|
சீராருந்தெய்வத்திருவருளாம்பூமிமுதற் பாராதியாண்டபதியேபராபரமே.
(1)
கண்ணாரக்கண்டோர்கருப்பொருள்காணாமலருள் விண்ணூடிருந்தவின்பவெற்பேபராபரமே.
(2)
சிந்தித்தவெல்லாமென்சிந்தையறிந்தேயுதவ வந்தகருணைமழையேபராபரமே.
(3)
ஆராவமுதேயரசேயானந்தவெள்ளப் பேராறேமோனப்பெருக்கேபராபரமே.
(4)
ஆரறிவாரென்னவனந்தமறையோலமிடும் பேரறிவேயின்பப்பெருக்கேபராபரமே.
(5)
உரையிறந்தவன்பருளத்தோங்கொளியாயோங்கிக் கரையிறந்தவின்பக்கடலேபராபரமே.
(6)
எத்திக்குந்தானாகியென்னிதயத்தேயூறித் தித்திக்குமானந்தத்தேனேபராபரமே.
(7)
திக்கொடுகீழ்மேலுந்திருவருளாம்பொற்பறிந்தோர் கைக்குள்வளர்நெல்லிக்கனியேபராபரமே.
(8)
முத்தெபவளமேமொய்த்தபசும்பொற்சுடரே சித்தேயென்னுள்ளத்தெளிவேபராபரமே.
(9)
கண்ணேகருத்தேயென்கற்பகமேகண்ணிறைந்த விண்ணேயானந்தவியப்பேபராபரமே.
(10)
வாக்காய்மனதாய்மனவாக்கிறந்தவர்பாற் றாக்காதேதாக்குந்தனியேபராபரமே.
(11)
பார்த்தவிடமெல்லாம்பரவெளியாய்த்தோன்றவொரு வார்த்தைசொல்லவந்தமனுவேபராபரமே.
(12)
வானந்தமண்ணினந்தம்வைத்துவைத்துப்பார்க்கவென் க்,
கானந்தந்தந்தவரசேபராபரமே.
(13)
அன்பைப்பெருக்கியெனதாருயிரைக்காக்கவந்த வின்பப்பெருக்கேயிறையேபராபரமே.
(14)
வானமெல்லாங்கொண்டமெளனமணிப் பொட்டகத்து க்,
கானபணியானவணியேபராபரமே. (15)
ஓடுமிருநிதியுமொன்றாகக்கண்டவர்க ணாடும்பொருளானநட்பேபராபரமே.
(16)
சித்தநினைவுஞ்செயுஞ்செயலுநீயெனவா ழுத்தமர்கட்கானவுறவேபராபரமே.
(17)
போதாந்தப்புண்ணியர்கள்போற்றிசயபோற்றியெனும் வேதாந்தவீட்டில்விளக்கேபராபரமே.
(18)
முத்தாந்தவீதிமுளரிதொழுமன்பருக்கே சித்தாந்தவீதிவருந்தேவேபராபரமே.
(19)
ஈனந்தருமுடலமென்னதியானென்பதற வானந்தம்வேண்டியலந்தேன்பராபரமே.
(20)
என்புருகிநெஞ்சமிளகிக்கரைந்துகரைந் தன்புருவாய்நிற்கவலந்தேன்பராபரமே.
(21)
சுத்தவறிவாய்ச்சுகம்பொருந்தினல்லாலென் சித்தந்தெளியாதென்செய்வேன்பராபரமே.
(22)
மாறாவனுபூதிவாய்க்கினல்லாலென்மயக்கந் தேறாதென்செய்வேன்சிவமேபராபரமே.
(23)
தாகமறிந்தின்பநிட்டைதாராயேலாகெடுவேன் றேகம்விழுந்திடினென்செய்வேன்பராபரமே.
(24)
அப்பாவென்னெய்ப்பில்வைப்பேயாற்றுகிலேன்போ ற்றியென்று,செப்புவதல்லால்வேறென்செய்வேன்ப ராபரமே.
(25)
உற்றறியுமென்னறிவுமுட்கருவிபோற்சவிமாண் டற்றுமின்பந்தந்திலையேயையாபராபரமே.
(26)
சொல்லாலடங்காச்சுகக்கடலில்வாய்மடுக்கி னல்லாலென்றாகமறுமோபராபரமே.
(27)
பாராயோவென்னைமுகம்பார்த்தொருகாலென்கவலை தீராயோவாய்திறந்துசெப்பாய்பராபரமே.
(28)
ஓயாதோவென்கவலையுள்ளேயானந்தவெள்ளம் பாயாதோவையாபகராய்பராபரமே.
(29)
ஓகோவுனைப்பிரிந்தாருள்ளங்கனலில்வைத்த பாகோமெழுகோபகராய்பராபரமே.
(30)
கூர்த்தவறிவத்தனையுங்கொள்ளைகொடுத்துன்னருளைப் பார்த்தவனானென்னைமுகம்பாராய்பராபரமே.
(31)
கடலமுதேதேனேயென்கண்ணேகவலைப் படமுடியாதென்னைமுகம்பார்நீபராபரமே.
(32)
உள்ளமறிவாயுழப்பறிவாய்நானேழை தள்ளிவிடின்மெத்தத்தவிப்பேன்பராபரமே.
(33)
கன்றினுக்குச்சேதாகனிந்திரங்கல்போலவெனக் கென்றிரங்குவாய்கருணையெந்தாய்பராபரமே.
(34)
எண்ணாதவெண்ணமெலாமெண்ணியெண்ணியேழை நெஞ்சம்,
புண்ணாகச்செய்ததினிப்போதும்பராபரமே.
(35)
ஆழித்துரும்பென்வேயங்குமிங்குமுன்னடிமை பாழிற்றிரிவதென்னபாவம்பராபரமே.
(36)
கற்றவறிவாலுனைநான்கண்டவன்போற்கூத்தாடிற் குற்றமென்றென்னெஞ்சேகொதிக்கும்பராபரமே.
(37)
ஐயோவுனைக்காண்பானாசைகொண்டதத்தனையும் பொய்யோவெளியாப்புகலாய்பராபரமே.
(38)
துன்பக்கண்ணீரிற்றுளைந்தேற்குன்னானந்த வின்பக்கண்ணீர்வருவதெந்நாள்பராபரமே.
(39)
வஞ்சனையும்பொய்யுமுள்ளேவைத்தழுக்காறாயுளறு நெஞ்சனுக்குமுண்டோநெறிதான்பராபரமே.
(40)
பாசம்போய்நின்றவர்போற்பாராட்டியானாலு மோசம்போனேனான்முறையோபராபரமே.
(41)
நன்றறியேன்றீதறியேனானென்றுநின்றவனா ரென்றறியேனானேழையென்னேபராபரமே.
(42)
இன்றுபுதிதன்றேயெளியேன்படுந்துயர மொன்றுமறியாயோவுரையாய்பராபரமே.
(43)
எத்தனைதான்சன்மமெடுத்தெத்தனைநான்பட்டதுய ரத்தனையுநீயறிந்ததன்றோபராபரமே.
(44)
இந்தநாட்சற்றுமிரங்கிலையேற்காலன்வரு மந்தநாட்காக்கவல்லாரார்காண்பராபரமே.
(45)
உற்றுற்றுநாடியுளமருண்டபாவியைநீ சற்றிரங்கியாளத்தகாதோபராபரமே.
(46)
எள்ளளவுநின்னைவிடவில்லாவெனைமயக்கிற் றள்ளுதலாலென்னபலன்சாற்றாய்பராபரமே.
(47)
பாடிப்படித்துலகிற்பாராட்டிநிற்பதற்கோ தேடியெனையடிமைசேர்த்தாய்பராபரமே.
(48)
சொன்னத்தைச் சொல்வதல்லாற் சொல்லறவென் சொல்லிறுதிக்,
கென்னத்தைச்சொல்வே னெளியேன் பராபரமே.
(49)
சொல்லும்பொருளுமற்றுச்சும்மாவிருப்பதற்கே யல்லும்பகலுமெனக்காசைபராபரமே.
(50)
நேசநிருவிகற்பநிட்டையலலாலுன்னடிமைக் காசையுண்டோநீயறியாதன்றேபராபரமே.
(51)
துச்சனெனவேண்டாமித்தொல்லுலகிலல்லல்கண்டா லச்சமிகவுடையேனையாபராபரமே.
(52)
கண்ணாவாரேனுமுனைக்கைகுவியாராயினந்த மண்ணாவார்நட்பைமதியேன்பராபரமே.
(53)
கொல்லாவிரதங்குவலயமெல்லாமோங்க வெல்லார்க்குஞ்சொல்லுவதென்னிச்சைபராபரமே.(54)
எத்தாற்பிழைப்பேனோவெந்தையேநின்னருட்கே பித்தானேன்மெத்தவுநான்பேதைபராபரமே.
(55)
வாயினாற்பேசாமெளனத்தைவைத்திருந்துந் தாயிலார்போனான்றளர்ந்தேன்பராபரமே.
(56)
அன்னையிலாச்செய்போலலக்கணுற்றேன்கண்ணார வென்ன
கத்திற்றாய்போலிருக்கும்பராபரமே.
(57)
உற்றுநினைக்கிற்றுயரமுள்ளுள்ளேசெந்தீயாய்ப் பற்றநொந்தேனென்னைமுகம்பார்நீபராபரமே.
(58)
பொய்யனிவனென்றுமெள்ளப்
போதிப்பார்சொற்கேட்டுக் கைவிடவும்வேண்டாமென்கண்ணேபராபரமே.
(59)
எண்ணமறிந்தேயிளைப்பறிந்தேயேழையுய்யும் வண்ணந்திருக்கருணைவையாய்பராபரமே.
(60)
நாட்டாதேயென்னையொன்றினாட்டியிதமகிதங் காட்டாதேயெல்லாநீகண்டாய்பராபரமே.
(61)
உன்னைநினைந்துன்னிறைவினுள்ளேயுலாவுமென்னை யன்னைவயிற்றின்னமடைக்கர்த்தேபராபரமே.
(62)
பரமுனக்கென்றெண்ணும்பழக்கமேமாறா வரமெனக்குத்தந்தருளென்வாழ்வேபராபரமே.
(63)
வந்தித்துநின்னைமறவாக்கடனாகச் சிந்திக்கநின்னதருள்செய்யாய்பராபரமே.
(64)
எவ்வுயிருமென்னுயிர்பேர்லெண்ணியிரங்கவுநின் றெய்வவருட்கருணைசெய்யாய்பராபரமே.
(65)
வெட்டவெளிப்பேதையன்யான்
வேறுகபடொன்ற றியேன்,சிட்டருடன்சேரனந்ததெண்டன்பராபரமே.
(66)
இரவுபகலற்றவிடத்தேகாந்தயோகம் வரவுந்திருக்கருணைவையாய்பராபரமே.
(67)
மால்காட்டிச்சிந்தைமயங்காமனின்றுசுகக் கால்காட்டிவாங்காதேகண்டாய்பராபரமே.
(68)
எப்பொருளுநீயெனவேெயண்ணிநான்றோன்றாத வைப்பையழியாநிலையாவையாய்பராபரமே.
(69)
சும்மாவிருப்பதுவேசுட்டற்றபூரணமென் றெம்மாலறிதற்கெளிதோபராபரமே.
(70)
முன்னொடுபின்பக்கமுடியடிநாப்பண்ணறநின் றன்னொடுநானிற்பதென்றோசாற்றாய்பராபரமே.
(71)
மைவ்வண்ணந்தீந்தமெளனிசொன்னதெவ்வண்ண மவ்வண்ணநிட்டையருளாய்பராபரமே.
(72)
வித்தன்றியாதும்விளைவதுண்டோநின்னருளாஞ் சித்தன்றியாங்களுண்டோசெப்பாய்பராபரமே.
(73)
ஆங்காரமற்றுன்னறிவானவன்பருக்கே தூங்காததூக்கமதுதூக்கும்பராபரமே.
(74)
சிந்தையவிழ்ந்தவிழ்ந்துசின்மயமாநின்னடிக்கே வந்தவர்க்கேயின்பநிலைவாய்க்கும்பராபரமே.
(75)
சொல்லாடாவூமரைப்போற்சொல்லிறந்துநீயாகி னல்லாலெனக்குமுத்தியாமோபராபரமே.
(76)
பேச்சாகாமோனம்பிறவாமுளைத்தென்றற் காச்சாச்சுமேற்பயனுண்டாமோபராபரமே.
(77)
கெட்டியென்றுன்னன்பர்மலங்
கெட்டயர்ந்தோர்பூ ரணமாந்,தொட்டிலுக்குட்சேய்போற்
றுயின்றார்பரா பரமே.
(78)
காட்டவருளிருக்கக்காணாதிருண்மலத்து நாட்டமெனக்குவரனன்றோபராபரமே.
(79)
எத்தன்மைக்குற்றமியற்றிடினுந்தாய்பொறுக்கு மத்தன்மைநின்னருளுமன்றோபராபரமே.
(80)
எத்தனையோதேர்ந்தாலுமென்னாலேயின்பமுண்டோ சித்துருவேயின்பச்சிவமேபராபரமே.
(81)
மண்ணொடுவிண்காட்டிமறைந்துமறையாவருளைக் கண்ணொடுகண்ணாகவென்றுகாண்பேன்பராபரமே.
(82)
பஞ்சரித்துநின்னைப்பலகாலிரந்ததெல்லா மஞ்சலெனும்பொருட்டேயன்றோபராபரமே.
(83)
எங்கெங்கேபார்த்தாலுமெவ்வுயிர்க்குமவ்வுயிரா யங்கங்கிருப்பதுநீயன்றோபராபரமே.
(84)
அனைத்துமாய்நின்றாயேயான்வேறோநின்னை நினைக்குமாறெங்கேநிகழ்த்தாய்பராபரமே.
(85)
நின்போதத்தாலேநினைப்புமறப்புமென்றா லென்போதமெங்கேயியம்பாய்பராபரமே.
(86)
ஒன்றைநினைந்தொன்றைமறந்தோடுமனமெல்லாநீ யென்றறிந்தாலெங்கேயியங்கும்பராபரமே.
(87)
கொழுந்தில்வயிரமெனக்கோதறவுள்ளன்பி லழுந்துமவர்க்கேசுகமுண்டாகும்பராபரமே.
(88)
பற்றும்பயிர்க்குப்படர்கொழுந்துபோற்பருவம் பெற்றவர்க்கேநின்னருடான்பேறாம்பராபரமே.
(89)
யோகியர்க்கேஞானமொழுங்காம்பேரன்பான தாகியரும்யோகமுன்னேசார்ந்தோர்பராபரமே.
(90)
அல்லும்பகலுமறிவாகிநின்றவர்க்கே சொல்லும்பொருளுஞ்சுமைகாண்பராபரமே.
(91)
எச்சிலென்றுபூவையிகழ்ந்தோர்க்குனைப்போற்றப் பச்சிலையுங்கிள்ளப்படுமோபராபரமே.
(92)
அந்தக்கரணமடங்கத்துறப்பதுவே யெந்தத்துறவினுநன்றெந்தாய்பராபரமே.
(93)
தன்னையறிந்தாற்றலைவன்மேற்பற்றலது பின்னையொருபற்றுமுண்டோபேசாய்பராபரமே.(94)
அன்பாற்கரைந்துகண்ணீராறுகண்டபுண்ணியருக் குன்பால்வரவழிதானுண்டோபராபரமே.
(95)
தன்னையறிந்தருளேதாரகமாநிற்பதுவே யுன்னையறிதற்குபாயம்பராபரமே
(96)
கற்றகலையானிலைதான்காணுமோகாண்பதெல்லா மற்றவிடத்தேவெளியாமன்றோபராபரமே.
(97)
கண்மூடிக்கண்விழித்துக்காண்பதுண்டோநின்னருளாம் விண்மூடினெல்லாம்வெளியாம்பராபரமே.
(98)
நேரேநினதருளென்னெஞ்சைக்கவரினொன்றும் பாரேன்சுகமும்படைப்பேன்பராபரமே.
(99)
வான்காணவேண்டின்மலையேறலொக்குமுன்னை நான்காணப்பாவனைசெய்நட்டம்பராபரமே.
(100)
வாதனைவிட்டுன்னருளின்
மன்னினல்லால்வேறுமொறு சாதனைதானுண்டோநீசாற்றாய்பராபரமே.
(101)
பாரகமும்விண்ணகமும்பற்றாகநிற்பதருட் டாரகத்தைப்பற்றியன்றோசாற்றாய்பராபரமே.
(102)
விளக்குந்தகளியையும்வேறென்னார்நின்னைத் துளக்கமறச்சீவனென்றுசொல்வார்பராபரமே.
(103)
பாராதிநீயாப்பகர்ந்தாலகமெனவு மாராயுஞ்சீவனுநீயாங்காண்பராபரமே.
(104)
பொய்யைப்பொய்யென்றறியும்போதத்துக்காதரவுன் மெய்யருளேயன்றோவிளம்பாய்பராபரமே.
(105)
வருவான்வந்தேனெனல்போன்மன்னியழியுஞ்சகத்தைத் தெரிவாகவில்லையென்றதீரம்பராபரமே.
(106)
மாயாசகமிலையேன்மற்றெனக்கோர்பற்றுமிலை நீயேநானென்றுவந்துநிற்பேன்
பராபரமே.
(107)
வானாதிநீயெனவேவைத்தமறையென்னையுநீ தானாகச்சொல்லாதோசாற்றாய்பராபரமே.
(108)
வெள்ளக்கருணைமதவேழமாநின்னருட்கென் கள்ளக்கருத்தேகவளம்பராபரமே.
(109)
வண்டாய்த்துவண்டுமௌனமலரணைமேற் கொண்டார்க்கோவின்பங்கொடுப்பாய்பராபரமே.
(110)
மாயைமுதலாம்வினைநீமன்னுயிர்நீமன்னுயிர்தேர்ந் தாயுமறிவானதுநீயன்றோபராபரமே.
(111)
என்னறிவும்யானுமெனதென்பதுவுமாமிவைக ணின்னவையேயன்றோநிகழ்த்தாய்பராபரமே.
(112)
பாரறியாதண்டப்
பரப்பறியாதுன்பெருமை யாரறிவார்நானோவறிவேன்பராபரமே.
(113)
அண்டமனைத்திலுமாயப்பாலுக்கப்பாலுங் கொண்டநின்னையாரறிந்துகொள்வார்பராபரமே.
(114)
ஒப்புயர்வொன்றின்றியொலிபுகாமோனவட்டக் கப்பாலுக்காம்வான்பொருணீகண்டாய்பராபரமே.
(115)
என்போலெளியவருமெங்கெங்கும்பார்த்தாலு முன்போல்வலியவருமுண்டோபராபரமே.
(116)
பார்க்கினண்டபிண்டப்பரப்பனைத்துநின்செயலே யார்க்குஞ்செயலிலையேயையாபராபரமே.
(117)
ஒன்றேபலவேயுருவேயருவேயோ வென்றேயழைப்பதுன்னையென்றுபராபரமே.
(118)
செப்புவதெல்லாஞ்செபநான்சிந்திப்பதெல்லாநின் னொப்பிறியானமெனவோர்ந்தேன்பராபரமே.
(119)
ஆரிருந்தென்னார்போயென்னாரமுதாநின்னருளின் சீரிருந்தாலுய்வேன்சிவமேபராபரமே.
(120)
வஞ்சநமன்வாதனைக்கும்வன்பிறவிவேதனைக்கு மஞ்சியுனையடைந்தேனையாபராபரமே.
(121)
எந்தப்படியுன்னிதயமிருந்ததெமக் கந்தப்படிவருவதன்றோபராபரமே.
(122)
எந்தெந்தநாளுமெனைப்பிரியாதென்னுயிராய்ச் சிந்தைகுடிகொண்டவருட்டேவேபராபரமே.
(123)
அஞ்சலஞ்சலென்றடிமைக்கப்போதைக்கப்போதே நெஞ்சிலுணர்த்துநிறைவேபராபரமே.
(124)
என்னையுன்றன்கைக்களித்தார்யாவரென்னையான்கொடு த்துப்,பின்னையுன்னாற்பெற்றநலம்பேசேன்பராபரமே.
(125)
வாய்பேசாவூமையெனவைக்கவென்றோநீமௌனத் தாயாகவந்தருளைத்தந்தாய்பராபரமே.
(126)
தன்னைத்தந்தென்னைத்தடுத்தாண்டநின்கருணைக் கென்னைக்கொண்டென்னபலனெந்தாய்பராபரமே.
(127)
மார்க்கண்டர்க்காகமறலிபட்டபாட்டையுன்னிப் பார்க்கினன்பர்க்கென்னப்யங்காண்பராபரமே.
(128)
சுட்டியுணராமற்றுரியநிலையாய்வெளியில் விட்டநின்னையானோவியப்பேன்பராபரமே.
(129)
சூதொன்றுமின்றியென்னைச்சும்மாவிருக்கவைத்தா யீதொன்றும்போதாதோவின்பம்பராபரமே.
(130)
வாயெரென்றும்பேசாமௌனியாய்வந்தாண்ட தேயொன்றும்போதாதோவின்பம்பராபரமே.
(131)
என்றுமிருந்தபடிக்கென்னையெனக்களித்த தொன்றும்போதாதோவுரையாய்பராபரமே.
(132)
எண்டிசைகீழ்மேலானவெல்லாம்பெருவெளியாக் கண்டவிடத்தென்னையுநான்கண்டேன்பராபரமே.
(133)
பித்தனையேதும்மறியாப்பேதையனையாண்டவுனக் கெத்தனைதான்றெண்டனிடுவேன்பராபரமே.
(134)
தாயர்கர்ப்பத்தூடனமுந்தண்ணீருந்தந்தருளு நேயவுனையாரேநினையார்பராபரமே.
(135)
விரிந்தமனமொடுங்கும்வெளையினானாகப் பரந்தவருள்வாழிபதியேபராபரமே.
(136)
சிந்தனைபோய்நானெனல்போய்த்தேக்கவின்பமாமழை யை,வந்துபொழிந்தனைநீவாழிபராபரமே.
(137)
தந்தேனேயோர்வசனந்தந்தபடிக்கின்பமுமாய் வந்தேனேயென்றனைநீவாழிபாராபரமே.
(138)
மண்ணும்விண்ணும்வந்துவணங்காவோநின்னருளைக் கண்ணுறவுட்கண்டவரைக்கண்டாற்பராபரமே.
(139)
என்றுங்கருணைபெற்றவின்பத்தபோதனர்சொல் சென்றசென்றதிக்கனைத்துஞ்செல்லும்பராபரமே.
(140)
ஆடுவதும்பாடுவதுமானந்தமாகநின்னைத் தேடுவதுநின்னடியார்செய்கைபராபரமே.
(141)
பொங்கியநின்றண்ணருளைப்புட்கலமாப்பெற்றவர்க ட்,கெங்கெழுந்தென்ஞாயிறியம்பாய்பராபரமே.
(142)
பாலரொடுபேயர்பித்தர்பான்மையெனநிற்பதுவே சீலமிகுஞானியர்தஞ்செய்கைபராபரமே.
(143)
உண்டுடுத்துப்பூண்டிங்குலகத்தார்போற்றிரியுந் தொண்டர்விளையாட்டேசுகங்காண்பராபரமே.
(144)
கங்குல்பகலற்றதிருக்காட்சியர்கள்கண்டவழி யெங்குமொருவழியேயெந்தாய்பராபரமே.
(145)
காயநிலையல்லவென்றுகாண்பாருறங்குவரோ தூயவருட்பற்றாத்தொடர்வார்பராபரமே.
(146)
அப்புமுப்பும்போன்றவயிக்யபரானந்தர்தமக் கொப்புவமைசொல்லவும்வாயுண்டோபராபரமே.
(147)
சித்தந்தெளிந்துசிவமானோரெல்லோர்க்குங் கொத்தடிமையானகுடிநான்பராபரமே.
(148)
தம்முயிர்போலெவ்வுயிருந்தானென்றுதண்ணருள்கூர் செம்மையருக்கேவலென்றுசெய்வேன்பராபரமே.
(149)
விண்ணுக்கும்விண்ணாகிமேவுமுனக்கியான்பூசை பண்ணிநிற்குமாறுபகராய்பராபரமே.
(150)
நெஞ்சகமேகோயினினைவேசுகந்தமன்பே மஞ்சனநீர்பூசைகொள்ளவாராய்பராபரமே.
(151)
கெட்டவழியாணவப்பேய்கீழாகமேலான சிட்டருனைப்பூசைசெய்வார்பராபரமே.
(152)
கால்பிடித்துமூலக்கனலைமதிமண்டலத்தின் மேலெழுப்பிற்றேகம்விழுமோபராபரமே.
(153)
பஞ்சசுத்திசெய்துநின்னைப்பாவித்துப்
பூசைசெய்தால் விஞ்சியஞானம்விளங்கும்பராபரமே.
(154)
அன்பர்பணிசெய்யவெனையாளாக்கிவிட்டுவிட்டா லின்பநிலைதானேவந்தெய்தும்பராபரமே.
(155)
மூர்த்திதலந்தீர்த்தமுறையாற்றொடங்கினர்க்கோர் வார்த்தைசொலச்சற்குருவும்வாய்க்கும்பராபரமே.
(156)
விரும்புஞ்சரியைமுதன்மெய்ஞ்ஞானநான்கு மரும்புமலர்காய்கனிபோலன்றோபராபரமே.
(157)
தானந்தவந்தருமஞ்சந்ததமுஞ்செய்வர்சிவ ஞானந்தனையணையநல்லோர்பராபரமே.
(158)
சொன்னத்தைச்சொல்லித்துடிக்கின்றவாணவப்பேய்க் கின்னல்வருவதெந்நாளெந்தாய்பராபரமே.
(159)
இன்றோவிருவினைவந்தேறியதுநானென்றோ வன்றேவிளைந்ததன்றோவாற்றேன்பராபரமே.
(160)
எண்ணமுந்தனின்னைவிட
வில்லையென்றால்யான்மு னமே,பண்ணவினையேதுபகராய்பராபரமே.
(161)
என்னையின்னதென்றறியாவேழைக்குமாகெடுவேன் முன்னைவினைகூடன்முறையோபராபரமே.
(162)
அறியாநான்செய்வினையையையாநீகூட்டுங் குறியேதெனக்குளவுகூறாய்ப்பராபரமே.
(163)
என்னைக்கெடுக்கவிசைந்தவிருவினைநோய் தன்னைக்கெடுக்கத்தகாதோபராபரமே.
(164)
வல்லமையேகாட்டுகின்றமாமாயைநானொருவ னில்லையெனினெங்கேயிருக்கும்பராபரமே.
(165)
முக்குணத்தாலெல்லாமுளைக்கப்பிரகிருதிக் கிக்குணத்தைநல்கியதாரெந்தாய்பராபரமே.
(166)
ஆற்றப்படாதுதுன்பமையவென்னாலென்மனது தேற்றப்படாதினியென்செய்வேன்பராபரமே.
(167)
பூராயமாய்மனதைப்போக்கவறியாமலையோ யாராயலைந்தனரசேபராபரமே.
(168)
சினமிறக்கக்கற்றாலுஞ்சித்தியெல்லாம்பெற்றாலு மனமிறக்கக்கல்லார்க்குவாயேன்பராபரமே.
(169)
வாதுக்குவந்தெதிர்த்தமல்லரைப்போற்பாழ்த்தமன மேதுக்குக்கூத்தாடுதெந்தாய்பராபரமே.
(170)
சூதாடுவோர்போற்றுவண்டுதுவண்டுமனம் வாதாடினென்னபலன்வாய்க்கும்பராபரமே.
(171)
கொள்ளித்தேள்கொட்டிக்
குதிக்கின்றபேய்குரங் காய்க்,கள்ளமனந்துள்ளுவதென்கண்டாய்பராபரமே.
(172)
வந்ததையும்போனதையும்வைத்துவைத்துப்பார்த்தி ருந்தாற்,சிந்தையிதமகிதஞ்சேரும்பராபரமே.
(173)
ஏறுமயிர்ப்பாலமுணர்விந்தவிடயங்கணெருப் பாறெனவுநன்றாவறிந்தேன்பராபரமே.
(174)
பொறிவழியேயேழைபொறியாயுழல்வதுநின் னறிவின்விதித்தவிதியாமோபராபரமே.
(175)
பாசசாலங்களெல்லாம்பற்றுவிடஞானவைவாள் வீசுநாளெந்நாள்விளம்பாய்பராபரமே.
(176)
எந்தவுடலேனுமெடுத்தவுடனல்லதென்று சிந்தைசெயவந்ததிறஞ்செப்பாய்பராபரமே.
(177)
பொய்யெல்லாமொன்றாப்பொருத்திவைத்தபொய்யு டலை,மெய்யென்றான்மெய்யாய்விடுமோபராபரமே.
(178)
மின்னனையபொய்யுடலைமெய்யென்றுநம்பியையோ நின்னைமறக்கைநெறியோபராபரமே.
(179)
நித்தியமொன்றில்லாதநீர்க்கும்மிழிபோன்றவுடற் கித்தனைதான்றுன்பமுண்டோலென்னேபராபரமே.
(180)
தேகமிறுமென்றுசடர்தேம்புவதென்னித்திரையி னூகமறிந்தாற்பயந்தானுண்டோபராபரமே.
(181)
ஏதைச்சுமையாவெடுப்பாரெடுத்தவுடற் சேதமுறின்யாதுபின்னேசெல்லும்பராபரமே.
(182)
தோற்பாவைநாலாட்சுமையாகுஞ்சீவனொன்றிங் கார்ப்பாலெடுத்ததெவராலேபராபரமே.
(183)
ஞாலத்தைமெய்யெனவேநம்பிநம்பிநாளுமென்றன் காலத்தைப்போக்கியென்னகண்டேன்பராபரமே.(184)
பொய்யுலகவாழ்க்கைப்புலைச்சேரிவாதனைநின் மெய்யருளின்மூழ்கின்விடுங்காண்பராபரமே.
(185)
நூலேணிவிண்ணேறநூற்குப்பருத்திவைப்பார் போலேகருவிநன்னூற்போதம்பராபரமே.
(186)
சின்னஞ்சிறியார்கள்செய்தமணற்சோற்றையொக்கு மன்னுங்கலைஞானமார்க்கம்பராபரமே.
(187)
வாசகஞானத்தால்வருமோசுகம்பாழ்த்த பூசலென்றுபோமோபுகலாய்பராபரமே.
(188)
கேட்டதையேசொல்லுங்கிளிபோலநின்னருளி னாட்டமின்றிவாய்பேசனன்றோபராபரமே.
(189)
வெளியாயருளில்விரவுமன்பர்தேக மொளியாய்ப்பிறங்கியதுமுண்டோபராபரமே.
(190)
காலமொருமூன்றுங்கருத்திலுணர்ந்தாலுமதை ஞாலந்தனக்குரையார்நல்லோர்பராபரமே.
(191)
கொல்லாவிரதமொன்றுகொண்டவரேநல்லோர்மற் றல்லாதார்யாரோவறியேன்பராபரமே.
(192)
இல்லாதகாரியத்தையிச்சித்துச்சிந்தைவழி செல்லாமைநல்லோர்திறங்காண்பராபரமே.
(193)
ஏதுவந்துமேதொழிந்துமென்னதியானென்னார்கள் போதநிலைகண்டபுலத்தோர்பராபரமே.
(194)
ஆயிரஞ்சொன்னாலுமறியாதவஞ்சநெஞ்சப் பேயரொடுகூடிற்பிழைகாண்பராபரமே.
(195)
மாயமயக்கொழிந்தார்மற்றொன்றைநாடுவரோ நேயவருணிலையினிற்பார்பராபரமே.
(196)
நித்திரையிற்செத்தபிணநேருமுடற்கிச்சைவையாச் சுத்தர்களேநல்லதுறவோர்பராபரமே.
(197)
எந்நெஞ்சமேனுமிரங்குமேநின்னருட்குக் கன்னெஞ்சருமுளரோகாட்டாய்பராபரமே.
(198)
மந்தவறிவாகியின்பம்வாயாதிருந்தலைந்தாற் சிந்தைமயங்காதோவென்செய்வேன்பராபரமே.
(199)
தேடினேன்றிக்கனைத்துந் தெண்டனிட்டேன்சிந்தை நைந்து,
வாடினேனென்மயக்கமாற்றாய்பராபரமே.
(200)
மடிமையெனுமொன்றைமறுத்தன்றோவென்னை யடிமைகொளல்வேண்டுமரசேபராபரமே.
(201)
காலர்பயந்தீரவின்பக்காற்கபயமென்றெழுந்த மாலைவளர்த்தனையேவாழிபராபரமே.
(202)
நீர்ப்புற்புதமாய்நினைவருட்கேநின்றழியப் பார்ப்பதல்லால்வேறுமொன்றைப்பாரேன்பராபரமே.
(203)
நீர்க்குமிழிபோலென்னினைவுவெளியாய்க்கரையப் பார்க்குமிடமெல்லாமென்பார்வைபராபரமே.
(204)
ஆடியோய்பம்பரம்போலாசையுடனெங்குமுனைத் தேடியோய்கின்றேனென்செய்வேன்பராபரமே.
(206)
வேதாந்தஞ்சித்தாந்தம்வேறென்னார்கண்களிக்கு நாதாந்தமோனநலமேபராபரமே.
(207)
ஏதுக்குமுன்னைவிடவில்லையென்றாலென்கருத்தைச் சோதிக்கவேண்டாநான்சொன்னேன்பராபரமே.
(208)
முத்தியிலுந்தேகமிசைமூவிதமாஞ்சித்திபெற்றோ ரெத்தனைபேரென்றுரைப்பதெந்தாய்பராபரமே.
(209)
நீயன்றிநானார்நினைவாரென்னெனெஞ்சகமார் தாயன்றிச்சூலுமுண்டோசாற்றாய்பராபரமே.
(210)
அங்கமேநின்வடிவமானசுகர்கூப்பிடநீ யெங்குமேனேனென்றதென்னேபராபரமே.
(211)
கொள்ளைவெள்ளத்தண்ணருண்மேற்கொண்டுசுழித் தார்த்திழுத்தாற்,கள்ளமனக்கப்பலெங்கேகாணும்பரா பரமே.
(212)
எக்கலையுங்கற்றுணர்ந்தோமென்றவர்க்குஞ்சம்மதஞ் சொல்,வக்கணையாலின்பம்வருமோபராபரமே.
(213)
கல்லெறியப்பாசிகலைந்துநன்னீர்காணுநல்லோர் சொல்லுணரின்ஞானம்வந்துதோன்றும்பராபரமே.
(214)
நின்னையுணர்ந்தோர்கடமைநிந்தித்தபேயறிஞ ரென்னகதிபெறுவாரெந்தாய்பராபரமே.
(215)
என்னதியானென்னலற்றோரெங்கிருந்து
பார்க்கினுநின் சன்னிதியாநீபெரியசாமிபராபரமே.
(216)
சோற்றுத்துருத்திச்சுமைசுமப்பக்கண்பிதுங்கக் காற்றைப்பிடித்தலைந்தேன்கண்டாய்பராபரமே.
(217)
உள்ளபடியொன்றையுரைக்கினவர்க்குள்ளுறவாய்க் கள்ளமின்றியன்பாய்க்களிப்பேன்பராபரமே.
(218)
அடுத்தவியல்பாகவொன்றையான்பகர்வதல்லாற்
றொடுத்ததொன்றையான்வேண்டிச் சொல்லேன்பராபரமே.
உள்ளமறியாதொருவரொன்றையுன்னிப்பேசிலையோ துள்ளியிளங்கன்றாய்த்துடிப்பேன்பராபரமே.
(220)
எல்லாருமின்புற்றிருக்கநினைப்பதுவே யல்லாமல்வேறொன்றறியேன்பராபரமே.
(221)
முன்னாண்மெய்ஞ்ஞானமுனிவர்தவமீட்டுதல்போ லிந்நாளிற்காணவெனக்கிச்சைபராபரமே.
(222)
கன்மமென்பதெல்லாங்கரிசறவேமெய்ஞ்ஞான தன்மநிலைசார்ந்ததன்பர்தன்மைபராபரமே.
(223)
கண்டுயிலாதென்னறிவின்கண்ணூடேகாட்சிபெற மண்டியபேரொளிநீவாழிபராபரமே.
(224)
நானானதன்மையென்றுநாடாமனாடவின்ப வானாகிநின்றனைநீவாழிபராபரமே.
(225)
அகத்தூடணுவணுவாயண்டமெல்லாந்தானாய் மகத்தாகிநின்றனைநீவாழிபராபரமே.
(226)
காரகமாங்கர்ப்பவரைக்கண்ணூடுமென்கண்ணே வாரம்வைத்துகாத்தனைநீவாழிபராபரமே.
(227)
புரந்தோர்தந்தேசமென்பார்பூமியைப்போராடி யிரதோருந்தம்மதென்பார்ரென்னேபராபரமே.
(228)
மூர்த்தியெல்லாம்வாழியெங்கண்மோனகுருவாழிய ருள்,வார்த்தையென்றும்வாழியன்பர்வாழிபராபரமே.
(229)
சொல்லும்பொருளுந்தொடராவருணிறைவிற் செல்லும்படிக்கருணீசெய்தாய்பராபரமே.
(230)
இற்றைவரைக்குள்ளாகவெண்ணரியசித்திமுத்தி பெற்றவர்களெத்தனைபேர்பேசாய்ப்பராபரமே.
(231)
நாடுநகருநிசானாட்டியபாளயமு மீடுசெயுமோமுடிவிலெந்தாய்பராபரமே.
(232)
தேடுந்திரவியமுஞ்சேர்ந்தமணிப்பெட்டகமுங் கூடவருந்துணையோகூறாய்பராபரமே.
(233)
தேடாததேட்டினரேசெங்கைத்துலாக்கோல்போல் வாடாச்சமனிலையில்வாழ்வார்பராபரமே.
(234)
நீராய்க்கசிந்துருகிநெட்டுயிர்த்துநின்றேனைப் பராததென்னோபகராய்ப்பராபரமே
(235)
உள்ளபொருளாவியுடன்மூன்றுமன்றேதான் கொள்ளைகொண்டநீயென்குறைதீர்பராபரமே.
(236)
ஆழ்ந்தாயேயிவ்வுலகிலல்லலெல்லாந்தீர்ந்தருளால் வாழ்ந்தாயேயென்றனைநீவாழிபராபரமே.
(237)
தாராவருளையெல்லாந்தந்தெனையுநின்னருளில் வாராயோவென்றனைநீவாழிபராபரமே.
(238)
ஆசையுன்மீதல்லாலருளியவேறுமொன்றிற் பாசம்வையேனின்கருணைப்பாங்காற்பராபரமே.
(239)
ஆதியந்தநீகுருவாயாண்டதல்லானின்னையன்றிப் போதனையுமுண்டோபுகலாய்பராபரமே
(240)
தானாகவந்துதடுத்தாண்டெனையின்ப வானாகச்செய்தவின்பவானேபராபரமே.
(241)
பற்றற்றிருக்குநெறிபற்றிற்கடன்மலையுஞ் சுற்றநினைக்குமனஞ்சொன்னேன்பராபராமே.
(242)
படிப்பற்றுக்கேள்வியற்றுப்பற்றற்றுச்சிந்தைத் துடிப்பற்றார்க்கன்றோசுகங்காண்பராபரமே.
(243)
சத்தாகிநின்றோர்சடங்களிலிங்கமென வைத்தாருமுண்டேயென்வாழ்வேபராபரமே
(244)
சித்தநிருவிகற்பஞ்சேர்ந்தாருடற்றீபம் வைத்தகர்ப்பூரம்போல்வயங்கும்பராபரமே.
(245)
ஆதிகாலத்திலெனையாண்டனையேயிப்பானீ போதியெனினெங்கேநான்போவேன்பராபரமே.
(246)
நாவழுத்துஞ்சொன்மலரோநாளுதிக்கும்பொன்மல ரோ,
தேவையுனக்கின்னதென்றுசெப்பாய்பராபரமே.(247)
கன்னறரும்பாகாய்க்கருப்புவட்டாய்க்கற்கண்டா யின்னமுதாயென்னுளிருந்தாய்பராபரமே.
(248)
சிற்பரமேதற்பரமேதெய்வசுருதிசொன்ன வற்புதமேயன்பேயறிவேபராபரமே.
(249)
அறிவிப்பானீயென்றாலைபம்புலன்கடந்தந் நெறிநிற்பார்யாரேநிகழ்த்தாய்பராபரமே.
(250)
அந்தக்கரணமெனுமாகாதபேய்களெனை வந்துபிடித்தாட்டவழக்கோபராபரமே.
(251)
ஐவரொடுங்கூடாமலந்தரங்கசேவைதந்த தெய்வவறிவேசிவமேபராபரமே.
(252)
அருளாகிநின்றசுகமாகாமலையோ விருளாகிநிற்கவியல்போபராபரமே.
(253)
அன்பரெல்லாமின்பமருந்திடவும்யானொருவன் றுன்புறுதனன்றோநீசொல்லாய்பராபரமே.
(254)
சந்ததமுநின்கருணைசாற்றுவதல்லால்வேறு சிந்தையறியேனுன்சித்தம்பராபரமே.
(255)
நானானெனக்குளறுநாட்டத்தாலென்னைவிட்டுப் போனாலுமுன்னைவிட்டுப்போகேன்பராபரமே.
(256)
இக்காயம்பொய்யன்றோரீட்டத்துனக்கபயம் புக்காதாருண்டோபுகலாய்பராபரமே.
(257)
தானாதல்பூரணமேசாருமிடமுண்டுயிரும் வானாதியுமொழுங்காய்மன்னும்பராபரமே.
(258)
உன்னுமனங்கர்ப்பூரவுண்டைபோலேகரைய மின்னுமானந்தவிளக்கேபராபரமே.
(259)
நாட்பட்டலைந்தநடுக்கமெலாந்தீரவுனக் காட்பட்டுந்துன்பமெனக்காமோபராபரமே.
(260)
பாவிபடுங்கண்கலக்கம்பார்த்துமிரங்காதிருந்தா லாவிக்குறுதுணையாரையாபராபரமே.
(261)
நின்னிறைவேதாரகமாய்நின்றுசுகமெய்தாம லென்னிறைவேபாவித்தேனென்னேபராபரமே.
(262)
நின்னைச்சரண்புகுந்தானீகாக்கல்வேண்டுமல்லா லென்னைப்புறம்விடுதலென்னேபராபரமே.
(263)
மாறாததுன்பமெல்லாம்வந்துரைத்தானின்செவியி லேறாதவாறேதியம்பாய்பராபரமே.
(264)
விஞ்சுபுலப்பாடனைத்தும்வீறுதுன்பஞ்செய்யவந்த வஞ்சுபுலவேடருக்குமாற்றேன்பராபரமே.
(265)
கன்னங்கரியநிறக்காமாதிராக்ஷசப்பேய்க் கென்னையிலக்காகவைத்ததென்னேபராபரமே.
(266)
சித்திநெறிகேட்டல்செகமயக்கஞ்சன்மமற முத்திநெறிகேட்டன்முறைகாண்பராபரமே.
(267)
சிந்தைசிதையச்சிதையாதவானந்த மெந்தவகையாலேவந்தெய்தும்பராபரமே.
(268)
கூர்த்தவறிவாலறியக்கூடாதெனக்குரவன் தேர்த்தபடிதானேதிரிந்தேன்பராபரமே.
(269)
பத்தரருந்தும்பரமசுகம்யானருந்த வெத்தனைநாள்செல்லுமியம்பாய்பராபரமே.
(270)
தீரத்தினாற்றுறவுசேராமலிவ்வுலகிற் பாரத்தனம்பேசல்பண்போபராபரமே.
(271)
இந்தவெளியினையுண்டேப்பமிடப்பேரறிவாத் தந்தவெளிக்கேவெளியாய்ச்சார்ந்தேன்பராபரமே.
(272)
உணர்த்துமுனைநாடாதுணர்ந்தவையேநாடி யிணக்குறுமென்னேழமைதானென்னேபராபரமே.
(273)
உண்டுபோலின்றாமுலகைத்திரமெனவுட் கொண்டுநான்பெற்றபலன்கூறாய்பராபரமே.
(274)
உள்ளபடியாதுமெனவுற்றுணர்ந்தேனக்கணமே கள்ளமனம்போனவழிகாணேன்பராபரமே.
(275)
சித்தமவுனஞ்செயல்வாக்கெலாமவுனஞ் சுத்தமவுனமென்பாற்றோன்றிற்பராபரமே.
(276)
எண்ணில்பலகோடியுயிரெத்தனையோவத்தனைக்குங் கண்ணிற்கலந்தவருட்கண்ணேபராபரமே.
(277)
எனக்கினியாருன்போலுமில்லையென்றால்யானு முனக்கினியானாகாவுளவேன்பராபரமே.
(278)
அண்டபிண்டங்காணேனகமும்புறமுமொன்றாக் கண்டவென்னைநீகலந்தகாலம்பராபரமே.
(279)
எத்தனையோகோடியெடுத்தெடுத்துச்சொன்னாலுஞ் சித்தமிரங்கிலையென்செய்வேன்பராபரமே.
(280)
அன்றந்தநால்வருக்குமற்புதமாநீயுரைத்த தொன்றந்தவார்த்தையெனக்குண்டோபராபரமே.
(281)
அப்பனென்றுமன்னையென்றுமாரியனென்றும்முனை யே,செப்புவதுமுன்னிலையின்சீர்காண்பராபரமே.
(282)
கட்டுங்கனமுமந்தக்காலர்வரும்போதெதிர்த்து வெட்டுந்தளமோவிளம்பாய்பராபரமே.
(283)
பேசாதமோனநிலைபெற்றன்றோநின்னருளாம் வாசரமகோசரந்தான்வாய்க்கும்பராபரமே.
(284)
கற்றாலுங்கேட்டாலுங்காயமழியாதசித்தி பெற்றாலுமின்பமுண்டோபேசாய்பராபரமே.
(285)
கண்டவடிவெல்லாங்கரைக்கின்றவஞ்சனம்போ லண்டமெல்லாநின்னருளேயன்றோபராபரமே.
(286)
தன்செயலாலொன்றுமிலைதானென்றானான்பாவி நின்செயலாய்நில்லாநினைவேன்பராபரமே.
(287)
கொலைகளவுகட்காமங்கோபம்விட்டாலன்றோ மலையிலக்காநின்னருடான்வாய்க்கும்பராபரமே.
(288)
தன்னையறியாதுசகந்தானாயிருந்துவிட்டா லுன்னையறியவருளுண்டோபராபரமே.
(289)
ஒன்றிரண்டென்றுன்னாவுணர்வுகொடுத்துள்ளபடி யென்றுமென்னைவையாயிறையேபராபரமே.
(290)
கருதுமடியார்களுளங்காணவெளியாகுந் துரியநிறைவானசுகமேபராபரமே.
(291)
பொய்குவித்தநெஞ்சனருட்பொற்பறிந்துதிக்கனைத் துங்,கைகுவித்துநிற்பதெந்தக்காலம்பராபரமே.
(292)
அத்துவிதமானவயிக்யவனுபவமே சுத்தநிலையந்நிலையார்சொல்வார்பராபரமே.
(293)
வைத்தசுவரலம்பின்மண்போமோமாயையினோர்க் கெத்தனைபோதித்துமென்னாமெந்தாய்பராபரமே.
(294)
பூட்டற்றுத்தேகமற்றுப்போகுமுன்னேநின்னருளைக் காட்டத்தகாதோவென்கண்ணேபராபரமே.
(295)
சொல்லிற்பதர்களைந்துசொன்முடிவுகாணாதார் நெல்லிற்பதர்போலநிற்பார்பராபரமே.
(296)
அழுக்காற்றானெஞ்சமழுங்கியபுன்மாக்க ளிழுக்காற்றாலின்பநலமெய்தார்பராபரமே.
(297)
தேகாதிபொய்யெனவேதேர்ந்தவுபசாந்தருக்கு மோகாதியுண்டோமொழியாய்பராபரமே.
(298)
சாதனையெல்லாமவிழத்தற்போதங்காட்டாதோர் போதனைநீநல்குவதெப்போதோபராபரமே.
(299)
ஒன்றுமறியாவிருளாமுள்ளம்படைத்தவெனக் கென்றுகதிவருவதெந்தாய்பராபரமே.
(300)
சிந்திக்குந்தோறுமென்னுட்சிற்சுகமாயூற்றூறிப் புந்திக்குணின்றவருட்பொற்பேபராபரமே
(301)
என்றுமடைந்தோர்கட்கிரங்கார்குறிப்பனைத்துங் கன்றையுதைகாலிகதைகாண்பராபரமே.
(302)
குற்றங்குறையக்குணமேலிடவருளை யுற்றவரேயாவிக்குறவாம்பராபரமே.
(303)
ஓருரையால்வாய்க்குமுண்மைக்கோரனந்தநூல்கோடி ப்,பேருரையாற்பேசிலென்னபேராம்பராபரமே.
(304)
சொல்லுஞ்சமயநெறிச்சுற்றுக்குளேசுழலு மல்லலொழிவதென்றைக்கையாபராபரமே.
(305)
பிடித்ததையேஸ்தாபிக்கும்பேராணவத்தை யடித்துத்துரத்தவல்லாரார்காண்பராபரமே.
(306)
நேசத்தானின்னைநினைக்குநினைவுடையார் ஆசைக்கடலிலழுந்தார்பராபரமே.
(307)
கள்ளாதுகட்டுணவுங்காரியமோநானொருசொல் கொள்ளாததோஷமன்றோகூறாய்பராபரமே
(308)
சென்றவிடமெல்லாந்திருவருளேதாரகமா நின்றவர்க்கேயானந்தநிட்டைபராபரமே.
(309)
நீட்சிகுறுகலில்லாநித்தியசுகாரம்பசக சாக்ஷியாமுன்னைவந்துசார்ந்தேன்பராபரமே.
(310)
வானாதிதத்துவமாய்மன்னிநின்றகாரணநீ நானாகிநிற்பதெந்தநாளோபராபரமே.
(311)
காட்டத்திலங்கிகடையவந்தாலென்னவுன்னும் நாட்டத்தினூடுவந்தநட்பேபராபரமே.
(312)
நித்திரையாய்த்தானேநினைவயர்ந்தானித்தநித்தம் செத்தபிழைப்பானதெங்கள்செய்கைபராபரமே.
(313)
இன்பநிட்டையெய்தாமல்யாதெனினுஞ்சென்றுமனம் துன்புறுதல்வன்பிறவித்துக்கம்பராபரமே.
(314)
பொய்யகலமெய்யானபோதநிலைகண்டோர்க்கோ ரையமிலையையமிலையையாபராபரமே.
(315)
மந்திரத்தையுன்னிமயங்காதெனக்கினியோர் தந்திரத்தைவைக்கத்தகாதோபராபரமே.
(316)
வின்கருணைபூத்ததென்னமேவியுயிர்க்குயிராய்த் தண்கருணைதோன்றவருடாய்நீபராபரமே
(317)
தன்மயமாய்நின்றநிலைதானேதானாகிநின்றா னின்மயமாயெல்லாநிகழும்பராபரமே.
(318)
ஏங்கியிடையுநெஞ்சவேழையைநீவாவென்றே பாங்குபெறச்செய்வதுன்மேற்பாரம்பராபரமே.
(319)
ஆண்டநின்னைநீங்காவடிமைகள்யாமாணவத்தைப் பூண்டதென்னகன்மம்புகலாய்பராபரமே.
(320)
எங்கணுநீயென்றாலிருந்தபடியெய்தாம லங்குமிங்குமென்றலையலாமோபராபரமே.
(321)
கற்குமதுவுண்டுகளித்ததல்லானின்னருளி னிற்குமதுதந்ததுண்டோநீதான்பராபரமே.
(322)
அண்டபகிரண்டமறியாதநின்வடிவைக் கண்டவரைக்கண்டாற்கதியாம்பராபரமே.
(323)
கலக்கமுறநெஞ்சைக்கலக்கித்திரும்பத் துலக்குபவனீயலையோசொல்லாய்பராபரமே.
(324)
சிந்தையுமென்போலச்செயலற்றடங்கிவிட்டால் வந்ததெலாநின்செயலாவாழ்வேன்பராபரமே.
(325)
பந்தமெலாந்தீரப்பரஞ்சோதிநீகுருவாய் வந்தவடிவைமறவேன்பராபரமே.
(326)
தானந்தமானசகசநிருவிகற்ப வானந்தநிட்டையருளையாபராபரமே.
(327)
அல்லலெல்லாந்தீரவெனக்கானந்தமாகவொரு சொல்லையென்பால்வைத்ததையென்
தொல்வேன்பராபரமே.
(328)
சிந்தைமயக்கமறச்சின்மயமாய்நின்றவுன்னைத் தந்தவுனக்கென்னையுநான்றந்தேன்பராபரமே.
(329)
மைகாட்டுமாயைமயக்கமறநீகுருவாய்க் கைகாட்டவுங்கனவுகண்டேன்பராபரமே.
(330)
மால்வைத்தசிந்தைமயக்கறவென்சென்னிமிசைக் கால்வைக்கவுங்கனவுகண்டேன்பராபரமே.
(331)
மண்ணானமாயையெல்லாமாண்டுவெளியாகவிரு கண்ணாரவுங்கனவுகண்டேன்பராபரமே.
(332)
மண்ணீர்மையாலேமயங்காதுன்கையாலென் கண்ணீர்துடைக்கவுநான்கண்டேன்பராபரமே.(333)
உள்ளதுணராவுணர்விலிமாபாவியென்றோ மெள்ளமெள்ளக்கைநெகிழவிட்டாய்பராபரமே.
(334)
எல்லாநினதுசெயலென்றெண்ணுமெண்ணமுநீ அல்லாலெனக்குளதோவையாபராபரமே.
(335)
பந்தமயக்கிருக்கப்பற்றொழிந்தேனென்றுளது மிந்தமயக்கமெனக்கேன்பராபரமே.
(336)
காட்சியெல்லாங்கண்ணைவிடக்
கண்டதுண்டோயாதினுக்கு, மாட்சியுனதருளேயன்றோபராபரமே.
(337)
எட்டுத்திசையுமொன்றாயின்பமாய்நின்றவுன்னை விட்டுப்பிரியவிடம்வேறோபராபரமே.
(338)
பிறியாதுயிர்க்குயிராய்ப்பின்னமறவோங்குஞ் செறிவேயறிவேசிவமேபராபரமே.
(339)
ஏதேதுசொன்னாலுமெள்ளளவுநீயிரங்காச் சூதேதெனக்குளவுசொல்லாய்பராபரமே.
(340)
கற்பனையாப்பாடுகின்றேன்கண்ணீருங்கம்பலையும் சொற்பனத்துங்காணேனென்சொல்வேன்பராபரமே.(341)
வன்பொன்றுநீங்காமனதிறப்பமாறாப்பேர் அன்பொன்றும்போதுமெனக்கையாபராபரமே.
(342)
ஏதுந்தெரியாவெளியேனைவாவெனநின் போதநிலைகாட்டிற்பொறாதோபராபரமே.
(343)
ஓராமலெல்லாமொழிந்தேற்குன்றெய்வவரு டாராதிருக்கத்தகுமோபராபரமே.
(344)
மோனந்தருஞானமூட்டியெனக்குவட்டா வானந்தவாழ்க்கையருளாய்பராபரமே.
(345)
வாடுமுகங்கண்டென்னைவாடாமலேகாத்த நீடுங்கருணைநிறைவேபராபரமே.
(346)
புந்தியினானின்னடியைப்போற்றுகின்றமெய்யடியார் சிந்தையிறப்போநின்
றியானம்பராபரமே.
(347)
உனக்குவமையாக்கருணையுள்ளவரும்வன்மைக் கெனக்குவமையானவருமில்லைபராபரமே.
(348)
தாயிருந்தும்பிள்ளைதளர்ந்தாற்போலெவ்விடத்து நீயிருந்துநான்றளர்ந்துநின்றேன்பராபரமே.
(349)
வாயாற்கிணறுகெட்டவாறேபோல்வாய்பேசிப் பேயானார்க்கின்பமுண்டோபேசாய்பராபரமே.
(350)
பாவமென்றாலேதும்பயமின்றிச்செய்யவிந்தச் சீவனுக்கார்போதந்தெரித்தார்பராபரமே.
(351)
இன்பநிருவிகற்பமின்றேதாவன்றெனிலோ துன்பம்பொறுப்பரிதுசொன்னேன்பராபரமே.
(352)
கற்குநிலைகற்றாற்கருவியலிழாதருளாய் நிற்குநிலைகற்பதுவேநீதம்பராபரமே.
(353)
காச்சச்சுடர்விடும்பொற்கட்டிபோனின்மலமாய்ப் பேச்சற்றவரேபிறவார்பராபரமே.
(354)
பற்றொழிந்துசிந்தைப்பதைப்பொழிந்துதானேதா னற்றிருப்பதென்றைக்கமைப்பாய்பராபரமே.
(355)
உருவெளிதான்வாதவூருத்தமர்க்கல்லாலினமுங் குருவழிநின்றார்க்குமுண்டோகூறாய்பராபரமே.
(356)
தேகமியாதேனுமொருசித்திபெறச்சீவன்முத்தி யாகுநெறிநல்லநெறியையாபராபரமே.
(357)
உலகநெறிபோற்சடலமோயவுயிர்முத்தி யிலகுமெனல்பந்தவியல்போபராபரமே.
(358)
பரமாப்பரவெளியாப்பார்ப்பதல்லான்மற்றெவர்க்குந் திரமேதுமில்லைநன்றாத்தேர்ந்தேன்பராபரமே.
(359)
தேடுவேனின்னருளைத்தேடுமுன்னேயெய்தினட மாடுவேனானந்தமாவேன்பராபரமே.
(360)
உள்ளங்குழையவுடல்குழையவுள்ளிருந்த கள்ளங்குழையவென்றுகாண்பேன்பராபரமே.
(361)
பட்டப்பகற்போலப்பாழ்த்தசிந்தைமாளினெல்லாம் வெட்டவெளியாகவிளங்கும்பராபரமே.
(362)
பார்க்கினணுபோற்கிடந்தபாழ்ஞ்சிந்தைமாளினென்னை, யார்க்குச்சரியிடலாமையாபராபரமே.
(363)
பாட்டுக்கோவன்பினுக்கோபத்திக்கோவன்பர்தங்க ணீட்டுக்கெல்லாங்குறுகிநின்றாய்பராபரமே.
(364)
முத்தாந்தவித்தேமுளைக்குநிலமாயெழுந்த சித்தாந்தமார்க்கச்சிறப்பேபராபரமே
(365)
உன்னாவெளியாயுறங்காதபேருணர்வா யென்னாவிக்குள்ளேயிருந்தாய்பராபரமே.
(366)
தத்துவமெல்லாமகன்றதன்மையர்க்குச்சின்மயமா நித்தமுத்தசுத்தநிறைவேபராபரமே.
(367)
உள்ளக்கொதிப்பகலவுள்ளுள்ளேயானந்த வெள்ளமலர்க்கருணைவேண்டும்பராபரமே.
(368)
என்னைப்புரப்பதருளின்கடனாமென்கடனா நின்னிற்பணியரவேநிற்கைபராபரமே.
(369)
தானேயாநன்னிலையைத்தந்தவருளானந்த வானேமனாதீதவாழ்வேபராபரமே.
(370)
மண்ணாதிபூதமெல்லாம்வைத்திருந்தநின்னிறைவைக் கண்ணாரக்கண்டுகளித்தேன்பராபரமே.
(371)
அறியாமையீதென்றறிவித்தவன்றேதான் பிறியாவருணிலையும்பெற்றேன்பராபரமே.
(372)
தீதெனவுநன்றெனவுந்தேர்ந்துநான்றேர்ந்தபடி யேதுநடக்கவொட்டாதென்னேபராபரமே.
(373)
கண்டவறிவகண்டாகாரமெனமெய்யறிவிற் கொண்டவர்க்கேமுத்திகொடுப்பாய்பராபரமே.
(374)
ஈறாகவல்வினைநானென்னாமலின்பசுகம் பேறாம்படிக்கடிமைபெற்றேன்பராபரமே.
(375)
பெற்றாரனுபூதிபேசாதமோனநிலை கற்றாருனைப்பிரியார்கண்டாய்பராபரமே.
(376)
நீயேநானென்றுநினைப்புமறப்புமறத் தாயேயனையவருடந்தாய்பராபரமே.
(377)
சஞ்சலமற்றெல்லாநீதானென்றுணர்ந்தேனென் னஞ்சலியுங்கொள்ளாயரசேபராபரமே.
(378)
பூதமுதனாதவனாபொய்யென்றமெய்யரெல்லாங் காதலித்தவின்பக்கடலேபராபரமே.
(379)
வாக்குமனமொன்றுபட்ட
வார்த்தையல்லால்வெவ் வேறாய்ப்,போக்குடையவார்த்தை பொருந்தேன்பராபரமே.
(380)
வன்மையின்றியெல்லா
மதித்துணர்வாய்க்காகெடுவேன் றன்மையொன்றுந்தோயாத்தடையோபராபரமே.
(381)
பத்தர்சித்தர்வாழிபரிபக்குவர்கள்வாழிசெங்கோல் வைத்தவர்கள்வாழிகுருவாழிபராபரமே.
(382)
கல்லாதேனானாலுங்கற்றுணர்ந்தமெய்யடியார் சொல்லாலேநின்னைத்தொடர்ந்தேன்பராபரமே.
(383)
சொல்லிறப்பச்சற்குருவாய்த்
தோன்றிச்சுகங்கொடுத்த நல்லுரைக்கேகொத்தடிமைநான்காண்பராபரமே.
(384)
முத்திக்குவித்தானமோனக்கரும்புவழி தித்தித்திடவிளைந்தேனேபராபரமே.
(385)
நித்திரையும்பாழ்த்தநினைவுமற்றுநிற்பதுவோ சுத்தவருணிலைநீசொல்லாய்பராபரமே.
(386)
மண்ணுமறிகடலுமற்றுளவுமெல்லாமுன் கண்ணிலிருக்கவுநான்கண்டேன்பராபரமே.
(387)
பூட்டிவைத்துவஞ்சப்பொறிவழியேயென்றனைநீ யாட்டுகின்றதேதோவறியேன்பராபரமே.
(388)
பொய்யுணர்வாயிந்தப்புழுக்கூட்டைக்காத்திருந்தே யுய்யும்வகையுமுளதோபராபரமே.
(389)
|