| 457
|
கங்குல்போந் திடுதலுங் கணபணப பன்னகம் நுங்குறா
தகலவே நோற்றுமால் ஏந்திடுஞ் சங்கமாய் மதிசெலச் சக்கரப்
படையெனத் துங்கமோ டெழுதல்போல் தோன்றினன் பரிதிய.
| 1 |
| 458
|
வேறு இரவி செல்லுமுன் அவுணர்கோன் துயிலொரீஇ
எழுந்து மரபி னிற்புரி நாட்கடன் முடித்துமன் றெய்தித் திரும
ணிப்பெருந் தவிசிடை இருந்துதன் சிறுவன் நெருநல் உற்றிடும் வசையினை
உளத்திடை நனைந்தான்.
| 2 |
| 459
|
நினைதல் உற்றுழி உளத்திடைப் பெருஞ்சினம்
நீட இனிய மர்த்தொழிற் கியாரையும் விடுக்கிலன் யானே அனிக மோடுபோய்
மாற்றலர் வன்மையை அழித்துப் புனைவன் வாகையென் ன்னினான் அழிவிலாப்
புகழோன்.
| 3 |
| 460
|
செங்கண் வாளெயிற் றவுணன்இத் தன்மையைத்
தேற்றி வெங்கண் ஒற்றிரில் அளப்பிலா¢ தங்களை விளியா அங்கண் மாநிலம்
முறைமுறை சூழ்தரும் அளக்கர் எங்க ணுஞ்செறி தானையைத் தம்மின்கள் என்றான்.
| 4 |
| 461
|
என்ற லுந்தொழு தாயிர கோடியோர் யாண்டுஞ் சென்று
சென்றுதம் மன்னவன் பணிமுறை செப்பத் துன்று தேர்கரி பரிமிசைப் படர்ந்தனர்
தொன்னாள் வென்றி கொண்டநூ றாயிர வௌ¢ளத்தின் மிக்கோர்.
| 5 |
| 462
|
வேறு சூலமே கணிச்சி தண்டந் தோமரங் குலிசஞ்
சாபங் கோலவாள் பலகை வட்டங் குந்தம்வேல் நாஞ்சில் பிண்டி பாலமே
முசுண்டி சங்கம் பரிதியே எழுவே தட்டி பீலிவல் முசல மாதி பெரும்படை
கொண்டு சென்றார்.
| 6 |
| 463
|
எண்டகும் இனைய வாற்றால் இலக்கம்வௌ¢ ளத்தி
னோருந் திண்டிறல் மகேந்தி ரப்பேர்த் திருநகர் சுற்றி
யார்ப்ப விண்டொடு சிகரி யென்னும் மேருவின் உச்சி போகிக் கண்டனன்
அவுணர் மன்னன் கடற்பெருந் தானைச் சூழல்.
| 7 |
| 464
|
தேக்கினன் கதிருஞ் செல்லாச் செல்லுறழ் தானை
ஈட்டம் நோக்கினன் சிந்தை கொண்ட நோன்மைசார் துயரம் யாவும் நீக்கினன்
வன்மை பெற்றான் நேரலர்ப் பொருது வென்றி ஆக்கினன் போல நின்றான் அறத்துடன்
அருளைக் கொன்றான்.
| 8 |
| 465
|
அழிந்திடு கின்ற காலத் தளக்கரின் ஆர்த்துச்
சூழுங் கழிந்திடு தானை கண்டோன் கடிதுபோர்க் கேக முன்னிச் செழுங்கதிர்
மதியம் ஆக்குந் திருமணிச் சிகரி நின்றும் இழிந்தனன் தலைமை நீங்கி
இழிதொழில் பயின்ற தீயோன். 9
| 16 |
| 466
|
எடுத்தனன் சிலையும் ஏனைப் படைகளும் இமையோர்
தொன்னாட் கொடுத்திடு படைகள் யாவுங் கொண்டனன் சுரத்திற்
கோதை தொடுத்தனன் வெரிநில் தூணி தூககினன் விரல்கள் தோறும் அடுத்தபொற்
புட்டில் சேர்த்தான் அண்டங்கள் அனைத்தும் வென்றான்.
| 10 |
| 467
|
குந்தளச் சுழியற் குஞ்சிக் கோலமா மௌல
தன்னில் சுந்தரத் துணர்மென் தும்பை தொடுத்திடு பிணையல்
சேர்த்தி மந்தரப் பொருப்பு மேரு வரையிதென் றையஞ் செய்யும் இந்திரப்
பெருந்தேர் ஒன்றின் ஏறினன் இரவி யேபோல்.
| 11 |
| 468
|
பண்ணுலாம் புரவிப் பந்தி பருமிதக் களிற்றின்
ஈட்டம் எண்ணிலாப் புரவி மான்தேர் ஏமமாய்ப் பின்னர் ஏக அண்ணல்வாள்
அவுண வீரர் அமைச்சர்கள் அயலிற் செல்ல விண்ணுலாம் புரிசைக் கோயில்
வீதிகள் கடந்து சென்றான்.
| 12 |
| 469
|
கோயிலின் எல்லை நீங்கிக் கோபுரங் கெழீஇய கொற்ற
வாயிலின் மருங்கு செல்ல மன்னவன் வரவு நோக்கிக் காய்கதிர்த் தபனற்
கண்ட கலிவியன் உலக மென்ன ஆயிர நூறு வௌ¢ளத் தவுணரும் புடைசூழ்ந்
தார்த்தார்.
| 13 |
| 470
|
வேறு அன்ன காலையில் அரிமுகன் சேய்அதி
சூரன் துன்னு தாரகன் சுதன்அசு ரேந்திரத் தொல்லோன் என்ன நின்றிடும்
மைந்தர்கள் இருவரும் ஏகி மன்னர் மன்னனை அடைதலும் இனையன வகுப்பான்.
| 14 |
| 471
|
திரைகொள் வேலைபோல் நிறைதரு கோட்டகஞ்
சிறிதோர் கரையி லாவழி யுடைந்திடும் அன்னது கடுப்பப் பொருதி றற்படை
பலவுள என்னினும் போற்றும் அரச ரில்வழி நின்றிடா தன்னவை அழியும்.
| 15 |
| 472
|
ஆத லால்இனி நீர்இரு வீர்களும் அமரின் மேத
கும்பெருஞ் சேனைக்கு முதல்வராய் மேவிப் போதிர் முன்னுற என்றலும்
நின்றிடு புதல்வர் ஈது நன்றென வணங்கியே ஏகினர் இமைப்பில்.
| 16 |
| 473
|
தந்த மான்தடந் தேர்மிசை ஏறியே சமரில் கொந்து
லாமலர் வாகையை மிலைச்சிய குமரர் வந்த நாற்பெரும் படையையும் அணிபெற
வகுத்து முந்து தானையந் தலைவராய் ஏகினா¢ முறையால்.
| 17 |
| 474
|
ஆகும் எல்லையில் அங்கது நோக்குறா அடுபோர் வாகை
கொண்டநூ றாயிர வௌ¢ளத்து மறவோ£¢ ஓகை எய்தியே அமர்புரி பறந்தலை உன்னி
ஏகல் மேயினர் பணிகளுஞ் சேடனும் இரங்க.
| 18 |
| 475
|
வேறு கடந்திகழ் கரிதேர் பாய்மாக் கலந்திடத்
தானை வீரர் படா¢ந்திடு கின்ற காலைப் பருமணி வயிரத்
தேர்மல் அடைந்திடும் அவுணர் மன்னர் அளக்கரில் வடவை சுற்றவ விடந்தனி
நடந்த தென்ன விண்ணவர் மருளச் சென்றான்.
| 19 |
| 476
|
தொண்டகந் துடியே பம்பை தூரியம் முருடு
கோடு திண்டிறற் படகம் மொந்தை திமிலையே தடாரி தக்கை கண்டைஆ குளியே
பீலி காகளம் உடுக்கை பேழ்வாய் கொண்டதோர் பதலை சங்கம் குடமுழா இயம்பிற
றம்மா.
| 20 |
| 477
|
தட்டுடை நெடுந்தேர் ஆர்ப்பும் தந்தியின் ஆர்ப்பு
சேண்போய் முட்டுறு கொடிகள் ஆர்ப்பும் முரட்பரி ஆர்ப்பும்
வீரர் கட்டுறு கழலின் ஆர்ப்பு ம்கணிப்பில்பல் லியத்தின்
ஆர்ப்பும் எட்டுள திசையும் எல்லா வுலகுமுண் டெழுந்த அன்றே.
| 21 |
| 478
|
நீனிற முகில்போல் மேனி அவுணர்கள் நீத்தஞ்
செல்லக் கானிறை பூழி ஈட்டங் ககனமேற் செல்ல முன்னம் தானுறு கின்ற
காலைச் சசியென்த் தயங்கிப் பின்னர் மீனெனக் கரந்தான் மேலாம் விரிகதிர்
படைத்த வெய்யோன்.
| 22 |
| 479
|
நேசமொ டென்பால் வைகும் நெறியினார் தமக்கு
வீடும் ஆசறு பதங்கள் யாவும் வைகலும் புரிவேன் என்னை ஏசுவர் போலுங்
கீழென் றிகல்புரிந் திடுவன் என்னாத் தூசிபார் விடுத்த தேபோல் துறக்கமேற்
சென்ற பூழி.
| 23 |
| 480
|
கன்னிறை அழித்த மொய்ம்பிற் கார்கெழும் அவுண
வௌ¢ளம் துன்னுற நடப்பச் செல்லுந் தூளியின் படலைச் செய்கை என்னென
உரைப்பன் அம்மா இந்திர னென்போன் வைகும் பொன்னுல கதனை வல்லே பூவுல
காக்கிற் றன்றே.
| 24 |
| 481
|
கண்ணகல் தடந்தேர் மீதுங் காய்சினக் களிற்றின்
மீதும் நண்ணிய கொடிகள் வான்போய் நளிர்புனற் கங்கை நக்கி மண்ணுறச்
சிதறி ஆடி அலமரல் மகேந்தி ரத்தின் அண்ணல்இன் றழிவன் என்றே அழுதிறம்
போலும் மாதோ.
| 25 |
| 482
|
திங்கள்வெண் குடையும் நீலத் திருநிழற் கவிப்புஞ்
செங்கேழ்ப் பங்கய மலர்ந்த தன்ன பருமணிக் கவிகை முற்றுந் தொங்கலின்
தொகையும் வெய்யோன் தொல்கதிர் வரவு மாற்றி எங்கணுஞ் செறிவுற் றூழி
இருளினை விளக்கிற் றம்மா.
| 26 |
| 483
|
வேறு ஆனவியல் பெய்தஅவு ணப்படைக
ளோடும் வானெறிகொ டேஅவுணன் வையமிசை செல்லத் தானதுதெ ரிந்தமரர்
தம்மிறைவன் ஓடிக் கானமர்க டம்பன்அடி கைதொழுது சொல்வான்.
| 27 |
| 484
|
அன்றுபுரி வேள்வியிடை ஆதியருள்
செய்த துன்றுபடை ஈட்டமொடு சூரனெனும் வெய்யோன் இன்றுபொரு வான்விரைவின்
ஏகினன் எதிர்ந்தே சென்றவனை வென்றெமது சீர்அருளு கென்றான்.
| 28 |
| 485
|
ஆம்பரிசு கூறஅவ னுக்கருள் புரிந்தே ஏம்பலுறு
கேசரியின் ஏற்றணையின் நீங்கிப் பாம்பின்வலி செற்றுலவு பாகுதனை
நோக்கி வாம்பரிகொள் நம்மிரதம் வல்லைதரு கென்றான்.
| 29 |
| 486
|
என்றிடலும் நன்றென எழுந்துலவை அண்ணல் குன்றனைய
தேரது கொணர்ந்துமுனம் உய்ப்ப வென்றிஅயில் அண்ணல்அதன் மீமிசை
புகுந்தான் மன்றல்மலா¢ சிந்திஅயன் மாலொடு வழுத்த.
| 30 |
| 487
|
செழுந்தருண மேதகைய தோன்மிசை வானோர் தொழுந்தலைவ
னாகியமர் தொல்முருகன் ஏறக் கொழுந்தழல் முடித்தனைய குஞ்சிகெழு
பூதர் எழுந்தனர் தெழித்தனர் இருங்கடலும் அஞ்ச.
| 31 |
| 488
|
நாட்டமொரு மூன்றுடைய நாதனருள்
மைந்தன் வாட்டமறு வெவ்வவுணர் மன்னன்வலி தன்னை வீட்டும்வகை
சென்றிடுதல் விண்ணவர் உரைப்பக் கேட்டனிக பூதர்கள் கிளர்ந்துபடர்
கின்றார்.
| 32 |
| 489
|
பாரிடர்க ளாய்அறுமு கற்பரவு கின்ற பாரிடர்ந
டப்பவெழு பூழிபடர்ந் தின்னோர் பாரிடர்பு £¤ந்தனர் பரிக்குமெனை
யென்னாப் பாரிடம்விண் ணோடுபகர் தற்கெழுதல் போலும்.
| 33 |
| 490
|
தக்கையொ டுடுக்கைதுடி சல்லரி தடாரி தொக்குடைய
தண்ணுமை துவைப்பின்மிகு பேரி மெய்க்குடமு ழாப்படகம் வீணைகுழல்
ஆம்பல் கொக்கரை இயம்பினர்கள் கோடிகண நாதர்.
| 34 |
| 491
|
நாடுதவ நாரதனும் நல்லுவணர் தாமும் கேடிலிசை
வல்லதொரு கின்னரரு மாகிப் பாடினர்கு மாரன்அடி பன்முறை
பணிந்தே ஆடினர்கள் விண்ணவரும் ஆசில்முனி வோரும்.
| 35 |
| 492
|
சண்முகன தேவல்கொடு தாவில்இளை யோனும் எண்மரும்இ
லக்கர்களும் ஈண்டிய கணத்தின் வண்மைகெழு மன்னவரும் வையமிசை
யாகித் திண்மைபடை ஊக்கமொடு சேனையிடை சென்றார்.
| 36 |
| 493
|
மொய்ம்மலி படைத்தலைவர் முந்தியுறு
தானை இம்முறையி னாலொழுக ஈசனருள் மைந்தன் செம்மணிவில் வீசியமர்
தேரினிடை ஏகிப் பொம்மலுறு தானவர்கள் போர்முனை அடைந்தான்.
| 37 |
| 494
|
அடைந்தபொழு திற்புவியும் அந்தரமு
மாகி மிடைந்துவரு சூரனிகம் வெய்தென வளைந்த தொடா¢ந்துநுகர் தீவலிதொ
லைத்துமென முந்நீர் படர்ந்துபுடை சுற்றியிடு பான்மையது போல.
| 38 |
| 495
|
வேறு வளைந்திடு காலையில் வயவெம்
பூதர்கள் கிளர்ந்தனர் தெழித்தனர் கெழுவு தானவா¢ தளந்தனை அடர்த்தனர்
அவருந் தாக்கினர் விளைந்தது பெருஞ்சமர் விண்ட தண்டமே.
| 39 |
| 496
|
மாச்சினை மரங்களும் வரையுந்
தண்டமும் தீச்சிகைக் கழுமுளும் திகிரி நேமியும் மீச்செலுங் கவண்கலும்
வேலும் நாஞ்சிலும் ஓச்சினர் பூதர்கள் ஒன்ன லார்கள்மேல்.
| 40 |
| 497
|
மெய்ப்படும் அவுணர்கள் வெகுண்டு
வில்லுமிழ் அப்பொடு கணிச்சிதண் டாழி நாஞ்சில்வேல் முப்புகா இலைப்படை
முசலம் முற்கரம் கப்பணஞ் சிதறினர் கணங்கள் தம்மிசை.
| 41 |
| 498
|
பற்றுவர் கரிகளைப் பரியி னங்களை எற்றுவர்
பா£¢தனில் எறிவர் மாதிரஞ் சுற்றுவர் விண்ணிடைக் கிழிப்பர்
துண்ணென முற்றுடல் எருத்தினை முரித்துச் சிந்துவார்.
| 42 |
| 499
|
இரதமொ ராயிரம் எடுத்துச் செங்கையில் பொருகளி
ராயிரம் புரள மோதுவர் கரிகளொ ராயிரங் கரங்கொண் டேற்றியே பரிபதி
னாயிரம் பாரின் வீட்டுவார்.
| 43 |
| 500
|
பாய்பரி யாயிரப் பத்துப் பாணிகொண் டாயிர
கோடியாம் அவுணர் தங்களைச் சேயிரு நிலத்திடைச் சிதையச்
சிந்துவார் காய்கனல் சொரிதருங் கடுங்கட் பூதரே.
| 44 |
| 501
|
குரங்குளைப் புரவியர் குஞ்ச ரத்தினர் இரங்குறு
தேரினர் நிலத்தின் ஏகினோர் வரங்கெழும் அவுணர்கள் வளைந்து
பூதரைச் சரங்களில் பிறவினில் தடிதல் மேயினார்.
| 45 |
| 502
|
மலைதனைச் சிந்துவர் மறங்கொள்
பூதர்தாள் நிலைதனைச் சிந்துவர் நெடுங்கை சிந்துவர் கொலைதனைச்
சிந்துவர் கொய்வர் மொய்ம்பினைத் தலைதனைச் சிந்துவர் தறுகட் டானவர்.
| 46 |
| 503
|
இவ்வகை மாறுகொண் டிகல்செய் கின்றுழித் தெவ்வடு
பூதர்தஞ் சேனை மன்னர்கள் அவ்விடை ஏன்றுநின் றமர்இ யற்றுழி வெவ்வசு
ரப்படை மிகவும் மாய்ந்ததே.
| 47 |
| 504
|
பொன்றிகழ படையொடு புவியும்
வானுமாய் நின்றிடும் அவுணா¢கள் நீடு தொல்பிணக் குன்றுரு வாகியே
குருதி யாற்றிடைச் சென்றனர் அளக்கரைத் திடர தாக்குவார்.
| 48 |
| 505
|
நீடிய வேற்படை நிமலன் காணுற வீடினம் யாமினி
வெய்ய தோற்றமேற் கூடுவ திலையெனக் குனிக்கு மாறுபோல் ஆடிய உடற்குறை
அனந்த கோடியே.
| 49 |
| 506
|
வேறு மானப் படைசேர் அவுணப் படையும் வயமான்
தேர்ப்படையும் ஏனைப் படையும் முடிவுற் றிடவே இவ்வா
றிகல்செய்யுங் கூனற் சடிலப் பூதப் படையின் கொற்றந் தனைநோக்கித் தானை
தலைவன் அதிசூ ரனெனுந் தனயன் வெகுளுற்றான்.
| 50 |
| 507
|
தேரா யிரமா யிரமங் கொருபாற் சேமத்
தொடுசெல்லக் காரா யிரமுற் றனதன் படிவங் கதிர்காள் இமைசார ஈரா யிரமாம்
இவுளித் தொகைபூண் டீர்க்குந் தேர்மீதே ஓரா யிரமாங் கதிர்போல் அழலா உரனோ
டுறுகின்றான்.
| 51 |
| 508
|
வா£¢வில் லதனை விரைவில் குனியா வடிவா
ளிகள்போக்கிச் சோர்வில் லவனும் எதிர்கின் றனரைத் துணிசெய்
தனன்நிற்ப ஓர்வில் லொருவன் தனியே இவண்வந் துறுபோர்
புரிகின்றான் போர்வில் லறிவன் இவனே எனவே புகல்கின் றனர்பூதர்.
| 52 |
| 509
|
ஓதக் கடல்போல் அலமந் தலமந் துலையா
இகல்செய்யும் பூதர்க் கிறைஉக் கிரனென் றொருவன் புகைதீ
யுமிழ்கண்ணான் மேதக் கசலந் தரனா£¢ உடலம் வீழும் படிகீண்ட சோதிக்
கடவுட் படையுண் டுமிழுந் தொல்லோன் இகல்வல்லோன்.
| 53 |
| 510
|
எண்டா னவருக் கிறைவன் குமரன் இகல்செய்
திடுமாறு கண்டான் முனியா விரைவில் படர்வான் காலன்
திறல்கொள்ளும் தண்டா னதுகொண் டவனேர் குறுகித் தடமார்
பிடையோச்ச விண்டான் இவனென் றவுணப் படையோர் வெருவா அலமந்தார்.
| 54 |
| 511
|
மாறா கியஉக் கிரன்ஏ வுதலும் வருதண்
டவன்மார்பில் கூறா கியசா லிகைசிந் திடவே கொதியா வருகின்றான் பாறா
டுகளத் திடையீங் கிவனைப் பலியூட் டுவனென்னா நூறா யிரம்ஆ சுகமோர்
தொடையின் நொய்திற் செலவெய்தான்.
| 55 |
| 512
|
வெய்தாம் அயில்வா ளிகள்உக் கிரன்மேல் விறல்சோ¢
அதிசூரன் எய்தான் அதுமற் றவன்மேற் படவே எருவைப் பெருநீத்தம் எய்தான்
முழுதும் பெருகுற் றிடலும் விழுமத் தொடுசெற்றஞ் செய்தான் ஒருமால்
வரைகொண் டவுணன் தேர்மேற் செலவுய்த்தான்.
| 56 |
| 513
|
அதிர்பொற் கழலான் விடுதிண் கிரியால் அதிசூ
ரன்மான்தேர் பிதிர்பட் டிடலும் புவிமேற் படர்தல் பிழையா
மெனவுன்னா உதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர் மிசைநீலக் கதிருற்
றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன் மிடல்தீர்ப்பான்.
| 57 |
| 514
|
வேறு பாயும் வேலைஅப் பல்மணித் தேரினை ஏய
ஆற்றல்கொண் டீர்த்திடும் வாசிகள் மாயும் வண்ணம றம்புரி உக்கிரன் சீய
மாமெனச் சென்றுதைத் தானரோ.
| 58 |
| 515
|
உதைக்க வெய்யவன் ஒண்பரி பாரிடைப் பதைத்து
வீழ்தலும் பையுளின் மாழ்கியே சிதைப்பன் இந்தச் சிறியனை
என்றுமெய் புதைப்ப நூறு பொருசரந் தூண்டினான்.
| 59 |
| 516
|
தூண்டு கின்ற் சுடர்க்கணை யாவையும் ஈண்டி
யேதன் எதிருறும் பெற்றியைக் காண்ட லுங்கதை கைக்கொடவ்
வுக்கிரன் மீண்டி டும்படி வீசிநின் றார்க்கவே.
| 60 |
| 517
|
வேறொர் தேரிடை வெய்தென எய்தியே ஊறு நீங்கிய
உக்கிரற் கண்ணுறீஇ மாறி தெய்வத மாப்படை தொட்டுனை ஈறு காண்பன் இறந்தனை
நீயெனா.
| 61 |
| 518
|
முன்னு பூசை முதலிய யாவையும் முன்னி யேநின்
றொருங்குடன் செய்தபின் வன்னி மாப்படை வாங்கி வணங்கியே மின்னு
தண்சுடர் மீக்கொள வீசினான்.
| 62 |
| 519
|
ஆசை தோறும் அழல்சிந்த மாற்றலன் வீசு வெம்படை
வீரத்தை நோக்கியே ஈசன் மைந்தன் இணைமலர்த் தாள்களை நேச மோடு
நினைந்தனன் போற்றினான்.
| 63 |
| 520
|
எவ்வெ வர்க்கும் இறையவ னாகியோன் அவ்வ ழித்தன்
அருள்செய உக்கிரன் செவ்வி திற்செலுந் தீச்சரம் பற்றியே கவ்வி
நுங்கினன் கண்கனல் கான்றிட.
| 64 |
| 521
|
நுங்கு வான்றனை நோக்கி அரிமுகன் துங்க மாமகன்
தொல்புனல் மாப்படை பொங்கு சண்டப் பொருபடை ஏவலும் அங்க வற்றையும்
பற்றி அருந்தினான்.
| 65 |
| 522
|
காற்றின் வெம்படை ஏவினன் கைதவன் ஆற்றல்
உக்கிரன் அன்னது நுங்கினான் தேற்று கின்றுழிச் செய்தவம் அன்றியே ஏற்ற
மான இரும்பொருள் யாவதோ.
| 66 |
| 523
|
மற்றும் அவ்வதி சூரன் மலரயன் ஒற்றை வெம்படை
ஓச்சலும் உக்கிரன் பற்றி நுங்கவப் பங்கயன் தாதைபால் பெற்றி ருந்த
பெரும்படை ஏவினான்.
| 67 |
| 524
|
ஒய்யெ னச்சென் றுருகெழு நாரணன் பொய்யில்
மாப்படை போந்திட ஆங்கதுங் கையில வாங்கிக் கதுமென வாய்க்கொளா வெய்ய
உக்கிரன் மேயினன் என்பவே.
| 68 |
| 525
|
ஆன காலை அரிமுகன் காதலன் யானி னிச்செய்
இயற்கையென் னேயிவன் தானவ் வீசன்கொல் கண்ணன்கொல் தாமரை மேனி லாவிய
வேதன்கொ லோவென்றான்.
| 69 |
| 526
|
மூவ ராகிய மூர்த்திகள் அல்லதை ஏவ ரேமற்
றிதுசெயும் பெற்றியார் ஆவ னாவன் அவர்க்குள் இவனெனாத் தேவர் மாற்றலன்
பின்னருஞ் செப்பினான்.
| 70 |
| 527
|
சீற்றங் கொண்ட அவுணர் திரைக்கடல் தோற்றங்
கொண்டசவ் சூர்கெழும் உக்கிரன் ஏற்றங் கண்டுழி என்செய்தும்
என்றனர் கூற்றங் கொண்ட உயிரிற் குலைந்துளார்.
| 71 |
| 528
|
அண்ணல் வாசவ னாதிய ராகிய எண்ணில் வானவர்
யாவரும் இச்செயல் கண்ணு றாஇகல் கண்டருள் நான்முகப் பண்ண வன்முன்
பணிந்திது கூறுவார்.
| 72 |
| 529
|
எங்க ளால்வரும் எண்ணில் பெரும்படை செங்க
ணான்படை தீயநின் மாப்படை அங்கி யாவும் அணுகஇப் பூதா¢கோன் நுங்கு
மாறென் நுவலுதி என்னவே.
| 73 |
| 530
|
இந்தி ராதியர் கேண்மின்கள் ஈங்கிவன் அந்தி
வான்சடை அண்ணல் வரத்தினான் கந்தன் எந்தை கழலிணை போற்றியே வந்து
ளான்எவ் வலியையும் ஆற்றுவான்.
| 74 |
| 531
|
எம்மை யாளுடை ஈசன் அருள்பெறுஞ் செம்மை யானவன்
செம்பொற் சிலம்படி மும்மை யுந்தொழு முத்திபெற் றான்இவன் எம்மி
னும்பெரி யான்என்றும் ஈறிலான்.
| 75 |
| 532
|
மைக்க ருங்கடல் வண்ணன்முன் ஏவிய சக்க ரம்நுக
ருந்தவத் தோனினும் மிக்க ஆற்றலன் வெற்றியின் மேலையான் உக்கி ரன்னென்
றுரைத்திடும் பேரினான்.
| 76 |
| 533
|
பண்டு நாமருள் பல்படை யாவையும் உண்ட தோவியப்
பொல்லையில எல்லையில் அண்ட முஞ்சிதைத் தாக்குவன் ஈங்கிவன் கொண்ட
தொல்புகழ் கூறத் தொலையுமோ.
| 77 |
| 534
|
என்ன நான்முகன் எண்ணி இயம்பலும் அன்ன
கேட்டலும் அண்டர்கள் யாவருந் துன்னு சென்னி துளக்கிப்
பெருந்திறல் இன்னு மாக இவற்கென் றியம்பினார்.
| 78 |
| 535
|
வேறு வான மேலிது நிகழ்ந்துழி மாறிலா
அவுணர் சேனை காவலன் பூதனை நோக்கிநிற் சிதைப்பல் ஊன மாகிய படையென
உன்னலை உமைபால் ஞான நாயகன் படைதொடு வேனென நவின்றான்.
| 79 |
| 536
|
மந்தி ரந்தனிற் பூசனை முதலிய வகுத்துச் சிந்தை
மேலுறு வௌ¤யோ டரன்படை செலுத்த அந்த மில்லதோர் உலகெலாம் முறுவலால்
அடர்க்கும் எந்தை கொண்டதோ ருருவெனத் தோன்றிய திமைப்பில்.
| 80 |
| 537
|
நஞ்சும் ஆரழல் நாகமும் நடுவன துருவும் விஞ்சு
பூதமுங் கணங்களும் வேறுபல் படையும் எஞ்ச லில்லதோர் அங்கியும் போற்ற
எவ்வுலகும் அஞ்சி டும்படி நடந்ததால் அரன்படை யதுவே.
| 81 |
| 538
|
ஈசன் மாப்படை வருதலும் உக்கிரன் என்னும் ஆசில்
வீரன்றன் அங்கையிற் கதையினை அகற்றிப் பாச நீக்குமஞ் செழுத்தினை விதிமுறை
பன்னி நேச மோடுகை தொழுதரன் பொன்னடி நினைந்தான்.
| 82 |
| 539
|
ஆண்டை உக்கிரன் நிற்றலும் அஞ்சலி
புரிவான் மாண்ட தொல்படை இல்லவன் துதிசெயும் வாயான் ஈண்டி வன்றனை
அடுகிலன் யானென எண்ணி மீண்டு சென்றது சிவனருள் படைக்கலம் விரைவில்.
| 83 |
| 540
|
அண்ண லம்படை துறந்தவர் மேல்விடின்
அவர்பால் நண்ணு றாதுநம் பக்கல்வந் திடுமென நல்க விண்ணு லாம்புகழ்
அவுணர்கோன் பெறுதலின் விடையூ£¢ பண்ண வன்றனை அடைந்ததாங் கவனருள் படையே.
84
| 16 |
| 541
|
ஆன பெற்றிகண் டிங்கிவன் சிவன்கொலென்
றயிர்த்துச் சேனை காவலன் துளங்கினன் பூதர்கள் சிறந்தார் வானு
ளோர்மலர் மாரிகள் தூர்த்தனர் மாறாம் ஏனை வீரர்கள் விழிபொழி தாரைகாண்
றிரிந்தார்.
| 85 |
| 542
|
நீங்கு கின்றதோர் தானவர் குழுவினை
நீவிர் ஏங்கு கின்றதை விடுமின்கள் என்றுதேர் இழிந்து பாங்கர்
உற்றதோர் தண்டுகொண் டரிமுகன் பாலன் வீங்கு தோளிடை எற்றினன் உக்கிரன்
வெகுண்டான்.
| 86 |
| 543
|
எற்று தண்டினை அங்கையால் உக்கிரன்
என்போன் பற்றி வாங்கியே அவன்றன துரம்பதை பதைப்பத் தெற்றெ னப்புடைத்
திடுதலும் நிலனிடைச் சேர்ந்தான் மற்ற வன்றன துயிர்கொடு போயினன் மறலி.
| 87 |
| 544
|
துஞ்சி வீழ்அதி சூரனை நோக்கியே துகடீர் மஞ்சு
போலவே வரும்அசு ரேந்திரன் மனமும் நஞ்சு மாமெனக் கொதித்தனன் அழலெழு
நகையா விஞ்சு பூதர்தங் குழுவின்மேற் சென்றனன் விரைவின்.
| 88 |
| 545
|
கடிது சென்றசு ரேந்திரன் இந்திரன்
கரத்தின் நெடிய வில்லினும் ஆயிரத் திரட்டிமேல் நிமிர்ந்த கொடிய
வார்சிலை வாங்கியே குணத்தொலி கொளுவப் படியும் வானமுங் குலைந்தன
உயிரெலாம் பதைப்ப.
| 89 |
| 546
|
பூதர் அங்கது நோக்கியே தண்டமும்
பொருப்பும் பாத வங்களுந் தாரகன் தந்திடு பதகன் மீது சென்றிட
விடுத்தலும் அனையன விலக்கிச் சோதி வெங்கணை இறுதிநாள் முகிலெனச்
சொரிந்தான்.
| 90 |
| 547
|
வடிகொள் வார்ணை விடுத்தலும் பூதர்கள்
வலிதின் விடுபி றங்கலே முதலிய இடையிடை வீட்டி முடியுங் கைகளும் ஆகமும
முகத்தொடு மொய்ம்பும் அடியுஞ் சோ£¤நீர் கான்றிட அழுந்திய அவர்பால்.
| 91 |
| 548
|
மற்றும் வெங்கணை உலப்பில தூண்டலும்
மண்மேல் அற்ற கைகளுந் துணிந்திடு தோள்களும் அடியும் இற்ற கண்டமு
மாகிவெம் பூதர்கள் இறப்பக் கொற்ற வீரா¤ல் கனகன்என் பவன்எதிர் கொண்டான்.
| 92 |
| 549
|
எதிர தாய்வரு கனகன்மேல் தாரகன் ஈந்த அதிரும்
வார்கழல் அன்னலோ£¢ வடிக்கணை அழுத்த உதிர வாரியோ டன்னவன் தேர்மிசை
உற்றான் கதிரின் மேல்வரு செய்யகோ ளாமெனக் கடிதின்.
| 93 |
| 550
|
பாகன் தன்னுயிர் உலந்திட உதைத்துவெம்
பனைக்கை நாகந் தந்திடு மதலைதன் வரிசிலை நாணைக் காகம் போலவௌ¢
ளெயிற்றினாற் கீறிவெங் கறைசேர் மேகந் தாரணி மிசைஇழிந் தாலென மீண்டான்.
| 94 |
| 551
|
இழிந்து மால்வரை ஒன்றுகீண் டசுரரிந்
தினாங் கழிந்த சீர்த்தியான் மீமிசை ஓச்சலுங் கரத்தின் அழிந்த
வில்லினை நீத்துவே றொருசிலை அதனைக் குழிந்த கண்ணுடைப் பூதர்கள்
வெருக்கொளக் குனித்தான்.
| 95 |
| 552
|
குனித்து நான்கிரு சுடுசரந் தொடுத்தறை
கூவித் தனித்து மேல்வருங் கனகன்ஏ வியகிரி சாய்த்துப் புனிற்றி
ளம்பிறை செக்கர்வான் நுழைந்தெனப் புயங்கள் பனித்தி டும்படி அழுத்தினன்
ஆயிரம் பகழி.
| 96 |
| 553
|
பகழி ஆயிரம் படுதலும் ஆடகன் பையுள் நிகழ
நிற்றலும் வேறொரு வலவனை நிறுவிப் புகழில் தானவன் தேர்கொடு பூதர்மேற்
போத அகழு மால்வரை ஒன்றெறிந் துன்மத்தன் ஆர்த்தான்.
| 97 |
| 554
|
அவன்எ றிந்திடும் பருப்பதம் விரைவில்வந்
தடர்க்கக் கவன வெம்பரி யாயின உலந்தன காணாப் பவன வேகத்தின் வேறொரு
தேர்மிசைப் பாய்ந்தான் புவனம் உண்ணிய நின்றதோர் கடவுள போல்வான்.
| 98 |
| 555
|
முந்து வெங்கணை உலப்பில தூண்டலும்
முந்நீர் செந்து கிர்க்கொடி போர்த்தெனக் குருதிநீர் செறிய வந்த
முற்றிலன் புவிமிசை இருந்தனன் ஆங்கே மந்தன் என்பவன் தாரகன் புதல்வன்நோ
வந்தான்.
| 99 |
| 556
|
வருத லோடும்ஆங் கவன்மிசை ஐயிரு வாளி குருதி
காலுற வழங்கலும் எரியெனக் கொதியாய் பரிதி மேவரத் தகுவதோர் பருப்பதம்
பறித்துக் கருதி ஏவினன் அவுணர்கோன் அங்கது கண்டான்.
| 100 |
| 557
|
சென்று மார்பெதிர் ஏற்றலும் வந்துழித்
தெறித்துக் குன்று மீண்டுமற் றவன்புடை போயது கொடியோன் ஒன்று போலிய
ஆயிரம் பகழிகள் உய்த்தான் நின்று மந்தன் அங்கயர்ந்தனன் சிங்கனும்
நேர்ந்தான்.
| 101 |
| 558
|
எடுத்து மால்வரை ஒன்றவன் உரத்தின்நேர்
எறியத் தடுத்தொர் வாளியின் அகற்றினன் அமரிடைத் தரியார் விடுத்த
தோர்கதை எறிதலும் அவனது விலக்கித் தொடுத்து நூறுகோல் அழுத்தினன்
சிங்கனும் தொலைந்தான்.
| 102 |
| 559
|
ஒழிந்த சாரதத் தலைவர்க ளியாவரும்
உடன்றே அழிந்து நின்றனர் தாரகன் குமரன்ஆ சுகங்கள் பொழிந்து மற்றுள
பூதரை முடித்திடும் போதில் கழிந்த துன்பொடும் இலக்கரில் தண்டகன்
கண்டான்.
| 103 |
| 560
|
தனது கார்முகம் வாங்கியே தண்டகப்
பெயரோன் முனையி ருங்கணை ஆயிரங் கொடியவன முகத்தின் நனிபு குந்திட
விடுத்தலும் நடலையுற் றிரங்கி மனமவெ குண்டுபின் தன்பெருஞ் சிலையினை
வளைத்தான்.
| 104 |
| 561
|
வளைத்து நாலிரண் டம்பினைத் தண்டக
மறவோன் குளத்தின் மேற்பட விடுத்தலும் எழுந்தன குருதி இளைத்து
நின்றனன் தேர்மிசை அன்னவற் கிளையோன் கிளத்து சோமுகன் தாரகன் மகன்எதிர்
கிடைத்தான்.
| 105 |
| 562
|
எதிர்பு குந்தவன் அகலமேல் ஐம்பதிற்
றிரட்டி கதிர்தெ றுங்கணை அவுணர்கோன் அழுத்தலுங் கவலா அதிர்த ருந்தன
தொண்சிலை வாங்கியா யிரமாம் நுதிகொள் வெஞ்சரந் தூண்டினன் சோமுகன்
நொடிப்பில்.
| 106 |
| 563
|
பல்ல வங்களா யிரமும்அத் தாரகன் பாலன் சில்லி
யந்தனித் தேரினை வலவனைச் சிதைப்ப மெல்ல வேறொரு தேர்மிசைப் பாய்ந்துவேல்
ஒன்றை ஒல்லை இங்கிவன் உயிரினை உண்கென உய்த்தான்.
| 107 |
| 564
|
உய்த்த வேல்அவன் அகலமேற் படுதலும்
முயங்கி எய்த்து மற்றவன் தேர்மிசை மயங்கினன் இருப்ப நித்தன் வேர்வுறு
சோமுகற் கிளையவன் நெடுமால் ஒத்த வன்மையன் விசயன்என் பவன்கடி துற்றான்.
| 108 |
| 565
|
விசயன் ஆங்கொரு கொடுமரம் வாங்கியே
வெகுண்டு நிசித வெங்கணை ஆயிரம் உய்த்துநே ரில்லா அசுரர் இந்திரன்
வலவனைத் தடிந்துமற் றவன்கை இசையும் வில்லொடு நாரியைத் துணிபட இறுத்தான்.
| 109 |
| 566
|
முற்று நூலுணர் பாகுயிர் உலத்தலும்
முனியா இற்ற நாணொடு வார்சிலை துணியினை ஏந்திக் கொற்ற மார்அசு
ரேந்திரன் மத்திகை கொண்டு பொற்றை அன்னதன் தேர்விடு வலவனின் பொலிந்தான்.
| 110 |
| 567
|
தகுவர் கோன்ஒரு வலவனை நிறுவியோர்
தண்டம் இகலும் வன்மையால் எடுத்தனன் அவன்மிசை எறியப் புகுது
மெல்லையில் கண்டெதிர் விசயனாம் புகழோன் மிகவும் எல்லையில் சரங்களைத்
தூண்டினன் விடுத்தான்.
| 111 |
| 568
|
தொட்ட தொட்டன கணையெலாந் துகள்படத்
தொலைத்து மட்டு லாந்தொடை விசயன்மார் பகத்திடை வந்து பட்ட காலையில்
அவன்றன திரதமேற் பதைத்து விட்ட வில்லொடு குருதியுந் தானுமாய்
வீழ்ந்தான்.
| 112 |
| 569
|
விழுந்த காலையில் இலக்கரில் ஏனையோர்
வெகுண்டு பொழிந்த வாளியால் தாரகன் மகனொடு பொருதே அழிந்தி யாவரும்
இரிந்தனர் போதலும் அதுகண் டுழந்த துன்பொடு வீரமொய்ம் பினன்விரைந்
துற்றான்.
| 113 |
| 570
|
வீர வாகுவேள் இணையடி போற்றியே வெகுண்டோர் கோர
வெஞ்சிலை வாங்கினன் நாணாலி கொளுவி யாரும் வானவர் வியபபுற அவுணர்கள்
அயரத் தார காசுரன் மதலையை மறைத்தனன் சரத்தால்.
| 114 |
| 571
|
மறைப்ப மெய்யெலாங் குருதிகொண் டிடலும்வல்
லவுணன் றிற்க டுஞ்சிலை ஒன்றினை வளைத்தவன் மிசையே பிறைத்த லைக்கணை
ஆயிரம் அழுத்தினன் பெரிதும் உறைத்த செம்புனல் இருவரும் இளங்கதிர்
ஒத்தார்.
| 115 |
| 571
|
தார கத்திற லான்மகன் தூண்டியேழ்
சரத்தால் சூரர் இத்திறல் அண்ணல்கைச் சிலைதனைத் துணிப்ப வீரன் மற்றொரு
கார்முகம் வாங்கியே விடங்கால் கூர யிற்கணை ஆயிரம் விடுத்தனன் குறியால்.
| 116 |
| 573
|
ஏகும் வார்கணை தாரகன் மகன்சிலை
இறுத்துப் பாகன் ஆவியுண் டிரதமோ டயங்களைப் படுப்ப வாகை இன்றியே
வேறொரு தேர்மிசை வறியன் போக லோடுமற் றன்னது கண்டனர் புலவோர்.
| 117 |
| 574
|
வெருவ ரப்பொருந் தாரகன் மதலையை வீரன் பொருது
வெற்றிகொள் வான்கொலாம் இனியெனப் புகழ்ந்தார் அரிய அற்புத மோவவன்
வென்றிடல் அவுணன் கா¤த ருஞ்சுதன் சிம்புளின் சுதனிவன் கழறின்.
| 118 |
| 575
|
மாறொர் தேரிடைப் பாய்ந்தவன் ஒருதனு
வளைத்து நூறு கோல்விடுத் தவன்இர தத்தினை நூறச் சீறி வானெழீஇ வீரவா
குப்பெயர்த் திறலோன் ஆறு மாமுக முதல்வனைப் பரவிநின் றார்த்தான்.
| 119 |
| 576
|
உறைக ழித்துவாள் உருவியே உம்பரிற்
படர்ந்து சிறைக ழித்திடும் வரைபுரை அவுணர்கோன் தேர்மேல் குறைக
ழித்திடும் பணிகவர் மதியெனக் குப்புற் றிறைக ழிக்குமுன் அவன்றனைக்
கையிலொன் றெறிந்தான்.
| 120 |
| 577
|
எறிந்த காலையில் இற்றதோர் கைத்தலம்
இறலுங் குறைந்த கையிடைச் சலசல இழிவன குருதி செறிந்த நீலவொண் கிரிதனக்
கொருபுடை சென்றே உறைந்த தோர்கரும் பணியழல் மணியுமிழ்ந் தொப்ப.
| 121 |
| 578
|
கைய றுத்தலுந் தாரகன் தன்சுதன் கனன்று மொய்யு
டைக்கதை ஒன்றெடுத் தவன்மிசை மோத ஒய்யெனத் *திறல் மொய்ம்பினன் வானெழுந்
தொருதன் செய்ய பொற்பதத் துதைத்தனன் அங்கவன் சிரத்தில். ( * பா-ம் -
திரள்.)
| 122 |
| 579
|
காமர் தாளினால் உதைத்துவிண் படர்தலுங்
கண்டு தூம மார்விழி யான்அசு ரேந்திரன் தொடர்ந்தோர் சேம வாள்கொடு
வானெழ மேலையோன் சீறி ஏம நாந்தகத் தால்அவன் தலையற எறிந்தான்.
| 123 |
| 580
|
எறிந்த சென்னியு மியாக்கையும் இப்பரின்
வீழ்ந்து மறிந்து மற்றவன் மன்னுயிர் போயது வான்மேற் செறிந்த விண்ணவர்
ஆர்த்தனர் இன்னதோர் செய்கை அறிந்த தானவக் கடலெலாம் ஓடின அன்றே.
| 124 |
| 581
|
மக்க ளாயினர் இருவரும் இறந்தது மலைந்து பக்க
மேயின தானைகள் இரிந்ததும் பாராத் தொக்க பேரழல் உலகட எழுந்ததோற்
றம்போல் மிக்க சீற்றமேற் கொண்டனன் அண்டங்கள் வென்றான்.
| 125 |
| 582
|
சீற்ற மேதகு காசிபன் மதலைபோர் செய்யும் ஆற்ற
லார்தமை அடுவனால் விரைந்தென மதித்துக் காற்றின் முந்துசெல் தேரிடைக்
கடிதுவந் தெய்திக் கூற்றின் வெம்பசி தணிப்பகோர் சிலையினைக் குனித்தான்.
| 126 |
| 583
|
வாணி போற்றிடு சயமகள் வீரமா மடந்தை நீணி
லைப்பட வேறுசோ பானத்தின் நெறிபோல் பூண ளாவிய பொன்னவாஞ் சிலைதனிற்
புணர்த்த நாணின் ஓதையைக் காட்டினன் அணிவிரல் நகத்தால்.
| 127 |
| 584
|
கரங்கொள் வில்லொலி கேட்டலும் பாரிடைக்
கணங்கள் மரங்கள் சிந்தினர் சிகரிகள் சிந்தினர் மலையும் உரங்கள்
சிந்தினர் வீரமுஞ் சிந்தினர் உடலுஞ் சிரங்க ளானவும் பனித்திட ஓடினர்
சிதறி.
| 128 |
| 585
|
யாண்டு மாகியே இரிந்தனர் அல்லதிந் நிலத்தில்
வீண்டு ளார்சிலர் பதைத்துநின் றார்சிலர் வீழ்ந்து மாண்டு ளார்சிலர்
மயக்கமுற் றார்சிலர் மற்றும் ஆண்டு பன்னிரண் டொழிந்தில தவுணன்வில்
அரவம்.
| 129 |
| 586
|
வேதன் அஞ்சினன் மால்முடி துளக்கினன்
விண்ணோர் நாதன் அஞ்சினன் மறலியும் அஞ்சினன் நடுங்கிக் கோதில் நல்லறம்
அஞ்சின ஐவகை கொண்ட பூதம் அஞ்சின உயிர்த்தொகை அஞ்சின பொருமி.
| 130 |
| 587
|
வஞ்சன் வார்சிலை நாணொலி கேட்டலும்
மறத்தால் விஞ்சு பூதமீ ராயிர வௌ¢ளமும் வெருவி எஞ்சி யேயவண் நின்றிடா
தி£¤ந்துள வென்றால் அஞ்சு பூதங்கள் அஞ்சுவ தற்புதத் தனவோ.
| 131 |
| 588
|
சூரன் விற்பெரு முழக்கினைக் கேட்டலுந்
துளங்கிப் பாரி டத்தொகை அழிதர அன்னது பார்த்துப் போரி யற்படைத்
தலைவர்நூற் றெண்மரும் புகுந்து மாரி யிற்பொழந் திட்டனர் வரைகளும்
மரமும்.
| 132 |
| 589
|
அன்ன வேலையிற் பத்துநூ றாயிர கோடி பொன்னின்
வெங்கணை அவுணர்கோன் முறைமுறை போக்கித் தன்னு ழைப்புகும் வரையொடு
தருக்களைத் தடிந்து துன்னு பாரிடத் தலைவர்தம் யாக்கையைத் துளைத்தான்.
| 133 |
| 5901
|
முடிது ளைத்தனன் முகத்தினைத் துளைத்தனன்
மொய்ம்பைத் தொடையல் மார்பினைத் துளைத்தனன் பாணியைத் துளைத்தனன் கடிது
ளைத்தனன் குறங்கினைத் துளைத்தனன் கழல்சேர் அடிது ளைத்தனன் பாரிடத்
தலைவரும் அயர்ந்தார்.
| 134 |
| 591
|
துளைத்து மெய்யினை வெஞ்சரம் போதலுந்
துயர்கொண் டிளைத்து நின்றனன் அதிபலன் வக்கிரன் என்போன் களைத்து
வீழ்ந்தனன் வச்சிரன் இரங்கினன் கபாலி உளத்தின் வன்மைய தழிந்தனன்
உன்மத்தன் உலைந்தான்.
| 135 |
| 592
|
நீடு குன்றினை யேந்தியே அச்சுதன் நின்றான் ஓடு
கின்றிலன் எதிர்ந்திலன் மாபலன் உளைந்தான் வாடு கின்றனன் மதிசயன் மேகனும்
மருண்டான் ஆடு றுந்துயர் அறிந்தனன் அண்டவா பரணன்.
| 136 |
| 593
|
மேக மாலிஉ நடுங்கினன் சுப்பிரன்
மெலிந்தான் காக பாதன்மெய் பதைத்தனன் உதவகன் கவன்றான் ஆகம வீழ்ந்திடு
குருதியுள் அழுந்தினன் அசலன் மாக வந்தன்நொந் திரங்கினன் அத்திரி
மறிந்தான்.
| 137 |
| 594
|
பத்தி ரன்சிறி திடைந்தனன் உடைந்தனன்
பதுமன் எய்த்த சைந்தனன் வியாக்கிரன் தனஞ்சயன் இரிந்தான் மத்தன்
வைதுவெய் துயிர்த்தனன் பினாகிமெய் மறந்தான் சித்தி ராங்கனுங் கனகனுந்
துயர்க்கடல் திளைத்தார்.
| 138 |
| 595
|
நெஞ்ச ழிந்தனர் மாலியும் நீலனும்
நெடுங்கண் பஞ்ச டைந்தனர் கும்பனும் நிகும்பனும் பதைப்புற் றஞ்சி
ஏங்கினர் சண்டியுந் தண்டியும் ஆவி துஞ்சல் கூடினர் வாமனுஞ் சோமன்என்
பவனும்.
| 139 |
| 596
|
வெங்கண் உக்கிரன் எழுவதற் குரனிலன்
வெகுண்டான் சிங்கன் ஓய்ந்தனன் சுவேதசீ ரிடன்மறந் தீர்ந்தான் சங்க
பாலன்வீழ்ந் துருண்டனன் நந்தியுஞ் சலித்தான் பிங்க லன்உயிர்க் கின்றிலன்
உரோமசன் பெயர்ந்தான்.
| 140 |
| 597
|
இனைய தன்மையால் இவர்முத லானநூற் றெண்மர் அனிக
வேந்தர்கள் போர்வலி இன்றியே அழியத் துனைய மற்றது கண்டுநூ றாயிரத்
தொகையோர் கனையும் வார்சிலை வாங்கியே தூர்த்தனர் கணைகள்.
| 141 |
| 598
|
தூர்த்து மற்றவர் மாறுகொண் டிடுவுழச்
சூரன் வேர்த்து வெங்கணை மாரிதூய் அனையன விலக்கி ஆர்த்து வெஞ்சரம்
ஆயிர கோடிதொட் டங்கண் மூர்த்தம் ஒன்றினில் அனையவர் சிலைகளை முரித்தான்.
| 142 |
| 599
|
முரித்து மற்றவர் வார்சிலை யெடுப்பதன்
முன்னம் திரித்தும் ஆயிர கோடிவெங் கணையினைச் செலுத்திப் பரித்தி
றம்பல பூண்டிடுந் தேர்களைப் படுத்தி உரத்தில் அன்னவர்க் கிலக்கமா
யிரங்கணை உய்த்தான்.
| 143 |
| 600
|
உய்த்த வாளிகள் நெஞ்சுபோழ்ந் திடுதலும்
உளைந்தே எய்த்து வீழ்ந்தனர் இலக்கரும் அனையகண் டிரங்கி வித்த கங்கெழு
வீரமார்த் தாண்டனாம் விடலை கைத்த லங்கெழு சிலையொடு நேர்ந்தனன் கடிதின்.
| 144 |
| 601
|
வாங்கு வில்லினன் எறிந்தநாண் ஒலியன்வார்
கடல்கள் ஏங்கும் ஆர்ப்பினன் அவுணன்மேற் கணையெனும் எழிலி தூங்கு
வித்தலுஞ் சரங்கள்தூய் அன்னவை தொலைத்துத் தீங்க டுங்கணை ஆயிரம்
நுதலிடைச் செறித்தான்.
| 145 |
| 602
|
செறித்த காலையில் வீரருள் வெய்யவன்
செயிர்த்து மறித்தும் வெஞ்சரந் தூண்டவே ஆயிரம் வாளி குறித்து வீசியே
அவன்விடு கணையொடுங் குனிவில் அறுத்து ரம்பிளந் தம்புபெய் தூணியும்
அட்டான்.
| 146 |
| 603
|
அட்ட காலையில் வீரமார்த் தாண்டன்உள்
ளழுங்கிப் பட்டு ளானென வீழ்ந்தனன் பரிசது நோக்கி ஒட்ட லான்வலி
அடக்குவன் யானென உருத்து விட்ட தேரொடும் வந்தனன் அரக்கனாம் விறலோன்.
| 147 |
| 604
|
வந்த வீரராக் கதனெனும் நாமத்து வலியோன் கொந்து
லாந்தொடை தூங்குதன் கொடுமரங் குனியா ஐந்து நூற்றிரண் டடுசரந் துரந்திட
அதுகால் உந்தி ஆர்த்தனன் அவுணர்கோன் ஒராயிரங் கணைகள்.
| 148 |
| 605
|
முட்டு வெங்கணை வீரராக் கதனெனும்
மொய்ம்பன் தொட்ட வாளியை விலக்கிஅங் கவன்சிலை துணிக்க நெட்டி
ருஞ்சுடர் வாளமொன் றேந்திநீள் விசும்பில் எட்டு மாதிரக் கரிகளும்
வெருவஆர்த் தெழுந்தான்.
| 149 |
| 606
|
விண்ணெ ழுந்தவன் அவுணர்கோன் நின்றிடும்
வியன்தேர்க் கண்ணில் வாவியே ஆங்கவன் கொண்டகார் முகத்தைத் துண்ணெ
னச்சுடர் நாந்தகத் தெறிதலுஞ் சூரன் வண்ண வார்சிலை முடிந்தில தொடிந்தது
மணிவாள்.
| 150 |
| 607
|
நெடிய வாட்படை இற்றிட விறலுடை நிருதன் தொடையல்
மார்பகத் தெற்றுவான் முயறலுஞ் சூரன் படையி ழந்திடும் வலியிலற் கொல்வது
பழியென் றடியின் மேற்படுத் தெறிந்தனன் அண்டமேற் செல்ல.
| 151 |
| 608
|
அரக்கர் வீரனை அவுணர்கோன் எறிந்திட
அலமந் திரக்கம் எய்தியே வீழந்தனன் புவிமிசை இதுகண் டுரக்க டுங்கணை
மாரிகள் ஒன்னலன் தேரும் கரக்க வீசிவந் தேற்றனன் மகேந்திரன் கடியோன்.
| 152 |
| 609
|
சூரன் அங்கது விலக்கியே கணைமழை துரப்ப வீரன்
மற்றது சிந்தினன் பகழிகள் வீசிச் சாரி வட்டம தாய்வர அவுணனுந்
தக்கோன் தேரை வட்டணை வந்தனன் சிலீமுகஞ் சிதறி.
| 153 |
| 610
|
திரியும் வட்டணை முறையினாற் சரமழை சிதறி வருதி
றத்தினால் ஐயம தாவவர் வடிவை ஒருதி றத்தருந் தௌ¤கிலர் உணர்ந்திட
அற்றோ இருதி றத்தரும் வீரமா மகேந்திரர் என்றால்.
| 154 |
| 611
|
ஆள ரிக்குடன் வந்தவன் அத்துணை அழன்று கோள
ரிக்குடன் வந்தவன் விடுசரங் குறைத்துத் தாளின் முப்பது மருமமீ திருபது
தடம்பொற் றோளின் முப்பது கணைவிடுத் தவன்வலி தொலைத்தான்.
| 155 |
| 612
|
வலிதொ லைந்தவன் வீழ்தலும் மாக்களின்
தொகைமேல் புலிய டைந்தென அவுணர்கோன் உரப்பினன் புகலும் மெலிவில்
ஆற்றலன் வீரதீ ரன்னெனும் வெய்யோன் சிலைகு னிந்திடப் பகழிவான்
நிமிர்ந்திடச் சென்றான்.
| 156 |
| 613
|
சென்ற வீரதீ ரன்விடு கணையொடு சிலையை ஒன்றொ
ராயிரம் வாளியால் வீட்டியே உயர்ந்த குன்ற மன்னதோர் தேரையேழ் கணையினால்
குறைப்ப நன்று நன்றெனாத் தண்டமொன் றெடுத்துமேல் நடந்தான்.
| 157 |
| 614
|
நடத்த லாகிய எல்லையில் பகழியோர்
நான்கு தொடுத்து மற்றவன் ஏந்திய தண்டினைத் துணித்துத் தடத்த
மார்பினும் மொய்ம்பினும் ஏழிரு சரங்கள் விடுத்து மண்மிசை வீட்டினன்
யாரையும் வென்றான்.
| 158 |
| 615
|
ஆன காலையில் வீரமா மகேசனாம் அடலோன் கூனல்
வில்லினால் அரிதிவன் தன்வலி கோடல் மான மார்திறல் மொய்ம்பற்கும் எனமனம்
வலியா ஊனும் ஆவியும் கவர்வதோர் தெய்வவேல் உய்த்தான்.
| 159 |
| 616
|
வேல்வி டுத்துழிக் கண்டவன் வெஞ்சிலைக்
குனித்துக் கோல்வி டுத்தலும் ஆயிரம் அன்னவை குறைத்துச் சூல்வி
டுத்திடும் எழிலிபால் மின்வரும் தொடர்பின் மால்வி டுத்திடா அவுணன்மார்
புற்றதவ் வைவேல்.
| 160 |
| 617
|
உற்ற தோரெ·கம் நுண்டுக ளாகிவிண்
ணுலவிச் சுற்று மாதிரஞ் சென்றது சூரன்மேல் வீரன் மற்றொர் தண்டினை
விடுத்திட எடுக்குமுன் வல்லோர் சொற்ற சாபத்தின் முந்தும்ஏழ் கணையினைத்
தொடுத்தான்.
| 161 |
| 618
|
ஏழெ னப்படும் பகழயும் மகேசனாம்
ஏந்தல் பாழி மொய்ம்பினைப் பாழிய தாகவே படுத்த வீழல் உற்றதங் கவன்உடல்
உணர்ச்சிகள் வீந்த சூழு கின்றதோர் மன்னுயிர் அடைந்தது துரியம்.
| 162 |
| 619
|
மகேசன் என்பவன் மயங்கலும் மற்றது
நோக்கிக் ககேசன் மேல்வரும் இராகுவின் அவுணனைக் கனன்று நகேசன்
மங்கையோடிகலிவேங் கடகிரி நண்ணுங் குகேசன் ஏவல்செய் வீரகே சரியெதிர்
கொண்டான்.
| 163 |
| 620
|
எதிர்பு குந்தவன் வணக்கியே நாணொலி
யெறிந்த துதிகொள் வார்சிலை தன்னையேழ் கணையினால் துணியா அதிகு
ரல்மணித் தேரைநூ றம்பினால் அறுத்து நுதிநெ டுங்கணை அழுத்தின் ஆயிர
நுதலின்.
| 164 |
| 621
|
ஆயி ரங்கணை நுதலிடை அழுத்தஅம் புவியில் பாய்த
ருங்குரு திப்பெரு நதியொடு பாய்ந்து சேயி ருங்குவ டொன்றினைச் செங்கையால்
பறித்து மாயை தந்திடு மதலைமேல் விடுத்தனன் மன்னோ.
| 165 |
| 622
|
எறித்த ருஞ்சுடா¢த் தபனனுஞ் சேடனும்
இரங்கப் பறித்தெ டுத்துமேல் வீசிய பராரையங் குன்றம் வெறித்த ருந்தொடை
அவுணர்கோன் விசிகமொன் றதனால் அறுத்து மார்பினூ றயிற்கணை அழுத்தினன்
அம்மா.
| 166 |
| 623
|
கரம்பு குந்திடுங் குனிசிலை உமிழ்ந்திடுங்
கணைகள் உரம்பு குந்திட வீரகே சரிமனம் உளைந்து பரம்பு குந்திடும்
அவுணர்கோன் தேர்மிசைப் பாயா வரம்பு குந்தகுன் றன்னமார் பத்திடை
அடித்தான்.
| 167 |
| 624
|
வடித்த விற்படை அவுணர்கோன் மருமத்தின்
வலிதாய் அடித்த காலையில் வீரகே சரிதன தங்கை வெடித்த தாமெனக் கீண்டது
விண்டது சோரி துடித்து யிர்ப்பொடு தேரிடை மறிந்தனன் துயரால்.
| 168 |
| 625
|
வீர கோளரி பதைத்துமான் தேரிடை வீழச் சூரன்
மற்றிவற் கொல்வது பழியெனச் சூழா ஓர்கை யால்அவன் தனையெடுத் தச்சுதன்
உறங்கும வாரி திக்கிடை எறிந்தனன் விண்ணவர் மருள.
| 169 |
| 626
|
பரந்த பாற்கடல் எறிதலும் வீழ்ந்தவன்
பதைப்புற் றரந்தை எய்தியே எழுந்துவிண் ணெறியின்மீண் டணுகி முரிந்த
தம்மினங் கூடினன் அங்கதன் முன்னம் புரந்த ரப்பெய்£ வாகையான் ஏற்றெதிர்
புகுந்தான்.
| 170 |
| 627
|
ஏற்றெ திர்ந்திடு வீரமா புரந்தரன்
என்பான் ஆற்றல் வெங்கணை சொரிந்துபோர் செய்வனேல் அவற்றை மாற்றி
வென்றிடும் என்னையும் இவனென மதித்துக் கூற்று வன்படை தொட்டனன் அவுணனைக்
குறுக.
| 171 |
| 628
|
குறுகும் அப்படை வரத்தினை நோக்கியே
கொடியோன் முறுவல் செய்தனன் ஆங்கதற் கெதிருற முரணால் உறுவ தோர்படை
தொட்டிலன் இகழ்ந்திட உவன்மேல் மறலி தன்படை பட்டுமாய்ந் திட்டது
வரத்தால்.
| 172 |
| 629
|
தண்ட கன்படை மாய்தலுஞ் சயங்கெழு மகவான் முண்ட
கன்படை எடுத்தனன் தொடுப்பதன் முன்னம் கண்ட கன்சிலை வாங்கிநூ றாயிரங்
கணையை விண்ட கன்பெரு மார்பகந் திறந்திட விடுத்தான்.
| 173 |
| 630
|
நிறந்த ருஞ்சுடர்க் கணைபுகுந் துரத்தினை
நெறியாத் திறந்து போயின வீரமா புரந்தரன் செங்கை உறைந்த நான்முகப்
படையொடுஞ் சோரிநீ£¢ உமிழ்ந்து மறிந்து மாய்ந்தனன் வந்தனன் வீரர்தம்
மறலி.
| 174 |
| 631
|
தீர ராந்திறல் அவுணர்கள் பூதராஞ் சிதைவார் சூர
ராஞ்சிலை வல்லவர் நமரெலாந் தொலையும் நீர ராஞ்செருச் செயலிது நன்றென
நிகழ்த்தி வீர ராந்தகன் வந்தனன் அந்தகன் வெருவ.
| 175 |
| 632
|
சார்ங்கம் அன்னதோ£¢ வலியதாய் மாமதன்
தனுவாம் ஈர்ங்க ரும்பென அரிபடு சிலைகுனித் தேற்றுக் கார்ங்க ரும்புய
லாமென நாணொலி காட்டிக் கூ£¢ங்கொ டுங்கணை சிதறிநின் றார்ப்பிசை கொண்டான்.
| 176 |
| 633
|
ஆ£¢ப்பெ டுத்தலும் அஞ்சினன் கதிரவன்
அங்கம் வேர்ப்பெ டுத்தனர் அமரர்கள் விஞ்சையர் விண்டார் சீர்ப்பெ
டைக்குலம் அலமரக் கின்னரஞ் சிந்திப் பார்ப்பெ டுத்திரி கின்றன கேசரப்
பறவை.
| 177 |
| 634
|
ஆன காலையில் வீரரந் தகன்விடும் அம்பின் சோனை
மாரியைக் கணைகளால் விலக்கியே சூரன் ஊனும் ஆவியுங் கவருமா யிரங்கணை
உய்ப்பத் தானும் ஆயிரம் பகழிதொட் டன்னதைத் தடுத்தான்.
| 178 |
| 635
|
தடுத்த காலையில் அவுணர்கோன் சினவிமுத்
தலைசேர் வடித்த வச்சிரச் சிலீமுகம் ஆயிரம் வல்லே எடுத்து விட்டிட
வீரரந் தகன்றமக் கெதிரா விடுத்த பல்லவம் யாவையுஞ் சிந்தியே விரைந்த.
| 179 |
| 636
|
விரைந்து போய்விறல் அந்தகன் தேரினை
வீட்டிக் கரந்த னிற்சிலை ஒடித்துவீ ரத்தினைக் கலக்கி உரந்த
னிற்புகுந் துணர்வுண்டு சோரிநீர் உகுத்துப் புரந்த ரற்குளந் துணுக்குறப்
போயது புறத்தில்.
| 180 |
| 637
|
விறல்ப டைத்திடும் அந்தகன் கணைபட
வீழ்¢ந்து மறல்ப டைத்திட ஆங்கது நோக்கியே மனத்தின் உறல்ப டைத்திடு
செற்றமும் மானமும் உகைப்பத் திறல்ப டைத்திடு மொய்ம்பினான் அவுணன்மேற்
சென்றான்.
| 181 |
| 638
|
அரிகள் அச்சுறும் வீரவா குப்பெயர்
அறிஞன் இரதம் ஊர்ந்துவந் தேற்றலும் ஆங்கவன் எழில்சோ உருவ நோக்குறா
ஒற்றனாம் இவனென உன்னிப் பெரிது வெஞ்சினம் எய்தியே அவுணர்கோன் பேசும்.
| 182 |
| 639
|
எமது வீரமா மகேந்திரஞ் சாடிஎண் ணில்லாத் தமரை
அட்டனை தானைகள் அளப்பில தடிந்தாய் குமரர் தங்களைக் கொன்றனை நின்னுயிர்
கொண்டே அமரின் ஆற்றலை இன்றொடே முடிக்குவன் அம்மா.
| 183 |
| 640
|
பற்று பட்டிமை பயிற்றியே அமைச்சரின்
பன்னி ஒற்ற னாகியே இன்னும்வந் தாயெனின் உய்தி மற்ற தேகடன் வார்சிலை
பிடித்தனை மாண்டாய் இற்றை வைகலோ நின்னுயிர்க் கிழைத்தநாள் என்றான்.
| 184 |
| 641
|
தூதும் ஆகுவன் அமைச்சனும் ஆகுவன்
துன்னார் மீது வெஞ்சமர் ஆற்றுவன் இன்னமும் வேலோன் ஓதி டும்பணி
யாவையுஞ் செய்குவன் உலகில ஏதும் வல்லன்யான் வேண்டுபோ£¢ புரிதியால்
என்றான்.
| 185 |
| 642
|
என்று வீரனோ திடுதலும் எரிந்தன நயனம் தின்ற
வாளெயி றிதழினை உரோமங்கள் சிலித்த துன்று சீற்றமுள் ளெழுந்தது சூரனாம்
அவுணன் குன்ற மன்னவிற் குனித்தனன் நாணொலி கொண்டான்.
| 186 |
| 643
|
சிலைப னித்திடக் குனித்திடு காலையிற்
செம்பொன் மலைப னித்தன பாரகம் பனித்தன வானதோய் அலைப னித்தன அண்டமும்
பனித்தன அங்கண் தலைப னித்தனன் அரவினுக் கிறையவன் தானும்.
| 187 |
| 644
|
வேறு அம்முறை வேலையில் ஆடல்கொள
மொய்ம்பின் செம்மல்த னாது செழுங்கர முற்ற மைம்மலி வார்சிலை வன்மையின்
வாங்கிக் கொம்மென நாணொலி கொண்டனன் ஆர்த்தான்.
| 188 |
| 645
|
ஆர்த்திடு பேரொலி ஆங்கவன் வாங்குஞ் சீர்த்தனு
ஆர்ப்பொடு சென்றிடு காலை மூர்த்தம தொன்றினின் முச்சக
வைப்பும் பேர்த்தென வேபெயர் குற்றன அன்றே.
| 189 |
| 646
|
அங்கது காலையில் ஆயிர கோடி துங்கநெ டுங்கணை
தூர்த்தனன் ஆர்ப்பப் புங்கவ னுக்கிளை யான்புய லென்ன வெங்கணை வீசி
விலக்கினன் நின்றான்.
| 190 |
| 647
|
|