campantar tEvAram
tirumuRai 1 part I (verses 1-721)
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - முதல் பகுதி - பாடல்கள் (1 - 721)
[see also
Thiru GnAna Sampanthar in 63 Naynamar by Swami Sivananda]
Acknowledgements: Etext preparation
(romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany. Our
sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing
us with a Text Convertor that allowed conversion of romanized version to
Tamil script version as per TSCII encoding. Proof-reading: Mr. P.K.
Ilango, Erode, Tamilnadu, IndiaPDF and Web version: Dr. K.
Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary,
worldwide initiative devoted to preparation of electronic texts of
tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header
page is kept intact.
1.1 திருப்பிரமபுரம்
பண் - நட்டபாடை
1 |
தோடுடைய செவியன் விடையேறியோர்
தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. |
1.1.1 |
2 |
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்
பவைபூண்டு
வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. |
1.1.2
|
3 |
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர்
நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. |
1.1.3
|
4 |
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி
விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. |
1.1.4
|
5 |
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை
யூருமிவ னென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. |
1.1.5
|
6 |
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு
வேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. |
1.1.6
|
7 |
சடைமுயங்குபுன லன்அனலன்எரி
வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. |
1.1.7
|
8 |
வியரிலங்குவரை யுந்தியதோள்களை
வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. |
1.1.8
|
9 |
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை
யானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. |
1.1.9
|
10 |
புத்தரோடுபொறி யில்சமணும்புறங்
கூறநெறி நில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. |
1.1.10
|
11 |
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்
மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே. |
1.1.11
|
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.2 திருப்புகலூர்
பண் - நட்டபாடை
12 |
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல
கெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே. |
1.2.1 |
13 |
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு
மார்பன்னொரு பாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை
மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்
போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே. |
1.2.2
|
14 |
பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை
யங்கைப்
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்
மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே. |
1.2.3
|
15 |
நீரின்மல்குசடை யன்விடையன்னடை
யார்தம்அரண் மூன்றுஞ்
சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்(*)
காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே.
(*) முனிந்தானுலகுய்ய என்றும் பாடம். |
1.2.4
|
16 |
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர்
சேரும்மடி யார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே. |
1.2.5
|
17 |
கழலினோசைசிலம் பின்னொலியோசை
கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. |
1.2.6
|
17 |
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல்
விளங்கும்மதி சூடி
உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே. |
1.2.7
|
18 |
தென்னிலங்கையரை யன்வரைபற்றி
யெடுத்தான்முடி திண்டோ ள்
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே. |
1.2.8
|
19 |
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு
தேத்தும்மடி யார்கள்
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த
ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்
போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே. |
1.2.9
|
20 |
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்
செப்பிற்பொரு ளல்லாக்
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து
மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே. |
1.2.10
|
21 |
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன்
மேவும்புக லூரைக்
கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை
பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே. |
1.2.11
|
காவிரி தென்கரைத் தலம்.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.3 திருவலிதாயம்
பண் - நட்டபாடை
23 |
பத்தரோடுபல ரும்பொலியம்மலர்
அங்கைப்புனல் தூவி
ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்
சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே. |
1.3.1 |
24 |
படையிலங்குகரம் எட்டுடையான்படி
றாகக்கன லேந்திக்
கடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்
மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்
அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே. |
1.3.2
|
25 |
ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ
ரென்றுந்தொழு தேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே. |
1.3.3
|
26 |
ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை
சூழப்
புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே. |
1.3.4
|
27 |
புந்தியொன்றிநினை வார்வினையாயின
தீரப்பொரு ளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்
சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே. |
1.3.5
|
28 |
ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ
ரேத்தக்
கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்
வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே. |
1.3.6
|
29 |
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு
காமனுயிர் வீட்டிப்
பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே. |
1.3.7
|
30 |
கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு
தேத்தநட மாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்
உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே. |
1.3.8
|
31 |
பெரியமேருவரை யேசிலையாமலை
வுற்றாரெயில் மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த
உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே. |
1.3.9
|
32 |
ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர்
கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே. |
1.3.10
|
33 |
வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி
தாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக்
கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே. |
1.3.11
|
இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.
சுவாமிபெயர் - வலிதாயநாதர்,
தேவியார் - தாயம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும்
வினாவுரை
பண் - நட்டபாடை
34 |
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேயிமை யாதமுக்கண்
ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.1 |
35 |
கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில்
கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும்
புகலி நிலாவிய புண்ணியனே
எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர்
இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த
விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.2
|
36 |
கன்னிய ராடல் கலந்துமிக்க
கந்துக வாடை கலந்துதுங்கப்
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப்
புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத்
தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.3
|
37 |
நாகப ணந்திகழ் அல்குல்மல்கும்
நன்னுதல் மான்விழி மங்கையோடும்
பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண்
புகலிநி லாவிய புண்ணியனே
ஏகபெ ருந்தகை யாயபெம்மான்
எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.4
|
38 |
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
தையலோடுந் தளராத வாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை ஈசஎம்மான்
எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணி வார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.5
|
39 |
சங்கொலி இப்பிசு றாமகரந்
தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப்
புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்
எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.6
|
40 |
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக்
காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவ னத்தெரி யாட்டுகந்த
எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.7
|
41 |
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ
ள்
இற்றல றவ்விர லொற்றியைந்து
புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண்
புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும்
எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.8
|
42 |
செறிமுள ரித்தவி சேறியாறுஞ்
செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப்
பொறியர வத்தணை யானுங்காணாப்
புகலி நிலாவிய புண்ணியனே
எறிமழு வோடிள மான்கையின்றி
இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.9
|
43 |
பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த
பான்மைய தன்றியும் பல்சமணும்
புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்
புகலி நிலாவிய புண்ணியனே
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற
எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. |
1.4.10
|
44 |
விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்
புண்ணிய னைப்புக லிந்நிலாவு
பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப்
பாரொடு விண்பரி பாலகரே. |
1.4.11
|
இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.5 திருக்காட்டுப்பள்ளி
பண் - நட்டபாடை
45 |
செய்யரு கேபுனல் பாயஓங்கிச்
செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையீன்று
கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேயழல் வாயவைவாய்ப்
பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி
விண்டவ ரேறுவர் மேலுலகே. |
1.5.1 |
45 |
* இப்பதிகத்தில் 2-ம் செய்யுள்
சிதைந்து போயிற்று. |
1.5.2
|
46 |
திரைகளெல் லாமல ருஞ்சுமந்து
செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக்
காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல
உத்தம ராயுயர்ந் தாருலகில்
அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க்
காட்செய அல்லல் அறுக்கலாமே. |
1.5.3
|
47 |
தோலுடை யான்வண்ணப் போர்வையினான்
சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு
நூலுடை யானிமை யோர்பெருமான்
நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
காலுடை யான்கரி தாயகண்டன்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை யாதமுக்கண்
மின்னிடை யாளொடும் வேண்டினானே. |
1.5.4
|
48 |
சலசல சந்தகி லோடும்உந்திச்
சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டி
பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்
கலகல நின்றதி ருங்கழலான்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற
சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே. |
1.5.5
|
49 |
தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல்
தாமரை செங்கழு நீருமெல்லாங்
களையவி ழுங்குழ லார்கடியக்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்
துளைபயி லுங்குழல் யாழ்முரல
துன்னிய இன்னிசை யால்துதைந்த
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க்
காட்செய அல்லல் அறுக்கலாமே. |
1.5.6
|
50 |
முடிகையி னாற்றொடும் மோட்டுழவர்
முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி
காதல்செய் தான்கரி தாயகண்டன்
பொடியணி மேனியி னானையுள்கிப்
போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்
றடிகையி னாற்றொழ வல்லதொண்டர்
அருவினை யைத்துரந் தாட்செய்வாரே. |
1.5.7
|
51 |
பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான்
பெய்கழல் நாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான்
வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற்
காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன்
குரைகழ லேகைகள் கூப்பினோமே. |
1.5.8
|
52 |
செற்றவர் தம்அர ணம்மவற்றைச்
செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்
கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
உற்றவர் தாமுணர் வெய்திநல்ல
உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற
பெற்றம ரும்பெரு மானையல்லால்
பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே. |
1.5.9
|
53 |
ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த்
துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரைக் கூறையில்லார்
கூறுவ தாங்குண மல்லகண்டீர்
அண்டம றையவன் மாலுங்காணா
ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை
வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே. |
1.5.10
|
54 |
பொன்னியல் தாமரை நீலம்நெய்தல்
போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக்
காதல னைக்கடற் காழியர்கோன்
துன்னிய இன்னிசை யாற்றுதைந்து
சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல
தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந்
தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே. |
1.5.11
|
இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்
வினாவுரை
பண் - நட்டபாடை
55 |
அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.1 |
56 |
நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.2
|
57 |
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.3
|
58 |
நாமரு கேள்வியர் வேள்வியோவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.4
|
59 |
பாடல் முழவும் விழவும்ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்தடவும்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேயிட மாகஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.5
|
60 |
புனையழ லோம்புகை அந்தணாளர்
பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.6
|
60 |
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள்
சிதைந்து போயிற்று. |
1.6.7
|
61 |
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து
மாண்டங்கு நூன்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.8
|
62 |
அந்தமும் ஆதியும் நான்முகனும்
அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம் அகிற்புகை யேகமழுங்
கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.9
|
63 |
இலைமரு தேயழ காகநாளும்
இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
நிலையமண் டேரரை நீங்கிநின்று
நீதரல் லார்தொழும் மாமருகல்
மலைமகள் தோள்புணர் வாயருளாய்
மாசில்செங் காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. |
1.6.10
|
64 |
நாலுங் குலைக்கமு கோங்குகாழி
ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும்
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
சொல்லவல் லார்வினை யில்லையாமே. |
1.6.11
|
இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.
திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்; தேவியார் - வண்டுவார்குழலி
திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்,
தேவியார் - திருக்குழல்நாயகி.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்
வினாவுரை
பண் - நட்டபாடை
65 |
பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடக மாடுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள்
துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.1 |
66 |
திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கள் மகிழுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பொங்கிள மென்முலை யார்களோடும்
புனமயி லாட நிலாமுளைக்கும்
அங்கள கச்சுதை மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.2
|
67 |
தண்ணறு மத்தமுங் கூவிளமும்
வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.3
|
68 |
பூவினில் வாசம் புனலிற்பொற்பு
புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு
நாவினிற் பாடநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி
(*)ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
(*) ஆவினிலைந்து - பஞ்சகவ்வியம். |
1.7.4
|
69 |
செம்பொன்செய் மாலையும் வாசிகையுந்
திருந்து புகையு மவியும்பாட்டும்
நம்பும்பெ ருமைநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
உம்பரும் நாக ருலகந்தானும்
ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
அம்புத நால்களால் நீடுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.5
|
70 |
பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு
பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகமு டையவர் சேருங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.6
|
71 |
கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்
கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.7
|
72 |
இலங்கை யிராவணன் வெற்பெடுக்க
எழில்விர லூன்றி யிசைவிரும்பி
நலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.8
|
73 |
பணியுடை மாலும் மலரினோனும்
பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல் அரியநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை
மாமுர சின்னொலி என்றும்ஓவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.9
|
74 |
தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்
சாதியின் நீங்கிய வத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. |
1.7.10
|
75 |
அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவிய தென்கொலென்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவ ரேத்த இருப்பர்தாமே. |
1.7.11
|
இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம்
பண் - நட்டபாடை
76 |
புண்ணியர் பூதியர் பூதநாதர்
புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர்
கைதொழு தேத்த இருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.1 |
77 |
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும்
ஐயன் அணங்கொ டிருந்தவூராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு
துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப் பாடல றாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.2
|
78 |
பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்
போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
இறையவ ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்புமாவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.3
|
79 |
தேவியோர் கூறின ரேறதேறுஞ்
செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப்
புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.4
|
80 |
இந்தணை யுஞ்சடை யார்விடையார்
இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்
மன்னினர் மன்னி யிருந்தவூராம்
கொந்தணை யுங்குழ லார்விழவில்
கூட்டமி டையிடை சேரும்வீதிப்
பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.5
|
81 |
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்
சுற்றிய வாசலின் மாதர்விழாச்
சொற்கவி பாடநி தானம்நல்கப்
பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.6
|
82 |
நீறுடை யார்நெடு மால்வணங்கும்
நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார்
குவலய மேத்த இருந்தவூராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி
தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.7
|
83 |
வெண்டலை மாலை விரவிப்பூண்ட
மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த
மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்
கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.8
|
84 |
மாலும் அயனும் வணங்கிநேட
மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
சீலம் அறிவரி தாகிநின்ற
செம்மையி னாரவர் சேருமூராம்
கோல விழாவி னரங்கதேறிக்
கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.9
|
85 |
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்
சைவரி டந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. |
1.8.10
|
86 |
எண்டிசை யாரும் வணங்கியேத்தும்
எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்
கண்டல்கள் மிண்டிய கானற்காழிக்
கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாயிசை பாடியாடிக்
கூடு மவருடை யார்கள்வானே. |
1.8.11
|
இது சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்,
தேவியார் - மங்களநாயகியம்மை
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.9 திருவேணுபுரம்
பண் - நட்டபாடை
87 |
வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை
பாகம்
பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே. |
1.9.1 |
80 |
படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு
நேர்மை
கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்
(*)புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே.
(*) குடைப்பாளை என்றும் பாடம். |
1.9.2
|
89 |
கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி
போர்த்துப்
படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்
நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்
விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே. |
1.9.3
|
90 |
தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன்
தனக்கு
மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்
பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர
மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே. |
1.9.4
|
91 |
நானாவித உருவாய்நமை யாள்வான்நணு
காதார்
வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்
தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி
மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே. |
1.9.5
|
92 |
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக
அஞ்சக்
கண்ணார்சலம் மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானூர்
தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை
(**)விண்ணோர்துதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே.
(**) விண்ணார் குதிகொள்ளும் என்றும் பாடம். |
1.9.6
|
|
* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள்
சிதைந்து போயிற்று. |
1.9.7
|
93 |
மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி
யரக்கன்
தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்
கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே. |
1.9.8
|
94 |
வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்
பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்
கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்
வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே. |
1.9.9
|
95 |
மாசேறிய உடலாரமண் (*)கழுக்கள்ளொடு
தேரர்
தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்
தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்
வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே.
(*) குழுக்கள் என்றும் பாடம். |
1.9.10
|
96 |
வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந்
தன்னைப்
பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல்
ஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார்
கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே. 11
|
வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.10 திரு அண்ணாமலை
பண் - நட்டபாடை
97 |
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. |
1.10.1 |
98 |
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு
தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. |
1.10.2
|
99 |
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்
கழைமுத்தஞ்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே. |
1.10.3
|
100 |
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல
கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே. |
1.10.4
|
101 |
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள்
ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே. |
1.10.5
|
102 |
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல்
நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே. |
1.10.6
|
103 |
கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய
காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே. |
1.10.7
|
104 |
ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல்
பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே. |
1.10.8
|
105 |
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும்
வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே. |
1.10.9
|
106 |
வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல்
வாரும்
மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே. |
1.10.10
|
107 |
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி
சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே. |
1.10.11
|
இது நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,
தேவியார் - உண்ணாமுலையம்மை
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.11 திருவீழிமிழலை
பண் - நட்டபாடை
108 |
சடையார்புன லுடையானொரு சரிகோவண
முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே. |
1.11.1 |
109 |
ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண
மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே. |
1.11.2
|
110 |
வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு
துய்ய
உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்
மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்
விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே. |
1.11.3
|
111 |
பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி
ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே. |
1.11.4
|
112 |
ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே. |
1.11.5
|
113 |
கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென
வானோர்
எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே. |
1.11.6
|
114 |
கரத்தான்மலி சிரத்தான்கரி
யுரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா
வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி
விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே. |
1.11.7
|
115 |
முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட
கயிலை
தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்
பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த
மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே. |
1.11.8
|
116 |
பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை
வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில
வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே. |
1.11.9
|
117 |
மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண
மிலிகள்
இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே. |
1.11.10
|
118 |
வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை
விரைசேர்
காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
(*)ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே.
(*) ஊழின்வலி என்றும் பாடம். |
1.11.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்,
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.12 திருமுதுகுன்றம்
பண் - நட்டபாடை
119 |
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம்
உண்ட
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே. |
1.12.1 |
120 |
தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. |
1.12.2
|
121 |
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே
தனையொண்
டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே. |
1.12.3
|
122 |
சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை
வில்லா
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே. |
1.12.4
|
123 |
அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை
யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. |
1.12.5
|
124 |
ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில்
விசயற்
கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. |
1.12.6
|
125 |
தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை
(*)முடிய
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
முழவோடிசை (**)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.
(*) முடியர் என்றும் பாடம்.
(**) நடமுன் செயும் என்றும் பாடம். |
1.12.7
|
127 |
செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற
லரக்கன்
கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா (*)
முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.
(*) குறை யில்லா என்றும் பாடம். |
1.12.8
|
127 |
இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே. |
1.12.9
|
128 |
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. |
1.12.10
|
129 |
முகில்சேர்தரு முதுகுன்றுடை
யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே. |
1.12.11
|
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்;
தேவியார் - பெரியநாயகியம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.13 திருவியலூர்
பண் - நட்டபாடை
130 |
குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள்
வெருவ
பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே. |
1.13.1 |
131 |
ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை
யானான்
ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்
மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. |
1.13.2
|
132 |
செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை
தோறும்
பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்
விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே. |
1.13.3
|
133 |
அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்
மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே. |
1.13.4
|
134 |
எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு
கலையாய்ப்
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே. |
1.13.5
|
135 |
வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை
யறிவான்
திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே. |
1.13.6
|
136 |
மானார்அர வுடையான்இர வுடையான்பகல்
நட்டம்
ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. |
1.13.7
|
137 |
பொருவாரெனக் கெதிராரெனப்
பொருப்பையெடுத் தான்றன்
கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே. |
1.13.8
|
138 |
வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு
வகையால்
அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்
விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. |
1.13.9
|
139 |
தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர
மூடிப்
பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. |
1.13.10
|
140 |
விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய
லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்
விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே. |
1.13.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்;
தேவியார் - சவுந்தரநாயகியம்மை;
சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.14 திருக்கொடுங்குன்றம்
பண் - நட்டபாடை
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர்; கொடுங்குன்றீசர் என்றும் பாடம்.
தேவியார் - அமுதவல்லியம்மை; குயிலமுதநாயகி என்றும் பாடம்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.15 திருநெய்த்தானம்
பண் - நட்டபாடை
152 |
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. |
1.15.1 |
152 |
பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர்
அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே. |
1.15.2
|
154 |
பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. |
1.15.3
|
155 |
சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல்
ஏந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே. |
1.15.4
|
156 |
நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை
யுந்திப்
பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதன்கரை(*) நிகழ்வாயநெய்த் தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.
(*) தண்கரை என்றும் பாடம். |
1.15.5
|
157 |
விடையார்கொடி யுடையவ்வணல்
வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெய்த்(*) தானம்
அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே.
(*) சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம். |
1.15.6
|
158 |
நிழலார்வயல் கமழ்சோலைகள்
நிறைகின்றநெய்த் தானத்
தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய
கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே. |
1.15.7
|
159 |
அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி
லாயம்
இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே. |
1.15.8
|
160 |
கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை
யானும்
சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே. |
1.15.9
|
161 |
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர்
சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே. |
1.15.10
|
162 |
தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம்
பந்தன்
நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே. |
1.15.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்,
தேவியார் - வாலாம்பிகையம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை
பண் - நட்டபாடை
163 |
பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே. |
1.16.1 |
164 |
மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு
தன்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே. |
1.16.2
|
165 |
கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை
முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே. |
1.16.3
|
166 |
தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம்
மொய்த்தெம்
பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை
மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே. |
1.16.4
|
167 |
மெய்த்தன்னுறும் வினைதீர்வகை
தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே. |
1.16.5
|
168 |
மன்னானவன் உலகிற்கொரு மழையானவன்
பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே. |
1.16.6
|
169 |
முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி
சூடி
பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை
கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே. |
1.16.7
|
170 |
இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு
விரலால்
விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே. |
1.16.8
|
171 |
செறியார்தரு வெள்ளைத்திரு
நீற்றின்திரு முண்டப்
பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே. |
1.16.9
|
172 |
நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே. |
1.16.10
|
173 |
பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள
மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே. |
1.16.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதிநாயகர்,
தேவியார் - பால்வளைநாயகியம்மை.
பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.17 திருஇடும்பாவனம்
பண் - நட்டபாடை
174 |
மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள்
மலர்தூய்த்
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. |
1.17.1 |
175 |
மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ்
வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்
கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே. |
1.17.2
|
176 |
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும்
எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே. |
1.17.3
|
177 |
பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ்
போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. |
1.17.4
|
178 |
பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை
முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே. |
1.17.5
|
179 |
நெறிநீர்மையர் நீள்வானவர்
நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்
குறிநீர்மையர் (*)குணமார்தரு மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே.
(*) குளமார்தரும் என்றும் பாடம். |
1.17.6
|
180 |
நீறேறிய திருமேனியர் நிலவும்முல
கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. |
1.17.7
|
181 |
தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன்
மலையை
ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்
கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. |
1.17.8
|
182 |
பொருளார்தரு மறையோர்புகழ்
விருத்தர்பொலி மலிசீர்த்
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்
மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த
இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே. |
1.17.9
|
183 |
தடுக்கையுடன் இடுக்கித்தலை
பறித்துச்(*)சம ணடப்பர்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 10
(*) சமண்டப்பர் என்றும் பாடம். |
1.17.10
|
184 |
கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக்
கோல
இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே. |
1.17.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சற்குணநாதர்,
தேவியார் - மங்களநாயகியம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.18 திருநின்றியூர்
பண் - நட்டபாடை
185 |
*சூலம்படை சுண்ணப்பொடி **சாந்தஞ்சுடு
நீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.
(*) சூலப்படை என்றும் பாடம்.
(**) சாத்துஞ் சுடுநீறு என்றும் பாடம். |
1.18.1 |
186 |
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில
ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்*
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.
(*) நயந்தானா என்றும் பாடம். |
1.18.2
|
187 |
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு
மார
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே. |
1.18.3
|
188 |
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி
கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே. |
1.18.4
|
189 |
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில்
கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கையது *ஏந்தியன லாடுங்
கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.
(*) எய்தி என்றும் பாடம். |
1.18.5
|
190 |
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு
பாகம்
சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே. |
1.18.6
|
191 |
பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி
தேரும்
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே. |
1.18.7
|
|
* இப்பதிகத்தில் 8-ம் செய்யுள்
சிதைந்து போயிற்று. |
1.18.8
|
192 |
நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே. |
1.18.9
|
193 |
நெறியில்வரு பேராவகை நினையாநினை
வொன்றை
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே. |
1.18.10
|
194 |
குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே. |
1.18.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்,
தேவியார் - உலகநாயகியம்மை.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.19 திருக்கழுமலம் -
திருவிராகம்
பண் - நட்டபாடை
195 |
பிறையணி படர்சடை முடியிடைப்
பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவ
ளிணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழில்நிறை வயலணி
கழுமலம் அமர்கனல் உருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு
நலம்மலி கழல்தொழன் மருவுமே. |
1.19.1 |
196 |
பிணிபடு கடல்பிற விகளற
லெளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமலம் இனிதம
ரனலுரு வினனவிர் சடைமிசை
தணிபடு கதிர்வள ரிளமதி
புனைவனை உமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநல
மலிகழ லிணைதொழன் மருவுமே. |
1.19.2
|
197 |
வரியுறு புலியத ளுடையினன்
வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புழைபொழில்
விழவொலி மலிகழு மலம்அமர்
எரியுறு நிறஇறை வனதடி
இரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை
இருள்கெட நனிநினை வெய்துமதே. |
1.19.3
|
198 |
வினைகெட மனநினை வதுமுடி
கெனின்நனி தொழுதெழு குலமதி
புனைகொடி யிடைபொருள் தருபடு
களிறின துரிபுதை யுடலினன்
மனைகுட வயிறுடை யனசில
வருகுறள் படையுடை யவன்மலி
கனைகட லடைகழு மலமமர்
கதிர்மதி யினனதிர் கழல்களே. |
1.19.4
|
199 |
தலைமதி புனல்விட அரவிவை
தலைமைய தொருசடை யிடையுடன்
நிலைமரு வவொரிட மருளினன்
நிழன்மழு வினொடழல் கணையினன்
மலைமரு வியசிலை தனின்மதி
லெரியுண மனமரு வினன்நல
கலைமரு வியபுற வணிதரு
கழுமலம் இனிதமர் தலைவனே. |
1.19.5
|
200 |
வரைபொரு திழியரு விகள்பல
பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய
கழுமலம் அமர்கன லுருவினன்
அரைபொரு புலியதள் உடையினன்
அடியிணை தொழவரு வினையெனும்
உரைபொடி படவுறு துயர்கெட
வுயருல கெய்தலொரு தலைமையே. |
1.19.6
|
201 |
முதிருறு கதிர்வளர் இளமதி
சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை
யுடைபுலி அதளிடை யிருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய
கழுமலம் அமர்மழு மலிபடை
அதிருறு கழலடி களதடி
தொழுமறி வலதறி வறியமே. |
1.19.7
|
202 |
கடலென நிறநெடு முடியவ
னடுதிறல் தெறஅடி சரணென
அடல்நிறை படையரு ளியபுக
ழரவரை யினன்அணி கிளர்பிறை
விடம்நிறை மிடறுடை யவன்விரி
சடையவன் விடையுடை யவனுமை
உடனுறை பதிகடல் மறுகுடை
யுயர்கழு மலவியன் நகரதே. |
1.19.8
|
203 |
கொழுமல ருறைபதி யுடையவன்
நெடியவ னெனவிவர் களுமவன்
விழுமையை யளவறி கிலரிறை
விரைபுணர் பொழிலணி விழவமர்
கழுமலம் அமர்கன லுருவினன்
அடியிணை தொழுமவ ரருவினை
எழுமையு மிலநில வகைதனி
லெளிதிமை யவர்விய னுலகமே. |
1.19.9
|
204 |
அமைவன துவரிழு கியதுகி
லணியுடை யினர்அமண் உருவர்கள்
சமையமும் ஒருபொரு ளெனுமவை
சலநெறி யனஅற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமம
ரிறைவன தடிபர வுவர்தமை
நமையல வினைநல னடைதலி
லுயர்நெறி நனிநணு குவர்களே. |
1.19.10
|
205 |
பெருகிய தமிழ்விர கினன்மலி
பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை
கழுமல முறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய
பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி
யுடையவர் விதியுடை யவர்களே. |
1.19.11
|
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.20 திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - நட்டபாடை
206 |
தடநில வியமலை நிறுவியொர்
தழலுமிழ் தருபட அரவுகொ
டடல்அசு ரரொடம ரர்கள்அலை
கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன்
விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர்
மறையவர் நிறைதிரு மிழலையே. |
1.20.1 |
207 |
தரையொடு திவிதல நலிதரு
தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு
திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி
பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு
பெறுதிடர் வளர்திரு மிழலையே. |
1.20.2
|
208 |
மலைமகள் தனையிகழ் வதுசெய்த
மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம்
அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர்
களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதில்புடை தழுவிய
திகழ்பொழில் வளர்திரு மிழலையே. |
1.20.3
|
209 |
மருவலர் புரமெரி யினின்மடி
தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு
கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட
விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி
மலிதர வளர்திரு மிழலையே. |
1.20.4
|
210 |
அணிபெறு வடமர நிழலினி
லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு
மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில
மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக
ரறுபத முரல்திரு மிழலையே. |
1.20.5
|
211 |
வசையறு வலிவன சரவுரு
வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி
வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரு
மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி
பொழின்மலி தருதிரு மிழலையே. |
1.20.6
|
212 |
நலமலி தருமறை மொழியொடு
நதியுறு புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன்
மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர்
கெடவுதை செய்தவர னுறைபதி
(*)திலகமி தெனவுல குகள்புகழ்
தருபொழி லணிதிரு மிழலையே.
(*) திலதமிதென என்றும் பாடம். |
1.20.7
|
213 |
அரனுறை தருகயி லையைநிலை
குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல்
நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர்
வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு
சிவனுறை பதிதிரு மிழலையே. |
1.20.8
|
214 |
அயனொடும் எழிலமர் மலர்மகள்
மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர்
படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய
வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது
தவழ்தர வுயர்திரு மிழலையே. |
1.20.9
|
215 |
இகழுரு வொடுபறி தலைகொடு
மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர்
கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன
லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர்
செறிவொடு திகழ்திரு மிழலையே. |
1.20.10
|
216 |
சினமலி கரியுரி செய்தசிவ
னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை
தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின்
மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர
இருநில னிடையினி தமர்வரே. |
1.20.11
|
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்
பண் - நட்டபாடை
217 |
புவம்வளி கனல்புனல் புவி(*)கலை
யுரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர்
திகழ்தரும் உயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு
பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிலை பெறுவரே. 01
(*) கலைபுரை என்றும் பாடம். |
1.21.1 |
218 |
மலைபல வளர்தரு புவியிடை
மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள்
நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர்
அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை
பவர்திரு மகளொடு திகழ்வரே. |
1.21.2
|
219 |
பழுதில கடல்புடை தழுவிய
படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்
குலம்மலி தருமுயி ரவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு
*முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர்
தொழுமவர் புகழ்மிகு முலகிலே.
(*) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம். |
1.21.3
|
220 |
நறைமலி தருமள றொடுமுகை
நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு
நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதமணை தரஅருள்
குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது
நினைபவர் செயமகள் தலைவரே. |
1.21.4
|
221 |
சினமலி யறுபகை மிகுபொறி
சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு
தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை
தகுபர னுறைவது நகர்மதில்
கனமரு வியசிவ புரம்நினை
பவர்கலை மகள்தர நிகழ்வரே. |
1.21.5
|
222 |
சுருதிகள் பலநல முதல்கலை
துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர
வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி
யடைவகை நினையர னுறைபதி
திருவளர் சிவபுரம் நினைபவர்
திகழ்குலன் நிலனிடை நிகழுமே. |
1.21.6
|
223 |
கதமிகு கருவுரு வொடு*வுகி
ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை
மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய
எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுரம்
நினைபவர் நிலவுவர் படியிலே.
(*) உகிரிடவட என்றும் படம். |
1.21.7
|
224 |
அசைவுறு தவமுயல் வினிலயன்
அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை
இருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு
விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிகழ் வுடையரே. |
1.21.8
|
225 |
அடல்மலி படையரி அயனொடும்
அறிவரி யதொரழல் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர்
வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண
துடையுரு வெளிபடு மவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுரம்
நினைபவர் வழிபுவி திகழுமே. |
1.21.9
|
226 |
குணமறி வுகள்நிலை யிலபொரு
ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி
மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர
னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை
பவரெழி லுருவுடை யவர்களே. |
1.21.10
|
227 |
திகழ்சிவ புரநகர் மருவிய
சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை
நலமலி யொருபதும் நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு
நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின்
மிகைபுணர் தரநலம் மிகுவரே. |
1.21.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.22 திருமறைக்காடு - திருவிராகம்
பண் - நட்டபாடை
228 |
சிலைதனை நடுவிடை நிறுவியொர்
சினமலி அரவது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி
சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ அவருடல்
குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய
மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.1 |
229 |
கரமுத லியஅவ யவமவை
கடுவிட அரவது கொடுவரு
வரல்முறை அணிதரு மவனடல்
வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை
இமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில்
மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.2
|
230 |
இழைவளர் தருமுலை மலைமக
ளினிதுறை தருமெழி லுருவினன்
முழையினின் மிகுதுயி லுறுமரி
முசிவொடும் எழமுள ரியொடெழு
கழைநுகர் தருகரி யிரிதரு
கயிலையின் மலிபவ னிருளுறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய
மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.3
|
231 |
நலமிகு திருவித ழியின்மலர்
நகுதலை யொடுகன கியின்முகை
பலசுர நதிபட அரவொடு
மதிபொதி சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு
தவமுயல் தருமுனி வர்கள்தம
மலமறு வகைமனம் நினைதரு
மறைவன மமர்தரு பரமனே. |
1.22.4
|
232 |
கதிமலி களிறது பிளிறிட
வுரிசெய்த அதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி
பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி
கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர்
மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.5
|
233 |
கறைமலி திரிசிகை படையடல்
கனல்மழு வெழுதர வெறிமறி
முறைமுறை யொலிதம ருகமுடை
தலைமுகிழ் மலிகணி வடமுகம்
உறைதரு கரனுல கினிலுய
ரொளிபெறு வகைநினை வொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடு
மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.6
|
234 |
இருநில னதுபுன லிடைமடி
தரஎரி புகஎரி யதுமிகு
பெருவளி யினிலவி தரவளி
கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி
யெழிலுரு வுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல்
மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.7
|
235 |
சனம்வெரு வுறவரு தசமுக
னொருபது முடியொடு மிருபது
கனமரு வியபுயம் நெரிவகை
கழலடி யிலொர்விரல் நிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ்
வுறவருள் செய்தகரு ணையனென
மனமகிழ் வொடுமறை முறையுணர்
மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.8
|
236 |
அணிமலர் மகள்தலை மகனயன்
அறிவரி யதொர்பரி சினிலெரி
திணிதரு திரளுரு வளர்தர
அவர்வெரு வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுரு வியபர
னவனுரை மலிகடல் திரளெழும்
மணிவள ரொளிவெயில் மிகுதரு
மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.9
|
237 |
இயல்வழி தரவிது செலவுற
இனமயி லிறகுறு தழையொடு
செயல்மரு வியசிறு கடமுடி
யடைகையர் தலைபறி செய்துதவம்
முயல்பவர் துவர்படம் உடல்பொதி
பவரறி வருபர னவனணி
வயலினில் வளைவளம் மருவிய
மறைவனம் அமர்தரு பரமனே. |
1.22.10
|
238 |
வசையறு மலர்மகள் நிலவிய
மறைவனம் அமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில்
புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை
தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல
அவருல கினிலெழில் பெறுவரே. |
1.22.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மறைக்காட்டீசுரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
|
|
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.23 திருக்கோலக்கா
பண் - தக்கராகம்
239 |
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. |
1.23.1 |
240 |
பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே. |
1.23.2
|
241 |
பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே. |
1.23.3
|
242 |
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே. |
1.23.4
|
243 |
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே. |
1.23.5
|
244 |
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. |
1.23.6
|
245 |
நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதங் கைகளாற்
தொழலார் பக்கல் துயர மில்லையே. |
1.23.7
|
246 |
எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோலக் காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. |
1.23.8
|
247 |
நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே. |
1.23.9
|
248 |
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாளருங்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே. |
1.23.10
|
249 |
நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே. |
1.23.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.24 சீகாழி
பண் - தக்கராகம்
250 |
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம்
பாவா ரின்சொற் பயிலும் பரமரே. |
1.24.1 |
251 |
எந்தை யென்றங் கிமையோர்
புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே. |
1.24.2
|
252 |
தேனை வென்ற மொழியா ளொருபாகங்
கான மான்கைக் கொண்ட காழியார்
வான மோங்கு கோயி லவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே. |
1.24.3
|
253 |
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக் களித்த காழியார்
நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே. |
1.24.4
|
254 |
மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்
காடே றிச்சங் கீனுங் காழியார்
வாடா மலராள் பங்க ரவர்போலாம்
ஏடார் புரமூன் றெரித்த இறைவரே. |
1.24.5
|
255 |
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ்
செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே. |
1.24.6
|
256 |
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே. |
1.24.7
|
257 |
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே. |
1.24.8
|
258 |
ஆற்ற லுடைய அரியும் பிரமனுந்
தோற்றங் காணா வென்றிக் காழியார்
ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்
கூற்ற மறுகக் குமைத்த குழகரே. |
1.24.9
|
259 |
பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே. |
1.24.10
|
260 |
காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத் தினிதா இருப்பரே. |
1.24.11
|
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.25 திருச்செம்பொன்பள்ளி
பண் - தக்கராகம்
261 |
மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத் தீசன் கழல்களை
மருவா தவர்மேல் மன்னும் பாவமே. |
1.25.1 |
262 |
வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்
சேரா தவர்மேற் சேரும் வினைகளே. |
1.25.2
|
263 |
வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடையொன் றூரும் நம்பனை
உரையா தவர்மே லொழியா வூனமே. |
1.25.3
|
264 |
மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்
தொழுவார் தம்மேல் துயர மில்லையே. |
1.25.4
|
265 |
மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே. |
1.25.5
|
266 |
அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்டத் தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே. |
1.25.6
|
267 |
பையார் அரவே ரல்கு லாளொடுஞ்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே. |
1.25.7
|
268 |
வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே. |
1.25.8
|
269 |
காரார் வண்ணன் கனகம் அனையானுந்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை
ஓரா தவர்மே லொழியா வூனமே. |
1.25.9
|
270 |
மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே. |
1.25.10
|
271 |
நறவார் புகலி ஞான சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. |
1.25.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.26 திருப்புத்தூர்
பண் - தக்கராகம்
272 |
வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே. |
1.26.1 |
273 |
வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
ஏன முள்ளும் எயிறும் புனைவாரே. |
1.26.2
|
274 |
பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. |
1.26.3
|
275 |
நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. |
1.26.4
|
276 |
இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்
திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசை விளங்கப் படித்தா ரவர்போலும்
வசை விளங்கும் வடிசேர் நுதலாரே. |
1.26.5
|
277 |
வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. |
1.26.6
|
278 |
நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே. |
1.26.7
|
279 |
கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்
திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே. |
1.26.8
|
280 |
மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமா னவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே. |
1.26.9
|
281 |
கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. |
1.26.10
|
282 |
நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே. |
1.26.11
|
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புத்தூரீசர், தேவியார் - சிவகாமியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.27 திருப்புன்கூர்
பண் - தக்கராகம்
283 |
முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிக ளவர்போலுங்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே. |
1.27.1 |
284 |
மூவ ராய முதல்வர் முறையாலே
தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
ஆவ ரென்னும் அடிக ளவர்போலும்
ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே. |
1.27.2
|
285 |
பங்க யங்கள் மலரும் பழனத்துச்
செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையா ரவர்போலும்
எங்கள் உச்சி உறையும் மிறையாரே. |
1.27.3
|
286 |
கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமா னவர்போலும்
விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே. |
1.27.4
|
287 |
பவழ வண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர்
அழக ரென்னும் அடிக ளவர்போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே. |
1.27.5
|
288 |
தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிக ளவர்போலும்
விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. |
1.27.6
|
289 |
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆர நின்ற அடிக ளவர்போலுங்
கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே. |
1.27.7
|
290 |
மலையத னாருடை யமதில் மூன்றுஞ்
சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த்
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே. |
1.27.8
|
291 |
நாட வல்ல மலரான் மாலுமாய்த்
தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்
ஆட வல்ல அடிக ளவர்போலும்
பாட லாடல் பயிலும் பரமரே. |
1.27.9
|
292 |
குண்டு முற்றிக் கூறை யின்றியே
பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே. |
1.27.10
|
293 |
மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே. |
1.27.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.28 திருச்சோற்றுத்துறை
பண் - தக்கராகம்
294 |
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. |
1.28.1 |
295 |
பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. |
1.28.2
|
296 |
செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாக மாயஎம்
ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. |
1.28.3
|
297 |
பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. |
1.28.4
|
298 |
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே. |
1.28.5
|
299 |
துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. |
1.28.6
|
300 |
சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடி ஆடிப் பரவு வாருள்ளத்
தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. |
1.28.7
|
301 |
பெண்ணோர் பாகம் உடையார்
பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. |
1.28.8
|
302 |
தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. |
1.28.9
|
303 |
(*)கோது சாற்றித் திரிவார்
அமண்குண்டர்
ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.
(*) போதுசாற்றி என்றும் பாடம். |
1.28.10
|
304 |
அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே. |
1.28.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் - தக்கராகம்
305 |
ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
சீரு லாவு மறையோர் நறையூரிற்
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. |
1.29.1 |
306 |
காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
வீடு மாக மறையோர் நறையூரில்
நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே. |
1.29.2
|
307 |
கல்வி யாளர் கனக மழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்
செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. |
1.29.3
|
308 |
நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல அடிக ளிடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரிற்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. |
1.29.4
|
309 |
உம்ப ராலும் உலகின் னவராலும்
தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
நண்பு லாவு மறையோர் நறையூரிற்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. |
1.29.5
|
310 |
கூரு லாவு படையான் விடையேறிப்
போரு லாவு மழுவான் அனலாடி
பேரு லாவு பெருமான் நறையூரிற்
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே. |
1.29.6
|
311 |
*அன்றி நின்ற அவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரிற்
சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
(*) அன்றி நின்ற - பகைத்து நின்ற |
1.29.7
|
312 |
அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. |
1.29.8
|
313 |
ஆழி யானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. |
1.29.9
|
314 |
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே. |
1.29.10
|
315 |
மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்
சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே. |
1.29.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சித்தநாதேசர், தேவியார் - அழகாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.30 திருப்புகலி
பண் - தக்கராகம்
316 |
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே. |
1.30.1 |
317 |
ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்
மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந்
தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த
பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே. |
1.30.2
|
318 |
வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்
புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன்
மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப்
பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே. |
1.30.3
|
319 |
கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி
அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்
இயலாலுறை யும்மிடம் எண்டிசை யோர்க்கும்
புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே. |
1.30.4
|
320 |
காதார்கன பொற்குழை தோட திலங்கத்
தாதார்மலர் தண்சடை யேற முடித்து
(*)நாதான்உறை யும்மிட மாவது நாளும்
போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே.
(*) நாதன் - நாதான் என நீண்டது. |
1.30.5
|
321 |
வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன்
கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்
குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்
புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே. |
1.30.6
|
322 |
கறுத்தான்கன லால்மதில் மூன்றையும்
வேவச்
செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக
அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்
பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே. |
1.30.7
|
323 |
தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ்
சொல்ல
எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற
கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி
பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே. |
1.30.8
|
324 |
மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்
தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி
நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்
பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. |
1.30.9
|
325 |
உடையார்துகில் போர்த்துழல் வார்சமண்
கையர்
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் றன்னகர் நன்மலி பூகம்
புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே. |
1.30.10
|
326 |
இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம்
மான்றன்
புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல்
உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை
வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே. |
1.30.11
|
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.31 திருக்குரங்கணின்முட்டம்
பண் - தக்கராகம்
327 |
விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்
கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்
கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந்
தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே. |
1.31.1 |
328 |
விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக்
கடைசேர்கரு மென்குளத் தோங்கிய காட்டில்
குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம்
உடையானெனை யாளுடை யெந்தை பிரானே. |
1.31.2
|
329 |
சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்
காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத்
தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே. |
1.31.3
|
330 |
வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்
தோடார்குழை யான்நல பாலன நோக்கிக்
கூடாதன செய்த குரங்கணின் முட்டம்
ஆடாவரு வாரவ ரன்புடை யாரே. |
1.31.4
|
331 |
இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக்
கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்
குறையார்மதி சூடி குரங்கணின் முட்டத்
துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே. |
1.31.5
|
332 |
பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங்
கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்
குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம்
நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே. |
1.31.6
|
333 |
மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்
தோடார்குழை தானொரு காதில் இலங்கக்
கூடார்மதி லெய்து குரங்கணின் முட்டத்
தாடாரர வம்மரை யார்த்தமர் வானே. |
1.31.7
|
334 |
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே. |
1.31.8
|
335 |
வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே. |
1.31.9
|
336 |
கழுவார்துவ ராடை கலந்துமெய்
போர்க்கும்
வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்
குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்டத்
தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே. |
1.31.10
|
337 |
கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்
கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ்
சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக
வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே. |
1.31.11
|
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாலீசுவரர், தேவியார் - இறையார்வளையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.32 திருவிடைமருதூர்
பண் - தக்கராகம்
338 |
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்
தீடாவுறை கின்ற இடைமரு தீதோ. |
1.32.1 |
339 |
தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி
தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ. |
1.32.2
|
340 |
வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்
எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ. |
1.32.3
|
341 |
அந்தம்மறி யாத அருங்கல முந்திக்
கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்
வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்
எந்தையுறை கின்ற இடைமரு தீதோ. |
1.32.4
|
342 |
வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்
பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
ஈசனுறை கின்ற இடைமரு தீதோ. |
1.32.5
|
343 |
வன்புற்றிள நாகம் அசைத் தழகாக
என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய்
இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ. |
1.32.6
|
344 |
தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந்
துந்திப்
போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ. |
1.32.7
|
345 |
பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப
ஓவாதடி யாரடி யுள்குளிர்ந் தேத்த
ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த
ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ. |
1.32.8
|
346 |
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்
பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக
எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ. |
1.32.9
|
347 |
சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
எறியார்மழு வாளன் இடைமரு தீதோ. |
1.32.10
|
348 |
கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே. |
1.32.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.33 திரு அன்பிலாலந்துறை
பண் - தக்கராகம்
349 |
கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம்
அணையும்பொழி லன்பி லாலந் துறையாரே. |
1.33.1 |
350 |
சடையார்சது ரன்முதி ராமதி சூடி
விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன்
கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை
அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே. |
1.33.2
|
352 |
ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்
பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்
நீருண்கய லும்வயல் வாளை வராலோ
டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே. |
1.33.3
|
353 |
பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே. |
1.33.4
|
354 |
நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்
கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்
மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்
ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே. |
1.33.5
|
355 |
நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான்
வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே. |
1.33.6
|
356 |
செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட
படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்
கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்
அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே. |
1.33.7
|
357 |
விடத்தார் திகழும்மிட றன்நட மாடி
படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி
கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார
அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே. |
1.33.8
|
358 |
வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்
பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை
சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்
அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே. |
1.33.9
|
359 |
தறியார்துகில் போர்த்துழல் வார்சமண்
கையர்
நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை
அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே. |
1.33.10
|
360 |
அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்
பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்
விரவாகுவர் வானிடை வீடெளி தாமே. |
1.33.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
அன்பில் என வழங்கப்பெறும்.
சுவாமிபெயர் - சத்திவாகீசர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.34 சீகாழி
பண் - தக்கராகம்
360 |
அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே. |
1.34.1 |
361 |
திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே. |
1.34.2
|
362 |
இடியார் குரலே றுடையெந்தை
துடியா ரிடையா ளொடுதுன்னுங்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே. |
1.34.3
|
363 |
ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழல்மங் கையொடன்பாய்
களியார் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண் டவரின்பே. |
1.34.4
|
364 |
பனியார் மலரார் தருபாதன்
முனிதா னுமையோ டுமுயங்கி
கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதாம் அதுகண் டவரீடே. |
1.34.5
|
365 |
கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையால் தொழுவார் தலையாரே. |
1.34.6
|
366 |
திருவார் சிலையால் எயிலெய்து
உருவார் உமையோ டுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே. |
1.34.7
|
367 |
அரக்கன் வலியொல் கஅடர்த்து
வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. |
1.34.8
|
368 |
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே. |
1.34.9
|
369 |
சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோ டுடனன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. |
1.34.10
|
370 |
நலமா கியஞான சம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வான் அடைவாரே. |
1.34.11
|
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.35 திருவீழிமிழலை
பண் - தக்கராகம்
371 |
அரையார் விரிகோ வணஆடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே. |
1.35.1 |
372 |
புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே. |
1.35.2
|
373 |
அழவல் லவரா டியும்பாடி
எழவல் லவரெந் தையடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
தொழவல் லவர்நல் லவர்தொண்டே. |
1.35.3
|
374 |
உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் மரையார்த் தஅழகன்
விரவும் பொழில்வீ ழிம்மிழலை
பரவும் மடியார் அடியாரே. |
1.35.4
|
375 |
கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண் டறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே. |
1.35.5
|
376 |
சடையார் பிறையான் சரிபூதப்
படையான் கொடிமே லதொர்பைங்கண்
விடையான் உறைவீ ழிம்மிழலை
அடைவார் அடியார் அவர்தாமே. |
1.35.6
|
377 |
செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
நெறியார் குழலா ளொடுநின்றான்
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே. |
1.35.7
|
378 |
உளையா வலியொல் கஅரக்கன்
வளையா விரலூன் றியமைந்தன்
விளையார் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவா ரடியாரே. |
1.35.8
|
379 |
மருள்செய் திருவர் மயலாக
அருள்செய் தவனார் அழலாகி
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. |
1.35.9
|
380 |
துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே. |
1.35.10
|
381 |
நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்
குளிரார் சடையான் அடிகூற
மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே. |
1.35.11
|
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.36 திரு ஐயாறு
பண் - தக்கராகம்
382 |
கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே. |
1.36.1 |
383 |
மதியொன் றியகொன் றைவடத்தன்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே. |
1.36.2
|
384 |
கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகுந்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே. |
1.36.3
|
385 |
சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே. |
1.36.4
|
386 |
உமையா ளொருபா கமதாகச்
சமைவார் அவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே. |
1.36.5
|
387 |
தலையின் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே. |
1.36.6
|
388 |
வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே. |
1.36.7
|
389 |
வரையொன் றதெடுத் தஅரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே. |
1.36.8
|
390 |
(*)சங்கக் கயனும் மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே.
(*) சங்கத்தயனும் என்றும் பாடம். |
1.36.9
|
391 |
துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே. |
1.36.10
|
392 |
கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞான சம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே. |
1.36.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.37 திருப்பனையூர்
பண் - தக்கராகம்
393 |
அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே. |
1.37.1 |
394 |
எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே. |
1.37.2
|
395 |
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்
சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே. |
1.37.3
|
396 |
இடியார் கடல்நஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானூர்
அடியார் தொழமன் னவரேத்தப்
படியார் பணியும் பனையூரே. |
1.37.4
|
397 |
அறையார் கழல்மே லரவாட
இறையார் பலிதேர்ந் தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனையூரே. |
1.37.5
|
398 |
அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே. |
1.37.6
|
399 |
அடையா தவர்மூ வெயில்சீறும்
விடையான் விறலார் கரியின்தோல்
(*)உடையா னவனெண் பலபூதப்
படையா னவனூர் பனையூரே.
(*) உடையா னவனொண் பலபூத என்றும் பாடம். |
1.37.7
|
400 |
இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே. |
1.37.8
|
401 |
வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே. |
1.37.9
|
402 |
*அழிவல் லமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே.
(*) அழிவில் லமணஃ தொடுதேரர் என்றும் பாடம். |
1.37.10
|
403 |
பாரார் *விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே.
(*) விடையார் என்றும் பாடம். |
1.37.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.38 திருமயிலாடுதுறை
பண் - தக்கராகம்
404 |
கரவின் றிநன்மா மலர்கொண்டே
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே. |
1.38.1 |
405 |
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே. |
1.38.2
|
406 |
ஊனத் திருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண் டடிபேணுந்
தேனொத் தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே. |
1.38.3
|
407 |
அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்
துஞ்சும் பிணியா யினதானே. |
1.38.4
|
408 |
(*)தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே.
(*) கணியார் என்றும் பாடம். |
1.38.5
|
409 |
தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே. |
1.38.6
|
410 |
அணங்கோ டொருபா கமமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே. |
1.38.7
|
411 |
சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலா டுதுறையே. |
1.38.8
|
412 |
ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங்
கோலத் தயனும் மறியாத
சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே. |
1.38.9
|
413 |
நின்றுண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே. |
1.38.10
|
414 |
நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே. |
1.38.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.39 திருவேட்களம்
பண் - தக்கராகம்
415 |
அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்
ஆரழ லங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப
மலைமகள் காண நின்றாடிச்
சந்த மிலங்கு நகுதலை கங்கை
தண்மதியம் மயலே ததும்ப
வெந்தவெண் ணீறு மெய்பூசும்
வேட்கள நன்னக ராரே. |
1.39.1 |
415 |
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச்
சங்கவெண் டோ டு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ் சூழப்
போதரு மாறிவர் போல்வார்
உடைதனில் நால்விரற் கோவண ஆடை
உண்பது மூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார்
வேட்கள நன்னக ராரே. |
1.39.2
|
416 |
பூதமும் பல்கண மும்புடை சூழப்
பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
சீதமும் வெம்மையு மாகிச்
சீரொடு நின்றவெஞ் செல்வர்
ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை
உள்ளங் கலந்திசை யாலெழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா
வேட்கள நன்னக ராரே. |
1.39.3
|
418 |
அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்
அமையவெண் கோவணத் தோடசைத்து
வரைபுல்கு மார்பி லோராமை
வாங்கி யணிந் தவர்தாந்
திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்
தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
வேட்கள நன்னக ராரே. |
1.39.4
|
419 |
பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்
பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார்
மும்மதில் எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட்
கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல்
வேட்கள நன்னக ராரே. |
1.39.5
|
420 |
கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்
கண்கவ ரைங்கணை யோனுடலம்
பொறிவளர் ஆரழ லுண்ணப்
பொங்கிய பூத புராணர்
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்
மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
வெறிவளர் கொன்றையந் தாரார்
வேட்கள நன்னக ராரே. |
1.39.6
|
421 |
மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை
மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி
நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்
காலனைக் காலாற் கடிந்துகந்தார்
வெண்பொடிச் சேர்திரு மார்பர்
வேட்கள நன்னக ராரே. |
1.39.7
|
422 |
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்
அமுத மமரர்க் கருளி
சூழ்தரு பாம்பரை யார்த்துச்
சூலமோ டொண்மழு வேந்தித்
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்
தண்மதி யம்மய லேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார்
வேட்கள நன்னக ராரே. |
1.39.8
|
423 |
திருவொளி காணிய பேதுறு கின்ற
திசைமுக னுந்திசை மேலளந்த
கருவரை யேந்திய மாலுங்
கைதொழ நின்றது மல்லால்
அருவரை யொல்க எடுத்த வரக்கன்
ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த
வெருவுற வூன்றிய பெம்மான்
வேட்கள நன்னக ராரே. |
1.39.9
|
424 |
அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர்
யாதுமல் லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவ தல்லால்
புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
மூரிவல் லானையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர்
வேட்கள நன்னக ராரே. |
1.39.10
|
425 |
விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி
வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
நண்ணிய சீர்வளர் காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து
பேணிய வேட்கள மேல்மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள்
பழியொடு பாவமி லாரே. |
1.39.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.40 திருவாழ்கொளிபுத்தூர் (*)
பண் - தக்கராகம்
(*) திருவாளொளிபுற்றூர் என்றும் பாடம்.
426 |
பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்
பூதகணம் புடை சூழக்
கொடியுடை யூர்திரிந் தையங்
கொண்டு பலபல கூறி
வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமல ரிட்டுக்
கறைமிடற் றானடி காண்போம். |
1.40.1 |
427 |
அரைகெழு கோவண ஆடையின் மேலோர்
ஆடரவம் அசைத் தையம்
புரைகெழு வெண்டலை யேந்திப்
போர்விடை யேறிப் புகழ
வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகெழு மாமலர் தூவி
விரிசடை யானடி சேர்வோம். |
1.40.2
|
428 |
பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்
புன்றலை யங்கையி லேந்தி
ஊணிடு பிச்சையூ ரையம்
உண்டி யென்று பலகூறி
வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
தாணெடு மாமல ரிட்டுத்
தலைவன தாள்நிழல் சார்வோம். |
1.40.3
|
429 |
தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சை கொள்செல்வம்
உண்டி யென்று பலகூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர் தூவி
கறைமிடற் றானடி காண்போம். |
1.40.4
|
430 |
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
காதிலொர் வெண்குழை யோடு
புனமலர் மாலை புனைந்தூர்
புகுதி யென்றே பலகூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமல ரேய்ந்தன தூவி
எம்பெரு மானடி சேர்வோம். |
1.40.5
|
431 |
431
அளைவளர் நாகம் அசைத்தன லாடி
அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யிற்பலி கொள்ளுங்
கருத்தனே கள்வனே யென்னா
(*)வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தளையவிழ் மாமலர் தூவித்
தலைவன தாளிணை சார்வோம்.
(*) வளையொலி என்றும் பாடம். |
1.40.6
|
432 |
அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
வழிதலை யங்கையி லேந்தி
உடலிடு பிச்சை யோடைய
முண்டி யென்று பலகூறி
மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமல ராயின தூவி
தலைவன தாள்நிழல் சார்வோம். |
1.40.7
|
433 |
உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்
ஒளிர்கட கக்கை யடர்த்து
அயலிடு பிச்சை யோடையம்
ஆர்தலை யென்றடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவி
தாழ்சடை யானடி சார்வோம். |
1.40.8
|
434 |
கரியவன் நான்முகன் கைதொழு தேத்த
காணலுஞ் சாரலு மாகா
எரியுரு வாகி யூரையம்
இடுபலி யுண்ணி யென்றேத்தி
வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயின தூவி
விகிர்தன சேவடி சேர்வோம். |
1.40.9
|
435 |
குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில்
கொள்கை யினார் புறங்கூற
வெண்டலை யிற்பலி கொண்டல்
விரும்பினை யென்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத்
தோன்றி நின்றான் அடிசேர்வோம். |
1.40.10
|
436 |
கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார்
துயர்கெடு தல்எளி தாமே. |
1.40.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுரர், தேவியார் - வண்டார்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.41 திருப்பாம்புரம்
பண் - தக்கராகம்
437 |
சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னக ராரே. |
1.41.1 |
438 |
கொக்கிற கோடு கூவிள மத்தங்
கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக
அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே. |
1.41.2
|
439 |
துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
பித்தராய்த் திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே. |
1.41.3
|
440 |
துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்
சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்
நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட
மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
பாம்புர நன்னக ராரே. |
1.41.4
|
441 |
நதியத னயலே நகுதலை மாலை
நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக்
கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி
செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே. |
1.41.5
|
442 |
ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்
ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல்
மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய
அலைகடல் கடையவன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர்
பாம்புர நன்னக ராரே. |
1.41.6
|
443 |
மாலினுக் கன்று சக்கர மீந்து
மலரவற் கொருமுக மொழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி
அனலது ஆடுமெம் மடிகள்
காலனைக் காய்ந்து தங்கழ லடியாற்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள்
பாம்புர நன்னக ராரே. |
1.41.7
|
444 |
விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்
அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட
வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நன்னக ராரே. |
1.41.8
|
445 |
கடிபடு கமலத் தயனொடு மாலுங்
காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடையமரர் முனிகணத் தவர்கள்
முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே. |
1.41.9
|
446 |
குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
கையர்தாம் உள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னக ராரே. |
1.41.10
|
447 |
பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்
சிவனடி நண்ணுவர் தாமே. |
1.41.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாம்புரேசர்,
பாம்புரநாதர் என்றும் பாடம். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை,
வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.42 திருப்பேணுபெருந்துறை
பண் - தக்கராகம்
448 |
பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை
பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய அந்தளிர் மேனி
அரிவையோர் பாக மமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
பேணு பெருந்துறை யாரே. |
1.42.1 |
449 |
மூவரு மாகி இருவரு மாகி
முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி
பல்கணம் நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு
தண்மதில் மூன்று மெரித்த
தேவர்கள் தேவர் எம்பெரு மானார்
தீதில் பெருந்துறை யாரே. |
1.42.2
|
450 |
செய்பூங் கொன்றை கூவிள மாலை
சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகங்
கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை
காய்குலை யிற்கமு கீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
பில்கு பெருந்துறை யாரே. |
1.42.3
|
451 |
நிலனொடு வானும் நீரொடு தீயும்
வாயுவு மாகியோ ரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்குந் தானல தின்றி
நன்கெழு சிந்தைய ராகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும்
மல்கு பெருந்துறை யாரே. |
1.42.4
|
452 |
பணிவா யுள்ள நன்கெழு நாவின்
பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ள மிலாத
சுமடர்கள் சோதிப் பரியார்
அணியார் நீல மாகிய கண்டர்
அரிசி லுரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
மல்கு பெருந்துறை யாரே. |
1.42.5
|
453 |
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ
ஏவலங் காட்டிய எந்தை
விண்ணோர் சாரத் தன்னருள் செய்த
வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாடல் ஆடல றாத
பசுபதி ஈசனோர் பாகம்
பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
பேணு பெருந்துறை யாரே. |
1.42.6
|
454 |
விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
வினைகெட வேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்
பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
தண்(*)அரி சில்புடை சூழ்ந்த
குழையார் சோலை மென்னடை யன்னங்
கூடு பெருந்துறை யாரே.
(*) அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால்
அரிசொல் நதியென்று கும்பகோணப் புராணத்திற் சொல்லப்படுகின்றது. |
1.42.7
|
455 |
பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
பொருகடல் வேலி இலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி
மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி
அணவு பெருந்துறை யாரே. |
1.42.8
|
456 |
புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானும்
உணர்வரி யான்உமை கேள்வன்
முள்வாய் தாளில் தாமரை மொட்டின்
முகம்மல ரக்கயல் பாயக்
கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங்
காமர் பெருந்துறை யாரே. |
1.42.9
|
457 |
குண்டுந் தேருங் கூறை களைந்துங்
கூப்பிலர் செப்பில ராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
மல்கு பெருந்துறை யாரே. |
1.42.10
|
458 |
கடையார் மாடம் நன்கெழு வீதிக்
கழுமல வூரன் கலந்து
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
நல்ல பெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம்
பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமு மொன்றி
உலகினில் மன்னுவர் தாமே. |
1.42.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவாநந்தநாதர், தேவியார் - மலையரசியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.43 திருக்கற்குடி
பண் - தக்கராகம்
459 |
வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக
மதித்துத்
தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. |
1.43.1 |
460 |
அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை
நான்கும்
பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்
சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே. |
1.43.2
|
461 |
நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும்
வைத்துத்
தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்
காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே. |
1.43.3
|
462 |
ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல
மிடக்கண்
டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர்
மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக்
கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே. |
1.43.4
|
463 |
போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை
சூழப்
பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங்
கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே. |
1.43.5
|
464 |
உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய
ராகி
விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்
நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே
கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. |
1.43.6
|
465 |
மானிட மார்தரு கையர் மாமழு வாரும்
வலத்தார்
ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார்
தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக்
கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே. |
1.43.7
|
466 |
வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை
யின்கீழ்த்
தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்
தாளமர் வேய்தலைப் பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே. |
1.43.8
|
467 |
தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை
அளந்து
கொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை யூர்வர்
வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே. |
1.43.9
|
468 |
மூத்துவ ராடையி னாரும் (*)மூசு
கருப்பொடி யாரும்
நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார்
ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங்
காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே.
(*) மூசு கடுப்பொடி என்றும் பாடம். |
1.43.10
|
469 |
காமரு வார்பொழில் சூழுங் கற்குடி
மாமலை யாரை
நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்
பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே. |
1.43.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முத்தீசர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.
பண் - தக்கராகம்
470 |
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
வாரிடமும் பலி தேர்வர்
அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோயிவர் மாண்பே. |
1.44.1 |
471 |
கலைபுனை மானுரி தோலுடை யாடை
கனல்சுட ராலிவர் கண்கள்
தலையணி சென்னியர் தாரணி மார்பர்
தம்மடி கள்ளிவ ரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட
இடர்செய்வ தோயிவ ரீடே. |
1.44.2
|
472 |
வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதைசெய்வ தோவிவர் சீரே. |
1.44.3
|
473 |
கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக்
கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை யணிந் தழகாய
புனிதர் கொலாமிவ ரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட
மயல்செய்வ தோவிவர் மாண்பே. |
1.44.4
|
474 |
மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி
வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச்
சதுர்செய்வ தோவிவர் சார்வே. |
1.44.5
|
475 |
நீறுமெய்பூசி நிறைசடை தாழ
நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
ஆறது சூடி ஆடர வாட்டி
யைவிரற் கோவண ஆடை
பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர்செய்வ தோவிவ ரீடே. |
1.44.6
|
476 |
பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
டாமைவெண் ணூல்புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந் தழகாய
குழகர்கொ லாமிவ ரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
சதிர்செய்வ தோவிவர் சார்வே. |
1.44.7
|
477 |
ஏவலத் தால்விச யற்கருள் செய்து
இராவண னையீ டழித்து
மூவரி லும்முத லாய்நடு வாய
மூர்த்தியை யன்றி மொழியாள்
யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
சிதைசெய்வ தோவிவர் சேர்வே. |
1.44.8
|
478 |
மேலது நான்முக னெய்திய தில்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனு மெய்திய தில்லை
எனவிவர் நின்றது மல்லால்
ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வ தோவிவர் பண்பே. |
1.44.9
|
479 |
நாணொடு கூடிய சாயின ரேனும்
நகுவ ரவரிரு போதும்
ஊணொடு கூடிய உட்குந் தகையார்
உரைக ளவைகொள வேண்டா
ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப்
புனைசெய்வ தோவிவர் பொற்பே. |
1.44.10
|
480 |
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிரா மத்துறை கின்ற
புகைமலி மாலை புனைந் தழகாய
புனிதர்கொ லாமிவ ரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்
சாரகி லாவினை தானே. |
1.44.11
|
முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்
மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு
பண் - தக்கராகம்
481 |
துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும்
வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட்
டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.1 |
482 |
கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா
வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ
டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.2
|
483 |
கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி
வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்பூத்
தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.3
|
484 |
பால மதிசென்னி படரச்சூடி பழியோராக்
கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார்
கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.4
|
485 |
ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள்
முதிரவே
பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்
கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.5
|
486 |
பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம்
பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.6
|
487 |
நுணங்கு மறைபாடி யாடிவேடம்
பயின்றாரும்
இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்
வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்
டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.7
|
488 |
கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக்
கவர்ந்துண்ண
இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார்
பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்
தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.8
|
489 |
489
கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள்
பவழ நுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும்
தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்
தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.9
|
490 |
பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும்
நண்போரா
திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.10
|
491 |
போழம் பலபேசிப் போதுசாற்றித்
திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. |
1.45.11
|
492 |
சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான
சம்பந்தன்
ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை
வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே. |
1.45.12
|
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.46 திரு அதிகைவீரட்டானம்
பண் - தக்கராகம்
493 |
குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே. |
1.46.1 |
493 |
அரும்புங் குரும்பையு மலைத்த
மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்
சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே. |
1.46.2
|
494 |
ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்
பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே. |
1.46.3
|
496 |
எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. |
1.46.4
|
497 |
கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே. |
1.46.5
|
498 |
துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே. |
1.46.6
|
499 |
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக்
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே. |
1.46.7
|
500 |
கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே. |
1.46.8
|
501 |
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக்
காண்கிலார்
பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
கடியார் கழுநீலம் மலரு மதிகையுள்
வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே. |
1.46.9
|
511 |
அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடனேந்தி உடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே. |
1.46.10
|
512 |
ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே. |
1.46.11
|
இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.
சுவாமிபெயர் - அதிகைநாதர், வீரட்டானேசுவரர்;
தேவியார் - திருவதிகைநாயகி.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.47 திருச்சிரபுரம்
பண் - பழந்தக்கராகம்
504 |
பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ
தன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே
சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே. |
1.47.1 |
505 |
கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது
வன்றியும்போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே. |
1.47.2
|
506 |
நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி
யன்றியும்போய்
ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே. |
1.47.3
|
507 |
கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே. |
1.47.4
|
508 |
புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை
தன்னைக்
கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே
மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே. |
1.47.5
|
509 |
கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில்
வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. |
1.47.6
|
510 |
குறைபடாத வேட்கையோடு கோல்வளை
யாளொருபாற்
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே. |
1.47.7
|
511 |
மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே. |
1.47.8
|
512 |
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே. |
1.47.9
|
513 |
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை
யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே. |
1.47.10
|
514 |
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம்
மேயவனை
அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை
பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே. |
1.47.11
|
சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர்.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.48 திருச்சேய்ஞலூர்
பண் - பழந்தக்கராகம்
515 |
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி
கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. |
1.48.1 |
516 |
நீறடைந்த மேனியின்கண் நேரிழையா
ளொருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோலவளர் சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. |
1.48.2
|
517 |
ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து
கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே. |
1.48.3
|
518 |
வீணடைந்த மும்மதிலும் வில்மலை
யாவரவின்
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே. |
1.48.4
|
519 |
பேயடைந்த காடிடமாப் பேணுவ
தன்றியும்போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே. |
1.48.5
|
520 |
காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே. |
1.48.6
|
521 |
பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. |
1.48.7
|
522 |
மாவடைந்த தேரரக்கன் வலிதொலை
வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்
சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே. |
1.48.8
|
523 |
காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே. |
1.48.9
|
524 |
மாசடைந்த மேனியாரும் மனந்திரி
யாதகஞ்சி
நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே. |
1.48.10
|
525 |
சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன
சீர்பரவித்
தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே. |
1.48.11
|
சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்.
சுவாமிபெயர் - சத்தகிரீசுவரர், தேவியார் - சகிதேவிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.49 திருநள்ளாறு
பண் - பழந்தக்கராகம்
பச்சைத்திருப்பதிகம்
இது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது
வேகாதிருந்தது.
526 |
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும்
பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. |
1.49.1 |
527 |
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே. |
1.49.2
|
528 |
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி
அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே. |
1.49.3
|
529 |
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல்
பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. |
1.49.4
|
530 |
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள்
இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. |
1.49.5
|
531 |
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன்
இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. |
1.49.6
|
532 |
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள்
முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. |
1.49.7
|
533 |
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத்
தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. |
1.49.8
|
534 |
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட
னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. |
1.49.9
|
535 |
மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர்
குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே. |
1.49.10
|
536 |
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய
தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே. |
1.49.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்,
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.50 திருவலிவலம்
பண் - பழந்தக்கராகம்
537 |
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந்
துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே. |
1.50.1 |
538 |
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற்
றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே. |
1.50.2
|
539 |
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்
பெருங்கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக்
கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே. |
1.50.3
|
540 |
மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை
யைத்துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே. |
1.50.4
|
541 |
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ்
சொல்லுவ னுன்றிறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. |
1.50.5
|
542 |
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார்
மூவெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே. |
1.50.6
|
543 |
தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. |
1.50.7
|
544 |
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய
பொன்மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த
வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே. |
1.50.8
|
545 |
ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே. |
1.50.9
|
546 |
*பொதியிலானே பூவணத்தாய் பொன்திக
ழுங்கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே.
(*)பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று. |
1.50.10
|
547 |
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல
மேயவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்
மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே. |
1.50.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - வாளையங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.51 திருச்சோபுரம்
பண் - பழந்தக்கராகம்
548 |
வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து
விளங்குமொழி
மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்
கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே. |
1.51.1 |
549 |
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி
ரிந்திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங்
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே. |
1.51.2
|
550 |
தீயராய வல்லரக்கர் செந்தழ
லுள்ளழுந்தச்
சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம்
பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த
தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே. |
1.513
|
551 |
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை
யும்பலிதேர்ந்
தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்
வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந்
தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே. |
1.51.4
|
552 |
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை
மேல்மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்
ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித்
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே. |
1.51.5
|
553 |
கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு
வாட்படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்
அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே. |
1.51.6
|
554 |
குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி
யார்பணிவார்
கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்
துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே. |
1.51.7
|
555 |
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு
விறலரக்கர்
குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே. |
1.51.8
|
556 |
விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி
விரிதிரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே. |
1.51.9
|
557 |
புத்தரோடு புன்சமணர் பொய்யுரை
யேரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்
மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே. |
1.51.10
|
558 |
சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தான்
ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன
கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே. |
1.51.11
|
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோபுரநாதர், தேவியார் - சோபுரநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.52 திருநெடுங்களம்
பண் - பழந்தக்கராகம்
559 |
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை
மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. |
1.52.1 |
560 |
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை
நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. |
1.52.2
|
561 |
நின்னடியே வழிபடுவான் நிமலா
நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. |
1.52.3
|
562 |
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்
பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. |
1.52.4
|
563 |
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட
மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. |
1.52.5
|
564 |
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்
நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. |
1.52.6
|
565 |
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக்
கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. |
1.52.7
|
566 |
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற்
சூழிலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. |
1.52.8
|
567 |
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய
நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. |
1.52.9
|
568 |
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி
லாச்சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. |
1.52.10
|
569 |
நீடவல்ல வார்சடையான் மேயநெ
டுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. |
1.52.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நித்தியசுந்தரர், தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.53 திருமுதுகுன்றம்
பண் - பழந்தக்கராகம்
570 |
தேவராயும் அசுரராயுஞ் சித்தர்
செழுமறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே. |
1.53.1 |
571 |
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி
ரோன்மதிபார்
எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்
முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே. |
1.53.2
|
572 |
வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி
நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்
மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே. |
1.53.3
|
573 |
பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது
பௌவமுந்நீர்
நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்
நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும்
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே. |
1.53.4
|
574 |
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம்
மீசணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே. |
1.53.5
|
575 |
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா
நல்லிதழி
சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும்
அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. |
1.53.5
|
|
*இப்பதிகத்தின் 7-ம் செய்யுள்
சிதைந்து போயிற்று. |
1.53.6
|
576 |
மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்
இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே. |
1.53.8
|
577 |
ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக
னும்மறியாக்
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும்
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. |
1.53.9
|
578 |
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல்
மிண்டர்சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட
முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே. |
1.53.10
|
579 |
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும்
முதுகுன்றை
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
.... .... .... .... .... .... .... ....
.... .... .... .... .... .... .... .... |
1.53.11
|
(*) 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள்
சிதைந்து போயின.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.54 திருஓத்தூர்
பண் - பழந்தக்கராகம்
580 |
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே. |
1.54.1 |
581 |
இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
சடையீ ரேயும தாளே. |
1.54.2
|
582 |
உள்வேர் போல நொடிமையி னார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே. |
1.54.3
|
583 |
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேயருள் நல்குமே. |
1.54.4
|
584 |
குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயருள் நல்குமே. |
1.54.5
|
585 |
மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயருள் நல்குமே. |
1.54.6
|
586 |
தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயருள் நல்குமே. |
1.54.7
|
587 |
என்றா னிம்மலை யென்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே. |
1.54.8
|
588 |
நன்றா நால்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே. |
1.54.9
|
589 |
கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்
சீர வன்கழல் சேர்மினே. |
1.54.10
|
590 |
குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே. |
1.54.11
|
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதநாதர், தேவியார் - இளமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.55 திருமாற்பேறு
பண் - பழந்தக்கராகம்
591 |
ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
மாறி லாமணி கண்டரே. |
1.55.1 |
592 |
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே. |
1.55.2
|
593 |
பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே. |
1.55.3
|
594 |
சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே. |
1.55.4
|
595 |
மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக ஏத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே. |
1.55.5
|
596 |
உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
றரையா னேயருள் நல்கிடே. |
1.55.6
|
|
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள்
மறைந்து போயிற்று.
|
1.55.7
|
597 |
அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே. |
1.55.8
|
598 |
இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
ஒருவ ராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்
பரவு வார்வினை பாறுமே. |
1.55.9
|
599 |
தூசு போர்த்துழல் வார்கையில்
துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலுந்
தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே. |
1.55.10
|
600 |
மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னும் மாற்பேற் றடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே. |
1.55.11
|
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.56 திருப்பாற்றுறை
பண் - பழந்தக்கராகம்
601 |
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே. |
1.56.1 |
602 |
நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழும் ஈசரே. |
1.56.2
|
603 |
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தென் எழில் கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
யுண்ணா ணாளும் உறைவரே. |
1.56.3
|
604 |
பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லா ரெயிலெய்தார்
பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே. |
1.56.4
|
605 |
மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே. |
1.56.5
|
606 |
போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே. |
1.56.6
|
607 |
வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே. |
1.56.7
|
608 |
வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே. |
1.56.8
|
608 |
ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
ஆன வண்ணத்தெம் அண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே. |
1.56.9
|
610 |
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே. |
1.56.10
|
611 |
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரானைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடிப் பரவுமே. |
1.56.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலநாதர், தேவியார் - மோகாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.57 திருவேற்காடு
பண் - பழந்தக்கராகம்
612 |
ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே. |
1.57.1 |
613 |
ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே. |
1.57.2
|
614 |
பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேதம் எய்துத லில்லையே. |
1.57.3
|
615 |
ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திட
பாழ்ப டும்மவர் பாவமே. |
1.57.4
|
616 |
காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஒல்லையே. |
1.57.5
|
617 |
தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே. |
1.57.6
|
618 |
மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே. |
1.57.8
|
619 |
மூரல் வெண்மதி சூடு முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே. |
1.57.8
|
620 |
பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை
நெருக்கி னானை நினைமினே. |
1.57.9
|
621 |
மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாயெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே. |
1.57.10
|
622 |
விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே. |
1.57.11
|
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேற்காட்டீசுவரர், தேவியார் - வேற்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.58 திருக்கரவீரம்
பண் - பழந்தக்கராகம்
623 |
அரியும் நம்வினை யுள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டங்
கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே. |
1.58.1 |
624 |
தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே. |
1.58.2
|
625 |
ஏதம் வந்தடை யாவினி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்திக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாதம் நணுகவே. |
1.58.3
|
626 |
பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
மறையும் மாமணி போற்கண்டங்
கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழல் ஏத்தவே. |
1.58.4
|
627 |
பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே. |
1.58.5
|
628 |
நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரன லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே. |
1.58.6
|
629 |
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கர வீரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே. |
1.58.7
|
630 |
புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வனுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே. |
1.58.8
|
631 |
வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை ஓயுமே. |
1.58.9
|
632 |
செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே. |
1.58.10
|
633 |
வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே. |
1.58.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கரவீரேசுவரர், தேவியார் - பிரத்தியட்சமின்னாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.59 திருத்தூங்கானைமாடம்
பண் - பழந்தக்கராகம்
634 |
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை
யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம்
அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங்
கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.1 |
635 |
பிணிநீர சாதல் பிறத்தலிவை
பிரியப் பிரியாத பேரின்பத்தோ
டணிநீர மேலுலகம் எய்தலுறில்
அறிமின் குறைவில்லை ஆனேறுடை
மணிநீல கண்ட முடையபிரான்
மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந்
துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.2
|
636 |
சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை
சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீர்
அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்
பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.3
|
637 |
ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை
உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்
மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை
முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி
தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.4
|
638 |
மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை
மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
வியல்தீர மேலுக மெய்தலுறின்
மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர வோங்கிய நாமங்களா
லோவாது நாளும் அடிபரவல்செய்
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.5
|
639 |
பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா
படர்நோக் கின்கண் பவளந்நிற
நன்னீர்மை குன்றித் திரைதோலொடு
நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற்
புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.6
|
640 |
இறையூண் துகளோ டிடுக்கணெய்தி
யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப்
பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப்
பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.7
|
641 |
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து
மெய்யில்வாடிப்
பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம்
இறையே பிரியா தெழுந்துபோதுங்
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்
காதலியுந் தானுங் கருதிவாழுந்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.8
|
642 |
நோயும் பிணியும் அருந்துயரமும்
நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
தாய அடியளந்தான் காணமாட்டாத்
தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
டோ யும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.9
|
643 |
பகடூர் பசிநலிய நோய்வருதலாற்
பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்
மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந்
துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே. |
1.59.10
|
644 |
மண்ணார் முழவதிரும் மாடவீதி
வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்
பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங்
கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும்
விதியது வேயாகும் வினைமாயுமே. |
1.59.11
|
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுடர்க்கொழுந்தீசர், தேவியார் - கடந்தைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.60 திருத்தோணிபுரம்
பண் - பழந்தக்கராகம்
645 |
வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப்
பெடையினொடும்
ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே. |
1.60.1 |
646 |
எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே
என்பயலை
அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே. |
1.60.2
|
647 |
பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச்
செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே. |
1.60.3
|
648 |
காண்டகைய செங்காலொண் கழிநாராய்
காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே. |
1.60.4
|
649 |
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன்
பாங்கமைந்த
காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்
தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே. |
1.60.5
|
650 |
சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக்
கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே. |
1.60.6
|
651 |
முன்றில்வாய் மடல்பெண்ணைக்
குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்
கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே. |
1.60.7
|
652 |
பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே. |
1.60.8
|
653 |
நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை
வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே. |
1.60.9
|
654 |
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா
தேனொடுபால்
முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. |
1.60.10
|
655 |
போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும்
புரிசடையெங்
கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்
தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. |
1.60.11
|
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.61 திருச்செங்காட்டங்குடி
பண் - பழந்தக்கராகம்
656 |
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ
றும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே. |
1.61.1 |
657 |
வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும்
வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச்
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. |
1.61.2
|
658 |
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான்
தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. |
1.61.3
|
659 |
தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந்
தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே. |
1.61.4
|
660 |
பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற்
பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே. |
1.61.5
|
661 |
நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார்
வாயுளான்
தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே. |
1.61.6
|
662 |
மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர்
பாகமாம்
மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே. |
1.61.7
|
663 |
தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன்
தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்
காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. |
1.61.8
|
664 |
ஆனூரா வுழிதருவான் அன்றிருவர்
தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. |
1.61.9
|
665 |
செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த
சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே. |
1.61.10
|
666 |
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக்
கடிபொழிலின்
நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே. |
1.61.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கணபதீசுவரர், தேவியார் - திருக்குழல்மாதம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.62 திருக்கோளிலி
பண் - பழந்தக்கராகம்
667 |
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே. |
1.62.1 |
668 |
ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே. |
1.62.2
|
669 |
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு
மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. |
1.62.3
|
670 |
வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட்
பாலாட்டுஞ்
சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. |
1.62.4
|
671 |
வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற்
பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே. |
1.62.5
|
672 |
தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே. |
1.62.6
|
673 |
கன்னவிலும் மால்வரையான் கார்திகழும்
மாமிடற்றான்
சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற்
கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே. |
1.62.7
|
674 |
அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை
அன்றெடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங்
கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. |
1.62.8
|
675 |
நாணமுடை வேதியனும் நாரணனும்
நண்ணவொணாத்
தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. |
1.62.9
|
676 |
தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத்
திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே. |
1.62.10
|
677 |
நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா
டென்றிருக்குங்
கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்
டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே. |
1.62.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலியப்பர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
பண் - தக்கேசி
678 |
எரியார்மழுவொன் றேந்தியங்கை
இடுதலையேகலனா
வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்
பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. |
1.63.1 |
679 |
பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப்
பெய்பலிக்கென்றயலே
கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே
இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. |
1.63.2
|
680 |
நகலார்தலையும் வெண்பிறையும்
நளிர்சடைமாட்டயலே
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே
அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர்
புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே. |
1.63.3
|
681 |
சங்கோடிலங்கத் தோடுபெய்து
காதிலோர்தாழ்குழையன்
அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே. |
1.63.4
|
682 |
தணிநீர்மதியஞ் சூடிநீடு
தாங்கியதாழ்சடையன்
பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே
அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத்
துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே. |
1.63.5
|
683 |
கவர்பூம்புனலுந் தண்மதியுங்
கமழ்சடைமாட்டயலே
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற்
தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே. |
1.63.6
|
684 |
முலையாழ்கெழும மொந்தைகொட்ட
முன்கடைமாட்டயலே
நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச்
சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. |
1.63.7
|
685 |
எருதேகொணர்கென் றேறியங்கை
இடுதலையேகலனாக்
கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே
ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே. |
1.63.8
|
686 |
துவர்சேர்கலிங்கப் போர்வையாருந்
தூய்மையிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே. |
1.63.9
|
687 |
நிழலால்மலிந்த கொன்றைசூடி
நீறுமெய்பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே
அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய
கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே. |
1.63.10
|
688 |
கட்டார்துழாயன் தாமரையான்
என்றிவர்காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே. |
1.63.11
|
689 |
கடையார்கொடிநன் மாடவீதிக்
கழுமலவூர்க்கவுணி
நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல
படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே. |
1.63.12
|
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.64 திருப்பூவணம்
பண் - தக்கேசி
690 |
அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்
குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம்
முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந்
திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே. |
1.64.1 |
691 |
மருவார்மதில்மூன் றொன்றவெய்து
மாமலையான்மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர்
கருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர்காத்தளித்த
திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப்பூவணமே. |
1.64.2
|
692 |
போரார்மதமா உரிவைபோர்த்துப்
பொடியணிமேனியனாய்க்
காரார்கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல்விண்ணவனூர்
பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணிபொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற தென்திருப்பூவணமே. |
1.64.3
|
693 |
கடியாரலங்கல் கொன்றைசூடிக்
காதிலோர்வார்குழையன்
கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவணவன்னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற்பரவச்
செடியார்வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே. |
1.64.4
|
694 |
கூரார்வாளி சிலையிற்கோத்துக்
கொடிமதிற்கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம்
ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடம்நீடுந் தென்திருப்பூவணமே. |
1.64.5
|
695 |
நன்றுதீதென் றொன்றிலாத
நான்மறையோன்கழலே
சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாங்
குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப்பூவணமே. |
1.64.6
|
696 |
பைவாயரவம் அரையிற்சாத்திப்
பாரிடம்போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந்தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியினால்நெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப்பூவணமே. |
1.64.7
|
697 |
மாடவீதி மன்னிலங்கை
மன்னனைமாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்
பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணிபொன்கொழித்து
ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப்பூவணமே. |
1.64.8
|
698 |
பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங்
கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரியானவனூர்
மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணிகொழித்துச்
செய்யார்கமலந் தேனரும்புந் தென்திருப்பூவணமே. |
1.64.9
|
699 |
அலையார்புனலை நீத்தவருந்
தேரருமன்புசெய்யா
நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன்றன்னிடமாம்
மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகைசூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்திருப்பூவணமே. |
1.64.10
|
700 |
திண்ணார்புரிசை மாடமோங்குந்
தென்திருப்பூவணத்துப்
பெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல்இன்றமிழால்
நண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம்பந்தன்சொன்ன
பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே. |
1.64.11
|
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்
பண் - தக்கேசி
701 |
அடையார்தம் புரங்கள்மூன்றும்
ஆரழலில்லழுந்த
விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம்
கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவப்
படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே. |
1.65.1 |
702 |
எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும்
எந்தைபிரானிமையோர்
கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம்
மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேனருந்திப்
பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. |
1.65.2
|
703 |
மங்கையங்கோர் பாகமாக
வாள்நிலவார்சடைமேல்
கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம்
பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. |
1.65.3
|
704 |
தாரார்கொன்றை பொன்றயங்கச்
சாத்தியமார்பகலம்
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம்
போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே. |
1.65.4
|
705 |
மைசேர்கண்டர் அண்டவாணர்
வானவருந்துதிப்ப
மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங்
கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே
பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே. |
1.65.5
|
706 |
குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக்
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ்
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. |
1.65.6
|
707 |
வெந்தலாய வேந்தன்வேள்வி
வேரறச்சாடிவிண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம்
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. |
1.65.7
|
708 |
தேரரக்கன் மால்வரையைத்
தெற்றியெடுக்கஅவன்
தாரரக்குந் திண்முடிகள் ஊன்றியசங்கரனூர்
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப்
பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே. |
1.65.8
|
709 |
அங்கமாறும் வேதநான்கும்
ஓதும்அயன்நெடுமால்
தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம்
வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலைப்பப்
பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. |
1.65.9
|
710 |
உண்டுடுக்கை யின்றியேநின்
றூர்நகவேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. |
1.65.10
|
711 |
பத்தரேத்தும் பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தெம்
அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல்
சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினைநோயிலராய்
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே. |
1.65.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பல்லவனேசர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.66 திருச்சண்பைநகர்
பண் - தக்கேசி
712 |
பங்மேறு மதிசேர்சடையார்
விடையார்பலவேதம்
அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே. |
1.66.1 |
713 |
சூதகஞ்சேர் கொங்கையாளோர்
பங்கர்சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர்
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே. |
1.66.2
|
714 |
மகரத்தாடு கொடியோனுடலம்
பொடிசெய்தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே. |
1.66.3
|
715 |
மொய்வல்லசுரர் தேவர்கடைந்த
முழுநஞ்சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே. |
1.66.4
|
716 |
கலமார்கடலுள் விடமுண்டமரர்க்
கமுதம்அருள்செய்த
குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லையெருதேறி
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே. |
1.66.5
|
717 |
மாகரஞ்சேர் அத்தியின்தோல்
போர்த்துமெய்ம்மாலான்
சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன்மேதக்க
ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே. |
1.66.6
|
|
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள்
சிதைந்து போயிற்று.
|
1.66.7
|
718 |
இருளைப்புரையும்
நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து
அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண்கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால்
தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே. |
1.66.8
|
719 |
மண்டான்முழுதும் உண்டமாலும்
மலர்மிசைமேலயனும்
எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன்மறையோதி
தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத்தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே. |
1.66.9
|
720 |
போதியாரும் பிண்டியாரும்
புகழலசொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளும் நிமலனிருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே. |
1.66.10
|
721 |
வந்தியோடு பூசையல்லாப்
போழ்தில்மறைபேசிச்
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய
அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே. |
1.66.11
|
திருச்சிற்றம்பலம்
தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை முதல் பகுதி
முற்றும்.