|
1498 |
அத்துணை தன்னில் அருந்துணை இல்லான்
மெய்த்துணை யாகிய மின்னினை நோக்கி
எய்த்திடல் ஐயன் அளிக்குவன் ஈண்டே
சித்தம் வருந்தல் எனத்தௌ¤ வித்தான். |
1 |
|
1499 |
மாதினை அவ்விடை மன்னுற வைத்தே
பேதுறு வானவர் பேரவை நண்ணிப்
போதுமெ னக்கொடு போந்து விரைந்தே
நாதன் அகன்கிரி நண்ணினன் அன்றே. |
2 |
|
1500 |
அந்தர வைப்பில் அமர்ந்தவர் தம்மோடு
இந்திரன் அக்கயி லைக்கிரி யெய்தி
நந்திபி ரானுறை நன்கடை சேரா
வந்தனை செய்து வழுத்தினன் நின்றான். |
3 |
|
1501 |
நிற்றலும் வந்ததென் நீபுகல் என்னச்
சொற்றனன் அங்கது தொன்மையின் நாடி
இற்றில கொல்லுன் இருந்துய ரென்னா
நற்றவர் காணுறு நந்தி யுரைப்பான். |
4 |
|
1502 |
நால்வர் உணர்ந்திட நாயகன் ஞான
மூல வியோக முதற்பொருள் காட்டி
ஏல இருந்தனன் யாவரும் ஏகக்
கால மிதன்றென வேகழ றுற்றான். |
5 |
|
1503 |
தேறுத வஞ்செய்சி லாதனன் மைந்தன்
கூறிய வாய்மை குறிக்கொள ஓர்ந்து
மாறியீ ழிந்திடு வல்விட மற்றும்
ஏறிய தென்ன இடர்க்கட லுற்றான். |
6 |
|
1504 |
இம்பரின் வாசவன் இன்னல் உழப்ப
உம்பர்கள் தாமும் உடல்தளர் வுற்றார்
தம்பம தான தடம்புணை தாழ
அம்புதி தன்னில் அழுந்திடு வார்போல். |
7 |
|
1505 |
செல்லல் உழந்து தியங்கிய தேவர்
எல்லவர் தம்மொடும் இந்திர னென்போன்
நல்லருள் செய்திடு நந்திபி ரான்றன்
மெல்லடி போற்றி விளம்புதல் செய்வான். |
8 |
|
1506 |
தூய்நெறி நீங்கிய சூரபன் மாவுக்
காயுவொ டாற்றல் அளப்பில செல்வம்
ஏயவை யாவும் இருந்தவ நீரால்
நாயகன் முந்துற நல்கினன் அன்றே. |
9 |
|
1507 |
நாங்கள் புரிந்திடு நல்வினை நீங்கித்
தீங்கு குறித்தெழு தீவினை சேர
ஆங்கவன் ஏவலின் அல்லலு ழந்தேம்
ஈங்கிது வும்மிறை வன்செயல் ஐயா. |
10 |
|
1508 |
சூனா¢ இயற்கை சுரர்க்கருள் செய்யும்
மாநிரு தர்க்கிறை வன்புரி துன்பம்
ஆன துணர்த்தி அடைந்தனம் என்னில்
தானது போழ்து தவிர்த்திடல் வேண்டும். |
11 |
|
1509 |
நீர்த்திரை போல நெறிப்பட யாங்கொள்
ஆர்த்திய கற்றி அறந்தவிர் சூரன்
மூர்த்திகொள் ஆவியும் மொய்ம்பொடு சீருந்
தீர்த்திடு கின்ற திறஞ்செயல் வேண்டும். |
12 |
|
1510 |
அன்னது செய்திடின் அன்பறு சூரன்
முன்னர் அருந்தவ முற்றிய காலைச்
சொன்ன வரந்தொலை யுந்தொலை வானாற்
பின்னர் அவன்சொல் பிழைத்தனன் என்பார். |
13 |
|
1511 |
அல்லª¦மி மல்லல் அகற்றிலன் என்னில்
நல்லரு ளுக்கொரு நாயகன் என்றே
எல்லவ ரும்புகழ் ஏற்றமும் இன்றாம்
தொல்லை மறைப்படி யுந்தொலை வாமால். |
14 |
|
1512 |
ஆகையின் இவ்வகை ஆய்ந்தெமை யாளும்
பாக நினைந்து பரம்பொரு ளானோன்
மோகமி லார்பெற மோனக ஞான
யோகியல் காட்டி யுறைந்துள னேகொல். |
15 |
|
1513 |
ஈங்கிவன் அல்லதை இத்திற மாகுந்
தீங்கினை நீக்கவொர் தேவரும் இல்லை
ஓங்கிய மாலவ ரோடமர் செய்தே
ஆங்கவன் நேமியும் அற்றனன் ஐயா. |
16 |
|
1514 |
மூவரின் முந்திய மூர்த்தி செயற்கை
யாவதும் ஈதென அண்டரும் யானும்
பூவுல கத்திடை போந்திடின் இன்னே
தீவினை யார்சிறை செய்வது திண்ணம். |
17 |
|
1515 |
ஆதலின் ஆயிடை அண்டரும் யானும்
போத லிலைப்புனி தன்கழல் காணத்
தீதறு வேலை தனைத்தெரி வுற்றான்
வாய்தலின் ஓர்புடை வைகுவன் என்றான். |
18 |
|
1516 |
பேர்பெறு நந்திபி ரானது கேளா
ஆர்வுறும் இன்னல் அகன்றிவண் நீவிர்
சேர்வுறு மென்றருள் செய்திட ஆங்கே
ஓர்புடை வாசவன் அண்டரொ டுற்றான். |
19 |
|
1517 |
வானவர் கோனரன் மால்வரை தன்னிற்
போனதும் உற்றதும் ஈண்டு புகன்றாம்
மானபு லோமசை செய்கையும் அல்லா
ஏனையர் செய்கையும் யாவும் இசைப்பாம். |
20 |
|
1518 |
நீங்காதுறை தனிநாயகன் நெடுமாலயன் உணரா
ஓங்காரமு தற்பண்ணவன் உறையுங்கிரி செல்லப்
பாங்காயணங் கினர்போற்றிடப் பயிழ்காழிவ னத்திற்
பூங்காவனந் தனிலேச்சி இருந்தேதவம் புரிந்தாள். |
1 |
|
1519 |
சேணாடுபு ரக்கின்றவன் சிந்தித்திடு கின்ற
மாணாகிய வினைமுற்றுற வருவான்றவம் புரிவாள்
காணாளவன் வருகின்றது காலம்பல தொலைய
நாணாடொறுந் தன்மேனியின் நலமாழ்குற மெலிவாள். |
2 |
|
1520 |
கொளையாரிசை அளிபாடிய குழலிந்திரன் பிரிவால்
உளையாமனம் பதையாத்தவத் துறைகின்றதொ ரளவில்
வளையார்கலி உலகந்தனில் வாழ்சூரபன் மாவுக்
கிளையாள்பலர் இளையார்புணர்ந் தாலுஞ்சிறி திளையாள். |
3 |
|
1521 |
கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால்
அழிகின்றவள் எவர்தம்மையும் வலிதேபிடித் தணையும்
இழிகின்றதொ ரியல்பாள்முகில் இனம்வாய்திறந் தெனவே
மொழிகின்றதொர் கடியாள்அச முகியென்பதொர் கொடியாள். |
4 |
|
1522 |
பொறையில்லவள் அருளில்லவள் புகழில்லவள் சிறிதும்
நிறையில்லவள் நாணில்லவள் நிற்கின்றதொ ரறத்தின்
முறையில்லவள் வடிவில்லவள் முடிவில்லதொர் கற்பின்
சிறையில்லவள் உலகோர்க்கொரு சிறையாமெனத் திரிவாள். |
5 |
|
1523 |
கீழுற்றிடும் உலகெத்தனை யவையாவையுங் கிளர்ந்தோர்
வாழுற்றிடும் உலகெத்தனை அவையாவையு மாடே
சூழுற்றிடும் உலகெத்தனை அவையாவையுஞ் சுற்றா
ஊழுற்றிடு தன்னூர்தனில் ஒருநாழியில் வருவாள். |
6 |
|
1524 |
பொய்யுற்றவள் களவுற்றவள் புரையுற்றிடு சுரையூன்
துய்யுற்றவள் களியுற்றவள் சோர்வுற்றவள் கொலைசெய்
கையுற்றவள் விழியாலழல் காலுற்றவள் பவத்தின்
மொய்யுற்றவள் படிறுற்றவள் முனிவுற்றவள் மனத்தின். |
7 |
|
1525 |
பொங்குஞ்சிகை அழல்மைத்தலை புகுந்தாலென ஔ¤ருஞ்
செங்குஞ்சிய துடையாளெவர் செருச்செய்யினும் இடையாள்
துங்கங்கெழு தூணத்திடை தோன்றிக்கன கனைமுன்
பங்கம்படுத் துயிருண்டெழு பகுவாயரி நிகர்வாள். |
8 |
|
1526 |
சீயப்பெரு முகன்தாரகன் நிகராகிய திறலாள்
மாயத்தொழில் பயில்கின்றவள் மணிமால்வரை புரையுங்
காயத்தவள் அடற்கூற்றையுங் கடக்கின்றதொர் வலியாள்
தோயப்புண ரிகளேழுமொர் துணையிற்கடந் திடுவாள். |
9 |
|
1527 |
மாலுற்றிட வாழ்சூரபன் மாவின்கிளை முழுதும்
மூலத்தொடு முடிவித்திடு முறையூழ்வினை யென்னச்
சூலத்தினை யேந்தித்தனி தொடர்துன்முகி யுடனே
ஆலத்தின துருவாமென ஆங்குற்றனள் அன்றே. |
10 |
|
1528 |
கானின்றுள பொழிலேர்தனைக் காணாநனி சேனாள்
ஆநன்றென வியவாப்புவி அமர்சோலையி தன்றால்
வானின்றுள வனத்தைக்கொடு வந்தேயிவண் மகவான்
தானின்றுவைத் தானிங்கிது தப்பாதென நிற்பாள். |
11 |
|
1529 |
ஏலாவிது காணாயென ஈர்ந்தண்பொழில் எழிலை
ஆலாலம தெனவேவரும் அசமாமுகி யென்பாள்
பாலானதுன் முகிதன்னொடு பகராவது காட்டித்
கோலாலம துடனேயது குறுகும்படி வந்தாள். |
12 |
|
1530 |
மட்டுற்றிடு தண்காவினை வருடைத்தனி முகத்தாள்
கிட்டிச்சினை நனைமாமலர் கிளையாவையும் நோக்கித்
தட்டற்றிவண் உறைகின்றவர் தமைநோக்குவ லென்னா
எட்டுத்திசை யினும்நாடுதற் கிடையுற்றனள் கடிதின். |
13 |
|
1531 |
அதுகண்டனன் அவண்நின்றதொ ரையன்படைத் தலைவன்
முதுகண்டகி இவளாம்அச முகியென்பதொர் கொடியாள்
எதுகண்டிவண் வருகின்றனள் என்னோகருத் திவள்தன்
கதிகண்டனன் நிற்பேனெனைக் காணாநெறி யதனில். |
14 |
|
1532 |
மற்றிங்கிவள் செயல்யாவையும் வரலாற்றொடு காணாத்
தெற்றென்றவண் மீள்கின்றுழிச் செவ்வேயெதிர் போந்து
குற்றந்தனக் கிசையுந்திறம் முடிப்பேனெனக் கொலைசெய்
விற்றங்கிய புயவேடரில் வேறோரிடை நின்றான். |
15 |
|
1533 |
நின்றானவன் அதுகண்டிலன் நெஞ்சிற்களி தூங்கக்
குன்றாமலை அசமாமுகக் கொடியாள்அவ ளுடனே
சென்றாள்மலர்க் காவெங்கணுந் திரிந்தாள்திரிந் தளவில்
பொன்றாழ்முலைச் சசிமாதவம் புரிகின்றது கண்டாள். |
16 |
|
1534 |
அந்தாவிவள் அயிராணிநம் மரசன்றனக் கஞ்சி
நந்தாவளந் தனைப்பெற்றபொன் னகரத்தைவிட் டிங்கே
வந்தாளிவள் தன்னைக்கொடு வருவீரென எங்கோன்
முந்தாதர முடனுய்த்தனன் முடிவற்றதன் படையே. |
17 |
|
1535 |
இங்குற்றதை உணராமையின் இமையோர்புரம் நாடி
அங்குற்றிலள் அயிராணியென் றரசன்தனக் குரைப்ப
வெங்கட்டழ லெனச்சீறினன் மீண்டுஞ்சிலர் தமையித்
திங்கட்புரை முகத்தாள்தனைத் தேடும்படி விடுத்தான். |
18 |
|
1536 |
வானெங்கணும் பிலமெங்கணும் வரையெங்கணும் பரவை
தானெங்கணுந் திசை யெங்கணுந் தரையெங்கணுந் தரையிற்
கானெங்கணும் நமர்தேடினர் காணாரிவள் தன்னை
ஊனெங்கணும் வருந்தத்திரிந் துழன்றாரிது வுணரார். |
19 |
|
1537 |
தண்டேனமர் குளிர்பூங்குழற் சசியென்பவள் தனைநான்
கண்டேனினி இவள்மையலிற் கவலாதொழி கென்றே
வண்டொலிடு தொடைமன்னவன் மகிழ்வெய்தமுன் னுய்ப்பக்
கொண்டேகுவன் யானேயிவள் தனையென்றுகு றித்தாள். |
20 |
|
1538 |
இத்தேமொழி தனைஇந்திரன் ஈண்டேதனி யாக
வைத்தேகினன் இவள்தன்னை வருந்தாதளித் திடவோர்
புத்தேளிரும் இலரிங்கிது பொழுதாமவன் புகுமுன்
கொத்தேமலர்க் குழலாள்தனைக் கொடுபோவனென் றடைவாள். |
21 |
|
1539 |
தீனக்குற் கடுஞ்சொல்லெனும் உருமேறு தொழிப்பக்
கூனற்பிறை எயிறாகிய மின்னுப்புடை குவலக்
காணக்கரும் படிவத்தொடு கால்கொண்டேழு விசையால்
வானப்புயல் வழுவிப்புவி வந்தாலேன வந்தான். |
22 |
|
1540 |
ஊற்றங்கொடு வருதுன்முகி யுடனேயச முகிதான்
தோற்றங்கிளர் மணிவெற்பெனத் துண்ணென்றவண் வரலும்
ஏற்றம்பெற நோற்றேதனி இருந்தாளது காணாக்
கூற்றந்தனைக் கண்டாலெனக் குலைந்தாள்வலி குறைந்தாள். |
23 |
|
1541 |
நீரோதமி சைத்தங்கிய நிருதக்ககுல மகளோ
பாரோர்மயக் குறுபேய்மக ளோபாரிடத் தணங்கோ
சூரொடுறு தனிக்கொற்றவை தொழில்செய்பவள் தானோ
ஆரோவிவள் அறியேனென அஞ்சிக்கடி தெழுந்தாள். |
24 |
|
1542 |
எழுகின்றவள் தனைநில்லென இசைத்தேயெதிர் எய்தி
மொழிகின்றனள் அயிராணிநின் முதிராவிள நலனும்
பழியில்லதொர் பெருங்காமரும் பயனற்றிவண் வறிதே
கழிவெய்திடத் தவம்பூண்டிடல் கடனோஇது விடுநீ. |
25 |
|
1543 |
ஆரொப்புனக் குலகந்தனில் அருளாழியம் பகவன்
மார்பத்துறை திருமங்கையும் மற்றிங்குனக் கொவ்வாள்
பாரிற்கரந் திருந்தேதவம் பயில்வாயிதென் உன்னைச்
சேரத்தவம் புரிகின்றனன் திறற்சூரபன் மாவே. |
26 |
|
1544 |
இந்நாள்வரை உனைநண்ணிய இமையோர்க்கிறை உனது
நன்னாயகன் நாகப்பெரு நலனுற்றவன் அன்றே
தன்னாலுணர் வரிதென்பர்கள் தன்பேரழ கதனாற்
பன்னாள்அவ னுடன்மேவினை பாகிற்படு கரிபோல். |
27 |
|
1545 |
தவறுஞ்சுரர் உலகொன்றுளன் சதவேள்வியன் எம்முன்
புவனம்பல அண்டம்பல புரக்குந்திரு வுளனால்
இவனங்கவன் பணியேபுரிந் திளைத்தேகரந் துழல்வான்
அவனிங்கிவன் றனையேவல்கொண் டகிலந்தனி யாள்வான். |
28 |
|
1546 |
அழிவில்லவன் அவனிங்கிவன் அழியும்பரி சுடையான்
பழியில்லவன் அவனிங்கிவன் பழிவேலையில் திளைப்பான்
கழியும்படர் உழந்தானிவன் களிப்புற்றுளன் அவனே
தொழுவன்பல ரையுமிங்கிவன் தொழுமோவவன் சிலரை. |
29 |
|
1547 |
அந்நேரில னொடுமேவுவ தறிகின்றிலை அனையான்
தனனேவலின் ஒழுகித்திரி தமியோன்றனைத் துணையென்
றின்னேமெலிந் தனையீதுனக் கியல்போநின தெழிலுங்
கொன்னேகழிந் தனபற்பகல் குறியாயிது குணனோ. |
30 |
|
1548 |
எத்தேவரும் முகிலூர்தியும் இகல்மேவரும் அவுணக்
கொத்தேவரும் அணங்கோருமுன் குற்றேவல்செய் திடவே
முத்தேவரும் புகழப்படும் மொய்ம்புற்றிடு சூர்முன்
உய்த்தேயவ னொடுகூட்டுவன் உலகாண்டுடன் இருக்க. |
31 |
|
1549 |
பொன்னோடிகல் பங்கேருகப் பூங்கோமளை தனையும்
அன்னோன்வெறுத் திடுவன்பிறர் அனைவோரையும் அ·தே
உன்னோடள வறுகாதலின் உறுமிங்கிது சரதம்
என்னோடினி வருவாய்கடி தென்றாள்அறங் கொன்றாள். |
32 |
|
1550 |
தக்க வேழகத் தலையள் கூறிய
அக்கொ டுஞ்சொலை அணங்கு கேட்டலுந்
தொக்க தன்செவித் துளையில் அங்கிவேல்
புக்க தேயெனப் பொருமி விம்மினாள். |
1 |
|
1551 |
கைம்ம லர்க்கொடே கடிதில் தன்செவி
செம்மி வல்வினைத் தீர்வு நாடியே
விம்மி யங்குறும் வெய்யள் கேட்டிட
இம்மெ னச்சில இசைத்தல் மேயினாள். |
2 |
|
1552 |
ஏடி நீயிவண் இசைத்த தீமொழி
நேடி ஓர்ந்துளார் நிரய மாநெறி
யூடு சேர்வரால் உரைத்த நிற்குமேற்
கூடு தீமையார் குறிக்கற் பாலரே. |
3 |
|
1553 |
வேதம் யாவையும் விதித்த நான்முகன்
காத லன்தருங் கடவுள் மங்கைநீ
நீதி யில்லதோர் நெறியின் வாய்மையைப்
பேதை யாரெனப் பேச லாகுமோ. |
4 |
|
1554 |
தீங்கி யாவர்க்குஞ் செய்தி டாதவர்
தாங்கள் துன்புறார் தமக்கு வேண்டினோர்
ஆங்கெ வர்க்குமுன் அல்லல் செய்வரால்
ஈங்கு நீயிவை எண்ண லாய்கொலோ. |
5 |
|
1555 |
தருமம் பார்த்திலை தக்க மாதவக்
கருமம் பார்த்திலை கற்பும் பார்த்திலை
பெருமை பார்த்திலை பிறப்பும் பார்த்திலை
உரிமை பார்த்திலை உறவும் பார்த்திலை. |
6 |
|
1556 |
பழியும் பார்த்திலை படியி கழ்ந்திடு
மொழியும் பார்த்திலை முறையும் பார்த்திலை
வழியும் பார்த்திலை வருவ பார்த்திலை
இழியுந் தீயசொல் லியம்பற் பாலையோ. |
7 |
|
1557 |
ஆன்ற தொல்வளன் ஆற்றல் ஆயுள்பின்
ஊன்று சீர்த்திகள் ஒருவுற் றோர்க்கிது
தோன்று நீயிவை துணியல் வாழிகேள்
சான்று நின்குலத் தகுவர் யாவரும். |
8 |
|
1558 |
இந்தி ற்கலால் ஏவர் பாலினுஞ்
சிந்தை வைத்திடேன் தீதில் கற்பினேன்
வந்தெ னக்கிது வகுத்தி நின்கிளை
உய்ந்தி டத்தகும் உரைய தன்றிதே. |
9 |
|
1559 |
நூன்மை யாவையும் நுனித்து நாடிச்செங்
கோன்மை யன்றியே கொடுமை செய்துள
மேன்மை மன்னரும் வேறு ளார்களும்
பான்மை யாற்பிலம் படுவர் திண்ணமே. |
10 |
|
1560 |
மீளில் வெந்துயர் வேலை சார்ந்துளான்
நாளும் நாதனென் றறைதி யார்கணுங்
கோளும் நல்லவுங் கறுகும் அல்லலும்
நாளை உங்கள்பால் நணுகு றாதவோ. |
11 |
|
1561 |
நீதி யாகிய நெறியி லாதவள்
ஆத லான்மிக அறிவு மாழ்கியே
தீது கூறினாய் செல்வி தன்றரோ
மாது நீயிது மறத்தி யுய்யவே. |
12 |
|
1562 |
ஏவ ரென்றனை எய்தற் பாலினோர்
தேவர் சூழ்தரக் காப்பர் சிந்தையென்
ஆவி ஐம்புலம் அளிக்கும் எங்கணுங்
காவ லுண்டுநீ கடிதிற் போகென்றாள். |
13 |
|
1563 |
என்ற காலையில் எயிறு தீயுகக்
கன்று சேயிதழ் கறித்து வெய்துயிர்த்
தொன்றொ டொன்றுகை உருமிற் றாக்கியே
நன்று நன்றெனா நகைத்துச் சீறினாள். |
14 |
|
1564 |
மறுவில் வாசவன் மனைவி கூறிய
உறுதி வெய்யவட் கூற்றஞ் செய்தில
அறிவில் பேதையாய் அலகை தேறலால்
வெறிகொள் பித்தனுக் குரைத்த மெய்மைபோல். |
15 |
|
1565 |
ஆன காலையில் அசமு கத்தினாள்
ஊன வெந்துயர் உழக்கும் பெற்றியால்
வான வர்க்கிறை மாதை நோக்கியே
தானு ரைத்தனள் இனைய தன்மையே. |
16 |
|
1566 |
கிட்டி நல்லன கிளத்தி னேனெனை
ஒட்டி வந்திலை உரைத்தி மாறுனை
அட்டு நுங்குவன் அண்ணற் காகவே
விட்ட னன்இது மெய்மை யாகுமால். |
17 |
|
1567 |
ஆர்த்தி யாவுநீ அகல வென்னுடைச்
சீர்த்தி அண்ணர்பாற் சேறல் சிந்தியாய்
பேர்த்தி டாதுனைப் பிடித்து வன்மையால்
ஈத்துப் போகின்றேன் சரத மீதரோ. |
18 |
|
1568 |
முடிவில் ஆற்றலார் மூவர் யாவருந்
தடைசெய் கிற்பினுஞ் சமரின் ஏற்பினும்
விடுவன் அல்லன்யான் விரைவி னிற்கொடே
படர்வன் அன்னது பார்த்தி மேலெனா. |
19 |
|
1569 |
வெய்யள் அவ்வயி ராணி மென்கரங்
கையிற் பற்றியே கடிதின் ஈர்த்துராய்
மொய்யிற் போயினாள் முரணி லாதவள்
ஐய கோவெனா அரற்றல் மேயினாள். |
20 |
|
1570 |
பாவி தீண்டலும் புலம்பிப் பைந்தொடி
ஆவி போந்தென அவச மாகியே
ஓவி லாததொல் லுணர்வு மாய்ந்தனள்
காவி யொண்கணீர் கலுழத் தேம்பினாள். |
21 |
|
1571 |
ஐயர் கையில்வந் தவுண ரைச்செறுந்
துய்ய தீம்படை* தோகை கண்ணுறா
வெய்ய சூர்கிளை வீட்ட வந்தென
மையு லாயகண் வாரி மிக்கதே.
(* ஐயர் - அந்தணர்கள். அவுணர் - இங்குச் சந்தியா
காலத்தில் இடையூறு புரியும் மாந்தேயர் என்னும் அசுரர்கள்.
தீம்படை - இங்கு வருணாஸ்திரங்கள். ) |
22 |
|
1572 |
காசி பன்தருங் கலதி கூற்றுவன்
பாச மன்னகைப் பட்டு விம்மினாள்
வாச வன்றனி மனைவி வெங்கொலைப்
பூசை வாய்ப்படும் புள்ளின் பேடைபோல். |
23 |
|
1573 |
நாரி லாதவள் நலிந்து கொண்டனள்
பேரும் எல்லையில் பேதுற் றேயுளஞ்
சோரு கின்றவள் சுற்று நோக்கியே
யாருங் காண்கிலள் அரற்றல் மேயினாள். |
24 |
|
1574 |
பையரா அமளி யானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே யோலம் விண்ணோர்க் காதியே யோலம் செண்டார்
கையனே யோலம் எங்கள் கடவுளே யோலம் மெய்யர்
மெய்யனே யோலம் தொல்சீர் வீரனே யோலம் ஓலம். |
1 |
|
1575 |
ஆரணச் சுருதி யோர்சார் அடலுருத் திரனென் றேத்துங்
காரணக் கடவுள் ஓலம் கடல்நிறத் தெந்தாய் ஓலம்
பூரணைக் கிறைவா வோலம் புட்கலை கணவா வோலம்
வாரணத் திறைமேற் கொண்டு வரும்பிரான் ஓலம் என்றாள். |
2 |
|
1576 |
ஒய்யெனச் சசியிவ் வாற்றால் ஓலிட அதுகேட் டெங்கள்
ஐயனைக் குறித்துக் கூவி அரற்றுவாள் போலு மென்னா
மையினைத் தடுத்துச் சிந்து மருத்தென வந்தா னென்ப
வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமா காளன் என்போன். |
3 |
|
1577 |
சாத்தன தருளின் நிற்குந் தானையந் தலைவன் வானோர்
வேத்தவை யான வெல்லாம் வியத்தகு வீரன் உந்தி
பூத்தவன் முதலோர் யாரும் புகழவெவ் விடத்தை யுண்டு
காத்தவன் நாமம் பெற்றோன் காலற்குங் காலன் போல்வான். |
4 |
|
1578 |
இருபிறை ஞெலிந்திட் டன்ன இலங்கெழில் எயிற்றன் ஞாலம்
வருமுகில் தடிந்தா லென்ன வாள்கொடு விதிர்க்குங் கையன்
உருமிடிக் குரல்போல் ஆர்க்கும் ஓதையன் உரப்புஞ் சொல்லன்
கரவிழைத் தெங்ஙன் போதி நில்லெனக் கழறி வந்தான். |
5 |
|
1579 |
கொம்மென வந்த வீரன் கூவிய சசியை நோக்கி
அம்மனை அழுங்கல் வாழி அசமுகி யெனும் வெய்யாட்
கிம்மியின் துணையும் அஞ்சேல் ஈண்டுனைத் தீண்டு கின்ற
கைம்முறை தடிந்து வல்லே விடுவிப்பன் காண்டி யென்றான். |
6 |
|
1580 |
வீரன துரையைக் கேளா மெல்லியல் அணங்கின் நல்லாள்
பேரிடர் சிறிது நீத்துப் பெயலுறு துவலை தூங்கு
மாரியின் செலவு கண்ட வளவயற் வைங்கூழ் போல
ஆருயிர் பெற்றாள் மற்றை அசமுகி அவனைக் கண்டாள். |
7 |
|
1581 |
ஓவரும் புவனம் யாவும் ஒருங்குமுத் தொழிலும் ஆற்றும்
மூவருந் துறக்கம் வைகும் முதல்வனுந் திசைகாப் பாளர்
யாவரும் என்முன் நில்லார் ஈண்டெனை இகழ்ந்து சீறித்
தேவர்தங் குழுவி னுள்ளான் ஒருவனோ செல்வ னென்றாள். |
8 |
|
1582 |
வெறித்திடு கண்ணில் நோக்கி வெவ்விதழ் அதுக்கி வல்லே
கறித்தனள் வயிற்றின் மாலை கறகற கலிப்ப ஆர்த்தது
முறித்திவன் தன்னை யுண்டு முரண்வலி தொலைப்ப னென்னாக்
குறித்தச முகத்தி நிற்பக் குறுகினன் திறல்சேர் வீரன். |
9 |
|
1583 |
தட்டறு நோன்மை பூண்ட சசிதனைத் தமிய ளென்றே
பட்டிமை நெறியாற் பற்றிப் படருதி இவளை யின்னே
விட்டனை போதி செய்த வியன்பிழை பொறுப்பன் நின்னை
அட்டிடு கின்ற தில்லை அஞ்சலை அரிவை யென்றான். |
10 |
|
1584 |
கேட்டலும் உருத்திவ் வார்த்தை கிளத்தினை நின்னை யாரே
ஈட்டுடன் இவளைப் போற்றென் றிப்பணி தலைதந் துள்ளார்
வேட்டனன் அவரைக் கேட்ப விளம்புதி யென்றாள் முந்தூழ்
மாட்டுறு கனலி யென்னத் தன்குலம் முடிப்பான் வந்தாள். |
11 |
|
1585 |
தாரணி முதல மூன்றுந் தலையளி புரிந்து காப்பான்
காரணி செறிந்துற் றன்ன கரியவன் கடவுள் வௌ¢ளை
வாரண முடைய ஐயன் மற்றிது பணித்தான் என்பேர்
வீரரில் வீரனான வீரமா காளன் என்றான். |
12 |
|
1586 |
என்றலும் அனைய வாய்மை இந்திரன் தனக்கும் ஈசன்
பொன்றிரண் மார்பன் நல்கும் புதல்வற்கும் பொதுமைத் தாகி
நின்றது வாகத் தேவர் நிருதரால் வருந்தும் ஊழாற்
சென்றவன் மகவான் ஏவ லாளெனச் சிந்தை செய்தாள். |
13 |
|
1587 |
புந்தியில் இதனை யுன்னிப் பொள்ளெனச் சினமீக் கொள்ள
இந்திரன் தொழுவன் கொல்லாம் எனையிடை தடுக்கு நீரான்
சிந்துவன் இவனை யென்னாச் செங்கையிற் சூலந் தன்னை
உந்தினள் அதுபோய் வீரன் உரனெதிர் குறுகிற் றன்றே. |
14 |
|
1588 |
குறுகிமுன் வருத லோடுங் குரூஉச்சுடர் அங்கி மூன்றும்
முறையினோ ரிடையுற் றன்ன முத்தலைப் படையைக் காணூஉ
அறைகழல் வீரன் தொன்னாள் அங்கியை அட்ட தேபோல்
எறிகதிர் வாளால் மைந்தன் இருதுணி படுத்தி னானே. |
15 |
|
1589 |
படுத்தலும் மணிகள் நீலப் பையரா உமிழ்ந்த தென்னக்
கடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்க் கருங்கணம் அழல்கான் றென்ன
விடித்திடு கொண்மூ வின்பால் எழுந்தமின் னென்ன அன்னாள்
விடுத்திடு சூல வைவேல் வெவ்வழல் பொழிந்த தன்றே. |
16 |
|
1590 |
காலத்தின் உலகம் உண்ணக் கடலுறு வடவை தானே
ஆலத்தை மீது பூசி அசமுகி கரத்திற் கொள்ளச்
சூலத்தின் அமைந்த தம்மா சோதனை கொடுப்ப னென்னாச்
சீலத்தின் மிக்கோன் கூர்வாள் செந்தழல் பொழிவித் தன்றே. |
17 |
|
1591 |
சூளினார்த் தெறியும் வீரன் சுடர்கொள்முத் தலைவேல் தன்னை
வாளினால் தடித லோடும் மறிமுகத் தணங்கு சீறிக்
கேளினால் தனது பாங்கிற் கிடைத்ததுன் முகிகைச் சூலங்
கோளினாற் கடிது வாங்கிக் கூற்றனும் உட்க ஆர்த்தாள். |
18 |
|
1592 |
வசிகெழு சூலம்பற்றி மருத்துவன் துணைவி யான
சசிதனை இகுளை யாகுந் தையல்தன் கரத்திற் சேர்த்தி
நிசியின் பாந்த ளோடு நெடுங்கதிர் நேர்புக் கென்ன
விசையொடு கொடியள் சென்றாள் வீரமா காளன் தன்மேல். |
19 |
|
1593 |
ஒற்றைமுத் தலைவேல் தன்னை ஒப்பிலான் மரும மீது
குற்றிய முன்னி நீட்டிக் குறுகினள் அமர்செய் போழ்திற்
கற்றையஞ் சுடர்க்கூர் வாளாற் காவலன் எறித லோடும்
இற்றது சூலங் கண்ட அசமுகி இடைந்து போனாள். |
20 |
|
1594 |
இடைந்தனள் ஏகி ஆண்டோர் இருங்கிரி பறித்திட் டின்னே
முடிந்தனை போலு மென்னா மொய்ம்புடன் அவன்மேல் ஓசசத்
தடிந்தனன் தடித லோடுந் தாரைவாட் படையும் வல்லே
ஒடிந்தது கொடியள் காணா ஒல்லொலிக் கடல்போல் ஆர்த்தாள். |
21 |
|
1595 |
வீரமம காள கேண்மோ வேதனே ஆதி விண்ணோர்
ஆரும்வந் தாசி கூற அகிலமும் ஆளு கின்ற
சூரனாம் எமது முன்னோன் தோளிடை உய்ப்பக் கொண்டு
பேருவன் இவளை யோராய் விலக்கினை பேதை நீராய். |
22 |
|
1596 |
தடுத்திடல் முறைய தன்றால் தாரகன் தானை வீரர்
அடுத்திடிற் படுப்பர் கண்டாய் அன்றியும் யானே நின்னை
எடுத்தனன் மிசைவன் துய்க்கின் இரும்பசி யுலவா தென்னா
விடுத்தனன் உய்ந்து போதி விளிவுறேல் எளியை யென்றாள். |
23 |
|
1597 |
பாதகி இனைய மாற்றம் பகர்தலும் வீரன் கேளா
வேதியின் நினது சூலப் படையிற எறிந்தேன் நின்னை
மாதென அடாது நின்றேன் மற்றிதை உணர்ந்து வல்லே
போதியால் இவளை விட்டுப் போக்கலை கரத்தை யென்றான். |
24 |
|
1598 |
என்றலுங் கொடியள் கேளா ஈங்கிவன் வாளு மின்றி
நின்றனன் இவனொ டேபோர் நேருதல் நெறிய தன்றால்
அன்றியும் இவனை வெல்லல் அரிதினிச் சசியைக் கொண்டு
சென்றிடல் துணிபா மென்னாத் திரும்பினள் சேடி தன்பால். |
25 |
|
1599 |
துன்முகி யாகி நின்ற துணைவிதன் சிறைப்பட் டுள்ள
பொன்மிகும் யாணர் மேனிப் புலோமசை தனைத்தான் பற்றிக்
கொன்மலி அம்பொன் மேருக் குவட்டினைக் கொடுபோங் காலின்
வன்மையி னோடு கொண்டு மறிமுகத் தணங்கு போனால். |
26 |
|
1600 |
போகலும் அதனை ஐயன் பொருநரில் தலைவன் பாரா
ஏகுதி போலும் நில்லென் றெய்தியே உடைவாள் வாங்கிச்
சேகுறு மனத்தாள் கூந்தல் செங்கையாற் பற்றி யீர்த்துத்
தோகையைத் தொட்ட கையைத் துணித்தனன் விண்ணோர் துள்ள. |
27 |
|
1601 |
இருட்டுறு பிலத்துற் றோரை எடுத்துவௌ¢ ளிடையிட் டென்ன
மருட்டுறு மதிய ளாகி வருந்திய சசியென் பாளை
அருட்டிறத் தோடு வீடு செய்துபின் அவுண மாதை
உருட்டினன் றனது தாளால் உருமென உதைத்துத் தள்ளி. |
28 |
|
1602 |
அயமுகி வீழ்த லோடும் அழுங்கியே அயலின் நின்ற
வயமிகு துன்மு கத்து மங்கைதன் கரத்தி லொன்றைச்
செயிரறு சசியை நீயுந் தீண்டினை போலு மென்னாத்
துயல்வரு தொடையல் வீரன் துணித்தனன் சோரி பொங்க. |
29 |
|
1603 |
வேறு
மதர்த்திடு துன்முகி வன்கை வாளினாற்
சிதைத்திடு மொய்ம்புடைச் சேனை காவலன்
உதைத்தனன் அனையளும் ஓவென் றேயுளம்
பதைத்தனள் புலம்பியே படியில் வீழவே. |
30 |
|
1604 |
அறைபடு கழலினான் அவுண மாதர்கை
எறிதலுங் குருதிநீர் எழுந்த தன்மையால்
திறல்கெழு வெய்யசூர் திருவைச் சுட்டிடுங்
குறைபடு ஞெகிழியின் கோலம் போலுமே. |
1 |
|
1605 |
திரைந்தெழு குடிஞைபோல் குருதி சென்றிடக்
கரந்துமி படுதலுங் கவன்று வீழ்ந்தனள்
வருந்தினள் அரற்றினள் மறிமு கத்தினாள்
விரிந்திடு கனலுடை வேலை போன்றுளாள். |
2 |
|
1606 |
மருண்டனள் பதைத்தனள் மறித்த கையினள்
வெருண்டனள் நிலனுற வியன்கை எற்றினள்
உருண்டனள் வெரிநுடன் உரமுந் தேய்வுறப்
புரண்டனள் செக்கரிற் புயலிற் றோன்றுவாள். |
3 |
|
1607 |
புரந்தரன் தேவியைப் பொம்மெ னப்பிடித்
துரந்தரு வாயிலிட் டுண்பன் ஈண்டெனா
விரைந்தெழும் சென்றிம் மீளும் வீழ்ந்திடும்
இருந்திடும் சாய்ந்திடும் இரங்குஞ் சோருமே. |
4 |
|
1608 |
கடித்திடும் இதழினைக் கறைகண் மீச்செலக்
குடித்திடும் உமிழ்ந்திடும் குவல யத்திரீஇத்
துடித்திடும் பெயர்ந்திடும் துளக்குஞ் சென்னியை
இடித்தெனக் கறித்திடும எயிற்றின் மாலையே. |
5 |
|
1609 |
திகைத்திடும் நன்றுநஞ் செய்கை ஈதெனா
நகைத்திடும் அங்குலி நாசி யில்தொடும்
புகைத்தென உயிர்த்திடும் புவியைத் தாள்களால்
உகைத்திடும் புகையழல் உமிழும் வாயினால். |
6 |
|
1610 |
உம்மென உரப்பிடும் உருமுக் காண்றென
விம்மெனச் சினத்திடும் எரிவி ழித்திடுந்
தெம்முனைப் படையடுஞ் சேனை வீரனை
விம்மிதப் படுமுடல் வியர்க்கும் வௌ¢குமே. |
7 |
|
1611 |
அற்றிடு கரத்தினை அறாத கையினால்
தெற்றென எடுத்திடும் தெரிந்து நோக்கிடும்
ஒற்றிடும் விழிகளில் உகுக்குஞ் சோரிநீர்
இற்றெவர் பட்டனர் என்னின் என்னுமே. |
8 |
|
1612 |
வீவதே இனியெனும் வினையி னேன்றனக்
காவதோ இ·தெனும் ஐய கோவெனும்
ஏவரும் புகழ்தரும் எங்கள் அண்ணர்பாற்
போவதெவ் வாறெனப் புலம்பு கொள்ளுமே. |
9 |
|
1613 |
காசினி தனில்வருங் கணவர் கைதொடக்
கூசுவ ரேயெனுங் குறிய பங்ககெனப்
பேசுவ ரேயெனும் பிறரும் வானுளோர்
ஏசுவ ரேயெனும் என்செய் கேனெனும். |
10 |
|
1614 |
தேவர்கள் அனைவருஞ் சிந்தித் தென்கரம்
போவது புணர்ந்தனர் பொன்று வேன்இனி
ஆவதன் முன்னரே அவரை யட்டுல
கேவையும் முடிப்பனென் றெண்ணிச் சீறுமே. |
11 |
|
1615 |
பாருயிர் முழுவதும் படுத்தி டோவெனும்
ஆரழல் வடவையை அவித்தி டோவெனும்
பேருறு மருத்தினைப் பிடித்தி டோவெனும்
மேருவை அலைத்தனன் வீட்டு கோவெனும். |
12 |
|
1616 |
பீளுறும் எழிலிகள் பிறவும் பற்றியே
மீளரி தெனும்வகை மிசைந்தி டோவெனும்
நாளினை முழுவதும் நாளு டன்வருங்
கோளினை முழுவதுங் கொறித்தி டோவெனும். |
13 |
|
1617 |
சீர்த்தகை இழந்தியான் தெருமந் துற்றது
பார்த்திக ழுங்கொலஇப் பரிதி வானவன்
ஆர்த்திடுந் தேரொடும் அவனைப் பற்றியே
ஈர்த்தனன் வருவதற் கெழுந்தி டோவெனும். |
14 |
|
1618 |
கண்டதோர் பா¤தியைக் கறித்துச் சூழ்ச்சிசெய்
அண்டர்கள் யாரையும் அடிசி லாகவே
உண்டெழு கடலையும் உறிஞ்சிக் கைபுறத்
தெண்டிரை தனிற்கழீஇத் திரும்பு கோவெனும். |
15 |
|
1619 |
செந்நலம் நீடிய தென்னங் காயிடைத்
துன்னிய தீம்பயன் சுவைத்திட் டாலெனப்
பின்னுறு மதியினைப் பிடித்துக் கவ்விமெய்
இன்னமிர் தினை நுகர்ந் தெறிகெ னோவெனும். |
16 |
|
1620 |
இந்திரன் களிற்றினை ஏனைத் தந்தியைச்
செந்துவர்க் காயெனச் சேர வாய்க்கொளா
ஐந்தரு இலைகளா அவற்றுள் வெண்மலர்
வெந்துக ளாக்கொடு மிசைகெ னோவெனும். |
17 |
|
1621 |
தாக்குகோ பணிகளைத் தலைகி ழக்குற
நீக்குகோ பிலம்படு நிலயத் தோரையுந்
தூக்குகோ புவனியைச் சுழற்றி மேலகீழ்
ஆக்குகோ மாலென அருந்து கோவெனும். |
18 |
|
1622 |
வேறு
ஆரும் அச்சுற இனையன அசமுகி வெய்யாள்
சூரன் தங்கைமா லுளத்தினள் இறப்பது துணிவாள்
பேரிடும் பையள் தொலைவுறா மானமே பிடித்தாள்
வீர வன்மையள் ஆதலின் உரைத்தனள் வெகுண்டாள். |
19 |
|
1623 |
வெகுளு மெல்லையில் கண்டனள் துன்முகி வெய்ய
தகுவர் தங்குலத் துதித்தனள் ஆயினுந் தகவின
புகுதி சால்புணர் புந்தியள் ஆதலிற் பொருக்கென்று
இகுளை முந்துற வந்தனள் இனையன இசைத்தாள். |
20 |
|
1624 |
வைய மென்செயும் வானக மென்செயும் மற்றைச்
செய்ய வானவர் என்செய்வர் வரைகளென் செய்யும்
ஐய மால்கடல் பிறவுமென் செய்திடும் அவனால்
கையி ழந்திடின் உலகெலாம் முடிப்பது கடனோ. |
21 |
|
1625 |
பாரும் வானமுந் திசைகளும் பல்லுயிர்த் தொகையுஞ்
சேர வேமுடித் திடுவதை நினைந்தனை செய்யின்
ஆரும் நின்றனை என்செய்வர் அவையெலா முடைய
சூர னேயுனை முனிந்திடும் அவன்வளந் தொலையும். |
22 |
|
1626 |
ஆத லான்மனத் தொன்றுநீ எண்ணலை அவுணர்
நாத னாகிய வெய்யசூர் முன்னுற நாம்போய்
ஈதெ லாஞ்சொலின் இமையவர் கிளையெலா முடிக்கும்
போத லேதுணி வென்றனள் பின்னரும் புகல்வாள். |
23 |
|
1627 |
வேறு
ஞானமில் சிறுவிதி நடாத்தும் வேள்வியில்
வானவர் தங்களின் மடந்தை மார்களில்
தானவர் தங்களில் தத்தம் மெய்களில்
ஊனமில் லோரையாம் உரைக்க வல்லமோ. |
24 |
|
1628 |
நினைவருங் கண்ணுதல் நிமலற் கேயலால்
அனையனை அடைதரும் அறிஞர்க் கேயலால்
எனைவகை யோர்க்கும்எவ் வுயிர்க்கும் ஏற்பதோர்
வினைபடும் இழிதுயர் விட்டு நீங்குமோ. |
25 |
|
1629 |
ஆகையின் மங்கைநீ அரற்றல் வௌ¢கியே
சோகமுங் கொள்ளலை துயரும் இன்பமும்
மோகமும் உயிர்க்கெலாம் முறையிற் கூடுமால்
ஏகுதுங் எழுகென இயம்பித் தேற்றினாள். |
26 |
|
1630 |
வேறு
மொழிந்து துன்முகி தௌ¤த்தலும் நன்றென முன்னா
எழுந்து துண்ணென அசமுகி என்பவள் இலதாய்க்
கழிந்த துன்பொடு நின்றதோர் சசியினைக் காணூஉ
அழிந்த மானவெந் தீச்சுட இனையன அறைவாள். |
27 |
|
1631 |
துப்பு றுத்திய அண்டங்கள் யாவினுஞ் சூரன்
வைப்பு றுத்திய திகிரியும் ஆணையும் வழங்கும்
இப்பு றத்தினில் ஔ¤ப்பினும் இதுவன்றி அண்டத்
தப்பு றத்தினில் ஔ¤ப்பினும் பிழைப்புமக் கரிதே. |
28 |
|
1632 |
மறைத லுற்றிடும் இந்திரன் தன்னைஇவ் வனத்தின்
உறைத லுற்றிடும் உன்றனை ஒழிந்தவா னவரை
இறைத னிற்பற்றி ஈர்த்துப்போய் என்னகர் தன்னில்
சிறைப டுத்துவன் திண்ணமெங் கோமகன் செயலால். |
29 |
|
1633 |
உங்கள் தம்மையான் சிறைபடுத் தேன்எனின் உலகம்
எங்கு மாள்கின்ற சூரபன் மாவெனும் இறைவன்
தங்கை யன்றியா னெனதுரந் தனிலெழுந் தனவுங்
கொங்கை யன்றியான் பேடியே குறிக்கொளென் றகன்றாள். |
30 |
|
1634 |
அகல நின்றதோர் வீரமா காளனாம் அடலோன்
உகவை யோடுறு சசியினை நோக்கிநின் னுளத்தில்
தகுவர் தங்களுக் கஞ்சலை அன்னையுன் தலைவன்
புகுதும் எல்லையும் அளிப்பன்ஈண் டுறைகென்று போனான். |
1 |
|
1635 |
போன காலையிற் புலோமசை அடவியம் புறனோர்
மானி னம்பிரிந் தற்றென அவ்வனம் வைகிக்
கோன வன்வினை முற்றிய நோற்றனள் குறிப்பால்
ஆன பான்மையை நாரத முனிவரன் அறிந்தான். |
2 |
|
1636 |
மேலை வௌ¢ளியம் பருப்பதந் தனில்விரைந் தேகிச்
சீல விண்ணவர் தம்முடன் சிவனடி பரவக்
கால மின்றியே இருந்திடும் இந்திரன் கடைபோய்
ஞாலம் வைகிய புலோமசைக் குற்றவா நவின்றான். |
3 |
|
1637 |
நவின்ற வாசகங் கேட்டலும் மகபதி நனியுட்
கவன்று தேறியே முனிந்துபின் இறையருள் கருதி
அவன்றன் மாமுறை தூக்கியே தன்னைநொந் தழுங்கித்
துவன்ற தேவரோ டெழுந்தனன் அரன்புகழ் துதித்தே. |
4 |
|
1638 |
வந்து நந்தியெம் மடிகளின் அடிமுறை வணங்கி
அந்த மில்பகல் வேலைநோக் குற்றனம் அமலன்
சிந்தை செய்தெமை யருள்புரிந் திடுகிலன் தீயேம்
முந்தி யற்றிய தீவினைப் பகுதியை முன்னி. |
5 |
|
1639 |
கைம்மை யாம்பெயர் அணங்கினோர் பெறாவகை கறுத்த
செம்மை யா£களத் தெம்பிரான் எமக்கருள் செய்வான்
பொய்ம்மை தீர்தவம் இயற்றிட நிலமிசைப் போதும்
எம்மை யாங்கருள் புரிந்தனை விடுத்தியென் றியம்ப. |
6 |
|
1640 |
நன்று போமென நந்தியெம் பெருந்தகை நவிலத்
துன்று வானவர் தம்மொடுங் கழுமலந் துன்னி
நின்ற வீரமா காளனைக் கண்டனன் நேர்போய்ச்
சென்று புல்லியே முகமன்ஓர் அளப்பில செப்பி. |
7 |
|
1641 |
போதி ஐயவென் றனையனை ஐயன்பாற் புகுத்தி
மாது நோற்றுழிக் குறுகியே அவள்துயர் மாற்றிக்
கேதம் எய்திய அசமுகி சூளுரை கேளா
ஏது செய்வதென் றுன்னினன் இமையவர்க் கிறைவன். |
8 |
|
1642 |
சுடர்ப்பெ ருங்குலி சத்திறை சூழ்ந்தனன் துணியா
அடுத்த மங்கையை யுடன்கொடே விரைந்தவண் அகன்று
புடைக்கண் வந்திடுங் கடவுளர் தம்மொடும் புராரி
எடுத்த வார்சிலைப் பொற்றையிற் கரந்தனன் இருந்தான். |
9 |
|
1643 |
இன்ன பான்மையின் மகபதி இருந்தனன் இப்பால்
முன்ன மேகிய அசமுகி வெய்யதுன் முகத்தாள்
தன்னொ டேகியே மகேந்திரத் தனிநகர் அடைந்தாள்
அன்ன காலையிற் சூரன்வீற் றிருந்தவா றறைவாம். |
1 |
|
1644 |
வேறு
மீயுயர் கின்ற விண்ணினின் றிழிந்த விழுமிய மேதினி வரைப்பின்,
ஆயிர கோடி கொண்டவண் டத்தில் ஆடகப் பித்திகை அவற்றுள்,
தீயன விலக்கி நல்லன எடுத்துத் திசைமுகத் தவர்கள் செய் தென்ன,
ஓய்வற விளங்கு தபனியப் பொதுவொன் றொராயிரம் யோசனை யுறுமே. |
2 |
|
1645 |
இத்தரை யுளதாந் தொல்லைஅண் டத்தில் இடையிடை எய்தியே இலங்கும்,
அத்தமால் வரைகள் கைபுனைந் தியற்றி அம்புயா சனர் பலர் கூடி,
வைத்தெனச் சூரன் அரசியல் நடாத்தும் மன்றினில் ஆயிர கோடி,
பத்தியின் நிறுவும் ஆடகத் தூணம் பரந்ததப் பருமையார் பகர்வார். |
3 |
|
1646 |
தொல்லையன் டத்தின் கண்டொறுங் கெழீஇய சுவணமா தரையெலாந் தொகைசெய்,
தல்லன விலக்கி நல்லன தெரிந்தே அமைத்த போல் அணிபெறு நிலத்தில்,
ஒல்லுறு புடையில் உம்பரில் அங்கண் உலப்பிலாக் குலகிரிக் குழுவிற்,
பல்லிருந் துணிசெய் தணிபடுத் தென்னப் பன்னிற ஓவியம் பயிலும். |
4 |
|
1647 |
பொன்னுலா அண்டத் தும்பர்க டோறும் பொருந்திய செக்கர்வான் புராரி,
தன்னதா ணையினால் ஒருங்குசூழ்ந் தென்னத் தண்மலர் விதானமீத் தயங்கப்,
பன்னிரு கோடி யாகியெங் கணுஞ்சூழ் பகலவர் சிலவரே யன்றி,
அன்னவர் பலரும் பணியிலுற் றென்ன அணி மணிக் கண்ணடி ஔ¤ரும். |
5 |
|
1648 |
மண்ணுலா அண்டத் திரவிகள் என்றூழ் வரம்பிலா மதிகளின் உளவாந்,
தெண்ணிலாக் கற்றை ஐம்பரு நிறத்த செல்லினம் யாவையுஞ் செறிந்தே,
அண்ணலார் மேலைக் கம்பலஞ் சூழ்போய் அமர்ந்தென ஆயிடைக் கவரி,
எண்ணிலா தனவும் ப·றுகிற் குழுவும் இடைவிராய் மிடைவன எங்கும். |
6 |
|
1649 |
பரக்குறும் அண்டந் தொறுந்தொறும் உளவாம் பகலினைப் பரிமுகத் தெரியின்,
உருக்கியொன் றாக்கித் தவிசென இயற்றி ஔ¤றுதா ரகையவட் குயிற்றித்,
தருக்குறு கின்ற மதிகளை மடங்கல் தகவுசெய் திருத்திய தென்னத்,
திருக்கிளர் அவையத் தவுணர்கோன் இருப்பச் சிறந்ததோர் அரியணை திகழும். |
7 |
|
1650 |
ஆனதோர் மன்றத் தரியணை மிசையே ஆயிர கோடியண் டத்தின்,
மேனிமிர் வடவை அங்கியும் விடமு மிசைந்தழி யாநெறி மேவித்,
தானவர் பரவக் கூற்றெலா மொன்றாய்த் தணப்பில்பேர் அணிகலந் தயங்க,
வானிமிர்ந் துற்றா லென்னவெஞ் சூர மன்னவர் மன்னன்வீற் றிருந்தான். |
8 |
|
1651 |
மேலைநாள் அமலன் உதவுபல் லண்டம் மேவர நடாத்துதொல் லாணைக,
கோலொடு வௌ¤ய சீர்த்திகள் முழுதுங் குறுகியே ஈருருக் கொண்டு,
பாலுற வந்து நின்றதே யென்னப் பாங்கரில் அவுணர்கள் தாங்கும்,
வாலிய துணைசேர் தவளவெண் கவிகை மாமதிக் கடவுளை மலைய. |
9 |
|
1652 |
காருறழ் படிவத் துவரிகள் அனைத்துங் கண்ணகன் பாற்கடல் முழுதும்,
ஈருரு வெய்தி யெழுந்துமே லோங்கி இருந்தென வைகலுஞ் செலுமத்,
தாரக விறலோன் ப·றலைச் சீயத் தலைமையான் சார்ந்தயல் இருப்ப,
ஆரழல் உருவப் பண்ணவ ரேபோல் அமைச்சருங் குமரரும் அமர.
|
10 |
|
1653 |
எவ்வெலா அண்டத் துறைதரு மருத்தும் இரும்புனற் கிறைவரு மாகிச்,
செவ்விதின் ஒருங்கித் தத்தமில் உலவாச் சீகரம் படுபனி சிதறி,
அவ்வயின் வேண்டும் அளவையிற் பலவாய் அவனடி பணிந் தெழுந் திறம்போல்,
மைவரை யனைய அவுணா¢கள் இரட்டும் வாலிய கவரிகள் வயங்க. |
11 |
|
1654 |
உரைத்திடும் அண்டந் தொறுந்தொறும் உள்ள உம்பரில் இயக்கர் கோன் உலகில்,
தரைப்பெரு வரைப்பில் பிறவிலுள் ளதனில் தவறிலா அறபுதத் தனவாத்,
தெரித்தனர் எடுத்துப் பொதிந்தென நறிய திரையன்மெல் லிலைதுவர்ப் பழுக்காய்,
விரைத்திடு சுண்ணங் கொள் கலம் பரியா வினைமுறை யோர்பலர் விரவ. |
12 |
|
1655 |
நின்றதோ ரேனை அருக்கருட் சிலரை நீரமுய்த் துள்ளகோ டிகமேற்,
பொன்றரை யுழியின் மணிசொரிந் தென்னப் புகட்டுறு தம்பலக் களாசி,
மன்றதொல் லறிவர் திருத்தினர் பொருவ மற்றவை அவுணர்க ளேந்தித்,
துன்றிருந் துவர்க்கா யடைபிற பரிக்குந் தொழுவர்தங் குழுவொடு துவன்ற. |
13 |
|
1656 |
ஆழியங் கிரியிற் கதிர்மணி வெயிலும் அன்னது சூழ்ந்தபேர் இருளும்,
வாழிய அமுதும் உவரியும் அல்லா வாரிதி யும்பல மணியும்,
ஊழியி னிறுதி அமையமே லெல்லாம் ஒன்றிய தென்னமுன் னிருபால்,
கேழுறு பின்னர் அவுணர்மாத் தலைவர் கிளையொடு துவன்றினர் கெழும. |
14 |
|
1657 |
மின்னவிர் விசும்பின் அகட்டினை அளவி வெண்மதிக் கடவுண்மெய் யணுகிப்,
பின்னுறும் அமுத நீர்க்கடல் திளைத்துப் பெரும்புறப புணரியிற் படியா,
இந்நில மருங்கில் வானகத் துள்ள எழின்மலர்க் காவுதோ றுலாவித்,
தன்னொலி யின்றி மென்மெல அசைந்து தண்ணென வசந்தன்முற் சார. |
15 |
|
1658 |
விண்படு நிறைநீர்ப் புதுமதிக் கடவுள் வியன்பனித் துவலையைத் துற்றுக்,
கண்படு துறக்கத் தண்டலைப் பொதும்பிற் காமரம் போதிடைக் கவிழ்த்தி,
எண்படு பன்னாள் கழித்தபின் கவர்ந்தே எழிலிகள் கரந்துநின் றீண்டைத்,
தண்பனி உறைப்பிற் கண்ணுறாத் துவலை தணப்பறச் சிதறிடத் தம்மில். |
16 |
|
1659 |
தேனனர் ஐம்பால் உருப்பசி அரம்பை திலோத்தமை மேனகை முதலாம்,
வானவர் மகளிர் இயக்கர்தம் மகளிர் வலிகெழும் அரக்கர் தம் மகளிர்,
தானவர் மகளிர் விஞ்சையர் மகளிர் சாரணர் சித்தர்தம் மகளிர்,
ஏனையர் மகளி ரியாவரும் வெவ்வே றியற்படு களிநடம் இயற்ற. |
17 |
|
1660 |
ஐந்திறத் துருவங் காலையில் உரைப்பான் அமையமின் றாகியே தேவா,
வந்தொரு புடையில் ஒதுங்கினன் இருப்ப மற்றவன் உதவுறுங் குமரர்,
நந்துறு பெருநீர்க் குடங்கரிற் கன்னல் நாடினர் நாழிகைப் பறையை,
முந்துற விரட்டிப் பதந்தொறுஞ் சென்று முறை முறை உரைத்தனர் திரிய. |
18 |
|
1661 |
தேர்த்திடும் உழுவைச் சூழலிற் சிலமான் சென்றென அவுணர்தஞ் செறிவில்,
வேர்த்துடல் பதைப்ப வரும்பல முனிவர் வேறுவே றாசிகள் இசையா,
ஆர்த்திடும் ஒலியாற் கேட்டில வாமென் றஞ்சினர் அவருறு புலத்தைப்,
பார்த்திடுந் தோறும் வாழ்கெனப் பரவிப் பாணியை விரித்தனர் நிற்ப. |
19 |
|
1662 |
திருக்கிளர் பொன்னாட் டிந்திரன் அல்லாத் தேவர்கள் யாவரும் அவுணர்,
நெருக்கினர் உந்த ஏகிநேர் புகுவோர் நெடுங்கடை காறுமுன் றள்ள,
வெருக்கொடு சென்று மீண்டுமற் றாகி வியன்கடை காவலர் புடைப்பத்,
தருக்குறும் அவையங் காணிய பெறாது தம்முளங் குலைந்தனர் திரிய. |
20 |
|
1663 |
வெற்றவெங் கதத்தர் அவுணர்கஞ் சுகிசேர் மெய்யினர் வெறுக் கையஞ் சூரல்,
பற்றிடு சுரத்தர் செல்லெனுந் தெழிப்பர் பனிப்பிறை எயிற்றர் பல்லிமையோர்,
பொற |