|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Thirumuraikal > 63 Nayanmars - Sri Swami Sivananda > Periya Puranam - பெரியபுராணம் - சேக்கிழார் > Canto 1, Carukkam -1(திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்) > Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam) > Canto 1, Carukkam -4 (mummaiyAl ulakANTa carukkam) > Canto 1, Carukkam 5 (tiruninRa carukkam) > Canto 2 Carukkam - 6 part 1 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 2 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 3 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam 7 -13 > koRRavankuTi umApati civAcAriyAr's cEkkizAr cuvAmikaL purANam - History of Periyapuranam
periya purANam of cEkkizAr - Canto 2
Carukkam -6 part 3 (vampaRA
varivaNTuc carukkam)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் - இரண்டாம் காண்டம்
சருக்கம் 6 (வம்பறா வரிவண்டுச் சருக்கம்)
3ம் பகுதி 3155-3634
Acknowledgements:Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 6.2 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் (3155 - 3563) |
| 6.3 திரு மூல நாயனார் புராணம் (3564 - 3591) |
| 6.4 தண்டியடிகள் புராணம் (3592 - 3617) |
| 6.5 மூர்க்க நாயனார் புராணம் (3618 - 3629) |
| 6.6 சோமாசி மாற நாயனார் புராணம் (3630 - 3634) |
| 3155 | நீடு வண் புகழ்ச் சோழர் நீர் நாட்டு இடை நிலவும் மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால் ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான் பீடு தங்கிய திரு மங்கலப் பெயர்த்தால் | 6.2.1 |
| 3156 | இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில் மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல்லடிச் செம் பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு | 6.2.2 |
| 3157 | விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் உழவு அறாத நல் வளத்தன ஓங்கிருங் குடிகள் | 6.2.3 |
| 3158 | நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக் காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமி பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும் சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால் | 6.2.4 |
| 3159 | இன்ன வாழ் பதி அதன் இடை ஏயர் கோக் குடிதான் மன்னிய நீடிய வளவர் சேனாபதிக் குடியாம் தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால் | 6.2.5 |
| 3160 | அங்கண் மிக்க அக் குடியினில் அவதரித்து உள்ளார் கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சாந்து பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார் | 6.2.6 |
| 3161 | புதிய நாள் மதிச் சடைமுடியார் திருப் புன் கூர்க் அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று துதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார் | 6.2.7 |
| 3162 | நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு இயாவர் இச் செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத் தேவர் தம் பிரான் அவர் திறம் திருத்திய அதற்கு மேய வந்த அச் செயலினை விளம்புவான் உற்றேன் | 6.2.8 |
| 3163 | திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர் ஆளி கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் | 6.2.9 |
| 3164 | தாள் ஆண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த வேளாளர் குண்டையூரக் கிழார் எனும் மே தக்கோர் வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார் | 6.2.10 |
| 3165 | செந் நெல்லும் பொன்னன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின் இன்னல்ல அமுதும் முதல் எண்ணில் பெரும் வளங்கள் மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதாக வழுவாமல் பன்னெடு நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார் | 6.2.11 |
| 3166 | ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப் போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமை மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் | 6.2.12 |
| 3167 | வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள் புரிவார் | 6.2.13 |
| 3168 | ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளி நீரூரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப் பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல் காரூரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல் | 6.2.14 |
| 3169 | அவ்விரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே எவ்வுலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்து செவ்விய பொன் மலை வளத்தார் திரு அருளின் செயல் போற்றிக் கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் | 6.2.15 |
| 3170 | நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு யாவரால் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப் போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்து தேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் | 6.2.16 |
| 3171 | குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர் கொண்டு கோதில் வாய்மைத் தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று பண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட அண்டர் தம் பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று | 6.2.17 |
| 3172 | மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டு பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் | 6.2.18 |
| 3173 | விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும் தண்ண்லவு அணிந்தார் தமே தரில் அன்றி ஒண்ணாது என்று | 6.2.19 |
| 3174 | ஆளிட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதியான கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும் | 6.2.20 |
| 3175 | பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப் புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால் | 6.2.21 |
| 3176 | தம் பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தே உம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச் செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய் நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலன் ஆர் | 6.2.22 |
| 3177 | பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சி நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்து பாங்கு ஆனார் புடை சூழ்ந்து போற்றி இசைக்க பரவையார் ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர் | 6.2.23 |
| 3178 | கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறி மேவி அவர் தம் மோடு மிக இன்புற்று இருந்து அதன்பின் சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின் ஏவலினால் அவ்விரவு பூதங்கள் மிக்கு எழுந்து | 6.2.24 |
| 3179 | குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்து வண்டுலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன ஆல் | 6.2.25 |
| 3180 | அவ்விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்கு இவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் | 6.2.26 |
| 3181 | நீக்க அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும் போக்க அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார் பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இந் நெல்லுப் போக்கும் இடம் அரிதாகும் எனப் பலவும் புகல்கின்றார் | 6.2.27 |
| 3182 | வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம் பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் | 6.2.28 |
| 3183 | அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்குப் பறை அறைந்த பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார் மணியாரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார் | 6.2.29 |
| 3184 | நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறைநாள் செம் பொன் புற்று இடம் கொண்டு வீற்று இருந்த செழும் தேனைக் தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் | 6.2.30 |
| 3185 | குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண் அலகில் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கி நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன்பின் நேர் இறைஞ்ச பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் | 6.2.31 |
| 3186 | தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர் காவல் கொண்டு தனியாளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப் பாவை பாகர் தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார் | 6.2.32 |
| 3187 | மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி ஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ண ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக் கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார் | 6.2.33 |
| 3188 | தூய மணிப் பொன் தவிகில் எழுந்து அருளி இருக்கத் தூ நீரால் சேய மலர்ச் சேவடி விளக்கித் தெளித்துக் கொண்ட செழும் புனலால் மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் | 6.2.34 |
| 3189 | பூந்தண் பனிநீர் கொடு சமைத்த பொருவு இல் விரைச்சந்தனக் கலவை வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறு தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப் பாசனத்து ஏந்தி | 6.2.35 |
| 3190 | வேறு வேறு திருப் பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து மாறிலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி ஈறில்விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி ஆறு புணைந்தார் அடித் தொண்டர் அளவு இல் பூசை கொள அளித்தார் | 6.2.36 |
| 3191 | செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி ஆம் கோட்புலியார் நங்கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் தங்கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சித்தலை சிறந்த பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா | 6.2.37 |
| 3192 | ஆன விருப்பின் மற்று அவர் தாம் அருமையால் பெற்று எடுத்த தேனார் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்த மானார் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன் தொண்டர் தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார் | 6.2.38 |
| 3193 | அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டு அருளிக் கடிசேர் மலர்த் தாள் தொழுது உய்யக் கருணை அளிக்க வேண்டும் எனத் தொடி சேர் தளிக்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக் கொண்டப் படியே மகண்மை யாக் கொண்டார் பரவையார் தம் கொழு நனார் | 6.2.39 |
| 3194 | கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்து காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உட்கசிவால் அணைத்து உச்சி மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர் | 6.2.40 |
| 3195 | வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தொடும் சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக் கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை | 6.2.41 |
| 3196 | சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு அதன் இடைச் சிங்கடியாரைப்
பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைத்த பெற்றியினால் மறப்பில் வகைச் சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி நிறப் பொற்பு உடைய இசைபாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் | 6.2.42 |
| 3197 | அங்கு நின்றும் எழுந்து அருளி அளவில் அன்பின் உள் மகிழச் செங்கண் நுதலார் மேவு திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சி மங்கை பாகர் தம்மைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்று எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார் | 6.2.43 |
| 3198 | நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர் என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்து அருளி மன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர் சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து | 6.2.44 |
| 3199 | இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளி நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப் புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய் உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் | 6.2.45 |
| 3200 | செறி புன் சடையார் திருவாரூர்ப் திருப் பங்குனி உத்தரத் திருநாள்
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்க நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச் சென்று அங்கு எய்தினார் | 6.2.46 |
| 3201 | சென்று விரும்பித் திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி முன்றில் பணிந்து வலம் கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித் தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ் விப்பார் | 6.2.47 |
| 3202 | சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழிய வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப மறி வண்கையார் அருளேயோ மலர்கண் துயில் வந்து எய்தியதால் | 6.2.48 |
| 3203 | துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித் தேன் அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி முடிமேல் அணியா உத்தரிய வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்துப் பள்ளி மேவினார் | 6.2.49 |
| 3204 | சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர்க் கண்
பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்வே விரிசுடர்ச் செம் பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி | 6.2.50 |
| 3205 | தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக் கைக் கமல முகை தலை மேல்
கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழிமாலை பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து | 6.2.51 |
| 3206 | பதிகம் பாடித் திருக் கடைக் காப் பணிந்து பரவிப் புறம் போந்தே
எதிரில் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்து அருளி நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் பொதியும் சடையார் திருப் பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர் | 6.2.52 |
| 3207 | செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி ஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் | 6.2.53 |
| 3208 | வளம் மல்கிய சீர்ப் பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி அளவில் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த் தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும் உளமன்னிய தம் பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார் | 6.2.54 |
| 3209 | வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் அந்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச் சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர் முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியார் தம் காவலனார் | 6.2.55 |
| 3210 | பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச் சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்தி வலம் மாக வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் தலமார்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை | 6.2.56 |
| 3211 | பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில் நீடு மறையால் மேம் பட்ட அந்தண் ஆளர் நிறைந்து ஈண்டி நாடு மகிழ அவ் அளவு நடைக் காவணம் பாவாடைஉடன் மாடு கதலி பூகம் நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து | 6.2.57 |
| 3212 | வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும் சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின் முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கி பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் | 6.2.58 |
| 3213 | படங்கொள் அரவில் துயில் வோனும் பதுமத்தோனும் பரவிய விடங்கன் விண்ணேர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத் தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்குச் சாரும் நாள் | 6.2.59 |
| 3214 | வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால் தேசு மிக்க திருஅருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் பாசம் அறுத்து ஆள் கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும் மாசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசில் கரைப் புத்தூர் அணைந்தார் | 6.2.60 |
| 3215 | செழு நீர் நறையூர் நிலவு திருச் சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி
விழுநீர் மையினில் பெரும் தொண்டர் விருப்பின் ஓடும் எதிர்கொள்ள மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திருப் புத்தூர் வணங்கி தொழு நீர் மையினில் துதித்து ஏத்தித் தொண்டர் சூழ உறையும் நாள் | 6.2.61 |
| 3216 | புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு அருளும் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற எழுந்து அருளி மூரி வெள்ளக் கங்கையினில் பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவா வடு துறையில் | 6.2.62 |
| 3217 | விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டு உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார் வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து செம்கணான் தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ் சொல் மாலை சாத்தினார் | 6.2.63 |
| 3218 | சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூடப் பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்ணோர் பாகத்து அண்ணலார் தீர்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்து மூர்த்தியார் தம் இடை மருதை அடைந்தார் முனைப் பாடித் தலைவர் | 6.2.64 |
| 3219 | மன்னு மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச் சொல் மலர்கள் பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டர் உடன் அந் நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை முன்னி புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார் | 6.2.65 |
| 3220 | பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை
திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கி உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து மருவும் பதிகள் பிற பணிந்து கலைய நல்லூர் மருங்கு அணைந்தார் | 6.2.66 |
| 3221 | செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ் மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார் கொம்மை மருவு குரும்பைமுலை உமையாள் என்னும் திருப்பதிகம் மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினார் | 6.2.67 |
| 3222 | அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய் மங்கைப் பாகர் வலம் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத் தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத் திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார் | 6.2.68 |
| 3223 | நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம் உடைய சொல்லூத்யமா அணிந்தவர் தம் சோற்றுத் துறையின் மருங்கு எய்தி அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம் கொண்டு அடி பணிவார் | 6.2.69 |
| 3224 | அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளிக் கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவிய பின் கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் போந்து பரவையார் கேள்வர் முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் | 6.2.70 |
| 3225 | தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச் சேவில் வருவார் திரு ஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு பாவு சயனத்து அமர்ந் அருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண் | 6.2.71 |
| 3226 | மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்து நிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம் அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் | 6.2.72 |
| 3227 | அணைந்து திருக் கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணைக் குணம் கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப் புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து | 6.2.73 |
| 3228 | அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி தன்னேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து மன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார் | 6.2.74 |
| 3229 | செய்ய சடையார் திரு ஆனைக் காவில் அணைந்து திருத் தொண்டர் எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே ஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார் | 6.2.75 |
| 3230 | மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி | 6.2.76 |
| 3231 | வளவர் பெருமான் மணியாரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக் கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவிப் போக ஏதம் உற அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளித் தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார் | 6.2.77 |
| 3232 | சாற்றி அங்குத் தங்கு நாள் தயங்கும் பவளத் திருமேனி நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால் போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவில் அன்பர் மருவிய தொண்டு ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் | 6.2.78 |
| 3233 | சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணி முன்றில் வலம் கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி நன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர் நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று | 6.2.79 |
| 3234 | அன்பு நீங்கா அச்சம் உடன் திருத் தோழமைப் பணியால் பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால் முன்பு நின்ற திருத் தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல் என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் | 6.2.80 |
| 3235 | நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலம் கெழும்
பிறப்பால் உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் | 6.2.81 |
| 3236 | இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருள மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் | 6.2.82 |
| 3237 | அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப் பைப் பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கு அமர் புடை வலம் கொண்டு துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரைக் கண்டார் | 6.2.83 |
| 3238 | கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி
வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் கொண்டது ஓர் மயலல் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார் | 6.2.84 |
| 3239 | பரவி அப் பதிகத் திருக் கடைக் கப்புச் சாத்தி முன் பணிந்து அருள்
பெற்றுக் கரவில் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக் குரவலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில் | 6.2.85 |
| 3240 | கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க் கொடு முடிக் கோயில் முன்
குறுகிச் சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய்க் குறிப்பினில் எடுப்ப | 6.2.86 |
| 3241 | அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும்
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது இயம்பும் என்றும் இதனைத் திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால் நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம் | 6.2.87 |
| 3242 | உலகு எலாம் உய்ய உறுதி ஆம்பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை
நிலவிய சிந்தை உடன் திரு அருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றிப் போந்து தண் பனி மலர்ப் படப்பைக் குலவும் அக் கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் | 6.2.88 |
| 3243 | அத் திருப்பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க நித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்டக் கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழி நீர் பொழிதரக் கண்டார் | 6.2.89 |
| 3244 | காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை இல் அன்பு என்பினை
உருக்கப் பூண்ட ஐம் புலனில் புலப் படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத் தாண்டவம் புரியும் தம் பிரானாரைத் தலைப்படக் கிடைத்த பின் சைவ ஆண் தகை யாருக்கு அடுத்த அந் நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் | 6.2.90 |
| 3245 | அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற அன்பு அனார் இன்ப வெள்ளத்து மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதன் இடை மருவி பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிடப் பெற்றால் என் இனிப் புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார் | 6.2.91 |
| 3246 | ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும் பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதிபல பணிந்து மேய வண் தமிழால் விருப் பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடிமலையில் | 6.2.92 |
| 3247 | வீடு தரும் இக் கல் குடியில் விழுமியாரைப் பணிந்து இறைஞ்சி நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தை உடன் பாடிப் பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் | 6.2.93 |
| 3248 | செம் பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ் வார்க்கு அருள் கூட உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார் | 6.2.94 |
| 3249 | ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்றச் சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் பதிகம் பாடிச் சென்றார் | 6.2.95 |
| 3250 | அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புணைந்து உடன் எய்தினார் திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே | 6.2.96 |
| 3251 | அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய் நல் ஊரினில்
ஒப்பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் இப்பதிக் கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர் கொள்ளவே முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் | 6.2.97 |
| 3252 | நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடுள்ளணைந்து ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று ஏடு உலாம் மலர் தூவி எட்டினெடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார் | 6.2.98 |
| 3253 | அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து எழும் அன்பினால்
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் | 6.2.99 |
| 3254 | வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னித் தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்து கொம்பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார | 6.2.100 |
| 3255 | செப்பரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கி ஒப்பரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு மெய்ப் பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் முப்புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு | 6.2.101 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3256 | நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார் இன்றி யாம் முது குன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச் சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல | 6.2.102 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3257 | கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார் வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார் | 6.2.103 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3258 | கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்தம் பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி நீடு அருள் பெற்றுப் போந்து திரு முது குன்றில் நேர்ந்தார் | 6.2.104 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3259 | தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில் புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத் தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று | 6.2.105 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3260 | நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட | 6.2.106 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3261 | பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டாயிரம் பொன் நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி தனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் | 6.2.107 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3262 | அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் மருளுற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத் தெருளுற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்றில் இட்டிப் பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார் | 6.2.108 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3263 | என்று தம் பிரானார் இன் அருள் பெற்ற பின்னர் வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக் கொண்டு மணி முத்து ஆற்றில் பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார் அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று | 6.2.109 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3264 | மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் காவியங் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று வாவி சூழ் தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார் | 6.2.110 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3265 | மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர் நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர் ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச் சேடுயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் | 6.2.111 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3266 | பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன் சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார் | 6.2.112 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3267 | ஆடிய திருமுன்பான அம் பொனின் கோபுரத்தின் ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் நாடகம் செய்யதாளை நண்ணுற உள் நிறைந்து நீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிறைந்து பாய | 6.2.113 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3268 | பரவுவாய் குளறிக் காதில் படி திருப் படியைத் தாழ்ந்து விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில் கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள | 6.2.114 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3269 | மடித்து ஆடும் அடிமைக்கண் என்று அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள் தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு 6.2.115 |
3270
| மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து | ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் மாளாத பேர் அன்பால் பொன்பதியை தாள் ஆண்மை கொண்டவர் தம் 6.2.116 |
3271
| கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் | ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப் சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ் 6.2.117 |
3272
| கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக் | மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு 6.2.118 |
3273
| திருப் பதிகம் பாடியே சென்று அங்கு | உருப் பொலியும் மயிர்ப் புளகம் விரவத் தாழ்ந்தே பொருப்பரையன் மடப் பாவை இடப் பாலானைப் கருப்பு வயல் வாழ் கொளி புத்தூரை நீங்கிக் கான் 6.2.119 |
3274
| கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது | தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர் 6.2.120 |
3275
| எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை | சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை 6.2.121 |
3276
| காட்டு நல் வேள் விக் கோலம் கருத்துற வணங்கிக் காதல் | நாட்டிய உள்ளத்தோடு நம்பி ஆரூரர் போற்றி ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்பு பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து 6.2.122 |
3277
| எஞ்சாத பேர் அன்பில் திருத் தொண்டர் உடன் எய்தி | நஞ்சாரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி மஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த் தடங்கள் புடை சூழும் செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் சென்று அடைந்தார் 6.2.123 |
3278
| செல்வமலி திருவாரூர்த் தேவரொது முனிவர்களும் | மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்கு எல்லை இலாக் காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப் பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார் 6.2.124 |
3279
| மூவாத முதல் ஆகி நடுவாகி முடியாத | சேவாரும் கொடியாரைத் திரு மூலட்டானத்துள் ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்து தாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந்தார் 6.2.125 |
3280
| பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்றப் | பங்கயக் கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் 6.2.126 |
3281
| நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் | தூய மணி முத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் கோயிலின் மாளிகை மேல் பாற்குளத்தில் அவர் அருளாலே போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல 6.2.127 |
3282
| என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்று | மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் நன் நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று 6.2.128 |
3283
| ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் | பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலைப் பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர் 6.2.129 |
3284
| மற்றதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி | முற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர் கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்து அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும் 6.2.130 |
3285
| நீற்றழகர் பாட்டு உவந்து திரு விளையாட்டினில் நின்று | மாற்றுறு செம் பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ சாற்றும் எனக் கோல் தொடியார் மொழிந்து அருளத் தனித் தொண்டர் 6.2.131 |
3286
| முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை | தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில் பொன் செய்த மேனி இனீர் எனப் பதிகம் போற்றிசைத்து 6.2.132 |
3287
| முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள் | சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம் இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு எட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் 6.2.133 |
3288
| ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் | காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக் கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் 6.2.134 |
3289
| கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால் | வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற அந்தரத்து மலர் மாரி பொழிந்து இழிந்தது அவனியுளோர் இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுவார் 6.2.135 |
3290
| ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து | மூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப் பிக்க நீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடு மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர் 6.2.136 |
3291
| மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் | பாட்டுவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் ஓட்டறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல் காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார் 6.2.137 |
3292
| கரை ஏறிப் பரவையார் உடன் கனக ஆனது எலாம் | நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கித் திரை யேறும் புனல் சடிலத்திரு மூலத் தானத்தார் விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் 6.2.138 |
3293
| வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து | அந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச் சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சேயிழையாருடன் அமர்ந்தார் கந்த மலி மலர்ச் சோலை நவலர் தம் காவலனார் 6.2.139 |
3294
| அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப் | பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம் தணியாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன் துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார் 6.2.140 |
3295
| பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி | உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம் எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் 6.2.141 |
3296
| இன்புற்று அங்கு அமர்நாளில் ஈறில் அரு மறை பரவும் | வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே அன்புற்ற காதல் உடன் அளவு இறந்த பிறபதியும் பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப் போவார் 6.2.142 |
3297
| பரிசனமும் உடன் போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும் | கரியுரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித் துரிசறு நல் பெரும் தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப் புரிவுறு மெய்த் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு அணைந்தார் 6.2.143 |
3298
| விண் தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக் | கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த நிலம் மிசைப் பணிந்தார் 6.2.144 |
3299
| அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் | மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித் திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி 6.2.145 |
3300
| திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின் | பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி மருஈரத் தமிழ் மலை புனைந்து ஏத்தி மலை வளத்த பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார் 6.2.146 |
3301
| வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி | உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம் நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம் திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் 6.2.147 |
3302
| தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்து | பாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய் மேவலர் தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி நாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில் 6.2.148 |
3303
| நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின் | புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல் பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த் தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் 6.2.149 |
3304
| நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி | ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும் அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார் 6.2.150 | |
| 3305 | அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில்
செப்ப அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் ஒப்ப அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் மெய்ப் பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் | 6.2.151 |
| 3306 | மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம் அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார் | 6.2.152 |
| 3307 | அம் கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக்
கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக் கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப் பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் | 6.2.153 |
| 3308 | திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப் பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார் | 6.2.154 |
| 3309 | மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று தாவாத புகழ் சண்பை வலம் கொண்டு தாழ்ந்து இறைஞ்சி நாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப் போய் மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் | 6.2.155 |
| 3310 | உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால் மிக வருந்தி பண் நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க் கண் நீடு திரு நுதலார் காதல் வரக் கருத்து அறிந்து தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழிச் சார் கின்றார் | 6.2.156 |
| 3311 | வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக் குளிர் மென் பான் நல் மலர்த் தடம் போலும் பந்தர் ஒரு பால் அமைத்தே ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் மான் அமரும் திருக் கரத்தார் வன் தொண்டர் தமைப் பார்த்து | 6.2.157 |
| 3312 | குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன் வருவார் அப்பந்தர் இடைப்புகுந்து திரு மறைவர் பால் பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி | 6.2.158 |
| 3313 | ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச் சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன் காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்தி ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என | 6.2.159 |
| 3314 | வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளிப் பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கிச் சென்று திருத் தொண்டருடன் திரு அமுது செய்து அருளி | 6.2.160 |
| 3315 | எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப் பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த உண்ணிறைந்த ஆரமுதாய் ஒருகாலும் உலவாதே புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால் | 6.2.161 |
| 3316 | சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி அங்கு அயர் வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார் களும் துயிலக் கங்கை சடைக் கரந்தார் அப் பந்தரொடும் தாம் கரந்தார் | 6.2.162 |
| 3317 | சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர் அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் | 6.2.163 |
| 3318 | குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு வருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப் பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார் | 6.2.164 |
| 3319 | கண்ணார்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப் பண்ணார்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்தி உண்ணாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்தி நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் | 6.2.165 |
| 3320 | அந் நாளில் தம் பெருமான் அருள் கூடப் பணிந்து அகன்று மின்னார் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக் கன்னாடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி தென்னாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார் | 6.2.166 |
| 3321 | சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்து ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப் பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார் போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார் | 6.2.167 |
| 3321 | திருத்தினை மா நகர் மேவும் சிவக் கொழுந்தைப் பணிந்து போய்
நிருத்தினார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப் பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திரு நாவலூர் கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார் | 6.2.168 |
| 3323 | திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப் பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச் செரு நாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் உள் அணைந்தார் | 6.2.169 |
| 3324 | மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக் கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார் | 6.2.170 |
| 3325 | நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்து குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து சலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப் பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார் | 6.2.171 |
| 3326 | தண்டகமாந் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள் தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதி வண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே எண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார் | 6.2.172 |
| 3327 | தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக் குன்றத்து அடியார் ஆனாத விருப்பினொடும் எதிர் கொள்ள அடைந்து அருளித் தூ நாள் வெண் மதி அணிந்த சுடர்க் கொழுந்தைத் தொழுது இறைஞ்சி பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார் | 6.2.173 |
| 3328 | பாடிய அப் பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய் நாடிய நல்லுணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணி ஆடக மா மதில் புடை சூழ் ஆலக்கோயிலின் அமுதைக் கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார் | 6.2.174 |
| 3329 | அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுதாகக் கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில் புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார் | 6.2.175 |
| 3330 | வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் மின் தங்கு வெண் தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்தி அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச் சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார் | 6.2.176 |
| 3331 | மெய்ப் பசியால் மிக வருந்தி இனைத்து இருந்தீர் வேட்கைவிட இப்பொழுதே சோறிரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன் அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச் செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்றிரப்பார் | 6.2.177 |
| 3332 | வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக் கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல் போது இடும் பலிக்குப் புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக் கொண்டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார் | 6.2.1 |