Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library
of India for providing a scanned images version of the work. Etext
preparation and proof-reading: This etext was produced through Distributed
Proof-reading approach. We thank the following persons for their help in the
preparation and proof-reading of the etext: Ms. Akilandeswari, GSK Ramesh, S
Karthikeyan, Ms.Nalini Karthikeyan, TS Krishnan, V Devarajan and VS
Kannan.Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram,
Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2008Project Madurai is an
open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic
texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is
kept intact.
ஆசிரியவிருத்தம்
அங்கிங்கெனாதபடி யெங்கும்ப்ரகாசமா
யானந்தபூர்த்தியாகி
யருளொடுநிறைந்ததெது
தன்னருள்வெளிக்குளே
யகிலாண்டகோடியெல்லாந்
தங்கும்படிக்கிச்சை
வைத்துயிர்க்குயிராய்த்
தழைத்ததெதுமனவாக்கினிற்
றட்டாமனின்றதெது
சமயகோடிகளெலாந்
தந்தெய்வமெந்தெய்வமென்
றெங்குந்தொடர்ந்தெதிர்
வழக்கிடவுநின்றதெது
வெங்கணும்பெருவழ்க்கா
யாதினும்வல்லவொரு
சித்தாகியின்பமா
யென்றைக்குமுள்ளதெதுமேற
கங்குல்பகலறநின்ற வெல்லையுள்தெதுவது
கருத்திற்கிசைந்ததுவே
கண்டனவெலாமோன வுருவெளியதாகவுங்
கருதியஞ்சலி
செய்குவாம்.
(1)
ஊரனந்தம்பெற்ற பேரனந்தஞ்சுற்று
முறவனந்தம்வினையினா
லுடலனந்தஞ்செயும்
வினையனந்தங்கருத்
தோவனந்தம்பெற்றபேர்
சீரனந்தஞ்சொர்க்க நரகமுமனந்தாற்
றெய்வமுமனந்தபேதந்
திகழ்கின்றசமயமு
மனந்தமதனான்ஞான
சிற்சத்தியாலுணர்ந்து
காரனந்தங்கோடி வருஷித்ததெனவன்பர்
கண்ணும்மிண்ணுந்தேக்கவே
கருதரியவானந்த மழைபொழியுமுகிலைநங்
கடவுளைத்துரியவடிவைப்
பேரனந்தம்பேசி மறையனந்தஞ்சொலும்
பெரியமவுனத்தின்வைப்பைப்
பேசருமனந்தபத ஞானவானந்தமாம்
பெரியபொருளைப்பணிகுவாம்.
(2)
அத்துவிதவத்துவைச் சொற்ப்ரகாசத்தனியை
யருமறைகண்முரசறையவே
யறிவினுக்கறிவாகி யானந்தமயமான
வாதியையநாதியேக
தத்துவசொரூபத்தை மதசம்மதம்பெறாச்
சாலம்பரகிதமான
சாசுவத்புட்கல
நிராலம்பவாலம்ப
சாந்தபதவ்யோமநிலையை
நித்தநிர்மலசகித நிஷ்ப்ரபஞ்சப்பொருளை
நிர்விஷயசுத்தமான
நிர்விகாரத்தைத் தடத்தமாய்நின்றொளிர்
நிரஞ்சனநிராமயத்தைச்
சித்தமறியாதபடி
சித்தத்தினின்றிலகு
திவ்யதேசோமயத்தைச்
சிற்பரவெளிக்குள்வளர்
தற்பரமதானபர
தேவதையையஞ்சலிசெய்வாம்
(3)
வாசாகயிங்கரிய மன்றியொருசாதன
மனோவாயுநிற்கும்வண்ணம்
வாலாயமாகவும் பழகியறியேன்றுறவு
மார்க்கத்தினிச்சைபோல
நேசானுசாரியாய்
விவகரிப்பேனந்த
நினைவையுமறந்தபோது
நித்திரைகொள்வேன்றேக நீங்குமெனவெண்ணிலோ
நெஞ்சந்துடித்தயருவேன்
பேசாதவானந்த
நிட்டைக்க்குமறிவிலாப்
பேதைக்கும்வெகுதூரமே
பேய்க்குணமறிந்திந்த
நாய்க்குமொருவழிபெரிய
பேரின்பநிட்டையருள்வாய்
பாசாடவிக்குள்ளே செல்லாதவர்க்கருள்
பழுத்தொழுகுதேவதருவே
பார்க்குமிடமெங்குமொரு
நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
(1)
தெரிவாகவூர்வன நடப்பனபறப்பன
செயற்கொண்டிருப்பன முதற்
றேகங்களத்தனையு மோகங்கொள்பௌதிகஞ்
சென்மித்தவாங்கிறக்கும்
விரிவாயபூதங்க
ளொன்றொடொன்றாயழியு
மேற்கொண்டசேடமதுவே
வெறுவெளிநிராலம்ப நிறைசூன்யமுபசாந்த
வேதவேதாந்தஞானம்
பிரியாதபேரொளி
பிறக்கின்றவருளருட்
பெற்றோர்கள்பெற்றபெருமை
பிறவாமையென்றைக்கு மிறவாமையாய்வந்து
பேசாமையாகுமெனவே
பரிவாயெனக்குநீ
யறிவிக்கவந்ததே
பரிபாககாலமலவோ
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே. (2)
ஆராயும்வேளையிற்
பிரமாதியானாலு
மையவொருசெயலுமில்லை.
யமைதியொடுபேசாத பெருமைபெறுகுணசந்த்ர
ராமெனவிருந்தபேரு
நேராகவொருகோப
மொருவேளைவரவந்த
நிறைவொன்றுமில்லாமலே
நெட்டுயிர்த்துத்தட் டழிந்துளறுவார்வசன
நிர்வாகரென்றபேரும்
பூராயமாயொன்று
பேசுமிடமொன்றைப்
புலம்புவார்சிவராத்திரிப்
போதுதுயிலோமென்ற விரதியருமறிதுயிற்
போலேயிருந்துதுயில்வார்
பாராதிதனிலுள்ள
செயலெலாமுடிவிலே
பார்க்கினின்செயலல்லவோ
பார்க்குமிடமெங்குமொரு
நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
(3)
அண்டபகிரண்டமும் மாயாவிகாரமே
ய்ம்மாயையில்லாமையே
யாமெனவுமறிவுமுண் டப்பாலுமறிகின்ற
வறிவினையறிந்துபார்க்கி
னெண்டிசைவிளக்குமொரு தெய்வவருளல்லாம்
லில்லையெனுநினைவுமுண்டிங்
கியானெனதறத்துரிய
நிறைவாகிநிற்பதே
யின்பமெனுமன்புமுண்டு
கண்டனவெலாமல்ல வென்றுகண்டனைசெய்து
கருலிகரணங்களோயக்
கண்மூடியொருகண
மிருக்கவென்றாற்பாழ்த்த
கர்மங்கள்போராடுதே
பண்டையுளகர்மமே கர்த்தாவெனும்பெயர்ப்
பக்ஷநானிச்சிப்பனோ
பார்க்குமிடமெங்குமொரு
நீக்கமறநிறைகின்ற
ப்ரிபூரணானந்தமே.
(4)
சந்ததமுமெனதுசெய னினதுசெயலியானெனுந்
தன்மைநினையன்றியில்லாத்
தன்மையால்வேறலேன்
வேதாந்தசித்தாந்த
சமரசசுபாவமிதுவே
யிந்தநிலைதெளியநா னெக்குருகிவாடிய
வியற்கைதிருவுளமறியுமே
யிந்நிலையிலேசற்
றிருக்கவென்றான்மடமை
யிதசத்ருவாகவந்து
சிந்தைகுடிகொள்ளுதே மலமாயைகன்மந்
திரும்புமோதொடுவழக்காய்ச்
சென்மம்வருமோவெனவும்
யோசிக்குதேமனது
சிரத்தையெனும்வாளுமுதவிப்
பந்தமறமெய்ஞ்ஞான தீரமுந்தந்தெனைப்
பாதுகாத்தருள்செய்குவாய்
பார்க்குமிடமெங்குமொரு
நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
(5)
பூதலயமாகின்ற மாயைமுதலென்பர்சிலர்
பொறிபுலனடங்குமிடமே
பொருளென்பர்சிலர்கரண
முடிவென்பர்சிலர்குண்ம்
போனவிடமென்பர்சிலபேர்
நாதவடிவென்பர்சிலர்
விந்துமயமென்பர்சிலர்
நட்டநடுவேயிருந்த
நாமென்பர்சிலருருவ மாமென்பர்சிலர்கருதி
நாடிலருளென்பர்சிலபேர்
பேதமறவுயிர்கெட்ட
நிலையமென்றிடுவர்சிலர்
பேசினருவென்பர்சிலபேர்
பின்னுமுன்னுங்கெட்ட
சூனியமதென்பர்சிலர்
பிறவுமேமொழிவரிவையாற்
பாதரசமாய்மனது சஞ்சலப்படுமலாற்
பரமசுகநிஷ்டைபெறுமோ
பார்க்குமிடமெங்குமொரு
நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே
(6)
அந்தகாரத்தையோ ரகமாக்கிமின்போலென்
னறிவைச்சுருக்கினவரா
ரவ்வறிவுதானுமே
பற்றினதுபற்றா
யழுந்தவுந்தலைமீதிலே
சொந்தமாயெழுதப் படித்தார்மெய்ஞ்ஞான
சுகநிஷ்டைசேராமலே
சோற்றுத்துருத்தியைச்
சதமெனவுமுண்டுண்டு
தூங்கவைத்தவரார்கொலோ
தந்தைதாய்முதலான வகிலப்ரபஞ்சந்
தனைத்தந்ததெனதாசையோ
தன்னையேநோவனோ
பிறரையேநோவனோ
தற்காலமதைநோவனோ
பந்தமான துதந்த வினையையேநோவனோ
பரமார்த்தமேதுமறியேன்
பார்க்குமிடமெங்குமொரு
நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
(7)
வாராதெலாமொழிய வருவனவெலாமெய்த
மனதுசாக்ஷியதாகவே
மருவநிலைதந்ததும் வேதாந்தசித்தாந்த
மரபுசமரசமாகவே
பூராயமாயுணர
வூகமதுதந்தாதும்
பொய்யுடலைநிலையன்றெனப்
போதநெறிதந்ததுஞ் சாசுவதவானந்த
போகமேவீடென்னவே
நீராளமாயுருக
வுள்ளன்புதந்தது
நின்னதருளின்னுமின்னு
நின்னையேதுணையென்ற வென்னையேகாக்கவொரு
நினைவுசற்றுண்டாகிலோ
பாராதியறியாதமோனமேயிடைவிடாப்
பற்றாகநிற்கவருள்வாய்
பார்க்குமிடமெங்குமொரு
நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
(8)
ஆழாழிகரையின்றி நிற்கவிலையோகொடிய
வாலமமுதாகவிலையோ.
வக்கடலின்மீதுவட
வனனிற்கவில்லையோ
வந்தரத்தகிலகோடி
தாழாமனிலைநிற்க வில்லையோமேருவுந்
தனுவாகவளையவிலையோ
சப்தமேகங்களும்
வச்ரதரனாணையிற்
சஞ்சரித்திடவில்லையோ
வாழாதுவாழவே யிராமனடியாற்சிலையு
மடமங்கையாகவிலையோ
மணிமந்த்ரமாதியால்
வேண்டுசித்திகளுலக
மார்க்கத்தில்வைக்கவிலையோ
பாழானவென்மனங் குவியவொருதந்திரம்
பண்ணுவதுனக்கருமையோ
பார்க்குமிடமெங்குமொரு
நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே.
(9)
ஆசைக்கொரளவில்லை யகிலமெல்லாங்கட்டி
யாளினுங்கடன்மீதிலே
யாணைசெலவேநினைவ ரளகேசனிகராக
வம்பொன்மிகவைத்தபேரு
நேசித்துரசவாத
வித்தைக்கலைந்திடுவர்
நெடுநாளிருந்தபேரு
நிலையாக்வேயினுங் காயகற்பந்தேடி
நெஞ்சுபுண்ணாவரெல்லாம்
யோசிக்கும்வேளையிற்
பசிதீரவுண்பது
முறங்குவதுமாகமுடியு
முன்னதேபோதுநா னானெனக்குளறியே
யொன்றைவிட்டொன்றுபற்றிப்
பாசக்கடற்குளே
வீழாமன்மனதற்ற
பரிசுத்தநிலையையருள்வாய்
பார்க்குமிடமெங்குமொரு
நீக்கமறநிறைகின்ற
பரிபூரணானந்தமே
(10)
நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய்
நிராமயமாய் நிறைவாய்நீங்காச்
சுத்தமுமாய்த்
தூரமுமாய்ச் சமீபமுமாய்த்
துரியநிறை
சுடராயெல்லாம்
வைத்திருந்ததாரகமா யானந்தமயமாகி
மனவாக்கெட்டாச்
சித்துருவாய்நின்றவொன்றைச் சுகாரம்பப்
பெருவெளியைச் சிந்தைசெய்வாம். (1)
யாதுமனநினையுமந்த
நினைவுக்கு
நினைவாகி
யாதின்பாலும்
பேதமறநின்றுயிருக் குயிராகி
யன்பருக்கே
பேரானந்தக்
கோதிலமுதூற்றரும்பிக்குணங்குறியொன்றறத்
தன்னைக் கொடுத்துக்காட்டுந்
தீதில்பராபரமான
சித்தாந்தப்
பேரொளியைச் சிந்தைசெய்வாம்.
(2)
பெருவெளியாயைம் பூதம் பிறப்பிடமாய்ப்
பேசாத பெரியமோனம்
வருமிடமாய் மனமாதிக்கெட்டாத
பேரின்ப மயமாய்ஞானக்
குருவருளாற்காட்டிடவு
மன்பரைக்கோத்தற
விழுங்கிக்
கொண்டப்பாலுந்
தெரிவரிதாய்க்கலந்ததெந்தப் பொருளந்தப்
பொருளினையாஞ் சிந்தைசெய்வாம். (3)
இகபரமுமுயிர்க்குயிரை
யானெனதற்ற
வருறவை யெந்தநாளுஞ்
சுகபரிபூரணமான
நிராலம்ப
கோசரத்தைத் துரியவாழ்வை
யகமகிழவருந்தேனை
முக்கனியைக்
கற்கண்டையமிர்தைநாடி
மொகுமொகெனவிருவிழிநீர் முத்திறைப்பக்கர
மலர்கண் முகிழ்த்துநிற்பாம். (4)
சாதிகுலம்பிறப்பிறப்புப்
பந்த
முத்தியருவுருவத்தன்மைநாம
மேதுமின்றியெப்பொருட்கு மெவ்விடத்தும்
பிரிவறநின் றியக்கஞ்செய்யுஞ்
சோதியைமாத்தூவெளியை
மனதவிழ
நிறைவான துரியவாழ்வைத்
தீதில்பரமாம்பொருளைத்
திருவருளே
நினைவாகச் சிந்தைசெய்வாம்.
(5)
இந்திரசாலங்கனவு கானலினீரெனவுலக
மெமக்குத்தோன்றச்
சந்ததமுஞ் சிற்பரத்தாலழியாத
தற்பரத்தைச் சார்ந்துவாழ்க
புந்திமகிழுறநாளுந் தடையறவானந்த
வெள்ளம் பொலிகவென்றே
வந்தருளுங்குருமௌனி மலர்த்தாளையனு
தினமும் வழுத்தல்செய்வாம். (6)
பொருளாகக்கண்டபொரு ளெவைக்கு
முதற்பொருளாகிப் போதமாகித்
தெருளாகிக்கருதுமன்பர்
மிடிதீரப்
பருகவந்த
செழுந்தேனாகி
யருளானோர்க்ககம்புறமென்
றுன்னாத
பூரணவானந்தமாகி
யிருடீரவிளங்குபொரு ளியாதந்தப்பொருளினை
யாமிறைஞ்சி நிற்பாம் (7)
அருமறையின்சிரப்பொருளாய்
விண்ணவர்
மாமுனிவர்சித்த
ராதியானோர்
தெரிவரியபூரணமாய்க் காரணங்கற்பனை
கடந்த
செல்வமாகிக்
கருதரியமலரின்மண மெள்ளிலெண்ணெயுடலுயிர்
போற் கலந்தெந்நாளுந்
துரியநடுவூடிருந்த பெரிய
பொருளியாததனைத் தொழுதல்செய்வாம் (8)
விண்ணாதிபூதமெல்லாந்
தன்னகத்திலடக்கி
வெறுவெளியாய்ஞானக்
கண்ணாரக்
கண்டவன்பர் கண்ணூடேயானந்தக்
கடலாய்வேறொன்
றெண்ணாதபடிக்கிரங்கித் தானாகச்செய்தருளு
மிறையேயுன்றன்
றண்ணாருஞ்சாந்தவரு டனைநினைந்துகரமலர்க
டலைமேற்கொள்வாம். (9)
விண்ணிறைந்தவெளியாயென் மனவெளியிற்
கலந்தறிவாம் வெளீயினூடுந்
தண்னிறைந்தபேரமுதாய்ச் சதானந்தமான
பெருந்தகையே நின்பா
லுண்ணிறைந்தபேரன்பா லுள்ளுருகி
மொழிகுளறியுவகையாகிக்
கண்ணிறைந்தபுனலுகுப்பக்
கரமுகிழ்ப்ப
நின்னருளைக் கருத்தில்வைப்பாம்
(10)
(வேறு)
ஆதியந்தங்காட்டாத முதலாயெம்மை
யடிமைக்கா வளர்ந்தெடுத்தவன்னைபோல
நீதிபெருங்குருவாகிமனவாக்கெட்டா
நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமலமாகி
வாதமிடுஞ்
சமயநெறிக்கரியதாகி
மௌனத்தோர்பால் வெளியாம்
வயங்காநின்ற
சோதியையென்னுயிர்த்துணையை நாடிக்கண்ணீர்
சொரியவிரு கரங்குவித்துத் தொழுதல்செய்வாம்.
(11)
அகரவுயிரெழுத்தனைத்துமாகிவேறா
யமர்ந்ததென
வகிலாண்ட மனைத்துமாகிப்
பகர்வன வெல்லாமாகியல்லவாகிப்
பரமாகிச்சொல்லரிய பான்மையாகித்
துகளுறு சங்கற்ப விகற்பங்களெல்லாந்
தோயாத வறிவாகிச் சுத்தமாகி
நிகரில் பசுபதியான
பொருளைநாடி
நெட்டுயிர்த்துப் பேரன்பானினைதல் செய்வாம்.
(12)
அங்கைகொடுமல்ர்தூவி
யங்கமதுபுளகிப்ப
வன்பினாலுருகிவிழிநீ
ராறாகவாராத முத்தியினதாவேச
வாசைக்கடற்குண்மூழ்கிச்
சங்கரசுயம்புவே
சம்புவேயெனவுமொழி
தழுதழுத்திடவண்ங்குஞ்
சன்மார்க்கநெறியிலாத்
துன்மார்க்கனேனையுந்
தண்ணருள்கொடுத்தாள்வையோ
துங்கமிகுபக்குவச் சனகன்முதன்முனிவோர்க
டொழுதருகில்வீற்றிருப்பச்
சொல்லரியநெறியையொரு சொல்லாலுணர்த்தியே
சொரூபானுபூதிகாட்டிச்
செங்கமலபீடமேற் கல்லாலடிக்குள்வளர்
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே. (1)
ஆக்கையையெனுமிடிகரையை மெய்யென்றடா
வினானத்துவிதவாஞ்சையாத
லரியகொம்பிற்றேனை முடவனிச்சித்தபடி
யாகுமறிவவிழலின்பந்
தாக்கும்வகையேதிநாட் சரியைகிரியாயோக
சாதனம்விடுத்ததெல்லாஞ்
சன்மார்க்கமல்லவிவை நிற்கவென்மார்க்கங்கள்
சாராதபேரறிவதாய்
வாக்குமனமணுகாத பூரணப்பொருள்வந்து
வாய்க்கும்படிக்குபாயம்
வருவித்துவட்டாத பேரின்பமானசுக
வாரியினைவாய்மடுத்துத்
தேக்கித்திளைக்கநீ முன்னிற்பதென்ற்றுகாண்
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே. (2)
ஔவியமிருக்கநா னென்கின்றவாணவ
மடைந்திட்டிருக்கலோப
மருளின்மைகூடக்
கலந்துள்ளிருக்கமே
லாசாபிசாசமுதலாம்
வெவ்வியகுணம்பல விருக்குமென்னறிவூடு
மெய்யனீவீற்றிருக்க
விதியில்லையென்னிலோ
பூரணனெனும்பெயர்
விரிக்கிலுரைவேறுமுளதோ
கவ்வுமலமாகின்ற நாகபாசத்தினாற்
கட்டுண்டவுயிர்கண்மூர்ச்சை
கடிதகலவலியவரு
ஞானசஞ்சீவியே
கதியானபூமிநடுவுட்
செவ்விதின்வளர்ந்தோங்கு திவ்யகுணமேருவே
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே (3)
ஐவகையெனும்பூத மாதியைவகுத்ததனு
ளசரசரபேதமான
யாவையும்வகுத்துநல்
லறிவையும்வகுத்துமறை
யாதிநூலையும்வகுத்துச்
சைவமுதலாவளவில் சமயமும்வகுத்துமேற்
சமயங்கடந்தமோன
சமரசம்வகுத்தநீ
யுன்னைநானணுகவுந்
தண்ணருள்வகுக்கவிலையோ
பொய்வளருநெஞ்சினர்கள் காணாதகாட்சியே
பொய்யிலா மெய்யரறிவிற்
போதபரிபூரண
வகண்டிதாகாரமாய்ப்
போக்குவரவற்றபொருளே
தெய்வமறைமுடிவான பிரணவசொரூபியே
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு
தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே
(4)
ஐந்துவகையாகின்ற பூதபேதத்தினாலாகின்ரவாக்கை
நீர்மேலமர்கின்றகுமிழியென
நிற்கின்றதென்னநா
னறியாதகாலமெல்லாம்
புந்திமகிழுறவுண் டுடுத்தின்பமாவதே
போந்தநெறியன்றிருந்தேன்
பூராயமாகநின
தருள்வந்துணர்த்தவிவை
போனவழிதெரியவில்லை
யெந்தநிலைபேசினு மிணங்கவிலையல்லா
லிறப்பொடுபிறப்பையுள்ளே
யெண்ணினானெஞ்சது
பகீரெனுந்துயிலுறா
திருவிழியுமிரவுபகலாய்ச்
செந்தழலின்மெழுகான தங்கமிவையென்கொலோ
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே. (5)
காரிட்டவாணவக் கருவரையிலறிவற்ற
கண்ணிலாக்குழவியைப்போற்
கட்டுண்டிருந்தவெமை வெளியில்விட்டல்லலாங்
காப்பிட்டதற்கிசைந்த
பேரிட்டுமெய்யென்று பேசுபாழ்ம்பொய்யுடல்
பெலக்கவிளையமுதமூட்டிப்
பெரியபுவனத்தினுடை போக்குவரவுறுகின்ற
பெரியவிளையாட்டமைத்திட்
டேரிட்டதன்சுருதி மொழிதப்பினமனைவிட்
டிடருறவுறுக்கியிடர்தீர்த்
திரவுபகலில்லாத பேரின்பவீட்டினி
லிசைந்துதுயில்கொண்மினென்று
சீரிட்டவுலகன்னை வடிவானவெந்தையே
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே. (6)
கருமருவுகுகையனைய காயத்தினடுவுட்
களிம்புதோய்செம்பனையயான்
காண்டகவிருக்கநீ ஞானவனன்மூட்டியே
கனிவுபெறவுள்ளுருக்கிப்
பருவமதறிந்துநின் னருளானகுளிகைகொடு
பரிசித்துவேதிசெய்து
பத்துமாற்றுத்தங்க மாக்கியேபணிகொண்ட
பக்ஷத்தையென்சொல்லுகே
னருமைபெறுபுகழ்பெற்ற வேதாந்தசித்தாந்த
மாதியாமந்தமீது
மத்துவிதநிலையரா
யென்னையாண்டுன்னடிமை
யானவர்களறிவினூடுந்
திருமருவுகல்லா லடிக்கீழும்வளர்கின்ற
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே. (7)
கூடுதலுடன்பிரிதலற்றுநிர்த்தொந்தமாய்க்
குவிதலுடன்விரிதலற்றுக்
குணமற்றுவரவினொடு போக்கற்றுநிலையான
குறியற்றுமலமுமற்று
நாடுதலுமற்றுமேல் கீழ்நடுப்பக்கமென
நண்ணுதலுமற்றுவிந்து
நாதமற்றைவகைப்
பூதபேதமுமற்று
ஞாதுருவின்ஞானமற்று
வாடுதலுமற்றுமே லொன்றற்றிரண்டற்று
வாக்கற்றுமனமுமற்று
மன்னுபரிபூரணச்
சுகவாரிதன்னிலே
வாய்மடுத்துண்டவசமாய்த்
தேடுதலுமற்றவிட நிலையென்றமெளனியே
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே. (8)
தாராதவருளெலாந் தந்தருளமெளனியாய்த்
தாயனையகருணைகாட்டித்
தாளிணையென்முடிசூட்டி யறிவிற்சமாதியே
சாசுவதசம்ப்ரதாய
மோராமன்மந்திரமு முன்னாமன்முத்திநிலை
யொன்றோடிரண்டெனாம
லொளியெனவும்வெளியெனவு
முருவெனவுநாதமா
மொலியெனவுமுணர்வுறாமற்
பாராதுபார்ப்பதே யேதுசாதனமற்ற
பரமவனுபூதிவாய்க்கும்
பண்பென்றுணர்த்தியது
பாராமலந்நிலை
பதிந்தநின்பழவடியர்தஞ்
சிராயிருக்கநின தருள்வேண்டுமையனே
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே. (9)
போதமாயாதிநடு வந்தமுமிலாததாய்ப
புனிதமாயவிகாரமாய்ப்
போக்குவரவில்லாத
வின்பமாய்நின்றநின்
பூரணம்புகலிடமதா
வாதரவுவையாம லறிவினைமறைப்பதுநி
னருள்பின்னுமறிவின்மைதீர்த்
தறிவித்துநிற்பதுநி
னருளாகிலெளியனேற்
கறிவாவதேதறிவிலா
வேதம்வருவகையேது வினையேதுவினைதனக்
கீடானகாயமேதென்
னிச்சாசுதந்தரஞ்
சிறிதுமிலையிகபர
மிரண்டினுண்மலைவுதீரத்
தீதிலருள்கொண்டினி யுணர்த்தியெனையாள்வையோ
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு தக்ஷிணாமூர்தியே
சின்மயானந்தகுருவே. (10)
பக்திநெறிநிலைநின்று நவகண்டபூமிப்
பரப்பைவலமாகவந்தும்
பரவையிடைமூழ்கியு
நதிகளிடைமூழ்கியும்
பசிதாகமின்றியெழுநா
மத்தியிடைநின்றுமுதிர்சருகுபுனல்வாயுவினை
வன்பசிதனக்கடைத்து
மௌனத்திருந்துமுயர் மலைநுழைவுபுக்கியு
மன்னுதசநாடிமுற்றுஞ்
சுத்திசெய்தும்மூல ப்ராணனோடங்கியைச்
சோமவட்டத்தடைத்துஞ்
சொல்லரியவமுதுண்டு மற்பவுடல்கற்பங்க
டோறுநிலைநிற்கவீறு
சித்திசெய்துஞ்ஞான மதுகதிகூடுமோ
சித்தாந்தமுத்திமுதலே
சிரகிரிவிளங்கவரு
தக்ஷிணாமூர்த்தியே
சின்மயானந்தகுருவே
(11)
ஆசைநிகளத்தினை நிர்த்தூளிபடவுதறி
யாங்காரமுளையையெற்றி
யத்துவிதமதமாகி
மதமாறுமாறாக
வங்கையின்லிலாழியாக்கிப்
பாசவிருடன்னிழ லெனச்சுளித்தார்த்துமேற்
பார்த்துப்பரந்தமனதைப்
பாரித்தகவளமாய்ப் பூரிக்கவுண்டுமுக
படாமன்னமாயைநூறித்
தேசுபெறநீவைத்த சின்முத்திராங்குசச்
செங்கைக்குளேயடங்கிச்
சின்மயானந்தசுக
வெள்ளம்படிந்துநின்
றிருவருட்பூர்த்தியான
வாசமுறுசற்சார மீதென்னையொருஞான
மத்தகஜமெனவள்ர்த்தாய்
ம்ந்த்ரகுருவேயோக
தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமெளனகுருவே.
(1)
ஐந்துவகையாகின்ற பூதமுதனாதமு
மடங்கவெளியாகவெளிசெய்
தறியாமையறிவாதி பிறிவாகவறிவார்க
ளறிவாகநின்றநிலையிற்
சிந்தையறநில்லென்று
சும்மாவிருத்திமேற்
சின்மயானந்தவெள்ளந்
தேக்கித்திளைத்துநா னதுவாயிருக்கநீ
செய்சித்ரமிகநன்றுகா
ணெந்தை வவாற்பரம
குருவாழ்கவாழவரு
ளியநந்திமரபுவாழ்க
வென்றடியர்மனமகிழ வேதாகமத்துணி
பிரண்டில்லையொன்றென்னவே
வந்தகுருவேவீறு
சிவஞானசித்திநெறி
மௌனோபதேசகுருவே
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே. (2)
ஆதிக்கநல்கினவ ராரிந்தமாயைக்கெ
னறிவின்றியிடமில்லையோ
வந்தரப்புஷ்பமுங் கானலின்னீருமோ
ரவசரத்துபயோகமோ
போதித்தநிலையையு மயக்குதேயபயநான்
புக்கவருடோற்றிடாமற்
பொய்யானவுலகத்தை
மெய்யாநிறுத்தியென்
புந்திக்குளிந்த்ரஜாலஞ்
சாதிக்குதேயிதனை வெல்லவுமுபாயநீ
தந்தருள்வதென்றுபுகல்வாய்
சண்மதஸ்தாபனமும் வேதாந்தசித்தாந்த
சமரசநிர்வாகநிலையு
மாதிக்கொடண்டப் பரப்பெலாமறியவே
வந்தருளுஞானகுருவே
மந்தரகுருவேயோக
தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமௌனகுருவே
(3)
மின்னனையபொய்யுடலை நிலையென்றுமையிலகு
விழிகொண்டுமையல்பூட்டு
மின்னார்களின்பமே
மெய்யென்றும்வளர்மாட
மேல்வீடுசொர்கமென்றும்
பொன்னையழியாதுவளை பொருளென்றுபோற்றியிப்
பொய்வேஷமிகுதிகாட்டிப்
பொறையறிவுதுறவீதி லாதிநற்குணமெலாம்
போக்கிலேபோகவிட்டுத்
தன்னிகரிலோபாதி பாழ்ம்பேய்பிடித்திடத்
தரணிமிசைலோகாயதன்
சமயநடைசாராமல்
வேதாந்தசித்தாந்த
சமரசசிவானுபூதி
மன்னவொருசொற்கொண் டெனைத்தடுத் தாண்டன்பி
ன்வாழ்வித்தஞானகுருவே
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமெளனகுருவே. (4)
போனகமிருக்கின்ற சாலையிடைவேண்டுவ
புசித்தற்கிருக்குமதுபோற்
புருஷர்பெறுதர்மாதி வேதமுடனாகமம்
புகலுமதினாலாம்பயன்
ஞானநெறிமுக்யநெறி காட்சியனுமானமுத
னானாவிதங்கடேர்ந்து
நானானெனக்குளறு
படைபுடைபெயர்த்திடவு
நான்குசாதனமுமோர்ந்திட்
டானநெறியாஞ்சரியை யாதிசோபானுமுற்
றணுபக்ஷசம்புபக்ஷ
மாமிருகற்பமு
மாயாதிசேவையு
மறிந்திரண்டொன்றென்னுமோர்
மானதவிகற்பமற வென்றுநிற்பதுநமது
மரபென்றபரமகுருவே
மந்த்ரகுருவேயோக
தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமெளனகுருவே.
(5)
கல்லாதவறிவுமேற் கேளாதகேள்வியுங்
கருணைசிறிதேதுமில்லாக்
காட்சியுங்கொலைகளவு
கட்காமமாட்சியாய்க்
காதலித்திடுநெஞ்சமும்
பொல்லாதபொய்ம்மொழியு மல்லாதுநன்மைகள்
பொருந்துகுணமேதுமறியேன்
புருஷர்வடிவானதே யல்லாதுகனவிலும்
புருஷார்த்தமேதுமில்லே
னெல்லாமறிந்தநீ யறியாததன்றெனக்
கெவ்வண்ணமுய்வண்ணமோ
விருளையிருளென்றவர்க்
கொளிதாரகம்பெறு
மெனக்குநின்னருடாரகம்
வல்லானெனும்பெய ருனக்குள்ளதேயிந்த
வஞ்சகனையாளநினையாய்
மந்த்ரகுருவேயோக
த்ந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமெளனகுருவே.
(6)
கானகமிலங்குபுலி பசுவொடுகுலாவுநின்
கண்காணமதயானைநீ
கைகாட்டவுங்கையா
னெகிடிக்கெனப்பெரிய
கட்டைமிகவேந்திவருமே
போனகமமைந்ததென வக்காமதேனுநின்
பொன்னடியினின்றுசொலுமே
புவிராஜர்கவிராஜர்
தவராஜனென்றுனைப்
போற்றிஜயபோற்றியென்பார்
ஞானகருணாகர முகங்கண்டபோதிலே
நவநாதசித்தர்களுமுன
னட்பினைவிரும்புவர்
சுகர்வாமதேவர்முதன்
ஞானிகளுமுனைமெச்சுவார்
வாகனமுமண்ணகமும் வந்தெதிர்வணங்கிடுமுன்
மகிமையதுசொல்லவெளிதோ
மந்த்ரகுருவேயோக
த்ந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமெளனகுருவே.
(7)
சருகுசலபக்ஷணிக ளொருகோடியல்லாற்
சகோரபக்ஷிகள்போலவே
தவளநிலவொழுகமிர்த தாரையுண்டழியாத
தன்மையரனந்தகோடி
யிருவினைகளற்றிரவு
பகலென்பதறியாத
வேகாந்தமோனஞான
வின்பநிஷ்டையர்கோடி மணிமந்த்ரசித்திநிலை
யெய்தினர்கள்கோடிசூழக்
குருமணியிழைத்திட்ட
சிங்காதனத்தின்மிசை
கொலுவீற்றிருக்குநின்னைக்
கும்பிட்டனந்தமுறை
தெண்டநிட்டென்மனக்
குறையெலாந்தீரும்வண்ண
மருமலரெடுத்துனிரு தாளையர்ச்சிக்கவெனை
வாவென்றழைப்பதெந்நாண்
மந்த்ரகுருவேயோக
தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமெளனகுருவே.
(8)
ஆங்காரமானகுல வேடவெம்பேய்பாழ்த்த
வாணவத்தினும்வதுலிதுகா
ணறிவினைமயக்கிடு
நடுவறியவொட்டாதி
யாதொன்றுதொடினுமதுவாய்த்
தாங்காதுமொழிபேசு மரிகரப்பிரமாதி
தம்மொடுசமானமென்னுந்
தடையற்றதேரிலஞ்
சுருவாணிபோலவே
தன்னிலசையாதுநிற்கு
மீங்காரெனக்குநிக ரென்னப்ரதாபித்
திராவணாகாரமாகி
யிதயவெளியெங்கணுந்
தன்னரசுநாடுசெய்
திருக்குமிதனொடெநேரமும்
வாங்காவிலாவடிமை போராடமுடியுமோ
மெளனோபதேசகுருவே
மந்த்ரகுருவேயோக
தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமெளனகுருவே.
(9)
பற்றுவெகுவிதமாகி யொன்றைவிட்டொன்றனைப்
பற்றியுழல்கிருமிபோலப்
பாழ்ஞ்சிந்தைபெற்றநான்
வெளியாகநின்னருள்
பகர்ந்துமறியேன்றுவிதமோ
சிற்றறிவதன்றியு மெவரேனுமொருமொழி
திடுக்கென்றுரைத்தபோது
சிந்தைசெவியாகவே பறையறையவுதரவெந்
தீநெஞ்சமளவளாவ
வுற்றுணரவுணர்வற்றுன் மற்றவெறியினர்போல
வுளறுவேன்முத்தமார்க்க
முணர்வதெப்படியின்ப
துன்பஞ்சமானமா
யுறுவதெப்படியாயினு
மற்றெனக்கையநீ சொன்னவொருவார்த்தையினை
மலையிலக்கெனநம்பினேன்
மந்த்ரகுருவேயோக தந்த்ரகுருவேமூலன்
மரபில்வருமெளனகுருவே. (10)
நிர்க்குணநிராமய நிரஞ்சனநிராலம்ப
நிர்விஷயகைவல்யமா
நிஷ்களவசங்கசஞ்
சலரகிதநிர்வசன
நிர்த்தோந்தநித்தமுக்த
தற்பரவிஸ்வாதீத வ்யோமபரிபூரண
சதானந்தஞானபகவ
சம்புசிவசங்கர
சர்வேசவென்றுநான்
சர்வகாலமுநினைவனோ
வற்புதவகோசர நிவர்த்திபெறுமன்பருக்
கானந்தபூர்த்தியான
வத்துவிதநிச்சய
சொரூபசாக்ஷாத்கார
வனுபூதியனுசூதமுங்
கற்பனையறக்காண முக்கணுடன்வடநிழற்
கண்ணூடிருந்தகுருவே
கருதரியசிற்சபையி
லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
(1)
மண்ணாதியைந்தொடு புறத்திலுளகருவியும்
வாக்காதிசுரோத்ராதியும்
வளர்கின்றசப்தாதி
மனமாதிகலையாதி
மன்னுசுத்தாதியுடனே
தொண்ணூற்றொடாறுமற் றுள்ளனவுமௌனியாய்ச்
சொன்னவொருசொற்கொண்டதே
தூவெளியதாயகண்
டானந்தசுகவாரி
தோற்றுமதையென்சொல்லுவேன்
பண்ணாருமிசையினொடு பாடிப்படித்தருட்
பான்மைநெறிநின்றுதவறாப்
பக்குவவிசேஷராய் நெக்குநெக்குருகிப்
பணிந்தெழுந்திருகைகூப்பிக்
கண்ணாறுகரைபுரள நின்றவன்பரையெலாங்
கைவிடாக்காட்சியுறவே
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே. (2)
எல்லாமுனடிமையே யெல்லாமுனுடைமையே
யெல்லாமுனுடையசெயலே
யெங்கணும்வியாபிநீ யென்றுசொலுமியல்பென்
றிருக்காதிவேதமெல்லாஞ்
சொல்லான்முழக்கியது மிக்கவுபகாரமாச்
சொல்லிறந்தவரும்விண்டு
சொன்னவையுமிவைநல்ல குருவானபேருந்
தொகுத்தநெறிதானுமிவையே
யல்லாமலில்லையென நன்றாவறிந்தே
னறிந்தபடிநின்றுசுகநா
னாகாதவண்ணமே
யிவ்வண்ணமாயினே
னதுவுநினதருளென்னவே
கல்லாத்வறிஞனுக் குள்ளேயுணர்த்தினை
கதிக்குவகையேதுபுகலாய்
கருதறியசிற்சபையி
லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
(3)
பட்டப்பகற்பொழுதை யிருளென்றமருளர்தம்
பக்ஷமோவெனதுபக்ஷம
பார்த்தவிடமெங்கணுங்
கோத்தநிலைகுலையாது
பரமவெளியாகவொருசொற்
றிட்டமுடன்மெளனியா யருள்செய்திருக்கவுஞ்
சேராமலாராகநான்
சிறுவீடுகட்டியதி
னடுசோற்றையுண்டுண்டு
தேக்குசிறியார்கள்போல
நட்டணையதாக்கற்ற கல்வியும்விவேகமு
நன்னிலயமாகவுன்னி
நானென்றுநீயென்
றிரண்டில்லையென்னவே
நடுவேமுளைத்தமனதைக்
கட்டவறியாமலே வாடினேனெப்போது
கருணைக்குரித்தாவனோ
கருதரியசிற்சபையி
லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
(4)
மெய்விடாநாவுள்ள மெய்யருளிருந்துநீ
மெய்யானமெய்யையெல்லா
மெய்யெனவுணர்த்தியது
மெய்யிதற்கையமிலை
மெய்யேதுமறியாவெறும்
பொய்விடாப்பொய்யினே னுள்ளத்திருந்துதான்
பொய்யானபொய்யையெல்லாம்
பொய்யெனாவண்ணமே புகலவைத்தானெனிற்
புன்மையேனென்செய்குவென்
மைவிடாதெழுநீல கண்டகுருவேவிஷ்ணு
வடிவானஞானகுருவே
மலர்மேவிமறையோது
நான்முகக்குருவே
மதங்கடொறுநின்றகுருவே
கைவிடாதேயென்ற வன்பருக்கன்பாய்க்
கருத்தூடுணர்த்துகுருவே
கருதறியசிற்சபையி
லானந்தநித்தமிடு
கருணாகரக்கடவுளே.
(5)
பண்ணேனுனக்கான பூசையொருவடிவிலே
பாவித்திறைஞ்சவாங்கே
பார்க்கின்றமலரூடு
நீயேயிருத்தியப்
பனிமலரெடுக்கமனமு
நண்ணேனலாமலிரு கைதான்குவிக்கவெனி
னாணுமென்னுளநிற்றிநீ
நான்கும்பிடும்போ
தரைக்கும்பிடாதலா
னான்பூசைசெய்யன்முறையோ
விண்ணேவிணாதியாம் பூதமேநாதமே
வேதமேவேதாந்தமே
மேதக்ககேள்வியே
கேள்வியாம்பூமிக்குள்
வித்தேயவித்தின்முளையே
கண்ணேகருத்தேயெ னெண்ணேயெழுத்தே
சதிக்கானமோனவடிவே
கருதறியசிற்சபையி
லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
(6)
சந்ததமும்வேதமொழி யாதொன்றுபற்றினது
தான்வந்துமுற்றுமெனலாற்
சகமீதிருந்தாலு
மரணமுண்டென்பது
சதாநிஷ்டர்நினைவதில்லை
சிந்தையறியார்க்கீது போதிப்பதல்லவே
செப்பினும்வெகுதர்க்கமாந்
திவ்யகுணமார்க்கண்டர் சுகராதிமுனிவோர்கள்
சித்தாந்தநித்யரலவோ
விந்த்ராதிதேவதைகள் பிரமாதிகடவுள
ரிருக்காதிவேதமுனிவ
ரெண்ணரியகண்நாதர்
நவநாதசித்தர்க
ளிரவிமதியாதியோர்கள்
கந்தருவர்கின்னரர்கண் மற்றையர்களியாவருங்
கைகுவித்திடுதெய்வமே
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே (7)
துள்ளுமறியாமனது பலிகொடுத்தேன்கர்ம
துஷ்டதேவதைகளில்லை
துரியநிறைசாந்ததே
வதையாமுனக்கே
தொழும்பனன்பபிஷேகநீ
ருள்ளுறையிலென்னாவி நைவேத்தியம்ப்ராண
னோங்குமதிதூபதீப
மொருகாலமன்றிது
சதாகாலபூசையா
வொப்புவித்தேன்கருணைகூர்
தெள்ளிமறைவடியிட்ட வமுதப்பிழம்பே
தெளிந்ததேனேசீனியே
திவ்யரசமியாவுந்
திரண்டொழுகுபாகே
தெவிட்டாதவானந்தமே
கள்ளனறிவூடுமே மெள்ளமெளவெளீயாய்க்
கலக்கவருநல்லவுறவே
கருதரியசிற்சபையி
லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
(8)
உடல்குழையவென்பெலா நெக்குருகவிழிநீர்க
ளூற்றெனவெதும்பியூற்ற
வூசிகாந்தத்தினைக்
கண்டணுகல்போலவே
யோருறவுமுன்னியுன்னிப்
படபடெனநெஞ்சம் பதைத்துண்ணடுக்குறப்
பாடியாடிக்குதித்துப்
பனிமதிமுகத்திலே நிலவனையபுன்னகை
பரப்பியார்த்தார்த்தெழுந்து
மடலவிழுமலரனைய கைவிரித்துக்கூப்பி
வானேயவானிவின்ப
மழையேமழைத்தாரை
வெள்ளமேநீடூழி
வாழியெனவாழ்த்தியேத்துங்
கடன்மடைதிறந்தனைய வன்பரன்புக்கெளியை
கன்னெஞ்சனுக்கெளியையோ
கருதரியசிற்சபையி லானந்தநிர்த்தமிடு
கருனாகரக்கடவுளே. (9)
இங்கற்றபடியங்கு மெனவறியுநல்லறிஞ
ரெக்காலமும்முதவுவா
ரின்சொறவறார்பொய்மை யாமிழுக்குரையா
ரிரங்குவார்கொலைகளிபயிலார்
சங்கற்பசித்தரவ ருள்ளக்கருத்திலுறை
சாக்ஷிநீயிகபரத்துஞ்
சந்தானகற்பகத்
தேவாயிருந்தே
சமஸ்தவின்பமுமுதவுவாய்
சிங்கத்தையொத்தெனப் பாயவருவினையினைச்
சேதிக்கவருசிம்புளே
சிந்தாகுலத்திமிர
மகலவருபானுவே
தீனனேன்கரையேறவே
கங்கற்றபேராசை வெள்ளத்தின்வளரருட்
ககனவட்டக்கப்பலே
கருதரியசிற்சபையி
லானந்தநிர்த்தமிடு
கருணாகரக்கடவுளே.
(10)
திக்கொடுதிகந்தமும் மனவேகமென்னவே
சென்றோடியாடிவருவீர்
செம்பொன்மகமேருவொடு
குணமேருவென்னவே
திகழ்துருவனளவளாவி
யுக்ரமிகுசக்ரதர
னென்னநிற்பீர்கையி
லுழுந்தமிழுமாசமனமா
வோரேழுகடலையும்
பருகவல்லீரிந்த்ர
னுலகுமயிராவதமுமே
கைக்கெளியபந்தா
வெடுத்துவிளையாடுவீர்
ககனவட்டத்தையெல்லாங்
கடுகிடையிருத்தியே யஷ்டகுலவெற்பையுங்
காட்டுவீர்மேலுமேலு
மிக்கசித்திகளெலாம் வல்லநீரடிமைமுன்
விளங்கவருசித்தியிலையோ
வேதாந்தசித்தாந்த
சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
(!)
பாட்டளிதுதைந்துவளர் கற்பகநனீழலைப்
பாரினிடைவரவழைப்பீர்
பத்மநிதிசங்கநிதி யிருபாரிசத்திலும்
பணிசெயுந்தொழிலாளர்போற்
கேட்டதுகொடுத்துவர
நிற்கவைப்பீர்பிச்சை
கேட்டுப்பிழைப்போரையுங்
கிரீடபதியாக்குவீர் கற்பாந்தவெள்ளமொரு
கேணியிடைகுறுகவைப்பீ
ரோட்டினையெடுத்தா
யிரத்தெட்டுமாற்றாக
வொளிவிடும்பொன்னாக்குவீ
ருரகனுமிளைப்பாற யோகதண்டத்திலே
யுலகுசுமையாகவருளான்
மீட்டிடவும்வல்லநீ ரென்மனக்கல்லையனன்
மெழுகாக்கிவைப்பதரிதோ
வேதாந்தசித்தாந்த
சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
(2)
பாரொடுநன்னீராதி யொன்றொடொன்றாகவே
பற்றிலயமாகுபோது
பரவெளியின்மருவுவீர் கற்பாந்தவெள்ளம்
பரந்திடினதற்குமீதே
நீரிலுறைவண்டாய்த் துவண்டுசிவயோகநிலை
நிற்பீர்விகற்பமாகி
நெடியமுகிலேழும் பரந்துவருஷிக்கிலோ
நிலவுமதிமண்டலமதே
யூரெனவிளங்குவீர்
பிரமாதிமுடிவில்விடை
யூர்தியருளாலுலவுவீ
ருலகங்கள்கீழ்மேல தாகப்பெருங்காற்
றுலாவினற்றாரணையினான்
மேருவெனவசையாம னிற்கவல்லீருமது
மேதக்கசித்தியெளிதோ
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே. (3)
எண்ணரியபிறவிதனின்
மானிடப்பிறவிதா
னியாதினும்மரிதரிதுகா
ணிப்பிறவிதப்பினா லெப்பிறவிவாய்க்குமோ
வேதுவருமோவறிகிலேன்
கண்ணகனிலத்துநா னுள்ளபொழுதேயருட்
ககனவட்டத்தினின்று
காலூன்றிநின்றுபொழி யானந்தமுகிலொடு
கலந்துமதியவசமுறவே
பண்ணுவதுநன்மையிந் நிலைபதியுமட்டுமே
பதியாயிருந்ததேகப்
பவரிகுலையாமலே கௌரிகுண்டலியாயி
பண்ணவிதனருளினாலே
விண்ணிலவுமதியமுத மொழியாதுபொழியவே
வேண்டுவேனுமதடிமைநான்
வேதாந்தசித்தாந்த
சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
(4)
பொய்திகழுமுலகநடை யென்சொல்கேனென் சொல்
கேன்
பொழுதுபோக்கேதென்னிலோ
பொய்யுடனிமித்தம் புசிப்புக்கலைந்திடல்
புசித்தபின்கண்ணுறங்கல்
கைதவமலாமலிது செய்தவமதல்லவே
கண்கெட்டபேர்க்கும்வெளியாய்க்
கண்டதிதுவிண்டிதைக்
கண்டித்துநிற்றலெக்
காலமோவதையறிகிலேன்
மைதிகழுமுகிலினங் குடைநிழற்றிடவட்ட
வரையினொடுசெம்பொன்மேரு
மால்வரையின்முதுகூடும் யோகதண்டக்கோல்
வரைந்துசயவிருதுகாட்டி
மெய்திகழுமஷ்டாங்க யோகபூமிக்குள்வளர்
வேந்தரேகுணசாந்தரே
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே. (5)
கெச துரகமுதலான
சதுரங்கமனமாதி
கேள்வி
யினிசைந்துநிற்பக்
கெடிகொண்டதலமாறு மும்மண்டலத்திலுங்
கிள்ளாக்குசெல்லமிக்க
தெசவிதமதாய்நின்ற நாதங்களோலிடச்
சிங்காசனாதிபர்களாய்த்
திக்குத்திகந்தமும் பூரணமதிக்குடை
திகழ்ந்திடவசந்தகால
மிசையமலர்மீதுறை மணம்போலவானந்த
மிதயமேற்கொள்ளும்வண்ண
மென்றைக்குமழியாத சிவராசயோகமா
யிந்த்ராதிதேவர்களெலாம்
விஜயஜயஜயவென்ன வாசிசொலவேகொலு
விருக்குநும்பெருமையெளிதோ
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே. (6)
ஆணிலேபெண்ணிலே
யென்போலவொருபேதை
யகிலத்தின்மிசையுள்ளதோ
வாடியகறங்குபோ
லோடியுழல்சிந்தையை
யடக்கியொருகணமேனும்யான்
காணிலேன்திருவருளை யல்லாதுமௌனியாய்க்
கண்மூடியோடுமூச்சைக்
கட்டிக்கலாமதியை முட்டவேமூலவெங்
கனலினையெழுப்பநினைவும்
பூணிலேனிற்றைநாட் கற்றதுங்கேட்டதும்
போக்கிலேபோகவிட்டுப்
பொய்யுலகனாயினே னாயினுங்கடையான
புன்மையேனின்னமின்னம்
வீணிலேயலையாமன் மலையிலக்காகநீர்
வெளிப்படத்தோற்றல்வேண்டும்
வேதாந்தசித்தாந்த
சமரசநன்னிலைபெற்ற
வித்தக்ச்சித்தர்கணமே.
(7)
கன்னலமுதெனவுமுக் கனியெனவும்வாயூறு
கண்டெனவுமடியெடுத்துக்
கடவுளர்கடந்ததல வழுதழுதுபேய்போற்
கருத்திலெழுகின்றதெல்லா
மென்னதறியாமையறி வென்னுமிருபகுதியா
லீட்டுதமிழென்றமிழினுக்
கின்னல்பகராதுலக மாராமைமேலிட்
டிருத்தலாலித்தமிழையே
சொன்னவனியாவனவன்
முத்திசித்திகளெலாந்
தோய்ந்தநெறியேபடித்தீர்
சொல்லுமெனவவர்நீங்கள் சொன்னவவையிற்சிறிது
தோய்ந்தகுணசாந்தனெனவே
மின்னல்பெறவேசொல்ல
வச்சொல்கேட்டடிமைமன
ம்விகசிப்பதெந்தநாளோ
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே. (8)
பொற்பினொடுகைகாலில்
வள்ளுகிர்படைத்தலாற்
போந்திடையொடுக்கமுறலாம்
பொலிவானவெண்ணீறு பூசியேயருள்கொண்டு
பூரித்தவெண்ணீர்மையா
லெற்படவிள்ங்குகக னத்திலிமையாவிழி
யிசைந்துமேனோக்கமுறலா
லிரவுபகலிருளான
கனதந்திபடநூறி
யிதயங்களித்திடுதலாற்
பற்பலவிதங்கொண்ட
புலிகலையினுரியது
படைத்துப்ப்ரதாபமுறலாற்
பனிவெயில்கள்புகுதாம னெடியவான்றொடர்நெடிய
பருமரவனங்களாரும்
வெற்பினிடையுறைதலாற் றவராசசிங்கமென
மிக்கோருமைப்புகழ்வர்காண்
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
(9)
கல்லாதபேர்களே நல்லவர்கணல்லவர்கள்
கற்றுமறிவிலாதவென்
கர்மத்தையென்சொல்கேன் மதியையென்சொல்லுகேன்
கைவல்யஞானநீதி
நல்லோருரைக்கிலோ கர்மமுக்கியமென்று
நாட்டுவேன்கர்மமொருவ
னாட்டினாலோபழைய ஞானமுக்கியமென்று
நவிலுவேன்வடமொழியிலே
வல்லானொருத்தன்வர
வுந்த்ராவிடத்திலே
வந்ததாவிவகரிப்பேன்
வல்லதமிழறஞர்வரி னங்ஙனேவடமொழியின்
வசனங்கள்சிறிதுபுகல்வேன்
வெல்லாமலெவரையு மருட்டிவிடவகைவந்த
வித்தையென்முத்திதருமோ
வெதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே. (10)
கொல்லாமையெத்தனை
குணக்கேட்டைநீக்குமக்
குணமொன்றுமொன்றிலேன்பாற்
கோரமெத்தனைபக்ஷ பாதமெத்தனைவன்
குணங்களெத்தனை கொடியபாழ்ங்
கல்லாமையெத்தனை யகந்தையெத்தனைமனக்
கள்ளமெத்தனையுள்ளசற்
காரியஞ்சொல்லிடினு
மறியாமையெத்தனை
கதிக்கென்றமைத்தவருளிற்
செல்லாமையெத்தனை விர்தாகொஷ்டியென்னிலோ
செல்வதெத்தனைமுயற்சி
சிந்தையெத்தனைசலன
மிந்த்ரஜாலம்போன்ற
தேகத்தில்வாஞ்சைமுதலா
யல்லாமையெத்தனை யமைத்தனையுனக்கடிமை
யானேனிவைக்குமாளோ
வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே. (1)
தெருளாகமருளாகி யுழலுமனமாய்மனஞ்
சேர்ந்துவளர்சித்தாகியச்
சித்தெலாஞ்சூழ்ந்தசிவ
சித்தாய்விசித்ரமாய்த்
திரமாகிநானாவிதப்
பொருளாகியப்பொருளை யறிபொறியுமாகியைம்
புலனுமாயைம்பூதமாய்ப்
புறமுமாயகமுமாய்த் தூரஞ்சமீபமாய்ப்
போக்கொடுவரத்துமாகி
யிருளாகியொளியாகி நன்மைதீமையுமாகி
யின்றாகிநாளையாகி
யென்றுமாயொன்றுமாய்ப் பலவுமாயாவுமா
யிவையல்லவாயநின்னை
யருளாகிநின்றவர்க ளறிவதல்லாலொருவ
ரறிவதற்கெளிதாகுமோ
யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே. (2)
மாறுபடுதர்க்கந்
தொடுக்கவறிவார்சாண்
வயிற்றின்பொருட்டதாக
மண்டலமும்விண்டலமு மொன்றாகிமனதுழல
மாலாகிநிற்கவறிவார்
வேறுபடுவேடங்கள் கொள்ளவறிவாரொன்றை
மெணமெணென்றகம்வேறதாம்
வித்தையறிவாரெமைப் போலவேசந்தைபோன்
மெய்ந்நூல்விரிக்கவறிவார்
சீறுபுலிபோற்சீறி
மூச்சைப்பிடித்துவிழி
செக்கச்சிவக்கவறிவார்
திரமென்றுதந்தம் மதத்தையேதாமதச்
செய்கைகொடுமுளறவறிவா
ராறுசமயங்கடொறும் வேறுவேறாகிவிளை
யாடுமுனையாவரறிவா
ரண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே. (3)
காயிலையுதிர்ந்தகனி சருகுபுனன்மண்டிய
கடும்பசிதனக்கடைத்துங்
கார்வரையின்முழையிற்
கருங்கல்போலசையாது
கண்மூடிநெடிதிருந்துந்
தீயினிடைவைகியுந் தோயமதின்மூழ்கியுந்
தேகங்களென்பெலும்பாய்த்
தெரியநின்றுஞ்சென்னி
மயிர்கள்கூடாக்குருவி
தெற்றவெயிலூடிருந்தும்
வாயுவையடக்கியு மனதினையடக்கியு
மௌனத்திலேயிருந்து
மதிமண்டலத்திலே கனல்செல்லவமுதுண்டு
வனமூடிருந்துமறிஞ
ராயுமறைமுடிவான வருணாடினாரடிமை
யகிலத்தைநாடன்முறையோ
வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே. (4)
சுத்தமுமசுத்தமுந் துக்கசுகபேதமுந்
தொந்தமுடனிர்த்தொந்தமும்
ஸ்தூலமொடுசூக்ஷ்மமு
மாசையுநிராசையுஞ்
சொல்லுமொருசொல்லின்முடிவும்
பெத்தமொடுமுத்தியும் பாவமொடபாவமும்
பேதமொடபேதநிலையும்
பெருமையொடுசிறுமையு
மருமையுடனெளிமையும்
பெண்ணினுடனாணுமற்று
நித்தமுமனித்தமு மஞ்சனநிரஞ்சனமு
நிஷ்களமுநிகழ்சகளமு
நீதியுமனீதியு மாதியொடனாதியு
நிர்விஷயவிஷயவடிவு
மத்தனையுநீயலதெ ளத்தனையுமில்லையெனின்
யாங்களுனையன்றியுண்டோ
வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே. (5)
காராருமாணவக்
காட்டைக்களைந்தறக்
கண்டகங்காரமென்னுங்
கல்லைப்பிளந்துநெஞ் சகமானபூமிவெளி
காணத்திருத்திமேன்மேற்
பாராதியறியாத மோனமாம்வித்தைப்
பதித்தன்புநீராகவே
பாய்ச்சியதுபயிராகு மட்டுமாமாயைவன்
பறவையணுகாதவண்ண
நேராகநின்றுவிளை போகம்புசித்துண்ட
நின்னன்பர்கூட்டமெய்த
நினைவின்படிக்குநீ முன்னின்றுகாப்பதே
நின்னருட்பாரமென்று
மாராறுமறியாத சூதானவெளியில்வெளி
யாகின்றதுரியமயமே
யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே. (6)
வானாதிபூதமா யகிலாண்டகோடியாய்
மலையாகிவளைகடலுமாய்
மதியாகியிரவியாய் மற்றுளவெலாமாகி
வான்கருணைவெள்ளமாகி
நானாகிநின்றவனு நீயாகிநின்றிடவு
நானென்பதற்றிடாதே
நானானெனக்குளறி நானாவிகாரியாய்
நானறிந்தறியாமையாய்ப்
போனாலதிட்டவலி வெல்லவெளிதோபகற்
பொழுதுபுகுமுன்கண்மூடிப்
பொய்த்துயில்கொள்வான்றனை
யெழுப்பவசமோவினிப்
போதிப்பதெந்தநெறியை
யானாலுமென்கொடுமை யனியாயமனியாய
மார்பாலெடுத்துமொழிவே
னண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே. (7)
பொய்யினேன்புலையினேன்
கொலையினேனின்னருள்
புலப்படவறிந்துநிலையாப்
புன்மையேன்கல்லாத தன்மையேனன்மைபோற்
பொருளலாப்பொருளைநாடும்
வெய்யனேன்வெகுளியேன்
வெறியனேன்சிறியனேன்
வினையினேனென்றென்னைநீ
விட்டுவிடநினைவையேற் றட்டழிவதல்லாது
வேறுகதியேதுபுகலாய்
துய்யனேமெய்யனே யுயிரினுக்குயிரான
துணைவனேயிணையொன்றிலாத்
துரியனேதுரியமுங் காணாவதீதனே
சுருதிமுடிமீதிருந்த
வையனேயப்பனே யெனுமறிஞரறிவைவிட்
டகலாதகருணைவடிவே
யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே. (8)
எத்தனைவிதங்கடான்
கற்கினுங்கேட்கினுமென்
னிதயமுமொடுங்கவில்லை
யானெனுமகந்தைதா னெள்ளளவுமாறவிலை
யாதினும்மபிமானமென்
சித்தமிசைகுடிகொண்ட தீகையோடிரக்கமென்
சென்மத்துநானறிகிலேன்
சீலமொடுதவவிரத மொருகனவிலாயினுந்
தரிசனங்கண்டுமறியேன்
பொய்த்தமொழியல்லான்
மருந்துக்குமெய்ம்மொழி
புகன்றிடேன்பிறர்கேட்கவே
போதிப்பதல்லாது சும்மாவிருந்தருள்
பொருந்திடாப்பேதைநானே
யத்தனைகுணக்கேடர் கண்டதாக்கேட்டதா
வவனிமிசையுண்டோசொலா
யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே. (9)
எக்காலமுந்தனக்
கென்னவொருசெயலிலா
வேழைநீயென்றிருந்திட்
டெனதாவியுடல்பொருளு மெளனியாம்வந்துகை
யேற்றுநமதென்றவன்றே
பொய்க்காலதேசமும்
பொய்ப்பொருளில்வாஞ்சையும்
பொய்யுடலைமெய்யென்னலும்
பொய்யுறவுபற்றலும் பொய்யாகுநானென்னல்
பொய்யினும்பொய்யாகைபான்
மைக்காலிருட்டனைய
விருளில்லையிருவினைகள்
வந்தேறவழியுமில்லை
மனமில்லையம்மனத் தினமில்லைவேறுமொரு
வரவில்லைபோக்குமில்லை
யக்காலமிக்கால மென்பதிலையெல்லா
மதீதமயமானதன்றோ
வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே. (10)
இன்னமுதுகனிபாகு கற்கண்டுசீனிதே
னெனருசித்திடவலியவந்
தின்பங்கொடுத்தநினை யெந்நேரநின்னன்ப
ரிடையறாதுருகிநாடி
யுன்னியகருத்தவிழ
வுரைகுளறியுடலெங்கு
மோய்ந்தயர்ந்தவசமாகி
யுணர்வரியபேரின்ப வனுபூதியுணர்விலே
யுணர்வார்களுள்ளபடிகாண்
கன்னிகையொருத்திசிற்
றின்பம்வேம்பென்னினுங்
கைக்கொள்வள்பக்குவத்திற்
கணவனருள்பெறின்முனே சொன்னவாறென்னெனக்
கருதிநகையாவளதுபோற்
சொன்னபடிகேட்குமிப்
பேதைக்குநின்கருணை
தோற்றிற்சுகாரம்பமாஞ்
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே. (1)
அன்பின்வழியறியாத
வென்னைத்தொடர்ந்தென்னை
யறியாதபக்குவத்தே
யாசைப்பெருக்கைப் பெருக்கிக்கொடுத்துநா
னற்றேனலந்தேனென
வென்புலமயங்கவே பித்தேற்றிவிட்டா
யிரங்கியொருவழியாயினு
மின்பவெளமாகவந் துள்ளங்களிக்கவே
யெனைநீகலந்ததுண்டோ
தன்பருவமலருக்கு மணமுண்டுவண்டுண்டு
தண்முகைதனக்குமுண்டோ
தமியனேற்கிவ்வணந் திருவுளமிரங்காத
தன