|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Struggle for Tamil Eelam > Tamil Armed Resistance > Reports of Armed Conflict > தமிழீழ கடற்படையின் தளபதி கேணல் சூசை - உரையாடல்
Reports on Armed Conflict in Tamil Eelam
|
தமிழீழ கடற்படையின் தளபதி கேணல் சூசை - உரையாடல் 22 October 2006 1.உலக விடுதலை போராட்டங்களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை.ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படைகட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது?
உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது(பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்த போது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே)எனவே எம் நாட்டின் நிலையினைச் சிந்தித்த பொழுது ஒரு புறம் வலிமைபெற்றல் தான் எமது விடுதலை பூரணமாகும் என்ற உண்மையை உணர்கிறார் தலைவர்.எனவே தமிழீழம் என்பது தனியே தரையை மாத்திரம் மீட்டெடுப்பதால் சூழவுள்ள கடலையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதானால் எம்மிடம் பலம் வாய்ந்த ஒரு கடற்படை உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் எழுகிறது.அத்துடன் போராட்ட ஆரம்ப கட்டத்தில் போராட்ட தளம் தமிழீழமாகவும் போராட்டக் களம் தமிழீழம் என்றும் இருக்கும் போது எமக்கு இரு நாடுகளுக்குமிடையே கடற்போக்குவரத்து அவசியம் என்ற தேவையும் எழுகிறது எனவே 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகிறார் மேலும் பிறநாடுகளுடனான வாணிபத் தொடர்புதான் எமக்கு வலுச் சேர்க்கும் என்பதை உணர்ந்து கப்பலை வாங்கி சர்வதேச வாணிபத்தில் ஈடுபட வைக்கிறார்.இந்த வகையில் தூரநோக்குடனான தலைவரின் சிந்தனையும் போராட்டத்தின் தேவையும் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்கும் பலத்தை அவருக்குக் கொடுக்கிறது.
2.நிலத்தில் நின்று போராடும் தரைப்படைக்கும் கடலில் நின்று போராடும் கடற்புலிகளுக்குமான வித்தியாசத்தை குறிப்பிடுவீர்களா?
தரைப்படை, கடற்படைக்குமான வித்தியாசம் எனும் போது இது கையிற்கும்,காலுக்குமுள்ள வேறுபாடு என்ன என்பது போலத்தான் அன்மையும் ஏனெனில் இரண்டும் வௌ;வேறானவை இரண்டிலும் சண்டைகள் என்ற பொது அம்சத்தை அதாவது கடற்சண்டைக்கும் தரைச்சண்டையொன்றிற்குமான வேறுபாடு என்று பார்ப்போமானால்,தரைச்சண்டையானது நீண்டகாலத்தைக் கொண்ட அதில் ஈடுபடுபவர்கள் தத்தமது சுய கடமைகளைச் செய்வதற்குக் கூட பிறிதொரு அணியால் மாற்றீடு செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும்.எதிரியின் காப்பான் அருகே நகரும் போது கரைக ஆயுதங்களைக் கூட காவிச் சென்றே சண்டையிட வேண்டிய நிலை அதே வேளை விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க காப்பு எடுக்க முடியும்.
கடற்சண்டை குறுகிற நேரச் சண்டையாகும் ஒரு சில சண்டைகள் தவிர ஏனையவை மணித்தியாலத்திற்கு உட்பட்ட சண்டைகளே.ஆனால் அந்த நேரம் அதிலுள்ள ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளை விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்யவேண்டியது தாக்குதலுக்கான காப்பு என்ற சொல்லிற்கே இடமிருக்காது. தரைச்சண்டையில் முன்நகரும் போது காறமுற்றவர்,ஆயுதம் என்பவற்றை நகர்த்துவது சண்டையிடும் போராளிகளே.அவர்களை பின்னணியில் நிற்கும் வாகனத்தில் ஏற்றும் வரை காவிச் செல்ல வேண்டும் கடற் சண்டையில் படகு கரைதிரும்பும் போது காயமுற்றவர் ஆயுதம் என்பன படகுடன் வரும் மற்றும் எமது தரைத்தாக்குதலணியினரின் பணிகள் எதிரியுடன் சண்டையிடல் பிடித்த பிரதேசத்தைப் பாதுகாத்தல் பின் தளத்திலிருந்து அவர்களுக்கான விநியோகம் என்றவாறு அமையும்.
கடற்புலிகளைப் பொறுத்தவரை கடற்கரையோரத்தைப் பாதுகாத்தல் கிழக்கிற்கும் வடக்கிற்கும் போராளிகளை இடம் நகர்த்தல்,அதன்போது எதிரியுடன் சண்டையிட்டு வெற்றிகரமாக அப்போராளிகளை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தால் இவையெல்லாவற்றிற்கும் மேலாக Nhராட்டத்திற்குத் தேவையான ஆயுத வெடிபொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைக் கொண்டுவந்து சேர்த்தல் (தொ.தொடர்பு சாதனங்கள் இயந்திரங்கள் படகுகள்)மேலும் எமது படகுகளைக் கடலில் தரித்து வைத்திருக்க முடியாது தேவையின் போது கடலில் இறக்கத் தக்கதாகவும் எதிரியின் வான் கலங்களின் கண்ணாணிப்பிலிருந்து பாதுகாத்து வைத்திருந்தார் எனப் பறந்து செல்கிறது.
3.தமிழீழக் கடற்பரப்பில் நடந்த சண்டைகளை நீங்கள் நேரில் நின்று வழி நடத்திருக்கிறீர்கள் கடற்போர் அனுபவங்களை பெற்ற மிகப்பெரிய தளபதி நீங்கள் உலக வரலாற்றில் கடற் சண்டை பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் ஆய்வுகள் வியந்து நிற்கின்றன அந்த சண்டைகளை பற்றிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?
கடற்புலிகள் பிரிவை ஆரம்பித்த பொழுது எமது பணி புதிய போராளிகளை பயிற்சிக்குக் கொண்டு செல்லும் பயிற்சி பெற்றவர்களை தமிழீழம் கொண்டு வருதலும் மற்றும் தேவையான வெடிபொருட்களையும் கொண்டு வருதலும் காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கென இதியா கொண்டு செல்லும் என்றே இருந்தது இக்காலகட்டத்தில் தான் நாம் ஓட்டிகளையும் பின் எமது போராளிகளை ஓட்டிகளாகவும் பயன்படுத்தினோம் இக்காலப்பகுதியில் எம்மிடம் ஆள்,படகு,ஆயுதம் வெடிபொருள் வளங்கள் மட்டுப்படுப்படுத்தப் பட்டதாகவே இருந்தது.எதிரியின் பாரிய கலங்களுடன் எதிர்த்துப் போரிட முடியவில்லை.எனவே எதிரியின் கண்ணில் படாதவாறு எம் பயணம் தொடர்ந்தது.எதிரியின் பார்வையில் சிக்கினால் அங்கு உயிரிழப்புத்தான்.எனவே எதிரியைக் கண்டு ஓடுபவர்களாகவே இருந்தோம்.எனவே எதிரியன் கலங்களுக்கு போக்குக் காட்டிவிட்டு ஓடித்தப்பிய சம்பவமாக 19.6.1983 சம்பவத்தைக் கொள்ளலாம்.கப்டன் பழனி,கப்டன் ரகுவப்பா உட்பட 6 போராளிகள் ளுடுசு உட்பட சிறுரக ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொண்டு தமிழீழம் திரும்பிக் கொண்டிருக்கையில் வானத்தில் வட்டமிட்ட ஹெலியின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென எண்ணுகையில் ஹெலி தாக்கத் தொடங்குகிறது. ஓடித்தப்பக் கூட வழியற்ற நிலையில் தம்மிடமிருந்த ளுடுசு ரைபிள்கள் மூலம் ஹெலியை நோக்கிச் சுடுகின்றனர்.குறிதவறவில்லை.ஹெலி புகைத்த வண்ணம் திரும்பிச் செல்கிறது.அதேவேளை எதிரியின் கடற்கலங்கள் தாக்கத் தொடங்கவே படகு திரும்பிச் செல்கிறது.
இக்காலப்பகுதியில் சிறிலங்கா கடற்கலங்கள் வடக்குப்பிராந்திய கடலெங்கும் ரோந்து செல்வதுடன் கரையோரமெங்கும் தாக்குதல் நடத்துவதும் மீனவர்கள் மீது தாக்குதல் என அட்டூழியங்கள் புரிந்து வந்த காலம். தமிழரின் கடலில் சிங்களக் கடற்கலங்கள் எக்காளமிடுவதைத் தடுக்கவென தலைவர் திட்டம் தீட்டுகிறார்.மில்லர் நெல்லியடியில் கொடுத்த அடியிலும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு வல்வைக் கடலிலும் பாடம் புகட்ட எண்ணினார் தலைவர் அவர்கள் 07.10.1990 அன்று வல்வைக் கடலிலே ஆதிக்கம் செய்து வந்த கட்டளைக் கப்பல்களில் ஒன்றான எடித்தாரா மீது இலக்கு வைக்கப்பட்டது.மேஐர் காந்தரூபன்,கப்டன் கொலினஸ்,கப்டன் வினோத் என்ற கடற்கரும்புலிகள் புதிய சகாப்தத்தைக் கடலில் தொடக்கி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து 5.4.1991 அபீதா மீது தாக்குதலைக் கடற்கரும்புலிகளான கப்டன் nஐயந்தன்,கப்டன் சிதம்பரம் செய்து நின்றனர். இந்நிலையில் தீவகம் முற்றுமுழுதாக சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தமையனால் தீவகக் கடலில் அவர்கள் அட்டகாசம் புரிந்தனர்.
இதேவேளை கடற்புலிகள்,கடற்புறாவாகிப் பின் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் எனும் புதிய பெயர் சூட்டபட்டது.அதே போல் புதியபோராளிகளும் கடற்புலிகள் அணிக்குச் சோத்துக் கொள்ளப்பட்டு புதிய உத்வேகம் கொண்டது.கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன.22.09.1991 இல் தீவகக் கடலில் சீகாட் படகு சிதைக்கப்பட்டது.பின்னர் முதன் முதல் ரேடிக் கடல்; தாக்குதலாக 02.10.1991 வள்ளத்தாக்குதல் இடம்பெற்றது.இதிலேயே முதன் முதல் யுமுடுஆபு என்ற ஆயுதம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
பூநகரியை அரச படையினர் கைப்பற்றி முகாம் அமைத்துக் கொள்கின்றனர்.யாழ் நகரிலுள்ளோருக்கான ஆனையிறவக் பாதையும் தடை.மக்கள் பூநகரி - சங்குப்பிட்டி பாதையூடாக பயணத்தை மேற்கொள்கின்றனர்.தாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை இடர் மிகுந்த பாதையிலும் மக்கள் தம் பயணத்தை தொடர்ந்ததை பொறுத்துக் கொள்ளாத அரசபடைகள் ஆனையிறவிலிருந்தும் பூநகரிக்கு ரோந்து என்ற பெயரில் சென்று பூநகரி -சங்குப்பிட்டி ஊடாகப் பயணம் செய்த மக்களை வெட்டியும்,சுட்டும் கொலை செய்தனர். மக்களின் பயணத்திற்கு பாதுகாப்பளிக்கும் பணியும் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.கடற்புலிகளின் முதற் தாக்குதற் தளபதி லெப்.கேணல் சாள்சின் தலைமையில் பாதுகாப்புப் பணி தொடர்கிறது.பயணம் செய்யும் மக்களைத் தாக்க வந்த கடற்படையினரும் கடற்புலிகளும் சமர் புரிய மக்கள் தம் பயணம் தொடர்கிறது.
இவ்வேளையிலே எமது தரப்பிலும் லெப்.கேணல் சாளஸ்,லெப்.மகான்,கப்டன் வேந்தன்,கப்டன் சாஐகான்,லெப் மணியரசன்,லெப் சேகர்,மேஐர் அழகன்,என போராளிகள் வீரச்சாவடைய,எங்கெல்லாம் எமக்குத் தடை வருகிறதோ அவற்றைத்தம்உயிராயுதத்தால் தவிடுபொடியாக்கும் எம் இனிய கரும்புலிகளின் சேவை இடம் பெறுகின்றது.
அந்த வகையில் 26.08.1993 அன்று கப்டன் மதன்ஃபற்றிக்,மேஐர் நிலவன்ஃவரதன் ஆகியகடற்கரும்புலிகள் இரு நீரூந்த விசைப்படகை அழித்துக் காவியமாகின்றனர். மேலும் கப்டன் சிவா,லெப்.பூபாலன்,2ம் லெப்.சுரந்திரன் இவ்வாறாக மக்கள் காப்புப்பணியிலே கிளாலியில் நாம் இழந்த மாவீரர் தொகை கரும்புலித் தாக்குதலில் பின் நிறுத்தப்படுகிறது.
வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்கலங்கள் சுதந்திரமாக நடமாடுவதை தடுக்கவெண்ணி 29.08.1993 கப்டன் மணியரசன்,மேஐர் புகழரசன் சுப்ப டோறாவைத் தகர்த்து வீரகாவியமாகின்றனர். தொடர்ந்து 11.11.1993 தவளைத் தாக்குதலிலும் கடற்புலிகள் பங்காற்றினர் இத் தாக்குதலிலும் 28 கடற்புலிகள் காவியமாகினர்.கண்ணிவெடி கரும்புலி இடித்தல் என செயலாற்றி வந்த நாம் 16.08.1994 மேலும் வளர்ச்சியடைந்து நீரடி நீச்சல் அணியினரின் உதவியுடன் கட்டளை கண்காணிப்புக் கப்பல் அடித்தார் இழுவைப்படகு என்பவற்றைக் காங்கேசன் துறைமுகத்தில் மூழ்கடித்தோம்.
இதில் முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி காவியமானாள். தீவகக் கடல்,மாதகற்கடல்,வடமறாட்சிப் பகுதிக்கடல்,கிளாலி நீரோ என விரிவடைந்த எமது களம் மேற்குப் பகுதிக்கும் வி;ஸ்தரிக்கப்படுகிறது.கடலரக்கன் என்று வர்ணிக்கப்படும் சாகரவத்தனா என்ற கப்பல் எமக்கு இலக்காகிறது து.சு.nஐயவர்த்தனா காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டு பெயரிடப்பட்ட ஆழ் கடல் ரோந்துக் கலங்கள் இரண்டில் ஒன்று சாகரவர்த்தனா(மற்றையது nஐயசாகர இருக்க கப்பல் தான் 26.3.2006 அன்று வெடித்து சிதிய டோறாவுடன் கொழும்பிலிருந்து வந்து ரோந்தில் ஈடுபட்ட கலம்)
தனியே இப்பதன் மூலம் மாத்திரம் அவ்வகையான பெரிய கடறகலங்களைத் தகர்ப்பது கடினம் என்பது எமக்கு எடித்தாரா,அபிதா முன்னைய (1990,1991) தாக்குதல்கள் கற்றுத் தந்த அனுபவம் எனவே நீரடிநீச்சல் அணியினரதும்,இடியன் படகுகளினதும் துணைகொண்டு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது
1996 காலப் பகுதி 25.01.1995 எமது படகு ஒன்று 7 பேருடன் கிழக்கு மாகாண விநியோகம் செய்து விட்டு திரும்புகையில் இயந்திரக் கோளாறு காரணமாக கற்குடாக் கரையொதுங்குகிறது.அவ்வாறு வந்த காலம் தம்மைத் தாக்க வந்ததென்று அரசபடைகள் கூறி படகையும்,அதிலுள்ளவர்களையும் கைது செய்கின்றனர் தொடர்பு கிடைக்காமையால் கிழக்கு மாகாண தளபதியுடன் தொடர்பு கொள்ள அவர் படகையும் பொருட்களையும் ஒப்படைத்து சரணடையுமாறு கூற எம்மவர் அதன்படி ஒழுகினன் எவ்வளவு முயன்றும் படகையோ,பொருட்களையோ மீளத் தரவில்லை கடற்புலிகளின் மரபில் இப்படியொரு செயல் இதுவரை நடைபெறவில்லை.ஏன் அப்படிச் செய்தீர்கள் எனக் கூறி எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வா செய்ய வேண்டாமெனக் கூறிப்பட்டது இது நிகழ்ந்த சில வாரங்களில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது.(1987 யுத்தநிறுத்த காலத்திலும் எங்கள் தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா,லெப்.கேணல் புலேந்திரன் உட்பட கடலில் கைது செய்யப்பட்டனர்.1995 இலும் எமது படகுகள் பொருட்கள் யுத்தநிறுத்த உடன்பாட்டை லெப்.கேணல் திருவடி 30 புதிய போராளிகளை ஏற்றிக் கொண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து வரும்போது திருமலைக்கு நேரே கடற்படை வழிமறித்து படகைத் திருப்பி துறைமுகப் பகுதிக்குள் வருமாறு கட்டளையிட்டது.சென்றவாரம் படகையும் பொருட்களையும் எம்மவர் கொடுத்து விட்டு வந்ததை அறிந்தவன் படகையும் போராளிகளையும் ஒப்படைக்க விரும்புவானா?படகுகள் அழித்துக் கொள்ளவும் விரும்பவில்லை ஏனெனில் 30 புதிய போராளிகள்ள.எனவே அவர்களுக்குப் பணிந்தது போல் போக்குக்காட்டிவிட்டு படகையும் போராளிகளையும் பக்குவமாக கரைசேர்கிறான்.அந்த தளபதி இவ்வாறாக நிலைமையை உணர்ந்து துணிவுடன் செயலாற்றிய மாவீரர்களே இன்றைய எம் வளர்ச்சியின் அடிக்கற்கள். சந்திரிக்காவுடனான பேச்சுக்கள் பயனற்றவை என்பது உறுதிக்கடுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோக பூர்வமாக அறிவித்த பின் திருமலைத் துறைமுகத்திலேயே நீரடி நீச்சல் அணியைச் சேர்த்து4 கடற்புலிகள் ரணசுறு,சூரயா கப்பலைத் தகர்த்துக் கடவோடு கரைந்தார்கள்.
மேலும் எம் போராட்ட வளம் சேர்த்தல் பணியின் போது சிறிலங்காக் கடற்படையினர் வழிமறித்த வேளைகளில் அவற்றைத் தாக்கியழித்து,சண்டையிட்டு எமது விநியோகப்படகுகளை பாதுகாத்த சமர்கள்.
எங்கும் எம்மால் தாக்கிட முடியும் என்ற கருத்தை எதிரிக்குக் கூறிய கொழும்புத் துறைமுக தாக்குதல் எந்த அரணுக்குள் நுழைந்தும் எம்மால் தாக்க முடியுமென்பதை உணர்த்திய தாக்குதல் யாழ்ப்பாணத்தை விட்டுவந்தும் புலிகள் பலம் குறைந்து விட்டார்கள் என்று கூறிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்
எமது கடற் போக்குவரத்திற்குத் தடையாகவும் மக்களின் தொழில் செய்வாற்கு குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாகவும் இருந்த முல்லைப் படைத்தளம் விடுதலைப் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது ஓயாத அலை1 எனப் பெயரிடப்பட்ட இத் தாக்குதலில் கடற் புலிகளின் படகுகள் கடலில் அணிவகுத்து நின்று கடலில் வரும் உதவிகளைத் தடுத்து நிறுத்தினர் நணவிரு என்ற கப்பலைத் தகர்த்ததுடன் சிறிலங்கா வான்படை,மற்றும் கடற்படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுத்தவாறு பாதுகாப்பு வழங்கி நின்றனர்.
ஓயாத அலைகள் ஒன்று,பின் மூன்றாகி ஒட்டிசுட்டான் இராணுவத்தை ஓமந்தை வரை ஓட ஓட விரட்டியாயிற்று அடுத்து தலைவர் அவர்களின் இலக்கு ஆனையிறவு என்றாயிற்று தோல்லியில் இருந்து கற்று அதனையே வெற்றியாக மாற்றிடும் எம் தலைவர் திட்டமிடுகிறார் ஆம் 1991 இல் ஆனையிறவை வெற்றி கொள்ள முடியமைக்கான காரணம் வெற்றிலைக் கேணியில் எதிரி தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு எமது முற்றுகை உடைத்தெறியப்பட்டமை எனவே இம்முறை அவ்வாறே நாமும் தரையிறக்கம் செய்து சுற்றிவளைத்துத் தாக்குவது.13 முஅ கரைத் தொடர்பின்றி குடாரப்பைத் தாண்டி மாமுனையில் தரையிறக்கமுடிவெடுக்கப்படுகிறது எதிரியின் மோறாக்களுடன் எமது சண்டைப் படகுகள் மோத தாளையடி வெற்றிலைக்கேணியில் இருந்த கடற்படையினரின் தாக்குதலைச் சமாளித்தவண்ணம் தரையிறக்கம் 26.03.2000 இடம் பெறுகிறது அதனைத் தொடர்ந்து தரையிலும் எமது அணியினர் தாக்குதல் தொடுத்து கட்டைக்காடு,வெற்றிலைக்கேணி தாளையடி முகாம்களைத் தகர்த்த வண்ணம் முன்னேறுகின்றனர். வெற்றிபெற முடியாதது எனவெளிநாட்டு நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்பட ஆனையிறவுப் படைத் தளத்தில் புலிக்கொடி ஏற்றபடுகிறது.
இவ்வாறாக முதலாம் கட்ட ஈழப்போரில் எமது பணி விநியோகம் போராளி இடமாற்றம் என அமைந்தது இரண்டாம் கட்ட ஈழப்போர்க் காலத்தில் எதிரிக்கு கடலிலும் கரும்புலித் தாக்குதல் டைபெறும் என்பதை உணர்த்தியதோடு கடற்கண்ணித் தாக்குதல்களும் என கடற்புலிகள் தாக்குதலிலும் ஈடுபடத் தொடங்கினார்.மூன்றாம் கட்ட ஈழப்போரில் மேற்கூறப்பட்டவற்றுடன் முகாம் தகர்ப்புத் தாக்குதலுக்கு தாக்குதலணியினரை குறித்த இடங்களில் தரையிறக்கம் செய்தல் எனப் பரந்து நின்றது.
மேற் கூறப்பட்ட காலங்களிலெல்லாம் கடற் தொழிலாளர்கள் எமக்குப் பக்கபலமாக பின்தள உதவிகளைச் செய்து நின்றனர்.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சி மக்களே கடலிலும் எம்முடன் ஆயுத மேந்திப் போராடும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டிருக்கிறது எனலாம் கடற்புகளின் விசேட துணைப்படை அணியும் கடற்புலிகளுடன் கைகோர்த்து தலைவரின் ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது.
4.கடல்பற்றிய அறிவு கடற்புலிகளிடம் நிறைந்து போய்க் காணப்படுகிறது. சிறிலங்காக் கடற்படைக்கு எதிராக நிறைய பாதுகாப்புச் செயற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள்.1983 இலிருந்து மிக வேகமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்.அதி நவீன ஆயுதங்களையும்,படகுகளையும் வைத்திருக்கிறீர்கள்.இந்திய கடற்படைக்கு நிகரான சிறிலங்காவின் கடற்படையை எதிர்கொள்ளும் பலத்தை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?
எதிரியின் சூடுகள் நிறுத்தப்பட்டாலே எமது கலம் பாதுகாக்கப்படும்.எனவே எதிரி எம்மை வீழ்த்துவதன்முன் நாம் எதிரியை நிலைகுலையச் செய்வதென்பதே சண்டையில் வெற்றியின் தாற்பரியம்.அந்த வகையில் காப்பெதுவும் எடுக்க முடியாத வெட்டவெளிக் கடலில் எதிரி வீழ்த்தப் படாவிட்டால் அவனது ரவை எம்மைத் துளைக்கலாம்.எனவே குறிதவராக சூடு,சந்தர்ப்பத்திற்கேற்ப படகை உரிய முறையல் ஓடிக்கொடுத்தல்,எதிரியின் இலக்குகள் பற்றிய தெளிவான அறிவு,எல்லாவற்றையும் விட வேகமான நகர்வும்,முடிவெடுத்தல் திறனும் மற்றும் இயங்குநிலைத் தடைகளை இலகுவில் இனங்கண்டு விரைவில் திருத்தம் திறன் எனப்பல இதில் அடங்குகின்றன.
இந்த வகையில் இவற்றில்திறம்படப் போராளிகள் இயங்க வேண்டுமென்பதற்காக அவற்றிற்கான பயிற்சிகள்,ஊக்குவிப்புகள்,தவறுகளை இனங்கண்டு அவை திரும்பச் செய்யப்படாதவாறான அறிவுறுத்தல்கள் எனக் கூறிக் கொள்ளலாம்.மேற்கூறப்படும் இந்த செயற்பாடுகள் அநேகம் உறுதிப்படுத்தல்கள் அண்ணையின் நேரடிக் கண்காணிப்பில் இடம் பெறுவதுண்டு.இதுவே எங்கள் மிகப் பெரிய பலம்.மேலம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனான சரியான வழிநடத்தல் என்று கூறிக் கொள்ளலாம். இவற்றுடன் அண்ணை சொன்னதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற பற்றுறுதியுடன் களமாடும் எம் கடற்புலி வீரரின் அசையாத உறுதி .மற்றும் ஒரு கலத்தைத் தாக்கி வந்து கூறும்போது அது செய்தால் வீரமல்ல. அதைவிட அழிக்கப்பட வேண்டிய இலக்கு இருக்கிறது அதை அழித்தாலே வெற்றி என இலக்கைப் படிப்படியாக உயர்த்திச் செல்லும் தலைவரின் அணுகுமுறை.இதற்கு உதாரணமாகச் சொல்வதானால் 26.08.1993 கிளாலிக் கடல் நீரேரியில் கடற்கரும்புலித் தாக்குதலின் மூலம் வோட்ட nஐற் இரண்டைத் தாக்கியழித்த பின் அண்ணையைச் சந்திக்கிறேன்.அப்பொழுது அண்ணை சொல்கிறார்.வோட்ட ஜெற் அடித்தால் காணாது.டோறா மூழ்கடிக்க வேண்டும்.29.08.1993 இல் சுப்ப டோறா அடித்தபோது டோறா அடித்தது சரி.விரையாவை அடியுங்கள் பார்ப்பம்.என மெல்ல மெல்ல இலக்கை உயர்த்திச் செல்வதன்மூலம் பலம் வாய்ந்த எதிரியுடன் எதிர்த்துத் தாக்கும் எமது திறனை வளர்த்த பெருமை அண்ணனையே சாரும் என்றால் மிகையன்று.
5.கடலில் பல நீச்சல் பிரிவுகளைத் தாங்கள் உருவாக்கி வைத்திருப்பதாகத் தகவல்கள் பல தெரிவிக்கின்றன.நீச்சல் பிரிவின் மிக நீளமான கடலில நீந்திச் சென்று தாக்குதல்களை நிகழ்த்த வல்லவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.
உண்மை.அதிசயிக்கத் தக்க வகையில் பல சந்தர்ப்பங்களில் எம் போராளிகள் நீந்திக் கரைசேர்ந்த சம்பவங்கள் உண்டு.1986 இல் படகு விபத்தொன்றில் கடலில் சம்பவம் அறிய முடிந்தது.28.08.1992 கடற்புலடூகள் எதிரியன் கலமான வோட்டnஐற்றைச் சேதமெதுவுமின்றி கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பது யாவரும் மண்டைதீவிலிருந்து அடித்த தேடொளி வெளிச்சத்தில் பிரிந்து சென்று போராளி மறு நாள் நீந்திக் கரைசேர்ந்தமை கடற்புலிகளுக்கும்,தலைவருக்கும் வெளிச்சம். கரும்புலித் தாக்குதல்களில் பல நீச்சல் திறமையினாலே சாதிக்கப்பட்டவையாகும்.அந்த வகையில் 15.8.1994 இரவுப் பொழுது.ஊர் உறங்கிவிட்டது.இலட்சிய உறுதியில் இரும்பாகி எதிரிக் கப்பலின் முடிவே தம் வெற்றியாகக் கொண்ட மீன் குஞ்சுகள் வைக்கப்பட வேண்டிய வெடிகுண்டுடன் நீந்துகின்றன.ஆம் பெரிய வெடியோசை உலகமே அதிசயித்து நிற்கிறது.முதற் பெண் கடற்கரும்புலி காவியமாக மற்றைய மீன் நீந்திச் சென்றதை மற்றவர்கள் அறிந்திடவில்லை.இவ்வாறாக 19.09.1994 கற்பிட்டிக் கடற்பரப்பிலும் எமது மீன்களின் செயற்பாடு பற்றி தலைவருக்கும் எங்களுக்கும் மட்டும் தெரிகிறது.ஆனால் சாகரவர்த்தனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டு அதன் கப்டன் பொயகொட கைது செய்தமையும்,கடற்கரும்புலிகள் நால்வரும் காவியமான கதை உலகறிந்தது. இவ்வாறாக அநேகமான கரும்புலித் தாக்குதல்களிலும் எமது போராளிகளின் நீச்சல் திறமையே எம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்கிறது.
இங்கு மேலுமொரு சம்பவத்தைக் குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன்.16.07.1995 புலிபாய்ச்சல் நடவடிக்கையின் ஓரம்சமாக காங்கேசன் துறைமுகத்தில் தாக்குதல் இடம்பெறுகிறது.கரும்புலிப்படகு இடிக்கமுன் வெடிபிடித்தமையால் அதனைக் கைவிட்டு நீந்துத்படி கடற்கரும்புலிகள் இருவருக்கும் கட்டளை இடுகின்றேன்.உடன் தனக்குக் கரும்புலிக்கான சந்தர்ப்பம் தரவேண்டுமென்ற வேண்டு கோளுடன் கடலில் குதிக்கிறாள் செவ்வானம்.இரவு விடிந்து விட்டது.எதிரி இருவரை உயிருடன் பிடித்துவிட்டேன் என எக்காளமிடுகிறான். திசைபார்த்து நீந்தி வருவான் என எதிர்பார்த்த செவ்வாமை வரவில்லை.விதையாகிப் போனவர்கள் பட்டியலில் சேர்க்க மனமின்றி சேர்க்கப்படுகிறது.மறுநாள் வீரச்சாவு நிகழ்வுகள் இடம்பெற ஆயத்தங்கள் நடைபெறுகின்றன.அதிகாலை மயிலியதனை முகாமினருக்கு ஓர் ஆச்சரியம்.வீரச்சாவடைந்து விட்டான் என இருந்த செவ்வானம் தள்ளாடியபடி கடற்கரையில்.....நிஐமா?நினைவா? சந்தேகத்துடன் கடற்கரை நோக்கி ஓடுகிறார்கள் போராளிகள்.ஆம்.நிழல்லல்ல.நிஐம் தான்.செய்தி எங்கும் அறிவிக்கப்படுகிறது.தனது மகளின் வித்துடல் வரக்கூடுமோ கரையொதுங்குமோ? தருவார்களோ என எதிர்பார்த்த பெற்றோர் முன் செவ்வானம்.
ஆம் 24 மணி நேரம் கடலில் நீந்தி இலங்கை வான்படை,கடற்படையினருக்குப் போக்குக் காட்டி காட்டி சரியான திசையில் நீந்திக் கரைசேருகிறாள் செவ்வானம்.இதே போல் சுண்டிக்குளத்தில் எமது நிலையத் தாக்குதலுக்கான பழிவாங்கல் தாக்குதல்.1999 இல் எதிரியின் மோறாப படகைத் தாக்கி அதிலேறி அதிலிருந்த 20 மிமீ பரல் கழற்ற பாதுகாப்பிற்கு வந்த டோறா தாக்கத் தொடங்க அந்த இரும்புக் குழலுடன் நீந்தி எம் படகேறி அதைக் கொண்டு வந்து கேர்க்கிறான் 07.10.1999 எம் துணைத் தளபதியான லெப்.கேணல் நிரோழுன். உப்பில் உறைந்த உதிரங்கள் படம் எல்லலோர் மனதிலும் இடம் பிடித்திருக்கும். ஆம் உண்மைச் சம்பத்தையே படமாக்கப்பட்டுள்ளது.காயமுற்ற நிலையில் கிளாலியில் எதிரியின் முகாமருகே காயமுற்ற விழுந்த போராளி மறுநாள் நீந்தி எம் கரையேறி இன்று வரை போராளியாகக் கடமையாற்றுகிறான்.இவ்வாறு நீச்சல் திறமையின்றேல் நாம் இன்று முன்னேறியிருக்கவே முடியாது.இந்து நீச்சல் திறமையினை வளர்க்கவே வருடாவருடம் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் போட்டிகளும் உள்ளடக்கப்பட்டு,வெற்றி பெற்றோருக்குப் பரிசளித்து ஊக்குவிக்கிறார் தலைவர் அவர்கள்.
6.1983ம் ஆண்டு காலப்பகுதியில் 'ஓட்டிகள்" என அழைக்கப்படுபவர்கள் கடற் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தார்கள்.அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் அவர்களுடைய கடற் பயணங்கள் பற்றியும் எங்களுக்குக் கூறுவீர்களா?
வடமராட்சியின் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த மீனவர்கள்.இவர்கள் இந்திய இலங்கை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள்.இவர்கள் தமது படகுகளிலேயே தம்பயணங்களை மேற்கொண்டனர்.நாமும் தமிழகம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டபொழுது நாம் அவர்களை நாடி எம்மை கூட்டிச் செல்லுமாறு கேட்டு அவர்களின் உதவியுடன் சென்று வந்தோம்.எம்க்குத் தேவையான பொருட்களை மற்றும் போராளிகளை இடம் மாற்றுவதில் எமக்குக் கைகொடுத்தவர்கள் இவர்கள்.அவர்கள் பயன்படுத்திய சிறிய படகுகளே அப்பொழுது எம் பயணத்திற்கான படகுகள்.வேகமும் குறைவு.எனவே தான் எதிரி கண்ணில் பட்டால் திரும்பி வருவது மிகக்குறைவு.எமது பொருட்களைக் கொண்டு வரும் வழியில் எதிரியினால் அவர்கள் மடிவதைப் பொறுக்காது எமது பயணத்தைப் போராளிகளைக் கொண்டே நடத்த முடிவெடுத்த தலைவர் அவர்கள் 1985 இன் பின் கடற்புலிகளின் படகுகளே இப் பணியில் ஈடுபட்டன. |