|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள்
Holy Bible - Old Testament
Book 9. Samuel-I
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 9. சாமுவேல் - முதல்
நூல்
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 2006.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
1. எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிரம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன்.
2. அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்: பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை
3. எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குக் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் இருந்தனர்.
4. எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு.
5. அன்னாவின் மீது அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தா+. ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார்.
6. ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார் அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள்.
7. இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது: அவர் ஆண்டவரின் இல்லம் வந்த போதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.
8. அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி அன்னா ந¨ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலானவன் அன்¥றோ? என்பார்.
9. ஒருநாள் அவர்கள் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி,ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
10. அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார்.
11. அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது: படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியேபடாது.
12. அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார்.
13. அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன: குரல் கேட்கவில்லை, ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார்.
14. ஏலி அவரை நோக்கி, எவ்வளவு காலம் நீர் குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து என்றார்,
15. அதற்கு அன்னா மறுமொழியாக, இல்லை உன் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண், திராட்சை இரசத்தையோ நான் அருந்தவில்லை, மாறாக, ஆண்டவர் திரு முன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்,
16. உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருதவேண்டாம், ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன் என்று கூறினார்.
17. பிறகு ஏலி, மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வா+ என்று பதிலளித்தார்,
18. அதற்கு அன்னா, உம் அடியாள் உம் கண்முன்னே அருள்பெறுவாளாக! என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவலேலை,
19. அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாந்தனர், ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார்,
20. உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுத்தார், நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன் என்று சொல்லி, அவர் அவனுக்குச் சாமுவேல் என்று பெயரிட்டார்.
20. எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனை¨யும் செலுத்தச் சென்றார்கள்,
22. ஆனால், அன்னா செல்லவில்லை, அவர் தம் கணவரிடம், பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்ச செல்வேன், அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான் என்று சொன்னார்.
23. அவர் கணவர் எல்கானா, உனக்குச் சிறந்தது எனப்படுவதைச் செய், பையன் பால் குடி மறக்கும் வரை இரு, ஆண்டவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்துவாராக! என்று அவரிடம் கூறினார், ஆகவே அவர் தங்கியிருந்து பால்குடி மறக்கும் வரை தம் மகனுக்குப் பாலூட்டி வந்தார்,
24. அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார், அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்,
25. அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்,
26. பின் அவர் கூறியது: என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே.
27. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன், நான் ஆண்டவரிடம் வ§ண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேகட்டருளினார்,
28. ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன், அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன், அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்,அதிகாரம் 2.
1. அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன்.
2. ஆண்டவரைப் போன்ற தூயவர் வேறு எவரும் இலர்! உம்மையன்றி வேறு எவரும் இலர்! நம் கடவுளைப் போன்ற வேறு பாறை இல்லை,
3. இறுமாப்புடன் இனிப்பேச வேண்டாம்! உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட வேண்டாம்! ஏனெனில், ஆண்டவர் அறிவின் இறைவன்! செயல்களின் அளவை எடை போடுபவர் அவரே!
4. வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5. நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர். பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தோர் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்!
6. ஆண்டவர் கொல்கிறார்: உயிரும் தருகின்றார்: பாதாளத்தில் தள்ளுகிறார்: உயர்த்துகின்றார்:
7. ஆண்டவர் ஏழையாக்குகிறார்: செல்வராக்குகின்றார்: தாழ்த்துகின்றார்: மேன்மைப்படுத்துகின்றார்:
8. புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்: குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்: உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை! அவற்றின் மேல் அவர் உலகை நிறுவினார்!
9. தம்மில் பற்றுக்கொண்டோர் காலடிகளை அவர் காப்பார்! தீயோர், இருளுக்கு இரையாவார்! ஏனெனில் ஆற்றலால் எவரும் வலியவர் ஆவதில்லை!
10. ஆண்டவரை எதிர்ப்போர் நொறுக்கப்படுவர்! அவர் அவர்களுக்கு எதிராக வானில் இடிமுழங்கச் செய்வார்! ஆண்டவர் உலகின் எல்லை வரை தீர்ப்பிடுவார்!
11. எல்கானா இராமாவிலுள்ள தம் வீட்டிற்குச் சென்றார். சிறுவனோ குரு ஏலியின் முன்பாக ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான்.
12. அப்போது ஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமானவராக இருந்தனர். அவர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை.
13. அந்தக் குருக்களின் மக்களிடம் பின் வருமாறு நடந்து கொண்டனர். யாராவது பலி செலுத்தினால், இறைச்சி வேகும்போதே கையில் மூன்று பல் கொக்கியுடன் குருவின் பணியாள் வருவாள்.
14. அவன் அதைக் கொப்பறையிலோ, அண்டாவிலோ, சட்டியிலோ, பானையிலோ விடுவாள். கொக்கியில் அகப்படுவதை எல்லாம் குருவுக்கென்று எடுத்துக்கொள்வான். சீலோவுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
15. அதோடு கொழுப்பு எரிவதற்கு முன்பே குருவின் பணியாள் பலி செலுத்தபவரிடம் வந்து, குருவுக்குச் கமைக்க இறைச்சி கொடும். வெந்த இறைச்சியன்று, பச்சையானதே அவர் உம்மிடமிருந்து பெறுவார் என்பான்.
16. யாராவது அவனிடம் தற்போது கொழுப்பு எரியட்டும்: பிறகு நீ விரும்பியதை எடுத்துக்கொள் என்று சொன்னால் அதற்கு அவன், இல்லை. நீர் இப்பொழுதே கொடும், இல்லையேல், நான் வலிந்து எடுத்துக் கொள்வேன் என்று சொல்வான்.
17. ஆகவே அந்த இளைஞரின் பாவம் ஆண்டவரின் திருமுன் மிகப் பெரியதாகவே இருந்தது. ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட படையல்களைத் துச்சமாகக் கருதினார்கள்.
18. ஆண்டவர்முன் ஊழியம் செய்த சிறுவன் சாமுவேல் நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தான்,
19. சாமுவேலின் தாய் அவனுக்காக ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை தைத்து தம் கணவரோடு ஆண்டுப்பலி செலுத்தச் சென்றபோது அவனிடம் கொடுப்பார்.
20. எல்கானாவுக்கும் அவர் மனைவிக்கும் ஏலி ஆசி வழங்கி எல்கானாவை நோக்கி, ஆண்டவர் இப் பெண் வழியாக, இவள் அவருக்கு நேர்ந்தளித்தவனுக்குப் பதிலாக, உனக்கு வழிமரபை அருள்வாராக என்று கூறுவார். பிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வர்.
20. ஆண்டவர் அன்னாவைக் கடைக்கண் நோக்கினார். அவர் கருவுற்று மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் பெற்றெடுத்தார். சிறுவன் சாமுவேலோ ஆண்டவர் திருமுன் வளரலானான்.
22. ஏலி முதிர்ந்த வயதடைந்தார். தம் பிள்ளைகள் இஸ்லயேருக்கு எதிராகச் செய்த அனைத்தையும், சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்ததையும் கேட்டறிந்தார்,
23. அவர் அவர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இவ்வனைத்தும் மக்களிடமிருந்தும் உங்கள் தீய நடவடிக்கைகளைப்பற்றிக் கேள்விப்படுகிறேனே!
24. வேண்டாம் பிள்ளைகளே! ஆண்டவரின் மக்களிடையே பரவி இருப்பதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல.
25. ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வேறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்? இருப்பினும் அவர்கள் தங்கள் தந்தையின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கொல்லப்பட வேண்டுமென்பது ஆண்டவரின் திருவுளமாக இருந்தது.
26. சிறுவன் சாமுவேல் வளர்ந்து ஆண்டவருக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்து வந்தான்.
27. அப்ஆபாது இறையடியார் ஒருவர் ஏலியிடம் வந்து கூறியது: ஆண்டவர், இவ்வாறு கூறுகிறார்: எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்கு நான் என்னையே வெளிப்படுத்தினேன்.
28. என் பீடத்தில் திருப்பணி புரியவும், தூபம் காட்டவும், என்முன் ஏபோது அணியவும், அவர்களை நான் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களினின்றும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரயேல் மக்கள் எனக்குச் செலுத்திய நெருப்புப் பலிகள் அனைத்தையும் நான் உன் மூதாதை வீட்டாருக்கே கொடுத்தேன்.
29. பின் நானே கட்டளையிட்ட பலிகளையும், படையல்களையும் துச்சமாய் மதிப்பது ஏன்? உன் புதல்வர்களை எனக்கு மேலாக உயர்த்தி, என் மக்கள் இஸ்ரயேல் செலுத்தும் ஒவ்வொரு படையலிலும் சிறந்தவற்றை எடுத்துக்கொண்டு உங்களையே கொழுக்க வைப்பதேன்?
30. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: உன் வீடும் உன் மூதாதை வீடும் என்முன்பாக என்றென்றும் ஊழியம் புரிவீர் என வாக்களித்திருந்தேன். ஆனால் தற்போது ஆண்டவர் கூறுவது: இவ்வாக்கு என்னைவிட்டு அகல்வதாக! ஏனெனில், என்னை மதிப்போரை நான் மதிப்பேன் : என்னை இகழ்வோர் இகழ்ச்சி அடைவர்.
31. இதோ! நாள்கள் நெருங்குகின்றன. அப்பொழுது, உன் ஆற்றலையும் உன் மூதாதை வீட்டாரின் ஆற்றலையும் நான் அழிப்பேன். உன் வீட்டில் ஒரு முதியவர்கூட இருக்கமாட்டார்.
32. அப்போது ஏனைய இஸ்ரயேலருக்கு அருளப்படும் அனைத்து நலனையும் நீ பொறாமையோடு மனம் வெதும்பிப் பார்ப்பாய். உனது வீட்டிலோ என்றென்றும் ஒரு முதியவர் கூட இருக்கமாட்டார்.
33. என் பீடப்பணியினின்று விலக்கி விடாமல் நான் வைத்துக் கொள்ளவிருக்கும் உங்களுள் ஒருவன் கண்கள் மங்கி, மனம் தளர்வடையுமட்டும் இருப்பான். ஆனால் உன் வீட்டில் வளரும் தலைமுறையினர் இளம் வயதில் சாவர்.
34. உன் இரு புதல்வராக ஒப்னிக்கும் பினகாசுக்கும் ஏற்பட விருப்பது உனக்கு ஓர் அடையாளமாக இருக்கட்டும். ஒரே நாளில் அவர்கள் இருவரும் மடிவர்.
35. என் திட்டத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்பச் செயல்படும் நம்பிக்கைக்குரிய ஒரு குருவை நான் எழுப்புவேன். அவனுக்கு ஒரு நிலையான வீட்டைக் கட்டி எழுப்புவேன். அவன் எந்நாளும் என்னிடம் திருப்பொழிவு பெறுபவனுக்குப் பணி செய்வான்.
36. எஞ்சியுள்ள உன் வீட்டார் அனைவரும் ஒரு வெள்ளிக் காசுக்கோ ஓர் அப்பத்துக்கோ அவனிடம் வந்து கையேந்தி நின்று தயைகூர்ந்து எனக்கு ஓர் அப்பம் கிடைக்குமாறு குருத்துவ ஊழியத்தில் என்னைச் சேர்த்தருளும் என்பார்கள்.அதிகாரம் 3.
1. சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை.
2. அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவளால் பார்க்க முடியவில்லை.
3. கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.
4. அப்போது ஆண்டவர், சாமுவேல் என்று அழைத்தார். அதற்கு அவன், இதோ! அடியேன் என்று சொல்லி,
5. ஏலியிடம் ஓடி, இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர், நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள் என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.
6. ஆண்டவர் மீண்டும் சாமுவோல் என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அவரோ, நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள் என்றார்.
7. சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
8. மூன்றாம் முறையாக ஆண்டவர் சாமுவேல் என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று இதோ அடியேன். என்ன¨ அழைத்தீர்களா? என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டாள்.
9. பின்பு ஏலி சாமுவேலை நோக்கி சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் என்று பதில் சொல் என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.
10. அப்போது ஆண்டவர் வந்து நின்று, சாமுவேல் சாமுவேல் என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், பேசும், உம் அடியேன் கேட்கிறேன் என்று மறு மொழி கூறினான்.
11. ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: இதோ கேட்பார் அனைவரின் இரு காதுகளும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செயலை இஸ்ரயேலில் செய்யப்போகிறேன்.
12. அந்நாளில் ஏலியிடம் நான் அவன் வீட்டுக்கு எதிராக பேசியது அனைத்தையும் தொடக்கத்திலிருருந்து முடிவுவரை நிறைவேற்றுவேன்.
13. ஏனெனில் அவன் தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்து கொண்டும் தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டிற்கு நீங்காத தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தேன்.
14. ஆகவே எலி வீட்டின் குற்றத்துக்கு பலியினாலோ படையல்களினாலோ என்றென்றும் கழுவாய் செய்யப்பட முடியாது என்று ஏலி வீட்டுக்கு ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
15. சாமுவேல் காலை வரை படும்மிருத்டதான். பிறகு ஆண்டவரது இல்லத்தின் கதவுகளைத் திறந்து வைத்தான். தான் கண்ட காட்சியை ஏலியிடம் சொல்ல அங்சினான்.
16. பிறகு ஏலி சாமுவேல் என் மகனே!, என்று கூப்பிட, சாமுவேல். இதோ அடியேன் என்று பதில் சொன்னான்.
17. அவர் அவனை நோக்கி உனக்கு அவர் சொன்ன வார்த்தை என்ன? தயவு செய்து என்னிடம் மறைக்காதே. அவர் உன்னிடம் பேசியதிலிருந்து நீ என்னிடம் ஏதாவது மறைத்தால், கடவுள் உனக்கு தகுந்தவாறும் அதற்கு மேலும் செய்வார் என்றார்.
18. சாமுவேல் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அவரிடமிருந்து எதையும் மறைக்கவி¨ல்லை. அதற்கு அவர், அவர் ஆண்டவர் தான்! அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும் என்றார்.
19. சாமுவேல் வளர்ந்தான்: ஆண்டவர் அவனோடு இருந்தார்: சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.
20. சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்தும் இஸ்ரயேலரும் அறிந்து கொண்டார்.
20. ஆண்டவர் மீண்டும் சீலோவில் தோன்றினார். அங்கேதான் சாமுவேலுக்கு ஆண்டவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்.அதிகாரம் 4.
1. அதைச் சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் எடுத்துரைத்தார். இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்த்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினார்.
2. பெலிஸ்தியர் இஸ்ரேயலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுக்குள் நாலாயிரம் பேரைப் போர்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.
3. வீரர்கள் பாளையிற்குத் திரும்பிய போது, இஸ்ரயேலின் பெரியார் கூறியது: இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோ¡ம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள்கையினின்று நம்மை காக்கும்.
4. ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி கெரும்புகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டு வரச் செய்தா+ ஏலியின் இரு புதல்வர்களான ஒப்புனியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர்.
5. ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாழையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேல் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.
6. இந்த ஆரவாரத்தை கேட்டதும் பெலிஸ்தியர், எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்? என்று வினாவினார். ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளயத்தினுள் வந்து விட்டது என்று அறிந்து கொண்டார்.
7. அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு: கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஜயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை!
8. நமக்கு ஜயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மை காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலை நிலத்தில் பல்வேறு வதைகளால் துன்புறுத்தியவர்!
9. பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தும் போல, நீங்களும் எபிரேயேருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்! என்றார்.
10. பெலிஸ்தியர் மீண்டும் போர் தொடுத்தார். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்கு தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர்.
11. கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர்.
12. போர்களத்தினின்று பென்யமின் குலத்தினன் ஒருவன் ஓடிச் சென்று அன்றே சீலோவை அடைந்தான். அவன் ஆடைகள் கிழிந்திருந்தன: தலையோ புழுதிபடிந்திருந்தன.
13. அவன் வந்தபோது ஏலி வழியோரம் ஓர் இருக்கையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் கடவுளின் பேழையைப் பற்றி அவர் உள்ளம் கலக்கமுற்றிருந்தது. அம் மனிதன் நகரினுள் வந்து செய்தியை அறிவித்தபோது, நகர் முழுவதும் அழுதது,
14. அழுகையின் குரல் கேட்ட ஏலி, ஏன் இந்தக் கூக்குரல்? என்று வினவ அம்மனிதன் விரைந்து சென்று ஏலிக்கு செய்தியைத் தெரிவித்தான்.
15. அப்போது ஏலியின் வயது தொண்ணூற்று எட்டு. கண் பார்வை மங்கி இருந்ததனால் அவரால் பார்க்க முடியவில்லை.
16. அம்மனிதன் ஏலியை நோக்கி நான் போர்களத்திலிருந்து வருகிறேன், இன்று தான் அங்கிருந்து ஓடி வருகிறேன் என்று சொல்ல, அதற்கு ஏலி, மகனே! செய்தி என்ன? என்று வினவினார்.
17. அதற்கு அத்தூதன், இஸ்ரயேலர் பெலிஸ்தியர்முன் புற முதுக்கிட்டு ஓடினர். மேலும் மக்களிடையே பெரும் உயிர்சேதம் ஏற்பட்.டுவிட்டது. உம் இருபுதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர். கடவுளின் பேழையும் கைப்பற்றபட்டுவிட்டது என்று சொன்னான்.
18. கடவுளின் பேழை பற்றி அவன் சொன்னதும் அவர் தம் இருக்கையின்று பின்புறம் கதவருகே விழுந்து, கழுத்து முறிந்து இருந்தார். ஏனெனில், அவர் வயது முதிர்ந்து உடல் பெருத்தவராய் இருந்தார். அவர் இஸ்ரயேலுக்கு நாற்பது ஆண்டுகள் நீதித் தலைவராய் இருந்தார்.
19. அப்பொழுது பினகாசின் மனைவியான அவருடைய மருமகள் நிறைகர்ப்பினியாய் இருந்தாள். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்து விட்டதையும் கேட்டு அவள் பேறுகால வேதனைக்குள்ளாகி, குனிந்து மகவைப் பெற்றெடுத்தாள்.
20. அவள் சாகும் தருவாயில் இருந்தபோது அவள் அருகில் இருந்த தாதியர் அவளை நோக்கி, அஞ்சாதே, நீ ஒரு மகனை பெற்றெடுத்துள்ளாய் என்று கூறினர். அவளோ அதற்கு மறுமொழி கூறவில்லை: அதைப் பொருட்படுத்தவுமில்லை.
20. கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு இக்க போது என்று பெயரிட்டாள்.
22. அவள் கூறியது: இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில் கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது என்றாள்.அதிகாரம் 5.
1. பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பற்றி, அதை எபனேசரிலிருந்து அஸ்தோதிற்குக் கொண்டு சென்றனர்.
2. பெலிஸ்தியர் கடவுளின் பேழையைத் தாகோன் கோவிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்து, தாகோன் சிலை அருகில் வைத்தனர்.
3. அஸ்தோதின் மக்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்தபோது, தாகோன் சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்த¨த்க் கண்டனர். அவர்கள் அதை எடுத்து அதன் இடத்தில் மீண்டும் நிறுத்தினார்கள்.
4. அவர்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்த போது தாகோன், சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். ஆனால் அதன் தலையும், இருகைகளும் துண்டிக்கப்பட்டு, வாயிற்படியில் கிடந்தன. அதன் உடல் பகுதி மட்டும் எஞ்சியிருந்தது.
5. ஆகவே தான் தாகோனின் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் அஸ்தோதிலிருக்கும். தாகோனின் வாயிற்படியை இந்நாள்வரை மிதிப்பதில்லை.
6. அஸ்தோதின் மக்களை அழிக்கும் படியாக ஆண்டவரின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியது. அஸ்தோது வாழ் மக்களையும் அதன் எல்லைக்கு உட்பட்டவர்களையும் அவர் மூலக் கட்டிகளல் வாட்டி வைத்தனர்.
7. அஸ்தோதின் மக்கள் இவ்வாறு நிகழ்ந்ததைக் கண்டபோது, இஸ்ரயேலின் கடவுளது பேழை நம்மிடையே இருக்கலாகாது. ஏனெனில் அவரது கை நம்மையும் நம் தெய்வம் தாகோனையும் வன்மையாகத் தாக்கியுள்ளது என்று பேசிக் கொண்டனர்.
8. ஆகவே அவர்கள் ஆளனுப்பி பெலிஸ்தியத் தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை நாம் என்ன செய்வோம்? என்று கேட்டனர். அவர்கள், இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் காத்து நகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பதிலுரைத்தனர். அவ்வாறே இஸ்ரயேலரின் கடவுளது பேழையை எடுத்துச் சென்றனர்.
9. அதை அங்கு எடுத்துச் சென்ற பின், ஆண்டவரின் கை அந்நகரை வன்மையாகத் தாக்கி, மாபெரும் அழிவை ஏற்படுத்தியது. அவர் அந்நகர் மக்களை, சிறியோர் முதல் பெரியோர் வரை, மூலக் கட்டிகளால் வதைத்தார்.
10. அவர்கள் கடவுளின் பேழையை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை எக்ரோனுக்கு வரவே, எக்ரோனியர். எங்களையும் எங்கள் மக்களையும் அழிக்கவே இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் கொண்டு வந்து விட்டார்கள் என்று கத்தினார்க்ள.
11. எனவே அவர்கள் ஆள்அனுப்பி பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், இஸ்ரயேலின் கடலுளது பேழையைத் திருப்பி அதன் இடத்திற்கே அனுப்பி விடுங்கள். எங்களையும் எங்கள் மக்களையும் அவர் கொல்லா திருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டனர். கடவுளின் கை அவர்களை தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள்.
12. இறவாமல் இருந்த மக்கள் மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டவர்கள். அந்நகரின் கூக்குரல்கள் வான் மட்டும் எழும்பியது.அதிகாரம் 6.
1. ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.
2. பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, ஆண்டவரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள் எனக் கேட்டனர்.
3. அவர்கள் கூறியது: நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாது: குற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். அப்போது நீங்கள் குணமாக்கப் படுவீர்கள். அவரது கை உங்களைவிட்டு விலகாதிருறந்ததன் காரணத்தையும் அறிந்து கொள்வீர்கள்.
4. அதற்கு அவர்கள், நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டய குற்ற நீக்க பலி யாது? என்று கேட்க, அவர்கள் கூறியது: பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஜந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே. ஏனெனில் உங்கள் அனைவர் மீதும் உங்கள் தலைவர்கள் மீதும் ஒரே வாதைதான் ஏற்பட்டது.
5. ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்கிளடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் நாட்டினின்றும் அவரது கை விலக்கும்.
6. எகிப்தியரும் பார்வோனும் தங்கள் அதயங்களைக் கடிகப்படுத்தியது போல நீங்க்ள ஏன் உங்கள் இதயங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்? அவர்ளைத் துன்புறுத் அவர்களுத் இஸ்லயேலரைச் சொல்லுமாறு விட்டுவிட்னரே?
7. இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டியைச் செய்யுங்கள். இதுவரை நுகம் பூட்டாத இரு கறவைப் பகக்¨ள் பிடித்து அவற்றை வண்டியில் பூட்டுங்கள். அவற்றின் கன்றுக்குட்டிகளை விலகிக்விட்டுச் செல்லுங்கள்.
8. ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்கப்பலி¡க நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள். பிறகு வண்டியை அனுப்பிவிடுங்கள்: அது தானே செல்லட்டும்.
9. பின் கவனியுங்கள்: அது தன் நாட்டு எல்லைக்குச் செல்லும் வழியாக பெத்சமேசுக்குச் சென்றால், இப்பெரிய தீங்கை நமக்கு இழைத்தவர் அவரே என்று அறியலாம். இல்லையேல், அவரது கை நம்மைத் தொடவில்லை, மாறாக அது நமக்குச் தற்செயலாக நாம் அறியலாம்.
10. அவர்களும் அவ்வாறே செய்தனர். இரு கறவைப் பசுக்களைக் கொண்டு வந்து பூட்டினர். அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தனர்.
11. ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெகளும், மூலக்கட்டிகளின் உருவங்களுத் வைத்தி நத பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர்.
12. பசுக்கள் பெத்சமேசுக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இடமோ வலிமோ விலகாமல் நேரே கத்திக் கொண்டே சென்றன. பெலிஸ்தியத் தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர்.
13. அப்போது பெத்சமேசு வாழ் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை உயர்த்திய போது பேழையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.
14. பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலுக்குள் வண்டி வந்து நின்றது. அங்கே ஒரு பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரத்தை பிழந்து பசுக்களை ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினர்.
15. லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.
16. பெலிஸ்தியரின் ஜந்து தலைவர்களும் இதைக் கண்டபின் அன்றே எக்ரோககுத் திருத்பினர்.
17. பெலிஸ்தியர் குற்ற நீக்க பலியாக ஆண்டவருக்குச் செலுத்திய மூலக் கட்டிகளின் பொன் உருவங்கள் இவையே: அஸ்தோதுக்கு ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்லோனுக்கு ஒன்று, மாதத்திற்கு ஒன்று, எக்ரோனுக்கு ஒன்று.
18. பொன் சுண்டெலிகள், அரண் சூழ் நகர்கள் தொடங்கி, நாட்டுப்புறச் சிற்றூர்கள் வரை ஜந்து தலைவர்க ககுச் சொந்தமான அனைத்து பெலிஸ்திய நகர்களின் எண்ணிக்கைக்குச் சரியாக இருந்தன. ஆண்டவரின் பேழையை வைக்கப்பட்ட அந்தப் பாறை இந்நாள் வரை பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலில் உள்ளது.
19. பெத்சமேசு வாழ் மக்களை ஆண்டவர் சாகடித்தார். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர். மக்களுள் எழுபது பேரை அவர்வீழ்த்தினர். மக்களிடையே இப்பெரும் அழிவை ஏற்படுபடுத்தியதற்காக மக்கள் புலமபினார்கள்.
20. பெத்சமேசு வாழ் மக்கள் இநதத் தூய கடவுளாகிய அண்டவர் திருமுன் நிற்கத் தகுந்தவன் யார்? நம்மிடமிருந்து அவர் யாரிடம் செல்லப் போகிறார்? என்றுக் கேட்டுக் கொண்டனர்.
20. ஆகவே, கிரியத்து எயாரிம் வாழ் மக்களுக்கு ஆள்களை அனுப்பி, ஆண்டவரின் பேழையைப் பெலிஸ்தியர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். நீங்கள் வந்து அதை உங்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.அதிகாரம் 7.
1. கிரியத்து எயாரிமின் ஆள்கள் வந்து ஆண்டவரின் பேழையைத் தூக்கிச் சென்று, குன்றின் மீதிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். ஆண்டவா§ன் பேழையை காக்கும் படி அவன் மகன் எல்யாசரைத் திரு நிலைப்படுத்தினர்.
2. பேழை கிரியத்து எயாரில் பலநாள்கள் தங்கியது: இருபது ஆண்டுகள் ஆயின. இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவரை நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தனர்.
3. இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் சாமுவேல் கூறியது: நீங்கள் முழுஉள்ளத்தோடு .ஆண்டவரிடம் திரும்பினால் வேற்றுத் தெய்வங்களையும் அஸ்தரோதையும் உங்களிடமிருந்து அகற்றி விடுங்கள். உங்கள் உள்ளங்களை ஆண்டவருக்காத் தயார் செய்யுங்கள். அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள். பெலிஸ்தியர் கையிலினின்று அவர் உங்களை விடுவிப்பார்.
4. இஸ்ரயேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோதையும் விலக்கிவிட்டு ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் செய்தார்கள்.
5. மேலும் சாமுவேல், இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்று கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன் என்றார்.
6. ஆகவே அவர்க்ள மிஸ்பாவில் ஒன்றுகூடி தண்ணீர் மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றி, அன்று நோன்பிருந்து ஆண்டவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம் என்று அறிக்கையிட்டார். சாமுவேல் மிஸ்பாவில் தங்கி இஸ்ரயேல் மக்களுக்கு தலைவராய் இருந்தார்.
7. இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவில் ஒன்று கூடியதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டடார். அப்போது பெலிஸ்திய தலைவர்கள் இஸ்ரயே
ககு புறப்பட்டார்கள். இதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரை முன்னிட்டு அச்சமுற்றார்கள்.
8. இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கூறியது: நம் கடவுளாகிய ஆண்டவர் பெலிஸ்தியர் கையினின்று நம்மை காக்கும் படி அவரிடம் விடாமல் மன்றாடம் .
9. ஆகவே பால் குடிக்கும் ஓர் ஆட்டுக் குட்டியை சாமுவேல் பிடித்து அதை ஆண்டவ ககு ஒரு முழு எரி பலியாக செலுத்தி, இஸ்ரயேலுக்காக அவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவருடைய மன்றாட்டை கேட்டார்.
10. சாமுவேல் இவ்வாறு எரி பலி செலுத்திக் கொண்டிருந்த போது, பெலிஸ்தியர் இஸ்ரயேலுடன் போரிட நெருங்கினார். அன்று ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்து அவர்களைக் கலங்கடிக்க, அவர்கள் இஸ்ரயேல் முன்பாகத் தோல்லியுற்றார்.
11. இஸ்ரயேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டுப் பெத்கார் பள்ளத்தாக்கு வரை பெலிஸ்தியரைத் தூறத்திச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
12. சாமுவேல் ஒரு கல்லை எடுத்து அதை மிஸ்பாவுக்கு சொனாவுக்கும் நடுவில், ஆண்டவர் இதுவரை நமக்கு உதவி செய்தார், என்று கூறி அதற்கு எபனேசர் என்று பெயரிட்டார்.
13. பெலிஸ்தியர் சிறுமையுற்று அதன்பின் மீண்டும் இஸ்ரயேல் எல்லைக்குள் வரவில்லை. சாமுவேலின் வாழ் நாள் முழுவதும் ஆண்டவரின் பெலிஸ்தியருக்கு எதிராக இருந்தது.
14. எக்ரோன் முதல் காத்துவரை இஸ்ரயேலிடமிருந்து பெலிஸ்தியர் கைப்பற்றியிருந்த நகர்கள் இஸ்ரயேலுக்கு திரும்பக் கிடைத்தன. பெலிஸ்தியர் கையினின்று இஸ்ரயேல் தங்கள் எல்லைப் பகுதியை மீட்டுக் கொண்டனர். மேலும் இஸ்லயேருக்கும் எமோரியருக்குமிடையே அமைதி நிலவிற்று.
15. சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலுக்குத் தலைவராய் இருந்தார்.
16. அவர் ஆண்டு தோறும் சுற்றுப் பயணம் செய்து, மிஸ்பா ஆகிய இடங்களில் எல்லாம் இஸ்ரயேலுக்கு நீதி வழங்கினார்.
17. பின்பு அவர் வீடு இருந்த இராமாவுக்குத் திரும்பி அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினார்: அங்கே ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்பினார்.அதிகாரம் 8.
1. சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவராக அமர்த்தினார்.
2. அவருடைய தலைமகனின் பெயர் யோவேல்: இளையவனின் பெயர் அபியா: இவர்கள் பெயேர்செபாவில் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.
3. ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாச¨க்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை.
4. எனவே, இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடி சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர்.
5. அவர்கள் அவரிடம், இதோ உனக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறையில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும் என்று கேட்டுக் கொண்டார்.
6. எங்களுக்கு நீதி வழங்க ஊர் அரசனைத் தாரும் என்று அவர்கள் கேட்டதும் சாமுவேலுக்குத் தீயதெனப்பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார்.
7. ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டார்.
8. நான் அவர்களை எகிப்தினின்று கொண்டுவந்த நாள் முதல் இந்நாள் வரை அவர்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் அனைத்திலும் அவ்வாறே செய்தது போல் உனக்கும் செய்கிறார்கள்.
9. இப்போது அவர்கள் குரலுக்குச் செவிகொடு. ஆனால் அவர்களைக் கண்டித்து எச்சரி. அவர்களை ஆளப் போகும் அரசனின் உரிமைகளைத் தெரியப்படுத்து .
10. ஓர் அரசன் வேண்டுமென்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார்.
11. உங்கள் மீது ஆட்சி செய்யும் உண்மைகளாவன: அவன் உங்கள் புதல்வர்ளை தன் தோரோட்டிகளாகவும் தன் குதிரை வீர்களாகவும் வைத்துக் கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்கு முன் ஓடச் செய்வான் .
12. அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஜம்பதிமர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விள¨ச்சலை அறுவடை செய்வராகவும், தன் போர்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான்.
13. மேலும் அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளப் தைலம் செய்கிறர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சடுபவர்களாகவும், வைத்க கொள்வான்.
14. அவன் உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலர்களுக்கு கொடுப்பான்.
15. உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் கொடுப்பான்.
16. உங்கள் வேலைகாரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றை உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான்.
17. உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்கு பணியாளராய் இருப்பீர்கள்.
18. அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீ+கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்.
19. மக்களோ சாமுவேலின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்தது, இல்லை எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும்.
20. அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார். என்றனர்.
20. மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டு வைத்தார்.
22. ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: அவர் குரலுக்கு செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய். பின்பு சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும் என்றார்.அதிகாரம் 9.
1. பென்மியன் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்மியனின் அபியாவுக்குப் பிறந்த பெர்ககோரத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குக் பிறந்தவர்.
2. அவருக்குச் சவுல் என்ற இளமையும் அழகும் கொண்ட ஓர் மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவராய் எவரும் இலர். மற்ற அனைவரையும் விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர்.
3. சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு கழுதைகளைத் தேடிப்போ என்றார்.
4. அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார். அவற்றைக் காணவில்லை: சாலிம் நாட்டு வழியே சென்றார். அங்கும் அவை இல்லை. பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார். அங்கும் அவை தென்படவில்லை.
5. பிறகு அவர்கள் சூபு நாட்டுககு வந்தபோது, சவுள் தம் பணியாளிடம், வா, நாம் திரும்பிச் செல்வோம். ஏனெனில் என் தந்தை கழுதைகளை மறந்துவிட்டு கவலைக் கொள்வார்.
6. அதற்குப் பணியாள் இதோ, இந்நகரில் கடவுளின் அடியவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெருமதிப்புக்கு உரியவர். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடக்கிறது. ஆகவே நாம் செல்வோம். ஒரு வேளை நாம் செல்ல வேண்டிய வழி எதுவென்று அவர் நமக்கு எடுத்துரைப்பார் என்றான்.
7. சவுல் தம் பணியாளிடம் சரி செல்வோம். ஆனால் அவருக்கு நாம் என்ன கொடுப்போம்? ஏனெனில் நம் பைகளிலிருந்த அப்பம் தீர்ந்து விட்டது. கடவுளின் அன்பருக்கு அன்பளிப்புத் தர எதுவும் இல்லையே! என்ன செய்வோம்? என்றார்.
8. பணியாள் சவுலை நோக்கி, இதோ! என்கையில் இன்னும் மூன்று கிராம் அளவுள்ள வெள்ளி இருக்கிறது. அதைக் கடவுளின் அடியாருக்குத் தருவேன். அவர் நம் வழியை நமக்கு எடுத்துரைப்பார் என்றான்.
9. அக்காலத்தில் இஸ்ரயேலில் கடவுளின் திருவுள்ளத்தை நாடிச் செல்வோர் வாருங்கள் திருக்காட்சியாளரிடம் செல்வோம் என்பர். ஏனெனில் இன்றைய இறைவாக்கினர் அன்று திருக்காட்சியாளர் என்று அழைக்கப்பட்டார்.
10. சவுல் தம் பணியாளரிடம், நீ சொன்னது சரியே, வா செல்வோம் என்றார். அவர்கள் கடவுளின் அடியாள் இருந்த நகருக்குள் சென்றனர்.
11. அவர்கள் நகரில் மேட்டில் ஏறிக் கொண்டிருந்தபோது இளம் பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதைக் கண்டு அவர்களிடம் திருக்காட்சியாளர் இங்கே இருக்கிறாரா?என்று கேட்டனர்.
12. அதற்கு அவர்கள் ஆம், உங்களுக்கு முன்பே வந்துவிட்டார். விரைந்து செல்லுங்கள். இன்று அவர் நகருக்குள் வந்துள்ளார். இன்று தொழுகை மேட்டில் மக்களுக்காகப் பலி செலுத்தப்படுகிறது.
13. நீங்கள் நகருக்குள் நுழையும் போது, உண்பதற்காக அவர் தொழுகைமேட்டிற்கு ஏறிச் செல்வதற்கு முன்பே அவரை நீங்கள் காண்பீர்கள். ஏனெனில் அவர் பலிக்கு சென்று ஆசி வழங்கும் வரை மக்கள் உண்ண மாட்டார்கள்: பிறகு தான் உழைக்கப்பட்டோர் உண்பர். உடனே சென்றால் இப்போதே நீங்கள் அவரைக் காணலாம் என்றனர்.
14. அவ்வாறே அவர்கள் நகருக்குள் சென்றனர். அவர்கள் நகரின் மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, தொழுகை மேட்டுக்கு வந்துகொண்டிருந்த சாமுவேல் அவர்களுக்கு எதிரே வந்தார்.
15. சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே சாமுவேல் செவியில் விழும் படிஆண்டவர் வெளிபடுத்தியது.
16. நாளை இந்நேரம் பென்யமின் நாட்டின் ஒருவனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களான இஸ்ரயேலின் தலைவனாக அவனை நீ திருப்பொழிவு செய். பெலிஸ்தியரின் கையின்று அவன் என் மக்களை விடுவிப்பான். என் மக்களான அவர்களின் கூக்குரல் என்னிடம் வந்துள்ளது.
17. சாமுவேல் சவுலை கண்டதும்¥¥¥¥. ஆண்டவர் அவரிடம் இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் இவனே என் மக்கள் மீது ஆட்சிபுரிவான் என்றார்.
18. சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும் என்று கேட்டார்.
19. சாமுவேல் சவுலுக்கு கூறியது: நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.
20. மூன்று நாளுக்குமுன் காணாமற் போன கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது? உன் மீது உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ?
20. சவுல் மறுமொழியாக கூறியது: இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தில் சார்ந்தவனன்றோ நான்? பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறந்ததன்றோ! பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகின்றீர்?
22. பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணிகளையும் உணவறைக்குக் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார்.
23. மேலும் சாமுவேல் சமையல் காரனை நோக்கி, நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப் படுத்தச் சொல்லியிருந்தேனே அதைக் கொண்டு வந்து வை என்றார்.
24. சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்குமுன் வைத்தான். அப்போது சாமுவேல் இதோ! உனக்கு முன்பாக வைத்தி பபதை சாப்பிடு. நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது என்றார். அன்று சவுல் சாமுவேலுடன் உண்டார்.
25. பிறகு அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இறங்கி நகருக்கு வந்தார். சாமுவேல் சவுலுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்.
26. அவர்கள் வைகறையில் துயில் எழுத்தனர். சாமுவேல் மாடியில் இருந்த சவுலை அழைத்து, எழுந்திரு நான் உன்னை அனுப்பிவிடுகிறேன் என்றார். சவுல் எழுந்தார். பின் அவரும் சாமுவேலும் இருவருமாக வெளியே சென்றனர்.
27. அவர்கள் நகரில் எல்லை வரை வந்த போது, சாமுவேல் சவுலை நோக்கி, பணியாளை நமக்கு முன் நடந்து போகச் சொல் என்றார். அவ்வாறே அவனும் முன்னே நடந்து சென்றான். அப்பொழுது சாமுவேல் சவுலிடம் நீ சற்று நில். கடவுளின் வார்த்தையை நான் உணர்த்தி வைக்க வேண்டும் என்றார்.அதிகாரம் 10.
1. அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து அவரை முத்தமிட்டு கூறியது: ஆண்டவர் நம் உரிமைச் சொத்துக்கு தலைவனாக இருக்கும் படி உன்னைத் திருப் பொழிவு செய்துள்ளார் அன்றோ?
2. இன்று நீ என்னைவிட்டு செல்லும் போது பென்யமின் எல்லையாம் செல்குயில்ராகேலின் கல்லறையருகே இரு மனிதரைக் காண்பாய். அவர்கள் என்னிடம் நீங்கள் தேடிப்போன கழுதைகள் அகப்பட்டுவிட்டன: இதோ உன் தந்தை கழுதை பற்றி கவலையை விட்டு உனக்காக ஏங்கி என் மகனுக்காக என் செய்வேன்? என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்று சொல்வார்கள்.
3. நீ அங்கிருந்து மேலும் கடந்து சென்று
4. அவர்கள் உன் நலம் கேட்டு உன்னிடம் இரண்டு அப்பங்களைத் தர அவர்கள் கைகளினின்று நீயும் பெற்றுக் கொள்வாய்.
5. அதன் பிறகு பெலிஸ்தியரின் எல்லைக் காவல் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கு நகருக்குள் நுழையும் போது தொழுகை மேட்டிலிருந்து இறங்கிவரும் ஒர் அறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அவர்களுககு முன்பாக யாழும், மேளமும், நாதசுரமும், சுரமண்டலமும் செல்லும். அவர்கள் பரவரமடைந்து பேசுவார்.
6. பிறகு ஆண்டவரின் ஆவி உன் மேல் வலிமையோடு வரும். நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய். நீயும் வேறு மனிதனாய் மாற்றப்படுவாய்.
7. இந்த அறிகுறிகள் உனக்கு நேரிடும் போது, உன் கைக்கு வந்ததை நீ செய்து கொள். ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
8. பிறகு நீ எனக்கு முன்பாக கில்காலுக்கு இறங்கிச் செல். எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுப்பதற்காக நான் உன்னிடம் வருவேன். நான் உன்னிடம் வந்து நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்கும் வரை ஏழு நாள்கள் காத்திரு.
9. சவுல் சாமுவேலை விட்டு திரும்பிய பொழுது கடவுள் அவரின் உள்ளத்தை மாற்றினார். அன்றே இந்த எல்லா அறிகுறிகளும் நிறைவேறின.
10. அவர்கள் அந்த மலையை அடைந்த போது, இறைவாக்கினர் குழு அவரை எதிர் கொண்டது. கடவுளின் ஆவி அவரை வழிமையோடு ஆட்கொள்ள, அவர் அவர்கள் நடுவே பரவசம் அடைந்து பேசினார்.
11. அவரை ஏற்கெனவே அறிந்தவ+கள் அவர் இறைவாக்கினறோடு பரவசமடைந்து பேசுவதைக் கண்டார்கள். மக்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, கீசின் மகனுக்கு என்ன நேரிட்டது? சவுலுக்கு இறைவாக்கினருள் ஒருவனோ? என்று கேட்டுக் கொண்டார்.
12. அதற்கு அங்கிருந்தவள் ஒருவன், இவர்கள் தந்தை யார்? என்று கேட்டான். ஆகவே, சவுலும் இறைவாகினருள் ஒருவானோ? என்ற பழமொழி உருவாயிற்று.
13. அவர் பரவசமடைந்து பேசி முடிந்தபின் தொழுகை மேட்டுக்கு வந்தார்.
14. அப்போது சவுலின் சிற்றப்பன், சவுலையும் அவர் வேலைக் காரனையும் நோக்கி, நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்? என்று வினவ, அவர், நாங்கள் கழுதையை தேடிச் சென்றோம். அவை கிடைக்கவில்லை. எனவே சாமுவேலிடம் சென்றோம். என்ன சொன்னார்.
15. சவுலின் சிற்றப்பன், சாமுவேல் உனக்குக் கூறியதை தயைகூர்ந்து எனக்குச் சொல் என்றார்,
16. சவுல் தம் சிற்றப்பனிடம், கழுதைகள் அகப்பட்டனவென்று அவர் எங்களுக்கு உறுதியாகச் சொன்னார். என்றார். ஆனால் அரசு பற்றி சாமுவேல் சொன்ன செய்தியை அவருக்குச் சொல்லவில்லை.
17. சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் அழைத்தார்.
18. பின்னர் அவர் இஸ்ரயேல் மக்களை நோக்கிக் கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். நான் இஸ்ரயேல் எகிப்தினின்று கொண்டு வந்தேன் எகிப்தியர் கையினின்று உங்களைத் துன்புறுத்திய அனைத்து அரசுகளின் கைகளினின்று நான் உங்களை விடுவித்தேன்.
19. நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை புறக்கணித்து விட்டு எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும் என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்.
20. பிறகு ஆண்டவர் அனைத்து இஸ்ரயேல் குலங்களையும் ஒருங்கே கொண்டு வர, பென்யமின் குலத்தின் மீது சீட்டு விழுந்தது.
21. பென்யமின் புலத்ததை அதன் குடும்பங்கள் வாரியாக ஒருங்கே கொண்டு வர, மதிரி குடும்பத்தின் மீது சீட்டு விழுந்தது. அவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை.
22. ஆள் இங்கே வந்துவிட்டானா? என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் ஆம்! அவன் பொருட்குவியலிடையே ஒளிந்துள்ளேன் என்று கூறினார்.
23. அவர்கள் ஓடிச் சென்று அங்கிருந்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மக்கள் நடுவே நின்ற போது அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அவர் அனைவரும் தோளுயரமே இருந்தார்கள்.
24. சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி, ஆண்டவர் தேர்ந்தெடுத்ததைப் பாருங்கள். மக்கள் அவரைப்போல் வேறொருவரும். உண்டா? என்றார். அப்போது மக்கள் அனைவரும் அரசர் நீடூழி வாழ்க! என்று ஆர்பரித்தார்.
25. சாமுவேல் அரசரின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து, அவை ஓர் ஏட்டில் எழுதி, ஆண்டவர் திருமுன் வைத்தார். பிறகு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்.
26. சவுலும் கிபியாவிலிருந்த தம் வீட்டிற்குச் சென்றார். கடவுளால் தூண்டப்பட்ட வீரர்கள் அவரோடு சென்றார்கள்.
27. ஆனால் தீயோர் சிலர், இவன் நம்மை எவ்வாறு மீட்க முடியும்? என்று கூறி, அவரைப் புறக்கணித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு எதுவும் தரவில்லை. அவரோ அமைதியாக இருந்தா+.அதிகாரம் 11.
1. அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபோசை முற்றுக்கையிட்டான். யாபோசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உங்களுக்கு பணிந்திருப்போம். என்றனர்.
2. அம்மோனியன் நாகாசு அவர்களை நோக்கி, நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை: உங்களுக்குள் எவ்வொருவனின் வலக் கண்ணும் பிடுங்கிடும். இஸ்ரயேலர் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்குவேன் என்றான்.
3. யாபேசின் பெரியோர்அவனிடம் கூறியது: ஏழு நாள்கள் எங்களுக்கு தவணை தாரும். நாங்கள் இஸ்ரயேல் எல்லை முழுவதும் தூதர்களை அனுப்புவோம். எங்களை மீட்பர் எவரும் இல்¨யெனில் நாங்கள் உங்களிடம் சரணடைவோம்.
4. தூதர்கள் சவுலின் ஊராகிய கிபயாவுக்கு வந்து மக்கள்செவிபடச் செய்தியை சொல்ல, மக்கள் அனைவரும் குரலெழுப்பி அழுதனர்.
5. அப்போது சவுல் வயலினின்று மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். மக்களுக்கு என்ன நேரிட்டது? அவர்கள் ஏன் அழுகிறார்கள்? என்று சவுல் கேட்டார். யாபோசின் ஆள்கள் அவரிடம் சொன்னதை சொன்னார்.
6. இச்செய்தியை அவர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கடவுளின் ஆவி அவரை வலிமையுடன் ஆட்கொள்ள, அவரது சினம் கனன்றது.
7. அவர் ஒரு சோடி மாடுகளை பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட் கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்.
8. அவர் அவர்களை பெசேக்கில் கணக்கெடுத்தபோது இஸ்ரயேலின் மக்கள் மூன்று இலட்சம் பேரும் யூதாவினர் முப்பதாயிரம் பேரும் இருந்தனர்.
9. வந்திருந்த தூதர்களிடம், நாளை வெயில் ஏறும்முன் உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று கிலயாதிலுள்ள யாபோசின் மக்களுக்கு தெரிவியுங்கள் என்று அறிவிக்கப்பட்டது. தூதரும் இவ்வாறே யாபோசின் மக்களிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
10. ஆகவே யாபோசின் ஆட்கள் நாளை நாங்கள் உம்மிடம் சரணடைவோம். உம் விருப்பப்படியே எங்களுக்குச் செய்யும் என்றனர்.
11. மறுநாள் சவுல் மக்களை மூன்று படையாள்களாக பிரித்தார். கீழ்வானம் வெளுத்தபோது அவர்கள் பாளையத்தினுள் வந்து, வெயில் ஏறுவதற்குள் அம்மோனியரை வெட்டி வீழ்த்தினர். இருவர் கூட இணையாதபடி எஞ்சி இருந்தவர்கள் சிதறடிக்கப்கபட்டார்கள்.
12. பிறகு மக்கள் சாமுவேலை நோக்கி, சவுலா எங்களை ஆள்வது? ஔனறு கேட்டவர்களை கொண்டு வாருங்கள். அவர்க¨ள்க கொன்று போடுவோம் ஔனறனர்.
13. ஆனால் சவுல், இன்று யாரையும் கொல்லக் கூடாது. ஏனெனில் ஆண்டவர் இஸ்ரயேலுக்கு மீட்பு அளித்துள்ளார் என்றார்.
14. சாமுவேல் மக்களை நோக்கி, வாருங்கள் கில்கதலுக்கு சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம். என்றார்.
15. மக்கள் அனைவரும் கில்கா
கச சென்று அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரயேலும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அதிகாரம் 12.
1. அப்போது சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறியது: நீங்கள் கேட்டுக் கொண்ட அனைத்தின் படிநடந்து, உங்கள் குரலுக்குச் செவிகொடுத்து, உங்களுக்காக ஓர் அரசனை ஏற்படுத்தினேன்.
2. இதோ! ஓர் அரசர்! இவர் உங்களை வழிநடத்துவார். எனக்கோ வயதாகித் தலைநரைத்து விட்டது. என் புதல்வர்தாம் இருக்கின்றனர். என் இளமைமுதல் இந்நாள்வரை நான் உங்களை வழி நடத்தியிருக்கிறேன்.
3. இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். ஆண்டவர் முன்பும் அவர் திருப்பொழிவு செய்தவர். முன்பும் என்மீது குற்றம் சாட்ட முடியுமா? யாருடைய மாட்டையாவது நான் எடுத்துக் கொண்டோனா? யாருடைய கழுதையாவது நான் எடுத்துக் கொண்டேனா? யாரையாவது நான் ஏமாற்றினேனா? யாரையாவது நான் ஒடுக்கினேனா? யாரிடமிருந்தாவது நான் கைப்பூட்டுப் பெற்று நான் அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருந்தேனா? சொல்லுங்கள். நான் திருப்பித் தந்து விடுகிறேன்.
4. அதற்கு அவர்கள் நீர்எங்களை ஏமாற்ற வில்லை, ஒடுக்கவில்லை, கைப்பூட்டு யாரிடமும் பெறவில்லை என்றார்கள்.
5. அவர் அவர்களை நோக்கி, நீங்கள் என்னிடம் எக்குற்றமும் காணவில்லை என்பதற்கு இன்று ஆண்டவர் சாட்சி. அவர் திருப்பொழிவு செய்தவரும் சாட்சி.! அதற்கு அவர்கள், அவரே சாட்சி! என்றார்கள்.
6. மீண்டும் சாமுவேல் மக்களிடம் கூறியது: ஆண்டவர் தம் மோசையையும் ஆரோனையும் நியமித்து, உங்கள் மூதாயதரை எகிப்து நாட்டினின்று கொண்டு வந்தார்.
7. ஆண்டவர் திருமுன் நில்லுங்கள். உங்களுக்காகவும் உங்கள் மூதாதையருக்காகவும் ஆண்டவர் செய்த அனைத்து மீட்பின் செயல்களையும் முன் வைத்து அவர் முன்னிலையில் உங்களோடு வழக்காடுவேன்.
8. யாக்கோபு எகிப்திற்குச் சென்ற பின்,உங்கள் மூதாதையர் ஆண்டவரிடம் கூக்குரலிட்டபோது, அவர் மோசையையும் ஆரோனையும் அனுப்பினர். அவர்கள் உங்கள் மூதாயதரை எகிப்தினின்று கொண்டுவந்து இவ்விடத்தில் குடியேறவைத்தனர்.
9. உங்கள் மூதாதையர் கடவுளாகிய ஆண்டவரை மறந்தபோது, அவர் அவர்களை ஆசோரின் படைத்தலைவன் சீசராவின் கையிலும், பெலிஸ்தியரின் கையிலும் மோவாபு அரசரின் கையிலும் விட்டு விட்டார். இவர்கள் அவர்களோடு போரிட்டனர்.
10. அவர்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்டு, நாங்கள் ஆண்டவரை புறக்கணித்தோம். பாகால்களையும் அஸ்தரோத்துகளையும் வழிப்பட்டு பாவம் செய்துள்ளோம். இப்போது எங்களை எங்கள் எதிரிகளிடமிருந்து விடுவியும். நாங்கள் உங்களையே வழிபடுவோம் என்றனர்.
11. ஆண்டவர் எருபாகால், பேதான், இப்தாகு, சாமுவேல் ஆகியோரை அனுப்பி, சுற்றிலுமிருந்த உங்கள் எதிரிகளின் கையினின்று உங்களை விடுவித்தார். நீங்களும் அச்சமின்றி வாழ்ந்தீர்கள்.
12. அம்மோனிய அரசன் நாகாசு உங்களை எதிர்த்து வருவதைக் கண்டபொழுது நீங்கள், இல்லை, எங்களை அரசாள எங்களுக்கு ஓர் அரசர் வேண்டும்! என்று உன்னிடம் கூறினீர்கள்.
13. இதோ நீங்கள் விரும்பிக் கூர்ந்து கொண்ட அரசர்! நீங்கள் வேண்டியவாறு உங்களை ஆள ஆண்டவர் ஓர் அரசரைத் தந்துள்ளார்.
14. நீங்கள