தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

 Home > Spirituality & the Tamil Nation  > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவாபுத்தகம் 7. நீதித்தலைவர்கள்புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் >  புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14  - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 -  நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள்

Holy Bible - Old Testament
Book 10. Samuel-II

விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல்


Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 2006. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



அதிகாரம் 1.


1.     சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்து திரும்புகையில் தாவீது சிக்லாவில் இரண்டு நாள் தங்கினார்.
2.     மூன்றாம் நாள், சவுலின் பாசறையிலிருந்து கிழிந்த ஆடைகளோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.
3.     நீ எங்கிருந்து வருகிறாய்? என்று தாவீது அவனை வினவ, நான் இஸ்ரயேல் பாசறையிலிருந்து தப்பி வந்துவிட்டேன் என்று அவன் பதில் கூறினான்.
4.     என்ன நடந்தது? என்னிடம் சொல், என்று தாவீது கேட்க, அவன் வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்: அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்: சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துமடிந்துவிட்டனர் என்று கூறினான்.
5.     சவுலும் அவனுடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்? என்று தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.
6.     அதற்கு அந்த அளைஞன் நான், தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின் மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
7.     அவர் பின்னால் திரும்பிய போது என்னை பார்த்து கூப்பிட்டார், இதோ இருக்கிறேன் என்று நான் கூறினேன்.
8.     யார் நீ? என்று அவர் என்னை வினவ, நான் ஓர் அமலேக்கியன் என்று பதிலளித்தான்.
9.     என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில் நான் மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால் என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுயிருக்கிறது என்று அவர் என்னிடம் கூறினார்.
10.     நான் அவர் மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில் விழுந்த பின்பு அவர் பிழைக்கமாட்டார் என நான் அறிவேன். அவர் தலையிலிருந்த மகுடத்தையும் பையிலிருந்த காப்பையும் எடுத்துக் கொண்டு, உம்மிடம் வந்துள்ளேன் என்று கூறினார்.
11.     தாவீது தம் ஆடைகளை பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர்.
12.     சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்லயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்க்ள.
13.     தாவீது தமக்கு செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், நீ எங்கிருந்து வருகிறாய்? என்று மீண்டும் வினவ, நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன் என்று மறுமொழிக் கூறினான்.
14.     ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்? என்று தாவீது அவனைக் கேட்டார்.
15.     பின்பு தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டுபோ, அவனை வெட்டு என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.
16.     இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன் என்ற உன் வாயே எனக்கு சான்று சொல்லிவிட்டது என்று தாவீது அவனை நோக்கி கூறினார்.
17.     பிறகு தாவீது சவுலையும் அவருடைய மகள் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்ற பாடினார்.
18.     யூதாவின் மக்களுக்கும் இது கற்ப்பிக்கப்பட வேண்டும் என்ற யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள வில்லலின் பாடல் :
19.     இஸ்ரயேல்! உனது மாட்சி உனது மலைகளிலே மாண்டு கிடக்கிறதா! மாவீரர் எவ்வாறு மடிந்தார்!
20.     காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்: அஸ்கலோன் பகுதிகளில் இதை அறிவிக்கப்பட வேண்டாம்: ஏனெனில், பெலிஸ்தியரின் மனைவிகள் அகமகிழக்கூடாது: விருத்தசேதனமற்றோரின் புதல்வியர் ஆர்ப்பரிக்கக்கூடாது.
21.     கில்போவா மலைகளே! பனியோ மழையோ உம்மீது பொழியாதிருப்பதாக! வயல்கள் முதற்கனிகளை தராதிருப்பனவாக! ஏனெனில் வீரர்கள் கேடயங்கள் தீட்டப்பட்டனவே! சவுலின் கேடயங்கள் எண்ணெயால் மெருகு பெறாதே!
22.     வீழ்த்தப்பட்டோரின் இரத்தத்தினின்றும் வீரர்களின் கொழுப்பினின்றும் யோனத்தானின் அம்பு பின் வாங்கியதும் இல்லை!
23.     சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருள்வுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைப்பிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வார்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்!
24.     இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே!
25.     போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்த்தபட்டனர்!உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்!
26.     சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உள்ளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது அளித்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலை மிஞ்சியது அன்றோ!
27.     மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழித்தன!

அதிகாரம் 2.


1.     இதன்பின் தாவீது, நான் யூதாவின் நகருக்கு ஏதேனும் ஒன்றிற்கு செல்லட்டுமா? என்று ஆண்டவரிடம் கேட்டார். செல் என்றார் ஆண்டவர். எங்கு செல்லலாம்? என்று தாவீது மீண்டும் வினவ, எபிரான் என்று ஆண்டவர் மீண்டும் பதிலளித்தார்.
2.     ஆகவே தாவீது தம் இரு மனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுடனும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுடனும் அங்கு சென்றார்.
3.     தம்மோடு இருந்த ஆள்களையும் அவரது குடும்பத்தினரோடு, தாவீது அங்கே கூட்டி வந்தார். அவர்கள் எபிரோன் நகர்களில் குடியேறினர்.
4.     யூதாவின் மக்கள் வந்து, தங்கள் குலத்தின் அரசராக தாவீதை திருப்பொழிவு செய்தார். யாபோசு கிலயாதின் ஆள்கள் சவுலை அடக்கம் செய்தார்கள். என்று அவர் தாவீதிடம் கூறினர்.
5.     யாபேசு கிலயாதின் ஆள்களுக்கு தாவீது தூதுனுப்பி, நீங்கள் உங்கள் தலைவர் சவுல் மீது அன்புகாட்டி அவரை அடக்கம் செய்தீர்கள். ஆண்டவரின் ஆசி பெறுவீர்களாக!
6.     ஆண்டவர் உங்களுக்கு நிலையான அன்பும் அடக்கமும் காட்டுவாராக! நீங்கள் இவவாறு செய்ததால் நானும் உங்களுக்கு நன்மை செய்வேன்!
7.     வலிமைப் பெற்ற வீரர்களாக திகழுங்கள்! உங்கள் தலைவர் சவுல் இறந்துவிட்டார்: எனினும் யூதா குலத்தார் தங்கள் அரசனாக என்னைத் திருப்பொழிவு செய்துள்ளனர் என்று கூறினார்.
8.     இதற்கிடையில் சவுலின் படைத்தலைவனாகிய நேரின் மகன் அப்பேனர் சவுலின் மகன் இஸ்பொசேத்தை மகனயிமுக்கு அழைத்துச் சென்று
9.     கிலயாது, அசூரி, இஸ்ரியேல், எப் ராயிம், பென்யமின் மேலும் அனைத்து இஸ்ரயேல் மேலும் அவனை அரசனாக்கினான்.
10.     சவுலின் மகன் இஸ்பொசத்து இஸ்ரயேல் மீது அரசனாய் தொடங்கிய போது அவனுக்கு வயது நாற்பது. இரண்டு ஆண்டு அவன் அரசனாய் இருந்தான். ஆனால் யூதா குலமோ தாவீதை பின்பற்றியது.
11.     தாவீது எபிரோனில் யூதா குலத்தின் மீது ஆட்சி புரிந்த காலம் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களுமே.
12.     நேரின் மகன் அப்னேரும் சவுலின் மகன் இஸ்பொசத்தின் பணியாளர்களும் மகனயிமியிலிருந்து புறப்பட்டுக் கிபயோனுக்குச் சென்றனர்.
13.     செரூயாவின் மகன் யோவாபும் தாவீதின் பணியாளர்களும் புறப்படடுச் சென்று அவர்களைக் கிபயோன் குளத்தருகே எதிர் கொண்டனர். ஒரு சாரார் இப்பக்கமும் மறுசாரார் அப்பக்கமும் குளத்தின் அருகே அமர்ந்தனர்.
14.     இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள் போர் செய்யட்டும் என்று அப்னேர் யோவாபிடம் கூறினார். அவர்கள் அவ்வாறே செய்யட்டும் என்று யோவாபு கூறினான்.
15.     பென்யமின் மற்றும் சவுலின் மகன் இஸ்பொசேத்து சார்பில் பன்னிருவரும், தாவீதின் பணியாளர் பன்னிருவரும் எழுந்து வந்தனர்.
16.     ஒவ்வொருவனும் தன் எதிரியின் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது விலாவில் வாளை ஊடுருவினான். இருவரும் ஒன்றாக மடிந்தனர். அந்த இடத்தை எல்காத் அட்சூரிம் என்று அழைத்தனர்.
17.     போர் அன்று மிகக் கடுமையாக உருவெடுத்தது, அப்னேரும் இஸ்ரயேல் ஆள்களும் தாவீதின் பணியாளர்கள் முன் முறியடிக்கப்பட்டனர்.
18.     அங்கே செரூயாவின் புதல்வர் யோவாபு, அபிசாய், அசாவேல் ஆகிய மூவரும் இருந்தனர். அசாவேல் காட்டு மான் போல் வேகமாக ஓடக் கூடியவன்.
19.     அசாவேல் அப்னோரை பின் தொடர்ந்து, வலமோ, இடமோ விலகாமல் துரத்தினான்.
20.     அப்னேர் பின்னால், திரும்பி அசாவேல் நீயா? என்று கேட்டான் நான் தான் என்று அவன் பதில் கூறினான்.
21.     வலமோ இடமோ விலகி இளைஞன் ஒருவனை பிடித்து, அவன் உடைமைகளை பிடுங்கிக் கொள் என்று அப்னேர் அசாவேலிடம் கூறினான். ஆனால் அசாவேலுக்கு அவனை பின்தொடர்வதிலிருந்து விலகிவிட மனம் இல்லை.
22.     என்னை பின்தொடர்வதிலிருந்து விலகி விடு. நான் உன்னைக் குத்தி வீழ்த்த வேண்டும்? உன் சகோதரன் யோவாபுக்கு நான் எவ்வாறு முகத்தைக் காட்டுவேன்? என்று மீண்டும் அப்னேர் அசாவேலிடம் கூறினான்.
23.     ஆனால் அசாவேல் அதைக் கேட்காமல் தொடர்ந்தான் ஆகவே அப்னேர் அவனை ஈட்டியின் முனையால் அவன் வயிற்றில் குத்த, அது அவனை பின்னாக ஊடுருவியது. அந்த இடத்திலேயே அவன் விழுந்து இறந்தான். அசாவேல் விழுந்து இறந்த இடத்திற்கு வந்த அனைவரும் நிலைகுலைந்து நின்றனர்.
24.     பின் யோவாபுக்கு அபிசாயும் அப்னேரைப் பின் தொடர்ந்தனர். கிபயோன் பாலைநிலப் பாதையில் கீகுக்கு முன்பாக அம்மா மலையை அவர்கள் வந்தடைந்த போது கதிரவன் மறைந்துக் கொண்டிருந்தான்.
25.     அப்போது பென்யமின் ஆள்கள் அப்னேருக்கு பின் ஒரே படையாக நின்று ஒரு குன்றின் உச்சியில் நின்றனர்.
26.     அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு, வாளுக்கு இரை கொடுக்க வேண்டுமா? முடிவு கசப்பாக இருக்கும் நீ அறிவாயா? தங்கள் சகோதரர்களை பின் தொடராமல் திரும்பச் செல்லுமாறு மக்களிடம் நீ சொல்ல மாட்டாயோ? என்று கூறினான்.
27.     அதற்கு யோவாபு வாழும் கடவுள் மேலும் ஆணை! நீ பேசாதிருந்தால், காலையிலேயே தங்கள் சகோதரர்களை பின் தொடராமல் மக்கள் விலகியிருப்பார்கள் என்று கூறி,
28.     எக்காளம் ஊதினான். அனைத்து மக்களும் நின்றனர். அதற்கு மேல் அவர்கள் இஸ்ரயேலை பின்தொடவில்லை. போரிடவுமில்லை.
29.     அப்னேரும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து அராபா வழியாக யோர்தானைக் கடந்தனர். தொடர்ந்து பிக்ரோன் முழுவதும் கடந்து மகனயிமை அடைந்தார்.
30.     யோவாபு அப்னேரைப் பின்தொடர்வதினின்று திரும்பியபின் தன் ஆள்கள் அனைவரையும் ஒன்று திராட்டினான். அசாவேல் நீங்கலாக, தாவீதின் பணியாளர்களும் பத்தொன்பது பேரைக் காணவில்லை.
31.     தாவீதின் பணியாளர்களோ அப்னேரின் ஆள்களான முந்நூற்று அறுபது பென்யமினியரைக் கொன்றிருந்தனர்.
32.     அவர்கள் அசாவேலின் சடலத்தைத் தூக்கி வந்து பெத்லகேமிலிருந்த அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். யோவாபும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து, பொழுது புலர்ந்ததும் எபிரோனை அடைந்தனர்.

அதிகாரம் 3.


1.     சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ஒரு நீண்ட போர் ஏற்பட்டது: தாவீது வலிமை பெற்றோர்: சவுலின் வீட்டாரோ தொடர்ந்து வலிமை இழந்தவர்.
2.     எபிரோனில் தாவீதுக்கு புதல்வர்கள் பிறந்தனர். இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுக்குப் பிறந்த அம்னோன் அவர்தம் தலைமகன்.
3.     கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுக்குப் பிறந்த கிலயாபு அவர்தம் இரண்டாம் மகன். கெசூர் மன்னனான தால்மாயின் மகன் மாக்கவுக்குப் பிறந்த அப்சலோம் அவர்தம் மூன்றாம் மகன்.
4.     அகீத்துக்குப் பிறந்த அதோனியா நான்காம் மகன்: அபித்தாலுக்குப் பிறந்த செபற்றியா ஜந்தாம் மகன்:
5.     தாவீதின் மனைவி எக்லாவுக்குப் பிறந்த இத்ராயம் ஆறாம் மகன்: இவர்கள் தாவீதுக்க எப்ரோனில் பிறந்தவர்கள்.
6.     சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் பூசல் நிலவிய போது, சவுலின் வீட்டில் அப்னேர் தன்னையும் வலிப்படுத்திக் கொண்டான்.
7.     அய்யாவின் மகனான இரிஸ்பா, சவுலின் வைப்பாட்டியாக இருந்தவள். இஸ்பொசேத்து அப்னேரை நோக்கி, என் தந்தையின் வைப்பாட்டியோடு நீ என்ன உறவு கொண்டாய்? என்று கேட்டான்.
8.     இஸ்பொசேத்தின் கேள்வி அப்னேருக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. நான் என்ன யூதாவுக்கு வாலாட்டும் நாயா? என் தந்தை சவுலின் வீட்டாருக்கும் அவருடைய சகோதரர் நண்பர்களுக்கும் இன்று நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறேன். தாவீதின் கைகளில் நான் ஒப்புவிக்கவில்லை. நீயோ, இன்று ஒரு பெண்ணைக் குறித்து குற்றம் சாட்டுகிறாய்!
9.     தாவீதுக்கு கடவுள் ஆணையிட்டுக் கூறியவாறே சவுலின் வீட்டிலிருந்து என்னை மாற்றச் செய்து, தாணிலிருந்து பெயேர்! செபா வரை இஸ்ரயேல் மீதும் தாவீதின் அரியணையை நிறுவவில்லையென்றால்,
10.     கடவுள் அப்னேருக்கு உரியதும் கொடுமைத்தனமாய் தண்டனையை அளிப்பாராக! என்று அப்னேர் கூறினான்.
11.     இஸ்பொசேத்து அப்னேருக்கு அஞ்சியதில் மறுமொழி எதுவும் பேசவில்லை.
12.     பிறகு அப்னேர் தன் சார்பாக தாவீதிடம் தூதனுப்பி நாடு யாருடையது? என்னோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். அனைத்து இஸ்ரயேலையும் உம்மிடம் கொண்டுவர, எனது கை உம்மோடு இருக்கட்டும் என்று கூறினான்.
13.     தாவீது நல்லது உன்னோடு நான் உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால் உன்னிடமிருந்து நான் ஒன்று கேட்கிறேன்: அதாவது நீ என்னுடன் வரும் போது சவுலின் மகள் மீக்காலை கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே என்று மறுமொழி கூறினான்.
14.     அதற்குபின் தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோலை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மீக்காலை எனக்குக் கொடு என்ற கேட்டார்.
15.     இஸ்பொசேத்து ஆளனுப்பி அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்து கொண்டுவரச் செய்தான்.
16.     அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான். அங்கே அப்னேர் அவனிடம் திரும்பிச் செல் என்றான்: அவனும் திரும்பிச் சென்றான்.
17.     அப்னேர் இஸ்ரயேலின் பெரியோர்களிடம் இவ்வாறு பேசினான்: தாவீது உங்கள் மீது ஆட்சி செய்ய வேண்டுமென்று கடந்த சில நாள்களாக நீங்கள் விரும்பிக் கொண்டிருந்தீர்கள்.
18.     இப்போது அதை நிலை நாட்டுங்கள்: ஏனெனில் ஆண்டவர் தாவீதிடம் என் ஊழியன் தாவீதின் கையால் என் மக்கள் இஸ்ரயேலை பெலிஸ்தியரிடமிருந்து அவர்களின் அனைத்து எதிரிகளிடமிருந்தும் நான் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.
19.     அப்னேர் பென்யமினரோடு தனியாகப் பேசியப்பின், எபிரோனுக்குச் சென்று இஸ்ரளேலுக்கும் பென்யமின் வீட்டாருக்கும் நல்ல தெனப்பட்ட அனைத்தையும் திடம் எடுத்துக் கூறினான்.
20.     ஆப்னேர் இருபது ஆள்களோடு தாவீதைக் காண எபிரோன் வந்தான். அப்னேருக்கும் அவரோடு இருந்த ஆள்களுக்கும் தாவீது விருந்து படைத்தார்.
21.     பிறகு அப்னேர் தாவீதிடம், நான் எழுந்து சென்று அனைத்து இஸ்ரயேலையும் அரசரும் என் தலைவருமாகிய உமக்கு முன் ஒன்று திரட்டி வருகிறேன். அவர்கள் உம்மோடு உடன்படிக்கை செய்து கொள்ளட்டும், நீரும் உம் விருப்படி ஆட்சி செய்யலாம். என்று கூறினான். தாவீது அப்னேரை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்றான்.
22.     அப்போது தாவீதின் பணியாளர்களும் யோவாபும் கொள்ளையடித்து திரும்பினர். தங்களோடு மிகுதியான கொள்ளைப் பொருள்களைக் கொண்டுவந்தனர். அச்சமயம் அப்னேர் தாவீதோடு எபிரோனில் இல்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே வழியனுப்ப்பட்டு பாதுகாப்புடன் சென்றுவிட்டான்.
23.     யோவாபும் படைவீரர் அனைவரும் வந்தபோது, நேரின் மகன் அப்னேர் தாவீதிடம் வந்தான். அவர் அவனை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்று விட்டான் என்று யோவாபிடம் கூறப்பட்டது.
24.     யோவாபு அரசனிடம் சென்று, நீர் என்ன காரியம் செய்தீர்! அப்னேர் உன்னிடம் வந்தானல்லவா? நீர் ஏன் அவரை போகவிட்டீர்? அவனும் சென்று விட்டானே!
25.     நேரின் மகன் அப்னேர் உனக்கு தெரியும். உமது போக்குவரத்தையும் நீர் செய்வது அனைத்தையும் அறிந்து கொண்டு உம்மை ஏமாற்றவே அவன் வந்தான் என்றான்.
26.     யோவாபு தாவீதைவிட்டுச் சென்று அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருவிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது.
27.     அப்னேர் எபிரோனுக்கு திரும்பி வந்ததும் யோவாபு அவனிடம் தனிமையில் பேசுவதற் கென ஒதுக்கமாக அவனை வாயில் மையத்திற்கு அழைத்துச் சென்றான். தன் சகோதரன் அசாவேலின் இரத்தத்திற்காக அவன் வாயில் குத்த, அவன் இறந்தான்.
28.     பிறகு தாவீது அதை கேள்வியுற்ற போது, நேரின் மகன் அப்னேரின் இரத்தத்தின் மட் டில் நானும் என் அரசர் ஆண்டவர் முன்பு என்றென்றும் குற்றமற்றவர்.
29.     யோவாபின் தலைமீதும், அவன் தந்தையின் வீட்டார் மீதும் அது விழட்டும். இரத்த கசிவு உடையவனோ, தொழுநோயாளியோ, அண்ணகனோ, வாளால் மடிபவனோ, உணவுக்காகத் தவிப்பனோ, யோவாபின் குடும்பத்தில் இல்லாமல் போகமாட்டார்கள். என்றார்.
30.     தங்கள் சகோதரர் அசாவேலைக் கிபியோனில் நடந்த போரில் அப்னேர் கொன்றத்தற்காக யோவாபும் அவன் சகோதரன் அவிசாயும் அவனைக் கொன்றார்கள்.
31.     உங்கள் உடைகளை கிழித்துக் கொள்ளுங்கள். சாக்கு உடைகளை அணியுங்கள்: அப்னேருக்காகப் புலம்புங்கள் என்று தாவீது யோவாபுக்கும் அவனோடு இருந்த அனைத்து மக்களுக்கும் கட்டளையிட்டார். பாடையின் பின்னால் அரசர் தாவீது நடந்து சென்றார்.
32.     அப்னேரை எபிரோனில் அடக்கம் செய்தார்கள். அப்னேரின் கல்லறையருகே
33.     அரசர் இவ்வாறு கூறி அழுதார்: மூடன் மடிவதுபோல் அப்னேர் மடியவேண்டுமா?
34.     கைகள் விலங்கிடப்படவில்லை: உன் பாதங்கள் கட்டப்படவில்லை: தீயோர் முன் வீழ்பவன் போல், நீயும் வீழ்ந்தாயே! மீண்டும் அனைத்து மக்களும் அவனுக்காக புலம்பினார்கள்.
35.     பிறகு மக்கள் அனைவரும் தாவீதிடம் வந்து பகலாக இருக்கும் போதே உண்ணும் படி அவரைத் தூண்டினர். கதிரவன் மறைவதற்குள் நான் உணவையோ வேறு எதையோ சுவைத்தேனாகில், கடவுள் தக்கவாறு அதற்கு மேலும் என்னைத்தண்டிப்பாராக! என்று தாவீது ஆணையிட்டுக் கூறினார்கள்.
36.     மக்கள் அனைவரும் இதைக் கேட்டார்கள். அவர்களுக்கு அது நல்லதெனபட்டது. அரசன் செய்ததெல்லாம் மக்களுக்கு நல்லதெனப்பட்டது.
37.     நேரின் மகன் அப்னேரின் கொலையில் அரசருக்கு பங்கில்லை, என்று மக்கள் அனைவருக்கும் அனைத்து இஸ்ரயேலுக்கும் தெரிய வந்துள்ளது.
38.     மேலும் அரசர் தம் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்: இன்று இஸ்ரயேலில் தலைவனும் உயர்குடிமகனுமான ஒருவன் மடிந்துவிட்டான் என்று நீங்கள் அறியீரோ?
39.     நான் அரசனாய் திருப்பொழிவு செய்யபட்டும் இன்று வலுவிழந்தனவாய் இருக்கிறேன்! செரூபாவின் புதல்வர்களான இவர்கள் என்னைவிட வலியவர் ஆகிவிட்டனர்! தீங்கிழைப்பவனுக்கு அவன் தீங்கிற்கு ஏற்ப ஆண்டவர் தண்டனை வழங்கட்டும்.

அதிகாரம் 4.


1.     அப்னேர் எபிரோனில் இறந்ததை கேட்டதும் சவுலின் மகன் இஸ்பொசேத்து நிலைக்குலைந்தான். அனைத்து இஸ்ரயேலும் கலங்கியது.
2.     சவுலின் மகனிடம் இரண்டு படைத்தலைவர்கள் இருந்தனர். ஒருவன் பெயர் பானா: மற்றவன்பெயர் இரோக்காபு. பென்யமின் குலத்தைச் சார்ந்த பெயரோத்தில் வாழும் ரிம்மோன் என்பவனின் புதல்வர்கள் இவர்கள். பெயரோத்தும் பென்மினியரைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது.
3.     பெயரோத்தியர் கித்தாயிமுக்குத் தப்பியோடி இந்நாள்வரை அங்கே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
4.     சவுலின் மகன் யோனத்தானுக்கு மெபிபொசேத்து என்ற மகன் ஒருவன் இருந்தான். இஸ்ரயேலிலிருந்து, சவுல் யோனத்தான் பற்றிய செய்தி வந்தபோது அவனுக்கு வயது ஜந்து. அவனுடைய செவிலித் தாய் அவனைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடுகையில் விரைந்து சென்றதால், அவன் கீழே விழுந்து கால் முடமானவன்.
5.     பெயரோத்தைச் சார்ந்த ரிம்மேனின் புதல்வர்களான இரோக்கபும் பானாவும் உச்சிவேளையில் இஸ்பொசேத்தின் வீட்டுக்கு வந்தார்கள். நண்பகல் வேளையில் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
6.     கோதுமை கொண்டு செல்பவர்கள் போல் நடுவீட்டிற்கு வந்து, அவனது வயிற்றில் ஊடுருவக் குத்திவிட்டு, இரோக்காபும் அவனுடைய சகோதரன் தப்பிவிட்டார்கள்.
7.     இவ்வாறு அவர்கள் வீட்டினுள் நுழைந்து, தன் படிக்கை அறையில் கட்டினில் படுத்திருந்த போது அவனை ஊடுருவக் குத்திக் கொன்று தலையை வெட்டினார்கள். அத்தலையை எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் அராபா வழியாகப் பயணம் செய்தார்கள்.
8.     இஸ்பொசேத்தின் தலையை எபிரோனில் இருந்த தாவீதிடம் கொண்டு வந்தார்கள். உமது உயிரை பறிக்கத் தேடிய உம் எதிரி சவுலின் மகன் இஸ்பொசேத்தின் தலை இதோ! ஆண்டவர் தலைவராம் அரசர் சார்பாக சவுலையும் அவனுடைய வாரிசையும் பழிவாங்கி விட்டார் என்று அவர்கள் கூறினார்கள்.
9.     பெயரோத்தைச் சார்ந்த ரிம்மோனின் புதல்வர்களான இரோக்காபையும் அவனுடைய சகோதரன் பானாவையும் நோக்கி தாவீது இவ்வாறு கூறினார்கள். அனைத்து துயரங்களினின்றும் என்னை விடுவித்த ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு சொல்கிறேன்.
10.     இதோ சவுல் இறந்து விட்டான் என்று எனக்குச் சொல்ல வந்தான், தான் நற்செய்தி கொண்டு வந்தவனாகவே இருந்தான். நானோ அவனை பிடித்துச் சிக்லாவில் கொன்றேன். அவனுக்கு நான் வெகுமதியாகக் தந்தது அதுவே.
11.     இப்பொழுது குற்றமற்றவனைத் தீயவர்கள் அவன் வீட்டிலே அவனது படுக்கையிலே கொன்று விட்டார்கள். அவனது இரத்தத்தை சிந்திய பழிக்கு ஈடாக உங்களை நான் உலகினின்றே அழித்துவிடமாட்டேனோ?
12.     தாவீது ஆணையிட்டு அவர்தம் பணியாளர் அவர்களை கொன்றனர்: கைகளையும் கால்களையும் வெட்டியபின் அவர்களை எபிரோன் குளத்தருகே தொங்கவிட்டனர்: இஸ்பொசேத்தின் தலையை எடுத்து எபிரோனில் அப்னேரின் கல்லறைக்கு அருகே புதைத்தனர்.

அதிகாரம் 5.


1.     இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள்.
2.     சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்: நீயே இஸ்ரயேலுக்கு தலைமைதாங்குவாய் என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.
3.     இஸ்ரயேலின் பெரியோர்கள் அனைவரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு எபிரோனில் உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதை திருப்பொழிவு செய்தார்கள்.
4.     முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
5.     எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல் யூதாவை மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார்.
6.     அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்ற போது, அவர்கள் தாவீதை நோக்கி, நீர் இங்கே வர முடியாது. பார்வையற்றவரும் முடவரும் கூட உம்மை அப்புறப்படுத்திவிடுவார்கள் அதாவது இங்கே தாவீது வர முடியாது என்றார்.
7.     இருப்பினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீது நகர்.
8.     அன்று தாவீது, எபூசியரைத் தாக்குகின்றவர்கள் குடைகால்வாய் வழியே தாவீது உளமார வெறுக்கும் முடவரையும் பார்வையற்றவரையும் கைப்பற்றட்டும் என்று கூறினார். ஆகவே, பார்வையற்றவரும் முடவரும் கோவிலுனுள் நுழையலாகாது என்று கூறப்பட்டது.
9.     தாவீது கோட்டையில் தங்கி, அதற்கு தாவீது நகர் என்று பெயரிட்டார். மில்லோவிலிருந்து உட்புறமாக தாவீது சுற்றிலும் மதில் எழுப்பினார்.
10.     தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.
11.     தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும், கேதுரு மரங்களோடு தச்சர், கொத்தர்களையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனை கட்டினர்.
12.     ஆண்டவர் தம்மை இஸ்ரயேலின் அரசராக தம்மை நியமித்தார் என்றும் தம் மக்கள் இஸ்ரயேலுக்காகவே அவர் தம்மை உயர்த்தினார் என்றும் தாவீது உணர்ந்தார்.
13.     எபிரோனை விட்டு வந்ததும் தாவீது மேலும் பல வைப்பாட்டியரையும் மனைவியரையும் எருசலேமில் தேர்ந்தெடுத்தார். மேலும் பல புதல்வர்களும் புதல்வியரும் தாவீதுக்குப் பிறந்தனர்.
14.     எருசலேமில் அவருக்குப் பிறந்தவர்களின் பெயர்களாவன: சம்மூவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,
15.     இப்கார், எலிசுவா, நேபேகு, யாபியா,
16.     எலிசாமா, எலயாதா, எலிப்பலேற்று.
17.     தாவீது இஸ்ரயேலின் அரசராக திருப்பொழிவு செய்யப்பட்டார் என்று கேட்டதும் பெலிஸ்தியர் அனைவரும் தாவீதை பிடிப்பதற்கு புறப்பட்டுச் சென்றனர். தாவீது அதைக் கேட்டதும் கோட்டைக்குள் புகுந்துவிட்டார்.
18.     பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.
19.     பெலிஸ்தியருக்கு எதிராக நான் செல்லட்டுமா? நீர் அவர்களை என் கையில் ஒப்புவிப்பீரா? என்று தாவீதிடம் ஆண்டவர் கேட்டார். சொல், உறுதியாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்புவிப்பேன் என்று ஆண்டவர் தாவீதிடம் கூறினார்.
20.     தாவீது பாபால் பெராட்சிம்வரை வந்து அவர்களை தோற்கடித்தார். தகர்த்தெறியும் வெள்ளம் போல் ஆண்டவர் என் எதிரிகளை உன் கண்முன்னே தகர்த்தெறிந்தார் என்ற தாவீது கூறினார். ஆகவே தான் இந்த இடம் பாகால் பெராட்சியம் என்று அழைக்கப்படுகிறது.
21.     பெலிஸ்தியர் தங்களை தெய்வச்சிலைகளை விட்டு செல்ல, தாவீதும் அவர்தம் ஆள்களும் அவற்றை எடுத்துச் சென்றனர்.
22.     பெலிஸ்தியர் மீண்டும் எதிர்த்து வந்து இராபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.
23.     தாவீது ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, நீ எதிர்த்துச் செல்ல வேண்டாம். சுற்றி வளைத்து அவர்கள் பின்னால் சென்று, முசுக்கொட்டை மரங்களுக்கு எதிரில் அவர்களை அணுக வேண்டும்.
24.     முசுக் கொட்டை மரங்களுக்கு மேல் அணி வகுப்புப் பேரொலி ஒலிக்கும் போது நீ தயாராக இருக்கவேண்டும். ஏனெனில் அப்போது ஆண்டவர் பெலிஸ்தியர் படைகளை தாக்குவதற்காக உனக்கு முன்பாக செல்கிறார் என்று ஆண்டவர் கூறினார்.
25.     ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டவாறே தாவீது சென்று, பெலிஸ்தியரை கெபா முதல் பெசேர் வரை தாக்கினார்.

அதிகாரம் 6.


1.     தாவீது அனைத்து இஸ்ரயேலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம் பேரை மீண்டும் என்று திரட்டனார்.
2.     தாவீது அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர பாலை யூதாவுக்குச் சென்றனர். இது கெருபுகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் பெயரால் ஆண்டவர் அழைக்கப்படுகிறது.
3.     குன்றின் மீது இறந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை ஒரு புதிய வண்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள். அபினதாபின் புதல்வர்கள் உசாவும் அகியோவும் அப் புது வண்டியை நடத்திவந்தார்கள்.
4.     குன்றின் மீது இறந்த அபினதாபின் இல்லத்திலிருந்து அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்தார்கள். அகியோ பேழைக்கு முன்னால் சென்றார்.
5.     தாவீது இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் தேவதாரு மரத்தாலான இசைக்கருவிகளோடு, யாழ், வீணை, சுரமண்டலம், மேளம், தாளம் ஆகியவற்றோடும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தார்கள்.
6.     அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்தபோது காளைமாடுகள் மிரள, உசா கடவுளின் பேழையை தாக்கிப் பிடித்தான்.
7.     அப்போது உசாவுக்கு எதிராக ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. கடவுள் அவனது தவற்றுக்காக அங்கேயே அவனை வீழ்த்தினார். அவன் கடவுலின் பேழைக்கருகே இறந்தான்.
8.     ஆண்டவர் சினமுற்று உசாவைத் திடீரெனத் தாக்கியதால் தாவீது மனவேதனை அடைந்தார். இந்நாள் வரை பெரேசு உசா என்று அழைக்கப்பட்டது.
9.     அன்று தாவீது ஆண்டவருக்கு அஞ்சி, இத்தகைய பேழையை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்வேன்? என்று வினவினார்.
10.     எனவே, ஆண்டவரின் பேழையைத் தாவீதின் நகருக்குத் தம்மோடு எடுத்துச் செல்ல அவர் விரும் பவில்லை. கித்தியான ஓபோது ஏதோமின் இல்லத்திற்கு அதை திருப்பிவிட்டார்.
11.     ஆண்டவரின் பேழை கித்தியான ஓபோது ஏதோமின் மூன்று மாதங்கள் தங்கிற்று. ஆண்டவர் ஓபோது ஏதோமுக்கும் அவன் வீட்டார் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.
12.     ஆண்டவரின் பேழையை முன்னிட்டு ஓபோது ஏதோமின் வீட்டாருக்கும் அவனுக்குரிய அனைத்துக்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார் என்று அரசர் தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபோது ஏதோமின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார்.
13.     ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்தும் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாவையையும் பலியிட்டார்.
14.     நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோதை அணிந்து கொண்டு, தாவீது தம் முழுவலிமையோடு ஆண்டவர் முன்பாக நடமாடிக் கொண்டிருந்தார்.
15.     தாவீது இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத் தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
16.     ஆண்டவரின் பேழை தாவீதின் நகரை அடைந்த போது சவுலின் மகள் மீக்கால் பலகணி வழியாகப் பார்த்தாள். அரசர் தாவீது முன்பு ஆடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் தன் உள்ளத்தில் வெறுத்தாள்.
17.     ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார்.
18.     எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியப்பின் தாவீது படைகளின் ஆண்டவரின் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார்.
19.     பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை உள்ள அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப்பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்கு சென்றனர்.
20.     தாவீது தம் வீட்டாருக்கு ஆசி வழங்க வந்தார். அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழட்டுவது போல, இஸ்ரயேலின் அரசர் தன் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமைக் கொண்டாரே! என்று ஏளனம் செய்தாள்.
21.     ஆண்டவரின் மக்கள் மீதும் இஸ்ரயேல் மீதும் தலைவனாக இருக்குமாறு உன் தந்தையும் அவர் தம் வீட்டாரையும் ஒதுக்கிட்டு, என்னைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன்: இன்னும் ஆடுவேன்.
22.     நான் என்னை இன்னும் என்னைக் கடையவனாக்கிக் கொள்வேன்: நீ குறிப்பிட்ட பெண்களுக்கு முன்பா நான் பெருமை அடைவேன் என்று தாவீது மீக்காலிடம் கூறினார்.
23.     சவுலின் மகள் மீக்காலுக்குச் சாகும் வரை குழந்தைப் பேறு கிட்டவில்லை.

அதிகாரம் 7.


1.     அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்.
2.     அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார்.
3.     அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார்.
4.     அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது.
5.     நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தாக்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா?
6.     இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்ததும் இந்நாள் வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை: மாறாக ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடாய் இருந்தது.
7.     இஸ்ரயேல் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன் அவர்களுள் எவரிடமாவது எனக்காக கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாததேன்? என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பானோ?
8.     எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்.
9.     நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன்.
10.     எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்.
11.     அனைவரின் தொல்லைகளினின்றும் எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.
12.     வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.
13.     எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன்.
14.     நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.
15.     முன்பாக நான் சவுலை விலக்கியது போல, என் பேரன்பினின்றும் அவனை விலக்கமாட்டேன்.
16.     முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!
17.     மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.
18.     பின் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழி நடத்தி வந்தமைக்கும், நான் யார்? என் குடும்பம் யாது?
19.     இருப்பினும் என் தலைவராம், ஆண்டவரே உம் திருமுன் இது சிறிது, உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே மனித வழக்கம் இது வல்லவே!
20.     தாவீது மேலும் உன்னிடம் என்ன கூற முடியும்? என் தலைவராம் ஆண்டவரே! உம் ஊழியனைப் பற்றி உமக்கே தெரியும்.
21.     உம் ஊழியன் அறிந்து கொள்ளட்டும் என்று உம் வார்த்தையை முன்னிட்டும் உம் இதயத்திற்கு ஏற்பவும் மாபெரும் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளீர்.
22.     ஆகவே என் தலைவராம் ஆண்டவரே! எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி நீர் மகத்தானவர்: வேறு எவரும் இலர்: உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.
23.     உம் மக்கள் இஸ்ரயேலைப் போல் வேறு யார் உளர்? அவர்கள் உம் மக்களாக்கிக் கொள்ளுமாறும் உம் பெயர் விளங்குமாறும் கடவுளாகிய நீரே சென்று உலகின் ஒப்பற்ற அந்த இனத்தை மீட்டு, அவர்களுக்காக வியத்தகு அருஞ்செயல்கள் புரிந்தீர்! எகிப்து நாட்டினின்றும் வேற்று இனங்களினின்றும் அவர்களின் தெய்வங்களினின்றும் நீரே உம் மக்களை மீட்டீர்!
24.     என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலை நீர் உமக்கு உரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்!
25.     ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் உமது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதி மொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்!
26.     உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள் என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.
27.     ஏனெனில் படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன் என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத்தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத்துணிவு ஏற்பட்டது.
28.     தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியவனுக்கு அருளியவர் நீரே!
29.     உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள் கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியன் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!

அதிகாரம் 8.


1.     இதன் பிறகு தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தினார். மெதகம்மாவை தாவீது பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.
2.     அவர் மோவாபியரையும் தோற்கடித்தார். அவர்களை தரையில் படுக்கச் செய்து நூலால் அளந்து இருபகுதியினரைக் கொன்று ஒரு பகுதியினரை வாழவிட்டார். மோவாபியர் தாவீதின் அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.
3.     மேலும் யூப்பரத்தீசு நதியருகே தனது ஆட்சியை மீண்டும் அமைக்கச் சென்ற சோபா மன்னன் இரகோபின் மகன் அத்தேசரையும் தாவீது தோற்கடித்தார்.
4.     தாவீது அவனிடமிருந்து ஆயிரத்து எழுநூறு குதிரை வீரர்களையும், இருபதாயிரம் காலாள் படையினரையும் சிறைப்பிடித்தார். நூறு தேர்களுக்குத் தேவையானவற்றைத்தவிர மீதியான தேர்க்குதிரைகளைத் தாவீது நரம்பறுக்கச் செய்தார்.
5.     தமஸ்கு நாட்டுச் சிரியர்கள் சோபா மன்னன் அத்தேசருக்கு உதவவந்தபோது, இருபத்து இரண்டாயிரம் பேரைக் கொன்றார்.
6.     பிறகு தமஸ்கு நகரின் ஆராம் பகுதியில் தாவீது படைத்தளங்களை அமைத்தார். சிரியா நாட்டினர் தாவீதின் அடிமைகளாகி அவருக்கு கப்பம் கட்டினர். தாவீது சென்ற இடமெல்லாம் அவருக்கு சிறப்பு அளித்தார்.
7.     அத்தேசரின் பணியாளர் தாங்கிச் சென்ற பொற் கேடயங்களைத் தாவீது கைப்பற்றி அவற்றை எருசலேமுக்கு கொண்டு வந்தார்.
8.     அத்தேசரின் நகர்களான பெற்றகுவிலிருந்து, பெரோத்தாவிலிருந்தும் தாவீது மிகுதியான வெண்கலத்தைக் கொண்டு வந்தார்.
9.     அத்தேசரின் அனைத்துப் படையையும் தாவீது முறியடித்ததை ஆமாத்து மன்னன் தோயி கேள்வியுற்றான்.
10.     உடனே அவன் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பி அவரை வாழ்த்திப் பாராட்டினான்: ஏனெனில் தோயி அத்தேசரைத் தோற்கடித்திருந்தான். யோராம் தன்னோடு வெள்ளி, பொன், வெண்கலத்தால் ஆகிய பொருள்களைக் கொண்டு வந்தான்.
11.     இவற்றையும் தாம் தோற்கடித்த அனைத்து நாடுகளின் வெள்ளி, பொன்னையும் தாவீது அரசர் ஆண்டவருக்கு காணிக்கையாக்கினார்.
12.     அந்நாடுகளாவன: ஏதோம், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர், சோபாவின் மன்னன் அத்தேசரிடமிருந்து எடுத்த கொள்ளைப் பொருளையும் காணிக்கையாக்கினார்.
13.     தாவீது உப்புக் கணவாயில் பதினெட்டாயிரம் ஏதோமியரை முறியடித்துத் திரும்பியபின் அவருக்கு பெரும் புகழ் உண்டாயிற்று.
14.     அவ+ ஏதோம் முழுவதும் படைத்தளங்களை அமைத்தார். ஏதோமியர் அனைவரும் அவருக்கு கப்பம் கட்டலாயினர். தாவீது எங்குச் சென்றாலும் அவருக்கு ஆண்டவர் வெற்றி அளித்தார்.
15.     தாவீது அனைத்து இஸ்ரயேல் மீதும் ஆட்சிப்புரிந்து நீதியும் நேர்மையும் விளங்கச் செய்தார்.
16.     செரூயாவின் மகன் யோவாபு படைத்தலைவராகவும் அகிலூதின் மகன் யோசபத்து ஆவணக் காப்பளராகவும்
17.     அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தார் மகன் அகிமெலக்கும் குருக்களாகவும், செராயா செயலாரகவும் பணியாற்றினார்.
18.     யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் மேலாளராக இருந்தார். தாவீதின் புதல்வர்கள் குருக்களாக இருந்தார்கள்.

அதிகாரம் 9.


1.     யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கும் நான் கருணைக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா? என்று தாவீது கேட்டார்.
2.     சவுலின் வீட்டைச் சார்ந்த சீபா என்ற ஓர் பணியாளன் இருந்தான். அவனை தாவீதிடம் கூட்டிச் சென்றனர். நீ தான் சீபாவா? என்று அரசர் அவனிடம் கேட்க, அடியேன் தான் என்று அவன் பதிலளித்தான்.
3.     கடவுளின் கருணையை நான் சவுலின் வீட்டாருக்குக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா? என்று அரசர் கேட்டார். யோனத்தானின் இருகால் ஊனமுற்ற மகன் ஒருவன் இருக்கிறான் என்று அரசனிடம் சீபா பதிலளித்தான்.
4.     எங்கே அவன்? என்று அரசர் அவனிடம் கேட்க, லோதாபாரில் அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான் என்று அரசனிடம் சீபா கூறினான்.
5.     லோதாபாருக்கு ஆளனுப்பி அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டிலிருந்த அவனை அரசர் தாவீது கொண்டு வரச் செய்தார்.
6.     சவுலின் புதல்வனான யோனத்தானின் மகன் மெபிபொசேத்து தாவீதிடம் வந்து முகம் குப்புற வீழ்ந்து வணங்கினான். மெபிபொசேத்து என்று தாவீது அழைக்க, இதோ! உம் அடியான் என்று அவன் பதிலிறுத்தான்.
7.     தாவீது அவனிடம் அஞ்சாதே! உன் தந்தை யோனத்தானின் பொருட்டு நான் உனக்க கருணை காட்டுவது உறுதி, உன் மூதாதை சவுலின் நிலம் அனைத்தையும் உனக்க மீண்டும் கிடைக்கச் செய்வேன். நீ எப்போதும் என்னுடன் உணவருந்துவாய் என்று கூறினார்.
8.     அவன் வணங்கி, நான் செத்த நாய் போன்ற பணியாளன்: நீர் என்னைக் கடைக்கண் பார்ப்பதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது? என்றான்.
9.     பிறகு அரசர் சவுலின் பணியாளன் சீபாவை அழைத்து சவுலுக்கும் அவர் தம் அனைத்து வீட்டாருக்கும் உரியதெல்லாம் நான் உன் தலைவரின் பேரனுக்கு அளித்துவிட்டேன்.
10.     தலைவரின் பேரன் உண்பதற்காக நீயும், உன் பிள்ளைகளும், உன் பணியாளரும் அவனுக்காக நிலத்தை உழுது விளைச்சலைக் கொண்டு வருவீர்கள். ஆனால் உன் தலைவரின் பேரன் மெபிபோசேத்து எப்போதும் உன்னுடன் உணவருந்துவான் என்று கூறினார்.
11.     தலைவராம் அரசர் தம் பணியாளனுக்கு இட்ட கட்டளைபடியே உம் பணியாளனும் செய்வான் என்று அரசரிடம் சீபா கூறினான். இளவரசர்களில் ஒருவரைப் போலவே மெபிபொசேத்து தாவீதுடன் உணவருந்தி வந்தான்.
12.     மெபிபொசேத்துக்கு மீக்கா என்ற ஓர் இளம் மகன் இருந்தான். சீபாவின் வீட்டைச் சார்ந்த அனைவரும் மெபிபொசேத்து பணியாளராக இருந்தனர்.
13.     இரு கால் ஊனமான மெபிபொசேத்து அரசருடன் தொடர்ந்து உணவருந்திவந்தான், எனவே எருசலேமிலேயே தங்கியிருந்தான்.

அதிகாரம் 10.


1.     இதன் பிறகு அம்மோனியரின் மன்னன் இறந்தான். அவனுக்குப் பதிலாக அவன் மகன் ஆனூன் அரசாண்டான்.
2.     நாகாசின் மகன் ஆனூனுடன் நான் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொள்வேன்: ஏனெனில் அவன் தந்தையும் என்னோடு அவ்வாறே நடந்து கொண்டார் என்று தாவ¤து கூறனார். அவனுடைய தந்தையை குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்ல தாவீது தம் பணியாளரை அனுப்பினார். தாவீதின் பணியாளரும் அம்மோனியர் நாட்டுக்கு சென்றார்.
3.     ஆறுதல் கூறுமாறு ஆள்களை அனுப்பியதால் தாவீது உம் தந்தையை மேம்படுத்துகிறா என்று நினைக்கிறாயா? நகரைக் கண்டு வேவுபார்த்து அதை அழிக்கவன்றோ உன்னிடம் தாவீது தம் பணியாளரை அனுப்பியுள்ளார்! என்று ஆனூனிடம் அம்மோனியத் தலைவர்கள் கூறினார்கள்.
4.     எனவே ஆனூன் தாவீதின் பணியாளரை பிடித்து அவர்களுடைய தாடியில் ஒரு பகுதியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை கத்திரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.
5.     இது தாவீதுக்க அறிவிக்கப்பட, அவரும் தம் பணியாளரை சந்திக்க ஆளனுப்பினார். உங்கள் தாடிகள் வளரும் வரை எரிகோவில் தங்கி பிறகு திரும்புங்கள் என்ற அரசர் சொல்லியனுப்பினார். ஏனெனில் அவர்கள் மிகவும் அவமானப்பட்டிருந்தனர்.
6.     அம்மோனியர் தாங்கள் தாவீதின் வெஞ்சினத்திற்கு உள்ளானதைக் கண்டனர். அவர்கள் ஆளனுப்பி பெத்ரகோபிலிருந்து சோபாவிலிருந்தும் இருபதாயிரம் காலாள் படையினரையும், மாக்கா நாட்டு அரசரோடும் ஆயிரம் ஆள்களோடும் தோபிலிருந்து பன்னீராயிரம் ஆள்களையும் கூலிக்கு அமர்த்தினர்.
7.     தாவீது இதைக் கேட்டு, யோவாபையும் வலிமை மிகு வீரர் அனைவரையும் அனுப்பினார்.
8.     அம்மோனியர் புறப்பட்டு வந்து நுழைவாயில் அருகே போருக்காக அணிவகுத்தனர். சோபாவிலிருந்தும் இரகோபிலிருந்தும் வந்த சிரியர்களும் தோபையும் மாக்காவையும் சார்ந்த ஆள்களும் திறந்த வெளியில் தனியாக இந்தனர்.
9.     தனக்கு எதிராக முன்னும் பின்னும் போரணிகள் இருந்ததைக் கண்ட யோவாபு இஸ்ரயேலின் வலிமை மிகு வீரருள் சிலரைத் தேர்ந்தெடுத்து சிரியருக்கு எதிராக நிறுத்தினார்.
10.     மீதியானவரைத் தம் சகோதரன் அபிசாயின் பொறுப்பில் ஒப்படைத்தார்: அவன் அவர்களை அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.
11.     மேலும் யோவாபு சிரியர் என்னை மேற்கொள்வதாக இருந்தால், நீ எனக்கு உதவ வரவேண்டும்.
12.     நம் மக்களுக்காகவும் நம் கடவுளின் நகர்களுக்காகவும் நாம் வீறுகொண்டு போரிடுவோம், ஆண்டவர் தம் விருப்பப்படி செய்யட்டும் என்று கூறினார்.
13.     யோவாபும் அவரோடு இருந்தவர்களும் சிரியருக்கு எதிராகப் போரிடுமாறு அணிவகுத்துச் சென்றனர்: சிரியர் புறமுதுகு காட்டி ஓடினர்.
14.     சிரியர் தப்பியோடியதைக் கண்ட அம்மோனியரும் அபிசாயிடமிருந்து தப்பியோடி நகருக்குள் வந்தனர். அம்மோனியருடன் போரிட்ட யோவாபு எருசலேமுக்கு திரும்பிவந்தார்.
15.     இஸ்ரயேலிடம் தாங்கள் தோற்றத்தைக் கண்ட சிரியர் மீண்டும் ஒன்றாக கூடினர்.
16.     அததேசர் ஆளனுப்பி யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் இருந்த சிரியரையும் திரட்டிக் கொண்டு வரச்செய்தான். படைத்தலைவனான சோபாக்கின் தலைமையில் அவர்கள் ஏலாமுக்கு வந்தனர்.
17.     தாவீது இதைக் கேட்டதும் இஸ்ரயேலையும் ஒன்று திரட்டி யோர்தானைக் கடந்து ஏலாமுக்கு வந்தார். சிரியர் தாவீதுக்கு எதிராக அணிவகுத்து அவரோடு போரிட்டனர்.
18.     சிரியர் இஸ்ரயேலருக்குமுன்பாக புறமுதுகாட்டி ஓடினர். சிரியருள் எழுநூறு தேர்வீரர்களையும், நாற்பதாயிரம் குதிரை வீரர்களையும் தாவீது கொன்றார். மேலும் படைத்தலைவன் சோபாக்கை அவர் வாளால் தாக்க அவனும் அங்கே மடிந்தான்.
19.     அததேசருக்குத் கப்பம் கட்டி வந்த மன்னர்கள் அனைவரும் இஸ்ரயேலிரிடம் தாங்கள் தோற்றத்தைக் கண்டு, அவர்களோடு சமாதானம் செய்து அவர்களுக்குப் பணிந்திருந்தனர். இதற்கு பின் சிரியர் அம்மோனியருக்கு உதவ அஞ்சினர்.

அதிகாரம் 11.


1.     இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இராபாவை முற்றுக்கையிட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.
2.     ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்ருந்தாள்.
3.     தாவீது அவளை யார் என்று கேட்க, ஆளனுப்பினார். அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா என்று கூறினர்.
4.     தாவீது தூதனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தம் இல்லம் சென்றாள்.
5.     அப்பெண் கருவுற்று தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.
6.     அப்பொழுது தாவீது இத்தியனான உரியவை என்னிடம் அனுப்பி வை என்று யோபாவுக்குச் செய்தி செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார்.
7.     உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார்.
8.     பிறகு தாவீது உரியாவிடம் உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக் கொள் என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.
9.     உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார். தம் வீட்டுக்குச் சென்றார்.
10.     உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்தும் அவரிடம் நீ நெடும் தொலைவிலிருந்தும் வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை? என்று கேட்டார்.
11.     அதற்கு உரியா தாவீதிடம் பேழையும் இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்கிளல் தங்கியிருந்தனர். என் தலைவர் யோவாபும் என் தலைவரின் பணியாளர்களும் திறந்த வெளியல் தங்கியிருக்கின்றனர். நான் மட்டும் என் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து என் மனைவியோடு இருப்பேனா? உம் மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யமாட்டேன் என்று சொன்னார்.
12.     தாவீது உரியாவிடம் இன்னும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பிவைக்கிறேன் என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார்.
13.     தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்கு குடிப்போதை யூட்டினார். தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார். தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.
14.     காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார்.
15.     அம்மடலில் அவர், உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டு பின்வாங்கு அவன் வெட்டுண்டு மடியட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
16.     யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது வலிமைமிகு எதிரிகள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார்.
17.     நகரின் ஆள்கள் புறப்பட்டு வந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவருள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.
18.     பிறகு யோவாபு போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் தாவீதுக்கு சொல்லி அனுப்பினார்.
19.     மேலும் அவர் தூதனுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அரசருக்கு சொல்லி முடிப்பதற்குள்
20.     அரசர் ஒரு வேளை வெகுண்டெழுந்து, உன்னிடம், நீங்கள் ஏன் நகரை அணுகிப் போரிட்டீர்கள்? அவர்கள் மதில்களினின்று தாக்குவார்கள் என அறியீரோ?
21.     எருபசத்தின் மகன் அபிமெலக்கை கொன்றது யார்? மதில் சுவரினின்று ஒரு எந்திரக் கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா? அவன் தேபேசில் இறந்துவிட்டானே? நீங்கள் ஏன் மதில்களை நெருங்கினீர்கள்? என்று கேட்டால், நீ உம் பணியாளன் இறந்து விட்டான் என்று சொல்.
22.     தூதன் புறப்பட்டுச் சென்று யோவு¡பு சொல்லியனுப்பிய அனைத்தையும் தாவீதிடம் கூறினான்.
23.     அந்த ஆள்கள் எங்களை மேற்கொண்டு எங்களுக்கு எதிராக திறந்த வெளிக்கு வந்தார். நாங்களோ நுழைவாயில்வரை அவர்களைத் துரத்தினோம்.
24.     அப்போது மதில் மேலிருந்து வில்வீரர் உம் பணியாளரைத் தாக்கினார். அரசரின் பணியாளருள் சிலர் இறந்தனர். இத்தியரான உம் பணியாளர் உரியாவும் இறந்துவிட்டார்.
25.     அப்போது தாவீது தூதனிடம் நீ யோவாபிடம் சென்று இதைப்பற்றி நீ கவலைப் படவேண்டாம். இங்கொருவனும் அங்கொருவனும் வாளுக்கு இரையாக்கின்றனர். நகருக்கு எதிராக இன்னும் கடுமையாகப் போர் புரிந்து அதை அழைத்து விடு என்று அவனை உற்சாகப்படுத்து என்றார்.
26.     உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதார்கள்.
27.     துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்கு கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.

அதிகாரம் 12.


1.     ஆண்டவர் நாத்தானைச் தாவீதிடம் அனுப்பினார்: நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: ஒரு நகரில் இரு மனிதர்கள் இருந்தனர். ஒருவன் செல்வன் மற்றவன் ஏழை.
2.     செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.
3.     ஏழையிடம் ஒரு ஆட்டுக் குட்டியைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்தும் நீர்குடித்து அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகனைப் போலவே அது இருந்தது.
4.     வழிப்போக்கான ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கானுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக் குட்டியை எடுத்து அந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்.
5.     உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு, ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்.
6.     இரக்கமின்றி அவன் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்கான நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும் என்று நாத்தானிடம் கூறினார்.
7.     அப்போது நாத்தான் தாவீதிடம், நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன். நான் உன்னைச் சவுலின் கையிலினின்று விடுவித்தேன்.
8.     தலைவரிடம் வீட்டையும் ஒப்படைத்தேன்: அவன் மனைவியரையும் உன் மனைவியர் ஆக்கினேன்: இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்: இது போதாதென்றால் நான் மேலும் உனக்கு மிகுதியாய் கொடுத்திருப்பேன்.
9.     பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் வார்த்தையில் தீங்கு செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இறையாக்கினாய், அவன் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்: அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்!
10.     இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது. ஏனெனில் இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்.
11.     இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் குடும்பத்தினின்றே நான் எனக்கு தீங்கை வர வழைப்பேன்: உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான்.
12.     நீ மறைவில் செய்ததை இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச் செய்வேன் என்று கூறினார்.
13.     அப்போது தாவீது நாத்தானிடம், நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன் என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், ஆண்டவர் பாவத்தை நீக்கிவிட்டார்.
14.     ஆயினும், ஆண்டவர் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்தால் உனக்கு பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான் என்று சொன்னார்.
15.     பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் தாவீதிற்கு பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.
16.     தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் படுத்துக்கிடந்தார்.
17.     அவர்கள் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்: அவருக்கோ விருப்பமில்லை: அவர்களோடு அவர்களும் உண்ணவில்லை.
18.     பின்பு ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததை தாவீதிடம் பணியாளர் சொல்ல அஞ்சினர். குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசிய போது அவர் நம் குரலுக்கு செவி கொடுக்கவில்லையே! குழந்தை இறந்து விட்டது நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ! என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
19.     பணியாளர்கள் தங்களுக்குள் இரகசியமாக பேசிக்கொண்டதைத் தாவீது கண்டு, குழந்தை இறந்து விட்டதை உணர்ந்து, தம் பணியாளரிடம் குழந்தை இறந்து விட்டதா? என்று கேட்க அவர்களும், ஆம் இறந்துவிட்டது என்று பதில் கூறினர்.
20.     உடனே தாவீது தரையினின்று எழுந்தார். குளித்