|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள் > புத்தகம் 21 - சபை உரையாளர் & புத்தகம் 22 - இனிமைமிகுபாடல் > புத்தகம் 23 - எசாயா > புத்தகம் 24 - எரேமியா
Holy Bible - Old Testament
Book 19: Psalms
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 19 - திருப்பாடல்கள்
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 2006. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அதிகாரம் 1.
1. நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்: பாவிகளின் தீயவழி நில்லாதவர்: இகழ்வாரின் குழுவினில் அமராதவர்:
2. ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்: அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்:
3. அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்: பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்: தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.
4. ஆனால், பொல்லார் அப்படி இல்லை: அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.
5. பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்: பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார்.
6. நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்: பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.
அதிகாரம் 2
1. வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களின்ஙகள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?
2. ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்: ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்:
3. “அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்: அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்“ என்கின்றார்கள்.
4. விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்: என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.
5. அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்: கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்:
6. “என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திரு¢நிலைப்படுத்தனேன்.“
7. ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்: “நீர் என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
8. நீர் விரும்புவதை என்னிடம் கேளும்: பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்: பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
9. இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்: குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.“
10. ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்: பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.
11. அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்: நடுநடுங்குங்கள்! அவர்முன் அக மகிழுங்கள்!
12. அவர் சினங்கொள்ளாதபடியும் நீங்கள் வழியில் அழியாதபடியும் அவரது காலடியை முத்தமிடுங்கள்: இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும? அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.
அதிகாரம் 3
1. ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்!
2. “கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்” என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா)
3. ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்: நீரே என் மாட்சி: என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.
4. நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்: அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (சேலா)
5. நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.
6. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.
7. ஆண்டவரே, எழுந்தருளும்: என் கடவுளே, என்னை மீட்டருளும்: என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்!
8. விடுதலை அளிப்பவர் ஆண்டவ+: அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (சேலா)
அதிகாரம் 4
1. எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்: நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்: இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்:
2. மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)
3. ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்: நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்: -இதை அறிந்துகொள்ளுங்கள்.
4. சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்: படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். (சேலா)
5. முறையான பலிகளைச் செலுத்துங்கள்: ஆண்டவரை நம்புங்கள்.
6. “நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?” எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.
7. தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.
8. இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்: ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.
அதிகாரம் 5
1. ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்: என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
2. என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்: ஏனெனில். நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன்.
3. ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்: வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.
4. ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை: உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5. ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்: தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
6. பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்: கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர்.
7. நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்: உம் திருத்பயகத்தை நோக்கி இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன்:
8. ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால், உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்: உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும்.
9. ஏனெனில், அவர்கள் வாயில் உண்மை இல்லை: அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும்: அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி: அவர்கள் நா வஞ்சகம் பேசும்.
10. கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய தண்டனையை அவர்களுக்கு அளியும்: அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே வீழ்ச்சியுறட்டும்: அவர்களுடைய ஏராளமான தீச்செயல்களை முன்னிட்டு, அவர்களைப் புறம்பே தள்ளிவிடும். ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்த்துள்ளார்கள்.
11. ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்: அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்: நீர் அவர்களைப் பாதுகாப்பீர்: உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.
12. ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்: கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர்.
அதிகாரம் 6
1. ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்: என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்.
2. ஆண்டவரே, எனக்கு இரங்கும்: ஏனெனில், நான் தளர்ந்து போனேன்: ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்: ஏனெனில், என் எலும்புகள் வலுவிழந்து போயின.
3. என் உயிர் ஊசலாடுகின்றது: ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?
4. ஆண்டவரே, திரும்பும்: என் உயிரைக் காப்பாற்றும், உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்.
5. இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை: பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்?
6. பெருமூச்சினால் இளைத்துப் போனேன்: ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது.
7. துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று: என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று.
8. தீங்கிழைப்போரே! நீ£ங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்: ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார்.
9. ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்: அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.
10. என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்: அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.
அதிகாரம் 7
1. என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகந்தேன்: என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.
2. இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்: விடுவிப்போர் எவரும் இரார்.
3. என் கடவுளாகிய ஆண்டவரே, நான் இவற்றைச் செய்திருந்தால்-என் கை தவறிழைத்திருந்தால்,
4. என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால், என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால்-
5. எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்: என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்: என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (சேலா)
6. ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்: என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்: எனக்காக விழித்தெழும்: ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே.
7. எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்: அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும்.
8. ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்: ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.
9. பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்: நல்லாரை நிலைநிறுத்தும்: நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்: நீதி அருளும் கடவுள்.
10. கடவுளே என் கேடயம்: நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.
11. கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி: நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்.
12. பொல்லார் மனமாற்றம் அடையாவிடில், அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்: வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.
13. கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்: அம்புகளை அனல் பறக்கும்படி எய்வா+:
14. ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்: அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி, பொய்ம்மையைப் பெற்றெடுக்கின்றனர்.
15. அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்: அவர்களே வெட்டிய விழுகின்றனர்:
16. அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும். அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.
17. ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்: உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன்.
அதிகாரம் 8
1. ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.
2. பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்: எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர்.
3. உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,
4. மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?
5. ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் கற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்: மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6. உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்: எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
7. ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,
8. வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.
9. ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
அதிகாரம் 9
1. ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன் : வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
2. உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களி கூர்வேன்: உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.
3. என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்: உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள்.
4. நீர் நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருக்கின்றீர்: என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.
5. வேற்றினத்தாரைக் கண்டித்தீர்: பொல்லாரை அழித்தீர்: அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர்.
6. எதிரிகள் ஒழிந்தார்கள்: என்றும் தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.
7. அவர்களின் நகர்களை நீர் தரைமட்டம் ஆக்கினீர்: அவர்களைப்பற்றிய நினைவு அற்றுப் போயிற்று. ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்: நீதி வழங் குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார்.
8. உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்: மன்னளினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.
9. ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்: நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.
10. உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கைகொள்வர்: ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை.
11. சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்:
12. ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர் எளியோரை நி¢னைவில் கொள்கின்றார்: அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார்.
13. ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்: என்னைப் பகைப்போரால் எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்: சாவின் வாயினின்று என்னை விடுவியும்.
14. அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில் உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்: நீர் அளிக்கும் விடுதலைகுறித்து அகமகிழ்வேன்.
15. வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்: அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.
16. ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்: பொல்லார் செய்த செயலில் அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை, இசை: சேலா)
17. பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்: கடவுளை மறந்திருக்கும் வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.
18. மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை: எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.
19. ஆண்டவரே, எழுந்தருளும்: மனிதரின் கை ஓங்க விடாதேயும் : வேற்றினத்தார் உமது முன்னிலையில் தீர்ப்புப் பெறுவார்களாக!
20. ஆண்டவரே, அவர்களைத் திகிலடையச் செய்யும்: தாம் வெறும் மனிதரே என்பதை வேற்றினத்தார் உணர்வார்களாக!
அதிகாரம் 10
1. ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்?
2. பொல்லார் தம் இறுமாப்பினால் எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றீர்? அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில் அவர்களே அகப்பட்டுக்கொள்வார்களாக.
3. பொல்லார் தம் தீய நாட்டங்களில் தற்பெருமை கொள்கின்றனர்: பேராசையுடையோர் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணிக்கின்றனர்.
4. பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்: அவர்கள் எண்ணமெல்லாம் கடவுள் இல்லை!
5. எம் வழிகள் என்றும் நிலைக்கும்“ என்பதே. உம் தீர்ப்புகளோ மிக மேலானவை: அவர்களின் அறிவுக்கு எட்டாதவை. தம் பகைவர் அனைவரையும் பார்த்து அவர்கள் நகைக்கின்றனர்.
6. ˜எவராலும் என்னை அசைக்க முடியாது: எந்தத் தலைமுறையிலும் எனக்குக் கேடுவராது“ என்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.
7. அவர்களது வாய் சாபமும் கபடும் கொடுமையும் நிறைந்தது: அவர்களது நாவினடியில் கேடும் தீங்கும் இருக்கின்றன.
8. ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்: சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்: திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.
9. குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்: எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்: தம் வலையில் சிக்கவைத்து இழுத்துச் செல்கின்றனர்.
10. அவர்கள் எளியோரை நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்: அவர்களது கொடிய வலிமையால் ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.
11. “இறைவன் மறந்துவிட்டார்: தம் முகத்தை மூடிக்கொண்டார்: என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்“ என்று பொல்லார் தமக்குள் சொல்லிக் கொள்கின்றனர்.
12. ஆண்டவரே, எழுந்தருளும்! இறைவா, எமது ஆற்றலை வெளிப்படுத்தும்! எளியோரை மறந்துவிடாதேயும்.
13. பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்? அவர் தம்மை விசாரணை செய்யமாட்டாரென்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?
14. ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்: கேட்டையும் துயரத்தையும் பார்த்து, உதவி செய்யக் காத்திருக்கின்றீர்: திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்: அனாதைக்கு நீரே துணை.
15. பொல்லார் மற்றும் தீயோர் கைகளை முறித்துவிடும்: அவர்களது பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து, அது அற்றுப்போகச் செய்யும்.
16. ஆண்டவர் என்றுமுள அரசர்: அவரது நிலத்தினின்று வேற்றினத்தார் அகன்று விடுவர்.
17. ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை நீர் நிறைவேற்றுகின்றீர்: அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்.
18. நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்: மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார்.
அதிகாரம் 11
1. நான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகந்துள்ளேன்: நீங்கள் என்னிடம், ˜பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப் போ:
2. ஏனெனில், இதோ! பொல்லார் வில்லை வளைக்கின்றனர்: நாணில் அம்பு தொடுக்கின்றனர்: நேரிய உள்ளத்தார்மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்:
3. அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?“ என்று சொல்வது எப்படி?
4. ஆண்டவர் தம் பய கோவிலில் இருக்கின்றார்: அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது: அவர் கண்கள் உற்று நோக்குகின்றன: அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன.
5. ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்: வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.
6. அவர் பொல்லார்மீது கரிநெருப்பும் கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்: பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும்.
7. ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்: அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.
அதிகாரம் 12
1. ஆண்டவரே, காத்தருளும்: ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்: மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.
2. ஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர்: தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர்.
3. தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவாராக! பெருமையடித்துக் கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக!
4. “எங்கள் நாவன்மை எங்கள் வலிமை: எங்கள் பேச்சுத்திறனே எங்கள் பக்கத் துணை: எங்களுக்குத் தலைவர் வேறு யார்?“ என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!
5. ˜எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெருமூச்சையும் கேட்டு இப்பொழுதே எழுந்து வருகின்றேன் : அவர்கள் ஏங்குகின்றபடி அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்“ என்கின்றார் ஆண்டவர்.
6. ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்: மண் உலையில் பய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை: ஏழுமுறை புடமிடப்பட்டவை.
7. ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்: இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும்.
8. பொல்லார் எம்மருங்கும் உலாவருகின்றனர்: மானிடரிடையே பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.
அதிகாரம் 13
1. ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இறுதிவரை மறந்துவிடுவீரோ? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?
2. எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்? நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது: எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?
3. என் கடவுளாகிய ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்: என் விழிகளுக்கு ஒளியூட்டும்.
4. அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்: என் எதிரி, ˜நான் அவனை வீழ்த்திவிட்டேன்“ என்று சொல்லமாட்டான்: நான் வீழ்ச்சியுற்றேன் என்று என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.
5. நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்: நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும்.
6. நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்: ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார்.
அதிகாரம் 14
1. கடவுள் இல்லை என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்: அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்: நல்லது செய்வார் எவருமே இல்லை.
2. ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்: மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார்.
3. எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்: ஒருமிக்கக் கெட்டுப்போயினர்: நல்லது செய்வார் யாரும் இல்லை: ஒருவர்கூட இல்லை.
4. தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே! அவர்கள் ஆண்டவரைநோக்கி மன்றாடுவதுமில்லை.
5. அவர்கள் அஞ்சி நடுங்குவர்: ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார்.
6. எளியோரின் திட்டத்தை அவர்கள் தோல்வியுறச் செய்கின்றார்கள்: ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார்.
7. சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!
அதிகாரம் 15
1. ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?
2. மாசற்றவராய் நடப்போரே! -இன்னோர் நேரியவற்றைச் செய்வர்: உளமார உண்மை பேசுபவர்:
3. தம் நாவினால் குறங்கூறார்: தம் தோழருக்குத் தீங்கிழையார்: தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4. நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்: ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்: தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்:
5. தம் பணத்தை வட்டிக்குக் கொடார்: மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்: -இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.
அதிகாரம் 16
1. இறைவா, என்னைக் காத்தருளும்: உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2. நான் ஆண்டவரிடம் “நீரே என் தலைவர்: உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை“ என்று சொன்னேன்.
3. பூவுலகில் உள்ள பயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.
4. வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வ+: அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்து கொள்ளேன்: அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன்.
5. ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து: அவரே என் கிண்ணம்: எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே:
6. இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன: உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.
7. எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்: இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்: அவர் என் வலப்பக்கம் உள்ளார்: எனவே, நான் அசைவுறேன்.
9. என் இதயம் அக்களிக்கின்றது: என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது: என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10. ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்: உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
11. வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு: உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
அதிகாரம் 17
1. ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக் கேளும்: வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
2. உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்: உம் கண்கள் நேரியன காணட்டும்.
3. என் உள்ளத்தை ஆய்ந்தறியும்: இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்: என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்: தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்: என் வாய் பிழை செய்யக்கூடாதென உறுதி கொண்டேன்.
4. பிற மானிடர் செய்வது போல் அல்லாமல், நீர் உரைத்த வாக்கிற்கிணங்க, வன்முறையாளரின் வழிகளை விட்டு விலகியுள்ளேன்.
5. என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது: என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.
6. இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்: ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்: என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.
7. உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்: உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!
8. உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
9. என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும்.
10. அவர்கள் ஈவு இரக்கம் அற்ற கல் நெஞ்சர்கள்: தங்கள் வாயினால் இறுமாப்புடன் பேசுபவர்கள்.
11. அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்: இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்: அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு, வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர்.
12. பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கும் அவர்கள் ஒப்பாவர்: மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.
13. ஆண்டவரே, எழுந்து வாரும்: அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடையும்: பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும்.
14. ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து-இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து- உமது கைவலிமையினால் என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால் அவர்கள் வயிற்றை நிரப்பும் : அவர்களின் மைந்தர் வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்: எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லட்டும்:
15. நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்: விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.
அதிகாரம் 18
1. அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
2. ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்: என் இறைவன்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
3. போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்: என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.
4. சாவின் கயிறுகள் என்னை இறுக்கின: அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.
5. பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின: சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.
6. என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்: என் கடவுளை நோக்கிக் கதறினேன்: தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்: என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.
7. அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது: மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன:அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின.
8. அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று: அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது: அவரிடமிருந்து நெருப்பக்கனல் வெளிப்பட்டது.
9. வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்: கார் முகில் அவரது காலடியில் இருந்தது.
10. கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்: காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.
11. காரிருளைத் தமக்கு அவர் மூடுதிரை ஆக்கிக்கொண்டார்: நீர்கொண்ட முகிலைத் தமக்குக்கூடாரம் ஆக்கிக்கொண்டார்.
12. அவர்தம் திருமுன்னின் பேரொளியில், மேகங்கள் கல் மழையையும் நெருப்புக் கனலையும் பொழிந்தன.
13. ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்: உன்னதர்தம் குரலை அதிரச்செய்தார். கல் மழையையும் நெருப்புக் கனலையும் பொழிந்தார்.
14. தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்: பெரும் மின்னல்களைத் தெறித்து அவர்களைக் கலங்கடித்தார்.
15. ஆண்டவரே, உமது கடிந்துரையாலும் உமது மூச்சுக் காற்றின் வலிமையாலும் நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது: நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.
16. உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்: வெள்ளப்பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார்.
17. என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவிடுத்தார்: என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார்:
18. எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்: ஆண்டவரோ எனக்கு ஊன்றுகோலாய் இருந்தார்.
19. நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்: நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால், அவர் என்னை விடுவித்தார்.
20. ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்: என் மாசற்ற செயலுக்கு ஏற்ப கைம்மாறு செய்தார்.
21. ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்: பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.
22. அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்: அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.
23. அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்: தீங்கு செய்யாவண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன்.
24. ஆண்டவர், என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்: அவர்தம் பார்வையில் நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.
25. ஆண்டவரே, மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குவீர்.
26. பயோருக்குத் பயவராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.
27. எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்: செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.
28. ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.
29. உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்: என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்.
30. இந்த இறைவனின் வழி நிறைவானது: ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது: அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.
31. ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு கடவுள் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?
32. வலிமையை அரைக்கச்சையாக அளித்த இறைவன் அவரே: என் வழியைப் பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.
33. அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்: உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.
34. போருக்கு என்னை அவர் பழக்குகின்றா+: எனவே, வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்.
35. ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்: உமது வலக்கரத்தால் என்னைத் தாங்கிக் கொண்டீர்: உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர்.
36. நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்: என்கால்கள் தடுமாறவில்லை.
37. என் எதிரிகளைத் துரத்திச்சென்று நான் அவர்களைப் பிடித்தேன்: அவர்களை அழித்தொழிக்கும் வரையில் திரும்பவில்லை.
38. அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்: அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.
39. போரிடும் ஆற்றலை நீர் எனக்கு அரைக்கச்சையாக அளித்தீர்: என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.
40. என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்: என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.
41. உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்: ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை. அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்: ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
42. எனவே, நான் அவர்களை நொறுக்கிக் காற்றடித்துச் செல்லும் புழுதிபோல் ஆக்கினேன்: தெருச் சேறென அவர்களைத் பர எறிந்து விட்டேன்.
43. என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்: பிற இனங்களுக்கு என்னைத் தலைவன் ஆக்கினீர்: நான் முன்பின் அறியாத மக்கள் எனக்குப் பணிவிடை செய்தனர்.
44. அவர்கள் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குப் பணிந்தனர்: வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக் குறுகி வந்தனர்.
45. வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்: தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.
46. ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக!
47. எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்: மக்களினங்களை எனக்குக் கீழிப்படுத்தியவரும் அவரே!
48. என் பகைவரிடமிருந்து என்னை விடுவித்தவரும் அவரே! ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தயவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்!
49. ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்: உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.
50. தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்: தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே.
அதிகாரம் 19
1. வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன: வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2. ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது: ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.
3. அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை: அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4. ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது: அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.
5. மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது: பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது.
6. அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது: அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது: அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
7. ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது: அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது: எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
8. ஆண்டவரின் நியமங்கள் சரியானவை: அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை: அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
9. ஆண்டரைப் பற்றிய அச்சம் பயது: அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை: அவை முற்றிலும் நீதியானவை.
10. அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை: தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.
11. அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்: அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு.
12. தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும்.
13. மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்: அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்: பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.
14. என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்: என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.
அதிகாரம் 20
1. நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக! யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக!
2. பயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக!
3. உம் உணவுப் படையலை எல்லாம் அவர் நினைவில் கொள்வராக! உமது எரி பலியை ஏற்றுக்கொள்வாராக!
4. உமது மனம் விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக! உம் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவாராக!
5. உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக! நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக!
6. ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது பய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கிறேன்.
7. சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும் பெருமை கொள்கின்றனர்: நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம்.
8. அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்: நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.
9. ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்: நாங்கள் கூப்பிடும் வேளையில் எங்களுக்குப் பதிலளியும்.
அதிகாரம் 21
1. ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்: நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
2. அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்: அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை.
3. உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்: அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.
4. அவர் உம்மிடம் வாழ்வுவேண்டி நின்றார்: நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர்.
5. நீர் அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று: மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்,
6. உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்: உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்.
7. ஏனெனில், அரசர் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றார்: உன்னதரின் பேரன்பினால் அவர் அசைவுறாதிருப்பார்.
8. உமது கை உம் எதிரிகளையெல்லாம் தேடிப்பிடிக்கும்: உமது வலக்கை உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.
9. நீர் காட்சியளிக்கும் பொழுது, அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்: ஆண்டவர் சினங்கொண்டு அவர்களை அழிப்பார்: நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.
10. அவர்கள் தலைமுறையைப் பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்: அவர்கள் வழிமரபை மனு மக்களிடமிருந்து எடுத்துவிடுவீர்.
11. உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டம் தீட்டினாலும், அவர்களால் வெற்றிபெற இயலாது.
12. நீரோ அம்புகளை நாணேற்றி அவர்களது முகத்தில் எய்வீர்: அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.
13. ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும்: நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.
அதிகாரம் 22
1. என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?
2. என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்: நீர் பதில் அளிப்பதில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்: எனக்கு அமைதி கிடைப்பதில்லை.
3. நீரோ பயவராய் விளங்குகின்றீர்: இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்:
4. எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்: அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்.
5. உம்மை அவர்கள் வேண்டினார்கள்: விடுவிக்கப்பட்டார்கள்: உம்மை அவர்கள் நம்பினார்கள்: ஏமாற்றமடையவில்லை.
6. நானோ ஒரு புழு, மனிதனில்லை: மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்: மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
7. என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
8. “ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்: தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டுமஙு என்கின்றனர்.
9. என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீரே: என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்துவரும் நீரே!
10. கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்: நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே!
11. என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்: ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது: மேலும், உதவி செய்வார் யாருமில்லை.
12. காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன: பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன.
13. அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்: இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்.
14. நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்: என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின: என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று: என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று.
15. என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது: என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது: என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.
16. தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது: நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்: என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.
17. என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்: அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.
18. என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்: என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19. நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்: என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
20. வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்: இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்:
21. இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்: காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.
22. உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்: சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
23. ஆண்டவருக்கு அஞ்சுவோரே: அவரைப் புகழுங்கள்: யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்: இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்.
24. ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை: அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை: தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை: தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.
25. மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26. எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்: ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!
27. பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்: பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
28. ஏனெனில் அரசு ஆண்டவருடையது: பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்.
29. மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்: புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர்.
30. வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்: இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.
31. அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்: இனி பிறக்கப்போகும் மக்களுக்கு இதை அவரே செய்தா+ என்பர்.
அதிகாரம் 23
1. ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை.
2. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வா+: அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3. அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்: தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்:
4. மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்: உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
5. என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்: என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்: எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
6. உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்: நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
அதிகாரம் 24
1. மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை: நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2. ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்: ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே.
3. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?
4. கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்: பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்: வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்,
5. இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்: தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6. அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே.
7. வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்: தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
8. மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்: இவரே போரில் வல்லவரான ஆண்டவர்.
9. வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்: தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
10. மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்: இவரே மாட்சிமிகு மன்னர்.
அதிகாரம் 25
1. ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
2. என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்: நான் வெட்கமுற விடாதேயும்: என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.
3. உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை: காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.
4. ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5. உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்: உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்:
6. ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்: ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7. என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்: ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.
8. ஆண்டவர் நல்லவர்: நேர்மையுள்ளவர்: ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9. எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்: எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.
10. ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு , அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
11. ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்: ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.
12. ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்து கொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்.
13. அவர் நலமுடன் வாழ்வார்: அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.
14. ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்: அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்:
15. என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன: அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.
16. என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்: ஏனெனில், நான் துணையற்றவன்: துயருறுபவன்.
17. என் வேதனைகள் பெருகிவிட்டன: என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்.
18. என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்: என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.
19. என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய் என்னை வெறுக்கின்றனர்!
20. என் உயிரைக் காப்பாற்றும்: என்னை விடுவித்தருளும்: உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள என்னை வெட்கமுற விடாதேயும்.
21. வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்: ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.
22. கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.
அதிகாரம் 26
1. ஆண்டவரே, நான் குற்றமற்றவன் என்பதை அறிவியும்: ஏனெனில், என் நடத்தை நேர்மையானது: நான் ஆண்டவரை நம்பினேன்: நான் தடுமாறவில்லை.
2. ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்: என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்:
3. ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது: உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன்.
4. பொய்யரின் நடுவில் நான் அமர்வதில்லை: வஞ் சகரோடு நான் சேர்வதில்லை.
5. தீயோரின் மன்றத்தை நான் வெறுக்கின்றேன்: பொல்லாரின் நடுவில் நான் அமர்வதில்லை.
6. மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்: ஆண்டவரே, உம் பலிபீடத்தை வலம் வருவேன்.
7. உரத்த குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்: வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்:
8. ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்பிகின்றேன்: உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்:
9. பாவிகளுக்குச் செய்வது போல் என் உயிரைப் பறித்துவிடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்!
10. அவர்கள் கைகளில் தீச்செயல்கள்: அவர்கள் வலக்கையில் நிறையக் கையூட்டு.
11. நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்: என்னை மீட்டருளும்: எனக்கு இரங்கியருளும்.
12. என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன: மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.
அதிகாரம் 27
1. ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?
2. தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள்.
3. எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது: எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்.
4. நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்: அதையே நான் நாடித் தேடுவேன்: ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்: அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.
5. ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்: தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்: குன்றின்மேல் என்னை பாதுகாப்பாய் வைப்பார்.
6. அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள என் எதிரிகளுக்கு எதிரில் நான் தலைநிமிரச் செய்வார்: அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்: ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.
7. ஆண்டவரே, நான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும் : என் மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
8. புறப்படு, அவரது முகத்தை நாடு என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன்.
9. உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்: நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்: நீரே எனக்குத் துணை: என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும்: என்னைக் கைவிடாதிரும்.
10. என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.
11. ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்: என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச் செம்மையான பாதையில் நடத்தும்.
12. என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்: ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.
13. வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14. நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு: மன உறுதிகொள்: உன் உள்ளம் வலிமை பெறட்டும்: ஆண்டவருக்காகக் காத்திரு.
அதிகாரம் 28
1. ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்: என் கற்பாறையே, என் குரலைக் கேளாதவர்போல் இராதேயும்: நீர் மெளனமாய் இருப்பீராகில், படுகுழியில் இறங்குவோருள் நானும் ஒருவனாகிவிடுவேன்.
2. நான் உம்மிடம் உதவி வேண்டுகையில், உமது திருத்பயகத்தை நோக்கி நான் கையுயர்த்தி வேண்டுகையில், பதில் அளித்தருளும்.
3. பொல்லாரோடு என்னை ஒழித்து விடாதேயும்! தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்! அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு பேசுவதோ சமாதானம்: அவர்களது உள்ளத்தில் உள்ளதோ நயவஞ்சகம்.
4. அவர்களின் செய்கைக்கேற்ப, அவர்களின் தீச்செயலுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை அளியும்: அவர்கள் கைகள் செய்ய தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை வழங்கியருளும், அவர்களுக்குத் தகுந்த கைம்மாறு அளித்தருளும்.
5. ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ அவர் கைகள் உருவாக்கியவற்றையோ அவர்கள் மதிக்கவில்லை: ஆகையால் அவர் அவர்களைத் தகர்த்தெறிவார்: ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார்.
6. ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், அவர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார்.
7. ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்: அவரை என் உள்ளம் நம்புகின்றது: நான் உதவி பெற்றேன்: ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது: நான் இன்னிசை பாடி அவருக்கு நன்றி கூறுவேன்.
8. ஆண்டவர்தாமே தம் மக்களின் வலிமை: தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண்.
9. ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்: உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்: அவர்களுக்கு ஆயராக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக்கொள்ளும்.
அதிகாரம் 29
1. இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆம்! ஆண்டவருக்கே உரித்தாக்குங்கள்!
2. ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்: பய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள்.
3. ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது: மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றா+: ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.
4. ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது: ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.
5. ஆண்டவரின்குரல் கேதுருமரங்களை முறிக்கின்றது: ஆண்டவர் லெபனோன் கேதுரு மரங்களை முறித்துவிடுகின்றார்.
6. லெபனோனின் மலையைக் கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்: சிரியோன் மலையைக் காட்டெருமைக் கன்றெனக் குதிக்கச் செய்கின்றார்.
7. ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது:
8. ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது: ஆண்டவர் காதேசு பாலைவனத்தை நடுங்கச் செய்கின்றார்.
9. ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை முறி