Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century > Sirkali Govindarajan > கோடி அண்டம் குலவிடும்

Selected Sirkali Govindarajan Songs

கோடி அண்டம் குலவிடும்


கோடி அண்டம் குலவிடும் வானம் குமரன் வலம் வரும் வாகனம்
நாடி மின்னும் நட்சத்திரங்கள் நாயகன் கோவிலின் தீபமாம்
தேடும் அடியவர்தெளிந்த மனமே தேவதேவனின் அரண்மனை
ஆடும் உலகின் அற்புதம் யாவும் அய்யன் திருவிளையாடலே
பாடும் இசையும் பொருளும் இனிமையும் பரம்பொருள் முருகன் பாடலே
நாடுகள் தாண்டி நானிலம் எங்கிலும் நாதன் கோவில் தீபமே
வேகமாகவே ஓடும் உலகினில் உண்மையான பொருள் ஆண்டவன்
மோகனம் மிகு முழுமையானது முற்றறிந்தோர்கள் உணர்வது
ஆகமம் மாமறை ஆயிரம் சாத்திரம் அனைத்தும் ஆண்டவன் ஒருமொழி
யோகமே தரும் ஓம் சரவணா என உயிரெல்லாம் சுகம் ஊறுமே
ஆறாயிரம் மயிலில் அழைத்துவந்தான் அய்யன்
அறுபடை வீட்டின் ஆண்டவன் என் மெய்யன்
வீராதி வீரர்கள் வெற்றிச்சரித்திரத்தின்
žரான லண்டன் நகர்க்கு செந்திலாண்டவன் வந்தான்
ஞான விஞ்ஞானம் நல்ல தொழில் வல்ல
நண்பர்கள் வாழ்கின்ற லண்டன் நகர் தன்னில்
ஆனந்தக் கோயிலில் ஆண்டவன் சன்னதியில்
அகிலமெலாம் தொழ ஆனந்தமே வாழ்க

Mail Us up- truth is a pathless land - Home