்களை தெளிவாக சொல்கிறார்.

அடுத்த நொடி கமிஷனர் அலுவலகம் பரபரப்பாகிறது, முதல்வர் லைனில் வருகிறார். உள்துறைச் செயலாளர் லட்சுமி, கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்படுகிறார். தீவிரவாத பேரம் ஆரம்பிக்கப்படுகிறது.

வைத்திருக்கும் குண்டுகள் வெடிக்காமல் இருக்க மும்பை, கோவை, அசாம் என பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் குடித்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான நான்கு படுபயங்கர தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார் கமல்.

வேறு வழியில்லை... நிலைமையின் தீவிரம் புரிந்து தீவிரவாதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்கிறது அரசு. அதேநேரம் கமல்ஹாஸனின் இந்த செயலுக்கான பின்னணி, அவர் இருக்கும் இடத்தையும் காண முயற்சிக்கிறார் கமிஷனர்.

கமல்ஹாஸனின் நிபந்தனைப்படி தீவிரவாதிகள் நால்வரும் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவனை மட்டும் உடன் செல்லும் அதிரடிப்படை அதிகாரி திடீரென பிடித்துக் கொள்ள, மற்ற மூவரும் தப்பித்து அங்கு நிறுத்தப்பட்டுள்ள ஜீப்பில் ஏறுகிறார்கள். அடுத்த நொடியில் ஜீப் வெடித்துச் சிதற, அதிர்ச்சியில் உறைந்து போகிறது காவல்துறை.

அந்த நான்காவது நபரையும் கொல்ல வேண்டும் என கமலிடமிருந்து அடுத்த போன் வருகிறது. தொடரும் விவாதங்கள், மிரட்டல்களுக்குப் பிறகு அந்த நான்காவது தீவிரவாதியும் கொல்லப்படுகிறான்.

நடிப்பு: கமல்ஹாஸன், மோகன்லால், கணேஷ் வெங்கட்ராம், லட்சுமி, பரத் ரெட்டி, அனுஜா

ஒளிப்பதிவு: மனோஜ் சோனி

இசை : ஸ்ருதிஹாஸன்

எடிட்டிங்: ராமேஷ்வர் பகவத்

கலை: தோட்டா தரணி

இயக்கம்: சக்ரி டோலட்டி

தயாரிப்பு: கமல்ஹாஸன், சந்திரஹாஸன், ரோனி ஸ்க்ரூவாலா

மக்கள் தொடர்பு: நிகில்

 

Tamil Cinema - தமிழ்த் திரைப் படம்

உன்னைப்போல் ஒருவன் - விமர்சனம்

கு.கண்ணன், பெரியார் திராவிடர்கழகம்
சென்னை, 19 September 2009

"ஓடாத மானும், போராடாத மனித இனமும்
வென்றதாக வராலாறு இல்லை"

 " 'உன்னைப்போல் ஒருவன்'. தீவிரவாதம், போராளிகள் இப்படிப்பட்ட நல்ல வார்த்தைகள் அடிக்கடி வந்து வந்து போகின்றன... தீவிரவாதம் வேறு பயங்கரவாதம் வேறு என்பதனை தாங்கள் நண்கு அறிந்தவர்கள். மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களாக நாங்கள் இருந்தாலும் உலகில் நடைபெரும், நடைப்பெற்ற எல்லா விடுதலைப் போராட்டத்தையும் ஆதரித்தவர்கள், ஆதரித்துக் கொண்டு இருப்பவர்கள். (எ.கா) ஈழம், கியூபா, தென்ஆப்பிரிக்கா, வியட்நாம், பங்களாதேஷ், பாலஸ்தீனம், பர்மா, கிழக்குதீமுர், மலேசியா, தலிபான், ஈராக்... மனிதன் மனிதனாக வாழ மேலும் சுதந்திரமாக வாழ அவனுக்கு விடுதலை நிச்சம் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது... மற்றவர்கள் பிரச்சனையை தொடுவதற்குமுன் நாம் சரியா என்பதனை பரிசோதித்துப்பார்துக்கொள்வது நல்லது. "


பெரியாரின் கொள்கைகளை முடிந்தவரை கடைபிடித்துக் கொண்டு இருக்கும் எங்களுக்கு, தாங்கள் பார்பனராக இருந்தாலும் தங்களின் மீது எங்களுக்கு நல்ல மரியாதை உள்ளது (கடவுள் இல்லை என்று சொல்வதால் மட்டும் இல்லை). திரைப்படத்துறை எங்களுக்கு எதிரான துறையாக இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் அத்துறையை அதிகம் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்களோ அத்துறையையே அதிகம் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நாட்டை ஆள அடிப்படை கல்வி தகுதி வேண்டுமோ இல்லையோ திரைப்படத் துறையில் கால்பதித்து இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எப்பொழுதோ ஏற்பட்டுவிட்டது. பெரியாரின் தொண்டர்களாகிய நாங்கள் அத்திப் பூத்தார் போல்தான் திரைப்படம் பார்ப்பதுண்டு. அதிலும் தங்களுடைய திரைப்படம் என்றால் பெரும்பாலும் தவறாமல் பார்ப்பதுண்டு.

அப்படி பார்த்ததுதான் 'உன்னைப்போல் ஒருவன்'. தீவிரவாதம், போராளிகள் இப்படிப்பட்ட நல்ல வார்த்தைகள் அடிக்கடி வந்து வந்து போகின்றன. பொதுவாகவே பொது நிகழ்சிகளில் தாங்கள் பெரும்பாலும் பிறமொழி கலவாமல் தமிழிலே பேசுவீர்கள். ஆனால் திரைப்படத்தில் மட்டும் ஆங்கில வசனங்கள் அதிகம் ஆளுமை கொள்கிறது. இது தவிர்கமுடியாது என்பதனை நாங்களும் அறிவோம். வரும் திரைப்படங்களில் அந்த ஆங்கில வசனங்களுக்கு தமிழாக்கம் அதாவது (Running script) வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

சரி நாம் எதைப்பற்றி பேச வந்தோமோ அந்த இடத்திற்க்கு வருவது நல்லது. தீவிரவாதம் வேறு பயங்கரவாதம் வேறு என்பதனை தாங்கள் நண்கு அறிந்தவர்கள். மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களாக நாங்கள் இருந்தாலும் உலகில் நடைபெரும், நடைப்பெற்ற எல்லா விடுதலைப் போராட்டத்தையும் ஆதரித்தவர்கள், ஆதரித்துக் கொண்டு இருப்பவர்கள். (எ.கா) ஈழம், கியூபா, தென்ஆப்பிரிக்கா, வியட்நாம், பங்களாதேஷ், பாலஸ்தீனம், பர்மா, கிழக்குதீமுர், மலேசியா, தலிபான், ஈராக்... மனிதன் மனிதனாக வாழ மேலும் சுதந்திரமாக வாழ அவனுக்கு விடுதலை நிச்சம் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.பொதுவாக இஸ்லாமியர்களை மட்டும் பயங்கரவாதி என்று கூறிவிடமுடியாது.

"நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டுமென்பதை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்" - மாவோ

யார் எதிரி என்பதை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை, தாங்கள் நண்கு அறிவிர்கள்.

சமத்துவ மற்றும் பொதுடமை ஆட்சியை ஆயுதப் புரட்சியால் மட்டுமே அடைய முடியும் என்று முழங்கியவர் லெனின். முழங்கியது மட்டும் அல்ல செய்தும் காட்டியவர் என்பதனை தாங்கள் அறியாதது அல்ல.

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் ஒழிக்கமுடியும் என்ற தங்கள் கருத்தை எங்காளால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ருஷ்யா, கியூபா, வியட்நாம் இன்னும் பல நாடுகள் வென்றது தீவிரவாதத்தால் தான் என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தாங்கள் தீவிரவாதம் என்று எதனை கூறுகிறீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. இஸ்லாமியன் குண்டு வைத்தான் என்றால் அந்த குண்டுவெடிப்புக்கு முழுபொறுப்பையும் அவன் ஏற்றுக்கொள்வான்.

ஆனால் பல மாதங்களுக்கு முன்பு இந்து மதத்தைத் சேர்ந்தவர்கள் குண்டு வைத்ததுமில்லாமல் அந்த பழியை இஸ்லாம் மீது போட்டார்கள் என்பதனை இந்த உலகமே நண்கு அறியும்.

அந்த வழக்கை விசாரனை செய்த உயர் அதிகாரிகளையும் கொன்றுவிட்டது இந்த காங்கிரசு அரசு என்பதனையும் சற்று அரசியல் அறிவு உள்ளவர்கள் நண்கு அறிவார்கள்.

வீரப்பன் உயிருடன் இருந்தவரை தான் தமிழனுக்கு கர்நாடகாவில் மதிப்பு, தற்பொழுது பாருங்கள் ஒகேனேகல் அவனுடையது என்கிறான். அப்படிப்பட்ட வீரன் வீரப்பனை இந்த அரசாங்கத்தால் சோற்றிலே நஞ்சு வைத்துதான் சாகடிக்க முடிந்தது.

மும்பாய், குஜராத் மற்றும் எங்கு எது நாடந்தாலும் தமிழன் கவலைப்படுவதில்லை, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக உள்ளது என்ற தங்கள் கருத்து எங்களுக்கு மிக வியப்பாக உள்ளது.

குஜராத்தில் நிலநடுக்கம், பதறினான் தமிழன்! கார்க்கில் போர் உறைந்து போனான் தமிழன் (அதிகம் உயிர் இழந்தது தமிழ்நாட்டு சாகோதரர்கள்தான்)

தமிழ்நாட்டிலே இதுவரை பல நூறு மீனவர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டார்களே என்ன செய்தார்கள் அயல் மாநிலத்தவர்கள். அதனை தாங்கள் எப்படி மறந்தீர்கள்...

இதோ சில நூறு மைல்களுக்கு அப்பால் நம் தொப்புள் கொடி கொத்து கொத்தாய் செத்து மடிந்தார்களே அப்பொழுதெல்லாம் எங்கே போனார்கள் இந்திய சாகோதரர்கள்.

காஷ்மீரிலே நடக்கும் கொடுமை உலகத்திலே வேறு எங்கேவாது நடக்குமா? இந்திய ராணுவமே இந்திய குடிமக்களான காஷ்மீர பெண்களை பாலியல் வல்லுறவுக் கொண்டு பின்பு கொலைசெய்த ஆதாரங்கள் எத்தனையோ உள்ளனவே? இதையெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்ட முயற்ச்சித்து இருக்கலாமே? அதைகருத்தில் கொள்ளாமல் விடுதலைக்காக போராடும் எங்கள் சகோதரர்களின் போராட்டதை கொச்சைப்படுத்துவதைக் எங்களால் கண்டிக்காமல் இருக்க முடியாது.

சிறிய கதை ஒன்று ஞாபகதிற்க்கு வந்தது

காந்தியாரிடம் ஒர் அம்மா தன் மகனை அழைத்துச்சென்று, தன் மகன் அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறான், அவனுக்கு தாங்கள் அறிவுரை கூறுங்கள் என்று கேட்டார். அவர் அடுத்தவாரம் வாருங்களேன் எனக்கூறிவிட்டார். ஒர் வாரம் கழிந்த பின் தாயும், மகனும் காந்தியாரை சந்திக்க சென்றார்கள். காந்தியார் அந்த சிறுவனை பார்த்துக் கூறினார், இனிப்பு அதிகம் சாப்பிடாதே அது உடலுக்கு கெடுவிளைக்கும் என்றார். அந்தத்தாய் சற்றுக் கடுகடுப்பானால், இதை அவர் சென்றவாரமே கூறி இருக்கலாமே ஏன் ஒரு வாரம் கழித்து வரச்சொன்னீர்கள் என்று காந்தியாரை பார்த்து அந்தத்தாய் வினாவினார். அதற்க்கு அவர் தாங்கள் முதலில் வந்த பொழுது நானும் அதிக இனிப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். தாங்கள் வந்து சென்றப்பிறகு தான் நானும் இனிப்பு சாப்பிடுவதை குறைத்துவிட்டேன், அதன் நன்மைகளையும் நான் உணர்ந்துவிட்டாதால் எனக்கு தங்கள் மகனுக்கு அறிவுரை கூறும் தகுதி வந்தது எனக் கூறினார்.

மற்றவர்கள் பிரச்சனையை தொடுவதற்குமுன் நாம் சரியா என்பதனை பரிசோதித்துப்பார்துக்கொள்வது நல்லது.

இந்தியா என்பது ஒர் நாடு அல்ல, அது பல இனங்களின் கூட்டமைப்பு என்பதனை நாம் உணரவேண்டும். ஒரே இனமான வான்கோழியையும், கோழியையும் எப்படி ஓரே கூண்டில் அடைத்து வைக்க முடியாதோ, அதே போல் தான் இந்தியாவிலுள்ள எல்லா இனங்களையும் ஒன்றாய் சேர்க்கமுடியாது. அவர்கள் தனித்தனியாய் வாழ்வாதால் என்ன துன்பம் யாருக்கென்ன நஷ்டம். இந்தியா வல்லரசாக வேண்டுமெனக் கூறிக்கொண்டிருப்பவர்களே? இந்தியா வல்லரசனால் என்ன மாற்றம் நடக்கும் நம் வாழ்வில்...

விரைவில் இந்தியா வல்லரசாகப் போகிறது எனக் கூறிக்கொண்டிருப்பவர்களே,

மும்பாய் தாஜ் விடுதியை பயங்கராவதிகள் தாக்கிய பொழுது இந்திய 24 மணி நேரம் கழித்துதான் விமானத்தில் அதிரேடிப்படையை அனுப்பியது. இந்தியா இந்த நிலைமையில் இருக்கும் பொழுது இந்திய விரைவில் எப்படி வல்லரசாக முடியும்...

காந்தி சொன்னார் அடுதத ஜென்மம் ஒன்று இருந்தால் நான் ஆதிதிராவிடனாக அதுவும் மனிதகழிவுகளை சுத்தம் செய்யும் வகுப்பிலே பிறந்து அந்த அரும்பணியை செய்து இறைவனடி போய் சேரவேண்டும் என்றார். அதற்க்கு சட்டமேதை பாபாசாகிப் சொன்னார், அடுத்த ஜென்மம் எதற்க்கு காந்தியார் அவர்களே இப்பொழுதே வாருங்கள் அந்த பணியை நானே தங்களுக்கு வழங்குகிறேன் தராளமாக செய்யுங்கள் என்றார்.

அதே மோசடியைத்தான் இன்று மோடியும் செய்துக் கொண்டிருக்கிறார். இந்தியரசின் தொடர்வண்டித்துறையில் மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் உள்ள அந்த வகுப்பை சார்ந்தவர்களைப்பார்த்து அவர் கூறியிருக்கிறார், அவர்கள் எல்லொரும் நேரடியாக சொர்க்கத்துக்கு போவார்களாம்.இந்த நூற்றாண்டிலும் இப்படி திமிராய் பேசிக்கொண்டிருப்பவர்களை நாங்கள் எப்படி ஏற்றுகொள்ளமுடியும்.

வெள்ளைக்காரன் எப்படி நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியால் ஆண்டு விட்டு சென்றானோ,அதே வேலையைத்தான் இந்த காங்கிரசு அரசும் செய்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக அவர்களுக்கு எந்தப்பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதில் அக்கறை இல்லை. முல்லை பெரியாறு, காவிரி,பாலாறு, தமிழக மீனவர் படுகொலை, ஒகேனேகல், காஷ்மீர், அஸ்ஸாம், மணீப்பூர், அருணாச்சலப்பிரதேசம்,பீகார், ஒரிசா, ஆந்திரா, மேற்குவங்கம், ராஜஸ்தான், குஜராத் மீனவர்கள் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.

நான் இந்தியன் இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன். தாங்கள் இந்தியானா இல்லையா என்பதனை முடிவு செய்யும் பொறுப்பை தங்களுடைய பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

குறைகளை மட்டும் கொட்டித்திர்த்துவிட்டேன் என்று குறைப்பட்டு கொள்ளாதீர்கள், படத்தில் இந்த காட்சிகளை தவிர மற்ற அனைத்துக் காட்சிகளுமே சிறப்பாக அமைந்துள்ளது (காவற்துறை ஆணையாளரை தமிழனாக காண்பித்து இருக்காலாம்).

பகுத்தறிவாதிகளாக இருந்தாலும் இப்பொழுதெல்லாம் இப்படிதான் சிந்திக்கவேண்டியுள்ளது, எமது உறவுகள் கொத்து கொத்தாய் சாகடிக்கப்பட்ட பொழுது சிறுவருத்தம் கூட தெரிவிக்காத இந்தியர்கள் (தமிழர்களைத்தவிர) தாக்கப்படும் பொழுது நாங்கள் ஏன் அவர்களுக்காக வருத்தப்பட வேண்டும்...

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home