|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness >
Spirituality & the
Tamil Nation > Ramalinga Atikal - Vallalar >
திருவருட்பா
-
முதல் திருமுறை (1 - 537) >
இரண்டாம் திருமுறை (571 - 1006) >
இரண்டாம் திருமுறை (1007 - 1543) >
இரண்டாம் திருமுறை (1544 - 1958) >
மூன்றாம் திருமுறை (1959 - 2570) >
நான்காம் திருமுறை (2571- 3028) >
ஐந்தாம் திருமுறை (3029-3266) >ஆறாம் திருமுறை (3267 -3871) >
ஆறாம் திருமுறை (3872 - 4614) >
ஆறாம் திருமுறை -
(4615 - 5063) > ஆறாம் திருமுறை - (5064 -5818)
> திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள் >
திருவருட்பா அகவல்
& திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை -
நான்காம் பகுதி
பாடல்கள் (5064 -5818)
Etext preparation (inaimathi format) Mr. Sivakumar of Singapore (www.vallalar.org)
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
|
அம்பலத்தரசே |
(5064 - 5155) | ||
|
சம்போ சங்கர |
(5156 - 5177) | ||
|
சிவபோகம் |
(5178 - 5217) | ||
|
அம்பலத்தமுதே |
(5218 - 5225) | ||
|
திருநட மணியே |
(5226 - 5240) | ||
|
ஞான சபாபதியே |
(5241 - 5250) | ||
|
விரைசேர் சடையாய் |
(5251 - 5254) | ||
|
ஜோதி ஜோதி |
(5255 - 5257) | ||
|
கண்புருவப் பூட்டு |
(5258 - 5268) | ||
|
ஊதூது சங்கே |
(5269 - 5284) | ||
|
சின்னம் பிடி |
(5285 - 5294) | ||
|
முரசறைதல் |
(5295) | ||
|
தனித்திரு அலங்கல் |
(5296 - 5456) | ||
|
சிற்சத்தி துதி |
(5457 - 5466) | ||
|
இன்பத் திறன் |
(5467 - 5476) | ||
|
உற்ற துரைத்தல் |
(5477 - 5486) | ||
|
சுத்த சிவநிலை |
( 5487 - 5533) | ||
|
உலகப் பேறு |
(5534 - 5543) | ||
|
அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் |
(5544 - 5555) | ||
|
உலகர்க்கு உய்வகை கூறல் |
(5556 - 5565) | ||
|
புனிதகுலம் பெறுமாறு புகலல் |
(5566 - 5575) | ||
|
மரணமிலாப் பெருவாழ்வு |
(5576 - 5603) | ||
|
சமாதி வற்புறுத்தல் |
(5604 - 5613) | ||
|
சன்மார்க்க உலகின் ஒருமைநிலை |
(5614 - 5624) | ||
|
திருவடிப் பெருமை |
(5625 - 5669) | ||
|
தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல் |
(5670 - 5679) | ||
|
நற்றாய் செவிலிக்குக் கூறல் |
(5680 - 5689) | ||
|
தோழிக்குரிமை கிளத்தல் |
(5690 - 5703) | ||
|
தலைவி கூறல் |
(5704 - 5713) | ||
|
அனுபவ மாலை |
(5714 - 5813) | ||
|
சத்திய வார்த்தை |
(5814) | ||
|
சத்திய அறிவிப்பு |
(5815 - 5818) |
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
உள்ளுறை
1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
திருச்சிற்றம்பலம்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
ஆறாம் திருமுறை - நான்காம் பகுதி - பாடல்கள் (5064 -5818) 113. அம்பலத்தரசே
நாமாவளி
சிந்து
|
5064. |
சிவசிவ கஜமுக கணநா தா |
1 |
|
5065 |
சிவசிவ சிவசிவ தத்துவ போதா |
2 |
|
|
(374)ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும்
| |
|
5066 |
அம்பலத் தரசே அருமருந் தே |
1 |
|
5067 |
பொதுநடத் தரசே புண்ணிய னே |
2 |
|
5068 |
மலைதரு மகளே மடமயி லே |
3 |
|
5069 |
ஆனந்தக் கொடியே இளம்பிடி யே |
4 |
|
5070 |
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா |
5 |
|
5071 |
படன விவேக பரம்பர வேதா |
6 |
|
5072 |
அரிபிர மாதியர் தேடிய நாதா |
7 |
|
5073 |
அந்தண அங்கண அம்பர போகா |
8 |
|
5074 |
அம்பர விம்ப சிதம்பர நாதா |
9 |
|
5075 |
தந்திர மந்திர யந்திர பாதா |
10 |
|
5076 |
கனக சிதம்பர கங்கர புரஹர |
11 |
|
5077 |
சகல கலாண்ட சராசர காரண |
12 |
|
5078 |
இக்கரை கடந்திடில் அக்கரை யே |
13 |
|
5079 |
என்னுயிர் உடம்பொடு சித்தம தே |
14 |
|
5080 |
ஐயர் திருச்சபை ஆடக மே |
15 |
|
5081 |
உத்தர ஞான சிதம்பர மே |
16 |
|
5082 |
அம்பல வாசிவ மாதே வா |
17 |
|
5083 |
நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே |
18 |
|
5084 |
ஆனந்த நாடகம் கண்டோ மே - பர |
19 |
|
5085 |
சகள உபகள நிட்கள நாதா |
20 |
|
5086 |
சந்தத மும்சிவ சங்கர பஜனம் |
21 |
|
5087 |
சங்கர சிவசிவ மாதே வா |
22 |
|
5088 |
அரகர சிவசிவ மாதே வா |
23 |
|
5089 |
நடனசி காமணி நவமணி யே |
24 |
|
5090 |
நடமிடும் அம்பல நன்மணி யே |
25 |
|
5091 |
உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே |
26 |
|
5092 |
நடராஜ வள்ளலை நாடுத லே |
27 |
|
5093 |
அருட்பொது நடமிடு தாண்டவ னே |
28 |
|
5094 |
நடராஜ மாணிக்கம் ஒன்றது வே |
29 |
|
5095 |
நடராஜ பலமது நம்பல மே |
30 |
|
5096 |
நடராஜர் பாட்டே நறும்பாட்டு |
31 |
|
5097 |
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு |
32 |
|
5098 |
அம்பலப் பாட்டே அருட்பாட்டு |
33 |
|
5099 |
அம்பல வாணனை நாடின னே |
34 |
|
5100 |
தம்பத மாம்புகழ் பாடின னே |
35 |
|
5101 |
நான்சொன்ன பாடலும் கேட்டா ரே |
36 |
|
5102 |
இனித்துயர் படமாட்டேன் விட்டே னே |
37 |
|
5103 |
இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே |
38 |
|
5104 |
சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம் |
39 |
|
5105 |
நாதாந்த நாட்டுக்கு நாயக ரே |
40 |
|
5106 |
நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே |
41 |
|
5107 |
நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே |
42 |
|
5108 |
நடராஜர் தம்நடம் நன்னட மே |
43 |
|
5109 |
சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே |
44 |
|
5110 |
சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே |
45 |
|
5111 |
இறவா வரம்தரு நற்சபை யே |
46 |
|
5112 |
என்இரு கண்ணுள் இருந்தவ னே |
47 |
|
5113 |
சிற்சபை அப்பனை உற்றே னே |
48 |
|
5114 |
அம்பல வாணர்தம் அடியவ ரே |
49 |
|
5115 |
அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே |
50 |
|
5116 |
இருட்பெரு மாயையை விண்டே னே |
51 |
|
5117 |
கருணா நிதியே குணநிதி யே |
52 |
|
5118 |
தருணா பதியே சிவபதி யே |
53 |
|
5119 |
கருணா நிதியே சபாபதி யே |
54 |
|
5120 |
சபாபதி பாதம் தபோப்ர சாதம் |
55 |
|
5121 |
கருணாம் பரவர கரசிவ பவபவ |
56 |
|
5122 |
கனகா கரபுர ஹரசிர கரதர |
57 |
|
5123 |
கனக சபாபதி பசுபதி நவபதி |
58 |
|
5124 |
வேதாந்த பராம்பர ஜயஜய(375) |
59 |
|
|
(375). சவுதய - ஆ. பா. பதிப்பு. | |
|
5125 |
ஏகாந்த சர்வேச சமோதம |
60 |
|
5126 |
ஆதாம்பர ஆடக அதிசய |
61 |
|
5127 |
போதாந்த புரேச சிவாகம |
62 |
|
5128 |
ஜால கோலகன காம்பர சாயக |
63 |
|
5129 |
நாத பாலசு லோசன வர்த்தன |
64 |
|
5130 |
சதபரி சதவுப சதமத விதபவ |
65 |
|
5131 |
அரகர வரசுப கரகர பவபவ |
66 |
|
5132 |
உபல சிரதல சுபகண வங்கண |
67 |
|
5133 |
அபயவ ரதகர தலபுரி காரண |
68 |
|
5134 |
அகரஉ கரசுப கரவர சினகர |
69 |
|
5135 |
வகரசி கரதின கரசசி கரபுர |
70 |
|
5136 |
பரமமந் திரசக ளாகன கரணா |
71 |
|
5137 |
அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா |
72 |
|
5138 |
பரிபூரண ஞானசி தம்பர |
73 |
|
5139 |
சிவஞானப தாடக நாடக |
74 |
|
5140 |
சகல லோகபர காரக வாரக |
75 |
|
5141 |
சத்வ போதக தாரண தன்மய |
76 |
|
5142 |
வரகே சாந்த மகோதய காரிய |
77 |
|
5143 |
பளித தீபக சோபித பாதா |
78 |
|
5144 |
அனிர்த(376) கோபகரு ணாம்பக நா தா |
79 |
|
|
(376). அனுர்த - ச. மு. க. பதிப்பு. | |
|
5145 |
அம்போ ருகபத அரகர கங்கர |
80 |
|
5146 |
சிதம்பிர காசா பரம்பிர கா சா |
81 |
|
5147 |
அருட்பிர காசம் பரப்பிர காசம் |
82 |
|
5148 |
நடப்பிர காசம் தவப்பிர காசம் |
83 |
|
5149 |
நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே |
84 |
|
5150 |
ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே |
85 |
|
5151 |
ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே |
86 |
|
5152 |
புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா |
87 |
|
5153 |
நடுநாடி நடுநாடி நடமாடு பதியே |
88 |
|
5154 |
நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே |
89 |
|
5155 |
நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே |
80 |
திருச்சிற்றம்பலம்
Back
சிந்து
|
5156. |
தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு
|
1 |
|
5157 |
சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று
|
2 |
|
5158 |
நனம்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி |
3 |
|
5159 |
நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி. |
4 |
|
5160. |
உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி. |
5 |
|
5161 |
ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி. |
6 |
|
5162 |
ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி. |
7 |
|
5163 |
அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி |
8 |
|
5164 |
அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி |
9 |
|
5165 |
பரநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே |
10 |
|
5166 |
அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே |
11 |
|
5167 |
அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா. |
12 |
|
5168 |
எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர. |
13 |
|
5169 |
நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர. |
14 |
|
5170 |
பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது அரஅர அரஅர அரஅர அரஅர. |
15 |
|
5171 |
நவநிலை தருவது நவவடி வுறுவது நவவெளி நடுவது நவநவ நவமது சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ. |
16 |
|
5172 |
சந்திர தரசிர சுந்தர சுரவர தந்திர நவபத மந்திர புரநட சங்கர சிவசிவ சங்கர சிவசிவ. |
17 |
|
5173 |
வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர. |
18 |
|
5174 |
பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ பாலநித்திய வம்பகநம்பக பாசபுத்தக பண்டிதகண்டித நாதசிற்பர நம்பரஅம்பர நாததற்பர விம்பசிதம்பர. |
19 |
|
5175 |
பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு பரமம்பொது நடம்என்தன துளம்நம்புற அருள்அம்பர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர. |
20 |
|
5176 |
கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும் கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ் சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம். |
21 |
|
5177 |
எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம் இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம் சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம். |
22 |
திருச்சிற்றம்பலம்
Back
சிந்து
|
5178. |
போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம் |
1 |
|
5179 |
நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம் |
2 |
|
5180 |
சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே |
3 |
|
5181 |
அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே |
4 |
|
5182 |
ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே |
5 |
|
5183 |
நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா |
6 |
|
5184 |
பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே
|
7 |
|
5185 |
ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே |
8 |
|
5186 |
ஆதவாத வேதகீத வாதவாத வாதியே |
9 |
|
5187 |
அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே |
10 |
|
5188 |
அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே |
11 |
|
5189 |
அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே |
12 |
|
5190 |
தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே |
13 |
|
5191 |
கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே |
14 |
|
5192 |
என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே |
15 |
|
5193 |
எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே |
16 |
|
5194 |
சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே |
17 |
|
5195 |
வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே |
18 |
|
5196 |
பாசநாச பாபநாச பாததேச ஈசனே |
19 |
|
5197 |
உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே |
20 |
|
5198 |
அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே |
21 |
|
5199 |
அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே |
22 |
|
5200 |
தகரககன நடனகடன சகளவகள சரணமே |
23 |
|
5201 |
அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே |
24 |
|
5202 |
தனககனக சபையஅபய சரதவரத சரணமே |
25 |
|
5203 |
உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே |
26 |
|
5204 |
இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே |
27 |
|
5205 |
அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே |
28 |
|
5206 |
ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே |
29 |
|
5207 |
அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே |
30 |
|
5208 |
எறிவில்உலகில்(377) உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே |
31 |
|
|
(377). இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு. | |
|
5209 |
நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே |
32 |
|
5210 |
வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே |
33 |
|
5211 |
நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே
|
34 |
|
5212 |
மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா |
35 |
|
5213 |
களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே |
36 |
|
5214 |
தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே
|
37 |
|
5215 |
எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே |
38 |
|
5216 |
சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா |
39 |
|
5217 |
வாசிவா சதாசிவா மஹாசிவா தயாசிவா |
40 |
திருச்சிற்றம்பலம்
Back
கலிவிருத்தம்
|
5218. |
நீடிய வேதம் தேடிய பாதம் |
1 |
|
5219 |
சாக்கிய வேதம் தேக்கிய பாதம் |
2 |
|
5220 |
ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் |
3 |
|
5221 |
சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம் |
4 |
|
5222 |
எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் |
5 |
|
5223 |
தொத்திய சீரே பொத்திய பேரே |
6 |
|
5224 |
எம்புலப் பகையே எம்புலத் துறவே |
7 |
|
5225 |
இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே |
1 |
திருச்சிற்றம்பலம்
Back
தாழிசை
|
5226. |
பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே நடராஜ மணியே நடராஜ மணியே. |
1 |
|
5227 |
புரையாத மணியே புகலாத நிலையே புகையாத கனலே புதையாத பொருளே நடராஜ நிதியே நடராஜ நிதியே. |
2 |
|
5228 |
சிவஞான நிலையே சிவயோக நிறைவே சிவபோக உருவே சிவமான உணர்வே நடராஜ பதியே நடராஜ பதியே. |
3 |
|
5229 |
தவயோக பலமே சிவஞான நிலமே தலையேறும் அணியே விலையேறு மணியே நடராஜ பரமே நடராஜ பரமே. |
4 |
|
5230 |
துதிவேத உறவே சுகபோத நறவே துனிதீரும் இடமே தனிஞான நடமே நடராஜ குருவே நடராஜ குருவே. |
5 |
|
5231 |
வயமான வரமே வியமான பரமே மனமோன நிலையே கனஞான மலையே நடராஜ துரையே நடராஜ துரையே. |
6 |
|
5232 |
பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே மறைமுடி மணியே மறைமுடி மணியே. |
7 |
|
5233 |
அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே மறைமுடி மணியே மறைமுடி மணியே. |
8 |
|
5234 |
தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே தடம்வளர் புனலே புனல்வளர் நலனே திருநட மணியே திருநட மணியே. |
9 |
|
5235 |
உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே திருநட மணியே திருநட மணியே. |
10 |
|
5236 |
கலைநிறை மதியே மதிநிறை அமுதே கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே திருநட மணியே திருநட மணியே. |
11 |
|
5237 |
மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே திருநட மணியே திருநட மணியே. |
12 |
|
5238 |
இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே இசைகிளர் துதியே துதிகிளர் இறையே திருநட மணியே திருநட மணியே. |
13 |
|
5239 |
புரையறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே திருநட மணியே திருநட மணியே. |
14 |
|
5240 |
நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே நிறையருள் நிதியே நிதிதரு பதியே திருநட மணியே திருநட மணியே. |
10 |
திருச்சிற்றம்பலம்
Back
தாழிசை
|
5241. |
வேத சிகாமணியே போத சுகோதயமே |
1 |
|
5242 |
ஏக சதாசிவமே யோக சுகாகரமே |
2 |
|
5243 |
தூய சதாகதியே நேய சதாசிவமே |
3 |
|
5244 |
ஆரண ஞாபகமே பூரண சோபனமே |
4 |
|
5245 |
ஆகம போதகமே யாதர வேதகமே |
5 |
|
5246 |
ஆடக நீடொளியே நேடக நாடளியே |
6 |
|
5247 |
ஆரிய னேசிவனே ஆரண னேபவனே |
7 |
|
5248 |
ஆதர வேதியனே ஆடக ஜோதியனே |
8 |
|
5249 |
தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே |
9 |
|
5250 |
ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே |
10 |
திருச்சிற்றம்பலம்
Back
சிந்து
|
5251. |
விரைசேர் சடையாய் விடையாய் உடையாய் |
1 |
|
|
(378). வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு. | |
|
5252 |
அரைசே குருவே அமுதே சிவமே |
2 |
|
5253 |
உருவே உயிரே உணர்வே உறவே |
3 |
|
|
(379). உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு. | |
|
5254 |
அருவே திருவே அறிவே செறிவே |
4 |
திருச்சிற்றம்பலம்