|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள்

Holy Bible - Old Testament
Book 4. Numbers
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 4. எண்ணிக்கை
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
1. இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார். அவர் கூறியது:
2. இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாகக் கணக்கெடுங்கள்.
3. இஸ்ரயேலில் இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க அனைவரையும் அணி அணியாக நீயும், ஆரோனும் எண்ணுங்கள்.
4. ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவன் உங்களோடிருப்பான்: அவன் தன் மூதாதையரின் வீட்டுத் தலைவனாக இருக்க வேண்டும்.
5. உங்களுக்குத் துணை நிற்க வேண்டியவர்களின் பெயர்களாவன: ரூபன் குலத்திலிருந்து எலிட்சூர்: இவன் செதேயூர் மகன்:
6. சிமியோன் குலத்திலிருந்து செலுமியேல்: இவன் சுரிசத்தாய் மகன்:
7. யூதா குலத்திலிருந்து நகுசோன்: இவன் அம்மினதாபின் மகன்:
8. இசக்கார் குலத்திலிருந்து நெத்தனியேல்: இவன் சூவார் மகன்:
9. செபுலோன் குலத்திலிருந்து எலியாபு: இவன் கேலோன் மகன்:
10. யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் குலத்திலிருந்து எலிசாமா: இவன் அம்மிகூதின் மகன்: மனாசே குலத்திலிருந்து கமாலியேல்: இவன் பெதாசூரின் மகன்:
11. பென்யமின் குலத்திலிருந்து அபிதான்: இவன் கிதயோனின் மகன்:
12. தாண் குலத்திலிருந்து அகியசேர்: இவன் அம்மிசத்தாயின் மகன்:
13. ஆசேர் குலத்திலிருந்து பகியேல்: இவன் ஒக்ரானின் மகன்:
14. காத்து குலத்திலிருந்து எல்யாசாபு: இவன் தெகுவேலின் மகன்:
15. நப்தலி குலத்திலிருந்து அகிரா: இவன் ஏனானின் மகன்:
16. மக்கள் கூட்டமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் மூதாதையர் குலங்களின் முதல்வர்களும் இஸ்ரயேலில் ஆயிரவர் தலைவர்களும் ஆவர்.
17. பெயர் குறிக்கப்பட்ட இவர்களை மோசேயும் ஆரோனும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர்.
18. இரண்டாம் மாதம் முதல் நாளன்று அவர்கள் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுகூட்டினர். அவர்கள் தங்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக இருபதோ அதற்குமேலோ வயதுடையவர்களைப் பதிவு செய்தனர்.
19. ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தும் இதுவே: அவ்வாறே அவர் சீனாய்ப் பாலைநிலத்தில் அவர்களை எண்ணினார்.
20. இஸ்ரயேலின் தலைப்பேறான ரூபன் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக, இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்:
21. ரூபன் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தாறாயிரத்து ஜந்நூறு பேர்.
22. சிமியோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாக இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்:
23. சிமியோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஜம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு பேர்.
24. காத்து மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
25. காத்து குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர்.
26. யூதா மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
27. யூதா குலத்தில் எண்ணப்பட்டோர் எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர்.
28. இசக்கார் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
29. இசக்கார் குலத்தில் எண்ணப்பட்டோர் ஜம்பத்து நாலாயிரத்து நானு¡று பேர்.
30. செபுலோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
31. செபுலோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஜம்பத் தேழாயிரத்து நானு¡று பேர்.
32. யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
33. எப்ராயிம் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பதாயிரத்து ஜந்நூறுபேர்.
34. மனாசே மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
35. மனாசே குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
36. பென்யமின் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
37. பென்யமின் குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தையாயிரத்து நானு¡று பேர்.
38. தாண் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
39. தாண் குலத்தில் எண்ணப்பட்டோர் அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர்.
40. ஆசேர் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
41. ஆசேர் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தோராயிரத்து ஜந்நூறு பேர்.
42. நப்தலி மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:
43. நப்தலி குலத்தில் எண்ணப்பட்டோர் ஜம்பத்து மூவாயிரத்து நானு¡று பேர்.
44. மூதாதையர் ஒவ்வொருவரின் வீட்டு முதல்வர்களான தலைவர் பன்னிருவரின் துணையுடன் மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இவர்களே.
45. ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:
46. மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஜந்நூற்றைம்பது பேர்.
47. ஆனால் இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை.
48. ஏனெனில் ஆண்டவர் மோசேயிடம் சொன்னது:
49. லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்: இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்:
50. லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள், அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள் ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து: அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும் சுமந்து செல்ல வேண்டியவர்கள்: அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள்.
51. புறப்பட வேண்டிய நேரத்தில் லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பர்: கூடாரம் இடிக்கும்போது லேவியரே அதனை எழுப்பி நிறுத்துவர். வேறு எவனும் அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான்.
52. இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர்.
53. லேவியரோ இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் மேல் சினம் வராதபடி உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்குவர்: உடன்படிக்கைக் கூடாரத்தைக் காவல் செய்ய வேண்டியவரும் லேவியரே.
54. இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர்.
அதிகாரம் 2
1. ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2. இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் கொடி, மூதாதையர் வீட்டுச் சின்னங்கள் இவற்றின்படி பாளையமிறங்குவர்: எல்லாப் பக்கத்திலிருந்தும் சந்திப்புக் கூடாரத்தை நோக்கியவாறு அவர்கள் பாளையமிறங்குவர்.
3. கிழக்கே கதிரவன் உதயத்தை நோக்கிப் பாளையமிறங்க வேண்டியவர் யூதாவின் கொடியையுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர். யூதா மக்களின் தலைவன் நக்சோன்: இவன் அம்மினதாபின மகன்.
4. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை எழுபத்து நாலாயிரத்து அறுநூறு.
5. அவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் இசக்கார் குலத்தார்: இசக்கார் மக்களின் தலைவன் நெத்தனியேல்: இவன் சூவாரின் மகன்:
6. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஜம்பத்து நாலாயிரத்து நானு¡று.
7. அடுத்து வருவது செபுலோன் குலம்: செபுலோன் மக்களின் தலைவன் எலியாபு: இவன் கேலோனின் மகன்:
8. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஜம்பத்தேழாயிரத்து நானு¡று.
9. இவ்வாறாக யூதா அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத்தொகை ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானு¡று: இவர்கள் முதலாவதாக அணிவகுத்துச் செல்வர்.
10. தெற்கே பாளையமிறங்க வேண்டியவர் ரூபனின் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்: ரூபன் மக்களின் தலைவன் எலிட்சூர், இவன் செதேயூரின் மகன்:
11. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தாறாயிரத்து ஜந்நூறு.
12. இவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் சிமியோன் குலத்தார்: சிமியோன் மக்களின் தலைவன் செலுமியேல், இவன் சுரிசத்தாயின் மகன்:
13. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஜம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு.
14. அடுத்து வருவது காத்து குலம்: காத்து மக்களின் தலைவன் எல்யாசாபு, இவன் இரகுவேலின் மகன்:
15. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது.
16. இவ்வாறாக ரூபன் அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத் தொகை ஒரு இலட்சத்து ஜம்பத்தோராயிரத்து நானு¡ற்றைம்பது: இவர்கள் இரண்டாவதாக அணிவகுத்துச் செல்வர்.
17. அதன் பின் சந்திப்புக்கூடாரம் லேவியர் அணியினரோடு ஏனைய அணியினர் நடுவே செல்லும். அவர்கள் பாளையமிறங்கும்போது செய்வது போன்றே தம் தம் வரிசையில் தம் தம் கொடியேந்தி அணிவகுத்துச் செல்வர்.
18. மேற்கே பாளையமிறங்க வேண்டியவர் எப்ராயிம் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்: எபிராயிம் மக்களின் தலைவன் எலிசாமா: இவன் அம்மிகூதின் மகன்.
19. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பதாயிரத்து ஜந்நூறு.
20. அவனையடுத்திருப்போர் மனாசே குலத்தார்: மனாசே மக்களின் தலைவன் கமாலியேல், இவன் பெதாசூரின் மகன்:
21. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தீராயிரத்து இருநூறு.
22. அடுத்து வருவது பென்யமின் குலம்: பென்யமின் மக்களின் தலைவன் அபிதான்: இவன் கிதயோனியின் மகன்:
23. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தையாயிரத்து நானு¡று.
24. இவ்வாறாக எப்ராயிம் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து எண்ணாயிரத்து நூறு. அவர்கள் மூன்றாவதாக அணிவகுத்துச் செல்வர்.
25. வடக்கே பாளையமிறங்க வேண்டியவர் தாண் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்: தாண் மக்களின் தலைவன் அகியேசர்: இவன் அம்மி சத்தாயின் மகன்:
26. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை அறுபத்தீராயிரத்து எழுநூறு.
27. அவனை அடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் ஆசேர் குலத்தார்: ஆசேர் மக்களின் தலைவன் பகியேல், இவன் ஒக்ரானின் மகன்:
28. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தோராயிரத்து ஜந்நூறு.
29. அடுத்து வருவது நப்தலிக் குலம்:நப்தலி மக்களின் தலைவன் அகிரா: இவன் ஏனானின் மகன்:
30. எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஜம்பத்து மூவாயிரத்து நானு¡று.
31. இவ்வாறாக, தாண் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து ஜம்பத்தேழாயிரத்து அறுநூறு. இவர்கள் அணிவகுப்பில் இறுதியாகச் செல்வர்.
32. தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இவர்களே: அனைத்துப் பாளையங்களிலும் தங்களைச் சார்ந்த அணியினரோடு எண்ணப்பட்டோரின் தொகை ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஜந்நூற்றைம்பது.
33. ஆனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி லேவியர் இஸ்ரயேல் மக்களுள் எண்ணப்படவில்லை.
34. ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கொடிகளைச் சுற்றிப் பாளையமிறங்கி தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின்படி அணிவகுத்துச் சென்றனர்.
அதிகாரம் 3
1. ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயுடன் பேசிய காலத்தில் ஆரோன், மோசே ஆகியோரின் வழிமரபினர் இவர்களே:
2. ஆரோனின் புதல்வர் பெயர்கள் இவையே: தலைமகன் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.
3. இவை குருத்துவப் பணிக்கென அருள்பொழிவு பெற்றுத் திருநிலைப்படுத்தப்பட்ட குரு ஆரோனின் புதல்வர் பெயர்கள்:
4. ஆனால் நாதாபும் அபிகூவும் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் திருமுன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்ததால் ஆண்டவர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர்: அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே எலயாசரும் இத்தாமரும் தங்கள் தந்தை ஆரோன் முன்னிலையில் குருக்களாகப் பணியாற்றினர்.
5. மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
6. லேவிக் குலத்தை அழைத்து வந்து குரு ஆரோன் முன் அவர்களை நிறுத்து: அவர்கள் அவனுக்குப் பணிவிடை செய்யட்டும்.
7. திருஉறைவிடத்தில் அவர்கள் பணிசெய்யும்போது, சந்திப்புக் கூடாரத்தின் முன் அவனுக்காகவும் அனைத்து மக்கள் கூட்டமைப்புக்காகவும் தங்களுக்குரிய பொறுப்பை நிறைவேற்றுவர்.
8. சந்திப்புக் கூடாரத்தின் அனைத்துப் பணிப் பொருட்களுக்கும் பொறுப்பு அவர்களே: திருஉறைவிடத்தில் அவர்கள் பணி செய்கையில் இஸ்ரயேல் மக்களுக்கானத் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவர்.
9. லேவியரை ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் ஒப்படைத்துவிடு: இஸ்ரயேல் மக்களுள் அவர்கள் முற்றிலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டடிருக்கிறார்கள்.
10. நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் அவர்கள் குருத்துவப் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு நியமனம் செய். ஆனால் வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.
11. மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
12. இதோ! நான் இஸ்ரயேல் மக்களிலிருந்து லேவியரைப் பிரித்தெடுத்துள்ளேன்: இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறக்கும் தலைப்பேறனைத்திற்கும் இவர்கள் ஈடாக இருப்பார்கள். லேவியர் எனக்கே உரியவர்.
13. ஏனெனில் எல்லாத் தலைப்பேறும் என்னுடையது. எகிப்து நாட்டில் தலைப் பேறனைத்தையும் நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும் மனிதரையும் விலங்கையும், எனக்கெனப் புனிதப்படுத்தினேன்: அவர்கள் எனக்கே உரியவர்கள்: நானே ஆண்டவர்.
14. பின்னர் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
15. மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக லேவியின் புதல்வரைக் கணக்கெடு: ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஒவ்வோர் ஆண்பிள்ளையையும் நீ எண்ண வேண்டும்.
16. ஆண்டவர் கட்டளையிட்டுக் கூறிய அவர் வார்த்தையின்படி மோசே அவர்களை எண்ணினார்.
17. பெயர் வாரியாக லேவியின் புதல்வர் இவர்களே: கேர்சோன், கோகாத்து, மொராரி ஆகியோர்.
18. குடும்ப வாரியாகக் கேர்சேன் புதல்வர் பெயர்களாவன: லிப்னி, சிமயி.
19. குடும்ப வாரியாக கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எபிரோன், உசியேல் ஆகியோர்.
20. குடும்ப வாரியாக மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி ஆகியோர். மூதாதையர் வீடு வாரியாக லேவியர் குடும்பங்கள் இவைகளே.
21. கேர்சோனிலிருந்து லிப்னியர், சிமயியர் ஆகிய குடும்பங்கள் தோன்றின: இவை கேர்சோனியக் குடும்பங்கள்.
22. எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஏழாயிரத்து ஜந்நூறு.
23. திருஉறைவிடத்துக்குப் பின்னால் மேற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கேர்சோனியக் குடும்பங்கள்.
24. இவர்களோடிருக்கும் எல்யாசாபு கேர்சோனிய மூதாதையர் வீட்டுக் குடும்பங்களின் தலைவன், இவன் இலாவேலின் மகன்.
25. சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோன் புதல்வரின் பொறுப்பில் உள்ளவை: திருஉறைவிடம், கூடாரத்துடன் அதன் அடைப்பு, சந்திப்புக் கூடாரத்தின் வாயில் திரை,
26. தளத்திலுள்ள தொங்கு திரைகள், திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள வாயில்திரை, அதன் கயிறுகள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.
27. கோகாத்திலிருந்து தோன்றியவை அம்ராமியர் குடும்பம், எபிரோனியர் குடும்பம், உசியேலியர் குடும்பம் ஆகியவை. இவை கோகாத்தியர் குடும்பங்கள்.
28. எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் எண்ணாயிரத்து அறுநூறு பேர்: இவர்கள் தூயகத்திற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர்.
29. திருஉறைவிடத்துக்குத் தெற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கோகாத்துப் புதல்வர் குடும்பங்கள்.
30. இவர்களோடிருக்கும் எலிட்சாபான் கோகாத்தியக் குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன்: இவன் உசியேலின் மகன்.
31. அவர்களின் பொறுப்பில் உள்ளவை பேழை, மேசை, விளக்குத் தண்டு, பலிபீடங்கள், குரு தூயகப் பணிகளுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், திரை ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.
32. மேலும் குரு ஆரோன் புதல்வன் எலயாசர் லேவியர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்: தூயகத்துக்குப் பொறுப்பானவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியவன் இவனே.
33. மெராரியிடமிருந்து தோன்றியவை மக்லியர் குடும்பமும் மூசியர் குடும்பமுமாகும். இவை மெராரியின் குடும்பங்கள்.
34. எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஆறாயிரத்து இருநூறு.
35. மொராரி குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன் சூரியேல்: இவன் அபிகயிலின் மகன்: இவர்கள் திருஉறைவிடத்துக்கு வடக்கே பாளையமிறங்க வேண்டியவர்கள்.
36. மெராரி புதல்வரின் பொறுப்பில் ஒப்புவிக்கப்பட்டவை: திருஉறைவிடத்தின் சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள், அனைத்துத் துணைக்கலன்கள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.
37. சுற்றுத்தளத் தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள் ஆகியவையும் அவர்கள் பொறுப்பே.
38. திருஉறைவிடத்தின் கிழக்கே சந்திப்புக் கூடாரத்தின் முன் கதிரவன் உதிக்கும் திசையில் பாளையமிறங்க வேண்டியோர் மோசே, ஆரோன், அவன் புதல்வர், திருஉறைவிடத்தில் இஸ்ரயேல் மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்திற்கும் பொறுப்பும் உரிமையும் இவர்களுக்கே உண்டு. வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.
39. ஆண்டவர் வார்த்தைப்படி மோசேயும் ஆரோனும் லேவியரைக் குடும்பங்கள் வாரியாக எண்ணயபோது அவர்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்பிள்ளைகள் அனைவரின் தொகை இருபத்தீராயிரம்.
40. மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரையும் அவர்கள் பெயர்கள் வாரியாகக் கணக்கெடு.
41. இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறான ஆண்கள் அனைவருக்கும் பதிலாக லேவியரையும் இஸ்ரயேல் மக்களுடைய கால்நடைகளின் தலையீற்றுகள் அனைத்துக்கும் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் எனக்கென்று பிரித்தெடு: நானே ஆண்டவர்.
42. ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறுகள் அனைத்தையும் எண்ணினார்.
43. பெயர்களின் எண்ணப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரின் தொகை இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று.
44. பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
45. இஸ்ரயேல் மக்களுள் எல்லாத் தலைப்பேறுகளுக்கும் பதிலாக லேவியரையும் அவர்கள் கால்நடைகளுக்குப் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் பிரித்தெடு: லேவியர் எனக்கே உரியவர்: நானே ஆண்டவர்.
46. இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகளில் எண்ணிக்கைக்கு மேலாக, மீட்கப்பட வேண்டியவர் இருநூற்று எழுபத்து மூன்றுபேர்.
47. இருபது கேரா மதிப்புடைய தூயகத்து செக்கேலில் தலைக்கு ஜந்து செக்கேல் வீதம் வாங்கிக்கொள்.
48. எண்ணிக்கைக்கு மேலாக இருப்போர் மீட்கப்படுவதற்காக வரும் இப்பணத்தை நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுக்க வேண்டும்.
49. லேவியரால் மீட்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாயிருந்தோரிடமிருந்து வந்த மீட்புப் பணத்தை மோசே எடுத்துக் கொண்டார்.
50. இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறாயிருந்தோரிடமிருந்து அவர் எடுத்த பணம் தூயகத்து செக்கேல் கணக்குப்படி ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து செக்கேல்.
51. ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டுக் கூறியபடியே மோசே மீட்புப் பணத்தை ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் கொடுத்தார்.
அதிகாரம் 4
1. ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2. லேவியின் புதல்வர்களிலிருந்து கோகாத்தின் புதல்வரை அவர்கள் மூதாதையர், வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.
3. சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஜம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு.
4. சந்திப்புக் கூடாரத்தில் கோகாத்துப் புதல்வரின் மிகப் புனிதமானப் பணி இதுவே:
5. பாளையத்தினர் பறப்பட்டுச் செல்லும்போது ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று மூடுதிரையை இறக்கி அதனைக் கொண்டு உடன்படிக்கைப் பேழையை மூடுவர்.
6. பின் வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடி கருநீலமான ஒரு துணியை அதன் மேல் விரித்து நிலைக்கால்களில் வைப்பர்.
7. திருமுன் அப்பத்து மேசையின் மேல் அவர்கள் ஒரு நீலத்துணியை விரிப்பர்: அதன் மேல் தட்டுகள், பூக்கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை வைப்பர்: அப்பம் அதன் மேல் எப்போதும் இருக்கும்:
8. பின் அவர்கள் அவற்றின்மேல் ஒரு கருஞ்சிவப்புத் துணியை விரித்து, அவற்றை வெள்ளாட்டுத் தோலால் மூடி, நிலைக்கால்களில் வைப்பர்.
9. பின்னர் அவர்கள் ஒரு நீலத்துணியை எடுத்து அதை விளக்குத்தண்டு, அதன் விளக்குகள், அதன் திரிகள், அதன் சாம்பல் தட்டுகள் ஆகியவற்றின் மேலும் எண்ணெய்க்காகப் பயன்படுத்தும் பாத்திரங்கள் அனைத்தின் மேலும் விரிப்பர்.
10. அவர்கள் அதனை அதன் துணைக்கலன்களோடு ஒரு வெள்ளாட்டுத் தோலால் மூடி அதனைச் சுமக்கும் சட்டத்தின் மேல் வைப்பர்.
11. பின் பொற்பீடத்தின் மேல் ஒரு நீலத்துணியை அவர்கள் விரித்து, வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடிநிலைக்கால்களில் வைப்பர்.
12. தூயகப்பணியில் பயன்படுத்தும் அனைத்துப் பாத்திரங்களையும் அவர்கள் எடுத்து, அவற்றை ஒரு நீலத் துணியில் வைத்து வெள்ளாட்டுத் தோலால் அவற்றை மூடிச் சுமக்கும் சட்டத்தின்மேல் வைப்பர்.
13. அவர்கள் பலிபீடத்திலிருந்து சாம்பலை வெளியே எடுத்து அதன் மேல் ஊதாத் துணியொன்றை விரிப்பர்.
14. திருப்பணியில் பயன்படுத்தும் துணைக்கலன்களான தீச்சட்டிகள், முள்குறடுகள், சாம்பற் கரண்டிகள், கலங்கள் ஆகிய பலிபீடத்துத் துணைக்கலன்கள் அனைத்தையும் அவர்கள் அதன்மேல் வைப்பர்: வெள்ளாட்டுத்தோலை அதன் மேல் பரப்பி மூடி, அதன் நிலைக்கால்களில் வைப்பர்.
15. ஆரோனும் அவன் புதல்வரும் திருஉறைவிடத்தையும் திருஉறைவிடத்துப் பணிக்கலன்கள் அனைத்தையும் மூடியதும் பாளையத்தினர் புறப்பட்டுச் செல்வர். உடனே கோகாத்தின் புதல்வர் இவற்றைத் தூக்கிச் செல்ல வருவர்: ஆனால் சாகாதபடிக்குத் தூய பொருள்களை அவர்கள் தொடக்கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்கு உள்ளாவார்: கோகாத்தின் புதல்வர் எடுத்துச் செல்ல வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவையே.
16. விளக்கிற்கான எண்ணெய், வாசனைத் தூபம், அன்றாட உணவுப் படையல், திருப்பொழிவு எண்ணெய் ஆகியவற்றின் பொறுப்பு குரு ஆரோன் புதல்வன் எலயாசருடையது: திருஉறைவிடம் முழுவதையும், அதிலிருக்கும் அனைத்தையும், தூயகத்தையும் அதிலிருக்கும் பாத்திரங்களையும் அவனே மேற்பார்வை செய்ய வேண்டும்.
17. ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
18. லேவியருள் கோகாத்து மரபைச் சார்ந்த குடும்பங்கள் அழிந்துபடாதிருக்கட்டும்.
19. எனவே புனிதமிகு பொருள்களை அவர்கள் நெருங்கி வருகையில் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது: ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று அவர்களில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டியது பற்றியும் தூக்கிச் செல்ல வேண்டியது பற்றியும் பணிப்பர்.
20. ஆயினும் புனிதப் பொருள்கள் மூடப்படும்போது கோகாத்தியர் உள்ளே சென்று பார்க்கக் கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்குள்ளாவார்.
21. பின்னர் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
22. கேர்சோன் புதல்வர்களையும் அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.
23. சந்திப்புக் கூடாரவேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஜம்பது வயதுவரையுள்ள அனைவரையும் கணக்கெடு.
24. பணி செய்ய வேண்டியோரும் சுமைகள் தூக்க வேண்டியோருமான கேர்சோனியர் குடும்பங்களின் பணி இதுவே:
25. அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை: திருஉறைவிடத்தின் திரைகள், மூடுதிரையோடு சேர்ந்து சந்திப்புக் கூடாரம், அதன் மேலே உள்ள வெள்ளாட்டுத் தோல், மூடுதிரை, சந்திப்புக் கூடாரத்தின் வாயில்திரை,
26. சுற்றுமுற்றத் தொங்கு திரைகள். திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியிருக்கும் முற்றத்தின் வாயில்திரை, அவற்றின் கயிறுகள், அவர்களின் வேலைக்கான அனைத்துக் கருவிகள் ஆகியவை. அவை தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவர்கள் செய்வார்கள்.
27. ஆரோன், அவன் புதல்வர் கட்டளையிட்டபடியே கேர்சோனியர் புதல்வர் செய்யவேண்டிய எல்லா வேலைகளும், அதாவது அவர்கள் செய்ய வேண்டியவை. சுமக்க வேண்டியவை அனைத்தும் இருக்கும்: தூக்கிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்தையும் நீங்கள் அவர்களிடம் விட்டுவிடுங்கள்:
28. இதுவே சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோனியர் குடும்பங்கள் செய்ய வேண்டிய பணி: அவர்களின் பணி குருவாகிய ஆரோன் மகன் இத்தாமரின் மேற்பார்வையின் கீழ் இருக்கும்.
29. மெராரி புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.
30. சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் ஜப்பது வயது முதல் ஜம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு.
31. சந்திப்புக் கூடாரத்தின் மொத்த வேலையில் அவர்கள் தூக்கிச் செல்ல வேண்டியவற்றிற்கான ஏற்பாடு இதுவே: திருஉறைவிடச் சட்டங்கள், அதன் குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள்.
32. சுற்றுமுற்றத்தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான எல்லாக் கருவிகள் அவை தொடர்பான அனைத்துப் பணிகளே. அவர்கள் தூக்கிச்செல்ல வேண்டிய பொருள்களைப் பெயர் குறித்து அவர்களிடம் ஒப்புவி.
33. இதுவே சந்திப்புக் கூடாரத்தில் மெராரியர் குடும்பங்கள் செய்யவேண்டிய மொத்தப்பணி: அவர்கள் குரு ஆரோனின் மகன் இத்தாமரின் கீழ் இருப்பர்.
34. மோசேயும் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களும் சேர்ந்து கோகாத்தியர் புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடுத்தனர்.
35. சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஜம்பது வயது வரையிருந்த அனைவரையும் கணக்கெடுத்தனர்.
36. குடும்பங்கள் வாரியாக, எண்ணப்பட்டவர்களின் தொகை இரண்டாயிரத்து எழுநூற்றைம்பது:
37. மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கோகாத்தியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப்பணி செய்தோரின் மொத்தத்தொகை இதுவே.
38. தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக கேர்சோன் புதல்வருள் எண்ணப்பட்டோர்.
39. சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஜம்பது வயது வரையிருந்த அனைவரிலும்,
40. தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.
41. ஆண்டவர் வார்த்தையின்படி மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கேர்சோனியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப் பணி செய்தோரின் மொத்தத் தொகை இதுவே.
42. தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர்:
43. சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஜம்பது வயது வரையிருந்த அனைவரிலும்,
44. குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் மூவாயிரத்து இருநூறு பேர்.
45. மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர் இவர்களே.
46. மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் தலைவர்களும் எண்ணியதில் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் எல்லோரும்:
47. சந்திப்புக் கூடார வேலையில் சுமை தூக்கும் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஜம்பது வயது வரையிருந்தவர்கள்,
48. அவர்களில் எண்ணப்பட்டோர் எண்ணாயிரத்து ஜந்நூற்று எண்பது பேர்.
49. மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே அவர்களில் ஒவ்வொருவரும் பணி செய்யவும், சுமை சுமக்கவும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர் அவர்களைக் கணக்கெடுத்தார்.
அதிகாரம் 5
1. ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2. தொழுநோயர், வெட்டையுள்ளோர், பிணத்தால் தீட்டுப்பட்டோர் அனைவரையும் பாளையத்துக்குப் புறம்பாக்குமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
3. மக்களிடையே நான் தங்கியிருக்கும் பாளையத்தை அவர்கள் தீட்டுப்படுத்தி விடாதபடி ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பாக்கிவிடுங்கள்.
4. இஸ்ரயேல் மக்கள் அவ்வாறே அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பே துரத்திவிட்டனர். ஆண்டவர் மோசேயிடம் சொன்னபடியே இஸ்ரயேலர் செய்தனர்.
5. ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
6. இஸ்ரயேல் மக்களிடம் சொல்: மனிதர் ஆண்டவரை மீறிச் செய்யும் பாவங்களில் எதையும் ஓர் ஆணோ, பெண்ணோ செய்து குற்றவாளியானால்,
7. அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும்: தீங்கிழைக்கப்பட்டவனுக்கு ஈடுகட்டி, அத்துடன் ஜந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க வேண்டும்.
8. குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முறைஉறவினன் இல்லையெனில் அந்தக் குற்ற ஈட்டுத் தொகை ஆண்டவருக்கு, அதாவது குருவிடம் சேரும்: இது அவன் குற்ற நீக்கத்துக்காகச் செலுத்தும் ஈட்டுப்பலி: ஆட்டைத் தவிரச் சேர வேண்டியது,
9. இஸ்ரயேல் மக்கள் குருவிடம் கொண்டு வரும் புனிதப் பொருள்கள் அனைத்திலும் உயர்த்திப் படைப்பவை அவனையே சேரும்.
10. ஒவ்வொரு மனிதனின் புனிதப் பொருள்களும் அவனுக்குரியவை: ஆனால் அவன் குருவுக்குக் கொடுப்பது அவனையே சேரும்.
11. மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
12. இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஒருவனின் மனைவி நெறி தவறி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால்,
13. வேறொருவன் அவளோடு படுத்து உடலுறவு கொள்ள, அது அவள் கணவனின் கண்களுக்கு மறைக்கப்பட்டு அவள் கறைப்பட்டிருந்தும் கண்டு பிடிக்கப்படாதிருந்து, அவள் தவறு செய்த நிலையிலேயே பிடிக்கப்படாமலிருந்தால்,
14. வெஞ்சினத்தின் ஆவி, கணவனை ஆட்கொண்டு தன்னையே கறைப்படுத்திவிட்ட மனைவியின் மேல் அவன் வெகுண்டழுந்தால் அல்லது வெஞ்சினத்தின் ஆவி அவனை ஆட்கொண்டு தன் மனைவி தன்னையே கறைபடுத்தாதிருந்தும் அவன் வெகுண்டெழுந்தால்,
15. அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பாவாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்: அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில் அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவூட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல்.
16. பின் குரு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆண்டவர் முன் நிறுத்துவார்:
17. குரு ஒரு மண் பாத்திரத்தில் புனித நீர் எடுத்து, திருக்கூடாரத்தின் தரையில் இருந்து கொஞ்சம் துகள் எடுத்து நீரில் போடுவார்.
18. குரு அப்பெண்ணின் தலைமுடியைக் கலைத்துவிட்டு, வெஞ்சினத்தின் உணவுப் படையலாகிய நினைவுபடுத்தும் உணவுப்படையலை அவள் கைகளில் வைப்பார்: சாபத்தைக் கொண்டு வரும் கசப்பு நீரையும் குரு தன் கையில் வைத்திருப்பார்.
19. அதன் பின்னர் குரு அவளை ஆணையிடச் சொல்லிக் கூற வேண்டியது: நீ உன் கணவனின் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கும்போது வேறு எந்த மனிதனும் உன்னோடு படுக்காமலும், நீ ஒழுக்கக்கேட்டுக்கு உடன்படாமலுமிருந்தால் சாபங்களைக் கொண்டு வரும் இக்கசப்பு நீர் உன்னை ஒன்றுஞ் செய்யாது:
20. ஆனால் நீ உன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறி தவறி, உன்னையே கறைப்படுத்தி, உன் கணவன் தவிர வேறொருவன் உன்னோடு படுத்திருக்க உடன்பட்டால்
21. குரு அப்பெண்ணைச் சாப ஆணை இடச் சொல்லி அவளிடம், ஆண்டவர் உன் தொடைகள் அழுகி விழவும் உன் வய்று வீங்கவும் செய்து உன் மக்களிடையே உன்னை ஒரு சாபமாகவும், ஆணைக்கூற்றாகவும் ஆக்குவார்:
22. சாபத்தைக் கொண்டு வரும் இந்த நீர் உன் குடல்களில் இறங்கி உன் வயிற்றை வீங்கச் செய்து உன் தொடைகளை அழுகி விழச் செய்யட்டும் என்பார். அதற்கு அப்பெண் ஆமென், ஆமென் என்பாள்.
23. பின்னர் குரு இச்சாபங்களை ஓர் ஏட்டில் எழுதிக் கசப்பு நீரால் அவற்றை அழித்து விடுவார்:
24. சாபத்தைக் கொண்டுவரும் அக் கசப்பு நீரை அப்பெண் குடிக்கச் செய்வார்: சாபத்தைக் கொண்டு வரும் அந்நீர் அவளுக்குள் சென்று கொடிய வேதனையை உண்டாக்கும்.
25. குரு வெஞ்சினத்தின் உணவுப்படையலைப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி அதை ஆண்டவர் முன்னிலையில் ஆரத்தியாகக் காடடிப் பலிபீடத்துக்குக் கொண்டு வருவார்.
26. குரு அந்த உணவுப் படையிலிலிருந்து அதன் நினைவுப் பகுதியாக ஒரு கைப்பிடி எடுத்து அதனைப் பீடத்தின் மேல் எரித்து விடுவார்: இறுதியாக அப்பெண், அந்நீரைக் குடிக்கச் செய்வான்.
27. அவன் அவளை நீர் குடிக்கச் செய்யும்போது அவள் உண்மையிலேயே தன்னைக் கறைப்படுத்தித் தன் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தால் சாபத்தைக் கொண்டுவரும் நீர் அவளுக்குள் போய் கொடிய வேதனையை உண்டாக்கும்: அவள் வயிறு வீங்கி, தொடைகள் அழுகிவிடும்: அவள் தன் மக்களிடையே ஒரு சாபமாக இருப்பாள்.
28. ஆனால், அப்பெண் கறைபடாது தூயவளாயிருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது: அவள் குழந்தையைக் கருத்தரிப்பாள்.
29. வெஞ்சினத்தின் வேளைகளில் இதுவே சட்டம்: அதாவது ஒரு மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறிதவறித் தன்னையே கறைபடுத்தியிருந்தால்,
30. அல்லது வெஞ்சினத்தின் ஆவி ஒரு மனிதன் மேல் வந்து அவன் தன் மனைவி மேல் வெகுண்டெழுந்தால் அவன் அவளை ஆண்டவர் திருமுன் நிறுத்துவான்: குரு இச்சட்டத்தையெல்லாம் அவளிடம் செயல்படுத்துவார்.
31. ஆடவன் தன் குற்றப்பழி அற்றவனாவான்: பெண்ணோ தன் குற்றப்பழியைச் சுமப்பாள்.
அதிகாரம் 6
1. ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2. இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர் பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தல்,
3. திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்: திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது.
4. பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது.
5. அர்ப்பணம் செய்துகொண்ட பொருத்தனைக் காலம் முழுதும் சவரக்கத்தி அவன் தலையில் படக்கூடாது: ஆண்டவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முடியுமட்டும் அவன் தூய்மையுடன் இருப்பான்: அவன் தன் தலை முடியை நீளமாக வளர விடுவான்.
6. ஆண்டவருக்கென்று தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முழுதும் பிணத்தருகே அவன் போகக்கூடாது.
7. தன் தந்தை, தாய், சகோதரன், சகோதரி இறந்தால் கூட அவர்களுக்காகத் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது: ஏனெனில் கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதின் அடையாளம் அவன். தலையில் இருக்கிறது.
8. அர்ப்பண காலம் முழுதும் அவன் ஆண்டவருக்குத் தூய்மையாக இருப்பான்.
9. எவரேனும் திடீரென அவன் அருகே இறந்து, புனிதப்படுத்தப்பட்ட அவன் தலையைத் தீட்டுப்படுத்தினால் தூய்மைப்படுத்தும் நாளில் அவன் தன் தலையைச் சிரைத்துக் கொள்ள வேண்டும். ஏழாம் நாளில் அவன் அதைச் சிரைத்துக்கொள்வான்:
10. எட்டாம் நாளில் அவன் இரு காட்டுப் புறாக்களையோ, இரு மாடப்புறாக்குஞ்சுகளையோ சந்திப்புக் கூடாரநுழை வாயிலுக்கு குருவிடம் கொண்டு வர வேண்டும்.
11. குரு ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் ஒப்புக் கொடுப்பார்: பிணத்தை முன்னிட்டு அவன் பாவம்செய்துள்ளதால், அவனுக்காகக் கறைநீக்கம் செய்வார்: அதே நாளில் அவன் தலையையும் புனிதப்படுத்துவார்.
12. அவன் பொருத்தனை செய்த காலத்திற்காக மீண்டும் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பான்: குற்றநீக்கப்பலிக்காக ஓராண்டு ஆட்டுக்கிடாய் ஒன்றைக் கொண்டு வருவான்: அவன் அர்ப்பண நிலை தீட்டுப்பட்டதால் கடந்துவிட்ட காலம் கணக்கில் வராது.
13. அர்ப்பண காலம் நிறைவுறும் போது நாசீருக்கான சட்டம் இதுவே: சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அவன் கொண்டு வரப்படுவான்:
14. ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப் பொருள்: பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, பாவ நீக்கப் பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு ஆட்டுக்குட்டி ஒன்று, நல்லுறவுப் பலிக்காகப் பழுதற்ற ஆட்டுக்கிடாய் ஒன்று.
15. புளிப்பற்ற அப்பம் ஒரு கூடை, எண்ணெயில் மெல்லிய மாவைப் பிசைந்து செய்த நெய்யப்பங்கள், எண்ணெய் தடவிப் புளிப்பற்ற மாவால் செய்த அடைகள், அவற்றின் உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை.
16. குரு அவற்றை ஆண்டவர்முன் கொண்டு வந்து அவனுக்காகப் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நிறைவேற்றுவார்.
17. கூடையிலுள்ள புளிப்பற்ற அப்பத்தோடு ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒப்புக்கொடுப்பார்: மேலும், அவனுக்காக குரு உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் படைப்பார்:
18. நாசீர் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் மழித்து, புனிதப்படுத்தப்பட்ட தன் தலைமுடியை எடுத்து நல்லுறவுப் பலியின் அடியில் இருக்கும் நெருப்பில் போடுவான்.
19. அவன் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையை மழித்த பின்னர் குரு வெந்துகொண்டிருக்கும் ஆட்டுக்கிடாயின் முன் சந்தை எடுத்து, கூடையிலிருந்து நெய்யப்பம் ஒன்றையும் புளிப்பற்ற அடை ஒன்றையும் எடுத்து நாசீர் கைகளில் வைப்பார்.
20. அவற்றை ஆரத்திப் படையலாகக் குரு ஆண்டவர் திருமுன் காட்டுவார். ஆரத்தியாகக் காட்டப்பட்ட மார்புப்பகுதியும் உயர்த்திப் படைக்கப்பட்ட தொடையும் புனிதப் பங்காகக் குருவைச் சேரும்: அதன் பின்னரே நாசீர் திராட்சை இரசம் குடிக்கலாம்.
21. நாசீர்ப் பொருத்தனை செய்பவனுக்கான சட்டம் இதுவே: ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப்படையல், அவனது நாசீர்ப் பொருத்தனைக்கேற்ப இருக்க வேண்டும்: இது மற்றப்படி அவன் தர இயன்றதற்கு நீங்கலானது: அவனது பொருத்தனைக்கேற்பத் தன் நாசீர் அர்ப்பணத்துக்குரிய சட்டத்தின்படி அவன் செய்ய வேண்டும்.
22. ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
23. நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை:
24. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
25. ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
26. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!
27. இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
அதிகாரம் 7
1. மோசே திருஉறைவிடத்தை எழுப்பிமுடித்து, அதனை அதன் அனைத்துப் பொருள்களோடும் திருப்பொழிவு செய்து அர்ப்பணித்து. பீடத்தையும், அதன் துணைக்கலன்களோடு திருப்பொழிவு செய்து அர்ப்பணித்த நாளில்,
2. கணக்கிடப்பட்டோர்க்கு மேற்பார்வையாளராயிருந்த இஸ்ரயேல் தலைவர்கள், அவர்கள் மூதாதையர் வீட்டுத்தலைவர்கள், குலத் தலைவர்கள் ஆகியோர் காணிக்கைகள் கொணர்ந்தனர்.
3. அவர்கள் ஆண்டவர் திருமுன் இரு தலைவர்களுக்கு ஒரு வண்டியும், ஒவ்வொருவருக்கும் ஒரு மாடுமாக ஆறுகூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் திருஉறைவிடத்திற்குத் தங்கள் காணிக்கைகளாகக் கொண்டு வந்தனர்.
4. பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
5. சந்திப்புக் கூடாரப் பணியைச் செய்வதற்குப் பயன்படும்படி இவற்றைப் பெற்றுக்கொள்: ஒவ்வொருவரின் பணிக்கும் ஏற்ப இவற்றை லேவியரிடம் ஒப்படைப்பாய் .
6. அவ்வாறே மோசே வண்டிகளையும் மாடுகளையும் பெற்று லேவியரிடம் ஒப்படைத்தார்.
7. கேர்சோன் புதல்வருக்கு அவரவர் பணிக்கேற்ப இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கொடுத்தார்.
8. அவர் மெராரிப் புதல்வருக்கு அவர்கள் பணிக்கேற்ப நான்கு வண்டிகளையும், எட்டு மாடுகளையும் கொடுத்தார்: இவர்கள் பணி குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமரின் மேற்பார்வையில் இருந்தது.
9. ஆனால் கோகாத்தின் புதல்வருக்கு அவர் ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தோளில் வைத்துச் சுமக்க வேண்டிய புனிதப் பொருள்களைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தனர்.
10. மேலும் பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் அதன் அர்ப்பணத்துக்காகவும் தலைவர்கள் காணிக்கைகள் கொண்டு வந்து பலிபீடத்தின் முன்வைத்தனர்.
11. ஆண்டவர் மோசேயிடம் நாளுக்கு ஒருவராகத் தலைவர்கள் தங்கள் காணிக்கைகளைப் பலிபீட அர்ப்பணத்திற்காகக் கொண்டு வரட்டும் என்றார்.
12. முதல் நாளில் தம் காணிக்கையைக் கொண்டு வந்தவர் நகசோன், இவர் யூதா குலத்து அம்மினதாபின் மகன்.
13. அவரது காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று: உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது:
14. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது:
15. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை எரிபலிக்குரியவை.
16. பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று.
17. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து அம்மினதாபின மகன் நகசோனின் காணிக்கை இதுவே.
18. இரண்டாம் நாளில் காணிக்கை கொண்டு வந்தவர் இசக்கார் தலைவரான சூவாரின் மகன் நெத்தனியேல்.
19. அவர் கொண்டு வந்த காணிக்கை: தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
20. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது.
21. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று: இவை எரிபலிக்குரியவை.
22. பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று:
23. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து சூவாரின் மகன் நெத்தனியேலின் காணிக்கை இதுவே.
24. மூன்றாம் நாள்: செபுலோன் மக்கள் தலைவரான கேலோனின் மகன் எலியாபு.
25. அவரது காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு இருந்தது.
26. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது.
27. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று. ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை எரிபலிக்குரியவை.
28. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று:
29. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து கேலோனின் மகன் எலியாபின் காணிக்கை இதுவே.
30. நான்காம் நாள்: ரூபன் மக்களின் தலைவர் எலிட்சூர்: இவர் செதேயூரின் மகன்.
31. அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
32. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறைய தூபம் இருந்தது.
33. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று: இவை எரி பலிக்குரியவை.
34. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
35. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டுகள் செம்மறிக் கிடாய்கள் ஜந்து, செதேயூரின் புதல்வன் எலிட்சூரின் காணிக்கை இதுவே.
36. ஜந்தாம் நாள்: சிமியோன் மக்களின் தலைவர் செலுமியேல்: இவர் கரிசத்தாயின் மகன்.
37. அவர் காணிக்கை: தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
38. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது.
39. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை.
40. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று:
41. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து சுரிசத்தாயின் புதல்வன் செலுமியேலின் காணிக்கை இதுவே.
42. ஆறாம் நாள்: காத்து மக்களின் தலைவர் எல்யாசாபு: இவர் தெகுவேலின் மகன்.
43. அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரைக் கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
44. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறையத் தூபம் இருந்தது.
45. இளங்காளை ஒன்று: ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரி பலிக்குரியவை.
46. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று:
47. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து தெகுவேலின் புதல்வன் எல்யாசாபின் காணிக்கை இதுவே.
48. ஏழாம் நாள்: எப்ராயிம் மக்களின் தலைவர் எலிசாமா: இவர் அம்மிகூதின் மகன்.
49. அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
50. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறையத் தூபம் இருந்தது.
51. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை எரிபலிக்குரியவை.
52. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
53. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக் கிடாய்கள் ஜந்து அம்மிகூதின் புதல்வன் எலிசாமாவின் காணிக்கை இதுவே.
54. எட்டாம் நாள்:
55. அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித் தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
56. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறைய தூபம் இருந்தது.
57. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று: இவை எரி பலிக்குரியவை.
58. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
59. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து பெதாசூரின் புதல்வன் காமாலியேலின் காணிக்கை இதுவே.
60. ஒன்பதாம் நாள்: பென்யமின் மக்களின் தலைவர் அபிதான்: இவர்கிதயோனியின் மகன்.
61. அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
62. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறைய தூபம் இருந்தது.
63. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை.
64. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
65. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள்கள் ஜந்து கிதயோனியின் புதல்வன் அபிதானியின் காணிக்கை இதுவே.
66. பத்தாம் நாள்: தாண் மக்களின் தலைவர் அகியேசர், இவர் அம்மிசத்தாயின் மகன்.
67. அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
68. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறையத் தூபம் இருந்தது.
69. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று: இவை எரி பலிக்குரியவை.
70. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று,
71. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து அம்மிசத்தாயின் புதல்வன் அகியேசரின் காணிக்கை இதுவே.
72. பதினோராம் நாள்: ஆசேர் மக்களின் தலைவர் பகியேல், இவர் ஒக்ரானின் மகன்.
73. அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
74. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறையத் தூபம் இருந்தது.
75. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று: இவை எரிபலிக்குரியவை.
76. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று.
77. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து ஒக்ரானின் மகன் பகியேலின் காணிக்கை இதுவே.
78. பன்னிரண்டாம் நாள்: நப்தலி மக்களின் தலைவர் அகிரா, இவர் ஏனானின் மகன்:
79. அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
80. நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறையத் தூபம் இருந்தது.
81. இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக் கிடாய் ஒன்று: இவை எரி பலிக்குரியவை.
82. பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
83. நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து ஏனானின் புதல்வன் அகிராவின் காணிக்கை இதுவே.
84. பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் இஸ்ரயேல் தலைவர்களிடமிருந்து வந்த அதற்கான அர்ப்பணக்காணிக்கை இதுவே: வெள்ளித்தட்டுகள் பன்னிரண்டு, வெள்ளிக் கலங்கள் பன்னிரண்டு, பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு:
85. தூயகச் செக்கேலின்படி வெள்ளித்தட்டின் நிறை ஒன்றரை கிலோ கிராம், வெள்ளிக்கலத்தின் நிறை எண்ணூறு கிராம். ஆக, தூயகச் செக்கேலின்படி அனைத்து வெள்ளிப்பாத்திரங்களின் நிறை இருபத்தியேழு கிலோ அறுநூறு கிராம்.
86. தூபம் நிறைந்திருந்த பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு: தூயகச் செக்கேலின்படி ஒவ்வொன்றின் நிறை நூற்றுப் பதினைந்து கிராம். ஆக, பொன் பாத்திரங்கள் அனைத்தின் நிறை ஒரு கிலோ முந்நூற்றி எண்பது கிராம்.
87. எரிபலிக்கான மொத்த கால்நடைகள்: காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் பன்னிரண்டு: இவற்றின் உணவுப் படையலும், இவற்றுடன் சேரும்: பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு:
88. நல்லுறவுப் பலி செலுத்துவதற்கான மொத்தக் கால்நடைகள்: காளைகள் இருபத்துநான்கு, ஆட்டுக்கிடாய்கள் அறுபது, வெள்ளாட்டுக் கிடாய்கள் அறுபது, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் அறுபது, பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்டபின் அதன் அர்ப்பண காணிக்கை இதுவே.
89. ஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்: ஆண்டவர் அவருடன் பேசினார்.
அதிகாரம் 8
1. ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2. ஆரோனிடம் சொல்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு அகல்களும் விளக்குத் தண்டுக்கு முன்பக்கம் ஒளிதர வேண்டும் .
3. ஆரோன் அப்படியே செய்தார்: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி விளக்குத்தண்டுக்கு முன்பக்கம் ஒளி தரும்படி அதன் அகல்களை ஏற்றினார்.
4. விளக்குத் தண்டின் வேலைப்பாடு: அது பொன் அடிப்பு வேலையால் செய்யப்பட்டிருந்தது: அதன் பாதம் முதல் மலர்கள் வரை அடிப்பு வேலையால் செய்யப்பட்டது: ஆண்டவர் மோசேக்குக் காட்டிய வடிவமைப்பின்படியே அவர் விளக்குத் தண்டைச் செய்தார்.
5. ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
6. இஸ்ரயேல்மக்களிடமிருந்து லேவியரைப