|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > கந்த புராணம் - Kantha Puranam > பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) > உற்பத்திக் காண்டம் (726- 1328) > உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) > யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - 3. மகேந்திர
காண்டம் / படலம்
1-12 (1 - 639)
kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 3 (verses 1 - 639
)
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2007. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 1. வீரவாகு கந்தமாதனஞ்செல் படலம் | 1-53 |
| 2. கடல்பாய் படலம் | 54- 72 |
| 3. வீரசிங்கன் வதைப் படலம் | 73-89 |
| 4. இலங்கை வீழ் படலம் | 90-117 |
| 5. அதிவீரன் வதைப் படலம் | 118-154 |
| 6. மகேந்திரஞ் செல் படலம் | 155-182 |
| 7. கயமுகன் வதைப் படலம் | 183-237 |
| 8. நகர்புகு படலம் | 238-336 |
| 9. சயந்தன் புலம்புறு படலம் | 337 -417 |
| 10. சயந்தன் கனவுகாண் படலம் | 418-445 |
| 11. வீரவாகு சயந்தனை தேற்று படலம் | 446-480 |
| 12. அவைபுகு படலம் | 481-639 |
உ
செந்திலாண்டவன்
துணை
திருச்சிற்றம்பலம்
3 மகேந்திர காண்டம்
1. வீரவாகு கந்தமாதனஞ்செல் படலம் (1-53)
1
விரிஞ்சன்மால் தேவ ராலும் வெலற்கரும் விறலோ னாகிப்
பெருஞ்சுரர் பதமும் வேத வொழுக்கமும் பிறவு மாற்றி
அருஞ்சிறை அவர்க்குச் செய்த அவுணர்கோன் ஆவி கொள்வான்
பரஞ்சுடர் உருவாய் வந்த குமரனைப் பணிதல் செய்வம்.1
2
இந்திர னாதி யான அமரரும் எனை யோரும்
புந்தியில் உவகை பூப் புடைதனில் ஒழுகிப் போற்றச்
செந்திமா நகரந் தன்னில் சீயமெல் லணைமேல் வைகுங்
கந்தவேள் அருளின் நீரால் இனையன கருத லுற்றான்.2
3
நான்முக னாதி யான நாகரும் முனிவ ரும்போல்
மேன்முறை அவுண ராகும் வியன்தொகை யவரும் எங்கோன்
கான்முளை நெறிய ரேனுங் கடியரை முடிவு செய்தல்
நூன்முறை இயற்கை யாகும் நுவலரும் அறனும் அதே.3
4
இற்றிது துணிபா மேலும் எண்ணெழிற் சூரன் றன்னை
அற்றமில் சிறப்பின் வைகும் அவன்றமர் தம்மை எல்லாஞ்
செற்றிடல் முறைய தன்றால் தேவர்தஞ் சிறைவிட் டுய்ய
மற்றவன் தனக்கோர் ஒற்றை வல்லையில் விடுத்து மன்னோ.4
5
தூண்டுநம் மொற்றன் மாற்றஞ் சூரனாம் அவுணன் கேளா
ஈண்டிடு சிறையின் நீக்கி அமரரை விடுப்பன் என்னின்
மாண்டிட லின்றி இன்னும் வாழிய மறுத்து ளானேல்
ஆண்டுசென் றடுதும் ஈதே அறமென அகத்துட் கொண்டான்.5
6
வடித்தசெங் கதிர்வேல் அண்ணல் மாலயன் மகவா னாதி
அடுத்தபண் ணவரை நோக்கி அவுணர்தங் கிளையை யெல்லாம்
முடித்திடப் பெயர்தும் நாளை முன்னமோர் தூதன் றன்னை
விடுத்தனம் உணர்தல் வேண்டும் வெய்யசூர் கருத்தை என்றான்.6
7
கடலுடைக் கடுவை உண்டோன் காதலன் இனைய செப்ப
மடலுடைப் பதுமப் போதில் வைகினோன் மாயன் கேளா
அடலுடைப் பெரும்போர் எந்தை ஆற்றுமுன் சூரன் முன்னோர்
மிடலுடைத் தூதன் றன்னை விடுத்தலே அறத்தா றென்றார்.7
8
என்றலுங் குமர மூர்த்தி இப்பெருந் திறலோர் தம்முள்
வென்றிகொள் சூரன் றன்பால் வீரமா மகேந்திர ரத்துச்
சென்றிட விடுத்தும் யாரைச் செப்புதி ரென்ன லோடு
நன்றென அதனை நாடி நான்முகன் நவிற லுற்றான்.8
9
மெல்லென உலவைக் கோனும் வீர மகேந்திர த்திற்
செல்லரி தெனக்கு மற்றே செய்பணி நெறியால் அன்றி
ஒல்லையில் அங்கண் ஏகி ஒன்னலர்க் கடந்து மீள
வல்லவன் இனைய வீர வாகுவே ஆகு மென்றான்.9
10
சதுர்முகன் இனைய வாற்றால் சண்முகன் உளத்துக் கேற்பக்
கதுமென உரைத்த லோடுங் கருணைசெய் தழகி தென்னா
மதுமலர்த் தொடையல் வீர வாகுவின் வதனம் நோக்கி
முதிர்தரும் உவகை தன்னால் இத்திறம் மொழிய லுற்றான்.10
11
மயேந்திர மூதூ ரேகி வல்லைநீ அமலன் நல்குஞ்
சயேந்திர ஞாலத் தேரோன் தனையடுத் தொருநாற் றந்தக்
கயேந்திரன் மதலை வானோர் காப்பைவிட் டறத்தா றுன்னி
நயேந்திர வளத்தி னோடும் உறைகென நவிறி யன்றே.11
12
அம்மொழி மறுத்து ளானேல் அவுணநின் கிளையை யெல்லாம்
இம்மென முடித்து நின்னை எ•கவேற் கிரையா நல்கத்
தெம்முனை கொண்டு நாளைச் செல்லுதும் யாமே யீது
மெய்ம்மைய தென்று கூறி மீள்கென வீரன் சொல்வான்.12
13
வெந்திறல் அவுணர் ஈண்டும் வீரமா மகேந்தி ரத்திற்
சுந்தரத் திருவின் வைகுஞ் சூரபன் மாவின் முன்போய்
எந்தைநீ அருளிற் றெல்லாம் இசைத்தவ னுள்ளம் நாடி
வந்திடு கின்றேன் என்னா வணங்கியே தொழுது போனான்.13
14
கூர்ந்திடு குலிசத் தண்ணல் குமரவேள் ஒற்றன் தன்பின்
பேர்ந்தனன் சென்று வீர பெருந்திறற் சூரன் மூதூர்
சார்ந்தனை சிறையில் வானோர் சயந்தனோ டிருந்தா ரங்கட்
சேர்ந்தனை தேற்றிப் பின்னுன் செயலினை முடித்தி யென்றான்.14
15
அவ்வழி யமரர் கோமான் அனையன அறைத லோடுஞ்
செவ்விது நிற்றி யற்றே செய்வனென் றவனை நீங்கி
எவ்வமில் துணைவ ராகும் எண்மரும் இலக்கத் தோரும்
மெய்வருந் தொடர்பிற் செல்லக் கண்ணுறீஇ விடலை சொல்வான்.15
16
நீயிர்கள் யாருங் கேண்மின் நெடுந்திரைப் பரவை வாவித்
தீயதோர் மகேந்திரத்திற் சென்றுசூர் முன்போய் நந்தம்
நாயகன் பணித்த மாற்றம் நவிலுவன் மறுத்து ளானேல்
ஆயவன் மூதூர் முற்றும் அட்டபின் மீள்வன் அம்மா.16
17
என்றலும் வியந்து பின்னோர் யாவரும் இறைஞ்ச லோடும்
பொன்றிகழ் ஆகத் தூடு பொருந்துறப் புல்லிக் கொண்டு
வன்றிறற் பூதர் தம்முள் மன்னவ ரோடும் அங்கண்
நின்றிட வருளி வல்லே நெடுங்கடல் வேலை போந்தான்.17
18
அலங்கலந் திரைகொள் நேமி அகன்கரை மருங்கின் மேரு
விலங்கலின் உயர்ந்த கந்த மாதன வெற்புத் தன்னில்
பொலங்குவ டுச்சி மீது பொள்ளென இவர்த லுற்றான்
கலன்கலன் கலனென் றம்பொற் கழலமா¢ கழல்கள் ஆர்ப்ப.18
19
புஞ்சமார் தமாலச் சூழல் பொதுளிய பொதும்பர் சுற்றி
மஞ்சுநின் றறாத கந்த மாதனப் பிறங்கல் உம்பர்
விஞ்சுநுண் பொடிதோய் மேனி மேலவன் இருவரும் பான்மை
அஞ்சன வரைமேல் வௌ¢ளி யடுக்கல்சென் றனைய தன்றே.19
20
கடுங்கலி மான்தேர் வெய்யோன் கையுற நிவந்த செம்பொன்
நெடுங்கிரி மிசைபோய் வீரன் நிற்றலும் பொறையாற் றாது
நடுங்கிய துருமுற் றென்ன நனிபகிர் வுற்ற தங்கள்
ஒடுங்கிய மாவும் புள்ளும் ஒல்லென இரிந்த வன்றே.20
21
உண்ணிறை புள்ளும் மாவும் ஒலிட ஒலிமேல் கொண்டு
துண்ணென அருவி தூங்கத் தோன்றிய குடுமிக் குன்றம்
அண்ணலைத் தரிக்கல் ஆற்றேன் அளியனேன் அந்தோ வென்னாக்
கண்ணிடை வாரி சிந்தக் கலுழுதல் போலு மாதோ.21
22
அடல்கெழு திண்டோள் வீரன் அடிகளின் பொறையாற் றாது
விடர்கெழு குடுமி வெற்பு வெருவலும் ஆண்டை வைகும்
படவர வுமிழ்ந்த செய்ய பருமணி சிதறும் பான்மை
உடல்கெழு குருதி துள்ளி உகுக்குமா றொப்ப தன்றே.22
23
அறைகழல் அண்ணல் நிற்ப அவ்வரை அசைய அங்கண்
உறைதரு மாக்கள் அஞ்சி ஒருவில வெருவி விண்மேல்
பறவைகள் போய துன்பம் பட்டுழிப் பெரியர் தாமுஞ்
சிறியரும் நட்டோர்க் காற்றுஞ் செயல்முறை கா கின்ற.23
24
மழையுடைக் கடமால் யானை வல்லியம் மடங்கல் எண்கு
புழையுடைத் தடக்கை யாளி பொருப்பசை வுற்ற காலை
முழையிடைத் தவறி வீழ்வ முதியகா லெறியப் பட்ட
தழையுடைப் பொதும்பர் பைங்காய் தலைத்தலை உதிர்க்கு மாபோல்.24
25
நன்றிகொள் பரிதிப் புத்தேள் நகுசிர மாக என்றூழ்
துன்றிருஞ் சடில மாகச் சுரநதி தோயத் திங்கள்
ஒன்றொரு பாங்கர் செல்ல ஓங்கிரும் பிறங்கல் உச்சி
நின்றதோர் விசயத் தோளான் நெற்றியங் கண்ணன் போன்றான்.25
26
வலமிகு மொய்ம்பின் மேலோன் மலர்க்கழல் உறைப்ப ஆற்றா
தலமரு குவட்டின் நிற்றல் அன்றுதீ முனிவர் உய்த்த
கொலைகெழு முயல கன்மெய் குலைந்திடப் புறத்துப் பொற்றான்
நிலவணி சடையோன் ஊன்றி நின்றிடு நிலைமை நேரும்.26
27
மாசிருள் செறியும் தெண்ணீர் மறிதிரை அளக்கர் வேலைப்
பாசடைப் பொதும்பர் வெற்பிற் பண்ணவன் தூதன் நிற்றல்
காசியில் அரற்றத் தள்ளிக் களிறுடல் பதைப்பக் கம்மேல்
ஈசன்அன் றடிகள் ஊன்றி இருத்திய இயற்கை போலும்.27
28
தாரகன் படைஞர் பல்லோர் சமரிடை இரிந்து போனார்
பாரிடை யுறாமே அந்தப் பருவரை முழைக்கண் உற்றார்
வீரமொய்ம் புடையோன் அங்கண் மேவலும் அவற்கண் டேங்கி
ஆருயி ருலந்தார் தீயோர்க் காவதோர் அரணம் உண்டோ.28
29
அனையதோர் சிமையக் குன்றம் அசைதலும் அங்கண் உற்ற
வனைகழல் விஞ்சை வேந்தர் மங்கையர் ஊடல் மாற்றி
இனிதுமுன் கலந்தார் அஞ்சி இன்புறா திடைக்கண் நீத்து
வினைவிளை வுன்னி நொந்து விண்மிசை உயிர்த்துச் சென்றார்.29
30
வரைமிசை நின்ற அண்ணல் வனைகழல் அவுணர் கோமான்
பொருவரு நகர்மேற் செல்லப் புந்திமேற் கொள்ளா எந்தை
திருவுரு வதனை உன்னிச் செங்கையால் தொழுது மாலும்
பிரமனும் வியந்து நோக்கப் பேருருக் கொண்டு நின்றான்.30
31
பொன்பொலி அலங்கல் தோளான் பொருப்பின்மேற் பொருவி லாத
கொன்பெரு வடிவங் கொண்டு குலாய்நிமிர் கொள்கை செவ்வேள்
முன்பொரு ஞான்று மேரு முடியில்வந் தமரர்க் கெல்லாந்
தன்பெரு வடிவங் காட்டி நின்றதோர் தன்மை யாமால்.31
32
ஆண்டகை நெடுந்தோள் வீரன் அண்டமேல் மவுலி தாக்க
நீண்டிடும் எல்லை அன்னான் நின்றிடு குன்ற ஞாலங்
கீண்டது பிலத்திற் சேறல் கேடில்சீர் முனிகை யூன்ற
மீண்டுபா தலத்திற் புக்க விந்தமே போலு மாதோ.32
33
விண்ணவர் உய்த்த தேர்மேல் மேவலர் புரம்நீ றாக்கும்
பண்ணவன் ஒருதாள் ஊன்றப் பாதலம் புகுந்த வாபோல்
கண்ணகல் வரையும் வீரன் கழல்பட அழுந்திற் றம்மா
அண்ணலந் தாதை வன்மை அருள்புரி மகற்கு றாதோ.33
34
கன்றிய வரிவிற் செங்கைக் காளைபொற் றாளும் அந்தண்
குன்றொடு பிலத்துட் செல்லக் குறிப்பொடு விழிக்கு றாமே
சென்றிட முடியுஞ் சேண்போய்த் திசைமுகத் தயனும் மாலும்
அன்றடி முடிகா ணாத அசலமும் போல நின்றான்.34
35
ஆளரி அன்னோன் தாளும் அடுக்கலும் அழுந்தும் பாரின்
நீளிரு முடிசேர் வானின் நிரந்தமாப் பறவை போதல்
சூளுடை இமையோர் புள்ளும் மாவுமாய்த் தோமில் வீரன்
தாளடு முடியும் நாடிச் சார்தருந் தகைமைத் தாமால்.35
36
அந்தமில் வலியோன் நிற்ப ஆயிடைத் துஞ்சும் பாந்தள்
தந்தொகை வீழு றாது தழீஇமருங் காகக் கீழ்போய்
முந்துயர் கமடஞ் சேர்ந்து முழங்குதெண் டிரைக்கண் வைகும்
மந்தர மென்னக் கந்த மாதனந் தோன்றிற் றம்மா.36
37
பதுமநேர் கண்ணன் வேதாப் பலவகை முனிவர் தேவர்
கதிபடர் உவணர் சித்தர் கந்தரு வத்தர் ஒண்கோள்
மதியுடுக் கதிர்கள் ஏனோர் வான்பதம் முற்றும் ஓங்கும்
அதிர்கழல் வீரன் பல்வே றாரமாய் ஔ¤ர நின்றான்.37
38
எண்டிசை முழும் நேமி எழுதிறத் தனவும் மற்றைத்
தெண்டிரைக் கடலும் பாருஞ் சேண்கிளர் ஆழி வெற்பும்
அண்டமும் உலகம் யாவும் அகன்விழி பரப்பி நோக்கிக்
கண்டனன் அமலன் வைப்புங் கைதொழு தையன் நின்றான்.38
39
ஆணமில் சிந்தை வீரன் அச்சுதன் முதலோர் வைகுஞ்
சேணகர் நோக்கிச் சூழுந் திசைநகர் நோக்கிப் பாரின்
மாணகர் நோக்கி வீர மகேந்திரம் நோக்கிச் சூரன்
நீணகர் இதற்கி யாவும் நிகரிலை போது மென்றான்.39
40
விண்ணுலாம் புரிசை வெஞ்சூர் வியனகா¢ அதனை நோக்கி
உண்ணிலா வெகுளி கொண்டான் ஒருகரம் அங்கண் ஓச்சி
நண்ணலார் யாருந் துஞ்ச நாமறப் பிசைகோ வென்னா
எண்ணினான் சிறையில் உற்றோர்க் கிரங்கிஅவ் வெண்ணம் மீட்டான்.40
41
விஞ்சையர் இயக்கர் சித்தர் வியன்சிறை உவணர் திங்கள்
செஞ்சுடர்ப் பரிதி நாள்கோள் தெய்வத கணத்தர் யாரும்
வஞ்சினத் தடுதோள் வீரன் மாலுரு நோக்க லாற்றா
தஞ்சினர் வெருவச் செங்கை அமைத்தனன் அழுங்க லென்றே41
42
கோளியல் கருடர் தாம்வீழ் மாதரை விழைந்து கூடி
வாளுறு நகத்தின் ஊறு மதிக்கிலர் மயங்கித் துஞ்சி
வேளெனும் நெடியோன் ஊன்றும் வெற்பொடும் பிலத்திற் சென்று
கேளுடன் எழுந்து நாகர் கிளைதனக் கணங்கு செய்தார்.42
43
ஆதியங் குமரன் தூதன் ஆற்றலால் ஊன்றி நிற்பப்
பூதலங் கீண்டு வெற்புப் பொள்ளென ஆழ்ந்து கீழபோய்ப்
பாதலங் குறுக அங்கட் பயிலராத் தொகையை நாகர்
காதலங் கேண்மை நாடிக் கலந்தனர் விருந்து செய்தார்.43
44
தேன்றிகழ் தெரியல் வாகைச் சேவகன் கழல்கள் வெற்பின்
ஊன்றலும் அனைய பாங்கர் ஒருசிலர் அரக்கர் நோற்றார்
ஆன்றுயர் பதத்தை வே•கி ஆங்கவர் பிலத்துள் வீழ்ந்து
மான்றனர் இரங்க லுற்றார் வன்கணார்க் குய்வு முண்டோ.44
45
புண்டர நீற்று வள்ளல் புரையுருத் தேவர் நோக்கி
மண்டலம் புகழும் வீர மகேந்திரஞ் சேறற் கன்றால்
கொண்டவிவ் வுருவம் நோக்கிற் குரைகழல் அவுணர் தம்மை
அண்டமும் இடித்துச் சாடும் நினைவுகொல் ஐயற் கென்றார்.45
46
வீரமா மகேந்தி ரத்தில் அவுணரும் வீற்று வீற்றுச்
சாருறும் அவுணர் தாமுஞ் சயங்கெழு புயத்து வள்ளல்
பேருரு நோக்கி இங்ஙன் பிறந்தசொற் சழக்கே இன்னுந்
தேருவ துண்டு நந்தந் திறல்வரைப் புணர்ப்பி தென்றார்.46
47
ஒலிகழல் வீர வாகு ஓங்கலை யூன்றி இந்த
நிலைமையின் நிற்ற லோடும் நெடியமால் சுதனும் விண்ணோர்
தலைவனும் பிறரும் அன்னோன் தம்பியர் அளப்பி லோருங்
கலிகெழு பூதர் யாருங் கண்டுவிம் மிதத்தின் ஆர்த்தார்.47
48
தேவர்கள் முனிவா¢ ஏனைத் திறத்தவர் யாருந் தத்தம்
ஓவரும் பதத்தின் நின்றே ஒல்வதோர் உறுப்பின் மேவக்
காவரு கடிமென் பூத்தூய்க் கைதொழு தைய வெஞ்சூ
மேவரு நகர்சென் றெங்கள் வியன்துயர் அகற்று கென்றார்.48
49
ஆவதோ£¢ காலை எந்தை ஆறிரு தடந்தோள் வாழ்க
மூவிரு வதனம் வாழ்க முழுதருள் 1விழிகள் வாழ்க
தூவுடை நெடுவேல் வாழ்க தொல்படை பிறவும் வாழ்க
தேவர்கள் தேவன் சேயோன் திருவடி வாழ்க என்றான்.
( 1 விழிகள் - [பதினெட்டுக்] கண்கள்)49
50
ஆண்டகை தொழுத பாணி அணிமுடிக் கொண்டிவ் வாற்றால்
ஈண்டுசீர்க் குமர வேளை ஏத்தலும் அன்பின் கண்ணீர்
வீண்டுதெண் கடலுள் ஏகி வௌ¢ளமிக் குவரை மாற்றப்
பூண்டகண் டிகையை மானத் தோன்றின பொடிப்பின் பொம்மல்50
51
மீதுகொள் பொடிப்பு மூடி மெய்ப்புலன் சிந்தை யொன்ற
ஓதுவ தவற என்பும் உருகிய செருக நாட்டங்
கோதில்பே ரருளின் மூழ்கிக் குதூகலித் திடுத லோடு
மூதுல கனைத்தும் ஆவி முழுவதும் மகிழ்ந்த வன்றே.51
52
அவ்வகை நிகழச் செவ்வேள் ஆரருள் அதனைப் பெற்று
மொய்வரை மீது நின்றோன் முழுதுல களந்து சேண்போம்
இவ்வுரு வோடு செல்லின் இறந்திடும் உலகம் ஈது
செவ்விதன் றென்னா வேண்டுந் திருவடி வமைந்தான் அன்றே.52
53
கிரிமிசை நின்ற அண்ணல் கிளர்ந்துவான் எழுந்து சென்னிக்
குருமணி மகுடம் அண்ட கோளகை புடைப்ப வீரன்
உருகெழு சீற்றச் சிம்புள் உருவுகொண் டேகிற் றென்ன
வரைபுரை மாட வீர மகேந்திரம் முன்னிப் போந்தான்.53
ஆகத் திருவிருத்தம் - 53
----
2. கடல்பாய் படலம் (54 - 72)
54
அழுங்கிய கழற்கால் வீரன் அவ்வழி அவனிக் கீழ்போய்
விழுங்கிரி நிலைமை நோக்கி மீண்டுநீ எழுதி யென்னா
வழங்கினன் வழங்கும் எல்லை வல்லையிற் கிளர்ந்து தோன்றி
முழங்கிருங் கடலின் மாடே முந்துபோல் நின்ற தன்றே.1
55
வீரனங் கெழலும் அன்னோன் விண்படர் விசைப்பின் காலால்
பாருறு வரைகள் யாவும் படர்ந்தன பாங்க ராகச்
சாரதத் தலைவர் ஏனைத் தம்பியர் இலக்கத் தெண்மர்
ஆருமங் கவன்தன் பாலாய் அணிந்துடன் சேற லென்ன.2
56
விரைந்துவான் வழிக்கொள் வீரன் விசைத்தெழு காலின் அண்டந்
திரிந்தன உயிர்கள் முற்றுந் தெருமரல் உற்ற தெண்ணீர்
சுரந்திடு கொண்டல் யாவுஞ் சுழன்றன வடவை உண்ண
இருந்திடும் ஊழிக் காலும் ஆற்றலா திரியல் போன.3
57
பெருமிடல் பூண்ட தோன்றல் பெயர்தலும் விசைப்பின் ஊதை
பரவின வெம்மை மாற்றிப் பரிதியைக் கனலைத் திங்கள்
வருணன தியற்கை யாக்கி வடவையின் முகத்துத் தோன்றித்
திரைகட லிருந்த ஊழித் தீயையும் அவித்துச் சென்ற.4
58
விரைசெறி நீபத் தாரோன் விரைந்துசெல் விசைககால் தள்ளத்
திரைகடல் சுழித்துள் வாங்கித் திறன்மகேந் திரத்திற் சேறல்
அரசியல் புரிவெஞ் சூரன் அனிகங்கள் அவன்மேற் சென்று
பொருமுரண் இன்றித் தம்மூர் புகுவன இரிவ போலாம்.5
59
விடைத்தனி யாற்றல் சான்ற விடலைகால் வெற்பி னோடும்
படித்தலங் கீண்டு முன்னம் பாதலங் காட்டிற் றன்னான்
அடற்படு விசையின் காலும் அளியதோ வலிய தன்றோ
கடற்புவி கீண்டு நாகர் உலகினைக் காட்டிற் றன்றே.6
60
பாசிழை அலங்கல் தோளான் படர்தலும் விசையின் காலைக்
காய்சின உயிர்ப்புச் செந்தீக் கலந்துடன் தழீஇக்கொண் டேகி
மாசுறு சூரன் வைகும் வளநகர் சுற்றி யன்னோன்
தூசிய தென்ன முன்னங் கொளுவிய தூமஞ் சூழ.7
61
பூஞ்சிலம் பரற்றுந் தாளான் போதுமன் விரைவின் ஓதை
வேய்ஞ்சிலம் படுதோட் சூரன் வீரமா மகேந்திர ரத்தின்
நாஞ்சிலம் புரிசை பொன்செய் நளிர்வரை குளிர்பூங் கிள்ளை
தாஞ்சிலம் புற்ற சோலை அலைத்தன தரையில் தள்ளி.8
62
உறைபுகு நெடிய வேலான் உயிர்ப்புறு கனன்முன் னோடிசி
செறுநனூர் கொளுவ அன்னான் சென்றிடு விரைவின் கால்போய்
எறிபுனற் கடலைத் தாக்க இடைந்துமற் றதுதான் ஏகி
முறைமுறை திரைக்கை நீட்டி மூண்டிடா தவித்துப் போமால்.9
63
அண்ணலங் காளை ஏக உயிர்த்தகால் அவன்செல் லோதை
கண்ணழல் துண்டம் ஓச்சுங் சுடுங்கனல் எதிரா தோடும்
உண்ணிறை புணா¤ யாவும் ஒன்னலன் பதிமேற் சென்று
விண்ணிலம் ஒழிந்த பூதம் அடுதலின் விளைத்த பூசல்.10
64
வௌ¢வரைக் குவவுத் திண்டோள் வெலற்கருந் திறலோன் எண்காற்
புள்விசை கொண்டு செல்லப் புறந்தரப் புணரி அங்கண்
உள்வளைந் துலாய சின்னை ஒண்சுறாப் பனைமீன் நூறை
தௌ¢விளித் திருக்கை தந்தி திமிங்கிலம் இரிந்து பாய்ந்த.11
65
நாயகன் தூதன் ஏக நளிர்கடல் எதிர்ந்தி டாது
சாய்வது மீன முற்றுந் தரங்கவெண் கரங்கள் தாங்கித்
தீயசூர் மூதூர் உய்த்துச் சென்றது பொன்று வோர்க்கு
மேயின விச்சை யுண்டி மிகத்தமர் வழங்கு மாபோல்.12
66
காழ்தரு தடக்கை மொய்ம்பன் கடுமைசொல் செலவின் ஓதை
சூழ்தரு கின்ற காலைத் துண்ணெனத் துளங்கி விண்மீன்
வீழ்தர வேலை தன்னில் வேலையும் மறிந்து செல்ல
வாழ்திரை எறிமீன் முற்றும் அந்தரம் புகுவ மாறாய்.13
67
காமரு நயக்குங் காளை கதுமெனச் செல்லப் பாங்கில்
தூமலர்க் கரத்தி லிட்ட சுடர்மணிக் கடக வாள்போய்
நேமியங் குவடு சூழ்ந்து நிமிர்தரு திமிர மோட்டி
ஏமநல் லண்ட வில்லோ டெதிர்ந்து போய் இகல்செய் கின்ற.14
68
விண்ணவர் யாருந் தேரும் படையுமாய் விரவ மேலோன்
நண்ணலர் புரமே லோச்சு நகையழல் போதல் ஒத்தான்
கண்ணழற் செலவும் போன்றான் கார்முகம் பூட்டி உய்த்த
மண்ணுல கிடந்த கூர்வாய் வாளியும் என்னச் சென்றான்.15
69
தரைதனை அலைத்து நோற்குந் தாபதர்க் கலக்கண் செய்து
சுரர்திருக் கவர்ந்து வாட்டுஞ் சூரனை கிளையி னோடும்
விரைவுடன் முடிப்பான் முன்னி வெகுண்டுசெவ் வேளங் குய்த்த
ஒருதனிச் சுடர்வேல் போன்றும் போயினன் உயர்திண் டோளான்.16
70
இமிழ்தரு தரங்கப் பாலின் எறிகடன் மதித்து வானோர்க்
கமிர்தினை அளிப்பான் வேண்டி அகிலமும் உண்டு தொன்னாள்
உமிழ்தரு திருமா லுன்ன உணர்ந்துமந் தரமாம் ஓங்கல்
நிமிர்தரு புணா¤ செல்லும் நிலைமைபோல் வீரன் போந்தான்.17
71
சேண்டொடர் உலகும் பாருந் தெருமர அனலம் வீசிக்
காண்டகு விடத்தை ஈசன் களத்திடை அடக்கி வைப்ப
ஈண்டெமை விடுத்தி யென்னா ஏத்தலும் அவனங் குய்ப்ப
மீண்டது கடல்போந் தென்ன வீரருள் வீரன் சென்றான்.18
72
பொலங்கழல் வீர வாகு புணரிமேல் இவ்வா றேகி
அலங்கலந் திண்டோள் வெஞ்சூர் அணிநகர் வடாது பாலின்
விலங்கலில் வீரன் யாளி வியன்முகத் தவுணன் போற்றும்
இலங்கையந் தொல்லை மூதூர் அணித்தெனும் எல்லை சென்றான்.19
ஆகத் திருவிருத்தம் - 72
- - -
3. வீரசிங்கன் வதைப் படலம் (73 - 89)
73
அன்னதோர் வேலை முன்னம் அகன்றலை யாளிப் பேரோன்
துன்னுபல் லனிகத் தோடுஞ் சூரனைக் காண்பான் ஏக
மன்னதி வீரன் என்னும் மதலையா யிரமாம் வௌ¢ளந்
தன்னொடும் இலங்கை வைகித் தணப்பறப் போற்றி யுற்றான்.1
74
ஆனதோர் மிக்க வீரத் தாண்டகை அவுணர் போற்ற
மாநகர்க் கோயில் நண்ண வடதிசை வாயில் தன்னில்
மேனிமிர் அவுணர் தானை வௌ¢ளமைஞ் ?றொ டென்னான்
சேனையந் தலைவன் வீர சிங்கனாந் திறலோன் உற்றான்.2
75
உற்றதோர் வீர சிங்கன் ஒண்சிறைச் சிம்பு ளேபோல்
வெற்றியந் திண்டோள் ஏந்தல் விரைந்துசென் றிடலுங்காணூஉச்
சற்றுநங் காவல் எண்ணான் தமியன்வந் திடுவான் போலும்
மற்றிவன் யாரை என்னாச் சீறினன் வடவை யேபோல்.3
76
உண்குவன் இவன்றன் ஆவி ஒல்லையென் றுன்னிக் காலும்
எண்கிளர் மனமும் பின்னர் எய்துமா றெழுந்து நேர்போய்
விண்கிளர் செலவிற் றானை வௌ¢ளமைஞ் ?றுஞ் சுற்ற
மண்கிளர் கடல்போல் வீர வாகுவின் முன்னஞ் சென்றான்.4
77
சென்றிடு வீர சிங்கன் திறல்கெழு புயனைப் பாரா
இன்றள வெமது காப்புள் ஏகினர் இல்லை யார்நீ
ஒன்றொரு தமியன் போந்தாய் உயிர்க்குநண் பில்லாய் நின்னைக்
கொன்றிடு முன்நீ வந்த செயல்முறை கூறு கென்றான்.5
78
பொன்னியல் திண்டோள் வீரன் புகலுவான் இலங்கை வாவி
மன்னியல் சூரன் வைகும் மகேந்திரஞ் சென்று மீள்வான்
உன்னினன் போந்தன் ஈதென் உறுசெயல் வலியை யென்னின்
இன்னினி வேண்டிற் றொன்றை இயற்றுதி காண்ப னென்றான்.6
79
திறன்மிகு சிங்கன் அன்னோன் செப்பிய மொழியைக் கேளா
இறையுநம் மவுண ராணை எண்ணலன் வலியன் போலும்
அறிகுதும் மீண்டு சேறல் அழகிதன் றென்னா உன்னிக்
குறுகிய படைஞர் தம்மை இவனுயிர் கோடி ரென்றான்.7
80
என்றலும் அரிய தொன்றை எயினா¢கள் வேட்டைக் கானில்
சென்றனர் திரண்டு சுற்றிச் செருவினை இழைப்ப தேபோல்
பொன்றிகழ் விசய வாகுப் புங்கவன் றன்னைச் சீற்றம்
வன்றிறல் அவுணர் யாரும் வளைந்தமர் புரிய லுற்றார்.8
81
வேலினை விடுப்பர் தண்டம் வீசுவர் முசலந் தூர்ப்பர்
சாலம தெறிவர் ஆலந் தன்னைஓச் சிடுவர் வார்விற்
கோல்வகை தொடுப்பர் நாஞ்சிற் கொடும்படை துரப்பர் வெய்ய
சூலம துய்ப்பர் கொண்ட தோமரஞ் சொரிவா¢ அம்மா.9
82
கிளர்ந்தெழு பரிதி தன்னைக் கேழ்கிளர் உருமுக் கொண்மூ
வளைந்தென அவுணர் வீரன் மருங்குசூழ்ந் தாடல் செய்யத்
தளர்ந்திலன் எதிர்ந்து தன்கைத் தாரைவாள் உறையின் நீக்கி
உளந்தனின் முனிந்தன் னோரை ஒல்லைசூழ்ந் தடுத லுற்றான்.10
83
அரக்குருக் கொண்ட வெற்பின் அடுகனற் கடவு ளெய்தி
உருக்கியே யதனை எல்லாம் ஒல்லையின் உடைக்கு மாபோல்
நெருக்கிய அவுணர் தானை நீத்தம துடைய வீரன்
திருக்கிளர் வாளன் றேந்திச் சென்றுசென் றடுதல் செய்தான்.11
84
பனிபடர் குழுமல் தன்னைப் பாயிருட் செறிவை அங்கிக்
கனிபடர் பொற்பில் தோன்றுங் காய்கதிர் முடிக்கு மாபோல்
நனிபடர் அவுணர் தானை நைந்திடச் சுடர்வாள் ஒன்றால்
தனிபடர் வீர வாகு தந்தனன் திரித லுற்றான்.12
85
உறைந்தன குருதி வாரி ஒல்லையில் உவரித் தெண்ணீர்
மறைந்தன அவுணர் தானை மால்கரி பரிதேர் முற்றுங்
குறைந்தன கரந்தாள் மொய்ம்பு கொடுமுடி துணிந்து வீழந்த
நிறைந்தன அலகை ஈட்டம் நிரந்தன பரந்த பூதம்.13
86
வௌ¢ளநூ றவுணர் தானை விளிந்திட இனைய பாலால்
வள்ளல்சென் றடுதல் செய்ய மற்றுள அவுணர் யாரும்
உள்ளநொந் திரங்கித் தத்தம் உயிரினை ஓம்பல் செய்து
பொள்ளென நிலனும் வானும் புலந்தொறும் இரியல் போனார்.14
87
போதலும் வீர சிங்கன் பொள்ளெனச் சினமேற் கொண்டு
மாதிரங் கடந்து மேல்போய் வளர்தரும் வாகை மொய்ம்பன்
மீதொரு சூலந் தன்னை விட்டனன் விட்ட காலை
ஏதியங் கதனால் அன்ன திருதுணி படுத்தி ஆர்த்தான்.15
88
ஆர்த்தலும் மடங்கற் பேரோன் ஆண்டகை வீரன் மேன்மை
பார்த்தனன் தனது பாணி பற்றிய படைகள் தம்மில்
கூர்த்ததோர் குலிசம் வீசக் குறுகிவாள் அதனான் மாற்றிப்
பேர்த்தொரு படையெ டாமுன்பெயர்ந்தவன் முன்னஞ் சென்றான்.16
89
சென்றுதன் மணிவாள் ஓச்சிச் செங்கைகள் துமித்துத் தீயோன்
ஒன்றொரு முடியுங் கொய்தே உவர்க்கட லிடையே வீட்டி
நன்றுதன் னுறையுட் செல்ல நாந்தகஞ் செறித்து முன்னோர்
வென்றிகொண் டகன்றான் என்ப வேலவன் விடுத்த தூதன்.17
ஆகத் திருவிருத்தம் - 89
- - -
4. இலங்கை வீழ் படலம் ( 90 - 117)
90
மலங்கொடு சுறவு தூங்கும் மறிகடல் மீது மேரு
விலங்கல்சென் றிட்ட தென்ன விண்ணிடந் தன்னின் நீங்கி
அலங்கலந் திண்டோள் வள்ளல் அவுணர்தம் மிருக்கை யாகும்
இலங்கையங் குவடு மூன்றில் இடைப்படு சிகரம் பாய்ந்தான்.1
91
நெடுவரை தன்னை வேலான் ஈறுசெய் திட்ட அண்ணல்
விடவரு தமியோன் தொல்லை இலங்கையின் மீது பாய
அடலதி வீரன் ஏனை அவுணர்கள் கலங்கி யேங்கி
இடியுறு புயங்க மென்ன யாருமெய் பனித்து வீழ்ந்தார்.2
92
வேறு
வைப்புறு மகேந்திர வடாது புலமாகி
இப்புறம் இருந்திடும் இலங்கைதனில் ஏந்தல்
குப்புறுத லுங்குலை குலைந்தவுண ரோடும்
உப்புறு கடற்படிதல் கண்டுவகை யுற்றான்.3
93
தந்திமுக மாமதலை தன்னடி வணங்கா
தந்தவிண் ணோர்கடல் அலைத்திடலும் அன்னோன்
சிந்தைமுனி வெய்தவிடை சேர்த்தகயி றோடு
மந்தர நெடுங்கிரி மறிந்தபடி மானும்.4
94
ஆடல்கெழு மொய்ம்பினன் அடித்தலம் தூன்ற
மூடுதிரை வேலையிடை மூழ்கிய இலங்கை
கூடுமக வண்ணல்குலி சந்தொடர நேமி
ஊடுபுக லுற்றிடுமை நாகவரை யொக்கும்.5
95
மாமறைகள் தம்மைமுனம் வஞ்சனை புரிந்தே
சோமுகன் மறைந்ததிரை தூங்குகட லூடே
ஏமமுறு பேருரு எடுத்ததொரு மாண்சேல்
போமதென வாழ்ந்தது பொலங்கெழும் இலங்கை.6
96
தொல்லைதனில் ஓர்விதி துயின்றகடை நாளின்
எல்லைய திகந்துகடல் ஏழுமெழ அங்கண்
ஒல்லைபில முற்றபுவி உய்ப்பவொரு கேழல்
செல்லுவதின் ஆழ்ந்தது திரைக்கடல் இலங்கை.7
97
சிந்துவின் அகன்கரையொர் திண்கிரி யழுந்த
அந்தமி லிலங்கையும் அழுந்தியிடு தன்மை
முந்தொரு மடக்கொடி விருப்பின்முனி மூழ்க
இந்திரனும் நேமியி னிடைப்புகுதல் போலும்.8
98
உலங்கொள்பு வீரனடி ஊன்றுதலும் முன்னோர்
விலங்கல்பணி தன்னுலக மேவியது கேளா
அலங்கல்பெறு வாகையவன் ஆற்றலது தாங்கி
இலங்கையது காண்பலென ஏகியது போலும்.9
99
இலங்கையிது பானமையின் இருங்கடலுள் மூழ்கக்
குலங்களடு வைகிய கொடுந்தகுவர் யாருங்
கலங்கினர் அழுங்கினர் கவன்றனர் துவன்றி
மலங்கினர் புலம்பினர் மருண்டனர் வெருண்டார்.10
100
அற்றமுறு தானவர்கள் ஆழஅனை யோரைச்
சுற்றிய அளப்பில சுறாவுழுவை மீனம்
பற்றிய வளைந்தன பலப்பல திரண்டே
செற்றிய திமிங்கில திமிங்கில கிலங்கள்.11
101
கையதனை ஈர்ப்பசில கால்கள்சில ஈர்ப்ப
வெய்யதலை ஈர்ப்பசில மிக்கவுயர் தோள்கள்
மொய்யுடைய மார்பதனை ஈர்ப்பசில மொய்த்தே
சையமுறழ் யாக்கையுள தானவரை மீனம்.12
102
அத்தனொடி யாயையனை அன்பின்முதிர் சேயைக்
கொத்தினொடு கொண்டுசிலர் கூவியெழு கின்றார்
எய்த்தனர்கள் செய்வதென் இரும்படையும் விட்டுத்
தத்தமுயிர் கொண்டுசிலர் தாமும்எழ லுற்றார்.13
103
உற்றசில தானவரை ஒய்யென அளாவித்
திற்றிவிழை வான்நனி திரண்டனர்க் ளெல்லாம்
பற்றுழி தனித்தனி பறித்தது பொருட்டாற்
பொற்றைபுரை மீன்கள்பெரும் போர்வினை புரிந்த.14
104
தானவர்க ளோ£¢சிலவர் தம்முணல் குறித்தே
வானிமிரு மோதையென வந்துதமை எற்றப்
பூநுனைய வாள்சுரிகை போரயில்கள் கொண்டே
மீனமொடு வெஞ்சினம் விளைத்தமர் புரிந்தார்.15
105
சீர்த்திகொள் இலங்கைகடல் சென்றிடலும் அங்கண்
ஆர்த்திபெறு மங்கையர்கள் அங்கையவை பற்றி
ஈர்த்தபிறர் இல்லுற இசைந்துகரம் பற்றுந்
தூர்த்தரை நிகர்த்தன சுறாமகர மீனம்.16
106
மீனொருகை பற்றியிட வேறொரு கரத்தைத்
தானவர் வலித்தொரு தடக்கைகொ டிசிப்ப
மானனைய கண்ணியர் வருந்திடுதல் ஓர்ஐந்
தானபுலன் ஈர்ப்பவுள் அழுங்குவது போலும்.17
107
திண்டிறல் வலம்படு திருக்கைசுற மீனம்
மண்டிய திமிங்கிலம் வருந்தகுவர் சூழல்
கண்டுமிசை யெற்றிடுத லுங்கடிது வாளால்
துண்டமுற வேயவை துணித்தெழுநர் சில்லோர்.18
108
கட்டழல் விழிச்சுறவு காரவுணர் தம்மை
அட்டுணல் குறித்துவர அன்னவர்கள் நீவித்
தொட்டனர் பிடித்தகடு தூரும்வகை பேழ்வாய்
இட்டனர் மிசைந்தனர் எழுந்தனர்கள் சில்லோர்.19
109
ஏற்றபுனல் ஊடுதெரி வின்றியெம ரென்றே
வேற்றொரு மடந்தையர் வியன்கையது பற்றிப்
போற்றியெழ அங்கவர் புறத்தவர்க ளாக
மாற்றினர் இசைந்துசிலர் வாழ்க்கைமனம் வைத்தார்.20
110
இல்லிவ ரெனப்பிறரை ஏந்தியெழ அன்னோர்
புல்லுதனி அன்பர்புடை போகவொரு சில்லோர்
அல்லலுறு வார்தமை யடைந்ததொரு கன்னி
மெல்லவயல் போந்துழி மெலிந்துழலு வார்போல்.21
111
தீமைபுரி மால்களிறு திண்புரவி யாவும்
ஏமரு சுறாத்தொகுதி ஈர்த்துவிரைந் தேகித்
தோமறு பிணாமகரந் துய்ப்பவுத வுற்ற
காமர்கெழு பெண்மயல் கடக்கவௌ¤ தன்றே.22
112
மாற்றறு சுறாச்சில மடப்பிடிகை பற்றி
ஏற்றபெண் வழிச்செல எதிர்ந்ததனை நோக்கி
வேற்றொர்பெடை ஆயதென வேர்வுறுகை கையர்க்
காற்றுமுப காரவியல் பாகியதை யன்றே.23
113
சிந்துவதன் மீதிலெழு சில்லவுண ராயோர்
கன்தன்முரு கேசன்விடு காளைசெயல் காணா
நந்தமையும் நின்றிடின் நலிந்திடுவன் யாங்கள்
உய்ந்திடுதும் என்றுகடி தோடியயல் போனார்.24
114
பீடுசெறி தங்கணவ ரைப்பிரிகி லாமே
கூடும்வழி ஆழ்ந்தசில கோற்றொடிமின் னார்கள்
ஆடைபுன லூடுபுக அல்குல்தம கையால்
மூடியெழு வார்முலை முகத்தின்முகம் வைத்தே.25
115
சேண்டொடர் இலங்கைகடல் சென்றுழிய தன்பால்
ஆண்டசில மாதர்கள் அரத்தவுடை கொண்டார்
மீண்டெழலும் நீர்பட வௌ¤ப்படுவ தல்குல்
காண்டகைய செம்மதி களங்கமடைந் தென்ன.26
116
காரவுணர் மாதர்சிலர் காமர்கடல் வீழவார்
நீரமெழ வேயுடை நெகிழ்ந்தொருவி யேக
மூரல்முக மல்லுருவு முற்றுறம றைத்தே
தேரையென ஒண்புனல் செறிந்துதிரி வுற்றார்.27
117
ஆசுறு மரைத்துகில் அகன்றிட எழுந்தே
தேசுறு மடந்தைய ரில்ஓர்சிலவர் சேண்போய்
மாசுறு புயற்குழுவை வலலைகரம் பற்றித்
தூசினியல் பானடுவு சுற்றியுல வுற்றா£¢.28
ஆகத் திருவிருத்தம் - 117
- - -
5. அதிவீரன் வதைப் படலம் (118 - 154)
118
அன்னதொர் பான்மைக ளாக இலங்கை
முன்னுறு வார்கடல் ஆழ்ந்தது மூழ்க
இந்நகர் போற்றி இருந்திடு கின்ற
மின்னுனை வேல்அதி வீரன் உணர்ந்தான்.1
119
தனது புரங்கடல் காருதல் காணா
நனிதுயர் எய்தினன் நாணும் அடைந்தான்
சினவி யுயிர்த்தழல் சிந்த நகைத்தான்
அனையவன் இன்னத கத்திடை கொண்டான்.2
120
சுந்தர மேவரு சூரபன் மாவோ
அந்தமில் தம்பிய ரோவனை யார்தம்
மைந்தர்க ளோமதி யேன்அவ ரல்லால்
இந்த வியற்கையை யார்புரி கிற்பார்.3
121
ஆயவா¢ என்னினும் ஆங்கது செய்தற்
கேயதொ ரேதுவும் இன்றுதம் மூர்க்குத்
தீயது செய்கலர் சிந்தைய தன்றால்
மாயையும் ஈது மதிக்கிலள் போலும்.4
122
மூவரும் இச்செயல் முன்னலர் பின்னர்த்
தேவர்கள் யாரிது செய்திட வல்லார்
ஏவரும் நஞ்சிறை எய்தினர் வேள்விக்
காவலன் ஆருயிர் காத்து மறைந்தான்.5
123
மாதிர மேலவர் வானிடை வைப்பின்
மேதகும் விண்ணவர் விஞ்சையர் சித்தர்
ஆதியர் நம்மிறை ஆணையின் நீங்கார்
ஈது புரிந்திட எண்ணுவர் கொல்லோ.6
124
தவ்வற ஈண்டமர் தானவர் ஆற்ற
மெய்வலி மாயைகள் மேவின ரேனுந்
தெவ்வடு சூர்முதல் தின்படை யஞ்சி
இவ்வியல் தன்னை இழைக்கலர் போலும்.7
125
ஆதலின் அன்னவர் ஆற்றலர் என்னின்
ஈதொரு செய்கை இழைத்தவர் யாரோ
தாதை அகன்றுவழி தானவ ரோடுங்
காதலின் இந்நகர் காத்தது நன்றால்.8
126
காய மொடுங்கு கனற்சிர மூடு
போயது வல்லை புறஞ்செல நோற்று
மாயை பெரும்படை வன்மைகள் வேதன்
ஈயமுன் வாங்கிய என்செயல் நன்றால்.9
127
தந்தை யுறாது தணந்துழி ஆங்கோர்
மைந்தன் இருந்துதன் மாநக ரோடும்
அந்தி லகன்கடல் ஆழ்ந்தனன் என்றால்
நந்தமர் என்னை நகைப்பா¢கள் அன்றே.10
128
மன்னவன் ஈது மதித்திடின் மற்றென்
றன்னை அடும்பெறு தாதையும் அற்றே
பின்னுளர் எள்ளுவர் பெற்றியி தாமேல்
என்னியல் நன்றென எண்ணி இனைந்தான்.11
129
இனைந்ததி வீர னெனுந்திறல் மைந்தன்
கனைந்திடு கின்ற கடற்கிடை யாழ்வோன்
அனந்தர மூழ்வினை ஆற்றலின் அன்னான்
மனந்தனில் ஈதொரு தன்மை மதித்தான்.12
130
ஒல்லொலி சேரு வரிக்கடல் மீதாய்ச்
செல்லுவன் யாரிது செய்தனர் என்றே
வல்லையில் ஓர்குவன் மற்றவர் தம்மைக்
கொல்லுவன் மெய்ப்படு சோரி குடிப்பன்.13
131
என்றதி வீரன் இரும்படை யாவும்
ஒன்றற வாரி உருத்த னிகத்துள்
நின்றுளர் தங்களை நேடுபு கொண்டே
வன்றிரை வேலையின் மீமிசை வந்தான்.14
132
வேறு விடலைதிரு முன்னமதி வீரன்அனி கங்கள்
புடையில்வர நீரின்மிசை பொள்ளென எழுந்தான்
அடுதொழில் இயற்றியிடும் ஆதிதனை யெய்தக்
கொடியவிடம் வார்கடல் குலாய்நிமிர்வ தேபோல்.15
133
விழுந்திடும் இலங்கைதனில் மேவும் அதிவீரன்
எழுந்துதன தானையொ டிருங்கட லுளங்கிக்
கொழுந்துமிசை சென்றனைய கோலமொடு நின்ற
செழுந்திறல்கொள் மொய்ம்புடைய செம்மல்நிலை கண்டான்.16
134
கண்டனன் வெகுண்டிதழ் கறித்துநகை செய்யா
அண்டர்குழு வானிவனொர் ஆண்டகைநம் மூதூர்
தெண்டிரையில் ஆழும்வகை செய்தும்இவண் நின்றான்
எண்டிசை தொழுந்தகுவர் ஆணையினி தென்றான்.17
135
என்றுமொழி யாவிரைவில் யாளிமுகன் மைந்தன்
கொன்றிவன தாருயிர் குடிப்பனென உன்னிச்
சென்றிடலும் ஆழ்ந்தவர் செயற்கையது காண்பான்
நின்றதொரு பேரறிஞன் நீர்மையது கண்டான்.18
136
ஆனபொழு தத்தினில் அவன்புடையில் வந்த
தானவர்கள் சூழ்ந்தனர் சமர்த்தொழி லியற்ற
மானவிற லோன்றனது வாளுறை கழித்தே
ஊனொடுயிர் சிந்தியிட ஒல்லையடல் செய்தான்.19
137
அற்றன சிரத்தொகுதி அற்றன கரங்கள்
அற்றன புயத்தொகுதி அற்றன பதங்கள்
அற்றன பெரும்புறமும் அற்றவுடன் முற்றும்
அற்றனர்கள் யாருமுயிர் அற்றதவர் பூசல்.20
138
பங்கிசெறி செந்தலைகள் பாய்குருதி நீர்மேல்
எங்கணும் மிதப்பன இருங்கடலி னூடே
செங்கொடி படர்ந்திடு செழும்பவள வைப்பில்
அங்கமல மானவை அலர்திடுதல் போலும்.21
139
அற்றமகல் வீரன்அவு ணப்படை துணிப்பச்
செற்றிய பிணத்தொகை திரைப்புணரி தூர்த்த
மற்றுமிசை போந்துமணி யாலுமொ£¤ லங்கைப்
பொற்றைய தியற்றியது போன்றுளது மாதோ.22
140
தன்படை விளிந்துசல திக்கடலுள் வீழ
முன்பன்அதி வீரன்முனி யாவதனை நோக்கி
என்புடையி னோரையெறிந் தாய்கடிதின் நின்னைத்
தின்பனது காண்டியென வேசெருமு யன்றான்.23
141
சொல்லும்அதி வீரன்வரு தோற்றமது காணா
வல்லைவரு கென்றுதிறல் வள்ளலும் அழைப்ப
எல்லையத னிற்செருவின் ஏற்றிவனை இன்னே
கொல்லுகென அங்கணொரு குந்தம தெறிந்தான்.24
142
உய்த்ததொரு கூரயிலு ரத்திலுறு முன்னர்
மத்தகய நேர்விடலை மற்றது தெரிந்தே
கைத்தல மிருந்திடு கனற்புரையும் வாளால்
அத்துணை இரண்டுதுணி யாய்விழ எறிந்தான்.25
143
கண்டமுற ஞாங்கரது கண்டுதிறன் மைந்தன்
தண்டம்விரைந் தொன்றொரு தடக்கைகொ டெடுத்தே
மண்டமர்செ யுன்னுயிரை வாங்குமி• தென்னா
அண்டர்புகழ் காளைதன தாகமுற விட்டான்.26
144
வேறு விட்ட காலையத் தண்டினை வெலற்கருந் திறலோன்
அட்டி டான்தனி வாளினால் ஏற்றனன் அகலம்
பட்டு மற்றது நுண்டுக ளாகஅப் பதகன
மட்டி லாததோர் விம்மிதம் எய்தினன் மறுகி.27
145
வேறொர் முத்தலைப் படையது கொண்டதி வீரன்
மாறி லாவிறல் மொய்ம்பினன் தன்மணி மார்பின்
ஊறு செய்திறம் ஓச்சலுங் கண்டுநம் முரவோன்
சீறி யாங்கது பற்றினன் செங்கையால் இறுத்தான்.28
146
இறுத்த காலையில் இலங்கையில் யாளிமா முகன்சேன்
செறுத்து மற்றிவன் தனைஅடல் அரிதெனச் சிந்தை
குறித்து மற்றொரு நாந்தகம் ஏந்தினன் குறுகி
வெறித்த கொண்டலுட் கொட்புறு மின்னென விதிர்த்தான்.29
147
கறங்கி னிற்பெரு வட்டணை புரிந்துதன் கரமேல்
நிறங்கொள் வாளினை இடம்வலந் திரிததனன் நெறியே
பிறங்கும் ஆர்கலித் தெண்டிரை அலைதரப் பெரிது
மறங்கொள் நாந்தக மீனுகண் டலமரும் வகைபோல்.30
148
ஏதி யிங்கிது நான்முகன் தந்துள தெவர்க்கும்
பேத கஞ்செயல் அரியதால் அன்னது பிடித்தேன்
சாதி திண்ணநீ வருகென மிகைமொழ சாற்றிக்
கோதில் வீரன்முன் அணுகலும் அனையவன் கூறும்.31
149
நன்று நன்றுநின் னாற்றலும் ஆண்மையும் நம்மை
வென்றி யேயெனின் யாவரும் மேலுனை வியப்பார்
நின்று நீசில மொழிவதென் கடிது நேருதியால்
வென்றி வீரருந் தமைப்புகழ் கிற்பரோ வென்றான்.32
150