Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Tamilnation > Struggle for Tamil Eelam > Conflict Resolution - Tamil Eelam - Sri Lanka > Norwegian Peace Initiative Geneva Talks & After > செல்வராஜா கஜேந்திரன், யாழ்மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர், பத்திரிகை அறிக்கை
 

Tracking the Norwegian
Conflict Resolution Initiative

செல்வராஜா கஜேந்திரன்
யாழ்மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர்
பத்திரிகை அறிக்கை
[also in PDF]

13 June 2006


இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்து மாறி மாறி ஆட்சிப்பீடமேறிய சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விட்ட திட்டமிட்ட நிலப்பறிப்புக்கள், நீதிக்குப்புறம்பான கைதுகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள் போன்றவற்றிற்கெதிராக 1970 கள் வரையான மூன்று தசாப்த காலமாக தமிழ் தலைவர்கள் ஜனநாயகரீதியாக வன்முறைகளற்ற வழியில் போராடினார்கள்.

அகிம்சைவழிப் போராட்டங்கள் மீது சிங்கள ஆட்சியாளர்களால் கொடூர அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டதால் 70 களின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் கடந்த 2001 சித்திரையில் சிறீலங்கா ஆயுதப்படைகளை இராணுவரீதியாக தோற்கடிக்கும் வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.

அதுவரையான காலப்பகுதியில் எமது மக்கள் மீதும், வாழ்விடங்கள்மீதும, குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு, அவர்களது வாழ்விடங்களில் இருந்து இலட்சக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களது வீடுகள், வணக்கத்தலங்கள், கல்விக் கூடங்கள், தொழில் நிலயங்கள், விவசாய நிலங்கள், என்பன ஆக்கிரமிக்கப்பட்டு மக்கள் அகதிகளாக்கப்பட்டபோது ஐரோப்பிய ஒன்றியம் மௌனமாகவே இருந்து வேடிக்கை பார்த்தது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவரீதியான வெற்றி, மற்றும் சிறீலங்கா அரசின் இராணுவரீதியான தோல்வியின் விளைவாக சமாதான உடன்படிக்கை உருவாக்கப்பட்டது.

22 மாசி 2002ல் இருந்து நவம்பர் 2005 வரையான 4 வருடகாலத்தில் இராணுவத்தினருக்கெதிராக எந்தவொரு தாக்குதல்களும் இடம்பெறவில்லை. ஆனால் இக்காலப்பகுதியில் அப்பாவிப் பொது மக்கள் 70 பேரும் போராளிகள் 127 பேரும் சிறீலங்கா இராணுவத்தினராலும் அதன் துணைப் படைகளாலும் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்காண்டு காலப்பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையை மதித்து அரசு அதனை நடைமுறைப் படுத்த தவறியபோது , மாணவர்களை சுதந்திரமாக கல்வி கற்கவோ, இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமரவோ, தமது நிலத்தில் விவசாயம் செய்யவோ அல்லது கைத்தொழில்களை ஆரம்பிக்கவோ அனுமதிக்காது. மீனவர்களை சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்காது, அவர்கள்மீது இராணுவ நெருக்குவாரங்களை கட்டவிழ்த்து விட்டபோது.

சிரான் அமைப்பை நடைமுறைப்படுத்த அரசு தவறியபோது, ஐளுபுயு அடிப்படையில் பேச அரசு மறுத்தபோது, சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உருவாக்கப்பட்ட கட்டமைப்பை நடைமுறைப்படுத்த அரச தவறியபோது

இவற்றுக்கெதிராக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அல்லது ஐரோப்பிய ஒன்றியம் ஏதாவது நடவடிக்கை எடுத்து நிலமையை சுமூகமாக்கவும், தழிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் முயன்றதா?

இந்நிலையில் விரக்தியடைநத, துணிச்சலுள்ள ஓர் இளைஞ்ஞர் கூட்டம் December 2005ல் இருந்து படையினருக்கெதிராக தாக்குதல்களை ஆரம்பித்தார்கள். அவ்வாறு தாக்குதல்கள் நடைபெற்றபோது, இராணுவம் பதில் தாக்குதல் என்ற போர்வையில் இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல்கள் எதிலும் ஈடுபடாத அப்பாவித் தழிழ் மக்கள் பழிவாங்கப்பட்டார்கள.

அப்பாவித் தழிழ் மக்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டாகள், அடித்தும், சுட்டும் காயப்படுத்தப்பட்டார்கள், வெட்டியும், சுட்டும் கொலை செய்யப்பட்டார்கள், கடத்திச்செல்லப்பட்டார்கள்.

புங்குடுதீவில் கடற்படையினரால் தர்சினி பாலியல் வல்லுறவுக்குடபடுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்

26-12-2005 ல் அதிகாலை 01.00 மணியளவில் மட்டக்களப்பில், தேவாலயத்தில் வைத்து தழிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் படுகொலை செய்யப்பட்ட பின்

திருகோணமலையில் 5 இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட பின்

 பேசாலையில் கடற்படையினரால் தழிழ் மக்களது வீடுகள் எரிக்கப்பட்டு, மக்கள் கொலை செய்யப்பட்ட பின்

மானிப்பாயில் போஜனது குடும்பத்தினர் மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், ஈ.பி.டி.பி யினரும் இணைந்து குண்டு வீசி மூவரைக் கொன்று இருவரைக் காயப்படுத்திய பின்

புத்தூரில் ஐந்து இளைஞர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பின்

தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களது இடத்திற்கு நியமிக்கப்படவிருந்த ஏ.விக்னேஸ்வரன் அவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்வைத்து படுகொலை செய்யப்பட்ட பின்

திருகோணமலையில் கடற்படையினர் முன்னிலையில் 20 தழிழர்கள் சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்டு, 31 தழிழர்களது வர்த்தக நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்ட பின்

திருகோணமலை மூதூரில் எமது மக்கள் மீதும், வாழ்விடங்கள்மீதும, வான், கடல், தரை வழியாக குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு, 14பேர் படுகொலை செய்யப்பட்டு எஞ்சியோர் அவர்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்

04-05-2006ல் நெல்லியடியில் ஏழு இளைஞர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பின்

வறணி மந்துவிலில் எட்டு இளைஞர்கள் படையினரால் கடத்தப்பட்ட பின்

அல்லைப்பிட்டியில் கடற்படையினரும், ஈ.பி.டி.பி யினரும் இணைந்து ஒரே இரவில் எட்டுப்பேரை படுகொலை செய்யத பின்

02-05-2006ல் இரவு 9.00 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தினுள் புகுந்த ஈ.பி.டி.பியினர் அங்கிருந்த இரு ஊழியர்களை சுட்டுக் கொன்றுவிட்டு இரு ஊழியர்களை சுட்டுக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரது பெயரும் அவர்கள் பயன்படுத்திய
மோட்டார்சைக்கிள் இலக்கமும் பொலீசாரிடம் அந்த நிறுவனத்தினரால் ஒப்படைக்கப்பட்ட பின்

12-05-2006ல் இரவு11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள எனது பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் சர்வதேச தழிழீழ மாணவர் பேரவையின் தலைமை அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தினுள் நுழைந்த இராணுவத்தினரும், ஈ.பி.டி.பி யினரும் இணைந்து அங்கிருந்த இரு அலுவலகங்களுக்கும் சொந்தமான சொத்துக்களை கொளளையடித்த பின்னர், எஞ்சியவற்றை தீயிட்டு எரித்து அழித்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் இராணுவத்தினரும், ஈ.பி.டி.பி யினரும் இணைந்து ஈடுபட்டார்கள் என்பதனை நேரில் கண்டவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த பின் மேற்படி கொலைகளில், வன்முறைகளில், ஈடுபட்ட குற்றவாளிகள் யாராவது கைதுசெய்யப்பட்டார்களா? சட்டத்தினால் தண்டிக்கத்தட்டார்களா? அதற்காக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

மேற்படி பல சம்பவங்களில் EPDP அமைப்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்மந்தப்ட்டிருந்தது. அவ் அமைப்பானது ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்களது தலைமையிலான அரசில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் டக்ளஸ் தலைமையில் இயங்குவது குறிப்படத்தக்கது.

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்கள் பதவியேற்ற 18-11-2006ல் இருந்து May 2006 வரையான 7 மாதகாலத்தில் 300ற்கும் மேற்பட்ட தழிழ் மக்களும், 23 போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 14 வயதிற்குட்பட்ட 22 சிறுவர்களும் அடங்குவர். குறிப்பாக 24வா குநடிசரயசல ல் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின்னர் 26 ஆயல 2006 வரை 207 தழிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வளவு படுகொலைகளும், ஆத்திரமூட்டும் சம்பவங்களும் நடைபெற்ற பொழுதிலும் கூட விடுதலைப்புலிகள் பொறுமைகாத்து வருகின்ற நிலையில் மேற்படி படுகொலைகள், ஆத்திரமூட்டும் சம்பவங்களில், போர் நிறுத்த மீறல்களில் அரசுத் தரப்பு ஈடுபட்டுள்ளபோதிலும், இதனைக் கட்டுப்படுத்த அரசுக்கெதிராக இ.போ.நி.க.குழு அல்லது ஐரோப்பிய ஒன்றியம் என்ன நடவடிக்கை எடுத்தது.

துழிழ் மக்கள் இலங்கையினுடய அரசியல் அமைப்பின் மீதும், சட்டம் மற்றும் நீதித்துறை மீதும் முற்றாக நம்பிக்கை இழந்தமையினாலேயே அவற்றினை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நிலைமைகளை கையாள்வதற்காக போர் நிறுத்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அது நடைமுறையில் இருந்தபோது அதனை முற்றாக செயலிழக்கச் செய்யும் வகையில் அரசு அவசரகாலச் சட்டத்தினை நடைமுறைப் படுத்தியதிலிருந்து அது போர் நிறுத்த உடன் படிக்கையினை பாதிக்கித்து வந்தபோதும், அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவசரகாலச் சட்டத்தினை நீக்கவும் போர் நிறுத்த உடன்படிக்கையை பாதுகாக்கவும் இ.போ.நி.க.குழு அல்லது ஐரோப்பிய ஒன்றியம் ஏதாவது நடவடிக்கை எடுத்தனவா?

அமைதியாக இருந்து நீண்ட காலமாக அரசு தமது ஆழுமையை இழந்துபோயிருந்த வடக்கு கிழக்கின் இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் சிவில் நிருவாகத்தினை நடைமுறைப் படுத்த ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளனர்.

மேற்படி சந்தற்பங்களிலெல்லாம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதிருந்துவிட்டு, நீதிக்குப் புறம்பான வகையில் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடைசெய்துள்ளமையானது அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் செயற்பாடாகும்.

வன்முறைகளை கைவிட்டு ஜனநாயக வழிமுறையில் உரிமைகளைப்பெற முயலவேண்டும் என வற்புறுத்திவரும் ஐரோப்பிய ஒன்றியம், கடந்த நான்கு வருடங்களில் பல இலட்சம் தழிழ் மக்கள் தழிழர் தாயகத்திலும், வெளிநாடுகளிலும் ஒன்று கூடி “பொங்கு தழிழ்” நிகழ்வுகள் மூலம் உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தினார்கள்.

05-12-2001, 04-04-2004 ஆகிய திகதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களிநூடாகவும் தழிழ் மக்கள் உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தினார்கள்.ஓவ்வொரு சந்தற்பங்களிலும் தழிழ் மக்கள் பின்வரும் முக்கிய விடயங்களையும் வலியுறுத்தினார்கள்.

தழிழீழ விடுதலைப்புலிகள்தான் தழிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகள்
தழிழீழ விடுதலைப்புலிகளுடன் மட்டும்தான் பேசவேண்டும்.
போர் நிறுத்த உடன்படிக்கையை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
ISGA  அடிப்படையில் பேச்சுக்கள் நடாத்தப்பட வேண்டும்.
ISGA தழிழீழ விடுதலைப்புலிகளிடம் வழங்கப்பட வேண்டும்
தழிழர் தாயகத்திலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் வெளியேற வேண்டும்.

அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேசத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டு ஜனநாயக வழியில், மீண்டும் வன்முறையில்லாமல், யுத்தம் இல்லாமல், இரத்தம் சிந்தாமல் உரிமைகளை பெறவேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில நின்று செயற்பட்ட கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூகத்தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அப்பாவித் தழிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஜனநாயக வழிமுறைமீது தழமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் என்ன நடவடிக்கை எடுத்தது?

இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேசத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருந்த தழிழ் மக்களை ஏன் ஐரோப்பிய ஒன்றியம் ஏமாற்றியது.

இவ்வாறு தடைசெய்துள்ளமையானது, தழிழர் தரப்பு நியாயப்பாடுகளை புரிந்துகொண்டு தழிழர் மீதான அரச பயங்கரவாதத்தினையும், இன ஒதுக்கல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தவும், தழிழரின் நியாயமான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ளவும் ஐரோப்பிய ஒன்றியம் பக்கச்சார்பின்றி, நடுநிலையோடு, செயற்படும் என்ற தழிழ் மக்களின் நம்பிக்கையினை சிதறடித்துள்ளதுடன், பெரும் அதிர்ச்சியினையும், ஏமாற்றத்தினையும், ஆத்திரத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

புலிகள் மீதான தடை தொடர்பாக அண்மையில் கருத்து வெளியிட்ட, இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியதின் பிரதிநிதி கூறியதாவது

“ஐரோப்பிய ஒன்றியதின் தடையானது தழிழ் மக்களுக்கோ, முஸ்லீம் மக்களுக்கோ எதிரானதல்ல மாறாக அது தழிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளுக்கெதிரானது”

இவ்வாறு கூறுவதன் மூலம்

புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்றும்
புலிகளின் விருப்பங்கள் வேறு தமிழ் மக்களின் விருப்பங்கள் வேறு

என்றும் கூறி புலிகளை தழிழ் மக்களிடமிருந்து பிரிக்கவும், வடக்கு கிழக்கை தனித்தனியாக பிரிக்கவும் முயலும் அரசின் சதி நடவடிக்கைகளுக்கு துணைபோவதாக அமைந்துள்ளதால் ஐரோப்பிய ஒன்றியதின் இக் கூற்றினை மிகவன்மையாக கண்டிக்கின்றோம்.

தடையானது அரசும் புலிகளும் சமம் என்ற பேச்சு வார்த்தைக்கான அடிப்படையை தகர்த்துள்ளதுடன், சமாதானப் பேச்சுவார்த்தையை முற்றாக முடக்கியுள்ளது.

சமாதான வழிமுறை மீது நம்பிக்கைகொண்ட சகல தரப்பினரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

மாறாக சமாதானத்திற்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டவும், பலப்படுத்தவும் வழிவகுத்துள்ளது.

போர் நிறுத்த உடன்படிககையினையும், ஜெனீவா உடன்படிக்கையினையும் அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்த தேவையில்லை என்ற நிலைப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வல்லரசு நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து புலிகளை தடை செய்ததா?

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கவில்லை என்பதற்கான பழிவாங்கும் நடவடிக்கையா? அரசு பயங்கரவாதம் புரியலாம் ஆனால் அதற்கு எதிராக யாரும் செயற்படக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய கருதுகின்றதா?

தங்களது பிராந்திய அரசியல், பொருளாதார நலன்களுக்காக இலங்கை அரசுடன் இணைந்து புலிகளை தழிழ் மக்களிடமிருந்து பிரிக்கவும், புலிகளை பலவீனப்படுத்தி, பணியவைத்து, சிங்கள அரசு விரும்புவது போன்றதொரு அரை குறைத் தீர்வினைத் தமிழர் மீது திணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முயல்கின்றதா?

சமாதான வழிமுறையிநூடாக புலிகள் பலவீனப்படுவார்கள் இல்லையேல் இவ்வாறான தடைகளைப்போட்டு புலிகளை பலவீனப்படுத்தி, பணியவைக்கலாம் எனற திட்டத்தோடுதான் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட தினத்திலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் செயற்பட்டதா?

அதனால்த்தான் அரசு போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாமல், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி வன்முறைகள், கொலைகளில் ஈடுபட்டபோது அதனை தடுத்து நிறுத்தி, ஒப்பந்தத்தினை அமுல்படுத்தச் செய்ய, இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அல்லது ஐரோப்பிய ஒன்றியம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமல் மௌனம் காத்ததா?

கடந்த 08-06-2006 ல் நோர்வேயில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு நோர்வேயின் அழைப்பிற்கு மதிப்பளித்து த.வி.புலிகளின் அதிகாரமுள்ள உயர்மட்டக் குழு அங்கு சென்றது. எனினும் அரசுத்தரப்பு பொறுப்பற்ற விதமாக அதிகாரமற்ற கீழ்மட்டக் குழு ஒன்றினை நோர்வேக்கு அனுப்பியதன் விளைவாக கூட்டம் குழம்பிப்போனது.

எனினும் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் தலைமையிலான குழுவினரை பேச்சுக்கு அனுப்ப புலிகள் சம்மதித்துள்ளபோதிலும கூட அரசத்தரப்பு அதனைக் குழப்பியடித்துக்கொணடு வெளியேறியதன் மூலம் குழப்ப நிலையை உருவாக்கியுள்ளனர்.

இவ்விடயத்தில் நோர்வேத்தரப்பு நடந்து கொண்டவிதம் தழிழ் மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.  நிகழ்ச்சி நிரலில் அரசுடன் பேசுவது தொடர்பாக முன்கூட்டியே எதனையும் குறிப்பிடாமல் இருந்துவிட்டு திடீரென அரசுத்தரப்போடு பேசவைக்க ஏன் முயன்றார்கள்? அவ்வாறு பேசவைக்க வேண்டிய தேவை இருந்திருந்தால் அதனை ஏன் விடுதலைப்புலிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை?

பேசவைக்க வேண்டிய வேவை இருந்திருந்தால் த.வி.புலிகளின் அதிகாரமுள்ள உயர்மட்டக் குழுவைப் போன்றதொரு குழுவை அரசுத்தரப்பிலிருந்து வரவளைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

த.வி.புலிகளின் அதிகாரமுள்ள உயர்மட்டக் குழுவை, அரசுத்தரப்பின் அதிகாரமற்ற கீழ்மட்டக் குழுவுடன் சந்திக்க வைப்பதன் மூலம் புலிகளின் சமஅந்தஸ்த்தினை பாதிக்கச்செய்ய முயன்றார்களா?

இவ்வாறான சூழ்நிலையில் சந்திப்பிற்கு புலிகள் மறுத்தால் புலிகள்தான் சமாதான முயற்சிகளை குழப்ப முயல்கிறார்கள் என்ற தவறான அபிப்பிராயத்தினை சர்வதேசத்தின் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டுச் செயற்பட்டார்களா?

அதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடை செய்ததை நியாயப்படுத நோர்வேத்தரப்பு முயன்றதா? இவ்வாறான அணுகுமுறைகள் அமைதி வழியிநூடாக சமாதானத்தினை அடைய ஒருபோதும் உதவப்போவதில்லை.

எனவே ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை மறுபரிசீலனை செய்து தடையை நீக்க வேண்டும் எனக் கோருகின்றோம். அத்துடன் சிறீலங்காப்படைகளால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அவமதிக்கப்படுதல், அச்சுறுத்தப்படுதல், கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுதல், கடத்தப்படுதல், கொலைசெய்யப்படுதல் போன்ற அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை தடுப்பதற்கும், போர் நிறுத்த உடன்படிககையினையும், ஜெனீவா உடன்படிக்கையினையும் அரசு உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் வகையிலும் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.

அதன் மூலம் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேசத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், அமைதிவழிப் பேச்சுக்கள் மீதும் நம்பிக்கையிழந்துள்ள தழிழ் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கைகனை ஏற்படுத்த முடியும்.

இல்லையேல் போர் ஒன்று வெடிப்பதனையும், அதன் மூலம் எமது தாயகதேசத்தினை நாம் மீட்டுக்கொள்வதனையும் யாராலும் தடுக்க முடியாது.

செல்வராஜா-கஜேந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர்

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home