|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள் > புத்தகம் 21 - சபை உரையாளர் & புத்தகம் 22 - இனிமைமிகுபாடல் > புத்தகம் 23 - எசாயா > புத்தகம் 24 - எரேமியா > புத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 31(ஒபதியா); புத்தகம் 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்) புத்தகம் 35 (அபகூக்கு); 36 (செப்பனியா); 37 - ஆகாய் & புத்தகம் 38 (செக்கரியா)
Holy Bible - Old Testament
Book 24: Jeremiah
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 24 -
எரேமியா
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version. PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 2007.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அதிகாரம் 1.
1. பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்:
2. ஆமோன் மகனும் யூதா அரசருமான யோசியாவின் காலத்தில், அவரது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.
3. யோசியா மகனும் யூதா அரசனுமாகிய யோயாக்கீம் காலத்திலும், யோசியா மகனும் யூதா அரசனுமாகிய செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டின் இறுதி வரையிலும், அதாவது எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்ட அதே ஆண்டின் ஜந்தாம் மாதம்வரை ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது.
4. எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
: தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்: நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்: மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்."
6. நான், "என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே" என்றேன்.
7. ஆண்டவர் என்னிடம் கூறியது: "ஓசிறுபிள்ளை நான்ஓ என்று சொல்லாதே: யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்: எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல்.
8. அவர்கள்முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன், என்கிறார் ஆண்டவர்."
9. ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: "இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்.
10. பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்".
11. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ஓஎரேமியா, நீ காண்பது என்ன?ஓ என்னும் கேள்வி எழ, "வாதுமை மரக்கிளையைக் காண்கிறேன்" என்றேன்.
12. அதற்கு ஆண்டவர் என்னிடம், "நீ கண்டது சரியே. என் வாக்கைச் செயலாக்க நானும் விழிப்பாயிருப்பேன்" என்றார்.
13. ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: "நீ காண்பது என்ன?" என்னும் கேள்வி எழ, "கொதிக்கும் பானையைக் காண்கிறேன். அதன் வாய் வடக்கிலிருந்து சாய்ந்திருக்கின்றது" என்றேன்.
14. ஆண்டவர் என்னிடம் கூறியது: "நாட்டில் குடியிருப்போர் அனைவர் மீதும் வடக்கிலிருந்தே தீமை பாய்ந்து வரும்."
15. இதோ வடக்கிலுள்ள அரச குடும்பத்தார் அனைவரையும் நான் அழைக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வந்து ஒவ்வொருவரும் எருசலேமின் வாயில்களிலும், அதன் சுற்றுச் சுவர்களுக்கு எதிரிலும், யூதா நகர்களுக்கு எதிரிலும் தம் அரியணையை அமைப்பர்.
16. என் மக்களின் தீய செயல்களுக்காக அவர்களுக்கெதிராகத் தீர்ப்புக் கூறப் போகிறேன். அவர்கள் என்னைப் புறக்கணித்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குத் பபம் காட்டினார்கள். தங்கள் கைவேலைப்பாடுகளை வழிபட்டார்கள்.
17. நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.
18. இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் பணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.
19. அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்" என்கிறார் ஆண்டவர்.அதிகாரம் 2.
1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
7. நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலைநிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன்.
3. இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது: அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது: அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்: அவர்கள்மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.
4. யாக்கோபின் வீட்டாரே, இஸ்ரயேல் வீட்டின் அனைத்துக் குடும்பத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
5. ஆண்டவர் கூறுவது இதுவே: என்னை விட்டகன்று வீணானவற்றைப் பின்பற்றி வீணாகும் அளவுக்கு உங்கள் தந்தையர் என்னிடம் என்ன தவறு கண்டனர்?
6. எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்து வந்தவரும் பாழ்நிலமும் படுகுழிகள் நிறைந்த நிலமும் வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும் யாருமே கடந்து செல்லாததும், யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில் நம்மை நடத்தி வந்தவருமான ஆண்டவர் எங்கே? என்று அவர்கள் கேட்கவில்லையே!
7. செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்: எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.
8. குருக்கள், "ஆண்டவர் எங்கே?" என்று கேட்கவில்லை: திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை: ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்: இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.
9. ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவேன்" என்கிறார் ஆண்டவர். உங்கள் மக்களின் மக்களோடும் வழக்காடுவேன்.
10. சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக் கடந்து சென்றுபாருங்கள்: கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்: இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள்.
11. தங்கள் தெய்வங்கள் தெங்வங்களே அல்ல எனினும், அவற்றினை மாற்றிக்கொண்ட மக்களினம் உண்டா? என் மக்களோ, என் மாட்சியைப் பயனற்ற ஒன்றிற்காக மாற்றிக் கொண்டனர்.
12. வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்: அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.
13. ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்: தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைக் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.
14. இஸ்ரயேல் ஓர் அடிமையா? வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா? அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்?
15. அவனுக்கு எதிராக இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து, பெருமுழக்கம் செய்து அவனது நாட்டைப் பாழடையச் செய்தன: அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன: அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.
16. மெம்பிசு, தகபனேசு நகரினர் உன் தலையை மழித்தனர்.
17. உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வழிநடத்திச் செல்லும்போதே அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்?
18. நைல் நதி நீரைக் குடிக்க இப்போது நீ எகிப்துக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன? யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க அசீரியாவுக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன?
19. உன் தீச்செயலே உன்னைத் தண்டிக்கும்: உன் பற்றுறுதியின்மையே உன்னைக் கண்டிக்கும்: உன் கடவுளாகிய ஆண்டவராம் என்னைப் புறக்கணித்தது தீயது எனவும் கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள். என்னைப் பற்றிய அச்சமே உன்னிடம் இல்லை, என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
20. நெடுங்காலத்துக்கு முன்பே உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்: உன் தளைகளை அறுத்துவிட்டாய்: "நான் ஊழியம் செய்வேன்" என்று சொன்னாய். உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விலைமாதாகக் கிடந்தாயே!
21. முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன்: நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி?
22. நீ உன்னை உவர் மண்ணினால் கழுவினாலும், எவ்வளவு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் குற்றத்தின் கறை என் கண்முன்னே இருக்கிறது, என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.
23. "நான் தீட்டுப்படவில்லை: பாகால்களுக்குப்பின் திரியவில்லை" என எப்படி நீ கூற முடியும்? பள்ளத்தாக்கில் நீ சென்ற பாதையைப் பார்: நீ செய்தது என்ன என்று அறிந்துகொள்: இங்கும் அங்கும் விரைந்தோடும் பெண் ஒட்டகம் நீ.
24. பாலைநிலத்தில் பழகியதும், காம வேட்கையில் மோப்பம் பிடிப்பதுமான காட்டுக் கழுதை நீ! அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும்? அதனை வருந்தித் தேடத் தேவையில்லை: புணர்ச்சிக் காலத்தில் அதனை எளிதில் காணலாம்.
25. "கால் தேய ஓடாதே: தொண்டை வறண்டுபோக விடாதே" என்றால், நீயோ, ""பயனில்லை. நான் வேற்றுத் தெய்வங்கள்மேல் மோகம் கொண்டேன்: அவர்கள் பின்னே திரிவேன்" என்றாய்.
26. திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள்.
27. ஒரு மரத்தை நோக்கி, "நீயே என் தந்தை" என்பர்: ஒரு கல்லை நோக்கி, "நீயே என்னைப் பெற்றெடுத்தவள்" என்பர். எனக்கு முகத்தையல்ல, முதுகையே காட்டுகின்றனர்: ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில், "எழுந்தருளி எங்களை விடுவியும்" என்பர்.
28. உனக்கென நீ செய்துகொண்ட தெய்வங்கள் எங்கே? உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே! யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ, அத்தனை தெய்வங்கள் உன்னிடம் இருக்கின்றனவே!
29. என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்? நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க் கலகம் செய்தவர்களே, என்கிறார் ஆண்டவர்.
30. நான் உங்கள் மக்களை அடித்து நொறுக்கியது வீண்: அவர்கள் திருந்தவில்லை: சிங்கம் அழித்தொழிப்பதுபோல உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினரை வீழ்த்தியது.
31. இத்தலைமுறையினரே! ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள். நான் இஸ்ரயேலுக்குப் பாலைநிலமாய் இருந்தேனா? அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா? "நாங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிவோம்: இனி உம்மிடம் வரமாட்டோ ம்" என்று என் மக்கள் ஏன் கூறினார்கள்?
32. ஒரு கன்னிப் பெண் தன் நகைகளை மறப்பாளோ? மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ ? என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய் மறந்து விட்டார்கள்.
33. காதலரை அடையும் வழிகளைச் சிறப்பாய் வகுத்துள்ளாய்: ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
34. மாசற்ற வறியவரின் இரத்தக்கறை உன் மேலாடை விளிம்புகளில் காணப்படுகின்றது: அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை நீ கண்டாயா?
35. இவை அனைத்தையும் நீ செய்திருந்தும் நீயோ, "நான் மாசற்றவள்: அவர் சினம் என்னைவிட்டு அகன்று விட்டது உறுதி" என்கிறாய். "பாவம் செய்யவில்லை" என்று நீ கூறியதால், நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.
36. ஏன் இவ்வளவு எளிதாக உன் வழிகளை மாற்றிக் கொள்கின்றாய்? அசீரியாவால் நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல் எகிப்தினாலும் மானக்கேட்டிற்கு உள்ளாவாய்!
37. உன் தலைமேல் கைகளை வைத்துக் கொண்டுதான் அங்கிருந்து திரும்பி வருவாய்: ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்: அவர்களால் உனக்குப் பயன் ஏதும் இல்லை."அதிகாரம் 3.
1. "கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனை விட்டகன்று வேறு ஒருவனோடு வாழ்கையில், அக்கணவன் அவளிடம் மீண்டும் திரும்பிச் செல்வானா? அந்நாட்டு தீட்டுப்படுவது உறுதியல்லவா? நீ பல காதலர்களோடு விபசாரம் செய்தாய்: உன்னால் என்னிடம் திரும்பிவர முடியுமா?" என்கிறார் ஆண்டவர்.
2. உன் கண்களை உயர்த்தி மொட்டை மேடுகளைப்பார்: நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ ? பாலை நிலத்தில் அராபியனைப்போல, பாதையோரங்களில் நீயும் காதலர்களுக்காகக் காத்திருந்தாய்: உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும் நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.
3. ஆகையால், நாட்டில் மழை பெய்யாது நின்று விட்டது: இளவேனிற் கால மழையும் வரவில்லை: உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி: நீ மானங்கெட்டவள்.
4. இப்போது கூட 'என் தந்தையே! என் இளமையின் நண்பரே!' என என்னை நீ அழைக்கவில்லையா?
5. 'என்றென்றும் அவர் சினம் அடைவாரோ? இறுதிவரை அவர் சினம் கொண்டிருப்பாரோ?' என்கிறாய். இவ்வாறு சொல்லிவிட்டு உன்னால் இயன்றவரை தீச்செயல்களையே செய்கிறாய்.
6. யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது: "நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள்.
7. இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள்.
8. நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா கண்டாள். எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள்.
9. விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து நாட்டைத் தீடுப்படுத்தினாள்.
10. இவை அனைத்திற்கும் பிறகு கூட நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வரவில்லை: பொய் வேடம் போடுகிறாள்" என்கிறார் ஆண்டவர்.
11. ஆண்டவர் என்னிடம் கூறியது: நம்பிக்கையற்ற இஸ்ரயேல் நம்பிக்கைத் துரோகம் செய்த யூதாவைவிட நேர்மையானவள்.
12. நீ சென்று வடக்கே திரும்பி இச்சொற்களை உரக்கக் கூறு: நம்பிக்கையற்ற இஸ்ரயேலே, என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்: ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன், என்கிறார் ஆண்டவர். நான் என்றென்றும் சினம் கொள்ளேன்.
13. உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டால் போதும்: உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்தாய்: பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் அன்னியரை நாடி அங்குமிங்கும் ஓடினாய்: என் குரலுக்கோ நீ செவிசாய்க்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.
14. மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்: ஏனெனில், நானே உங்கள் தலைவன்: நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு இருவரையுமாகத் தெரிந்தெடுத்து உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன்.
15. என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்.
16. நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழைபற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
17. அக்காலத்தில் எருசலேமை "ஆண்டவரின் அரியணை" என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.
18. அந்நாள்களில் யூதா வீட்டார் இஸ்ரயேல் வீட்டாரோடு சேர்ந்து கொள்வர்: நான் அவர்கள் மூதாதையருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வட நாட்டிலிருந்து ஒன்றாக வந்து சேர்வர்.
19. உன்னை என் மக்களின் வரிசையிலே எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும் திராளன மக்களினங்களுக்கிடையே அழகான உரிமைச்சொத்தாகிய இனிய நாட்டை உனக்கு எவ்விதம் தருவேன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். "என் தந்தை" என என்னை அழைப்பாய் என்றும், என்னிடமிருந்து விலகிச் செல்லமாட்டாய் என்றும் எண்ணியிருந்தேன்.
20. நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண் தன் காதலனைக் கைவிடுவது போல, இஸ்ரயேல் வீடே! நீயும் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய், என்கிறார் ஆண்டவர்.
21. மொட்டை மேடுகளில் கூக்குரல் கேட்கிறது: அது இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டலுமாம்: ஏனெனில், அவர்கள் நெறிதவறித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தார்கள்.
22. என்னைவிட்டு விலகிய மக்களே! திரும்பி வாருங்கள்: உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து உங்களைக் குணமாக்குவேன்: "இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம். நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
23. குன்றுகளிலிருந்தும் மலைகளில் செய்யப்படும் அமளிகளிலிருந்தும் கிடைப்பது ஏமாற்றமே: இஸ்ரயேலின் விடுதலை எங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மட்டுமே உள்ளது.
24. எங்கள் இளமை முதல், எங்கள் மூதாதையர் உழைப்பின் பயனாகப் பெற்ற ஆடுமாடுகளையும், புதல்வர் புதல்வியரையும் வெட்கங்கெட்ட பாகால் விழுங்கிவிட்டது.
25. மானக்கேடே எங்கள் படுக்கை: அவமானமே எங்கள் போர்வை. ஏனெனில் எங்கள் இளமை முதல் இன்றுவரை நாங்களும் எங்கள் மூதாதையரும் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்: அவரது குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.ஓஅதிகாரம் 4.
1. இஸ்ரயேலே, நீ திரும்பிவருவதாக இருந்தால் என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். அருவருப்பானவற்றை அகற்றி விட்டால் என் திருமுன்னிருந்து அலைந்து திரியமாட்டாய்.
2. வாழும் ஆண்டவர் மேல் ஆணை என்று சொல்லி உண்மையோடும் நீதியோடும் நேர்மையோடும் ஆணையிட்டால், மக்களினத்தார் அவர் வழியாகத் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்: அவரில் பெருமை பாராட்டுவர்.
3. யூதாவிலும் எருசலேமிலும் உள்ள மக்களுக்கு ஆண்டவர் கூறுவது இதுவே: தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்: முட்களிடையே விதைக்காதீர்கள்.
4. யூதாவின் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, ஆண்டவருக்காக விருத்தசேதனம் செய்துகொள்ளுங்கள்: உங்கள் இதயத்தின் நுனித்தோலை அகற்றிவிடுங்கள்: இல்லையேல் உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப் பற்றியெரியும்: அதனை அணைப்பார் எவருமிலர்.
: யூதாவில் அறிவியுங்கள்: எருசலேமில் பறைசாற்றுங்கள்: நாட்டில் எக்காளம் ஊதுங்கள்" எனச் சொல்லுங்கள். ஒன்று கூடுங்கள்: "அரண்சூழ் நகர்களுக்குச் சென்றிடுவோம்" என உரக்கக் கூவுங்கள்.
6. சீயோனுக்கு நேராகக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள்: விரைந்து தப்பியோடுங்கள்: நிற்காதீர்கள்: ஏனெனில், வடக்கிலிருந்து தீமை வரச்செய்வேன்: அது பேரழிவாய் இருக்கும்.
7. சிங்கம் ஒன்று புதரிலிருந்து கிளம்பியுள்ளது: மக்களினங்களை அழிப்பவன் புறப்பட்டு விட்டான்: உங்கள் நாட்டைப் பாழாக்க, அவன் தன் இடத்திலிருந்து வெளியேறிவிட்டான்: உங்கள் நகர்கள் பாழாடைந்து குடியற்றுப் போகும்.
8. எனவே, சாக்கு உடைஉடுத்திக் கொள்ளுங்கள். அழுது புலம்புங்கள்: ஒப்பாரி வையுங்கள்: ஏனெனில், ஆண்டவரின் கோபக் கனல் நம்மை விட்டு நீங்கவில்லை.
9. அக்காலத்தில் அரசனும் தலைவர்களும் நம்பிக்கையிழந்துவிடுவர், என்கிறார் ஆண்டவர்: குருக்கள் திடுக்கிட்டுப் போவர்: இறைவாக்கினர் திகைத்து நிற்பர்.
10. அப்போது நான், "ஆ! என் தலைவராகிய ஆண்டவரே! நீர் இம்மக்களையும் எருசலேமையும் முற்றிலும் ஏமாற்றிவிட்டீர்: ஏனெனில் வாள் எங்கள் தொண்டைமீது இருக்கும்போதே "உங்களுக்குச் சமாதானம் என்கிறீர்" என்றேன்.
11. அக்காலத்தில் இம்மக்களுக்கும் எருசலேமுக்கும் இவ்வாறு கூறப்படும்: பாலை நிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அனல்காற்று என் மகளாகிய மக்கள்மீது வீசும். அது பற்றுவதற்கும் பய்மைப்படுத்துவதற்குமான காற்றன்று.
12. அதைவிடப் பெரும் காற்று ஒன்று என்னிடமிருந்து வருகின்றது. இப்போது நானே அவர்கள் மேல் தண்டனைத் தீர்ப்பு வழங்கப் போகிறேன்.
13. இதோ, மேகங்களைப் போல் எதிரி வருகிறேன். அவன் தேர்கள் சூறாவளி போன்றவை: அவன் குதிரைகள் கழுகுகளைவிட விரைவாகச் செல்பவை: நமக்கு ஜயோ கேடு! நாம் அழிந்தோம்.
14. எருசலேமே, நீ விடுவிக்கப்பட வேண்டுமானால், உன் இதயத்திலிருந்து தீயதைக் கழுவி விடு: இன்னும் எத்துணைக் காலத்திற்குத் தீய சிந்தனைகள் உன்னில் குடி கொண்டிருக்கும்?
15. தாணிலிருந்து எழும்பும் குரலொளி அறிக்கையிடுகிறது. எப்ராயிம் மலையிலிருந்து கேடு அறிவிக்கப்படுகிறது.
16. "தொலை நாட்டிலிருந்து உன்னை முற்றுகையிடுவோர் வருகின்றனர்: யூதாவின் நகர்களுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புகின்றனர்" என மக்களினங்களை எச்சரியுங்கள். அதை எருசலேமுக்கு அறிவியுங்கள்.
17. வயல்வெளியின் காவலாளியென, அவர்கள் அவளைச் சுற்றி வளைத்து எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் அவள் எனக்கு எதிராகக் கலகம் செய்தாள், என்கிறார் ஆண்டவர்.
18. உன் நடத்தையும் உன் செயல்களும் இவற்றை உன்மேல் வருவித்தன. உனக்கு வந்த இக்கேடு எத்துணைக் கசப்பாய் உள்ளது? அது உன் இதயத்தையே நொறுக்கி விட்டது.
19. என் அடிவயிறு கலங்குகின்றது: நான் வேதனையால் துடிக்கின்றேன்: என் இதயம் துயரத்தால் பதைபதைக்கின்றது: நான் வாளாவிருக்க முடியுமா? என் நெஞ்சே, எக்காள ஒலி என் காதில் விழுகிறதே! போர்க்குரல் கேட்கிறதே!
20. அழிவின் மேல் அழிவு என்ற செய்தியே வருகின்றது: நாடு முழுவதும் பாழடைந்துவிட்டது: நொடிப்பொழுதில் என் கூடாரங்களும், இமைப்பொழுதில் மூடு திரைகளும் அழிந்து போயின:
21. எதுவரைக்கும் நான் போர்க்கொடியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? எக்காளத்தின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?
22. என் மக்கள் அறிவிலிகள்: என்னை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை: மதிகெட்ட மக்கள் அவர்கள்: உய்த்துணரும் ஆற்றல், அவர்களுக்கில்லை: தீமை செய்வதில் அவர்கள் வல்லவர்கள்: நன்மை செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை.
23. நான் நாட்டைப் பார்த்தேன்: அது பாழ்நிலமாய்க் கிடந்தது: வானங்களைப் பார்த்தேன்: அவற்றில் ஒளியே இல்லை.
24. நான் மலைகளைப் பார்த்தேன்: இதோ! அவை அதிர்ந்தன: குன்றுகள் அனைத்தும் அசைந்தன.
25. நான் பார்த்தேன்: மனிதரையே காணவில்லை: வானத்துப் பறவைகள் அனைத்தும் பறந்து போய்விட்டன.
26. நான் பார்த்தேன்: இதோ செழிப்பான நிலமெல்லாம் பாலை நிலமாகிவிட்டது: ஆண்டவரின் திருமுன் அவரது கோபக் கனலால் அதன் நகர்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டன.
27. ஆண்டவர் கூறுவது இதுவே: நாடு முழுவதும் பாழடைந்து போகும்: எனினும் அதனை முற்றிலும் பாழாக்கமாட்டேன்.
28. இதனை முன்னிட்டு நாடு புலம்பும்: மேலே வாகனங்கள் இருளடையும்: எனெனில், நான் சொல்லிவிட்டேன்: இது பற்றி வருந்தமாட்டேன்: நான் முடிவு செய்து விட்டேன்: மனம் மாறமாட்டேன்.
29. குதிரை வீரர், வில் வீரர் எழுப்பும் ஒலி கேட்டு, நகரினர் அனைவரும் ஓட்டமெடுப்பர்: புதர்களுக்குள் மறைந்துகொள்வர்: பாறைகள் மீது ஏறிக்கொள்வர்: நகர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிடுவர்: அவற்றில் குடியிருக்க எவருமே இரார்.
30. பாழ்பட்டவளாகிய நீ ஏன் கருஞ் சிவப்பு ஆடை உடுத்துகின்றாய்? பொன் அணிகலன்களால் அலங்கரிக்கின்றாய்? நீ உன்னை அழகுபடுத்துவது வீண்: உன் காதலர் உன்னை அவமதிக்கின்றனர்: உன் உயிரைப் பறிக்கத் தேடுகின்றனர்.
31. பேறுகாலப் பெண் எழுப்பும் குரல் போன்றும் தன் முதற் பிள்ளையைப் பெற்றெடுப்பவளின் வேதனைக் குரல் போன்றும் குரல் ஒன்று கேட்டேன். அது, மூச்சுத் திணறி, கைகளை விரித்து, "எனக்கு ஜயோ கேடு! கொலைஞர் முன்னால் நான் உணர் வற்றுக் கிடக்கிறேன்!" என்று அலறும் மகள் சீயோனின் குரலாகும்.அதிகாரம் 5.
1. நீதியைக் கடைப்பிடித்து உண்மையை நாடும் ஒரு மனிதரைக் கண்டுபிடிக்க முடியுமாவென எருசலேமின் தெருக்களில் சுற்றிப் பார்த்துத் தெரிந்துகொள்: அவளுடைய பொது இடங்களில் கவனமாய்த் தேடிப்பார்: கண்டுபிடித்தால், அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.
2. வாழும் ஆண்டவர் மேல் அவர்கள் ஆணையிடலாம்: ஆனால் அது பொய்யாணையே.
3. ஆண்டவரே, உம் கண்கள் பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன! நீர் அவர்களை நொறுக்கினீர்: அவர்களோ வேதனையை உணரவில்லை: நீர் அவர்களை அழித்தீர்: அவர்களோ திருந்த மறுத்தனர்: அவர்கள் தங்கள் முகத்தைப் பாறையினும் கடியதாக இறுக்கிக்கொண்டனர்.
4. நான் 'அவர்கள் தாழ்நிலையில் உள்ளவர்கள்: அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்' என எண்ணினேன்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறியாதிருக்கின்றார்கள்.
5. நான் உயர் நிலையில் உள்ளவர்களிடம் போய், அவர்களிடம் பேசுவேன். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறிந்தவர்களாய் இருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால், அவர்களும் நுகத்தை முறித்தார்கள்: தளைகளை அறுத்தார்கள்.
6. எனவே காட்டுச் சிங்கம் அவர்களைக் கொல்லும், பாலைநிலத்து ஓநாய் அவர்களை அழிக்கும், சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல் கண்வைத்திருக்கும்: அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும் பீறிக் கிழித்தெறியப்படுவர். ஏனெனில், அவர்கள் வன்செயல்கள் பல செய்தனர்: என்னை விட்டுப் பன்முறை விலகிச் சென்றனர்.
7. நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்? உன் மக்கள் என்னைப் புறக்கணித்தார்கள்: தெய்வங்கள் அல்லாதவைமீது ஆணையிட்டார்கள்: அவர்கள் உண்டு நிறைவடையுமாறு செய்தேன்: அவர்களோ விபசாரம் பண்ணினார்கள்: விலைமாதர் வீட்டில் கூடினார்கள்:
8. தின்று கொழுத்து மோக வெறி கொண்ட குதிரைகள்போல், ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக் கனைக்கிறான்.
9. இவற்றிற்காக நான் தண்டிக்க மாட்டேனா? என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களை நான் பழி வாங்காமல் இருப்பேனா?
10. திராட்சைத் தோட்டச் சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்: எனினும் முற்றிலும் அழிக்க வேண்டாம். அதன் படர்கொடிகளை ஒடித்தெறியுங்கள். அவை ஆண்டவருடையவை அல்ல.
11. ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் எனக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர், என்கிறார் ஆண்டவர்.
12. அவர்கள் ஆண்டவரைக் குறித்துப் பொய்யாகச் சொன்னது: "அவர் ஒன்றும் செய்யமாட்டார்: நமக்குத் தீமை எதுவும் வராது: வாளையும் பஞ்சத்தையும் நாம் காணப்போதில்லை."
13. இறைவாக்கினர் பேசுவதெல்லாம் காற்றோடு காற்றாய்ப் போகும். இறைவாக்கு அவர்களிடம் இல்லை: அவர்கள் கூறியவாறு அவர்களுக்கே நிகழும்.
14. ஆகவே படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "அவர்கள் இப்படிப் பேசியதால் நான் உன் வாயில் வைக்கும் என் சொற்கள் நெருப்பாகும். உன் வாயில் வைத்த அவை மரக்கட்டைகளாகிய இம்மக்களை எரித்துவிடும்.
15. இஸ்ரயேல் வீட்டாரே, இதோ! தொலையிலிருந்து உங்களுக்கு எதிராக ஓரினத்தை அழைத்து வருவேன், என்கிறார் ஆண்டவர். அது எதையும் தாங்கும் இனம்: அதன் மொழி உனக்குப் புரியாது: அவர்கள் பேசுவது உனக்குப் புரியாது.
16. அவர்களது அம்புக் கூடு திறந்த கல்லறை போன்றது. அவர்கள் அனைவரும் வலிமை வாய்ந்தவர்கள்.
17. அவர்கள் உன் விளைச்சலையும் உணவையும் விழுங்கிவிடுவார்கள்: புதல்வர், புதல்வியரை விழுங்கிவிடுவார்கள்: உன் ஆடு மாடுகளை விழுங்கிவிடுவார்கள்: உன் திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் விழுங்கிவிடுவார்கள்: நீ நம்பியிருக்கும் உன் அரண்சூழ் நகர்களை வாளால் அழிப்பார்கள்.
18. அந்நாள்களில்கூட நான் உங்களை முற்றும் அழிக்கமாட்டேன்," என்கிறார் ஆண்டவர்.
19. "எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றை எல்லாம் ஏன் செய்தார்?" என அவர்கள் கேட்கும்போது, நீ அவர்களிடம், "நீங்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு உங்கள் நாட்டில் ஊழியம் செய்ததுபோல் உங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில் வேற்று நாட்டாருக்கு நீங்கள் ஊழியம் செய்வீர்கள்" என்று சொல்.
20. யாக்கோபின் வீட்டாருக்கு இதைப்பறைசாற்றுங்கள்: யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.
21. கண்ணிருந்தும் காணாத, காதிருந்தும் கேளாத மதிகெட்ட, இதயமற்ற மக்களே, கேளுங்கள்:
22. உங்களுக்கு என் மீது அச்சமில்லையா? என்கிறார் ஆண்டவர். என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா? கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன். இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு, அதனைக் கடக்க முடியாது. அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்: எனினும் அதன்மேல் வெற்றி கொள்ள முடியாது. அவைகள் சீறி முழங்கலாம்: எனினும் அதனை மீற முடியாது.
23. இம்மக்களோ கட்டுக்கடங்காதவர், பிடிவாத குணத்தினர், என்னை விட்டு விலகிச் சென்றனர்.
24. "தக்க காலத்தில் முன் மாரி, பின் மாரியைத் தருபவரும், விளைச்சலுக்காகக் குறிக்கப்பட்ட வாரங்களை நமக்காகக் காத்து வருபவருமான நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்" என்னும் எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.
25. உங்கள் குற்றங்கள் இவற்றை எல்லாம் தடுத்தன: உங்கள் பாவங்களே உங்களுக்கு நன்மை வராமலிருக்கச் செய்தன.
26. ஏனெனில், என் மக்களிடையே தீயோர் காணப்படுகின்றனர்: வேடர் பதுங்கியிருப்பதுபோல் அவர்கள் மறைந்து கண்ணி வைத்து மனிதர்களைப் பிடிக்கின்றனர்.
27. பறவைகளால் கூண்டு நிறைந்திருப்பது போல, அவர்களின் வீடுகள் சூழ்ச்சிவழி கிடைத்த பொருள்களினால் நிறைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் பெரியவர்களும் செல்வர்களும் ஆனார்கள்.
28. அவர்கள் கொழுத்துத் தளதள வென்றிருக்கின்றார்கள்: அவர்களின் தீச்செயல்களுக்குக் கணக்கில்லை: வழக்குகளை நீதியுடன் விசாரிப்பதில்லை: அனாதைகள் வளம்பெறும் வகையில் அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை. ஏழைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதுமில்லை.
29. இவற்றிற்காக நான் இவர்களைத் தண்டிக்க வேண்டாமா? என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களினத்தை நான் பழிவாங்காமல் விடுவேனா?
30. திகைப்பும் திகிலும் ஊட்டும் நிகழ்ச்சி நாட்டில் நடக்கின்றது.
31. இறைவாக்கினர் பொய்யை இறைவாக்காக உரைக்கின்றனர்: குருக்கள் தங்கள் விருப்பப்படியே அதிகாரம் செலுத்துகின்றனர்: இதையே என் மக்களும் விரும்புகின்றனர்: ஆனால் முடிவில் என்ன செய்வீர்கள்?அதிகாரம் 6.
1. பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்: தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்: பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்: ஏனெனில் வடக்கிலிருந்து தீமையும் பேரழிவும் வருகின்றன.
2. மகள் சீயோனை வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்.
3. ஆயர்கள் தங்கள் மந்தையோடு அவளிடம் வருவார்கள்: அவளைச் சுற்றிலும் கூடாரங்கள் அடிப்பார்கள்: அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.
4. "அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்: எழுந்திருங்கள்: நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்: ஜயோ! பொழுது சாய்கின்றதே! மாலை நேரத்து நிழல்கள் நீள்கின்றனவே!
5. எழுந்திருங்கள்: இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்: அவள் அரண்மனைகளை அழிப்போம்" என்பார்கள்.
6. படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அவளுடைய மரங்களை வெட்டுங்கள்: எருசலேமுக்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்புங்கள்: அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்: அவளிடம் காணப்படுவது அனைத்தும் கொடுமையே.
7. கேணியில் நீர் சுரந்து கொண்டிருப்பது போல் அவள் தீமைகளைச் சுரந்து கொண்டிருக்கின்றாள். வன்முறை, அழிவு என்பதே அவளிடம் எழும் குரல்: நோயும் காயமுமே என்றும் என் கண்முன் உள்ளன.
8. எருசலேமே, எச்சரிக்கையாய் இரு: இல்லையேல், நான் உன்னைவிட்டு அகன்று போவேன்: உன்னை மனிதர் வாழாப் பாழ்நிலம் ஆக்குவேன்.
9. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: திராட்சைக் கொடிகளில் தப்புப் பழங்களை ஒன்றும் விடாது பறித்துச் சேர்ப்பது போல, இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச்சேர். திராட்சைத் தோட்டக்காரரைப்போல் கிளைகளிடையே உன் கையை விட்டுப் பார்.
10. நான் யாரிடம் பேசுவேன்? யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்? யார் செவி கொடுப்பார்? அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை: அவர்களால் செவிகொடுக்க முடியாது: ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று: அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.
11. ஆண்டவரின் சீற்றம் என்னில் நிறைந்துள்ளது: அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்: ஆண்டவர் கூறுவது: தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும் ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும் சினத்தைக் கொட்டு. கணவனும் மனைவியும், முதியோரும் வயது நிறைந்தோறும் பிடிபடுவர்.
12. அவர்களுடைய வீடுகளையும் நிலங்களையும் மனைவியரையும் பிறர் கைப்பற்றுவர்: ஏனெனில், நாட்டில் குடியிருப்போருக்கு எதிராய் என் கையை நீட்டப்போகிறேன்.
13. ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்: இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
14. அமைதியே இல்லாதபொழுது, "அமைதி, அமைதி" என்று கூறி என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.
15. அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கமடைந்தார்களா? அப்போதுகூட அவர்கள் வெட்கமடையவில்லை: நாணம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது: எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு அவர்களும் வீழ்வர்: நான் அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.
16. ஆண்டவர் கூறுவது இதுவே: சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்: தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்: அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். அவர்களோ, "அவ்வழியே செல்ல மாட்டோம்" என்றார்கள்.
17. நான் உங்களுக்குக் காவலரை நியமித்தேன். "எக்காளக் குரலுக்குச் செவி கொடுங்கள்" என்றேன். அவர்களோ, "செவிசொடுக்க மாட்டோ ம்" என்றார்கள்.
18. எனவே, நாடுகளே கேளுங்கள்: மக்கள் கூட்டத்தாரே, அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்று பாருங்கள்.
19. நிலமே, நீயும் கேள்: இதோ! இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன். அவர்களின் தீய எண்ணங்களின் விளைவே இத்தீமை. ஏனெனில், அவர்கள் என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை: என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
20. சேபா நாட்டுத் பபமும் பரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு? உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை.
21. ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ இம் மக்களுக்கு எதிராகத் தடைக்கற்களை வைக்கப்போகிறேன். தந்தையரும் தனயரும் ஒன்றாகத் தடுக்கி விழுவர்: அடுத்திருப்பாரும் நண்பரும் அழிந்து போவர்.
22. ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! வடக்கு நாட்டினின்று ஓர் இனம் வருகின்றது: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று பெரிய நாடு ஒன்று கிளர்ந்து எழுகின்றது.
23. அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்: அவர்கள் கொடியவர்: இரக்கமற்றவர்: அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது: மகளே சீயோன்! அவர்கள் போருக்கு அணிவகுத்து குதிரைகள் மீது வருகின்றார்கள்: சவாரி செய்துகொண்டு உனக்கெதிராய் வருகின்றார்கள்:
24. "அவர்களைப் பற்றிய செய்தியை நாம் கேள்வியுற்றபோது நம் கைகள் தளர்ந்து போயின: கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது: பேறுகாலப் பெண்ணைப் போல் நாம் தவிக்கின்றோம்.
25. வயல்வெளிக்குப் போகவேண்டாம்: சாலைகளில் செல்ல வேண்டாம்: ஏனெனில், எதிரியின் வாள் எங்கும் உள்ளது: சுற்றிலும் ஒரே திகில்.
26. மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்: சாம்பலில் புரளுங்கள்: இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவது போல், மனமுடைந்து அழுது புலம்புங்கள். ஏனெனில், அழிப்பவன் திடீரென நமக்கெதிராய் வருவான்."
27. நான் உன்னை என் மக்களுக்குள் மதிப்பீடு செய்பவனாகவும், ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்: நீ அவர்களின் வழிகளை அறிந்து மதிப்பீடு செய்வாய்.
28. அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்: பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்: அவர்கள் யாவரும் வெண்கலத்தையும் இரும்பையும் போன்றவர்கள்: அவர்களின் செயல்கள் கறைபட்டவை.
29. துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன: காணயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது. பய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பதில் பயனில்லை: ஏனெனில், தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.
30. அவர்கள் "தள்ளுபடியான வெள்ளி" என்று அழைக்கப்படுவார்கள். ஏனெனில், ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்துள்ளார்.அதிகாரம் 7.
1. ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:
2. ஆண்டவரின் இல்ல வாயிலில் நின்று நீ அறிவிக்க வேண்டிய வாக்கு இதுவே: ஆண்டவரை வழிபட இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் மக்களே! நீங்கள் அனைவரும் கேளுங்கள்.
3. இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: "உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். நான் இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.
4. "இது ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்!" என்னும் ஏமாற்றுச் சொற்களை நம்பவேண்டாம்.
5. நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்துகொண்டால்,
6. அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதிருந்தால், மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீங்கு விளைவிக்கும வேற்றுத் தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட்டால்,
7. இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.
8. நீங்களோ, பயனற்ற ஏமாற்றுச் சொற்களை நம்புகிறீர்கள்.
9. களவு, கொலை, விபச்சாரம் செய்கிறீர்கள்: பொய்யாணை இடுகிறீர்கள்: பாகாலுக்குத் பபம் காட்டுகிறீர்கள். நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறீர்கள்.
10. ஆயினும், என் பெயர் விளங்கும் இந்தக் கோவிலுள் வந்து, என்முன் நின்றுகொண்டு, "நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்" என்கிறீர்கள். அருவருப்பான இவற்றைச் செய்யவா இந்தப் பாதுகாப்பு?
11. என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்," என்கிறார் ஆண்டவர்.
12. நான் முன்னாளில் குடியிருந்த சீலோ என்னும் என் இடத்திற்குப் போங்கள். என் மக்கள் இஸ்ரயேல் செய்த தீமையின் பொருட்டு நான் அதற்குச் செய்துள்ளதைப் பாருங்கள்.
13. ஆண்டவர் கூறுவது: நீங்கள் இந்தத் தீய செயல்களை எல்லாம் செய்தீர்கள். நான் தொடர்ந்து கூறியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. நான் உங்களை அழைத்தும் நீங்கள் பதில் தரவில்லை.
14. எனவே, என் பெயர் விளங்கும் உங்கள் நம்பிக்கைக்குரிய இந்தக் கோவிலுக்கும் உங்களுக்கும் உங்கள் தந்தையருக்கும் நான் கொடுத்த இந்த இடத்திற்கும் சீலோவிற்குச் செய்தது போலவே செய்யப்போகிறேன்.
15. உங்கள் சகோதரர் அனைவரையும் எப்ராயிம் வழிமரபினர் யாவரையும் ஒதுக்கியதுபோல, உங்களையும் என் முன்னிலையிலிருந்து ஒதுக்கிவிடுவேன்.
16. இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம்: இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம்: என்னிடம் பரிந்து பேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிசாய்க்க மாட்டேன்.
17. யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் அவர்கள் செய்வதை நீ பார்ப்பதில்லையா?
18. புதல்வர் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றனர். தந்தையர் தீ மூட்டுகின்றனர். பெண்டிர் விண்ணக அரசிக்காக அடை சுட மாவைப் பிசைகின்றனர். எனக்கு வருத்தம் வருவிக்கும்படி வேற்றுத் தெய்வங்களுக்கு அவர்கள் நீர்மப்படையல்கள் படைக்கிறார்கள்.
19. எனக்கா வருத்தம் வருவிக்கிறார்கள்? என்கிறார் ஆண்டவர்: தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள்! வெட்கக்கேடு!
20. ஆகவே, தலைவராம் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என் சினமும் சீற்றமும் இவ்விடத்தின் மீதும் மனிதர் மீதும் விலங்குகள் மீதும் வயல்வெளி மரங்கள் மீதும் நிலத்தின் விளைச்சல் மீதும் கொட்டப்படும். என் சினம் பற்றியெரியும்: அதனை அணைக்க முடியாது.
21. இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் எரிபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள்.
22. உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது எரிபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவில்லை: கட்டளையிடவும் இல்லை.
23. ஆனால் நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவி கொடுங்கள்: அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.
24. அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை: கவனிக்கவும் இல்லை: பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்: முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்.
25. உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன்.
26. அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை: கவனிக்கவில்லை: முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.
27. நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்: அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்: அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள்.
28. தங்களின் கடவுளாகிய ஆணடவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.
29. உன் தலை முடியை மழித்து எறிந்துவிடு: மொட்டைக் குன்றுகளில் நின்று ஒப்பாரி வை: ஏனெனில், தம் சீற்றத்தில் ஆண்டவர் இத்தலைமுறையைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டார்.
30. ஏனெனில், யூதாவின் மக்கள் என் கண்முன் தீமை செய்தனர் என்கிறார் ஆண்டவர். என் பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி அவர்கள் அருவருப்பானவற்றை அங்கு வைத்தார்கள்.
31. அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி பென்இன்னோம் பள்ளத்தாக்கில் உள்ள தோபேத்தில் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இதனை நான் கட்டளையிடவில்லை. இது என் எண்ணத்தில்கூட எழவில்லை.
32. ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நாள்கள் வருகின்றன. அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது: மாறாகப் "படுகொலைப் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படும்: வேறிடம் இல்லாததால் தோபேத்தில் பிணங்களைப் புதைப்பர்.
33. இம்மக்களின் சடலங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும். யாரும் அவற்றை விரட்ட மாட்டார்கள்.
34. அப்போது யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியின் அக்களிப்பின் ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். மணமகன், மணமகள் குரலொலியும் கேட்கப்படாதிருக்கச் செய்வேன். ஏனெனில், நாடு பாழ்பட்டுப் போகும்.அதிகாரம் 8.
1. அப்போது யூதாவின் அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேமில் குடியிருப்போர் ஆகியோரின் எலும்புகளை அவர்களின் கல்லறைகளிலிருந்து தோண்டி எடுப்பர், என்கிறார் ஆண்டவர்.
2. அவற்றைக் கதிரவன், நிலா, விண்மீன்கள் ஆகியவற்றின்முன் பரப்புவார்கள். இவற்றுக்குத்தாமே அவர்கள் அன்பு காட்டிப் பணிவிடை புரிந்தார்கள்! இவற்றின் பின்தானே அலைந்து திரிந்தார்கள்! இவற்றிடம் தானே குறி கேட்டார்கள்! அவ்வெலும்புகளை யாரும் மீண்டும் ஒன்றுசேர்த்துப் புதைக்கமாட்டார்கள். அவை தரையில் சாணம் போல் கிடக்கும்.
3. நான் அவர்களைத் துரத்தியுள்ள இடங்களில் எல்லாம், இந்தத் தீய மக்களில் எஞ்சியிருப்போர் யாவரும் வாழ்வைவிடச் சாவையே விரும்புவர், என்கிறார் படைகளின் ஆண்டவர்.
4. நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: "ஆண்டவர் கூறுவது இதுவே: விழுந்தவன் எழுவதில்லையா? பிரிந்து சென்றவன் திரும்பி வருவதில்லையா?
5. ஏன் இந்த எருசலேமின் மக்கள் என்றென்றைக்கும் என்னை விட்டு விலகிப் பொய்யைப் பற்றிக்கொண்டு நிற்கின்றார்கள்?
6. நான் செவிசாய்த்தேன்: உற்றுக்கேட்டேன். அவர்கள் சரியானதைச் சொல்லவில்லை. "நான் என்ன செய்துவிட்டேன்?" என்று கூறுகிறார்களேயன்றி எவருமே தம் தீச்செயலுக்காக வருந்தவில்லை. போர்க்களத்தில் பாய்ந்தோடும் குதிரைபோல யாவருமே தம் வழியில் விரைகின்றார்கள்.
7. வானத்துக் கொக்கு தன் காலங்களை அறிந்துள்ளது. புறாவும் தகைவிலானும் நாரையும் தாம் இடம் பெயரும் காலத்தை அறிந்துள்ளன. என் மக்களோ, ஆண்டவரின் நீதியை உணரவில்லையே!
8. "நாங்கள் ஞானிகள்: ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது" என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? மறைமல் அறிஞரின் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று.
9. ஞானிகள் வெட்கமடைவர்: திகிலுற்றுப் பிடிபடுவர்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்: இதுதான் அவர்களின் ஞானமா?
10. ஆகவே, நான் அவர்களுடைய மனைவியரை வேற்றவருக்குக் கொடுப்பேன்: அவர்களுடைய நிலங்களைக் கைப்பற்றியோருக்கே கொடுப்பேன்: ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள். இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
11. அமைதியே இல்லாத பொழுது "அமைதி, அமைதி" என்று கூறி என் மகளாகிய மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.
12. அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கம் அடைந்தார்களா? அப்போதுகூட அவர்கள் வெட்கம் அடையவில்லை: நாணம் என்பது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது: எனவே மடிந்து விழுந்தவர்களோடு அவர்களும் மடிந்து விழுவர்: நான் அவர்களை தண்டிக்கும் போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.
13. நான் கனிகளை ஒன்று சேர்க்க விரும்பினேன். ஆனால், திராட்சைக் கொடியில் பழங்கள் இல்லை: அத்தி மரங்களில் கனிகள் இல்லை. இலைகள்கூட உதிர்ந்து போயின. நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களிடமிருந்து நழுவிப் போயிற்று.
14. நாம் இங்கு ஏன் அமர்ந்திருக்கிறோம்? ஒன்றிணைவோம்: அரண் சூழ் நகர்களுக்குப் போவோம்: அங்குச் சென்று மடிவோம்: ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை மடியும்படி விட்டுவிட்டார்: நஞ்சு கலந்த நீரை நாம் குடிக்கச் செய்தார்: ஏனெனில், நாம் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
15. நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்: ஆனால் பயனேதும் இல்லை. நலம் பெறும் காலத்தை எதிர்ப்பார்த்திருந்தோம்: பேரச்சமே மிஞ்சியது.
16. தாணிலிருந்து அவளுடைய குதிரைகளின் சீறல் கேட்கின்றது: வலிமை வாய்ந்த குதிரைகளின் கனைப்பு நாட்டையெல்லாம் நடுங்கச் செய்கின்றது. அவர்கள் வந்து நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும் நகரையும் அதில் குடியிருப்போரையும் விழுங்கிவிடுவார்கள்.
17. நான் உங்கள் நடுவில் பாம்புகளை அனுப்புவேன். எதற்கும் மயங்கா நச்சுப் பாம்புகளை அனுப்புவேன்: அவை உங்களைக் கடிக்கும், என்கிறார் ஆண்டவர்.
18. துயரம் என்னை மேற்கொண்டது: என் உள்ளம் நலிந்து போய்விட்டது.
19. இதோ என் மகளாகிய மக்களின் அழுகுரல் பரத்து நாட்டிலிருந்து கேட்கிறதே: சீயோனில் ஆண்டவர் இல்லையா? அவளின் அரசர் அங்கே இல்லையா? செதுக்கிய உருவங்களாலும் வேற்றுத் தெய்வச் சிலைகளாலும் எனக்கு ஏன் சினமூட்டினார்கள்?
20. அறுவடைக் காலம் முடிந்துவிட்டது: வேனிற்காலம் கடந்துவிட்டது: நமக்கோ இன்றும் விடுதலை கிடைக்கவில்லை.
21. என் மகளாகிய மக்களுக்கு ஏற்பட்ட முறிவு எனக்கே ஏற்பட்டதாகும். நான் துயருறுகிறேன். திகில் என்னைப் பற்றிக் கொண்டுள்ளது.
22. அம்முறிவில் தடவக் கிலயாதில் பொன்மெழுகு இல்லையா? அங்கே மருத்துவர் இல்லையா? அப்படியானால், என் மகளாகிய மக்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?அதிகாரம் 9.
1. என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும் என் கண்கள் கண்ணீரின் ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா? அப்படியானால், என் மகளாம் மக்களுள் கொலையுண்டோ ருக்காக இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே!
2. பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று எனக்கு இருக்கக் கூடாதா? நான் மக்களைப் புறக்கணித்து அவர்களிடமிருந்து சென்று விடலாமே! ஏனெனில், அவர்கள் யாவரும் விபசாரிகள், நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.
3. பொய்பேசத் தங்கள் நாவை வில்லைப்போல் அவர்கள் வளைக்கின்றனர்: உண்மைக்காக நாட்டில் யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை: அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே சென்று கொண்டிருக்கிறார்கள்: என்னையோ அவர்கள் அறிந்து கொள்ளவில்லை, என்கிறார் ஆண்டவர்.
4. ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப் பொறுத்தவரை எச்சரிக்கையாய் இருக்கட்டும். எந்த உறவினரையும் நம்பவேண்டாம். ஏனெனில், எல்லா உறவினரும் ஏமாற்றுவர் என்பது உறுதி: அடுத்திருப்பவர் அனைவரும் புறணி பேசுகின்றனர்:
5. எல்லாரும் அடுத்திருப்பவரை ஏமாற்றுகின்றனர்: யாருமே உண்மை பேசுவதில்லை: பொய் பேசத் தங்கள் நாவைப் பழக்கியுள்ளார்கள்: குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.
6. நீயோ வஞ்சனை செய்வார் நடுவில் வாழ்கின்றாய்: தங்கள் வஞ்சனையின் காரணமாக என்னை அவர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள், என்கிறார் ஆண்டவர்.
7. எனவே, படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: நான் அவர்களைப் புடமிடுவேன்: பரிசோதிப்பேன்: என் மகளாகிய மக்களுக்கு நான் வேறு என்னதான் செய்யமுடியும்?
8. அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு: அது பேசுவது வஞ்சனை: எல்லாரும் தம் வாயால் அடுத்திருப்பவர்களோடு சமாதானமாய்ப் பேசுகின்றனர்: உள்ளத்திலோ அவர்களுக்குக் குழி பறிக்கின்றனர்.
9. இவற்றின் பொருட்டு நான் அவர்களைத் தண்டியாமல் விடுவேனோ? இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை நான் பழிவாங்காமல் இருப்பேனோ? என்கிறார் ஆண்டவர்.
10. மலைகளைக் குறித்து அழுது புலம்புவோம்: பாழ்வெளி மேய்ச்சல் நிலத்தின் பொருட்டு ஒப்பாரி வைப்போம்: ஏனெனில் அனைத்தும் தீய்ந்து போயின: அவை வழியாய்ச் செல்வோர் யாருமில்லை: கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை: வானத்துப் பறவைகள் முதல் விலங்குகள் வரை அனைத்துமே ஓடி மறைந்து விட்டன.
11. எருசலேமை அழித்துக் கற்குவியலாக்குவேன்: அதனைக் குள்ளநரிகளின் வளையாக்குவேன்: யூதா நகர்களை யாரும் வாழாப் பாழ்வெளியாக்குவேன்.
12. இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர்? இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார்? நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்?
13. ஆண்டவர் கூறுவது: நான் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தைப் புறக்கணித்தார்கள். என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை: அதன்படி நடக்கவும் இல்லை.
14. மாறாகத் தங்கள் பிடிவாதத்தின்படி நடந்தார்கள்: தங்கள் மூதாதையர் கற்றுக்கொடுத்தபடி பாகாலைப் பின்பற்றினார்கள்.
15. ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இம்மக்கள் எட்டிக்காய் உண்ணச் செய்வேன். நஞ்சு கலந்த நீர் குடிக்கச் செய்வேன்.
16. அவர்களோ அவர்தம் மூதாதையரோ அறிந்திராத மக்களினங்கள் நடுவில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முற்றிலும் அழிக்கும் வரை அவர்களுக்குப் பின் வாளை அனுப்புவேன். போர் எழச் செய்வேன்.
17. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! கேளுங்கள். ஒப்பாரி வைக்கும் பெண்களை வரச்சொல்லுங்கள்: அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சொல்லியனுப்புங்கள்.
18. அவர்கள் விரைந்து வந்து நம்மைக் குறித்துப் புலம்பட்டும்: நம் கண்கள் நீர் பொழியட்டும்: நம் இமைகள் நீர் சொரியட்டும்.
19. ஏனெனில், சீயோனிலிருந்து புலம்பல் கேட்கின்றது: "நாம் இப்படிப் பாழடைந்து விட்டோ மே: நம் மானமெல்லாம் போயிற்றே: நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே. நம் குடியிருப்புகள் தகர்க்கப்பட்டனவே."
20. பெண்டிரே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: உங்கள் செவிகள் அவர்தம் வாய்மொழியை ஏற்கட்டும்: உங்கள் புதல்வியருக்குப் புலம்பக் கற்றுக்கொடுங்கள். ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.
21. ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய் வந்துவிட்டது: நம் அரண்களுக்குள்ளும் நுழைந்து விட்டது: தெருக்களில் சிறுவர்களையும் பொதுவிடங்களில் இளைஞர்களையும் வீழ்த்திவிட்டது.
22. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார் எனச் சொல்: மனிதரின் பிணங்கள் சாணம்போல் வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்: அறுவடை செய்வோனுக்குப் பின்னால் விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.
23. ஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்.
24. பெருமை பாராட்ட விரும்புபவர், "நானே ஆண்டவர்" என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர்.
25. இதோ! நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்போது நான் உடலில் மட்டும் விருத்தசேதனம் செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன்.
26. எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளையும் முன்தலையை மழித்துக் கொள்ளும் பாலை நிலத்தாரையும் தண்டிப்பேன்: ஏனெனில் வேற்றினத்தார் யாவரும் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள்: இஸ்ரயேல் வீட்டார் யாவரும் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள்.அதிகாரம் 10.
1. இஸ்ரயேல் வீட்டாரே! ஆண்டவர் உங்களுக்குக் கூறும் சொல்லைக் கேளுங்கள்.
2. ஆண்டவர் கூறுவது இதுவே: வேற்றினங்களின் வழியைக் கற்றுக் கொள்ளாதீர்: வானத்தில் தோன்றும் அடையாளங்களைக் கண்டு கலங்காதீர்: வேற்றினத்தாரே அவற்றால் கலக்கமுறுவர்.
3. வேற்றினங்கள் வழிபடும் சிலைகள் வீணானவை: அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட மரத்தாலானவை: கைவினைஞர் உளியால் செய்த வேலைப்பாடுகள்.
4. அவை பொன், வெள்ளியால் அணி செய்யப்பட்டவை. அசையாதபடி ஆணி, சுத்தியல் கொண்டு பொருத்தப் பெற்றவை.
5. அவை வெள்ளரித் தோட்டத்துப் பொம்மை போன்றவை: அவற்றால் பேச முடியாது: அவற்றைத் பக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். அவற்றால் நடக்கவும் முடியாது. அவை நன்மையும் செய்யா: தீமையும் செய்யா: அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
6. ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்: நீர் பெரியவர்: உமது பெயர் ஆற்றல் மிக்கது.
7. மக்களினங்களின் மன்னரே! உமக்கு அஞ்சாதவர் யார்? அர