Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan >  On Mother's Day, 1999

On Mother's Day
அகிலத்தாய்க்கு ஒரு அகதி மகனின் கடிதம்

A poem by Raj Swarnan

Written in response to the silence of the international community
and to mark the Mothers' Day, 9 May 1999

அகிலத்தாயே....
உனக்கிந்த
அகதி மகனின்
அழுகுரல் கேட்கலையோ?
மேலான கல்வி,கலை,பண்பாடு
கொண்ட மக்கள் .. இன்று
கீழான நிலை சென்று
அழுந்துதல் நீ கண்டிலையோ?
ஊர் கூடித் தேரோடி
உறவாடி வாழ்ந்தவுந்தன்
உத்தம புத்திரர்கள் .. இன்று
ஊர் விட்டு எழுந்தோடி
உலகனைத்தும் பரந்து சென்று
உழல்வதை நீ அறியாயோ?
கொசோவாப் பிள்ளை மீது
நீ காட்டும் பரிவில்
கொஞ்ச நஞ்சமாவது
எம்மிலும் வேண்டாமோ?
ஏன் தாயே உனக்கிந்த
ஓர வஞ்சனை?
எங்கள் தோல் கறுப்பா?
தலை கறுப்பா?
அன்னையின் அன்புக்கு
இவையேதும் தடையாதல் கூடுமோ?
கூடுமெனில்........
நீ அன்னையில்லை....
அன்னை வடிவில்
அவதாரமெடுத்துள்ள அரக்கி..
என்னை மன்னித்துவிடு தாயே...
உன்னைப் போற்றத்தான் புறப்பட்டேன்...ஆனால்
பொல்லாத வார்த்தை சொல்லித்
தூற்றவும் வைத்துவிட்டாய்....
வேண்டுமென்று என் நாவால்
வெளிக்கிட்ட வார்த்தையல்ல...
என் சொந்த ஆதங்கத்தின்
சுருக்க வடிவமல்ல.... உன்
மொத்தப் பிள்ளைகள் தம்
உள்ளக் குமுறல்களின்
உண்மை வடிவமிது...
வன்னியிலே,
ஆடையின்றி வாடையிலே
மெலிகின்றார் உன் மக்கள்...
ஆனதொரு மருந்தின்றி
அநியாயச் சாவுகள்...
தாய் முலையிற் பாலின்றித்
தவிக்கின்ற மழலைகள்...
மரநிழலே கூரைகளாய் மாறியதால்
மழையிலும் வெயிலிலும் வாடுவது
மரங்கள் மட்டுமல்ல...
உன் மக்களுந்தான்...
உன் மக்கள் மாக்கள் போல்
மாய்ந்து கொண்டிருக்கையில் நீ
மெளனஞ் சாதித்தால்...
எப்படித்தான் போற்றுவதாம் உன்னை?
அன்னையர் தினத்திலே .. இவ்
அகதி மகன் அழுகுரலைக் கேள் தாயே.. எம்
அன்னை நிலத்திலே
ஆக்கிரமிப்பொழிந்து
அகதி வாழ்வு அகன்றிட .. உன்
அன்புக் கரத்தைச் சற்று
நீட்டி வா அகிலத்தாயே....

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home