|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள் > புத்தகம் 21 - சபை உரையாளர் & புத்தகம் 22 - இனிமைமிகுபாடல் > புத்தகம் 23 - எசாயா > புத்தகம் 24 - எரேமியா
Holy Bible - Old Testament
Book 23: Isaiah
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 23 - எசாயா
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the"bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version. PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 2006. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அதிகாரம் 1.
1. உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் எசாயா கண்ட காட்சி:
2. விண்வெளியே கேள்: மண்ணுலகே செவிகொடு: ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார்: பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்: அவர்களோ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.
3. காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது: கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது: ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை: என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை.
4. ஜயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது: அநீதி செய்வோரின் கூட்டம் இது: தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது: கேடுகெட்ட மக்கள் இவர்கள்: ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்: இஸ்ரயேலின் பயவரை அவமதித்துவிட்டார்கள்: அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.
5. நீங்கள் ஏன் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்? என் கையால் பட்ட அடி போதாதா? உங்கள் தலையெல்லாம் வடுக்கள்: இதயமெல்லாம் தளர்ச்சி.
6. உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை: ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், கீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன: அங்கே கீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.
7. உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது: உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின: வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்: வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது.
8. மகள் சீயோன் திராட்சைத் தோட்டத்துக் குடில் போன்றும் வெள்ளரித் தோட்டத்துக் குடிசை போன்றும் முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும் கைவிடப்பட்டாள்.
9. படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம். கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.
10. எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாயிருக்கின்றனர்: நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்: அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.
11. "எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?" என்கிறார் ஆண்டவர். ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன: காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை.
12. நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்?
13. இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்: நீங்கள் காட்டும் பபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது: நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வுநாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன்.
14. உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும், என் உள்ளம் வெறுக்கின்றது: அவை என் மேல் விழுந்த சுமையாயின: அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன்.
15. என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும் போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்: நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பதில்லை: உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.
16. உங்களைக் கழுவித் பய்மைப்படுத்துங்கள்: உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்: தீமை செய்தலை விட்டொழியுங்கள்:
17. நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்: நீதியை நாடித் தேடுங்கள்: ஒடுக்கப்பட்டோ ருக்கு உதவி செய்யுங்கள்: திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்: கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.
18. "வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்" என்கிறார் ஆண்டவர்: "உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன: எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன: எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்.
19. மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்: நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.
20. மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்: ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்.
21. உண்மையாய் இருந்த நகரம், எப்படி விலைமகள் போல் ஆயிற்று! முன்பு அந்நகரில் நேர்மை நிறைந்திருந்தது: நீதி குடி கொண்டிருந்தது: இப்பொழுதோ, கொலைபாதகர் மலிந்துள்ளனர்.
22. உன் வெள்ளி களிம்பேறிற்று: உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.
23. உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்: திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்: கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகிறான்: திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை: கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
24. ஆதலால், படைகளின் ஆண்டவரும் இஸ்ரயேலின் வல்லவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் எதிரிகளைப் பழிவாங்குவேன்: என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத் தீர்த்துக்கொள்வேன்.
25. உனக்கு நேராக என் கைகளை நீட்டுவேன்: உன்னை நன்றாகப் புடமிட்டு உன் களிம்பை நீக்குவேன்: உன்னிடமுள்ள உலோகக் கலவை அனைத்தையும் நீக்குவேன்.
26. முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்: தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்: அப்பொழுது எருசலேம் "நீதியின் நகர்" எனப் பெயர் பெறும்: "உண்மையின் உறைவிடம்" எனவும் அழைக்கப்படும்.
27. நீதி சீயோனை மீட்கும்: நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்.
28. ஆனால் வன்முறையாளரும் பாவிகளும் ஒருங்கே அழிந்தொழிவர்: ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் இல்லாதொழிவர்:
29. நீங்கள் நாடி வழிபட்ட தேவதாரு மரங்களை முன்னிட்டு மானக்கேடு அடைவீர்கள்: நீங்கள் தெரிந்து கொண்ட சோலைகளை முன்னிட்டு நாணுவீர்கள்.
30. ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்: நீரின்றி வாடிப்போகும் சோலையைப் போலவும் இருப்பீர்கள்:
31. வலிமை மிக்கவன் சணற் கூளம் போலாவான்: அவனுடைய கைவேலைப்பாடும் தீப்பொறியாகும். அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்: நெருப்புத் தணலை அணைப்பார் எவரும் இரார்.
அதிகாரம் 2.
1. யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி:
2. இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.
3. வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து "புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.
4. அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.
5. யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்:
6. யாக்கோபின் குடும்பத்தாராகிய உம்முடைய மக்களை நீர் கைவிட்டு விட்டீர்: ஏனெனில் கீழை நாட்டுப் போதனை அவர்களிடையே மிகுந்துள்ளது. பெலிஸ்தியரைப் போல அவர்கள் நிமித்தம் பார்க்கின்றார்கள்: வேற்று நாட்டினருடன் கூட்டுச் சேர்கின்றார்கள்.
7. அவர்கள் நாடு வெள்ளி, பொன்னால் நிறைந்துள்ளது: அவர்கள் கருவூலத்திற்கு அளவே இல்லை: அவர்கள் நாடு குதிரைகளால் நிறைந்துள்ளது: அவர்கள் தேர்ப்படைகள் எண்ணிக்கையில் அடங்கா.
8. அவர்கள் நாட்டில் சிலைகள் மலிந்துள்ளன: தங்கள் கைவேலைப்பாட்டினால் செய்தவற்றை வணங்குகின்றனர்: தங்கள் விரல்கள் உருவாக்கியவற்றின் முன் பணிகின்றனர்.
9. இவற்றால் மானிடர் தாழ்நிலை அடைவர்: மக்கள் சிறுமை அடைவார்கள்: ஆண்டவரே! அவர்களுக்கு மன்னிப்பு அருளாதீர்:
10. கற்பாறைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்: மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்: ஆண்டவரின் அச்சம் தரும் திருமுன்னின்றும் அவரது உயர் மாட்சியினின்றும் அகலுங்கள்:
11. செருக்குமிகு பார்வையுடையோர் தாழ்த்தப்படுவர்: ஆணவமிக்கோர் அவமானமடைவர்: ஆண்டவர் ஒருவரே அந்நாளில் மாட்சியுறுவோர்.
12. படைகளின் ஆண்டவருக்குரிய நாள் ஒன்று இருக்கின்றது: அன்று, இறுமாப்பும் செருக்கும் உடைய அனைவரும் தாழ்வுறுவர்: உயர்த்தப்பட்டவை, உயர்ந்து நிற்பவை அனைத்தும் நலிவடையும்.
13. அன்று, லெபனோனில் ஓங்கி வளர்ந்த கேதுரு மரங்கள் யாவும் அழிக்கப்படும் பாசானில் உள்ள அனைத்துக் கருவாலி மரங்களும் அழிக்கப்படும்.
14. வானளாவிய மலைகள், உயர்ந்த குன்றுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்.
15. உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் யாவும் தகர்த்தெறியப்படும்: வலிமைமிக்க மதிற்சுவர்கள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்படும்.
16. தர்சீசின் மரக்கலங்கள் யாவும் அழகிய வேலைப்பாடுகள் அனைத்தும் அமிழ்த்தப்படும்.
17. மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்: அவர்தம் செருக்கு அகற்றப்படும்: ஆண்டவர் ஒருவர் மட்டுமே அந்நாளில் உன்னதமானவராயிருப்பார்:
18. சிலைகள் அனைத்தும் ஒருங்கே ஒழிக்கப்படும்.
19. ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட மனிதர் குன்றின் குகைகளில் புகுந்து கொள்வர்: மண்ணின் குழிகளில் மறைந்து கொள்வர்.
20. அந்நாளில் மக்களினத்தார் தாம் வழிபடுவதற்கு உருவாக்கிய வெள்ளிச் சிலைகளையும், பொற்பதுமைகளையும், அகழ் எலிகளுக்கும், வெளவால்களுக்கும் எறிந்து விடுவர்.
21. ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம் தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட அவர்கள் பாறைகளின் வெடிப்புகளில் பதுங்கிக் கொள்வர்: குன்றுகளின் பிளவுகளில் ஒளிந்து கொள்வர்.
22. நிலையற்ற மனிதர்மேல் நம்பிக்கை வைக்காதீர்: அவர்களின் உயிர் நிலையற்றது: ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்கு அவர்களின் தகுதி என்ன?
அதிகாரம் 3.
1. படைகளின் ஆண்டவரான நம் தலைவர், எருசலேமின் ஊன்றுகோலை ஒடித்து விடுவார்: யூதாவின் நலத்தை நலியச் செய்வார்: ஊன்றுகோலாகிய உணவையும் நலமாகிய நீரையும் அகற்றிவிடுவார்.
2. வலிமைமிகு வீரன், போர்க்களம் செல்லும் போர்வீரன், தீர்ப்பு வழங்கும் நீதிபதி, இறைவாக்கு உரைக்கும் இறைவாக்கினன், குறி சொல்லும் நிமித்திகன், அறிவு முதிர்ந்த முதியோன் இவர்கள் அனைவரையும் அழித்து விடுவார்.
3. ஜம்பதின்மர் தலைவன், உயர்பதவி வகிக்கும் சான்றோன், அறிவுரை வழங்குபவன், திறன் வாய்ந்த மந்திரவாதி, மாயவித்தை புரிவதில் நிபுணன் ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார்.
4. சிறுவர்களை மக்கள் தலைவர்களாய் மாற்றுவார்: பச்சிளங் குழந்தைகள் அவர்கள் மேல் அரசாட்சி செலுத்துவார்கள்.
5. மக்கள் ஒருவரை ஒருவர் ஒடுக்குவர்: எல்லோரும் தமக்கு அடுத்திருப்பவரைத் துன்புறுத்துவர்: இளைஞர் முதியோரை அவமதிப்பர்: கீழ்மக்கள் மாண்பு மிக்கவரைப் புறக்கணிப்பர்.
6. தன் தந்தையின் இல்லத்தில் வாழும் தமையனின் கையைத் தொட்டு ஒருவன், "நீ ஒருவனாவது ஆடை உடுத்தியுள்ளாய்: நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக: பாழடைந்து கிடக்கும் இந்த நாடு உன் கைக்குள் வருவதாக" என்பான்.
7. அந்நாளில் அவன், "நான் காயத்திற்குக் கட்டுப்போடுகிறவன் அல்ல: இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ, உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை: மக்களின் தலைவனாய் என்னை நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்" எனச் சொல்லி மறுத்துவிடுவான்.
8. எருசலேம் நிலைகுலைந்து தடுமாற்றம் அடைந்து விட்டது: யூதா வீழ்ச்சி அடைந்து விட்டது: ஏனெனில், அவர்களுடைய சொல்லும், செயலும் ஆண்டவரின் திருவுளத்திற்கு எதிராய் உள்ளன: மாட்சிமைமிகு அவர்தம் கண்களுக்குச் சினமூட்டின.
9. அவர்களின் ஓரவஞ்சனை அவர்களுக்கு எதிராய்ச் சான்று கூறுகின்றது: அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல் சோதோம் மக்களைப்போல் புறைசாற்றுகிறார்கள். ஜயோ! அவர்கள் உயிருக்குக் கேடு: ஏனெனில், தங்களுக்குத் தாங்களே தீமையை வருவித்துக்கொண்டார்கள்.
10. ஆனால், மாசற்றோர் நலம் பெறுவர் என நவிலுங்கள்: அவர் தம் நற்செயல்களின் கனியை உண்பது உறுதி.
11. தீச்செயல் புரிவோர்க்கு ஜயோ கேடு! தீமை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்: அவர்களின் கைகள் செய்த தீவினைகள் அனைத்தும் அவர்கள் மேலேயே விழும்.
12. என் மக்களே, சிறுவர் உங்களை ஒடுக்குகின்றார்கள்: பெண்கள் உங்கள்மேல் ஆட்சி செலுத்துகின்றார்கள்: என் மக்களே, உங்கள் தலைவர்கள் உங்களைத் தவறாக வழி நடத்துகின்றார்கள்: உங்களை ஆள்பவர்கள் நீங்கள் நடக்கவேண்டிய நெறிமுறைகளைக் குழப்புகின்றார்கள்.
13. ஆண்டவர் வழக்காடுவதற்கு ஆயத்தமாகிறார்: மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்க எழுந்து நிற்கிறார்.
14. தம் மக்களின் முதியோரையும் தலைவர்களையும் தம் நீதித் தீர்ப்புமுன் நிறுத்துகிறார்: இந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தின்றழித்தவர்கள் நீங்கள்: எளியவர்களைக் கொள்ளையிட்ட பொருள்கள் உங்கள் இல்லங்களில் நிறைந்துள்ளன:
15. என் மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன? எளியோரின் முகத்தை உருக்குலைப்பதன் பொருள் என்ன?" என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
16. மேலும் ஆண்டவர் கூறியது இதுவே: "சீயோன் மகளிர் செருக்குக் கொண்டுள்ளார்கள்: தங்கள் கழுத்தை வளைக்காது நிமிர்ந்து நடக்கின்றார்கள்: தம் கண்களால் காந்தக் கணை தொடுக்கின்றார்கள்: தங்கள் கால்களிலுள்ள சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவித் திரிகிறார்கள்.
17. ஆதலால், ஆண்டவர் சீயோன் மகளிரின் உச்சந்தலைகளில் புண்ணை விருவிப்பார்: வழுக்கைத் தலையர்களாய் அவர்களை ஆக்குவார்: ஆண்டவர் அவர்களின் மானத்தைக் குலைப்பார்.
18. அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள், கட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள்,
19. ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள்,
20. கைவளையல்கள், தலை அணிகலன்கள், கூந்தல்கட்டும் பட்டு நாடாக்கள், அரைக்கச்சைகள், நறுமணச் சிமிழ்கள்,
21. காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள்,
22. வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள்,
23. கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை ஆண்டவர் களைந்துவிடுவார்.
24. நறுமணத்திற்குப் பதிலாக அவர்கள்மேல் துர்நாற்றம் வீசும்: கச்சைக்குப் பதிலாகக் கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள்: வாரிமுடித்த கூந்தலுக்குப் பதிலாக அவர்கள் வழுக்கைத் தலை கொண்டிருப்பார்கள்: ஆடம்பர உடைகளுக்குப் பதிலாக அவர்கள் சாக்குடை உடுத்துவார்கள். அழகிய உடல்கொண்ட அவர்கள் மானக்கேடு அடைவார்கள்.
25. உங்கள் ஆண்கள் வாளுக்கு இரையாவார்கள்: வலிமை மிக்க உங்கள் வீரர்கள் போரில் மடிவார்கள்.
26. சீயோன் வாயில்கள் புலம்பி அழும்: அவள் எல்லாம் இழந்தவளாய்த் தரையில் உட்காருவாள்.
அதிகாரம் 4.
1. அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு பெண்கள் பிடித்துக்கொண்டு, "நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்டு வாழ்வோம்: எங்கள் சொந்த ஆடைகளை உடுத்திக் கொள்வோம்: உமது பெயரை மட்டும் எங்களுக்கு வழங்கி எங்கள் இழிவை நீக்குவீராக" என்பார்கள்.
2. அந்நாளில் ஆண்டவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்: நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.
3. அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும், "புனிதர்" எனப் பெயர் பெறுவர்: உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோ ரும் "புனிதர்" எனப்படுவர்.
4. என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் பய்மைப்படுத்துவார்: நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் பய்மைப்படுத்துவார்.
5. சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்: புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்: ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒருவிதான மண்டபம் இருக்கும்.
6. அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.
அதிகாரம் 5.
1. என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்: என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப்பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்: செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.
2. அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைத்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்: அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்: திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்: நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார்: மாறாக, காட்டு பழங்களையே அது தந்தது.
3. இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்: எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள்.
4. என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?
5. என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்: "நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்: அது தீக்கிரையாகும்: அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்: அது மிதியுண்டு போகும்.
6. நான் அதைப் பாழாக்கி விடுவேன்: அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை: களையை அகற்ற மண் கொத்தப்படுவதுமில்லை: நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்: அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்."
7. படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே: அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே: நீதிக்கனி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்: ஆனால் விளைந்தோ இரத்தப்பழி: நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்: ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.
8. வீட்டோ டு வீடு சேர்ப்பவர்களே, வயலோடு வயல் இணைத்துக் கொள்பவர்களே, உங்களுக்கு ஜயோ கேடு! பிறருக்கு இடமில்லாது நீங்கள்மட்டும் தனித்து"நாட்டில் வாழ்வீர்களோ?
9. என் காது கேட்கப் படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியது இதுவே: "மெய்யாகவே பல இல்லங்கள் பாழடைந்து போகும்: அழகுவாய்ந்த பெரிய மாளிகைகள் தங்குவதற்கு ஆள் இல்லாமற் போகும்.
10. ஏனெனில் பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டம் ஒரு குடம் இரசம்தான் கொடுக்கும்: பத்துக் கலம் விதை விதைத்தால், ஒரு கலமே விளையும்.
11. விடியற் காலையிலேயே விழித்தெழுந்து, போதை தரும் மதுவை நாடி அலைந்து, இரவுவரை குடித்துப் பொழுதைப் போக்குகிறவர்களுக்கோ ஜயோ, கேடு!
12. அவர்கள் கேளிக்கை விருந்துகளில் கின்னரம், வீணை, தம்புரு, மதுபானம் இவையெல்லாம் உண்டு: ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைவுகூர்வதில்லை: அவருடைய கைவினைகளை நோக்கிப் பார்ப்பதுமில்லை.
13. ஆதலால் அறியாமையால் என் மக்கள் நாடு கடத்தப்படுகின்றார்கள்: அவர்களில் பெருமதிப்பிற்குரியோர் பசியால் மடிகின்றார்கள்: பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றார்கள்:
14. ஆதலால் பாதாளம் தன் வாயை அளவுகடந்து பிளந்துள்ளது: தன் பசியைப் பெருக்கியிருக்கிறது. எருசலேமின் உயர்குடிமக்கள், பொதுமக்கள், திரள் கூட்டத்தார், அதில் களியாட்டம் புரிவோர் ஆகியோர் ஒருங்கே அதனுள் இறங்குவார்கள்.
15. மனிதர் தலைகுனிவர், மானிடமைந்தர் தாழ்வுறுவர், இறுமாப்புக் கொண்டோ ரின் பார்வை தாழ்ச்சியடையும்.
16. ஆனால் படைகளின் ஆண்டவர் தம் நீதியால் உயர்ந்திருப்பார்: பயவராம் இறைவன் தம் நேர்மையால் தம்மைத் பயவராக வெளிப்படுத்துவார்.
17. அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் தங்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வதுபோல மேயும், வெள்ளாட்டுக் குட்டிகளும் இளங்கன்றுகளும் பாழடைந்த இடங்களில் மேயும்.
18. பொய்ம்மை என்னும் கயிறுகளால் தீச்செயலைக் கட்டி இழுத்து, வண்டியைக் கயிற்றால் இழுப்பது போலப் பாவத்தையும் கட்டி இழுப்பவர்களுக்கு ஜயோ கேடு!
19. "நாங்கள் பார்க்கும்படி அவர் விரைவாய் வந்து, தம் வேலையைத் துரிதமாய்ச் செய்யட்டும்: நாங்கள் அறியும்படி, இஸ்ரயேலின் பயவர் தம் நோக்கத்தை வெளிப்படுத்தி அதை நிறைவேற்றட்டும்" என்று சொல்கிறவர்களுக்கு ஜயோ, கேடு!
20. தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஜயோ கேடு!
21. தங்கள் பார்வையில் ஞானிகள் என்னும், தங்கள் கணிப்பில் கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும் தங்களையே கருதுபவர்களுக்கு ஜயோ கேடு!
22. திராட்சை இரசம் குடிப்பதில் தீரர்களாகவும், மதுபானம் கலப்பதில் திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்கு ஜயோ கேடு!
23. அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு, குற்றவாளியை நேர்மையாளர் எனத் தீர்ப்பிடுகின்றார்கள்: குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத் தடை செய்கின்றார்கள்:
24. ஆதலால், நெருப்புத் தணல் வைக்கோலை எரித்துச் சாம்பலாக்குவது போல, காய்ந்த புல் தீக்கிரையாக்கித் தீய்ந்து போவது போல, அவர்கள் ஆணிவேர் அழுகிப்போகும்: அவர்கள் வழிமரபு துரும்புபோல் பறந்து போகும்: ஏனெனில் அவர்கள், படைகளின் ஆண்டவரது திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்: இஸ்ரயேலின் பயவரது வாக்கை வெறுத்துத் தள்ளினார்கள்.
25. ஆதலால், ஆண்டவரின் சினத் தீ அவருடைய மக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது, அவர்களுக்கு எதிராக அவர் தம் கையை நீட்டி அவர்களை நொறுக்கினார். மலைகள் நடுநடுங்கின: அவர்களுடைய சடலங்கள் நடுத்தெருவில் நாதியற்றுக் குப்பை போல் கிடந்தன: இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை. நீட்டிய சினக்கை இன்னும் மடங்கவில்லை.
26. அவர் தொலையிலுள்ள பிற இனத்துக்கு ஓர் அடையாளக் கொடியைக் காட்டியுள்ளார்: மண்ணுலகின் எல்லைகளிலிருந்து சீழ்க்கை ஒலியால் அதனை அழைத்துள்ளார், அந்த இனம் வெகுவிரைவாய் வந்து கொண்டிருக்கின்றது.
27. அவர்களுள் ஒருவனும் களைப்பபடையவில்லை: இடறி விழவில்லை: பங்கவில்லை: உறங்கவுமில்லை: அவர்களில் யாருக்கேனும் இடுப்புக்கச்சை அவிழ்ந்து விழவில்லை: மிதியடிகளின் வாரேதும் அறுந்து போகவுமில்லை.
28. அவர்களுடைய அம்புகள் கூர்மையானவை: அவர்களுடைய விற்கள் நாணேற்றப்பட்டுள்ளன: அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்களைப் பால் காட்சியளிக்கின்றன: அவர்களுடைய தேர்ச் சக்கரங்கள் சூறாவளிக் காற்றைப்போல் சுழல்கின்றன.
29. அவர்களின் கர்ச்சனை பெண் சிங்கத்தினுடையதை ஒத்தது: இளஞ் சிங்கங்களைப்போல் அவர்கள் கர்ச்சிக்கிறார்கள்: உறுமிக்கொண்டு தங்கள் இரையைக் கவ்விப் பிடிப்பார்கள்: யாரும் விடுவிக்க இயலாதவாறு இரையை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள்.
30. அந்நாளில் கடலின் பேரிரைச்சல்போல் இஸ்ரயேலுக்கு எதிராக இரைந்து உறுமுவார்கள்: நாட்டை ஒருவன் பார்க்கையில், இருளும் துன்பமுமே காண்பான்: மேகத்திரள் ஒளியை விழுங்கிவிட்டது.
அதிகாரம் 6.
1. உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்: அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.
2. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்: ஒவ்வொருவருக்கு