Mannikkavasagar's
Thiruvasagam
திருவாசகம் - திருக்கோத்தும்பி - சிவனோடு
ஐக்கியம் (மாணிக்க வாசகர் அருளியது)
This Etext file initially prepared in Mylai format by K. Kalyanasundaram,
Lausanne, Switzerland. This webpage presents Etxt in Tamil script but in Unicode encoding.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of Tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website
http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
Thirukoneswaram & Thiruvasagam - திருக்கோத்தும்பி
திருக்கோத்தும்பி - சிவனோடு
ஐக்கியம்
(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணணும் நான்
மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றுதாய்
கோத்தும்பீ. 215 நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர்
அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216
தினைத்தனை உள்ளதோர்
பூவினில் தேன்உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையானுக்கே சென்றூதாய்
கோத்தும்பீ. 217
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன்
என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218 அத்தேவர் தேவர்
அவர்தேவ ரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும்
இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
219 வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும் பித்த உலகிற்
பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 220 சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரைநாம்
உருவறியோம் சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 221 ஒன்றாய்
முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்றூதாய்
கோத்தும்பீ. 222 கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்க
ளேசென்று சார்தலுமே தான்எனக்கு மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 223 நோயுற்று மூத்துநான்
நுந்துகன்றா யிங்கிருந்து நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந் தாயுற்று
வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 224
வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கல்நெஞ் சுருக்கிக் கருணையினால்
ஆண்டுகொண்ட அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 225 நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சீயேதும் இல்லாதென் செய்பணிகள்
கொண்டருளந் தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 226 நான்தனக்
கன்பின்னை நானுந்தா னும் அறிவோம் தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய்
கோத்தும்பீ. 227 கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே மருவார்
மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 228 நானும்என் சிந்தையும்
நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் வானுந்
திசைகளும் மாகடலும் ஆயபிரான் தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 229
உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய்
கோத்தும்பீ. 230 பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக்
கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன் செய்யார்
மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231 தோலுந் துகிலுங் குழையுஞ்
சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் சூலமுந் தொக்க
வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 232
கள்வன் கடியன் கலதியிவன் என்னாத வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந் தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய்
கோத்தும்பீ. 233 பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று ஏமாறி நிற்க
அடியேன் இறுமாக்க நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த தீமேனி
யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 234 திருச்சிற்றம்பலம்