தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

 Home > Spirituality & the Tamil Nation  > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவாபுத்தகம் 7. நீதித்தலைவர்கள்புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல்புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14  - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 -  நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள் > புத்தகம் 21 - சபை உரையாளர் &  புத்தகம் 22 - இனிமைமிகுபாடல் > புத்தகம் 23 - எசாயாபுத்தகம் 24 - எரேமியா

புத்தகம் 20 - நீதிமொழிகள்

Holy Bible - Old Testament
Book 20: Proverbs

விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 20 - நீதிமொழிகள்


Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 2006. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



அதிகாரம் 1.

1.     தாவீதின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்.
2.     இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்பயிற்சியும் பெறுவர்: ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழிகளை உணர்ந்து கொள்வர்:
3.     நீதி, நியாயம், நேர்மை நிறைந்த விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவர்:
4.     அறிவுற்றோர் கூரறிவு பெறுவர்: இளைஞர் அறிவும் விவேகமும் அடைவர்.
5.     ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்: விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்:
6.     நீதிமொழிகளையும் உவமைகளையும் ஞானிகளின் நன்மொழிகளையும் புதிர் மொழிகளையும் அவர்கள் உய்த்துணர்வர்.
7.     ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்: ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.
8.     பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி: உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே:
9.     அவை உன் தலைக்கு அணிமுடி: உன் கழுத்துக்கு மணிமாலை.
10.     பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்: நீ அவர்களுடன் போக இணங்காதே.
11.     அவர்கள் என்னைப் பார்த்து, எங்களோடு வா: பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்: யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்:
12.     பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்: படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழமையாக விழுங்குவோம்.
13.     எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்: கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம்.
14.     நீ எங்களோடு சேர்ந்துகொள்: எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.
15.     பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே: அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.
16.     அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன: இரத்தம் சிந்த விரைகின்றன.
17.     பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று, மறைவாகவே கண்ணி வைப்பார்கள்.
18.     அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்: அவர்கள் அளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும்.
19.     தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே: அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.
20.     ஞானம் வீதிகளிலிருந்து உரத்துக் கூறுகின்றது: பொதுவிடங்களிலிருந்து குரலெழுப்புகின்றது:
21.     பரபரப்பு மிகுந்த தெருக்களிலிருந்து அழைக்கின்றது: நகர வாயிலிருந்து முழங்குகின்றது:
22.     பேதையரே, நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் உங்கள் பேதைமையில் உழல்வீர்கள்? இகழ்வார் இன்னும் எவ்வளவு காலம் இகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி காண்பர்? முட்டாள்கள் இன்னும் எவ்வளவு காலம் அறிவை வெறுப்புடன் நோக்குவார்கள்?
23.     என் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்களானால், நான் என் உள்ளத்திலிருப்பதை உங்களுக்குச் சொல்வேன்: என் செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24.     நான் கூப்பிட்டேன், நீங்களோ செவிசாய்க்க மறுத்தீர்கள்: உங்களை அரவணைக்கக் கையை நீட் டினேன்: எவரும் கவனிக்கவில்லை.
25.     என் அறிவுரைகளுள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை: என் எச்சரிக்கை அனைத்தையும் புறக்கணித்தீர்கள்.
26.     ஆகையால், உங்களுக்கு இடுக்கண் வரும்போது, நான் நகைப்பேன்: உங்களுக்குப் பெருங்கேடு விளையும்போது ஏளனம் செய்வேன்.
27.     பேரிடர் உங்களைப் புயல் போலத் தாக்கும்போது, இடுக்கண் உங்களைச் சுழற்காற்றென அலைக்கழிக்கும்போது, துன்பமும் துயரமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது, நான் எள்ளி நகையாடுவேன்.
28.     அப்பொழுது, நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள்: நான் பதிலளிக்க மாட்டேன்: ஆவலோடு என்னை நாடுவீர்கள்: ஆனால் என்னைக் காணமாட்டீர்கள்.
29.     ஏனெனில், நீங்கள் அறிவை வெறுத்தீர்கள்: ஆண்டவரிடம் அச்சம் கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை
30.     நீங்கள் என் அறி¨வுரையை ஏற்கவில்லை: என் எச்சரிக்கை அனைத்தையும் அவமதித்தீர்கள்.
31.     நீங்கள் உங்கள் நடத்தையின் பயனைத் துய்ப்பீர்கள்: சூழ்ச்சி செய்து நீங்களே சலித்துப் போவீர்கள்.
32.     பேதையரின் தவறுகள் அவர்களையே கொன்றுவிடும்: சிறுமதியோரின் தற்பெருமை அவர்களை அழித்துவிடும்.
33.     எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்: தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்.

அதிகாரம் 2.



1.     பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி,
2.     என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்.
3.     ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு.
4.     செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு.
5.     அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய். கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய்.
6.     ஏனெனில் ஞானத்தை அளிப்பவு¡ ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.
7.     நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்: மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார்.
8.     நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்: தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார்.
9.     எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.
10.     ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்: அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும்.
11.     அப்பொழுது, நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்: மெய்யறிவு உன்னைக் காத்துக்கொள்ளும்.
12.     நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி, அது உன்னைப் பாதுகாக்கும்.
13.     நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும்.
14.     அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள்.
15.     அவர்களுடைய வழிகள் கோணலானவை. அவர்களுடைய பாதைகள் நேர்மையற்றவை.
16.     ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.
17.     அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்: தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள்.
18.     அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது: அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன.
19.     அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை: வாழ்வெனும் பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை
20.     எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக! நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக!
21.     நேர்மையாளரே உலகில் வாழ்வர்: மாசற்றாரே அதில் நிலைத்திருப்பர்.
22.     பொல்லாரோ உலகினின்று பூண்டோடு அழிவர்: நயவஞ்சகர் அதனின்று வேரோடு களைந்தெறியப்படுவர்.

அதிகாரம் 3.



1.     பிள்ளாய்! என் அறிவுரையை மறவாதே: என் கட்டளைகளை உன் இதயத்தில் இருத்திக்கொள்:
2.     அவை உனக்கு நீண்ட ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும் நிலையான நலன்களையும் அளிக்கும்.
3.     அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக! அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் பூண்டுகொள்.
4.     அப்பொழுது, நீ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவனாவாய்: அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய்.
5.     முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு: உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.
6.     நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.
7.     உன்னை நீ ஒரு ஞானி என்ற எண்ணிக்கொள்ளாதே: ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு.
8.     அப்பொழுது உன் உடல், நலம் பெறும்: உன் எலும்புகள் உரம் பெறும்.
9.     உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று: உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு.
10.     அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்: குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்.
11.     பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே: அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.
12.     தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்.
13.     ஞானத்தை தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்: மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்:
14.     வெள்ளியை விட ஞானமே மிகுநலன் தருவது: பொன்னைவிட ஞானத்தால் வரும் செல்வம் மேலானது.
15.     ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது: உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது.
16.     அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது. அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது.
17.     அதன் வழிகள் இன்பம் தரும் வழிகள்: அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை.
18.     தன்னை அடைந்தோர்க்கு அது வாழ்வெனும் கனிதரும் மரமாகும்: அதன¨ப் பற்றிக்கொள்வோர் நற்பேறு பெற்றோர்.
19.     அண்டவர் ஞானத்தால் பூவுலகிற்கு அடித்தளமிட்டார்: விவேகத்தால் வானங்களை நிலைபெறச் செய்தார்.
20.     அவரது அறிவாற்றலால் நிலத்தின் அடியிலிருந்து நீர் பொங்கி எழுகின்றது: வானங்கள் மழையைப் பொழிகின்றன.
21.     பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்: இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்தி வை.
22.     இவை உனக்கு உயிராகவும், உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.
23.     நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்: உன் கால் ஒருபோதும் இடறாது.
24.     நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது: உன் படுக்கையில் நீ அயர்ந்து பங்குவாய்.
25.     பொல்லார் திகிலடைவதையும் அவர்களுக்கு அழிவு வருவதையும் காணும்போது நீ அஞ்சாதே.
26.     ஆண்டவர் உனக்குப் பக்கத்துணையாய் இருப்பார்: உன் கால் கண்ணியில் சிக்காதபடி உன்னைக் காப்பார்.
27.     உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே.
28.     அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, “போய் வா, நாளைக்குத் தருகிறேன்“ என்று சொல்லாதே.
29.     அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே: அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?
30.     ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே.
31.     வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே: அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.
32.     ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்: நேர்மையாளரோடு அவா உறவுகொள்கின்றார்.
33.     பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்: அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.
34.     செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்:
35.     ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்: அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.

அதிகாரம் 4.



1.     பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்: மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
2.     நான் உங்களுக்கு நற்போதனை அளிக்கின்றேன்: நான் கற்பிப்பதைப் புறக்கணியாதீர்கள்:
3.     நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
4.     அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே: நான் சொல்வதை உன் நினைவில் வை: என் கட்டளைகளை மறவாதே: நீ வாழ்வடைவாய்.
5.     ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு: நான் சொல்வதை மறந்துவிடாதே: அதற்கு மாறாக நடவாதே:
6.     ஞானத்தை புறக்கணியாதே: அது உன்னைப் பாதுகாக்கும்: அதை அடைவதில் நாட்டங்கொள்: அது உன்னைக் காவல் செய்யும்.
7.     ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்: உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு.
8.     அதை உயர்வாய்க் கொள்: அது உன்னை உயர்த்தும்: அதை நீ தழுவிக்கொள்: அது உன்னை மாண்புறச் செய்யும்.
9.     அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்: மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும்.
10.     பிள்ளாய்! கவனி: நான் சொல்வதை ஏற்றுக்கொள்: அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
11.     ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்: நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன்.
12.     நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது : நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய்.
13.     பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்: அதை விட்டுவிடாதே: அதைக் கவனமாய்க் காத்துக்கொள்: அதுவே உனக்கு உயிர்.
14.     பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே: தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.
15.     அதன் அருகில் செல்லாதே: அதில் கால்வைக்காதே: அதை விட்டு விலகி உன் வழியே செல்.
16.     தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் பக்கம் வராது: யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது
17.     தீவினையே அவர்கள் உண்ணும் உணவு: கொடுஞ் செயலே அவர்கள் பருகும் பானம்.
18.     நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது: அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது.
19.     பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது: தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது
20.     பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு: நான் சொல்வதைக் கவனி.
21.     என் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்: உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை.
22.     அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்: அவர்களுக்கு உடல் நலமும் தரும்.
23.     விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்: ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.
24.     நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது: வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது.
25.     உன் கண்கள் நேரே பார்க்கட்டும்: எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து.
26.     நேர்மையான பாதையில் நட: அப்பொழுது, உன் போக்கு இடரற்றதாயிருக்கும்.
27.     வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே: தீமையின் பக்கமே காலெடுத்து வைக்காதே.

அதிகாரம் 5.



1.     பிள்ளாய்! என் ஞானத்தில் உன் கவனத்தைச் செலுத்து: என் அறிவுரைக்குச் செவிகொடு.
2.     அப்பொழுது விவேகத்துடன் நடந்துகொள்வாய்: அறிவு உன் நாவைக் காவல்செய்யும்.
3.     விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்: அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை.
4.     ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்: இருபுறமும் கூரான வால் வெட்டுதலை ஒக்கும்
5.     அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்: அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும்.
6.     வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை: அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்: அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.
7.     ஆகையால், பிள்ளாய்! எனக்குச் செவிகொடு: நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே.
8.     அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்: அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே.
9.     இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்: கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய்.
10.     அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்: நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும்.
11.     நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்: உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய்.
12.     ஜயோ, அறிவுரையை நான் வெறுத்தேனே! கண்டிக்கப்படுவதைப் புறக்கணித்தேனே!
13.     கற்பித்தவர்களின் சொல்லைக் கேளாமற் போனேனே! போதித்தவர்களுக்குச் செவிகொடாமல் இருந்தேனே!
14.     இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய், மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே என்று அலறுவாய்.
15.     உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி: உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு
16.     உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா?
17.     அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்: அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே.
18.     உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.
19.     அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்: அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக!
20.     மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? புரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?
21.     மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை: அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்பக்கிப் பார்க்கின்றார்.
22.     பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்: தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர்.
23.     கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்: தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.

அதிகாரம் 6.



1.     பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால்,
2.     அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால்,
3.     பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்: நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்.
4.     அதைச் செய்யும் வரையில் கண்ணயராதே: கண் இமைகளை மூடவிடாதே.
5.     நீ வேடன் கையில் அகப்பட்ட மான் போலிருப்பாய்: கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்: உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார்.
6.     சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்: அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்:
7.     அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை.
8.     எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்: அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.
9.     சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? பக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்?
10.     இன்னும் சிறிது நேரம் பங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்: கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள்.
11.     வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்: ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்.
12.     போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான்.
13.     அவன் கண் சிமிட்டுவான்: காலால் செய்தி தெரிவிப்பான்: விரலால் சைகை காட்டுவான்.
14.     அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்: எங்கும் சண்டை மூட்டிவிடுவான்.
15.     ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்: தீடீரென்று அழிந்துபோவான்: மீ£ளமாட்டான்.
16.     ஆண்டவர் வெறுக்கும் ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது.
17.     அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை,
18.     சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால்,
19.     பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.
20.     பிள்ளாய்! உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி: தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே.
21.     அவற்றை எப்போதும் உன் இதயத்தில் இருத்திவை: உன் கழுத்துக்கு மாலையென அணிந்து கொள்.
22.     நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்: நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்: விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும்.
23.     கட்டளை என்பது ஒரு விளக்கு: அறிவுரை என்பது ஒளி: கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி.
24.     அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும்.
25.     உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே: அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே.
26.     விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்: ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள்.
27.     ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா?
28.     ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா?
29.     பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே: அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
30.     திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம்.
31.     ஆனால், அவன் பிடிபடும்போது ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்: தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும்.
32.     கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான்.
33.     அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்: அவனது இழிவு ஒருபோதும் மறையாது.
34.     ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்: பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்:
35.     சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்: எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.

அதிகாரம் 7.



1.     என் பிள்ளையே, என் வார்த்தைகளை மனத்தில் இருத்து: என் கட்டளைகளைச் செல்வமெனப் போற்று:
2.     என் கட்டளைகளைக் கடைப்பிடி, நீ வாழ்வடைவாய்: என் அறிவுரையை உன் கண்மனிப்போல் காத்துக்கொள்வாய்.
3.     அவற்றை உன் விரல்களில் அணியாகப் பூண்டு கொள்: உன் இதயப் பலகையில் பொறித்துவை.
4.     ஞானத்தை உன் சகோதரி என்று சொல்: உணர்வை உன் தோழியாகக் கொள்.
5.     அப்பொழுது நீ விலைமகளிடமிருந்து தப்புவாய்: தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து காப்பாற்றப்படுவாய்.
6.     ஒரு நாள் நான் என் வீட்டின் பலகணியருகில் நின்றுகொண்டு, பின்னல் தட்டி வழியாகப் பார்த்தபோது,
7.     பேதைகளிடையே ஓர் இளைஞனைக் கண்டேன்: மதிகோடான அவனை இளைஞரிடையே பார்த்தேன்.
8.     அவன் தெரு வழியாக நடந்துபோய், அதன் கோடியில் அவள் வீட்டை நோக்கிச் சென்றான்.
9.     அது மாலை நேரம், பொழுது மயங்கும் வேளை: அந்த இரவிலே, இருட்டும் நேரத்திலே,
10.     அங்கே ஒரு பெண் அவனைக் காண வந்தாள். அவள் விலைமகளைப் போல உடுத்தி, வஞ்சக நெஞ்சினளாய் வந்தாள்.
11.     அவள் வெளிப் பகட்டு மிகுந்தவள்: வெட்கத்தை ஒழித்தவள்: வீட்டில் அவளது கால் தங்காது.
12.     அவள் நடுத்தெருவிலும் நிற்பாள்: முச்சந்தியிலும் நிற்பாள்: மூலைமுடுக்குகளிலும் பதுங்கியிருப்பாள்.
13.     அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, நாணமிலாத் துணிவுடன் அவனைப் பார்த்து,
14.     நான் பலிகளைப் படைக்க வேண்டியிருந்தது: இன்று நான் என் பொருத்தனைகளை நிறைவேற்றிவிட்டேன்:
15.     அதனாலேதான் உன்னைக் காணவந்தேன்: உன்னை ஆவலோடு தேடினேன்: கண்டுகொண்டேன்.
16.     என் மஞ்சத்தை மெத்தையிட்டு அழகுசெய்திருக்கின்றேன்: எகிப்து நாட்டு வண்ணக் கம்பளம் விரித்திருக்கின்றேன்.
17.     வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கக் கலவையிட்டு, என் படுக்கையை மணம் கமழச் செய்திருக்கின்றேன்.
18.     நீ வா: விடியற்காலம் வரையில் இன்பத்தில் மூழ்கியிருப்போம்: இரவு முழுவதும் காதலாட்டத்தில் களித்திருப்போம்.
19.     என் கணவன் வீட்டில் இல்லை. நெடுந்தொலைப் பயணம் செய்யப் புறப்பட்டுப் போய் விட்டான்.
20.     அவன் பை நிறையப் பணம் கொண்டுபோயிருக்கின்றான்: முழுநிலா நாள்வரையில் திரும்பிவர மாட்டான் என்று சொன்னாள்.
21.     இவ்வாறு பல இனிய சொற்களால் அவனை அவள் இணங்கச் செய்தாள்: நயமாகப் பேசி அவனை மயக்கிவிட்டாள்.
22.     உடனே அவனும் உணர்வு மழுங்கினவனாய் அவள் பின்னே சென்றான்: வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போலவும், வலையில் சிக்கிக் கொள்ளப் போகும் கலைமானைப் போலவும்,
23.     கண்ணியில் விழப்போகும் பறவையைப் போலவும் சென்றான். ஓர் அம்பு அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாயும் வரையில் தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்.
24.     ஆகையால் பிள்ளைகளே! எனக்குச் செவிகொடுங்கள்: நான் சொல்வதைக் கவனியுங்கள்.
25.     உங்கள் மனத்தை அவள் வழிகளில் செல்லவிடாதீர்கள்: மயக்கங்கொண்டு அவள் பாதைகளில் நடவாதீர்கள்.
26.     அவள் பலரை குத்தி வீழ்த்தியிருக்கின்றாள்: வலிமை வாய்ந்தோரையும் அவள் கொன்றிருக்கின்றாள்.
27.     அவள் வீடு பாதாளத்திற்குச் செல்லும் வழி: சாவுக்கு இட்டுச் செல்லும் பாதை.

அதிகாரம் 8.



1.     ஞானம் அழைக்கிறதன்றோ? மெய்யறிவு குரல் எழுப்புகிறதன்றோ?
2.     வழியருகிலுள்ள உயரமான இடத்திலும், தெருக்கள் கூடும் இடத்திலும் அது நிற்கின்றது.
3.     நகருக்குள் நுழையும் வாயிலருகே, நகர வாயிலை நெருங்கும் இடத்திலே, அது நின்று கொண்டு இவ்வாறு உரத்துச் சொல்லுகிறது:
4.     மானிடரே! உங்களுக்கே நான் இதை உரைக்கின்றேன்¥: ஒவ்வொரு மனிதருக்கும் சொல்லுகின்றேன்.
5.     முன்மதியற்றோரே! விவேகமாயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்: மதிகேடரே! உணர்வைப் பெறுங்கள்.
6.     நான் சொல்வதைக் கவனியுங்கள்: மிகத் தெளிவாகச் சொல்கின்றேன்: நான் ஒளிவு மறைவின்றிக் கூறுகின்றேன்.
7.     ஏனெனில், என் வாய் உண்மையே பேசும்: பொல்லாங்கான பேச்சு என் நாவுக்கு அருவருப்பு.
8.     என் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை: உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை.
9.     உணர்வாற்றல் உள்ளோர்க்கு அவையாவும் மிகத் தெளிவு: அறிவை அடைந்தோர்க்கு அவை நேர்மையானவை.
10.     வெள்ளியைவிட மேலாக என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்: பசும் பொன்னைவிட மேலாக அறிவை விரும்புங்கள்.
11.     பவளத்திலும் ஞானமே சிறந்தது: நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.
12.     நானே ஞானம்: நான் விவேகத்தோடு வாழ்கின்றேன்: அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளேன்.
13.     ஆண்டவருக்கு அஞ்சுவது தீமையைப் பகைக்கச் செய்யும்: ஆணவத்தையும் இறுமாப்பையும் தீமையையும் உருட்டையும் புரட்டையும் நான் வெறுக்கின்றேன்.
14.     திட்டம் இடுவதும் நானே: இட்டதைச் செய்வதும் நானே. உணர்வும் நானே. வலிமையும் எனதே.
15.     அரசர் ஆட்சி செலுத்துவதும் என்னால்: ஆட்சியாள+ சட்டம் இயற்றுவதும் என்னால்.
16.     அதிகாரிகள் ஆளுவதும் என்னாலே: உலக நீதிபதிகள் அனைவரும் உண்மைத் தீர்ப்பு வழங்குவதும் என்னாலே,
17.     எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
18.     என்னிடம் செல்வமும் மேன்மையும், அழியாப் பொருளும் அனைத்து நலமும் உண்டு.
19.     என்னை அடைந்தவர்கள் பெறும் பயன் பசும்பொன்னைவிடச் சிறந்தது: என்னை அடைந்தவர்களுக்குக் கிடைக்கும் விளைச்சல் பய வெள்ளியை விட மேலானது.
20.     நான் நேர்மையான வழியைப் பின்பற்றுகின்றேன்: என் பாதை முறையான பாதை.
21.     என்மீது அன்புகூர்வோருக்குச் செல்வம் வழங்குகின்றேன்: அவர்களுடைய களஞ்சியங்களை நிரப்புகின்றேன்.
22.     ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார்.
23.     தொடக்கதில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.
24.     கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்: பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை.
25.     மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.
26.     அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.
27.     வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன்.
28.     உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன்.
29.     அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது,
30.     நான் அவர் அருகில் அவருடைய சிற்பி இருந்தேன்: நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்: எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன்.
31.     அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்: மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.
32.     எனவே, பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்: என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்!
33.     நற்பயிற்சி பெற்று ஞானத்தை அடையுங்கள்: அதைப் புறக்கணியாதீர்கள்.
34.     என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!
35.     என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்: ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.
36.     என்னைத் தேடி அடையாதோர் தமக்குக் கேடு வருவித்துக் கொள்வர்: என்னை வெறுக்கும் அனைவரும் சாவை விரும்புவோர் ஆவர்!

அதிகாரம் 9.



1.     ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது: அதற்கென ஏழு பண்களைச் செதுக்கியிருக்கின்றது.
2.     அது தன் பலிவிலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது:
3.     தன் தோழிகளை அனுப்பிவைத்தது: நகரின் உயரமான இடங்களில் நின்று,
4. அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் என்று அறிவிக்கச் செய்தது: மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது:
5. வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்: நான் கலந்துவைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்:
6.     பேதைமையை விட்டுவிடுங்கள்: அப்பொழுது வாழ்வீர்கள்: உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள் என்றது.
7.     இகழ்வாரைத் திருத்த முயல்வோர் அடைவது ஏளனமே: பொல்லாரைக் கண்டிப்போர் பெறுவது வசைமொழியே.
8.     இகழ்வாரைக் கடிந்து கொள்ளாதே: அவர்கள் உன்னைப் பகைப்பார்கள். ஞானிகளை நீ கடிந்து கொண்டால், அவர்கள் உன்னிடம் அன்புகொள்வர்.
9.     ஞானிகளுக்கு அறிவுரை கூறு: அவர்களது ஞானம் வளரும்: நேர்மையாளருக்குக் கற்றுக் கொடு: அவர்களது அறிவு பெருகும்.
10.     ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்: பயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு.
11.     என்னால் உன் வாழ்நாள்கள் மிகும்: உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
12.     நீங்கள் ஞானிகளாய் இருந்தால், அதனால் வரும் பயன் உங்களுக்கே உரியதாகும்: நீங்கள் ஏளனம் செய்வோராய் இருந்தால், அதனால் வரும் விளைவை நீங்களே துய்ப்பீர்கள்.
13.     மதிகேடு என்பதை வாயாடியான, அறிவில்லாத, எதற்கும் கவலைப்படாத ஒரு பெண்ணுக்கு ஒப்பிடலாம்.
14.     அவள் தன் வீட்டு வாயிற்படியிலோ, நகரின் மேடான இடத்திலோ உட்கார்ந்துகொண்டு,
15.     தம் காரியமாக வீதியில் செல்லும் வழிப்போக்கரைப் பார்த்து,
16.     அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் என்பாள்: மதிகேடரைப் பார்த்து,
17.     திருடின தண்ணீரே இனிமை மிகுந்தது: வஞ்சித்துப் பெற்ற உணவே இன்சுவை தருவது என்பாள்.
18.     அந்த ஆள்களோ, அங்கே செல்வோர் உயிரை இழப்பர் என்பதை அறியார்: அவளுடைய விருந்தினர் பாதாளத்தில் கிடக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியாது.

அதிகாரம் 10.


1.     சாலமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்: அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.
2.     தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது: நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.
3.     நல்லாரை ஆண்டவர் பசியால் வருந்த விடார். ஆனால் பொல்லார் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டார்.
4.     வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்: விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
5.     கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்துவைப்போர் மதியுள்ளோர்: அறுவடைக் காலத்தில் பங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.
6.     நேர்மையாளர்மீது ஆசி பொழியும்: பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.
7.     நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்: பொல்லாரின் பெயரோ அழிவுறும்.
8.     ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்: பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.
9.     நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர்: கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்த்தப்படுவர்.
10.     தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்: பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.
11.     நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்: பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும் .
12.     பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்: தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.
13.     விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும்: மதிகெட்டவர்களின் முதுகிற்குப் பிரம்பே ஏற்றது.
14.     ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்: மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.
15.     செல்வரின் சொத்து அவருக்கு அரணாயிருக்கும்: ஏழையரின் வறுமை நிலை அவர்களை இன்னும் வறியோராக்கும்.
16.     நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றனர்: பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர்.
17.     நல்லுரையை ஏற்போர் மெய் வாழ்வுக்கான பாதையில் நடப்பர்: கண்டிப்புரையைப் புறக்கணிப்போரோ தவறான வழியில் செல்வர்.
18.     உள்ளத்தின் வெறுப்பை மறைப்போர் பொய்யார்: வசைமொழி கூறுவோர் மடையர்.
19.     மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்: தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.
20.     நல்லாரின் சொற்கள் பய வெள்ளிக்குச் சமம்: பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.
21.     நல்லாரின் சொற்கள் பிறருக்கு உணவாகும்: செருக்கு நிறைந்தோரின் மதிகேடு அவர்களை அழித்துவிடும்.
22.     ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்: அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.
23.     தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு: ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும்.
24.     பொல்லார் எதற்கு அஞ்சுவரோ, அதுவே அவர்களுக்கு வரும்: கடவுளுக்கு அஞ்சி நடப்போர் எதை விரும்புகின்றனரோ, அது அவர்களுக்குக் கிடைக்கும்.
25.     சுழல் காற்றக்குப்பின் பொல்லார் இராமற்போவர்: கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களோ என்றுமுள்ள அடித்தளம் போல நிற்பார்கள்.
26.     பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ, அப்படியே சோம்பேறிகள் தங்களைத் பது அனுப்பினோர்க்கு இருப்பர்.
27.     ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்: பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும்.
28.     நல்லார் தாம் எதிர்ப்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்: பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.
29.     ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்: தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.
30.     கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது: பொல்லாரோ நாட்டில் குடியிருக்கமாட்டார்.
31.     கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்: வஞ்சகம் பேசும் நா துண்டிக்கப்படும்.
32.     கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் சொல்லில் இனிமை சொட்டும்: பொல்லாரின் சொற்களிலோ வஞ்சகம் பொங்கி வழியும்.

அதிகாரம் 11.



1.     கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது: முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.
2.     இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே: தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.
3.     நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்: நம்பிக்கைத் துரோகிகளின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.
4.     கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது: நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.
5.     குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்: பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.
6.     நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்: நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள்.
7.     பொல்லார் எதிர்நோக்குயிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்: அவர்கள் எதிர் நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.
8.     கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்: பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.
9.     இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் தமக்கு அடுத்திருப்பாரைக் கெடுப்பர்: நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப்பெறுவர்.
10.     நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்: பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.
11.     நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்: பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.
12.     அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட்டோரின் செயல்: நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு:
13.     வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவர்: நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.
14.     திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்: அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.
15.     அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்: பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.
16.     கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்: முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.
17.     இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்: இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக் கொள்வர்.
18.     பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல: நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.
19.     நீதியில் கருத்பன்றியோர் நீடு வாழ்வர்: தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.
20.     வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிகுரியவர்: மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.
21.     தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்: இது உறுதி: கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.
22.     மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு பன்றிக்குப் போட்ட வைர மூக்குத்தி.
23.     கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்: எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும்.
24.     அளவின்றிச் செலவழிப்போர் செல்வராவதும் உண்டு: கஞ்சராய் வாழ்ந்து வறியவராவதும் உண்டு.
25.     ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்: குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.
26.     தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்: தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.
27.     நன்மையானதை நாடுவோர், கடவுளின் தயவை நாடுவோர் ஆவர்: தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.
28.     தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்: கடவுளை நம்பி வாழ்வோரோ தளிரெனத் தழைப்பர்.
29.     குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காதவர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே: அத்தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமையாவர்.
30.     நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்: ஆனால், வன்செயல் உயிராற்றலை இழக்கச் செய்யும்.
31.     நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!

அதிகாரம் 12.



1.     அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்: கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.
2.     நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.
3.     பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்ததில்லை: நேர்மையாளரின் வேரை அசைக்கமுடியாது.
4.     பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்: இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.
5.     நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை: பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.
6.     பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்: நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.
7.     பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்றலின் றி அழிவர்: நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.
8.     மனிதர் தம் விவேத்திற்கேற்ற புகழைப் பெறுவர்: சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.
9.     வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாயத் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.
10.     நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.
11.     உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்: வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.
12.     தீயோரின் கோட்டை களிமண்ணெனத் பளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.
13.     தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக்கொள்வர்: நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.
14.     ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்: வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.
15.     மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்: ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.
16.     மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்: விவேகிகளோ பிறரது இகழ்ச்சியைப் பொருட்படுத்தார்.
17.     உண்மை பேசுவோர் நீதியை நிலைநாட்டுவோர்: பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.
18.     சு¢ந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்: ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.
19.     ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்: பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.
20.     சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்: பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.
21.     நல்லாருக்கு ஒரு கேடும் வராது: பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்ததாய் இருக்கும்.
22.     பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்: உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார்.
23.     விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்: மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.
24.     ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்: சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.
25.     மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்: இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.
26.     சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்: பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.
27.     சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்: விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.
28.     நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்: முரணானவரின் வழி சாவில் தள்ளும்.

அதிகாரம் 13.



1.     ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான்: இருமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான்.
2.     நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்: வஞ்சகச் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.
3.     நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்: நாவைக் காவாதவன் கெட்டழிவான்.
4.     சோம்பேறிகள் உண்ண விரும்பகிறார்கள், உணவோ இல்லை: ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.
5.     நல்லார் பொய்யுரையை வெறுப்பர்: பொல்லாரோ வெட்கக்கேடாகவும் இழிவாகவும் நடந்துகொள்வர்.
6.     நேர்மையாக நடப்போரை நீதி பாதுகாக்கும்: பொல்லாரை அவர்களின் பாவம் கீழே வீழ்த்தும்.
7.     ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு: மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு.
8.     அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து தம் உயிரை மீட்டுக்கொள்வர். ஏழையோ அச்சுறுத்துதலுக்கு அஞ்சான்.
9.     சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும்: பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.
10.     மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்: பிறருடைய அறிவுரைகளை ஏற்போரிடம் ஞானம் காணப்படும்.
11.     விரைவில் வரும் செல்வம் விரைவில் கரையும்: சிறிது சிறிதாய்ச் சேர்ப்பவனின் செல்வமே பெருகும்.
12.     நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச்சோர்வை உண்டாக்கும்: விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்.
13.     அறிவுரையைப் புறக்கணிக்கிறவர் அழிவுறுவார்: போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவார்.
14.     ஞானமுள்ளவரது அறிவுரை வாழ்வளிக்கும் ஊற்றாகும்: அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.
15.     நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்: நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.
16.     கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார்: மூடர் தன் மடமையை விளம்பப்படுத்துவார்.
17.     தீய பதர் தொல்லையில் ஆழ்த்துவார்: நல்ல பதரோ அமைதி நிலவச் செய்வார்.
18.     நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவார்: கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவார்.
19.     நினைத்தது கிடைப்பின் மனத்திற்கு இன்பம்: மூடர் தம் தீமையை வெறக்காதிருப்பதும் இதனாலேயே.
20.     ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவர்: மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்.
21.     பாவிகளைத் தீங்கு பின்தொடரும்: கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.
22.     நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்: பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும்.
23.     தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்: ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.
24.     பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்: மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.
25.     கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு வயிறார உணவு கிடைக்கும்: பொல்லாரின் வயிறோ பசியால் வாடும்.

அதிகாரம் 14.



1.     ஞானமுள்ள பெண்கள் தம் இல்லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்: அறிவிற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்.
2.     நேர்மையாக நடப்பவர் ஆண்டவரிடம் அச்சம் கொள்வார்: நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.
3.     மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்: ஞானமுள்ளவருடைய சொற்களோ அவரைப் பாதுகாக்கும்.
4.     உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை: வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.
5.     வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்: பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.
6.     ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்: ஆனால் அதை அடையான்: விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.
7.     மூடனைவிட்டு விலகிச் செல்: அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?
8.     விவோகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்: மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.
9.     பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்: மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்: நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.
10.     ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே: வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.
11.     பொல்லாரின் குடி வேரோடழியும்: நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.
12.     ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்: முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.
13.     நகைப்பிலும் துயரமுண்டு: மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.
14.     உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்: நல்லவர் தம் செயல்களின் பயனை அடைவார்.
15.     பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்: விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.
16.     ஞானமுள்ளவர் விழிப்புடையவர்: தீமையை விட்டு விலகுவர். முதியோடரோ மடத்துணிச்சலுள்ளவர்: எதிலும் பாய்வார்.
17.     எளிதில் சினங்கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்: விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்.
18.     பேதையர் அறியாமையுடையோர்: விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.
19.     தீயவர் நல்லார்முன் பணிவர்: பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.
20.     ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்: செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்.
21.     அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்: ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.
22.     தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.
23.     கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்: வெறும் பேச்சினால் வருவது வறுமையே.
24.     ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி: மதிகேடருக்கு அவர்களது மடமைதான் பூமாலை.
25.     உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்: பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.
26.     ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்: அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாயிருப்பார்.
27.     ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ்வளிக்கும் ஊற்றாகும்: சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.
28.     மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும் உயரும்: குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.
29.     பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்: எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.
30.     மன அமைதி உடல் நலம் தரும்: சின வெறியோ எலும்புறுக்கியாகும்.
31.     ஏழையை ஒடுக்கிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்: வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.
32.     பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சியுறுவார்: கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும்போதும் தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.
33.     விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்: மதிகேடரிடம் அதற்கு இடமேயில்லை.
34.     நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்: பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.
35.     கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்: தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.

அதிகாரம் 15.



1.     கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்: கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்.
2.     ஞானமுள்ளவர்களின் நா அறிவை வழங்கும்: மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.
3.     ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்: நல்லாரையும் பார்க்கும், பொல்லாரையும் பார்க்கும்.
4.     சாந்தப்படுத்தும் சொல், வாழ்வளிக்கும் மரம் போன்றது: வஞ்சகப் பேச்சாலோ மனமுடைந்துபோகும்.
5.     தன் தந்தையின் நல்லுரையைப் புறக்கணிப்பவர் மூடர்: கண்டிப்புரையை ஏற்பவர் விவேகமுள்ளவர்.
6.     நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்: பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே.
7.     ஞானிகளின் பேச்சு அறிவை வளர்க்கும் தன்மையது: மதிகேடரின் உள்ளம் அத்தகையதல்ல.
8.     பொல்லார் செலுத்தும் பலி ஆண்டவருக்கு அருவருப்பைத் தரும்: நேர்மையானவர்களின் மன்றாட்டு அவருக்கு உகந்ததாயிருக்கும்.
9.     பொல்லாரின் செயல்கள் ஆண்டவருக்கு அருவருப்பு: நீதியைப் பின்பற்றுவோரிடம் அவர் அன்புகொள்கிறார்.
10.     நெறி தவறிச் செல்பவருக்குத் தண்டனை கடுமையாயிருக்கும்: கண்டிப்பை வெறுப்பவர் மரணம் அடைவார்.
11.     பாதாளமும் படுகுழியுமே ஆண்டவர் பார்வையில் இருக்க, மனிதரின் உள்ளம் அவர் பார்வைக்கு மறைவாயிருக்குமா?
12.     ஏளனம் செய்வோர் தம்மைக் கடிந்து கொள்பவரை விரும்புவார்: ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்:
13.     அகமகிழ்ச்சியால் முகம் மலரும்: மனத்துயரால் உள்ளம் உடையும்.
14.     விவேகமுள்ளவர் மனம் அறிவை நாடும்: மதிகேடர் வாய்க்கு மடமையே உணவு.
15.     ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே: மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே.
16.     பெருஞ்செல்வமும் அதனோடு கவலையும் இருப்பதைவிட, சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.
17.     பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.
18.     எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்: பொறுமை உடையவர் சண்டையைத் தீர்த்து வைப்பார்.
19.     சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே: சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.
20.     ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்: அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.
21.     மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சியடைகின்றான்: மெய்யறிவுள்ளவன் நேர்மையானதைச் செய்வான்.
22.     எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்: பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.
23.     தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்: காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.
24.     விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல: அது வாழ்விற்கச் செல்லும் பாதையாகும்.
25.     இறுமாப்புள்ளவர் வீட்டை ஆண்டவர் இடித்துத் தள்ளுவார்: கைம்பெண்ணினது நிலத்தின் எல்லைகளைப் பாதுகாப்பார்.
26.     தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்: மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை.
27.     வன்முறையில் செல்வம் சேர்ப்பவர் தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்: கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார்.
28.     சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்: பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும்.
29.     ஆண்டவர் பொல்லாருக்கு நெடுந்தொலையில் இருக்கிறார்: தமக்கு அஞ்சி நடப்போரின் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறார்.
30.     இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்: நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.
31.     நலம் தரும் அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டிருப்பதை விரும்புவார்.
32.     கண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர் தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்: அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர் உணர்வை அடைவார்.
33.     ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி: மேன்மை அடையத் தாழ்மையே வழி.

அதிகாரம் 16.



1.     எண்ணங்களை மனிதர் எண்ணலாம்: ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.
2.     மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்: ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்பக்கிப் பார்க்கிறார்.
3.     உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை: அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.
4.     ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு: பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.
5.     இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்: அவர் தண்டனைக்குத