Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > One Hundred Tamils of the 20th Century > Sirkali Govindarajan > கல்லிலே கலை வண்ணம் - Kallile Kalaivannam

Selected Sirkali Govindarajan Songs

கல்லிலே கலை வண்ணம் - Kallile Kalaivannam
[also in Video
]


கல்லிலே கலைவண்ணம் கண்டான் இருகண் பார்வை
மறைந்தாலும் காணும் வகை தந்தான் -கல்லிலே
பல்லவர்கோன் கண்ட மல்லை- போல
பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை -கல்லிலே

பெண் ஓன்று ஆண் ஓன்று செய்தான் - அவர்
பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
கண்ணான இடம் தேடி வந்தோம்- என் கண்ணோடு
கண்ணே உன் கண் வைத்துப் பார்ப்பாய் -கல்லிலே

பருவத்தில் இளமேனி பொங்க
ஒரு பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
அரங்கேறி நடமாடும் மங்கை - போல
அன்பே என் இதயத்தில் ஆடுகின்றாய் -கல்லிலே

உடலாலும் மனதாலும் உன்னை- என்
உயிராகச் சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
கடல் வற்றிப் போனாலும் போகும்- கொண்ட
கடமையும் ஆசையும் மாறாதெந்நாளும் -கல்லிலே

Mail Us up- truth is a pathless land - Home