Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Tamil Drama   - நாடகத் தமிழ > Tamil Cinema -  தமிழ் திரைப் படம் > ஆணிவேர் - Aanivaer >  Struggle for Tamil Eelam

CONTENTS OF
THIS SECTION

Aanivaer Video Clip at Google
Interview with the Director of AANIVAER Tamil Movie John

திரு. காசி ஆனந்தன் - தாயக கவிஞர் "என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அண்ணா நாம் தயாரித்துள்ள ஓர் முழு நீளத்திரைப்படத்திற்க்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என அன்பான வேண்டுகோள், நானும் சம்மதம் தெரிவித்து பல நாட்களில் பின் என்னால் தெரிவு செய்யப்பட்ட பெயர் தான் ஆணிவேர்"  more

கவிஞர் திரு. வைரமுத்துஆணிவேர் எனக்கு ஓர் திரைப்படமாக தெரியவில்லை நான் ஆணிவேரை ஓர் புதிய வடிவமாகவே காண்கின்றேன் சர்வதேச தரத்தில் ஓர் தமிழ் படம் இது ஈழத்தமிழர்கள் உருவாக்கிய முதல் படம்.

திரு. வை. கோபாலசாமி, ம.தி.மு.க நான் மீண்டும் தமிழீழம் சென்று வந்த உணர்வுகள்  என்னை அறியாமலே என் மனத்தையும் கண்களையும் உருகவைத்த உண்மைக்காவியம்.

திரைப்படத்தின் அதிகாரப் பூர்வ தளம்
தமிழீழத்தின் முதலாவது வெண்திரைக்காவியம் - ஆணிவேர் - ஒரு பார்வை - Mana Osai, Chandravathanaa Selvakumaran, Germany
Aanivaer in Switzerland
உலகளாவிய சினிமா வெளியீடாகிறது இலங்கைத்தமிழ்க் காதல் கதை - ஆணிவேர்  - நியூடெல்லி தமிழ்க் கனடியன், 4 August 2006
சந்திப்பு - ஆணிவேர் - ஜான் (Courtesy- Salanam)
மனங்களின் ஆழத்தில் பதியும் `ஆணிவேர்'  - ஒரு பேப்பர்

What Others Say...
திரு. செல்வபாரதி
� திரைப்பட இயக்குனர்...
திரு. நாகா -
இந்தி திரைப்பட இயக்குனர்...
திரு. சீமான்
- திரைப்பட இயக்குனர்...
திரு. ரமேஸ்
 - திரைப்பட இயக்குனர் (சைனைட்)...

Aanivaer - Oru Padam 

"...என்னைத் தொட்ட கட்டம்:
கதாநாயகனையும் [தமிழீழத் தமிழன்], கதாநாயகியையும் [இந்தியத் தமிழிச்சி] இலங்கை இராணுவம் செம அடி அடித்து விட்டுச் செல்லும். காயங்களுடன் இருக்கும் மதுமிதாவைப் பார்த்து, நந்தா சொல்வார் �Welcome to Jaffna�.

இந்தப் படம் இந்திய மக்களுக்காகவே எடுக்கப்பட்டதாகத் தான் உணர்கிறேன். மதுமிதாவை கேட்கும் கேள்விகளில் அது வெளிச்சம். நந்தாவின் மதுமிதா மீதான கோபமான் கேள்விகள் அடிமேல் அடி அடித்து இனித் துன்பம் வலிக்காது என்று போன மக்களின் கோபக் கனல்களாக தெறிக்கிறது. படு துன்பத்தில் வருமே ஒரு கோபம் அப்படி.

அது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் நந்தா கப்பலோடு இறந்து போனவர்களை பார்த்துவிட்டு படம் பார்க்கிறவர்களை பார்த்து கேள்வி கேட்பார். �குழந்தைகள் தத்தளிக்கும்போது காப்பாற்ற வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?� இது இந்திய கடலில் தத்தளித்து இறந்த தமிழர்களை வேடிக்கை பார்த்த இந்தியாவிற்காக. கடைசியாக அக் கேள்விகள் கடவுளுக்கு கேட்கப்படுவதாக முடிப்பார்..." more

 

Tamil Cinema - தமிழ்த் திரைப் படம்

ஆணிவேர் - Aanivaer

" பார்வையாளர்களின் மனங்களில் பாரிய மாற்றங்களை உருவாக்கவல்ல ஓர் திரைப்படம் ஆணிவேர் என்பது எனது அசைக்க முடியாத கருத்தாகும். " திரு. ரமேஸ் - திரைப்பட இயக்குனர் (சைனைட்)

ஆணிவேர் (Aanivaer) திரைப்படம் செப்டம்பர் 23, 2006 ஆம் திகதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழீழத்தில் எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படமாக விளங்கும் ஆணிவேர் இலங்கைத் தமிழர்களின் நிலைமையை உலகினிற்கு எடுத்துக் கூறும் வகையில் வெளிவந்திருக்கின்றது. இயக்குனர் - ஜோன் மகேந்திரன், தயாரிப்பாளர் -பிரபாகரன், நடிப்பு - நந்தா, மதுமிதா, யேசுதாசன், நிலிமா; இசையமைப்பு - சதீஸ்

AANIVAER is a full length film shot and produced in the Tamil homeland in the island of Sri Lanka. It unfolds a love story through which courses turbulent scenes of the political current threatening the very existence of Eelam Tamils in the island

The love story of  �AANIVAER� begins with the arrival in Omantai in Vanni of a female journalist from South India, who had visited Sri Lanka previously to gather information and photographs for a cover story for an Indian magazine. During her first visit, which lasted for a couple of months, she witnessed the happenings in the Sri Lanka and during her interviews with people and authorities developed a love affair with a Tamil Doctor cum social worker in the trouble stricken region of Tamil homeland. Having personally experienced the plight of the Tamils in Sri Lanka, she goes back to South India with a heavy heart.

The journalist from South India returns to Vanni for the second time with a view to meeting the Doctor cum social worker whom she had met and loved on her first visit. Her initial enquiries to find out the whereabouts of the Doctor friend prove difficult. But she continues. The events that unfold in the movie thereafter are flash backs, and those flash backs vividly portray the scenes of how the school girl Krishanthy was abused, raped and murdered as well as the pathetic scenes of the Tamil exodus from Jaffna to Kilinochchi and Vanni, reminiscent of the great exodus of the Biblical times.

The most moving aspect of the movie is what it says indirectly about the political and social attitude of the Sinhalese race towards the Tamil people. Although this is the first full length movie filmed in the home land of the Tamils in Eelam, with the barest of facilities and technology, the director of the film has successfully ploughed a far from typical furrow.  �AANIVAER� has brilliantly proved that films can impart telling messages while appearing to be doing something entirely different. (excerpted and edited from Tamil Canadian)

திரு. காசி ஆனந்தன் - தாயக கவிஞர்

தாயக கலைப்படைப்பாளிகளின் அன்பான வேண்டுகோள் இது. ஆம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அண்ணா நாம் தயாரித்துள்ள ஓர் முழு நீளத்திரைப்படத்திற்க்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என அன்பான வேண்டுகோள், நானும் சம்மதம் தெரிவித்து பல நாட்களில் பின் என்னால் தெரிவு செய்யப்பட்ட பெயர் தான் ஆணிவேர் நான் பெயர் வைக்கும் போதுகூட இவ்வளவு தத்துருபாமாக ஆணிவேர் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை சாதாரணமாக என்னிடம் பலர் பாடல்களை எழுதித்தரும்படி கேட்பார்கள் நானும் அவர்களுக்கு பாடல்கள் எழுதிக்கொடுப்பேன் எனினும் நான் எழுதிய அனைத்துப்பாடல்களுமே வெளிவந்ததாக அறிவேன் எனினும் என்னால் அந்தப்படல்களளை கேட்க முடிவதில்லை அதே போலத்தான் இந்த ஆணிவேர் திரைப்படமும் என்னை வந்தடையாது என்று இருந்து விட்டேன் எனினும் ஒரு நாள் மாலை நேரம் எனது வீட்டின் முன்னால் ஓர் வண்டி வந்து நின்றுது வண்டியில் இருந்து ஓவியர் புகழ் அவர்களும் இன்னுமொரு நண்பரும் இறங்கி வந்து அண்ணா உங்களுக்கு ஆணிவேர் படத்தை காண்பிக்க வந்துள்ளதாக இப்படத்தை தயாரித்த சுவிஸ் பிரா அவர்கள் கூறினார். என்னால் நம்பமுடியவில்லை நான் பார்க்கமலே பெயர் சூட்டிய குழந்தை என்மடிகளில் தவழ்வது என்பது எப்படி இருக்கும் உற்சாகத்துடன் ஆணிவேரைப் பார்தேன். என்னால் நம்பமுடியவில்லை எங்களது பையங்களா இப்படி ஒரு படத்தை உருவாக்கியுள்ளார்கள் காட்சிகள் ஒவ்வொன்றும் என்னை எண்மன்னுக்கு கூட்டிச்சென்ற உணர்வுகள் என்னை நெகிழ வைத்தது. மிகத்தரமாக உருவாக்கப்பட்ட ஆணிவேர் தழிழீழ திரைப்பட வரலாற்றின் புதிய பாலமாகும்.


உலகளாவிய சினிமா வெளியீடாகிறது இலங்கைத்தமிழ்க் காதல் கதை - ஆணிவேர்  - நியூடெல்லி தமிழ்க் கனடியன், 4 August 2006

வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி அன்று உலகளாவியரீதியில் வெளிவருகிறது இலங்கைக் காதலை மையப்படுத்திய இந்தியச்சினிமா. ஆனால் இது இந்தியாவில் தணிக்கைக்குழுவின் அனுமதி பெற்று அதே நாளில் வெளிவரும் என்பதை இதன் இயக்குநர் உறுதிப்படுத்தவில்லை.

�ஆணிவேர்� (Aaniver) என்ற 90 நிமிடப்படம் இந்திய பெண் பத்திரிகையாளருக்கும் ஈழத்தமிழ் வைத்தியருக்கும் பிணைக்கப்பட்ட காதலை மையப்படுத்தியது. 1995 இல் யாழில் நுழைந்த இராணுவத்தின் கெடுபிடியால் வெளியேறிய தமிழ் மக்களின் வாழ்வினை தனக்கான ஒரு கோணத்தில் பதிவாக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

இதன் இயக்குநர் ஜோன் றோசான் (38) சென்னையில் பின்வருமாறு கூறினார் �இப்படம் முழுமையான காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. இது ஆவணப்படமல்ல. இதில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருக்கிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பகள் இலங்கைக் கிராமங்களிலேயே மேற்கொள்ளபட்டுள்ளன. மதுமிதாவும் நந்தாவும் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஐரோப்பாவில் வசிக்கும் தொலைக்காட்சி இணையத்தை நடாத்தும் இலங்கைத்தமிழரான பிரபாகரனின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இப்படத்தை இயக்கிய அனுபவம் சுவாரிசியமானது. எனக்கு ஆரம்பத்தில் இலங்கை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. இவர் வழங்கிய ஏராளமான நூல்களைப்(கதைகள் - கட்டுரைகள்) படித்தே அறிந்து கொண்டேன். இப்படத்தின் வெளியீட்டுக்கான பிரித்தானிய உரிமம் கிடைத்துவிட்டது. சுவிஸில் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. இப்படம் உலகமெங்கிலும் உள்ள இரசிகர்களை மையப்படுத்தியே தயாரிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இப்படம் பெறும்.�

இயக்குநர் ஜோன் 2005இல் வெளிவந்த -சச்சின்- படத்தை இயக்கியவர் என்பதும் தமிழர்களால் நன்கு அறியப்பட்ட உதிரிப்புக்கள் மகேந்திரன் அவர்களின் மகனுமாவார்.


சந்திப்பு - ஆணிவேர் - ஜான்  Courtesy Salanam
எழுதியவர் டி. அருள் எழிலன், 25 September 2006

��இப்பவும் சென்னையில் ஈழம் பற்றி செய்தியை பார்க்கும் போது மனசு பதறுது... இலங்கை ராணுவம் குண்டு வீச்சு என்று செய்தி கேட்டால்... ��ஐய்யோ நம்மளோட ஆணிவேர் படத்தில் நடிச்ச அந்த பாட்டி உயிரோட இருப்பாங்களா? அசிஸ்டென்டாக வேலை பார்த்த அந்த பொடியன் உயிரோட இருப்பானோண்ணுதான் இப்பவும் மனசு பதறுது�� உடனே போன் போட்டு அவங்களை பிடிச்சு நாலு வார்த்தையாவது பேசிவிடுவேன்�� என்கிறார் ஆணிவேர் படத்தின் இயக்குநர் ஜாண். இயக்குநர் மகேந்திரனின் மகன். மனைவி மகன் மற்றும் மகளோடு சென்னை தி.நகரில் வசிக்கிறார்.

கேள்வி: ஆணிவேர் முயற்சியின் தொடக்கம் பற்றி...

பதில்: ��நான் சச்சின் படம் பண்ணி முடித்து அது தியேட்டரில் ஒடிக்கொண்டிருந்த போது சுவிட்சர்லாந்தில் 'தமிழ் லீவிங் மீடியா நெட் வொர்க்' நிறுவனத்தை நடத்திவரும் பிரபாகரன் அவர்கள் சச்சின் பார்த்துவிட்டு என்னை அழைத்து விஷ் பண்னினார். அப்புறம் என்னிடம் ஈழத் தமிழர்களுக்காக ஒரு படம் பண்ணித்தர முடியுமா என்று கேட்டார். ஒரு பிலிம் மேக்கரா எனக்கு இலங்கையில் உள்நாட்டு பிரச்சனை தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் இருக்குண்ணு தெரியும்இ ஆனா அதோட அரசியலோ கடந்த காலம் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் ஈழ மண்ணில் யுத்தம் நிகழ்த்தியிருக்கும் கோர தாண்டவம் பற்றியோ எனக்கு தெரியாது..

ஆனால் ஒரு யுத்த பின்னணியை வைத்து ஒரு சினிமா பண்ணவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. பிரபாகரன் நிறைய புத்தகங்கள்இ வி.சி.டி என கடந்த கால வரலாற்று ஆவணங்களை கொடுத்தார். முதன் முதலாக ஈழத்தமிழர்கள் அடைந்த துயரங்களை பார்த்தேன். படம் எடுப்பதற்கு முன்னால் ஈழப்பகுதிகளுக்கு போகவேண்டும் என்று சொன்னேன். அங்கே போய் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து மக்களை சந்தித்தேன். ஒவ்வொரு கதைகளும் ஒரு ஈழ சினிமாதான். நிறைய பேரை சந்தித்தேன். நீண்ட நேரம் பலமான அவர்களின் கதையைஇ வாழ்க்கையை வீடியோவில் பதிவு செய்தேன். நான் பதிவு பண்னின மொத்த விஷவலையும் வெச்சு இரண்டு வருஷத்துக்கு ஒரு மெகா சீரியலே பண்ணலாம்.

அங்கே ஈழத்தில் இரண்டு விதமான மக்கள் வாழ்கிறார்கள். ஒன்று யுத்தத்தின் நெருக்குவாரத்தை சந்தித்து தினம் தினம் மரணத்தோடு இன்னும் சொந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இன்னொரு புறம் புலம் பெயர்ந்து உலகெங்கிலும் தாயகம் பற்றிய கனவுகளோடு வாழ்பவர்கள். ஐம்பதுகளில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இவளவு கொடூரம் நடந்தும் இன்னும் இது சரியாக வெளியுலகத்துக்கு வரவில்லை என்கிற ஏக்கமும் கோபமும் அவங்ககிட்டே இருக்கு.

 இரண்டு சமூகங்கள் ஒரு பிரச்சனை காரணமாக மோதி அதில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டா அதுக்கு பேர் கலவரம். ஆனா இலங்கையில் காலம் காலமா தமிழர்கள்தானே பாதிக்கப்படுறாங்க. ஆனா இன்றைக்கு வரைக்கும் இலங்கையில் தமிழர்கள் மேல் நடத்தப்படுகிற தாக்குதலை கலவரமாகத்தான உலக மீடியாக்கள் பார்க்குது. இப்படிபட்ட வருத்தங்கள் அவங்களுக்கு இருக்கு. அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட இரண்டாவது ஆயுதமாக சினிமாவை கையிலெடுத்திருக்காங்கண்னு நினைக்கிறேன்.

கேள்வி:
ஆணிவேர் படம் எடுப்பதற்க்காக நீங்கள் ஈழத்தில் எவளவு காலம் தங்கியிருந்தீர்கள்? அந்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்: கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்கியிருந்தேன்.சென்னையில் இருந்து கொழும்புக்கு போய் இறங்கிய போது ஒரு தமிழ் நாளிதழை வாங்கி பார்த்தேன் ��கொல்லப்படுபவர்கள் எல்லாம் புலிகள்�� என்று தலைப்பு செய்தி போட்டிருந்தார்கள். ஈழத்தில் உள்ள போராளிகளாக உள்ள பொது நிலையினரின் வாழ்க்கையை அந்த தலைப்பு எனக்கு உணர்த்தியது. ஏகப்பட்ட பரிசோதனைகள் கொழும்பில் உலவுகிற ஒவ்வொரு மனிதனும் ஆயுதங்களோடு கண்காணிக்கப்படுகிறான். புல்லட் நிரப்பப்பட்ட ஒப்பன் செய்யப்பட்ட ஏகே 47 நவீன ரக துப்பாக்கிகள் வழியாக ஊர்ந்துதான் கடுமையான கெடுபிடிகளை தாண்டி ஈழத்துக்குள் பிரேவசிக்க முடிந்தது.

என்னை அழைத்து வந்த காரோட்டி சொன்னார் ��சார் கை தவறுதலாக பட்டால் கூட அந்த துப்பாக்கியின் குண்டுக்கு யாரோ ஒருத்தர் பலியாக நேரிடும்�� என்றார். அப்புறம் ஈழத்துக்கு போய் என்னோட பணிகளை கவனித்தேன். அங்கு வாழ்கிற ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தமிழ் பெண்ணுக்கும் ஒரு கதை இருக்கிறது. அது யுத்தத்தோடு தொடர்புடைய கதை. ஒவ்வொரு மனிதனும் சகோதரியையோஇதாயையோ.உறவுகளையோ இழந்த கதைகள் ஏராளமாக இருக்கிறது. ஒரு கலைஞனாகவோ மனிதனாகவோ இதற்க்கெல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று எனக்கு தெரியவில்லை.

ஒரு தாயை சந்தித்தேன் அவங்களோட மகனை சில வருடங்களாகவே காணவில்லை. பின்னர் செம்மணி புதை குழி மர்மங்கள் வெளிபட்ட போது அதில் அவங்களோட மகனும் கொலை செய்யப்பட்டாராம். அதே மாதிரி இன்னொருத்தங்க ஒரு கதை சொன்னாங்க. ஒரு நாள் ஆர்மிக்காரன் வருகிறான் என்று எல்லோரும் ஒடியிருக்காங்க அப்படி ஒடினபிறகு பார்த்தா அவங்களோட குழந்தையை மிஸ் பண்னிட்டாங்க பதறிப்போய் பார்க்கும் போது அந்த குழந்தையை எரிந்து கொண்டிருந்த தீயில் போட்டிருக்காங்க. அதே மாதிரி தன்னோட தாய் இறந்து போயிட்டாங்க எனபது கூட தெரியாமல் தாயோட மார்பில் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையின் கதை ஒன்றை ஒரு டாக்டர் சொன்னாங்க. அவங்க அந்த சமூகத்தோட மனச்சாட்சி மாதிரி ஏண்ணா?அவங்கதானே யுத்தத்தால பாதிக்கப்பட்ட மக்களை நேரடியா பார்க்கிறாங்க மருத்துவம் செய்றாங்க.

ஒரு நாள் ஷெல் அடிக்கும் போது குழந்தையோட பதுங்கின தாய்க்கு தோளில் நல்ல காயம் ஏற்ப்பட்டிருக்கு அந்தம்மாவுக்கு அவசரமா ஒரு ஆப்பரேஷன் பண்ணவேண்டும் அவங்ககிட்டே மயக்க மருந்து எடுத்துக்கோங்க கிட்டத்தட்ட நான்கு மணிநேரமாவது ஆகும என்று டாக்டர் சொன்னபோது ��வேணாம் அவளவு நேரம் குழந்தை பால் குடிக்காம இருக்க முடியாது.மயக்க மருந்து இல்லாமலே பண்ணுங்க�� எனறு சொல்லி மயக்க மருந்து இல்லாமலே அந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கு இதை மனத்தைரியமா எடுத்துக்கறதா?இல்லை போர் இப்படி ஒரு மன இறுக்கத்தை அந்த மக்களிடம் ஏற்ப்படுத்தியிருக்குண்னு நினைக்கிறதாண்னு தோணலை...தர்ஷினி கொலை செய்யப்பட்டது பற்றி ஒரு ஆசிரியரிடம் பேசினேன் அவங்க சொன்னதும் நான் பார்த்ததும் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது காரணம் மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது அவங்களோட ஒவ்வொரு அடியும் இராணுவத்தால் கண்காணிக்கப்படுவதும் பரிசோதனை என்கிற பெயரில் கொடூரமான வக்கிரமான வதைகளுக்கு ஆட்படுவதும் இன்றும் தொடர்கிறது.அதை நேரில் என்னால் பார்க்க முடிந்தது.

கேள்வி: இத்தகைய கொடுமைகளை ஒரு ஆவணப்படமாகவோஇ இல்லை ஒரு கட்டுரையாகவோ எழுதிவிட முடியும் ஆனால் புனைவுகள் கொண்ட ஒரு சினிமாவாக இதை எப்படி எடுக்க முடியும்?

பதில்: ஆணிவேர் படத்தை புனைவு என்று என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் நடந்தெல்லாம் உண்மையாக இருக்க எப்படி புனைவாகிவிடும்? நிகழ்ந்த சம்பவங்களை புனைவு என்கிற ஒரு வடிவத்துக்குள் கொண்டு வந்திருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் ஆணிவேரை புனைவு என்று சொலவதே வேதனையாகத்தான் இருக்க முடியும். தலைமுறை தலைமுறையாக கொல்லப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகிற மக்களின் நிஜமான கதைகளை அப்படி புனைவு என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போக முடியாது. இது உண்மைக்கதை.

கேள்வி: பெரும்பாலான பாத்திரங்களாக ஈழத்தமிழர்களே நடித்திருக்கிறார்கள். ஆனால் மதுமிதாவையும்இநந்தாவையும் தமிழகத்திலிருந்து அழைத்து போய் ஏன் நடிக்க வைத்தீர்கள்? அதிலும் ஈழத்தமிழர்களே நடித்திருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்குமே?

பதில்: ஆணிவேர் படத்தை ஒரு பட்ஜெட் படமென்றோ பட்ஜெட் இல்லாத படமென்றோ சொல்லிவிட முடியாது. தவிரவும் இந்த படத்தை எடுக்கும் போதே இதை இந்தியாவில் ரிலீஸ் பண்ணமுடியாது என்று தோன்றியது. புலம் பெயர்ந்து அய்ரோப்பிய நாடுகளில் வாழும் மக்களும் இதை பார்ப்பாங்களா என்று அப்போ தெரியவில்லை. அதனால் பார்வையாளர்களை முதலில் தியேட்டருக்கு அழைத்துவரும் ஒரு முயற்சியாகத்தான் தெரிந்த முகமாக இருக்கட்டுமே என்றுதான் மதுமிதாவை அதில் நடிக்க தேர்ந்தெடுத்தேன். ஒரு நாள் நந்தாவே என்னை தேடி வந்தார் ��நீங்க ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு படம் பண்றீங்களாமே அதில் எனக்கும் ஒரு ரோல் வேணும் என்றார்�� அதனாலதான் ஆர்வமாக இருந்த அவரை இதில் நடிக்க வைத்தேன்.

மதுமிதாவும் நந்தாவும் இந்த படத்துக்கு கொடுத்த ஒத்துழைப்பை நான் நினைக்கும் போது உண்மையிலே மகிழ்ச்சியாக இருக்கு. காரணம் மதுமிதா தெலுங்கு காரங்க... ஈழ மக்களோட கஷ்டங்களை தெரிஞ்சி புரிஞ்சுக்கிட்டு நடிச்சாங்கஇ நானும் சரி கேமிராமேன் சஞ்சயையும் சரி நடிகர்களும் சரி யாருமே சம்பளம் பேசிட்டு வேலை பார்க்கவில்லை. அவங்க கொடுத்ததை வாங்கிட்டோம். முதன் முதலா யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்குண்னுதான் நினைக்கிறேன். அப்புறம் ஆணிவேர் படத்தில் நடிச்ச மற்ற நடிகர்களின் நடிப்பை சொல்லியாகணும். கையில்லாதவங்க...ஊனமானவங்க...என்று ஏராளமானவர்கள் என்னோட ஒன்பது மாதம் இருந்தாங்க.

நடிப்பை அவங்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.. நிகழ்வுகளை ஞாபகப்படுத்திவிட்டாலே போதும் சிறப்பாக செய்வார்கள். ஒரு அம்மாவை அழச்சொல்லி கேட்டேன். அவங்களால அழ முடியவில்லை காரணம் யுத்தத்தில் அவங்களோட மூன்று குழந்தைகளை பலிகொடுத்திருக்காங்க. அழுவதற்க்கு கண்ணீர் இல்லாத வற்றி வரண்டு போன வாழ்கை அவங்களோடது. யாழ்குடாவை சிங்கள இராணுவம் ஆக்ரமித்த போது மொத்தமாக ஐந்து இலட்சம் மக்கள் இரவோடு இரவாக கால்நடையாக யாழை விட்டு வெளியேறுகிற காட்சியை எடுக்க வேண்டும். அதை செய்யுங்கள் என்றதும் அவர்களாகவே வீட்டில் போய் பாத்திரபண்டங்கள்இ பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக புலம் பெயர்ந்தார்கள். அந்த மக்களையே இந்த படத்தில் நடிக்க வைத்ததுதான் இந்த படத்தோட சிறப்பு. தவிரவும் இது முதல் படம்.

இனி அவர்களிடமிருந்தெ படங்கள் வர வேண்டும். அதோட ஒரு முன்னோட்டமாகவும் இது இருக்கலாம் இல்லையா? என்னதான் இருந்தாலும் அவங்க அந்த மண்னில் வலிகளோடு வாழ்கிறவர்கள் அவங்கிட்டேயிருந்து இப்படியொரு படைப்பு வரும் போது அது இன்னும் சிறப்பாக இருக்கும்ணு நினைக்கிறேன்...

கேள்வி: இது யுத்தத்துக்கு எதிரான படமா?

பதில்: ஆமாம் பிரபாகரன் என்னிடம் சொன்ன போது ஒரு விஷயத்தை தெளிவாக சொன்னார். இந்த படம் முழுக்க முழுக்க ஈழத்தமிழர்கள் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும் என்றார். அவங்களோட வேதனைகள் மட்டும் உலகத்துக்கு தெரியவேண்டும் என்றார். யாருக்கும் எந்த ஒரு அமைப்புக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இது இருக்க கூடாது என்றார். அதனாலதான் இந்த படத்தில் குழந்தைகளையும் பெண்களையும் மையப்படுத்தி கதை சொல்லியிருக்கோம். யுத்தத்தின் கொடூரங்களைஇ கந்தகம் ஈழத்தில் பிறக்கிற குழந்தைகளை கூட எப்படி ஊனமாக்கிவிடுகிறது என்பதைஇ அவங்களோட மனநிலையை எப்படி பாதிக்கிறது என்பதையும் சொல்லொயிருக்கிறோம். ஒரு விஷயம் தெரிந்தது இராணுவம் வெறும் குண்டு அல்லது ஆயுதங்களை மட்டுமல்ல பெண் உடலையும் தமிழருக்கெதிரான தாக்குதலுக்கு பயன் படுத்துகிறது. அதோட தொடர்ச்சிதான் பாலியல் வன்முறைகள்இ மாணவிகளை மனசளவில் கூச வைக்கிற சோதனைகள். இம்மாதிரி பிரச்சனைகளை பேசுவதாலும் இம்மக்களின் கோரிக்கை நியாமானது என்பதை படத்தை பார்க்கிறவர்களே புரிந்து கொள்வார்கள்.

கேள்வி: தமிழ் சினிமா என்றால் அது சென்னை கோடம்பாக்கத்தில் உற்பத்தியாகிற சினிமாதான். அந்த நிலையை இது எட்டுமா?வியாபார ரீதியாக வெற்றி பெற்றால்தானே அடுத்தடுத்து படங்கள் எடுக்க முடியும்?

பதில்: வியாபார நோக்கங்கள் எதுவும் இல்லாமல்தான் இந்த படத்தை எடுத்தோம். கோடம்பாக்கத்தில் ஒரு சினிமா எடுத்தால் நான்கு ஜெனரேட்டர் கேட்டாலும் கிடைக்கும் காரணம் அதோட பண புழக்கம் அப்படி. ஈழத்தில் போய் ஷ�ட் பண்னினப்போ ஒரு கிரேன். டிராலிஇ லைட்ஸ் என எதுவுமே கிடையாது. காலையில் சில மணிநேரம் மாலையில் சில மணிநேரம் என்றுதான் ஷ�ட் பண்னினோம். குறைந்த செலவில் ஒரு படத்தை பண்ணியதன் காரணம் அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றுதான். மற்றபடி நம்மூர்(கோடம்பாக்கம்)சினிமா மாதிரி வர்த்தக நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படமல்ல. இந்த படம் நன்றாக ஒடி வசூலானாலும் அதுவும் இப்படி ஒரு முயற்சிக்குத்தான் செலவிடப்படுமே தவிர வேறெதற்கும் அல்ல...

கேள்வி: மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்'இசந்தோஷ் சிவனின் 'டெரரிஸ்ட்' படமெல்லாம் அவங்களோட பிரச்சனைகளை பேசியிருக்கா? அது அவங்களுக்கு திருப்தியா இருக்கா...?

பதில்: ஒரு சினிமாவை எடுத்து ஈழத்தமிழர்களுக்கு நாம உதவாம இருந்தாலும் போதும். ஆனால் அவங்களை ஒரு சினிமா எடுத்து இழிவு படுத்த கூடாது. நான் பெயரை சொல்ல மாட்டேன். சில படங்கள் ஈழத்தமிழ் பெண் போராளிகளை இழிவு படுத்தியிருக்கிறதாகத்தான் அவங்க நினைக்கிறாங்க. �முக்கியமான ஒரு தலைவர் என்னிடம் சொன்னார் ��எங்களோட பெண்கள் உங்களோட சினிமாவில் வருகிற மாதிரி நடந்துக்க மாட்டாங்க�� -என்றார். நான் அங்கு தங்கியிருந்த நாட்களிலும் அவரோட வார்த்தைகள் உண்மை என்று தெரிந்தது.. காரணம் நான் சிலரிடம் இவளவு பிரச்சனை இருக்கே நீங்க ஏன் இந்த மண்ணை விட்டு போகக்கூடாது? என்று கேட்டேன்.

இன்ணைக்கு நாங்க கஷ்டப்படலாம் ஆனா என்றாவது ஒரு நாள் எங்களுக்கு இல்லாட்டியும் எங்களோட சந்ததிக்கு விடுதலை கிடைக்கும் அதனாலதான் என்கிறார்கள். ஈழத்தமிழர்கள் பற்றி படம் எடுப்பவர்கள் முதலில் அவங்களோட வாழ்க்கைப் பாடுகளை தெரிஞ்சிருக்கணும். ஏன் போராடுறாங்க அவங்க யாருங்கறெதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு கத்துக்கிட்டு படம் பண்ண வேண்டும். இல்லாட்டி சும்மா இருக்கணும்.

கேள்வி: உங்களோட அப்பா படத்தை பார்த்துட்டு என்ன சொன்னார்?

பதில்: படம் பணறதுக்கு முன்னாடியே அவர் சொன்னது. ஈரான் படங்கள் என்றால் கொரியாவின் படங்களென்றால் ஒரு தனித்தன்மை இருக்கும். அதுமாதிரி இது ஈழ மண்ணோட படம் அவங்களோட வாசனை என்னவோ அதன்படி பண்ணு. சராசரி தமிழ் சினிமா மாதிரி இதை பண்னிடாதே என்றார். எடுத்து முடிச்சிட்டு சிங்கப்பூரில் வைத்து அவருக்கு காட்டினேன் கொஞ்சம் யோசனைகள் சொன்னார். நல்லாயிருக்குண்னு பாராட்டினார்...


மனங்களின் ஆழத்தில் பதியும் `ஆணிவேர்'  - ஒரு பேப்பர்

ஈழத்தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன. ஒன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்ற நம்மவர் திரைப்படத்துறை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் சிங்கள திரைப்படங்களின் தரத்திலாவது ஒரு படத்தை தராதா? மற்றையது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது பேல் கலைப்படைப்புகளின் வாயிலாக எம் மக்களின் துயரங்களை உலக மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா? என்பது. இதற்கான, முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றில்லை. எனினும், காத்திரமான படைப்பு எதுவும் இதுநாள்வரை வரவில்லை. திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுள்ள இந்தியாவிலிருந்து எம் அவலங்களை கருப்பொருளாய் எடுத்து நிஜத்தை சிதைத்து வியாபார திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்தன.
தமிழ்த்திரை ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் ஒரு திரைப்படம் ஈழத்திலிருந்து வந்திருக்கிறது. அத்திரைப்படத்தின் தலைப்பு `ஆணிவேர்' குறித்துக் கொள்ளுங்க. தமிழீழ திரைப்படத் துறையில் இது ஒரு பெரும் பாய்ச்சல்.

அண்மையில் லண்டனிலுள்ள சோகோ திரையரங்கில் இத்திரைப்படத்தின் பிரத்தியேக காட்சி ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பிரத்தியேக காட்சிகளுக்கென சிறப்பாக அமைக்கப்பட்ட திரையரங்கினை தேர்ந்தெடுத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் ஆர்வலர்களையும் அழைத்துத் திரைப்படம் பற்றிய விபரங்களுடன் காட்சியை ஒழுங்கு செய்தமை ஆணிவேர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான தமிழீழ திரைக்கண் நிறுவனத்தின் துறை சார் முதிர்ச்சியை எடுத்துக் காட்டியது. காட்சியின் இறுதியில் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து திலக் தனது தயாரிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நன்றியுரையாற்றினார். முழுக்க முழுக்க வன்னி பெருநிலப்பரப்பில் படமாக்கப்பட்டுள்ள இந்த முழு நீளத் திரைப்படத்தை `உதிரிப்பூக்கள்', `நெஞ்சத்தைக் கிள்ளாதே' போன்ற பிரபலமான திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மகேந்திரனின் புதல்வர் ஜோன் மகேந்திரன் இயக்கியுள்ளார். நந்தா, மதுமிதா, நீலிமா ஆகிய தமிழகக் கலைஞர்கள் முக்கிய பாத்திரமேற்று ஈழத்து கலைஞர்களுடன் இணைந்து திறம்பட நடித்துள்ளனர்.

இதுவும் ஒரு காதல் கதைதான். தமிழகத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சந்தியா (மதுமிதா) தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறாள். அங்கு கடமையே கண்ணாக மக்களுக்கு சேவை செய்யும் கோபக் கார இளம் மருத்துவர் நந்தாவை சந்திக்கிறாள். நட்புக் கொள்கிறாள். போரினால் மக்கள் படும் அவலங்கள் அவளையும் பாதிக்கிறது. அந்த மக்களுடன் ஒன்றிப் போகிறாள். வரலாற்றுப் பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு அவர்களையும் பிரித்து விடுகிறது. அவள் தாயகம் செல்கிறாள். மீளவும் அவனைத் தேடியபடி வன்னிக்கு வருகிறாள். திரைப்படத்தின் பெரும்பகுதி பின்னோக்கிய கதையாக நகருகிறது.

பாடாலை மாணவி கிருசாந்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் உட்பட தமிழர் வரலாற்றில் பல துன்பியல் நிகழ்வுகள், அன்றாடம் மக்கள் படும் இன்னல்கள் என்பன எந்த பொய்மைக்கும் இடமில்லாமல் படமாக்கப்பட்டுள்ளன. யாழ்பபாண இடப்பெயர்வுக் காட்சிக்கு இருபத்தையாயிரம் பேர் பயன்படுத்தப்பட்டு அந்த நிகழ்வு மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் தேசம் இத்தனை வனப்பு மிக்கதா எனப் பிரமித்துப் போகிறோம். ஒவ்வொரு காட்சியையும் அழகியல் உணர்வுடன் படச் சட்டங்களுக்குள் அடக்கியுள்ளார் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சஞ்சை. தமிழக கவிஞர் முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் சின்னக் குயில் சித்ரா. இசையமைத்திருப்பவர் சதீஸ்.

நடைமுறை வாழ்வில் கலந்துள்ள அரசியல் தவிர பிரசார நோக்கம் எதுவுமின்றி படத்தை நெறிப்படுத்தியுள்ளார் ஜோன் மகேந்திரன். முற்றிலும் வன்னியில் படமாக்கப்பட்டுள்ள போதும் புலி என்ற சொல் ஓரிரு தடவைகள் தான் பாவிக்கப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கதாநாயகன் நந்தாவும் நாயகி மதுமிதாவும் ஏற்கனவே சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்த போதும் இந்த திரைப்படத்தில் புதுப்பிறப்பெடுத்துள்ளார்கள் என்றே கூற வேண்டும். மாணவி கிருசாந்தியாக வரும் நீலிமா ஸ்ரீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட கிருசாந்தியை கண்முன்னே கொண்டு வருகிறார். ஈழத்தில் தயாரான பல குறும்படங்களில் நடித்த முல்லை யேசுதாசன் சிறிய பாத்திரத்தில் நடித்தாலும் தனது இற்கையான நடிப்பாற்றலை மீளவும் வெளிப்படுத்தி உள்ளார். அதுபோலவே, கதாநாயகனின் பாட்டியாக வரும் நடிகையும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிறார். `என்ர பேரனை நீங்கள் கலியாணம் செய்யிறீங்களா' என வெகுளித் தனமாக சந்தியாவை (மதுமிதா) கேட்குமிடத்தில் எங்களூர் ஆச்சிமாரை நினைவு படுத்துகிறார்.

மாங்குளத்தில் மலையைக் காட்டிய புருடாக்கள் போல் இல்லாமல், உள்ளதை உள்ளபடி சித்திரிக்கும் `ஆணி வேர்' ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகையும் புதுவிசையுடன் முன்தள்ளியுள்ளது. பிரித்தானிய தணிக்கைப் பிரிவினால் 15 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கானதாக தரப்படுத்தப்பட்டிருக்கும் இத்திரைப்படம் சென்ற 22 ஆம் திகதி முதல் பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் திரையிடப்பட்டுள்ளது.

வசதிகள் குறைந்த பிரதேசமொன்றிலிருந்து நவீன தொழில் நுட்பத்தை பிரயோகித்து அந்த மண்ணின் மணம் மாறாமல் உருவாக்கப்பட்டிருக்கும் `ஆணி வேர்' உங்கள் மனங்களில் ஆழப்பதிந்து விடும் என்பதில் ஐயமில்லை. நம்மவர் திரைப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்ற வழமையான வேண்டுகோளினைக் கடந்து, பொருத்தமான காலகட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தரமான படைப்பு ஒன்றை சுட்டி நிற்பதனையிட்டு மகிழ்வடைகிறேன்.



 

What others say...

திரு. செல்வபாரதி � திரைப்பட இயக்குனர் ( விஜய் நடித்த 5 படங்கள் உட்ப்பட ஏனைய பல வெற்றிப்படங்களை உருவாக்கியவர் )

எனக்கும் ஈழத்திற்க்கும் உள்ள தொடர்பு எனது கல்லூரிக்காலங்களிலேய பல கவிதை வடிவங்களாக எனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தேன்இ எனினும் எனது தொழில் ரீதியாக ஈழத்தமிழ்ர்கள் பற்றி நான் பல கதைகளை உருவாக்கிவைத்திருந்த நேரத்தில் ஆணிவேர் எனும் படத்தை பார்ப்பதற்குரிய சந்தர்ப்பத்தை இப்படத்தின் தயாரிப்பாளர் சுவிஸ் பிராபா அவர்கள் எனக்கு உருவாக்கி தந்தார் ஆணிவேர் எனும் ஆழமான சரித்திரத்தை பார்த்தபின் எனக்குள் ஏற்ப்பட்ட மாற்றங்கள் பல எனினும் உடனடியாகவே நான் ஈழத்தமிழர்களுக்குரிய எனது தொழில் ரீதியான சேவையை வழங்க வேண்டும் என முடிவெடுத்து அதற்க்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

(இவர் அண்மையில் செஞ்சோலை வளகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.)

திரு. நாகா - இந்தி திரைப்பட இயக்குனர் (சன் ரீவியில் ஒளிபரப்பாகிய சிதம்பர ரகசியம் என்ற வரலாற்று தொடரை இயக்கியவர்)

சினிமா எனும் அற்புதமான கலையை விலைக்கு விற்க்கமுடியாது என்ற கொள்கையுடன் இருக்கும் எனக்கு அண்மையில் எனது நண்பர் பிரபா மூலமாக இலங்கையில் தயாரித்த ஆணிவேர் எனும் படத்தை பார்கும் வாய்ப்பு கிடைத்தது இப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே தமிழ் சினிமாவின் எந்த தடையங்களும் இல்லாமல் கதைகளும் காட்ச்சிகளும் நகர்ந்து கொண்டிருந்தது இப்படத்தின் ஆணிவேராக ஒளிப்பதிவு மிகவும் உறுதியாக இருந்ததுடன் இம்மண்னை நாம் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை ஊட்டிய அற்புதமான படைப்பாகும்.

திரு. சீமான் - திரைப்படஇயக்குனர்

தமிழ் சினிமாவின் புதிய புரட்சியாக தமிழிழத்தில் இருந்து வெளிவந்துள்ள ஆணிவேர் இன்னும் பல புதிய வேர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை

திரு. ரமேஸ் - திரைப்பட இயக்குனர் (சைனைட்)

நான் இயக்கிய சைனைட் எனும் ரஜீவ்காந்தி கொலை தொடர்பான திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்க்கான முயற்சிகளில் இருந்தபோது எனது நண்பர் ஒருவர் மூலமாக ஈழத்தமிழர்கள் எடுத்த படம் ஒன்று வெளியிடுவதற்க்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிந்து இப்படத்தை (ஆணிவேர்) எடுத்த தயாரிப்பாளரை சந்தித்து எனது படத்தை வெளிநாடுகளில் வெளியிடுவது தொடர்பாக கலந்துரையாட விரும்பி எனது நண்பர் மூலமாக ஆணிவேர் படத்தின் தயாரிப்பாளர் சுவிஸ் பிரபா அவர்களை சந்தித்த போது ஆணிவேர் எனும் இலங்கைத்தமிழர்களின் திரப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

உண்மையிலேயே என்னை மிகவும் பாதிக்க வைத்த படம் ஆணிவேர் போர் நடந்த தேசத்தில் உருவாக்கப்பட்ட படம் என எந்த தொழில்நுட்ப்ப குறைகளையும் என்னால் காணமுடியவில்லை. பார்வையாளர்களின் மனங்களில் பாரிய மாற்றங்களை உருவாக்கவல்ல ஓர் திரைப்படம் ஆணிவேர் என்பது எனது அசைக்க முடியாத கருத்தாகும்.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home