|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Thirumuraikal > 63 Nayanmars - Sri Swami Sivananda > Periya Puranam - பெரியபுராணம் - சேக்கிழார் > Canto 1, Carukkam -1(திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்) > Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam) > Canto 1, Carukkam -4 (mummaiyAl ulakANTa carukkam) > Canto 1, Carukkam 5 (tiruninRa carukkam) > Canto 2 Carukkam - 6 part 1 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam - 6 part 2 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam - 6 part 3 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam 7 -13 > koRRavankuTi umApati civAcAriyAr's cEkkizAr cuvAmikaL purANam - History of Periyapuranam
periya purANam of cEkkizAr - Canto 2
Carukkam -6 part 2 (vampaRA
varivaNTuc carukkam)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் - இரண்டாம் காண்டம்
சருக்கம் 6 (வம்பறா வரிவண்டுச் சருக்கம்)
6.1 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - இரண்டாம் பகுதி (2599 -3154)
Acknowledgements:Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 2599 | திரு மடப் புறச் சுற்றினில் தீய பாதகத்தோர் மருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப் பரிசனத்தவர் பதைப் பொரும் சிதைத்து நீக்கி அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார் | 6.1.701 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2600 | கழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத் தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்ன பொழுது மாதவர் துயிலும் இத்திரு மடப் புறம்பு பழுது செய்வதோ பாவிகாள் எனப் பரிந்து அருளி | 6.1.702 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2601 | என் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன் அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம் முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் மன் புரக்கும் மெய்ம்முறை வழு என மனம் கொண்டார் | 6.1.703 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2602 | வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப் பையவே சென்று பாண்டியற்கு ஆக எனப் பணித்தார் | 6.1.704 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2603 | பாண்டிமா தேவியார் தமது பொற்பில் ஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும் மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் தீண்டி இடப் பேறு உடையன் ஆதலாலும் 6.1.705 |
2604
| திருந்து இசைப் பதிகம் தொடை திரு ஆல வாயின் | மருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால் விரிந்த வெம் தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப் பெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றதன்றே 6.1.706 |
2605
| செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில் | நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக் கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப வெய்யவன் குண கடல் இடை எழுந்தன மீது 6.1.707 |
2606
| இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில் | குரவ ஓதியார் குலச் சிறை யாருடன் கேட்டுச் சிவபுரப் பிள்ளை யாரை இத் தீயவர் நாட்டு வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி 6.1.708 |
2607
| பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு | திரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்து கரும் உருட்ட மண்கையர் செய்தீங்கு இது கடைக்கால் வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது 6.1.709 |
2608
| அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள் | உரை செயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுத விரைவும் அச்சமும் மேல் கொளக் குலச்சிறையாரும் வரை செய் பொன்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் 6.1.710 |
2609
| வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை | காந்து வெந்தழல் கதும் என மெய் எலாம் கவர்ந்து போந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்து தீந்து போம்படி எழுந்தது விழுந்துடல் திரங்க 6.1.711 |
2610
| உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க | அணையல் உற்றவர் அருகு தூரத்து இடை அகலப் புணர் இளம் கதலிக் குருத்தொடு தளிர் புடையே கொணரினும் சுருக்கொண்டு அவை நுண்துகள் ஆக 6.1.712 |
2611
| மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த | திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல் மேல் உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆகக் கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன் 6.1.713 |
2612
| ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம் | மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து போன கங்குலில் புகுந்தது இன் விளைவு கொல் என்பார் மான முன் தெரியா வகை மன்னன் மாட்டு அணைந்தார் 6.1.714 |
2613
| மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து | மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் பீலிகொடு தை வருதற்கு எடுத்த போது பிடித்த மேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு வெப்பின் 6.1.715 |
2614
| கருகிய மாசு உடையக்கைத் தீயோர் தங்கள் | அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று 6.1.716 |
2615
| பாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம் | பூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மை ஆண்டு கொண்டவர் பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்கு மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற 6.1.717 |
2616
| கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து | மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் செற்றவர் அன்பர் தம்பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார் 6.1.718 |
2617
| இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு | வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து பெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று 6.1.719 |
2618
| காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும் | மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள் மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் தீய இப்பிணியே அன்றி இப் பிறவியும் தீரும் என்றார் 6.1.720 |
2619
| மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற | ஞான சம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல ஆன போது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும் மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல் உற்றான் 6.1.721 |
2620
| மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் | இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி மன்னிய சைவ நீதி மா மறைச் சிறுவர் வந்தால் அன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன் என்றான் 6.1.722 |
2621
| என்று முன் கூறிப் பின்னும் யான் உற்ற பிணியைத் தீர்த்து | வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச் சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார் 6.1.723 |
2622
| பாய் உடைப் பாதகத்தோர் திரு மடப் பாங்கு செய்த | தீவினைத் தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் மேய அத்துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு நாயகப் பிள்ளையார் தம் நற்பதம் பணிவார் ஆகி 6.1.724 |
2623
| மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல் கொண்டே | அன்னமென் நடையினாரும் அணிமணிச் சிவிகை ஏறி மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும் முன் அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார் 6.1.725 |
2624
| திருமடம் சாரச் சென்று சேயரிக் கண்ணினார் முன் | வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப் பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்து கின்றார் 6.1.726 |
2625
| பாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும் | ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை ஆண் தகையாரும் ஈண்ட அழையும் என்று அருளிச் செய்ய மீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரை உறும் விருப்பின் மிக்கார் 6.1.727 |
2626
| ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை | வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக் கொழுந்தைத் தேன் நக்க மலர்க் கொன்றைச் செஞ் சடையார் சீர் தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள் 6.1.728 |
2627
| கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே | மண்டிய கண் அருவி நீர் பாய மலர்க் கை குவித்துப் புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நில முற விழுந்தார் கொண்ட குறிப் போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய் 6.1.729 |
2628
| உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித் | தரையின் மிசைப் புரண்டு அயந்து சரண கமலம் பற்றிக் கரையில் கவலைக் கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு 6.1.730 |
2629
| அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட | இருவரையும் திருக்கையால் எடுத்து அருளித் தேற்றிடவும் தெரு மந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பு அருளிச் திருவுடையீர் உங்கள் பால் தீங்கு உளதோ என வினவ 6.1.731 |
2630
| வெஞ்சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே | அஞ்சினோம் திருமேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் வஞ்சகர் மற்று அவர் செய்த தீத்தொழில் போய் மன்னவன் பால் எஞ்சல் இலாக் கொடுவிதுப்பாய் எழா நின்றது எனத் தொழுது 6.1.732 |
2631
| வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம் | செய்யும் மதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால் மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் 6.1.733 |
2632
| என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர் | ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர் தம்மை இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில் வென்று மீனவனை வெண் நீறு அணிவிப்பன் விதியால் என்றார் 6.1.734 |
2633
| மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் | அழுந்தும் இடர்க் கடல் இடை நின்று அடியோமை எடுத்து அருள செழும் தரளச் சிவிகையின் மேல் தென்னாடு செய்தவத்தால் எழுந்து அருளப் பேறு உடையேம் என் பெறோம் எனத் தொழலும் 6.1.735 |
2634
| ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் | பாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்லச் சேவுயர் கொடியினார் தம் திரு உள்ளம் அறிவேன் என்று பூவலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார் 6.1.736 |
2635
| வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தினின்று | மெய்யணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்டச் செய்யவார் சடையார் மன்னும் திரு ஆல வாயுள் புக்கார் 6.1.737 |
2636
| நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்யத் | தீக் கனல் மேனியானே திருவுளமே என்று எண்ணில் பாக்கியப் பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை நோக்கி வண் தமிழ் செய் மாலைப் பதிகம் தான் நுவலல் உற்றார் 6.1.738 |
2637
| கான் இடை ஆடுவாரைக் காட்டு மா உரி முன் பாடித் | தேன் அலர் கொன்றையார் தம் திருவுளம் நோக்கிப் பின்னும் ஊனமில் வேத வேள்வி என்று எடுத்துத் துரையின் மாலை மானமில் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி 6.1.739 |
2638
| ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக் | காலனை மார்க் கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று ஞலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும் சீலமே ஆலவாயில் சிவ பெருமானே என்றார் 6.1.740 |
2639
| நாதர் தம் அருள் முன்பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப் | போதுவார் பணிந்து போற்றி விடை கொண்டு புனித நீற்று மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் 6.1.741 |
2640
| அம் மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச் | செம் மணிப் பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் எம் மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றி மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே 6.1.742 |
2641
| பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி | நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு எல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத 6.1.743 |
2642
| கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார் | நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு பண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப் புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் 6.1.744 |
2643
| தென்னவர் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீது | பின் வர அமைச்சர் முன்பு பெரும் தொண்டர் குழத்துச் செல்லப் பொன் அணி மாட வீதி ஊடு எழுந்து அருளிப் புக்கார் கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடையப் பிள்ளை 6.1.745 |
2644
| கொற்றவன் தன் பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப் | பொன் தட மதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற முன் துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப் பொன் பீடம் மற்றவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் 6.1.746 |
2645
| மந்திரி யாரைப் பின்னும் எதிர் செல மன்னன் ஏவச் | சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் நம் தனிச் சமயம் தன்னை நாட்டு மாறு என்று பின்னும் 6.1.747 |
2646
| நின் அற நெறியை நீயே காத்து அருள் செய்தி ஆகில் | அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும் முன் உற ஒக்கத் தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார் 6.1.748 |
2647
| பொய் தவம் ஆகக் கொண்ட புன் தலைச் சமணர் கூறச் | செய்தவப் பயன் வந்து எய்தும் செவ்வி முன் உறுதலாலே எய்திய தெய்வச் சார்வால் இரு திறத்தீரும் தீரும் கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான் 6.1.749 |
2648
| என்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லைத் | தென் தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார் வன் தனிப் பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு பொன் திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார் 6.1.750 |
2649
| குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும் | தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ் நாட்டு மன்னன் நிலத்து இடை வானின் நின்று நீள் இருள் நீங்க வந்த கலைச் செழும் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டார் 6.1.751 |
2650
| கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கித் | தண்டுணர் முடியின் பாங்கர்த் தமனிய பீடம் காட்ட வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை கொண்டவல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் 6.1.752 |
2651
| செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்று | விழி உற நோக்கல் ஆலே வெம்மை நோய் சிறிது நீங்கி அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக் கெழுவுறு பதியாது என்று விருப்புடன் கேட்ட போது 6.1.752 |
2652
| பொன்னி வளம் தரு நாட்டுப் புனல் பழனப் புறம் பணை சூழ் | கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் எனச் சிறந்த பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம் தென்னவன் முன்பு அருள் செய்தார் திருஞான சம்பந்தர் 6.1.754 |
2653
| பிள்ளையார் செம் பொன் மணிப் பீடத்தில் இருந்த பொழுது | உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர் கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோபத்தீத் துள்ளி எழும் எனக் கண்கள் சிவந்து பல சொல்லுவார் 6.1.755 |
2655
| காலை எழும் கதிரவனைப் புடை சூழும் கருமுகில் போல் | பீலி சேர் சமண் கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார் ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித் தாங்கு கோலுநூல் எடுத்து ஓதித் தலை திமிர்ப்பக் குரைத்தார்கள் 6.1.756 |
2655
| பிள்ளையார் அது கோளாப் பேசுக நும் பொருள் எல்லை | உள்ளவாறு என்று அருள ஊத்தைவாய்ப் பறி தலையார் துள்ளி எழும் அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற ஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி 6.1.757 |
2656
| தென்னவன் தன்னை நோக்கித் திருமேனி எளியர் போலும் | இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்ணிலார்கள் மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர் நல்கும் பின்னை இவ்வமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் 6.1.758 |
2657
| மாறனும் அவரை நோக்கி வருந்தநீ என்று மற்று | வேறு ஆவது என் கொல் என்மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள் தேறிய தெய்வத்தன்மை என்னிடைத் தெரிப்பீர் என்றான் 6.1.759 |
2658
| ஞான ஆரமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி | மானினேர் விழியினாய் கேள் மற்று எனைப் பாலன் என்று நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம்பாடி 6.1.760 |
2659
| பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் | சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும் தெற்று எனத் தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப 6.1.761 |
2660
| . மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு | துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள் உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம் முன்ன மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார் 6.1.762 |
2661
| யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்று | வாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார் மீது தம் பீலி கொண்டு தடவிட மேல் மேல் வெப்புத் தீதுறப் பொறாது தென்னவன் சிரபுரத்தவரைப் பார்த்தான் 6.1.763 |
2662
| தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர் | அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது என்று பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி 6.1.764 |
2663
| திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன் | பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையில் குளிர்ந்தது அப்பால் மருவிய இடப்பால் மிக்க அழல் என மண்டு தீப்போல் இருபுடை வெப்பும் கூடி இடம் கொளாதுஎன்னப் பொங்க 6.1.765 |
2664
| உறி உடைக் கையர் பாயின் உருக்கையர் நடுக்கம் எய்தி | செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீத்தம்மை ஏறிய மாகடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார் அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார் 6.1.766 |
2665
| பலர் தொழும் புகலி மன்னர் ஒரு புடை வெப்பைப் பாற்ற | மலர்தலை உலகின்மிக்கார் வந்து அதிசயத்துச் சூழ இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே 6.1.767 |
2666
| மன்னவன் மொழிவான் என்னே மதித்த இக் காலம் ஒன்றில் | வெம் நரகு ஒரு பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு பால் ஆகும் துன்னு நஞ்சு ஒரு பால் ஆகும் சுவை அமுது ஒரு பால் ஆகும் என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் 6.1.768 |
2667
| வெந்தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும் | வந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர் என்று சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் 6.1.769 |
2668
| திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப் | பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும் ஒருமுறை தடவ அம் கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் மருவு தீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் 6.1.770 |
2669
| கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு | செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப் பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார் 6.1.771 |
2670
| மீனவன் தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற | ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த ஞான சம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான் 6.1.772 |
2671
| கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர் | வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார் 6.1.773 |
2672
| சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல் மாலையால் | கைதவன் தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம் மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார் 6.1.774 |
2673
| பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றலும் | தள்ளு நீர்மை யார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம் கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான் உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் 6.1.775 |
2674
| என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் | கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்புநோய் கவர்ந்த போது என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்னவாது உமக்கு எனச் சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார் 6.1.776 |
2675
| என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா எனச் | சொன்னவாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால் வெம் நெருப்பின் வேவு உருமை வெற்றி ஆவது என்றனர் 6.1.777 |
2676
| என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் | நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடுதான் வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல் வன் தனிக்கை யானை மன்னன் முன்பு வம்மின் என்றனர் 6.1.778 |
2677
| அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில் | ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால் செப்பரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் வெப்புறும் தழல் அமைக்க என வினை ஞரை விடுத்தான் 6.1.779 |
2678
| ஏயமாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி | தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி 6.1.780 |
2679
| செங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த | பொங்கு இசைத் திருப்பதிகங்கள் முறையினைப் போற்றி எங்கள் நாதனே பரம் பொருள் எனத் தொழுது எடுத்தே அங்கையால் முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார் 6.1.781 |
2680
| சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமே | நீற்று வண்கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு போற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் 6.1.782 |
2681
| அத் திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி | மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி மெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்து கைத் தலத்து இடைக் கொண்டனர் கவுணியர் தலைவர் 6.1.783 |
2682
| நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் | என்னை ஆள் உடை ஈசன் தன் நாமமே என்றும் மன்னும் மெய்ப் பொருளாம் எனக் காட்டிட வன்னி தன்னில் ஆக எனத் தளிர் இள வளர் ஒளி பாடி 6.1.784 |
2683
| செய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்த | கையில் ஏட்டினைக் கைதவன் பேர் அவை காண வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் 6.1.785 |
2684
| இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம் | மட்டுலாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்து அட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியது அன்றே 6.1.786 |
2685
| மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த | கையில் ஏட்டினைக் கதுவு செம் தீயினில் இடுவார் உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார் 6.1.787 |
2686
| அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர் | வெம் சுடர்ப் பெரும் தீயினில் விழுத்திய ஏடு பஞ்சு தீ இடைப் பட்டது படக் கண்டு பயத்தால் நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்து திலர் நின்றார் 6.1.788 |
2687
| மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செந்தீயின் | ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில் ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்பு உற எடுத்தார் பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப 6.1.789 |
2688
| எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில் | அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக் அடுத்த நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின் என்றான் 6.1.790 |
2689
| அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில் | பெருகு தீக் கதுவ வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன் தருபுனல் கொண்டு செம் தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக் கருகிய சாம்ப ரோடும் கரி அலால் மற்று என் காண்பர் 6.1.791 |
2690
| செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் | கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன் எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும் பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின் என்றான் 6.1.792 |
2691
| வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் | அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் துப்புர உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான் 6.1.793 |
2692
| தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார் | சொன்னது பயனாகக் கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது முன்னுற இருகால் செய்தோம் முக்காலில் ஒரு கால் வெற்றி என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார் 6.1.794 |
2693
| தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்டு இம் | மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர் வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் 6.1.795 |
2694
| நீடு மெய்ப் பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம் | ஏடுற எழுதி மற்றவ் வேட்டினை யாமும் நீரும் ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் 6.1.796 |
2695
| என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் | நன்று அது செய்வோம் என்று அங்கு அருள் செய நணுக வந்து வென்றிவேல் அமைச்சனார் தாம் வேறு இனிச் செய்யும் இவ்வாது ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார் 6.1.797 |
2696
| அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று | பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத் தங்கள் வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோம் ஆகில் வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே என்று சொன்னார் 6.1.798 |
2697
| மற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் | செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் பொற்புற விடுவதற்குப் போதுவ என்று கூற 6.1.799 |
2698
| பிள்ளையார் முன்னம் பைம் பொன் பீடத்தில் இழிந்து போந்து | தெள்ளு நீர்த் தரளப் பத்தி சிவிகை மேல் ஏறிச் சென்றார் வள்ளலார் அவர் தம் பின்பு மன்னன் மா ஏறிச் சென்றான் உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறிச் சென்றார் 6.1.800 |
|
| 2699 | தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் மன்னிய மூதூர் மறுகில் வந்து அருளக் கண்டு துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார் | 6.1.801 | ||||||||||||||||||||||||||
| 2700 | மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த ஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார் பால் நறும் குதலைச் செய்ய பவளவாய் பிள்ளையார் தாம் மான சீர்த் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார் | 6.1.802 | ||||||||||||||||||||||||||
| 2701 | எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார் புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோ ம் என்பார் பெருகு ஒளி முத்தின் பைம் பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் | 6.1.803 | ||||||||||||||||||||||||||
| 2702 | ஏதமே விளைந்த இந்த அடிகள் மார் இயல் பால் என்பார் நாதனும் ஆல வாயில் நம்பனே காணும் என்பார் போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார் வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் | 6.1.804 | ||||||||||||||||||||||||||
| 2703 | அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார் கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார் வடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார் விடிவதாய் முடிந்தது இந்த வெஞ்சமணர் இருளும் என்பார் | 6.1.805 | ||||||||||||||||||||||||||
| 2704 | நெருப் பினில் தோற்றார் தாங்கள் நீரிவெல்வார் களோ என்பார் இருப்பு நெஞ்சு உடையர் ஏனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார் கருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம் என்பார் | 6.1.806 | ||||||||||||||||||||||||||
| 2705 | ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார் நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார் நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார் | 6.1.807 | ||||||||||||||||||||||||||
| 2706 | தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர் என்பார் ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது என்பார் நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார் போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் என்பார் | 6.1.808 | ||||||||||||||||||||||||||
| 2707 | இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல மின் ஒளி மணி பொன் வெண் குடை மீது போதப் பன் மணி சிவிகை தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு நன் நெறி காட்ட வந்தார் நான் மறை வாழ வந்தார் | 6.1.809 | ||||||||||||||||||||||||||
| 2708 | தென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான் மன்றுளார் அளித்த ஞான் வட்டில் வண்கையன் வந்தான் வென்றுலகு உய்ய மீளவை கையில் வெல்வான் வந்தான் என்றுபன் மணிச் சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க | 6.1.810 | ||||||||||||||||||||||||||
| 2709 | பன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே தென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும் புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர் மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் | 6.1.811 | ||||||||||||||||||||||||||
| 2710 | கார் கெழு பருவம் வாய்ப்பக் காமுறும் மகளிர் உள்ளம் சீர் கெழு கணவன் தன்பால் விரைவு உறச் செல்லுமா போல் நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்துச் செல்லும் பார் கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு | 6.1.812 | ||||||||||||||||||||||||||
| 2711 | ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதிப் பிள்ளையாரும் வேற்றுரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் தோற்றவர் தோலார் என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள் | 6.1.813 | ||||||||||||||||||||||||||
| 2712 | படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில் கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடு விடுதலும் விரிஅந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே | 6.1.814 | ||||||||||||||||||||||||||
| 2713 | ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத் தேறு மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார் பாறும் அப்பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு நூறுவில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார் | 6.1.815 | ||||||||||||||||||||||||||
| 2714 | காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு நாணிலா அமணர் தம்மை நாட்டாற்றில் விட்டுப் போகச் சேணிடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன் ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார் | 6.1.816 | ||||||||||||||||||||||||||
| 2715 | வேறு ஒரு செயல் இலாதார் வெரு உற்று நடுங்கித் தம்பால் ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி ஊறுடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார் | 6.1.817 | ||||||||||||||||||||||||||
| 2716 | மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற ஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத் தேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப் பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற | 6.1.818 | ||||||||||||||||||||||||||
| 2717 | தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப் பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்று முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை உன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே | 6.1.819 | ||||||||||||||||||||||||||
| 2718 | உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும் நிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும் கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும் பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால் | 6.1.820 | ||||||||||||||||||||||||||
| 2719 | அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று இந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்பு உறச் சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன் வந்த அர்ச்சனை வழிபாடும் அன்னவாம் | 6.1.821 | ||||||||||||||||||||||||||
| 2720 | வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால் ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை மூளும் மற்று இவை காக்கும் முறைமையால் | 6.1.822 | ||||||||||||||||||||||||||
| 2721 | ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே | 6.1.823 | ||||||||||||||||||||||||||
| 2722 | சொன்ன வையகமும் துயர் தீர்கவே என்னும் நீர்மை இக பரத்தில் உயர் மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர் | 6.1.824 | ||||||||||||||||||||||||||
| 2722 | அரிய காட்சியர் என்பது அவ் வாதியைத் தெரியலாம் நிலையால் தெரியார் என உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் பெரிய நல் அடையாளங்கள் பேசினார் | 6.1.825 | ||||||||||||||||||||||||||
| 2724 | ஆயினும் பெரியார் அவர் என்பது மேய இவ் இயல்பே அன்றி விண் முதல் பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள் ஏயும் யாவும் இவர் வடிவு என்பதாம் | 6.1.826 | ||||||||||||||||||||||||||
| 2725 | பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார் அன்பு சூழ் சண்பை ஆண் தகையார் அவர் | 6.1.827 | ||||||||||||||||||||||||||
| 2726 | வெந்த சாம்பல் விரை என்பது தமது அந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம் வந்து வெம் தற மற்றப் பொடி அணி சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார் | 6.1.828 | ||||||||||||||||||||||||||
| 2727 | தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும் அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது இமைத்த சோதி அடங்கிப் பின் ஈதலால் எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம் | 6.1.829 | ||||||||||||||||||||||||||
| 2728 | தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான் மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என இம்மையே நினைவார் தம் இருவினைப் பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம் | 6.1.830 | ||||||||||||||||||||||||||
| 2729 | எந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்று இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று அந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார் | 6.1.831 | ||||||||||||||||||||||||||
| 2730 | ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் திறம் நாதன் மாட்சிமை கேட்க நவிலுங் கால் ஓதும் எல்லை உலப்பில ஆதலின் யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம் | 6.1.832 | ||||||||||||||||||||||||||
| 2731 | அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும் முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத் தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர் | 6.1.833 | ||||||||||||||||||||||||||
| 2732 | மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான் அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு அன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம் | 6.1.834 | ||||||||||||||||||||||||||
| 2733 | தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில் ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன் ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம் | 6.1.835 | ||||||||||||||||||||||||||
| 2734 | மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது ஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கிப் போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து போதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம் | 6.1.836 | ||||||||||||||||||||||||||
| 2735 | ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள் பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்மின் என்று ஆண்ட சண்பை அரசர் அருளினார் | 6.1.837 | ||||||||||||||||||||||||||
| 2736 | ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர் கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர் | 6.1.838 | ||||||||||||||||||||||||||
| 2737 | கருதும் கடிசேர்ந்த என்னும் திருப் பாட்டில் ஈசர் மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி தரு தன்மையது ஆதல் சண்ணீசர் தம் செய்கை தக்கோர் பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம் | 6.1.839 | ||||||||||||||||||||||||||
| 2738 | வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினினேர் ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் பாதம் முதலாம் பதிணெண் புராணங்கள் என்றே ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர் | 6.1.840 | ||||||||||||||||||||||||||
| 2739 | பாவுற்ற பார் ஆழி வட்டத் திருப்பாட்டின் உண்மை காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் | 6.1.841 | ||||||||||||||||||||||||||
| 2740 | மாலா யவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும் தோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர் ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த மேலாம் கருணைத் திறம் வெம் குருவேந்தர் வைத்தார் | 6.1.842 | ||||||||||||||||||||||||||
| 2741 | ஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல் மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா ஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில் ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார் | 6.1.843 | ||||||||||||||||||||||||||
| 2742 | வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக் குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திருப்பாதம் தந்த நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் | 6.1.844 | ||||||||||||||||||||||||||
| 2743 | அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம் மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து ஆற்றில் நிலவும் திரு ஏடு திருக்கையால் நீட்டி இட்டார் | 6.1.845 | ||||||||||||||||||||||||||
| 2744 | திரு உடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு மரு உறும் பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால் போல் பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும் இரு நிலத்தோர் கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி | 6.1.846 | ||||||||||||||||||||||||||
| 2745 | எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று எழுதும் ஏட்டில் தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச் செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே | 6.1.847 | ||||||||||||||||||||||||||
| 2746 | ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார் ஆடியல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார் | 6.1.848 | ||||||||||||||||||||||||||
| 2747 | ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக் காற்றென விசையில் செல்லும் கடும் பரி ஏறிக் கொண்டு கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க | 6.1.849 | ||||||||||||||||||||||||||
| 2748 | ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக் கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக் காடு இடமாக ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு சீர் நடவுட் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார் | 6.1.850 | ||||||||||||||||||||||||||
| 2749 | தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க அலைபுனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச் சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ மலை மகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார் | 6.1.851 | ||||||||||||||||||||||||||
| 2750 | மற்றவர் பிள்ளையார் தம் மலர் அடி வணங்கிப் போற்றிக் கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு பற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்ட அற்றருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே | 6.1.852 | ||||||||||||||||||||||||||
| 2751 | மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய் தார் கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற | 6.1.853 | ||||||||||||||||||||||||||
| 2752 | புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும் இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு தகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை | 6.1.854 | ||||||||||||||||||||||||||
| 2753 | பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால் கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற நண்பு உடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட எண் பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் | 6.1.855 | ||||||||||||||||||||||||||
| 2754 | தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம் ஆற்று இடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம் வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம் போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பம் ஆகும் | 6.1.856 | ||||||||||||||||||||||||||
| 2755 | தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார் முன்னவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து நின்றான் மன்னன் நீறு அணிந்தான் என்று மற்றவன் மதுரை வாழ்வார் உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் | 6.1.857 | ||||||||||||||||||||||||||
| 2756 | பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது நீதியும் வேதநீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும் மேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதி மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே | 6.1.858 | ||||||||||||||||||||||||||
| 2757 | மீனவற்கு உயிரை நல்கி மெய்ந் நெறி காட்டி மிக்க ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்ட ஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத் தேனலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே | 6.1.859 | ||||||||||||||||||||||||||
| 2758 | மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம் குறைவிலது எனினுங் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி நிறை கடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே | 6.1.860 | ||||||||||||||||||||||||||
| 2759 | அம் கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் பங்கயச் செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார் மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும் போற்றி வந்தார் | 6.1.861 | ||||||||||||||||||||||||||
| 2760 | எண்ணரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப் புண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்து அடி போற்றி போத மண் எலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம் | 6.1.862 | ||||||||||||||||||||||||||
| 2761 | ஆலவாய் அண்ணல் கோயில் அம் கண் முன் தோன்றக் கண்டு பால் அறாவாயர் பண்பினால் தொழுது சென்று மாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில் சீல மாதவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புக்கார் | 6.1.863 | ||||||||||||||||||||||||||
| 2762 | தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும் நன்னெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்ய பொன்னடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில் தன்னை முன் வலம் கொண்டுள்ளால் சண்பையர் தலைவர் புக்கார் | 6.1.864 | ||||||||||||||||||||||||||
| 2763 | கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம் மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் | 6.1.865 | ||||||||||||||||||||||||||
| 2764 | ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவற நிறைந்த கோலம் மன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் என்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட | 6.1.866 | ||||||||||||||||||||||||||
| 2765 | தென்னவன் பணிந்து நின்று திரு ஆல வாயில் மேவும் மன்னனே அமணர் தங்கள் மாய்கை ஆல் மயங்கி யானும் உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட் கொள்ள இன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவா என்றான் | 6.1.867 | ||||||||||||||||||||||||||
| 2766 | சீர் உடைப் பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும் காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கிக் காதல் ஆர் அருள் பெற்றுப் போற்றி அங்கு நின்று அரிது நீங்கி ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்து அருளிப் புக்கார் | 6.1.868 | ||||||||||||||||||||||||||
| 2767 | நீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை ஆரும் மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக் கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினாலே நாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார் | 6.1.869 | ||||||||||||||||||||||||||
| 2768 | திருவியம் அகத்தின் உள்ளும் திரு நீல கண்டப் பாணர்க்கு அருளிய திறமும் போற்றி அவர் ஒடும் அளவளாவித் தெருள் உடைத் தொண்டர் சூழத் திருத் தொண்டின் உண்மை நோக்கி இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே | 6.1.870 | ||||||||||||||||||||||||||
| 2769 | பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும் பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் கீழ் உறப் பறித்துப் போக்கிக் கிளர் ஒளித் தூய்மை செய்தே வாழி அப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார் | 6.1.871 | ||||||||||||||||||||||||||
| 2770 | மீனவன் தேவி யாரும் குலச் சிறையாரும் மிக்க ஞான சம்பந்தர் பாதம் நாள் தொறும் பணிந்து போற்ற ஆன சண்பையர் கோன் ஆரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம் ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில் | 6.1.872 | ||||||||||||||||||||||||||
| 2771 | செய் தவத்தால் சிவ பாத இருதயர் தாம் பெற்று எடுத்த வைதிக சூளா மணியை மா தவத்தோர் பெரு வாழ்வை மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை எய்திய பூம் புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார் | 6.1.873 | ||||||||||||||||||||||||||
| 2772 | ஆன புகழ்த் திருநாவுக்கரசர் பால் அவம் செய்த மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் மீனவன் தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்கு தற்கும் போனவர் பால் புகுந்தபடி அறிவன் எனப் புறப்படுவார் | 6.1.874 | ||||||||||||||||||||||||||
| 2773 | துடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்று இருந்த பிரான் அடி வணங்கி அலர் சண்பை அதன் இன்றும் வழிக் கொண்டு படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி வடி நெடு வேல் மீனவன் தன் வள நாடு வந்து அணைந்தார் | 6.1.875 | ||||||||||||||||||||||||||
| 2774 | மா மறையோர் வளம் பதிகள் இடைத் தங்கி வழிச் செல்வார் தே மருவு நறும் பைந்தார்த் தென்னவன் தன் திரு மதுரை தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் பூ மருவும் சேவடிக் கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார் | 6.1.876 | ||||||||||||||||||||||||||
| 2775 | அங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார் தமை வினவ இங்கு எம்மைக் கண் விடுத்த காழியர் இள ஏறு தங்கும் இடம் திரு நீற்றுத் தொண்டர் குழாம் சாரும் இடம் செங்கமலத் திருமடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் | 6.1.877 | ||||||||||||||||||||||||||
| 2776 | செப்புதலும் அது கேட்டுத் திரு மடத்தைச் சென்று எய்த அப்பர் எழுந்து அருளினார் எனக் கண்டோ ர் அடி வணங்கி ஒப்பில் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்து அருள | 6.1.878 | ||||||||||||||||||||||||||
| 2777 | சிவ பாத இருதயர் தாம் முன் தொழுது சென்று அணையத் தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர் தொழுவார் அவர் சார்வு கண்டு அருளித் திருத் தோணி அமர்ந்து அருளிப் பவ பாசம் அறுத்தவர் தம் பாதங்கள் நினைவுற்றார் | 6.1.879 | ||||||||||||||||||||||||||
| 2778 | இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்து அருளி அரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட பெரும் தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று பொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார் | 6.1.880 | ||||||||||||||||||||||||||
| 2779 | மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார் தண் நறும்பூஞ் செங்கமலத்தார் அணிந்த தமிழ் விரகர் | 6.1.881 | ||||||||||||||||||||||||||
| 2780 | திருப் பதிகம் திருக்கடைக் காப்புச் சாத்திச் சிறப்பின் மிகு
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள் அருப்புறு மெய்க் காதல் புரி அடியவர்கள் தம்மோடும் பொருப்புறு கைச் சிலையார் சேர் பதி பிறவும் தொழப் போவார் | 6.1.882 | ||||||||||||||||||||||||||
| 2781 | ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை காலம் பெற்று இனிது இறைஞ்சிக் கை தொழுது புறம் போந்தார் சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத | 6.1.883 | ||||||||||||||||||||||||||
| 2782 | தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த ஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் யான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்டு ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் 6.1.884 |
2783
| ஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப் போற் | நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு சேறு அணிந்த வயல் பழனக் கழனி சூழ்ந்த சிர ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை 6.1.885 |
2784
| பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால் | புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம் பூவணத்தைப் கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும் குற்றாலம் குறும் பலாக் கும்பிட்டு ஏத்திக் கூற்று 6.1.886 |
2785
| . புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி | நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க திண்ணிய பொன் சிலைத் தடக்கை இராமன் செய்த 6.1.887 |
2786
| செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித் | மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப் பங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று 6.1.888 |
2787
| சேதுவின்கட் செங்கண் மால் பூசை செய்த | காதலுடன் அந் நகரில் இனிது மேவிக் கண் நுதலான் கோதில் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க் நாதர் தமை நாள் தோறும் வணங்கி ஏத்தி நளிர் 6.1.889 |
2788
| அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி | மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செம் கண் மழ சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக் உன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத 6.1.890 |
2789
| . அப் பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார் | புக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப் புணரி செப்ப அரிய புகழ்த் திருவாடானை சேர்ந்து செந்தமிழ் ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் 6.1.891 |
2790
| பதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண் பரமனார் | விதி நிலவு வேத நூல் நெறியே ஆக்கி வெண்ணீற்றின் கருதி அருளிக் காழி நகர் சூழ வந்தார் கண் மதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல மந்திரியார் 6.1.892 |
2791
| அந் நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த | மன்னு திருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் கொன்னவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடிக் சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றிச் சிரபுரத்துச் |