|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் > நான்காம் திருமுறை பாடல்கள் ( 1- 487 ) > நான்காம் திருமுறை பாடல்கள் (488 - 1070) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் (1 - 509 ) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் ( 510 -1016 ) > ஆறாம் திருமுறை பாடல்கள் ( 1-508) > ஆறாம் திருமுறை பாடல்கள் (509 - 981)

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
ஐந்தாம்
திருமுறை முதற் பகுதி - பாடல்கள் ( 1 - 509 )
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
PDF version: Mr. P.I.Arasu, Toronto, ON, Canada.
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 5.001 | கோயில் | (1-11) | மின்பதிப்பு |
| 5.002 | கோயில் | (12-21) | மின்பதிப்பு |
| 5.003 | திருவரத்துறை | (22-31) | மின்பதிப்பு |
| 5.004 | திருவண்ணாமலை | (32-41) | மின்பதிப்பு |
| 5.005 | திருவண்ணாமலை | (42-51) | மின்பதிப்பு |
| 5.006 | திருவாரூர் | (52-61) | மின்பதிப்பு |
| 5.007 | திருவாரூர் | (62-73) | மின்பதிப்பு |
| 5.008 | திருஅன்னியூர் | (74-83) | மின்பதிப்பு |
| 5.009 | திருமறைக்காடு | (84-93) | மின்பதிப்பு |
| 5.010 | திருமறைக்காடு | (94-104) | மின்பதிப்பு |
| 5.011 | திருமீயச்சூர் | (105-114) | மின்பதிப்பு |
| 5.012 | திருவீழிமிழலை | (115-125) | மின்பதிப்பு |
| 5.013 | திருவீழிமிழலை | (126-135) | மின்பதிப்பு |
| 5.014 | திருவிடைமருதூர் | (136-146) | மின்பதிப்பு |
| 5.015 | திருவிடைமருதூர் | (147-152) | மின்பதிப்பு |
| 5.016 | திருப்பேரெயில் | (153-163) | மின்பதிப்பு |
| 5.017 | திருவெண்ணியூர் | (164-174) | மின்பதிப்பு |
| 5.018 | திருக்கடம்பந்துறை | (175-184) | மின்பதிப்பு |
| 5.019 | திருக்கடம்பூர் | (185-195) | மின்பதிப்பு |
| 5.020 | திருக்கடம்பூர் | (196-205) | மின்பதிப்பு |
| 5.021 | திருவின்னம்பர் | (206-215) | மின்பதிப்பு |
| 5.022 | திருக்குடமூக்கு | (216-225) | மின்பதிப்பு |
| 5.023 | திருநின்றியூர் | (226-235) | மின்பதிப்பு |
| 5.024 | திருவொற்றியூர் | (236-245) | மின்பதிப்பு |
| 5.025 | திருப்பாசூர் | (246-256) | மின்பதிப்பு |
| 5.026 | திருவன்னியூர் | (257-265) | மின்பதிப்பு |
| 5.027 | திருவையாறு | (266-275) | மின்பதிப்பு |
| 5.028 | திருவையாறு | (276-285) | மின்பதிப்பு |
| 5.029 | திருவாவடுதுறை | (286-295) | மின்பதிப்பு |
| 5.030 | திருப்பராய்த்துறை | (296-306) | மின்பதிப்பு |
| 5.031 | திருவானைக்கா | (307-316) | மின்பதிப்பு |
| 5.032 | திருப்பூந்துருத்தி | (317-326) | மின்பதிப்பு |
| 5.033 | திருச்சோற்றுத்துறை | (327-337) | மின்பதிப்பு |
| 5.034 | திருநெய்த்தானம் | (338-347) | மின்பதிப்பு |
| 5.035 | திருப்பழனம் | (348-357) | மின்பதிப்பு |
| 5.036 | திருச்செம்பொன்பள்ளி | (358-367) | மின்பதிப்பு |
| 5.037 | திருக்கடவூர்வீரட்டம் | (368-378) | மின்பதிப்பு |
| 5.038 | திருக்கடவூர்மயானம் | (379-386) | மின்பதிப்பு |
| 5.039 | திருமயிலாடுதுறை | (387-397) | மின்பதிப்பு |
| 5.040 | திருக்கழிப்பாலை | (398-406) | மின்பதிப்பு |
| 5.041 | திருப்பைஞ்ஞீலி | (307-316) | மின்பதிப்பு |
| 5.042 | திருவேட்களம் | (317-326) | மின்பதிப்பு |
| 5.043 | திருநல்லம் | (327-337) | மின்பதிப்பு |
| 5.044 | திருவாமாத்தூர் | (338-347) | மின்பதிப்பு |
| 5.045 | திருத்தோணிபுரம் | (348-357) | மின்பதிப்பு |
| 5.046 | திருப்புகலூர் | (358-367) | மின்பதிப்பு |
| 5.047 | திருவேகம்பம் | (368-378) | மின்பதிப்பு |
| 5.048 | திருவேகம்பம் | (379-386) | மின்பதிப்பு |
| 5.049 | திருவெண்காடு | (387-397) | மின்பதிப்பு |
| 5.050 | திருவாய்மூர் | (398-406) | மின்பதிப்பு |
| 1 | அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே. | 5.1.1 |
| 2 | அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர் சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன் பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே. | 5.1.2 |
| 3 | அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர் எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர் சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம் திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. | 5.1.3 |
| 4 | அல்லல் என்செயும் அருவினை என்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே. | 5.1.4 |
| 5 | ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம் நானி லாவி யிருப்பனென் னாதனைத் தேனி லாவிய சிற்றம் பலவனார் வானி லாவி யிருக்கவும் வைப்பரே. | 5.1.5 |
| 6 | சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ் சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச் சிட்டர் பாலணு கான்செறு காலனே. | 5.1.6 |
| 7 | ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர் திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார் விருத்த னார்இளை யார்விட முண்டவெம் அருத்த னார்அடி யாரை அறிவரே. | 5.1.7 |
| 8 | விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு எண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக் கண்ணி றைந்த கடிபொழில் அம்பலத் துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே. | 5.1.8 |
| 9 | வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம் வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன் தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே. | 5.1.9 |
| 10 | நாடி நாரணன் நான்முக னென்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத் தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே. | 5.1.10 |
| 11 | மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன் சதுரன் சிற்றம் பலவன் திருமலை அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. | 5.1.11 |
| 12 | பனைக்கை மும்மத வேழ முரித்தவன் நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ. | 5.2.1 |
| 13 | தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை மூர்த்தி யைமுத லாய ஒருவனைப் பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பலக் கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ. | 5.2.2 |
| 14 | கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறி இட்ட மாயிடு காட்டெரி யாடுவான் சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ. | 5.2.3 |
| 15 | மாணி பால்கறந் தாட்டி வழிபட நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன் ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ. | 5.2.4 |
| 16 | பித்த னைப்பெருங் காடரங் காவுடை முத்த னைமுளை வெண்மதி சூடியைச் சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற அத்த னையடி யேன்மறந் துய்வனோ. | 5.2.6 |
| 17 | நீதி யைநிறை வைமறை நான்குடன் ஓதி யையொரு வர்க்கு மறிவொணாச் சோதி யைச்சுடர்ச் செம்பொனின் அம்பலத் தாதி யையடி யேன்மறந் துய்வனோ. | 5.2.6 |
| 18 | மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணினன் பைகொள் பாம்பரை யார்த்த பரமனார் செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள் ஐய னையடி யேன்மறந் துய்வனோ. | 5.2.7 |
| 19 | முழுதும் வானுல கத்துள தேவர்கள் தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால் எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை இழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ. | 5.2.8 |
| 20 | காரு லாமலர்க் கொன்றையந் தாரனை வாரு லாமுலை மங்கை மணாளனைத் தேரு லாவிய தில்லையுட் கூத்தனை ஆர்கி லாவமு தைமறந் துய்வனோ. | 5.2.9 |
| 21 | ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம் வீங்கி விம்முற ஊன்றிய தாளினான் தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப் பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ. | 5.2.10 |
திருச்சிற்றம்பலம்
| 22 | <ஸௗ நே௬ஸ ே ி௯்௱ உடலு ளானையொப் பாரியி லாதவெம் அடலு ளானை அரத்துறை மேவிய சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.1 |
| 23 | கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை விரும்பொப் பானைவிண் ணோரு மறிகிலா அரும்பொப் பானை அரத்துறை மேவிய சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.2 |
| 24 | ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை வேறொப் பானைவிண் ணோரு மறிகிலா ஆறொப் பானை அரத்துறை மேவிய ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.3 |
| 25 | பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா இரப்பொப் பானை இளமதி சூடிய அரப்பொப் பானை அரத்துறை மேவிய சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.4 |
| 26 | நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர் மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார் ஐயொப் பானை அரத்துறை மேவிய கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.5 |
| 27 | நிதியொப் பானை நிதியிற் கிழவனை விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார் அதியொப் பானை அரத்துறை மேவிய கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.6 |
| 28 | புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார் அனலொப் பானை அரத்துறை மேவிய கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.7 |
| 29 | பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர் மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார் அன்னொப் பானை அரத்துறை மேவிய தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.8 |
| 30 | காழி யானைக் கனவிடை யூருமெய் வாழி யானைவல் லோருமென் றின்னவர் ஆழி யான்பிர மற்கும் அரத்துறை ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.9 |
| 31 | கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினை மலையொப் பானை மணிமுடி யூன்றிய அலையொப் பானை அரத்துறை மேவிய நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.10 |
| 32 | வட்ட னைமதி சூடியை வானவர் சிட்ட னைத்திரு வண்ணா மலையனை இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும் அட்ட னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.1 |
| 33 | வான னைமதி சூடிய மைந்தனைத் தேன னைத்திரு வண்ணா மலையனை ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த ஆன னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.2 |
| 34 | மத்த னைமத யானை யுரித்தவெஞ் சித்த னைத்திரு வண்ணா மலையனை முத்த னைமுனிந் தார்புர மூன்றெய்த அத்த னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.3 |
| 35 | காற்ற னைக்கலக் கும்வினை போயறத் தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக் கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.4 |
| 36 | மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட தென்ன னைத்திரு வண்ணா மலையனை என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த அன்ன னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.5 |
| 37 | மன்ற னைமதி யாதவன் வேள்விமேற் சென்ற னைத்திரு வண்ணா மலையனை வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங் கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ. | 5.4.6 |
| 38 | வீர னைவிட முண்டனை விண்ணவர் தீர னைத்திரு வண்ணா மலையனை ஊர னையுண ரார்புர மூன்றெய்த ஆர னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.7 |
| 39 | கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந் திருவி னைத்திரு வண்ணா மலையனை உருவி னையுண ரார்புர மூன்றெய்த அருவி னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.8 |
| 40 | அருத்த னையர வைந்தலை நாகத்தைத் திருத்த னைத்திரு வண்ணா மலையனைக் கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த அருத்த னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.9 |
| 41 | அரக்க னையல றவ்விர லூன்றிய திருத்த னைத்திரு வண்ணா மலையனை இரக்க மாயென் உடலுறு நோய்களைத் துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ. | 5.4.10 |
| 42 | பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம் இட்ட மாக இரந்துண் டுழிதரும் அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக் கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே. | 5.5.1 |
| 43 | பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர் சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும் அற்றந் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே. | 5.5.2 |
| 44 | பல்லி லோடுகை யேந்திப் பலஇலம் ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர் அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ நல்ல வாயின நம்மை அடையுமே. | 5.5.3 |
| 45 | பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர் ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ ஓடிப் போகுநம் மேலை வினைகளே. | 5.5.4 |
| 46 | தேடிச் சென்று திருந்தடி யேத்துமின் நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர் ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ ஓடிப் போம்நம துள்ள வினைகளே. | 5.5.5 |
| 47 | கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார் அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய நட்ட மாடியை நண்ணநன் காகுமே. | 5.5.6 |
| 48 | கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர் பாணி நட்டங்க ளாடும் பரமனார் ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப் பேணி நின்ற பெருவினை போகுமே. | 5.5.7 |
| 49 | கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர் பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழ விண்டு போகுநம் மேலை வினைகளே. | 5.5.8 |
| 50 | முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின் அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங் கந்த மாமலர் சூடுங் கருத்தனே. | 5.5.9 |
| 51 | மறையி னானொடு மாலவன் காண்கிலா நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன் உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப் பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே. | 5.5.10 |
| 52 | எப்போ தும்மிறை யும்மற வாதுநீர் முப்போ தும்பிர மன்றொழ நின்றவன் செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன் அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே. | 5.6.1 |
| 53 | சடையின் மேலுமோர் தையலை வைத்தவர் அடைகி லாவர வைஅரை யார்த்தவர் படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா அடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே. | 5.6.2 |
| 54 | விண்ட வெண்டலை யேகல னாகவே கொண்ட கம்பலி தேருங் குழகனார் துண்ட வெண்பிறை வைத்த இறையவர் அண்ட வாணர்க் கருளும்ஆ ரூரரே. | 5.6.3 |
| 55 | விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலி கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல் உடையுஞ் சீரை உறைவது காட்டிடை அடைவர் போல்அரங் காகஆ ரூரரே. | 5.6.4 |
| 56 | துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர் வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தித் திளைக்குந் திங்கட் சடையிற் திசைமுழு தளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே. | 5.6.5 |
| 57 | பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமா விண்ணி னார்விளங் கும்மதி சூடியே சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின் அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே. | 5.6.6 |
| 58 | மட்டு வார்குழ லாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறும் இறைவனார் கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோ டட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே. | 5.6.7 |
| 59 | தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல் ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார் காய்ந்து காமனை நோக்கின கண்ணினார் ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே. | 5.6.8 |
| 60 | உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங் கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான் கொண்ட கோவண ஆடையன் கூரெரி அண்ட வாணர் அடையும்ஆ ரூரரே. | 5.6.9 |
| 61 | மாலும் நான்முக னும்மறி கிற்கிலார் கால னாய அவனைக் கடந்திட்டுச் சூல மான்மழு வேந்திய கையினார் ஆலம் உண்டழ காயஆ ரூரரே. | 5.6.10 |
| 62 | கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி பக்க மேபகு வாயன பூதங்கள் ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய் அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. | 5.7.1 |
| 63 | எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடவை யாய பராபரன் அந்த மில்புகழ் ஆரூர் அரனெறி சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே. | 5.7.2 |
| 64 | வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக் கிண்டை மாலை புனைந்தும் இராப்பகல் தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க் கண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே. | 5.7.3 |
| 65 | துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய் என்பெ லாம்நெக்கி ராப்பக லேத்திநின் றின்ப ராய்நினைந் தென்றும் இடையறா அன்ப ராமவர்க் கன்பர்ஆ ரூரரே. | 5.7.4 |
| 66 | முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம் அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர் முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே. | 5.7.5 |
| 67 | எம்மை யாரிலை யானுமு ளேனலேன் எம்மை யாரும் இதுசெய வல்லரே அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற் கம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே. | 5.7.6 |
| 68 | தண்ட ஆளியைத் தக்கன்றன் வேள்வியைச் செண்ட தாடிய தேவர கண்டனைக் கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க் கொண்டி யாயின வாறென்றன் கோதையே. | 5.7.7 |
| 69 | இவண மைப்பல பேசத் தொடங்கினாள் அவண மன்றெனில் ஆரூர் அரனெனும் பவணி வீதி விடங்கனைக் கண்டிவள் தவணி யாயின வாறென்றன் தையலே. | 5.7.8 |
| 70 | நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார் காரொத் தமிடற் றர்கனல் வாயரா ஆரத் தர்உறை யும்மணி ஆரூரைத் தூரத் தேதொழு வார்வினை தூளியே. | 5.7.9 |
| 71 | உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான் வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன் அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தவெம் வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே. | 5.7.10 |
| 72 | விண்ட மாமலர் மேலுறை வானொடுங் கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலா அண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழப் பண்டை வல்வினை நில்லா பறையுமே. | 5.7.11 |
| 73 | மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன் கையு லாவிய சூலத்தன் கண்ணுதல் ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம் உய்ய லாமல்லல் ஒன்றிலை காண்மினே. | 5.7.12 |
| 74 | பாற லைத்த படுவெண் டலையினன் நீற லைத்தசெம் மேனியன் நேரிழை கூற லைத்தமெய் கோளர வாட்டிய ஆற லைத்த சடைஅன்னி யூரரே. | 5.8.1 |
| 75 | பண்டொத் தமொழி யாளையோர் பாகமாய் இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர் கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன் அண்டத் தப்புறத் தான்அன்னி யூரரே. | 5.8.2 |
| 76 | பரவி நாளும் பணிந்தவர் தம்வினை துரவை யாகத் துடைப்பவர் தம்மிடங் குரவம் நாறுங் குழலுமை கூறராய் அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே. | 5.8.3 |
| 77 | வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர் சோதி வெண்பிறை துன்று சடைக்கணி நாதர் நீதியி னாலடி யார்தமக் காதி யாகிநின் றார்அன்னி யூரரே. | 5.8.4 |
| 78 | எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம் இன்ப ராகி இருந்தவெம் மீசனார் துன்ப வல்வினை போகத் தொழுமவர்க் கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே. | 5.8.5 |
| 79 | வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர் கந்த மாமலர் சூடுங் கருத்தினர் சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர் அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே. | 5.8.6 |
| 80 | ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல் வானை வானவர் தாங்கள் வணங்கவே தேனை யார்குழ லாளையோர் பாகமா ஆனை யீருரி யார்அன்னி யூரரே. | 5.8.7 |
| 81 | காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி மேலை வானவர் வந்து விரும்பிய சோலை சூழ்புறங் காடரங் காகவே ஆலின் கீழறத் தார்அன்னி யூரரே. | 5.8.8 |
| 82 | எரிகொள் மேனியர் என்பணிந் தின்பராய்த் திரியு மூவெயில் தீயெழச் செற்றவர் கரிய மாலொடு நான்முகன் காண்பதற் கரிய ராகிநின் றார்அன்னி யூரரே. | 5.8.9 |
| 83 | வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும் அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப் பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை அஞ்ச லஞ்சலென் றார்அன்னி யூரரே. | 5.8.10 |
| 84 | ஓத மால்கடல் பாவி உலகெலாம் மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக் காதல் செய்து கருதப் படுமவர் பாத மேத்தப் பறையுநம் பாவமே. | 5.9.1 |
| 85 | பூக்குந் தாழை புறணி அருகெலாம் ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ ஆர்க்குங் காண்பரி யீர்அடி யார்தமை நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே. | 5.9.2 |
| 86 | புன்னை ஞாழல் புறணி அருகெலாம் மன்னி னார்வலங் கொண்மறைக் காடரோ அன்ன மென்னடை யாளையோர் பாகமாச் சின்ன வேடம் உகப்பது செல்வமே. | 5.9.3 |
| 87 | அட்ட மாமலர் சூடி அடம்பொடு வட்டப் புன்சடை மாமறைக் காடரோ நட்ட மாடியும் நான்மறை பாடியும் இட்ட மாக இருக்கும் இடமிதே. | 5.9.4 |
| 88 | நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும் மெய்யி னார்வலங் கொண்மறைக் காடரோ தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப் பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே. | 5.9.5 |
| 89 | துஞ்சும் போதுந் துயிலின்றி ஏத்துவார் வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந் தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே | 5.9.6 |
| 90 | விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. | 5.9.7 |
| 91 | திருவி னார்செல்வ மல்கு விழாவணி மருவி னார்வலங் கொண்மறைக் காடரோ உருவி னாளுமை மங்கையோர் பாகமாய் மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே. | 5.9.8 |
| 92 | சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய் வங்க மார்வலங் கொண்மறைக் காடரோ கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே அங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே. | 5.9.9 |
| 93 | குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை இறைக்காட் டியெடுத் தான்றலை ஈரைந்தும் மறைக்காட் டானிறை ஊன்றலும் வாய்விட்டான் இறைக்காட் டாயெம் பிரானுனை ஏத்தவே. | 5.9.10 |
| 94 | பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. | 5.10.1 |
| 95 | ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோ மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும் நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே. | 5.10.2 |
| 96 | அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ சட்ட விக்கத வந்திறப் பிம்மினே. | 5.10.3 |
| 97 | அரிய நான்மறை யோதிய நாவரோ பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ விரிகொள் கோவண ஆடை விருத்தரோ பெரிய வான்கத வம்பிரி விக்கவே. | 5.10.4 |
| 98 | மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ விலையில் மாமணி வண்ண வுருவரோ தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே. | 5.10.5 |
| 99 | பூக்குந் தாழை புறணி அருகெலாம் ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ ஆர்க்குங் காண்பரி யீர்அடி கேள்உமை நோக்கிக் காணக் கதவைத் திறவுமே. | 5.10.6 |
| 100 | வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ அந்த மில்லி அணிமறைக் காடரோ எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட இந்த மாக்கத வம்பிணி நீக்குமே. | 5.10.7 |
| 101 | ஆறு சூடும் அணிமறைக் காடரோ கூறு மாதுமைக் கீந்த குழகரோ ஏற தேறிய எம்பெரு மானிந்த மாறி லாக்கத வம்வலி நீக்குமே. | 5.10.8 |
| 102 | சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ பண்ணி யேறுகந் தேறும் பரமரோ அண்ண லாதி அணிமறைக் காடரோ திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே. | 5.10.9 |
| 103 | விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. | 5.10.10 |
| 104 | அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க விக்கத வந்திறப் பிம்மினே. | 5.10.11 |
| 105 | தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற் கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே. | 5.11.1 |
| 106 | வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள் பந்த னைசெய்து பாவிக்க நின்றவன் சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர் எந்த மையுடை யாரிளங் கோயிலே. | 5.11.2 |
| 107 | பஞ்ச மந்திர மோதும் பரமனார் அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார் நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர் எந்த மையுடை யாரிளங் கோயிலே. | 5.11.3 |
| 108 | நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம் வேறு வேறு விரித்த சடையிடை ஆறு கொண்டுகந் தான்றிரு மீயச்சூர் ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே. | 5.11.4 |
| 109 | வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர் செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர் எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே. | 5.11.5 |
| 110 | பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும் பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று மின்னு மேகலை யாளொடு மீயச்சூர் இன்ன நாள்அக லாரிளங் கோயிலே. | 5.11.6 |
| 111 | படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன் விடைகொ ளூர்தியி னான்றிரு மீயச்சூர் இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே. | 5.11.7 |
| 112 | ஆறு கொண்ட சடையினர் தாமுமோர் வேறு கொண்டதோர் வேடத்த ராகிலுங் கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர் ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே. | 5.11.8 |
| 113 | வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர் பூதத் தானென்பர் புண்ணியன் றன்னையே கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர் ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. | 5.11.9 |
| 114 | கடுக்கண் டன்கயி லாய மலைதனை எடுக்க லுற்ற இராவணன் ஈடற விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர் இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. | 5.11.10 |
| 115 | கரைந்து கைதொழு வாரையுங் காதலன் வரைந்து வைதெழு வாரையும் வாடலன் நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும் விரைந்து போவது வீழி மிழலைக்கே. | 5.12.1 |
| 116 | ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார் நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார் வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே. | 5.12.2 |
| 117 | புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான் வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான் நினைய நின்றவன் ஈசனை யேயெனா வினையி லார்தொழும் வீழி மிழலையே. | 5.12.3 |
| 118 | மாடத் தாடு மனத்துடன் வைத்தவர் கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர் பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர் வேடத் தார்தொழும் வீழி மிழலையே. | 5.12.4 |
| 119 | எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர் உடுப்பர் கோவண முண்பது பிச்சையே கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை விடுத்துப் போவது வீழி மிழலைக்கே. | 5.12.5 |
| 120 | குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால் உழலை யாக்கையை யூணும் உணர்விலீர் தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம் மிழலை யானடி சாரவிண் ணாள்வரே. | 5.12.6 |
| 121 | தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய நீரன் ஆடிய நீற்றன்வண் டார்கொன்றைத் தாரன் மாலையன் றண்ணறுங் கண்ணியன் வீரன் வீழி மிழலை விகிர்தனே. | 5.12.7 |
| 122 | எரியி னாரிறை யாரிடு காட்டிடை நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர் பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை விரியி னார்தொழு வீழி மிழலையே. | 5.12.8 |
| 123 | நீண்ட சூழ்சடை மேலோர் நிலாமதி காண்டு சேவடி மேலோர் கனைகழல் வேண்டு வாரவர் வீதி புகுந்திலர் மீண்டும் போவது வீழி மிழலைக்கே. | 5.12.9 |
| 124 | பாலை யாழொடு செவ்வழி பண்கொள மாலை வானவர் வந்து வழிபடும் ஆலை யாரழல் அந்தண ராகுதி வேலை யார்தொழும் வீழி மிழலையே. | 5.12.10 |
| 125 | மழலை யேற்று மணாளன் திருமலை சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக் கழல்கொள் காலிற் றிருவிர லூன்றலும் மிழலை யானடி வாழ்கென விட்டதே. | 5.12.11 |
| 126 | என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல் நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன் செம்பொ னேதிரு வீழி மிழலையுள் அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.1 |
| 127 | கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள் அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.2 |
| 128 | ஞால மேவிசும் பேநலந் தீமையே கால மேகருத் தேகருத் தாற்றொழுஞ் சீல மேதிரு வீழி மிழலையுள் கோல மேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.3 |
| 129 | முத்த னேமுதல் வாமுகி ழும்முளை ஒத்த னேயொரு வாவுரு வாகிய சித்த னேதிரு வீழி மிழலையுள் அத்த னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.4 |
| 130 | கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம் ஒருவ னேஉயிர்ப் பாய்உணர் வாய்நின்ற திருவ னேதிரு வீழி மிழலையுள் குருவ னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.5 |
| 131 | காத்த னேபொழி லேழையுங் காதலால் ஆத்த னேஅம ரர்க்கயன் றன்றலை சேர்த்த னேதிரு வீழி மிழலையுள் கூத்த னேயடி யேனைக் குறிகொளே. | 5.13.6 |
| 132 | நீதி வானவர் நித்தல் நியமஞ்செய் தோதி வானவ ரும்முண ராததோர் வேதி யாவிகிர் தாதிரு வீழியுள் ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.7 |
| 133 | பழகி நின்னடி சூடிய பாலனைக் கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய அழக னேயணி வீழி மிழலையுள் குழக னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.8 |
| 134 | அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ் சுண்ட வானவ னேஉணர் வொன்றிலேன் விண்ட வான்பொழில் வீழி மிழலையுள் கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.9 |
| 135 | ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றானுரம் வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய திருத்த னேதிரு வீழி மிழலையுள் அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.10 |
| 136 | பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள் வாச நாண்மலர் கொண்டடி வைகலும் ஈச னெம்பெரு மான்இடை மருதினிற் பூச நாம்புகு தும்புன லாடவே. | 5.14.1 |
| 137 | மறையின் நாண்மலர் கொண்டடி வானவர் முறையி னான்முனி கள்வழி பாடுசெய் இறைவன் எம்பெரு மான்இடை மருதினில் உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. | 5.14.2 |
| 138 | கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன் என்று மெந்தை பிரான்இடை மருதினை நன்று கைதொழு வார்வினை நாசமே. | 5.14.3 |
| 139 | இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும் எம்மை யாளும் இடைமரு தன்கழல் செம்மை யேதொழு வார்வினை சிந்துமே. | 5.14.4 |
| 140 | வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங் கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார் எண்டி சைக்கும் இடைமரு தாவென விண்டு போயறும் மேலை வினைகளே. | 5.14.5 |
| 141 | ஏற தேறும் இடைமரு தீசனார் கூறு வார்வினை தீர்க்குங் குழகனார் ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க் கூறி யூறி உருகுமென் உள்ளமே. | 5.14.6 |
| 142 | விண்ணு ளாரும் விரும்பப் படுவர் மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர் எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை நண்ணி னாரைநண் ணாவினை நாசமே. | 5.14.7 |
| 143 | வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார் கந்த மாலைகள் சூடுங் கருத்தனார் எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச் சிந்தை யால்நினை வார்வினை தேயுமே. | 5.14.8 |
| 144 | வேத மோதும் விரிசடை அண்ணலார் பூதம் பாடநின் றாடும் புனிதனார் ஏதந் தீர்க்கும் இடைமரு தாவென்று பாத மேத்தப் பறையுநம் பாவமே. | 5.14.9 |
| 145 | கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும் பனிம லர்க்குழற் பாவைநல் லாரினுந் தனிமு டிகவித் தாளு மரசினும் இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே. | 5.14.10 |
| 146 | முற்றி லாமதி சூடும் முதல்வனார் ஒற்றி னார்மலை யாலரக் கன்முடி எற்றி னார்கொடி யாரிடை மருதினைப் பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. | 5.14.11 |
| 147 | பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் வைகும் அயலெலாம் இறைவன் எங்கள் பிரானிடை மருதினில் உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. | 5.15.1 |
| 148 | மனத்துள் மாயனை மாசறு சோதியைப் புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை எனக்குத் தாயையெம் மானிடை மருதனை நினைத்திட் டூறி நிறைந்ததென் னுள்ளமே. | 5.15.2 |
| 149 | வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங் கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை எண்டி சைக்கும் இடைமரு தாவென விண்டு போயறும் மேலை வினைகளே. | 5.15.3 |
| 150 | துணையி லாமையிற் றூங்கிருட் பேய்களோ டணைய லாவதெ மக்கரி தேயெனா இணையி லாஇடை மாமரு தில்லெழு பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே. | 5.15.4 |
| 151 | மண்ணை யுண்டமால் காணான் மலரடி விண்ணை விண்டயன் காணான் வியன்முடி மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல் பண்ணை யாயமுந் தானும் பயிலுமே. | 5.15.5 |
| 152 | மங்கை காணக் கொடார்மண மாலையைக் கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை நங்கை மீர்இடை மருதரிந் நங்கைக்கே எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே. | 5.15.6 |
| 153 | மறையு மோதுவர் மான்மறிக் கையினர் கறைகொள் கண்ட முடைய கபாலியார் துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர் பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே. | 5.16.1 |
| 154 | கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும் வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையுந் தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும் பிணக்கு வாரவர் பேரெயி லாளரே. | 5.16.2 |
| 155 | சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும் பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே. | 5.16.3 |
| 156 | செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள் உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினை அறுவிப் பாரது வன்றியும் நல்வினை பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே. | 5.16.4 |
| 157 | மற்றை யாரறி யார்மழு வாளினார் பற்றி யாட்டியோர் ஐந்தலைப் பாம்பரைச் சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு பெற்றி யாரவர் பேரெயி லாளரே. | 5.16.5 |
| 158 | திருக்கு வார்குழற் செல்வன சேவடி இருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார் சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப் பெருக்கு வாரவர் பேரெயி லாளரே. | 5.16.6 |
| 159 | முன்னை யார்மயி லூர்தி முருகவேள் தன்னை யாரெனிற் றானோர் தலைமகன் என்னை யாளும் இறையவ னெம்பிரான் பின்னை யாரவர் பேரெயி லாளரே. | 5.16.7 |
| 160 | உழைத்துந் துள்ளியும் உள்ளத்து ளேயுரு இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல் அழைக்கும் அன்பின ராய அடியவர் பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே. | 5.16.8 |
| 161 | நீரு லாநிமிர் புன்சடை யாவெனா ஏரு லாவனங் கன்றிறல் வாட்டிய வாரு லாவன மென்முலை யாளொடும் பேரு ளாரவர் பேரெயி லாளரே. | 5.16.9 |
| 162 | பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர் தூணி யார்விச யற்கருள் செய்தவர் மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன் பேணி யாரவர் பேரெயி லாளரே. | 5.16.10 |
| 163 | மதத்த வாளரக் கன்மணிப் புட்பகஞ் சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப் பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி பிதக்க வூன்றிய பேரெயி லாளரே. | 5.16.11 |
| 164 | முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெந் தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப் பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர் நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.1 |
| 165 | வெண்ணித் தொன்னகர் மேயவெண் டிங்களார் கண்ணித் தொத்த சடையர் கபாலியார் எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே. | 5.17.2 |
| 166 | காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடுங் கூற்றி னையுதைத் திட்ட குணமுடை வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.3 |
| 167 | நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச் சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர் கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.4 |
| 168 | சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப் படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே. | 5.17.5 |
| 169 | பூத நாதனைப் பூம்புக லூரனைத் தாதெ னத்தவ ழும்மதி சூடியை நாத னைநல்ல நான்மறை யோதியை வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.6 |
| 170 | ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும் பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக் கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல் நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.7 |
| 171 | சடைய னைச்சரி கோவண ஆடைகொண் டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும் படைய னைமழு வாளொடு பாய்தரும் விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.8 |
| 172 | பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை அருப்ப னையிளந் திங்களங் கண்ணியான் பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள் விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.9 |
| 173 | சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன் கோல மாவருள் செய்ததோர் கொள்கையான் காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம் வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே. | 5.17.10 |
| 174 | இலையி னார்கொன்றை சூடிய ஈசனார் மலையி னாலரக் கன்றிறல் வாட்டினார் சிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியைத் தலையி னாற்றொழு வார்வினை தாவுமே. | 5.17.11 |
| 175 | முற்றி லாமுலை யாளிவ ளாகிலும் அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங் கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப் பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே. | 5.18.1 |
| 176 | தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும் முனகு தீரத் தொழுதெழு மின்களோ கனகப் புன்சடை யான்கடம் பந்துறை நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே. | 5.18.2 |
| 177 | ஆரி யந்தமி ழோடிசை யானவன் கூரி யகுணத் தார்குறி நின்றவன் காரி கையுடை யான்கடம் பந்துறைச் சீரி யல்பத்தர் சென்றடை மின்களே. | 5.18.3 |
| 178 | பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை வண்ண நன்மல ரான்பல தேவருங் கண்ண னும்மறி யான்கடம் பந்துறை நண்ண நம்வினை யாயின நாசமே. | 5.18.4 |
| 179 | மறைகொண் டமனத் தானை மனத்துளே நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை சிறைகொண் டவினை தீரத் தொழுமினே. | 5.18.5 |
| 180 | நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப் பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை அங்க மோதி அரனுறை கின்றதே. | 5.18.6 |
| 181 | அரிய நான்மறை ஆறங்க மாயைந்து புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன் கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை உரிய வாறு நினைமட நெஞ்சமே. | 5.18.7 |
| 182 | பூமென் கோதை உமையொரு பாகனை ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற் காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை நாம மேத்தநந் தீவினை நாசமே. | 5.18.8 |
| 183 | பார ணங்கி வணங்கிப் பணிசெய நார ணன்பிர மன்னறி யாததோர் கார ணன்கடம் பந்துறை மேவிய ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே. | 5.18.9 |
| 184 | நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப் பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார் காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே. | 5.18.10 |
| 185 | தளருங் கோளர வத்தொடு தண்மதி வளருங் கோல வளர்சடை யார்க்கிடங் கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக் களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.19.1 |
| 186 | வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ் சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும் அலவ லான்மனை யார்ந்தமென் றோளியைக் கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.19.2 |
| 187 | பொய்தொ ழாது புலியுரி யோன்பணி செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா வைதெ ழாதெழு வாரவர் எள்கநீர் கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே. | 5.19.3 |
| 188 | துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே பண்ணி னான்முனம் பாடல துசெய்தே எண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமுக் கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.19.4 |
| 189 | சுனையுள் நீல மலரன கண்டத்தன் புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக் கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை நினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே. | 5.19.5 |
| 190 | குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம் வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங் கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே. | 5.19.6 |
| 191 | பண்ணி னார்மறை பல்பல பூசனை மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும் விண்ணி னார்கள் வியக்கப் படுவன கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.19.7 |
| 192 | அங்கை ஆரழ லேந்திநின் றாடலன் மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக் கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத் தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே. | 5.19.8 |
| 193 | நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே. | 5.19.9 |
| 194 | பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும் மணங்க மழ்மலர்த் தாமரை யானவன் பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங் கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே. | 5.19.10 |
| 195 | வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார் திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை உரைக்கும் உள்ளத் தவர்வினை ஓயுமே. | 5.19.11 |
| 196 | ஒருவ ராயிரு மூவரு மாயவன் குருவ தாய குழகன் உறைவிடம் பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ் கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.1 |
| 197 | வன்னி மத்தம் வளரிளந் திங்களோர் கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன் பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும் மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.2 |
| 198 | இல்லக் கோலமும் இந்த இளமையும் அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே ஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச் செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே. | 5.20.3 |
| 199 | வேறு சிந்தை யிலாதவர் தீவினை கூறு செய்த குழகன் உறைவிடம் ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும் ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.4 |
| 200 | திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர் மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலுந் தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.5 |
| 201 | மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம் எல்லை யான பிரானார் இருப்பிடங் கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.6 |
| 202 | தளரும் வாளர வத்தொடு தண்மதி வளரும் பொற்சடை யாற்கிட மாவது கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக் களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.7 |
| 203 | உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம் பெற்றா ராய பிரானார் உறைவிடம் முற்றார் மும்மதி லெய்த முதல்வனார் கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.8 |
| 204 | வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம் உள்ள மாய பிரானார் உறைவிடம் பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான் கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.9 |
| 205 | பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன் உரத்தி னாலடுக் கல்லெடுக் கல்லுற இரக்க மின்றி இறைவிர லாற்றலை அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.10 |
| 206 | என்னி லாரும் எனக்கினி யாரில்லை என்னி லும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே. | 5.21.1 |
| 207 | மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால் கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே. | 5.21.2 |
| 208 | கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன் புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர் எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே. | 5.21.3 |
| 209 | மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான் அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக் குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே இழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே. | 5.21.4 |
| 210 | தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன் மன்ன வன்மதி யம்மறை யோதியான் முன்ன மன்னவன் சேரலன் பூழியான் இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே. | 5.21.5 |
| 211 | விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில் அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக் குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே இளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே. | 5.21.6 |
| 212 | சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர் கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள் படைக்க ணாற்பரு கப்படு வான்நமக் கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே. | 5.21.7 |
| 213 | தொழுது தூமலர் தூவித் துதித்துநின் றழுது காமுற் றரற்றுகின் றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே. | 5.21.8 |
| 214 | விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை புரியுங் காமனை வேவப் புருவமுந் திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந் தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே. | 5.21.9 |
| 215 | சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும் முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரண மென்கொலோ இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே. | 5.21.10 |
| 216 | பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங் காவ ணத்துடை யானடி யார |