|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > உமறுப் புலவரின் சீறாப்புராணம் - காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 596) > பாடல்கள் (597-1240) > காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்) பாடல்கள் (1-698 ) > பாடல்கள் (699 - 1104) > காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்) - பாடல்கள் (1- 607) > பாடல்கள் (608-1403)

உமறுப் புலவரின் சீறாப்புராணம்
காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)
படலங்கள் 1-9 / பாடல்கள் (1- 596)
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Mr. Vassan Pillai, New Mexico, USA
Proof-reading: Mr. Sriram Venkataraman, Indianapolis, USA
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 1.0 | கவியேறு உமறுப் புலவரவர்களின் வரலாற்றுச் சுருக்கம் | மின்பதிப்பு | |
| 1.0 | சீறாப்புராணம் இயற்றப்பெற்ற வரலாறு | மின்பதிப்பு | |
| 1.1 | கடவுள் வாழ்த்துப் படலம் | (1-20) | மின்பதிப்பு |
| 1.2 | நாட்டுப் படலம் | (21-76) | மின்பதிப்பு |
| 1.3 | நகரப் படலம் | (77-98) | மின்பதிப்பு |
| 1.4 | தலைமுறைப் படலம் | (99-165) | மின்பதிப்பு |
| 1.5 | நபியவதாரப் படலம் | (166-290) | மின்பதிப்பு |
| 1.6 | அலிமா முலையூட்டுப் படலம் | (291-390) | மின்பதிப்பு |
| 1.7 | இலாஞ்சனை தரித்த படலம் | (391-481) | மின்பதிப்பு |
| 1.8 | புனல் விளையாட்டுப் படலம் | (482-538) | மின்பதிப்பு |
| 1.9 | புகைறா கண்ட படலம் | (539-596) | மின்பதிப்பு |
| காப்பு திருவுருவா யுணருருவா யறிவினொடு தௌிவிடத்துஞ் சிந்தி யாத அருவுருவா யுருவுருவா யகம்புறமுந் தன்னியிலா வடங்கா வின்பத் தொருவுருவா யின்மையினி லுண்மையினைத் தோற்றுவிக்கு மொளியா யாவு மருவுருவாய் வளர்காவன் முதலவனைப் பணிந்துள்ளி வாழ்த்து வாமே. கடவுள் வாழ்த்துப் படலம் | ||
| 1 | திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த் தௌிவினுந் தௌிவதாய்ச் சிறந்த மருவினு மருவா யணுவினுக் கணுவாய் மதித்திடாப் பேரொளி யனைத்தும் பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப் பூதலத் துறைந்த பல் லுயிரின் கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த கருத்தனைப் பொருத்துதல் கருத்தே. | 1.1.1 |
| 2 | சிறந்தமெய்ப் பொருளை யழிவிலா மணியைத் தெரிந்துமுக் காலமு முணர்ந்து துறந்தவ ரிதயா சனத்திருந் தவனைத் துடரின்ப துன்பமற் றவனைப் பிறந்தபல் லியிரின் மனத்தள வுறைந்து பிறப்பிறப் பென்றிலா தவனை மறந்தவர் சுவர்க்கப் பதியையு மறந்து மண்ணினின் மதிமறந் தவரே. | 1.1.2 |
| 3 | இருவிழி சிவந்து கனற்பொறி தெறிப்ப வெடுத்தகைக் கதையினா லுறுக்கி வருமவ ரெதிர்நின் றொருமொழி கேட்ப மறுமொழி கொடுத்திட வறியேன் தருமமும் பொறையு மறிவுமற் றறிந்துன் றன்னையு மென்னையு மறியப் பெருவரந் தருவா யாதிநா யகனே பேதியாச் சோதிமா முதலே. | 1.1.3 |
| 4 | கடலினை மலையைக் கதிர்மதி யுடுவைக் ககனமற் றறுஷொடு குறுசைப் புடவியைச் சுவனப் பதியினை யமரர் பொருந்திட மடுக்கடுக் கவையை வடிவுறத் தனது பேரொளி யதனால் வகுத்துவெவ் வேறென வமைத்தே யுடலினுக் குயிரா யுயிரினுக் குடலா யுறைந்தமெய்ப் பொருளினைப் புகல்வாம். | 1.1.4 |
| 5 | வேறு அருமறை தெரிந்துநீதி நெறிமுறை நடந்துதீனிவ் வகிலதல மெங்கு மீறவே யொருகவிகை கொண்டுமாறு படுமவரை வென்றுநாளு முறுபுகழ் சிறந்த வாழ்வுளோர் திருவொளி வெனும்ஹபீபு நபிமுகம்ம தன்றுவானர் சிரமிசை நடந்து சோர்வுறா விருசரண நம்பினோர்கள் வரிசைக ணிறைந்தபேர்க ளெவரினு முயர்ந்த பேர்களே. | 1.1.5 |
| 6 | வேறு கவியா லுரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவி யடைவார் கலக்க மறவே செவியார மெய்ப்பொருளை யறிவார் மனத்தினுறு செயல்கே டகற்றி விடுவார் புவியார மொய்த்தநெறி மறைநாலினுக்குமொரு பொறியா யுதித்த வடிவார் நவியார் சுவர்க்கபதி நயினார் பதத்துணையை நடுநாவில் வைத்த வர்களே. | 1.1.6 |
| 7 | வேறு ஆதிதன் கிருபை தாங்கி யகிலமீ தரசு வைகித் தீதிலாச் சோதி போலத் தீன்பயிர் விளக்கஞ் செய்தே மூதறி வுடைய ரான முறுசலீன் களையெந் நாளும் போதர வுடனே போற்றிப் புந்தியின் மகிழ்ச்சி செய்வாம். | 1.1.7 |
| 8 | வேறு தாரா தரத்தையே மேலே கவிக்கவே தாடாண்மை பெற்ற நயினார் பேரா யுதிக்கவே வானோ ருரைக்கவே பேறாய் விளக்கு முரவோ ராராய்வின் மிக்கபேர் நூறாயிரத்துநா லாறாயிரத்து நபிமார் மாராய மிக்கபேர் வாயார வைத்தபேர் வாழ்வார் சுவர்க்க பதியே. | 1.1.8 |
| 9 | வேறு புரசைக் கடக்கரிக ணிரைதட் டற்க்குபிரர் புவியைப் படக்க டவியே சரகுற்ற நற்பதவி வழியிற் புகுத்தியுயர் தலைமைக்கு வைத்த பெரியோர் பிரசத் துளித்திவலை சிதறிக் கிடக்குமிரு பிணையற் புயத்து நயினா ரரசுக்கு வைத்தநெறி வரிசைக்கு மிக்கதுரை யபுபக் கரைப்புகலுவாம். | 1.1.9 |
| 10 | வேறு அமரிலெதிர்த் தோர்களாவி யெமதிசையைத் தேடியோட வடருமடற் சூர வீரவேள் மமதைகெடச் சாதிநீதி முறைமைதனக் காகவோது மகனைவதைத் தோரொ றாமலே திமிரபகைப் பானுமேனி கருகிவிடப் பார்வையேவு தெரிமறையிற் கார ணீகனா ருமறுதிருத் தாளைநாளு மனதினினைத் தோதுவோர்தம் முரியதவப் பேறு மீறுமே. | 1.1.10 |
| 11 | வேறு விதுமாற வொளிவான வதனாதி நபிநாவில் விளைவான திரு வேதமே பதிவாக வொருசேக ரமதாக நிலமீது பயிராக வுரை தூவினோர் சதுமாம றையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்க டமதாவி யென வாழ்வோ ருதுமானை யொருகாலு மறவாம லிருகாலு முளமீது நினை வாமரோ. | 1.1.11 |
| 12 | வேறு படிகிடு கிடெனநாக முடிநெறு நெறெனவாரி படுதிரை யளற தாகவே வடவரை யசையாவான முகடுடை படவறாத மழைமுகில் சிதறி யோடவே யடையலர் கெடிகள்கோடி யிடிபடு படலதூளி யலரியி னுடலின் மூழ்கவே நடமிடு கடினவாசி மிசைவரு சமரசூர நரர்புலி யலியை யோதுவாம். | 1.1.12 |
| 13 | நலிவற வுலகநீதி நெறிமுறை பெருகநாளு நமருயி ரரிய காவலா யொலிகட லுலகமீது தெரிதர வரியதீனு முறுகதி ருதைய மாகவே மலிபுக ழரசர்சீய மிர்கமத நறைகுலாவு மறைநபி மருக ராகிவா ழலிதிரு மதலையான வசனுசை னுபயபாத மனுதின மனதி லோதுவாம். | 1.1.13 |
| 14 | வேறு ஆலகால வாரிபோலு மாகொடூர மாகிய காலகேள்வி தானடாத காரணீக ராளவே தாலமீதி லாதிதூதர் சாரமேவு வாழ்வினோர் நாலொடாறு பேர்கள்பாத நாவினாளு மோதுவாம். | 1.1.14 |
| 15 | வேறு ஆத மீன்றமனு நீதி யாண்டமுறை யாலு மோங்குபுக ழாகினோர் தூத ராங்கடவு ணாவி லாய்ந்தமறை தூவி நான்கு மத்க பாகினோர் நீத வான்களுறு போத வான்கள்குரு நேர்மை யாந்தகைமை யாகினோர் வேத வான்களெனு நாலிமாம்கள்பத மேலு மியாம்புகல வேணுமே. | 1.1.15 |
| 16 | வேறு உரமுறு தீன்பா ரெல்லா மொளிரவே விளக்கஞ் செய்யுந் துரமுறு மவுலி யாவாய்த் தோன்றின பேர்க்கு மேலாம் வரமுறு முகியித் தீன்செம் மலரடி யிரண்டு மென்றன் சிரமிசை யிருத்தி வாழ்த்திச் செந்தமிழ்ப் பனுவல் செய்வேன். | 1.1.16 |
| 17 | நம்மையா ளுடையான் வேத நபிதிரு வசனந் தீனோர் சம்மதித் திடப்பா ரெல்லாந் தழைக்கவே விளக்கஞ் செய்தோ ரிம்மையு மறுமை யும்பே றிலங்கிய சதக்கத் துல்லா செம்மல ரடியி ரண்டுஞ் சிந்தையி லிருத்தி னேனே. | 1.1.17 |
| 18 | அவையடக்கம் வேறு திக்க னைத்தினும் பாரினுந் தீவினுஞ் செங்கோற் புக்க நன்னெறித் திகிரிமன் னவர்கண்முன் பொருந்தக் தக்க கூலியுஞ் செய்துண வறிகிலான் சரிபோன் மிக்க செந்தமிழப் புலவர்மு னியான்விளம் புவதே. | 1.1.18 |
| 19 | படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற வெடுத்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரே மிடித்து நொந்தசிற் றெறும்பொரு மூச்சுவிட் டதுபோல் வடித்த செந்தமிழ்ப் புலவர்மு னியான்சொலு மாறே. | 1.1.19 |
| 20 | அடிய டித்தொறும் வழுவலால் விதிவிலக் கறியேன் படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்த லிடியி டித்திடு மாரவா ரத்தினுக் கெதிரோர் நொடிநொ டிப்பது போலுமொத் திருந்தென் நூலே. | 1.1.20 |
| 21 | தருங்கொடை நயினார் கீர்த்தி சகமெலாம் பரந்து
மிஞ்சி நெருங்கியே விசும்பி லண்ட முகடுற நிறைந்த வேபோ லிருங்கண வெள்ளை மேக மிரைபசுங் கடல்வீழ்ந் துண்டோர் கருங்கட லெழுந்த தென்னக் ககனிடைல் செறிந்து மீண்ட. | 1.2.1 |
| 22 | வேறு அகில மெங்கணுந் திடுக்கிட வாய்திறந் ததிர்ந்து மிகும ழைக்குல மடிக்கடி விழிப்பபோன் மின்னிக் ககன மெண்டிசை யடங்கலும் பரந்துகா லூன்றிச் சிகர பூதர மறைதரச் சொரிந்தன செருமி. | 1.2.2 |
| 23 | அதிரு மாமழைத் துளியிடை யிடையணி யணியாய் முதிரு மிந்திர கோபமு மாலியு முதிர்ந்த கதிர்செய் முத்தமு மாணிக்க ராசியுங் கலந்தே யுதிரும் வண்ணமொத் திருந்தன கிரியொருங் கொருங்கே. | 1.2.3 |
| 24 | பம்மி யெங்கணும் பொழிதரு சாரல்வாய்ப் பட்டுக் கம்மி னத்தக டுறக்கொடு கியகுளிர் கலக்க மும்ம தக்கரி களுமரி களுமுர ணறவே சம்ம தித்தொரு புடைகிடப் பனவெனச் சாரும். | 1.2.4 |
| 25 | தந்தி மான்மரை யணில்கொடு வரிதக ருடும்பு மந்தி சிங்களங் கவரிமா வழுங்குதே வாங்கு முந்து மான்மத மெண்குசெந் நாய்பணி முண்மா நந்தி மிஞ்சிய விலங்கினங் கொடுகிமெய்ந் நடுங்கும். | 1.2.5 |
| 26 | வேங்கை சந்தனஞ் சண்பகம் நெல்லிவெய் தான்றி கோங்க சோகுதேக் காசினி பாடலங் குறிஞ்சி நாங்கு காரகில் குங்கும மிலவு நாரத்தை தாங்கும் வேரற வரையொடு வரையிடை சாய்க்கும். | 1.2.6 |
| 27 | விலங்கி னங்கடங் குலத்தொடுங் குழுவொடும் வெருட்டிக் கலங்கு மஞ்சிறைப் பறவைக ளைனைத்தையுங் கலைத்தே யிலங்கு பைங்கனி சிதறிடத் தருக்களை யிடறி நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன நாரம். | 1.2.7 |
| 28 | வேறு வரிவிழிச் செவ்வாய்க் குறத்திய ரிதணு மனையையுந் தினையையும் வாரிப் புரிநரம் பிசையாழ் தொண்டகப் பறையும் பொடிபடத் துறுகலின் மோதி விரிதலைக் குறவர் குழாத்தொடும் வெருட்டி விளைந்தமுக் கனிசத கோடி சரிதர வீழ்த்தி மரகதக் கிரணத் தடவரை யருவிகொண் டிறங்கும். | 1.2.8 |
| 29 | மலையெனு மரசன் புயங்களைத் தழுவி மகிழ்ச்சிசெய் தவனுழைச் சிறந்த நிலைகெழு பொன்னு முரகசெம் மணியு நித்தில ராசியுங் கவர்ந்து தொலைவிலாப் பண்ட மனைத்தையும் வாரிச் சுருட்டியே யெல்லைவிட் டகலும் விலைமகள் போன்று பலபல முகமாய் வெள்ளரு வித்திரள் சாயும். | 1.2.9 |
| 30 | வேறு தாது குத்துவண் டார்த்தெழத் தருத்தலை தடவி வீதி வாய்நுரை தரவரு பாகெழ வீசிக் காது மாகளி றெனநதி கழைக்கடங் காது மோதிக் காலினா லெற்றியே யணையிட முறிக்கும். | 1.2.10 |
| 31 | பரந்த வெண்ணுரைத் துகிலுடுத் தறற்குழற் பரப்பி விரைந்து பாய்கயல் விழியெனத் திரைக்கரம் வீசிச் சுரந்த புற்புதத் தனத்துடன் சுழியுந்தி தோற்றப் பொருந்து மானதி விளங்கிழை மகளிரைப் போலும். | 1.2.11 |
| 32 | கிடந்த சந்தனங் காரகில் கிளைமணி கரிக்கோ டுடைந்த முத்தம்வெண் டந்தமுச் சுடரொளி யொதுங்கக் கடந்த செம்மணிப் பையுடன் கொடுகட லேற நடந்த வாணிக னொத்தது செழுங்கழை நதியே. | 1.2.12 |
| 33 | வேறு இத்தகைக் குறிஞ்சி நிலத்தினைக் கடந்தே யெரிதழற் பாலையிற் புகுந்து மைத்தடங் கூந்தற் கருவிழிச் செவ்வா யெயிற்றியர் வயிறலைத் தேங்கக் கைத்தலத் தேந்து குழந்தையுஞ் சிறாரும் வேடர்தங் கணத்தொடும் வெருட்டி முத்தணி சிறப்ப விருகரை கொழித்து முல்லையிற் புகுந்தது சலிலம். | 1.2.13 |
| 34 | பாறயிர் நறுநெய்க் கலத்தொடுங் கலக்கிப் பட்டியுங் குட்டியுஞ் சிதறிச் சூறையிட் டுதறி நெய்முடை கமழுஞ் சுரிகுழற் றொறுவிய ருடுத்த கூறையுங் குழலுங் குடுக்கையுந் தடுக்குங் கொண்டெடுத் தவர்நிரை சாய்த்து வேறரை யரைப்போற் பெருவளங் கவர்ந்து மருதத்திற் பரந்தன வெள்ளம். | 1.2.14 |
| 35 | வேறு கன்னன் மானதி வெண்டிரை நுரைகரை புரளத் தென்னி லைப்பகுப் பாகிய காலெலாஞ் செருமி யன்ன மென்சிறைப் பெடையொடுங் குடம்பைவிட் டகலத் துன்னு மேரியுந் தடங்களு நிறைந்தன தோயம். | 1.2.15 |
| 36 | அலையெறி ந்திரை கடலென வருநதி யதனைத் தொலைவின் மள்ளர்கள் குளந்தொறும் புகுத்திய தோற்றங் கொலைம தக்கரிக் குழுவினை வயவராய்க் கொடுபோய் நிலைத ரித்திடும் படுகுழிப் படுத்தவை நிகர்க்கும். | 1.2.16 |
| 37 | தடமு மேரியும் வாவியுங் கழனியுஞ் சலசக் கிடங்கு மெங்கணு நிறைதரப் பெருகுகீலாலங் குடம்பை யின்பல பேதமா கியசத கோடி யுடம்பு தோறினு முயிர்நின்ற நிலையினை யொக்கும். | 1.2.17 |
| 38 | வேறு ஏரியை யுடைத்துக் குளங்கரை தகர்த்தே யிடிபட வணையினை முறித்துச் சேரியுட் பரந்து கொல்லையுட் புகுந்து செழுங்கருப் பாலையைச் சாய்த்து வேரியஞ் சலசக் கழனியைச் யுழக்கி விரிதலை யரம்பையைத் தள்ளி வாரியிற் செறித்து பணையெலா நிரப்பி மட்டிலா மலிந்தன வனமே. | 1.2.18 |
| 39 | வேறு அலையெ றிந்திரு கரைவழி யொழுகுகம் பலையுங் கலையும் வெள்ளனஞ் சிறைவிரித் தசைத்த கம்பலையு மலைதி றந்தன மதகின்வாய் வழிந்தகம் பலையுஞ் சிலைத ரித்தபே ரொலிபெரும் படையொலி சிறக்கும். | 1.2.19 |
| 40 | முறைமு றைக்கிணைப் பறையொலி கடலென முழங்க நிறையுஞ் சேரிவிட் டெழுந்தன ருழவர்க ணெருங்கிச் செறிக டக்களி றினமென வயின்வயின் றிரண்டு மறிபு னற்கரை யிடந்தொறுஞ் செறிந்தனர் மலிந்தே. | 1.2.20 |
| 41 | மட்டு வாய்வயி றாரவுண் டெண்ணிலா மள்ளர் கொட்டு வாங்கியே யிருபுயங் குலுங்கிடக் கரண்கள் வெட்டு வார்சிலர் மென்கரத் தேந்தியே வரம்பு கட்டு வாரடைப் பார்திசை தொறுங்கணக் கிலையே. | 1.2.21 |
| 42 | வேறு தெரிபொறி முகட்டுக் கவட்டடி யலவன் சிதைந்திடக் கமடமுள் ளழுந்த வரிவளை நெரிய வலம்புரிக் குலத்தின் வயிற்றிடை கொழுமுகந் தாக்கி விரிகதிர்த் தரள மணிபல வுகுப்ப வெருண்மதக் கவையடிப் பேழ்வாய் நிரைநெறி மருப்புக் கரும்பக டிணக்கி நீள்வய லெங்கணு முழுதார். | 1.2.22 |
| 43 | முள்ளரைப் பசுந்தாள் வட்டிலைக் கமல முகையுடைந் தொழுகுதேன் றெறிப்பக் கள்ளவிழ் குவளை யொருபுறஞ் சரியக் கடிமலர்க் குமுதமு மடிய மள்ளர்கார் சேற்றி லிடறிய பதும மணியின மலரளி யெழுப்ப வெள்ளநீர் பரப்பு கழனிக டோறு மென்கருஞ் சேறுசெய் தனரே. | 1.2.23 |
| 44 | சுந்தரப் பொறியஞ் சிறையறு காலே ழிசையளி தொகுதியிற் கூடி மந்தர மனைய தருவின்மேல் வீழ்ந்து வாய்விட முழங்கிய வோதை கொந்தெறி கமலங் குமுதஞ்செங் கழுநீர் குடியொடு மடிந்தன வினிமே லந்தர மலது வேறிட மிலையென் றழுகுரன் மயங்குவ போலும். | 1.2.24 |
| 45 | சுரும்பின மிருந்து தேனுண்டு தெவுட்டிச் சுருதிசெய் பன்மலர் சிறந்த விரும்படி கிடங்கிற் கிடந்துமூச் செறிந்த வெருமையின் கவையடிப் பரூஉத்தா ணிரம்பிடப் பதிந்த சலஞ்சலத் தரள நீணிலா வெறிப்பது நிறைந்த கரும்பொறிக் கவைநாத் துளையெயிற் றரவு கவ்விய கதிர்மதி போலும். | 1.2.25 |
| 46 | கலன்பல வணிந்து தொண்டியுண் டெழுந்து கதிரவன் றனைக்கையாற் றொழுது குலந்தரு தெய்வ வணக்கமுஞ் செய்து குழுவுட னுழுநர்கள் கூண்டு நிலந்தனை வாழ்த்தி வலக்கரங் குலுக்கி நென்முளை சிதறிய தோற்றம் பொலன்பல சிறப்ப விடனற நெருங்கிப் பொன்மழை பொழிவது போலும். | 1.2.26 |
| 47 | படர்மருப் பெருமைக் குடம்புரை செருத்தற் பருமுலைக் கண்டிறந் தொழுகி நடைவழி சொரியு மமுதமும் வாழை நறுங்கனி யுகுத்தசெந் தேனு முடைபடு பனசப் பசுங்கனிச் சுளையி லூற்றிருந் தோடிய தேனுங் கடிமலர் போர்த்த வரம்பினைத் தகர்த்துக் கழனியிற் பரந்துபாய்ந் துடைக்கும். | 1.2.27 |
| 48 | அருமறை நெறியும் வணக்கமுங் கொடையு மன்புமா தரவுநல் லறிவுந் தருமமும் பொறையு மிரக்கமுங் குணமுந் தயவுஞ்சீ ரொழுக்கமு முடையோர் பெருகிய செல்வக் குடியொடு கிளையும் பெருத்தினி திருந்துவாழ் வனபோன் மருமலர்ப் பழனக் காடெலா நெருங்கி வளர்ந்தது நெல்லிலை நாற்றே. | 1.2.28 |
| 49 | கோதற வெழுந்த நாற்றினைப் பறித்துக் குவித்திடு முடியிட மடுத்துக் தீதுறுங் கருங்கட் செய்யவாய் வெண்பற் சிற்றிடைக் கடைசியர் வாரிப் பூதர மனைய சுணங்கணி முலையிற் புள்ளியிற் சேதகம் போர்ப்ப வாதரம் பெருகி நிரைநிரை வடிவா யணியணி நாற்றினை நடுவார். | 1.2.29 |
| 50 | கையினிற் செறிந்த முடியினைச் சிதறிக் கடைசியர் கரங்கடொட் டொழுங்காய்ச் செய்யினிற் பதிப்பத் துளிகருஞ் சேறு தெறித்திடுஞ் செழுமுகச் செவ்வி துய்யவெண் டிரைப்பாய் சுருட்டிமே லெறியுந் தொடுகடன் முகட்டிடை யெழுந்து வையகஞ் சிறப்ப வருமுழு மதியு மறுவுமொத் திருந்தன மாதோ. | 1.2.30 |
| 51 | பனைமதுத் தேக்கி யிருவிழி சேப்பப் பைங்கழை நிகர்த்ததோ ளசைய வனநடை சிதையச் சேவடி பெயர்த்திட் டள்ளலஞ் சேற்றிடை நடுவோர் சினமத கரிக்கோ டெனுமுலைத் தடத்திற் சேதகந் தெறிப்பது திரண்ட வனசமென் முகையிற் பொறிவரி யறுகால் வண்டுமொய்த் திருப்பது போலும். | 1.2.31 |
| 52 | முற்றிழை கிடந்த முலைக்குவ டசைய முகிறவழ் கருங்குழ னெகிழச் சிற்றிடை யொசிய மதிமுகம் வெயர்ப்பச் சேற்றிடை நாற்றினை நடுவோர் பற்றுமென் கரத்திற் கரும்பொனின் கடகம் பசியநெற் பயிரொளி பாய மற்றெனை யுரைப்ப விரிகதிர் பரப்பு மரகதக் கடகமொத் திருந்த. | 1.2.32 |
| 53 | வெறிமது வருந்தி மரகதக் கோவை மென்பிடர் கிடந்துருண் டசையக் கறுவிய மனத்தோ டினத்தொடு மிகலிக் கடைசியர் களிப்பொடு தவளச் சிறுநகை தரளப் பவளமெல் லிதழிற் செழுமலர்க் கைவிரற் குவித்துக் குறிகுரற் குரவை கூன்பிடர்ப் பேழ்வாய்க் குடவளைக் குரவையோ டிகலும். | 1.2.33 |
| 54 | கூந்தலம் பிடிமா மென்னடை பயிலுங் குடமுலைக் கடைசியர் செழுங்கைக் காந்தண்மெல் விறர்குங் கடுவரி விழிக்குங் கடைந்திணைக் கியகணைக் காற்குஞ் சேந்திணை பொருவா தினமென வெருவிச் செங்கயல் வரிவராற் கௌிறு பாய்ந்தயல் போய வனத்திடை யொளித்துப் பங்கமெய் படப்பயப் படுமே. | 1.2.34 |
| 55 | குருகின மிரியப் புள்ளினம் பதறக் கொக்கினம் வெருவிட வெகினம் விரிமலர்க் கமலப் பாயல்விட் டகல மென்சிறைப் பேட்டனந் துடிப்பச் சொரிமதுத் துளித்துக் குவளையாய் சிதறச் சுருட்டிவால் விசைத்திடத் துள்ளி வரிவராற் பகடு வளைநில வெறிக்கு மடைத்தலைக் கிடந்துமூச் செறியும். | 1.2.35 |
| 56 | வரிசையிற் செறிந்த நிரைபசுஞ் சாலி வளர்கிளைக் கிளையெனக் கிளைத்துப் பெருகுசூன் முதிர்ந்தீன் றாரமு துறைந்து பிடர்குனி தரக்குலை சேந்து சொரிகதிர்ப் பவள நிறம்பல படைத்துச் சுடர்மணி முத்தினந் தெறிப்பத் தரையினிற் படிந்தே யருட்கை சுரந்த தருவினம் வெருவிடக் கிடக்கும். | 1.2.36 |
| 57 | கொத்தலர் சூடி யரைத்துகி லிறுக்கிக் குடமதுக் கைமடுத் தருந்தி மைத்தவழ் கனகக் கிரிப்புயந் திரண்ட மள்ளர்கள் வனப்பினுக் குடைந்த சித்தசன் கரவாட் பறித்ததை வளைத்த செயலெனப் பிள்ளைவெண் பிறைவாட் கைத்தலத் தேந்திக் கழனியிற் புகுந்து கதிரரிந் தரிநிரை யிடுவார். | 1.2.37 |
| 58 | திருந்திய வரியைக் கொடுங்கையிற் கிடத்தித் திரைசெய்து சும்மையிற் சேர்த்துக் கருந்தடங் கூந்தற் செவ்வரி வேற்கட் கடைசியர் குழாத்தொடுந் திரண்டு விரிந்தசெங் கமலக் கரம்பல வருந்த விசித்திறுக் கியசுமை யேந்திப் பொருந்திய வரப்பி நெறிகடைக் கதலிப் புலியடிக் குலைத்தலை சாய்க்கும். | 1.2.38 |
| 59 | அசைந்தசிற் றிடைமென் கொடிவருந் திடநீ ளணிவட மார்பிடைப் புரளப் பசுங்கிளிப் பரிவேள் படையெனத் திரண்ட கடைசியர் சுமையெலாம் பரப்பி யிசைந்திட நிறைத்துக் குவித்தநெற் போர்க ளெங்கணு மிலங்கிய தோற்றம் விசும்பினைத் தடவ வரைசத கோடி வீற்றிருந் தனவெனச் சிறக்கும். | 1.2.39 |
| 60 | கார்த்தடக் களிற்றின் வனப்பினை யழித்த கருங்கடா வினம்பல விணைத்துப் போர்த்த்லை திறந்து திரித்துவை நீத்துப் பொன்னிறச் செந்நெல்லைக் குவித்துச் சேர்த்திடுஞ் சகடந் தொறுந்தொறு மியற்றித் திரண்மனை வயின்வயின் செறிப்பா ரார்த்தபே ரோதை யினமணி கொழிக்கு மறைதிரைக் கடலினைப் பொருவும். | 1.2.40 |
| 61 | செந்நெலிற் பெருக்கின் கனைகுரற் சகடந் திசைதொறு மலிந்தன செருக்குங் கன்னலங் கழனி புகுந்தறுத் தடைந்த களமர்க ளொலிகுரற் செருக்குந் துன்னுபூங் கமுக சிதறுசெம் பழுக்காய் சுமப்பவர் கம்பலைச் செருக்கு மன்னவன் வகுதைத் துரையபுல் காசீம் வளமனைச் செருக்குமொத் திருக்கும். | 1.2.41 |
| 62 | வேறு கால வட்டவாய் முளரியி லூறுகள் ளருந்திக் கோல வட்டவஞ் சிறையளி குழுவுடன் பாடுஞ் சோலை வட்டவாய் மயிலினஞ் சூழ்ந்துகார் நீல வால வட்டமொத் திருந்தமென் சிறைவிரித் தாடும். | 1.2.42 |
| 63 | அரக்கெ றிந்தசெவ் வாம்பல்வா யணியிழை மடவார் நெருக்கி யிட்டகாற் சிலம்பொலி விசும்புற நிமிர விருக்கும் வாவியுட் பெடையன மிடர்கொலென் றிரங்கித் தருக்கி ழந்துதன் சேவல்வாய்த் தொனியெனத் தயங்கும். | 1.2.43 |
| 64 | நலங்கொ டாமரை முகமலர் தரநறுங் குவளை விலங்கி வள்ளையில் விழியெனக் கிடப்பமெல் லரும்பு துலங்கு மென்முலை தோன்றிடப் பச்சிலைத் துகில்போர்த் திலங்கு வாவிக ளணியிழை மகளிரொத் திருந்த. | 1.2.44 |
| 65 | நிரைந்த சண்பகம் பாடலந் தடக்கரை நிரம்பச் சொரிந்த பன்மலர் மீதினில் வரியளித் தோற்ற மெரிந்தி லங்குபொற் கரையினை யிரும்பினா லிறுகப் பரிந்த றைந்தசுள் ளாணியின் புறமெனப் பரந்த. | 1.2.45 |
| 66 | தோட விழ்ந்துபூந் தாதுகக் குடைந்தினைச் சுரும்பு பாட வாவியு ளிளநிலாத் தோற்றிய பான்மை சாடும் வார்புன லலைதரத் திரைகளிற் றத்தி யோட மோடுவ தொத்திருந் தனவென வொளிரும். | 1.2.46 |
| 67 | வாய்ந்த மெல்லிழை மடந்தையர் தடத்தின்மெய் வருந்தத் தோய்ந்து நீர்குடைந் தாடுவோர் மதிமுகத் தோற்றஞ் சேந்த கஞ்சமுங் குவளையு மெனவெழில் சிறந்த கூந்தல் வெண்டிரைக் கடலிடை முகிலெனக் குலவும். | 1.2.47 |
| 68 | திருந்து மெல்லிழை மடந்தையர் புனலிடை திளைப்பச் சரிந்த கூந்தலி லிருந்தவண் டெழுந்துபூந் தடத்தில் விரிந்த காவியில் வீழ்வது மின்னனார் விழிக்குப் பொருந்து மோவெனச் சினத்துட னுதைப்பது போலும். | 1.2.48 |
| 69 | மறிந்து தூங்கிய நாவலின் கனியையோர் மங்கை யெறிந்து பார்மது கரத்தினைக் கரத்தினா லெடுப்பப் பறிந்து போதலிற் றுணிக்கின்கை யுதறிமெய் பதறிச் செறிந்து சூழ்தரச் சொரிந்தமைக் கனியையுந் தீண்டாள். | 1.2.49 |
| 70 | கரிய மைவிழி மங்கையர் பூங்குழற் காட்டிற் சொரியு மென்மலர்த் தாதுக்க ளுதிர்ந்தன சுடர்மின் விரியு மெல்லிழைப் பூணொடு பூண்பல மிடைந்து பொருது ரிஞ்சதிற் பொற்பொடி யுதிர்வன போலும். | 1.2.50 |
| 71 | பிடித்த கொம்பிருந் தோடிமுட் குடக்கனி பிடித்துக் கடித்த போதினிற் காம்பறக் கனியுடன் கவியும் படித்த லத்தினில் வீழ்ந்திடப் பதறிமெய் பதைத்துத் துடித்துத் தன்னுயிர்க் கடுவனை யணைத்துட றுணுக்கும். | 1.2.51 |
| 72 | தாறு கொண்டபைங் கதலிதே மாப்பலாத் தருத்தே னூறு கொண்டசெங் கனிசிறு கிடங்கிடை யுகுப்பச் சேறு கொண்டதிற் கிடந்திருள் செறிகரு மேதி வேறு கொண்டுபொன் மேதியின் குலமென விளங்கும். | 1.2.52 |
| 73 | கள்ள விழ்ந்தபூம் பொய்கையிற் புள்ளினங் கலையத் துள்ளு மேல்வரிக் கயலுண்டு நாரைகண் டூங்கு முள்ள மன்புறச் சேவலின் சிறைநிழ லொதுங்கி வெள்ள னப்பெடை தாமரைத் தவிசில்வீற் றிருக்கும். | 1.2.53 |
| 74 | ஏல வார்குழற் கிடுபுகை மஞ்சினோ டிகலுஞ் சோலை வாய்தொறு முக்கனித் தேன்மழை சொரியு மாலை வாய்தொறுங் கரும்புடைத் தாறெடுத் தோடு நீல வாய்மலர் வாவிகள் பெருங்கட னிகர்க்கும். | 1.2.54 |
| 75 | தெருளு றும்படி தேன்றுளி தெறித்திடச் சிதறிப் பொருத லைத்திடு மாங்கனி தேங்கனிப் பொழிலே மரும ணம்பெறுஞ் சந்தகில் சண்பக வனத்திற் றருவே னும்பெயர் பெறச்சிறந் தீந்திருந் தனவே. | 1.2.55 |
| 76 | வேறு நினக்கும்பொற் பொருளே நிந்தனை மற்றோர் நிந்தனை சிந்தனை யிலையே யினக்கருஞ் சுரும்பு மதுத்துளி யருந்து மிவையலான் மதுப்பிறி திலையே சினக்கரி முனைக்கோட் டிளமுலைப் புலவி திருத்தும்பொய் யலதுபொய் யிலையே வனக்கனி கறுத்த குலைக்கள வலது மறுத்தொரு கொலைக்கள விலையே. | 1.2.56 |
| 77 | நிலங்க ளேழுக்கு நாவலந் தீவுகண் ணிகர்க்கு நலங்கொ டீவுக்குக் கண்மணி யறபுநன் னாடே புலன்கொள் கண்மணிக் குள்ளுறை யுயிரெனப் பொருந்தி யிலங்கு மக்கமா நகர்வளஞ் சிறிதெடுத் திசைப்பாம். | 13.1 |
| 78 | வேறு விரிகதி ரெறித்த மணிவளை யுகுப்ப விரிதிரை யகழெனுந் தடத்தி லெரிசைகைக் கிரணப் பதுமமா மணியி னினம்பல சூழ்ந்திருந் திலங்கப் புரிமுறுக் கவிழ்ந்த பொன்னிதழ்க் கமலம் பூத்திருந் ததுவெனப் புரிசை தெரிதரச் சிறந்து செல்வமுஞ் செருக்குந் திகழ்தர வீற்றிருந் ததுவே. | 13.2 |
| 79 | வடவரைப் புடைசூழ் நிலத்தெழு தீவும் வரவழைத் தொருதலத் திருத்தித் தடமுடிக் கிரணத் திகிரிமால் வரையைச் சதுர்தரப் புரிசையாய் நிறுத்தி யிடனற நெருங்கும் பெரும்புபுறக் கடலை யிதற்கக ழெனப்பெய ரிட்டுப் படவர வரசன் றிருமுடி மணியைப் பதித்தது மக்கமா நகரம். | 13.3 |
| 80 | கானகத் துறையும் வயிரவொண் கதிரோ கடல்படு நித்திலக் கதிரோ தேனவிழ் பதும மணிக்கதி ரதுவோ சிறந்திடு மக்கமா நகரில் வானவர்க் கிறைவன் ஜபுறயீல் பலகால் வந்தவர் மெய்யொளி பாய்ந்தே யீனமி னகரஞ் செழுங்கதிர் பரப்பி யிருப்பது பிறிதுவே றிலையே. | 13.4 |
| 81 | சரிகதி வேக மாருதஞ் சிதையத் தாவிய புரவியி னொலியு நிரைமணி யுருட்டுப் பசுங்கதி ரிரத நெருங்கிட நடத்துபே ரொலியு முரலடிச் சிறுகட் பெருமதப் பிறைக்கோட் டொருத்தலி னிடிமுழக் கொலியும் விரிதிரைக் கரங்கொண் டறையுவாப் பெருக்கும் வெருக்கொளத் தெருக்கிடந் தொலிக்கும். | 13.5 |
| 82 | மின்னிடை நுடங்கச் சிலம்பொலி சிலம்ப மேகலைத் திரண்மணிக் கதிர்செம் பொன்னொடு மிலங்க மறுகிடைப் புகுந்த புனையிழைப் பிடிநடை மடவார் மன்னிய பதத்தி னலத்தக நிலத்தில் வரிபடக் கிடப்பன சிறந்த துன்னிதழ்க் கமலப் பதத்தினை நிகர்ப்பச் சுவட்டடி தொடர்வன போலும். | 13.6 |
| 83 | கண்ணகன் ஞாலம் விலைசொலற் கரிய கலைபல நிரைத்தலாற் பணியாற் றண்ணெனக் குளிர்ந்து பிறவுரு வமைத்துத் தரும்படி மக்கலப் பெருக்கான் மண்ணினிற் சிறந்த நகர்த்திர வியத்தான் மரக்கலத் திறக்கிய சரக்கா லெண்ணிறந் தெழுநல் வளம்பல படைத்தங் கிருந்தது கடைத்தெருத் தலையே. | 13.7 |
| 84 | மான்மதக் குவையுஞ் சந்தனத் தொகையு மணிக்கருங் காழகிற் றுணியும் பான்மதிக் குழவிக் குருத்தெனக் கதிர்கள் பரப்பிய மதகரி மருப்புந் தேனமர்ந் தொழுகுங் குங்குமத் தொகையுஞ் செறிதலா லுயர்ச்சியால் வளத்தா லீனமி லிமயப் பொருப்பெனப் பணைத்தங் கிருந்தது கடைத்தெருத் தலையே. | 13.8 |
| 85 | தந்தியின் குழுவுங் குரகதத் திரளுந் தடவரை பொருவுதேர்க் கணமுஞ் சிந்துரப் பிறைநன் னுதற்கருங் கூந்தற் செவ்வரித் தடங்கண்ணார் நெருக்கும் வந்தவர் நினைத்த பொருளுமா ரமிர்தும் வகைவகை தருதலான் மணியு மிந்திர தருவும் வறிதென மதர்த்தங் கிருந்தது கடைத்தெருத் தலையே. | 13.9 |
| 86 | நிரைத்தபைங் கதிரார் மரகத மணியா னீணிலாக் கருப்புரத் தகட்டாற் பருத்தசங் கினத்தால் வலம்புரிக் குலத்தாற் படர்கொடித் திரட்பவ ளத்தால் விரித்தவெண் ணுரைபோல் வெண்டுகி லடுக்கால் விரைசெறி யம்பரின் றிடரா லிரைத்தபே ரொலியாற் பெருங்கட னிகரா யிருந்தது கடைத்தெருத் தலையே. | 13.10 |
| 87 | பைங்கடற் பிறந்து வணிகர்கை புகுந்த பருமணி நித்திலக் குவையுந் தங்கிய கிரண வனசமா மணியுந் தயங்கொளி வயிரரா சிகளுஞ் செங்கதி ரெறிக்கு மிரவியு மமுதச் செழுங்கதிர் மதியமு முடுவு மிங்கிவண் குடிபுக் கிருந்தது போன்று மிருந்தது கடைத்தெருத் தலையே. | 13.11 |
| 88 | அணிபெற வொழுங்காய் வயின்வயின் றிரண்ட வகிற்புகை முகிலின மெனவுங் குணில்பொரு முரசப் பெருங்குரல் கிடந்து குழுமிவிண் ணேறொலி யெனவு மணிவளைத் தடக்கைத் துவரிதழ் கனத்த வனமுலை மின்கண்மின் னெனவுந் தணிவில நிவந்த செழுங்கதிர் மாடந் தமனியக் கிரியினோ டிகலும். | 13.12 |
| 89 | வெண்ணில வெறிக்கு மிரசதத் தகடு வேய்ந்தமே னிலைவயின் செறிந்து பண்ணிருந் தொழுகு மென்மொழிக் குதலைப் பாவையர் செழுங்குழல் விரித்து நண்ணிய துகிலுங் கமழ்தர வூட்டு நறும்புகை சுருண்டெழுந் தொழுங்காய் விண்ணினிற் படர்வ தேணியொன் றமைத்து விசும்பினுக் கிடுவது போலும். | 13.13 |
| 90 | அடுசெழும் பாகுந் தேனுமா ரமிர்து மனத்தொடு மனத்தொடுந் திருந்தி யிடனற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனையிட மெண்ணினை மறைக்குங் கடுவினை யடர்ந்த கொடுவினை விழியார் கறைதவிர் மதிமுகங் கண்டோ படர்தரு மாடக் குடுமியின் விசித்த பசுங்கொடி மதிமறுத் துடைக்கும். | 13.14 |
| 91 | தேங்கமழ் சுருதி வரிமுறை படர்ந்து திகழ்தரு நித்திலக் கொடிக ளோங்கிட மாடக் குடுமியி னடுநின் றுலவிய திரவினும் பகலும் வீங்குசெங் கதிரி னிரவியுந் தவள வெண்கதிர் மதியமும் விலகிப் பாங்கினிற் புகுமி னெனக்கர மசைத்த பான்மையொத் திருந்தன மாதோ. | 13.15 |
| 92 | வேறு மானை யன்னகண் மடந்தையர் வதுவையின் முழக்குஞ் சேனை மன்னவர் படைமுர சதிர்தெரு முழக்குந் தான மிந்நகர் முதலெனச் சாற்றிய முழக்குஞ் சோனை மாமழை முழக்கென வைகலுந் தொனிக்கும். | 13.16 |
| 93 | வீதி வாய்தொறு மிடனற நெருங்கிய மேடைச் சோதி வெண்கதி ரந்தரத் துலவிய தோற்ற நீதி மானபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கிக் கோதில் பொன்னகர் திறந்தவாய்க் கதிரெனக் குலவும். | 13.17 |
| 94 | மன்ற லங்கம ழகழ்புனை சுதைதிகழ் மதிளா னின்றி லங்கிய கணமணிக் கொடுமுடி நிரையான் முன்றி லெங்கணு மசைதரு கொடிநிறை முறையா லென்று மிந்நகர் பொன்னக ரென்பதொத் திடுமே. | 13.18 |
| 95 | பட்ட முற்றிடு நபிகளால் விண்ணவர் பரிவாற் கட்டு பேரொளிக் ககுபத்துல் லாவிருக் கையினான் மட்டு வார்குளிர் சோலையான் மலிந்தபொன் னுலக மெட்டு மொன்றெனத் திரண்டுவந் திருந்ததொத் திருக்கும். | 13.19 |
| 96 | தெரிந்த செவ்வியர் முறைவழி தௌிந்தவர் செந்நூற் சொரிந்த நாவினர் முதியவர் திரண்டசொல் லோதை யெரிந்த செங்கதி ரிலங்கிய பள்ளிக ளெவையும் விரிந்த வாய்திறந் தோதுவ போன்றன வேதம். | 13.20 |
| 97 | சந்திர காந்திசெய் பலகையை மடிமிசை தரித்தே யிந்திர நீலமொத் திருந்தமை தோய்த்ததி லெழுதி மந்திர மாமொழி மறைபயி லிளையவர் நெருங்கி யெந்த வீதியு முழங்குவ திவையலா லிலையே. | 13.21 |
| 98 | மறையின் மிக்கவ ரோதிய வோசையும் வரிசைத் துறவின் மிக்கவர் திக்கிறி னோசையுஞ் சூழ்ந்தே யிறைவ னைத்தொழு திருகையு மேந்திய வாமீன் முறைமு றைப்படிக் கூறிய வோசையு முழங்கும். | 13.22 |
| 99 | மருவிரி வாவி செந்தா மரைமலர்க் கைக ளேந்தச் சொரிமது சிந்துஞ் சந்தத் துடவைசூழ் மதினா தன்னிற் றெரிதர வரசு செய்து தீனிலை நிறுத்திச் செல்வந் தருநபி யிறசூ லுல்லா தலைமுறை தோற்றஞ் சொல்வாம். | 1.4. 1 |
| 100 | தெரிபொரு ளரிய வேதத் துட்பொருட் டௌிவ தாக வருபொரு ளாதி பாரின் முகம்மதை விளக்கஞ் செய்யப் பரிவுறு மனுவா தத்தைப் படைக்கமண் ணெடுத்து வாவென் றுரைதர இசுறா யீலு முவந்துமண் ணெடுத்துப் போந்தார். | 1.4. 2 |
| 101 | கதிர்வடி வொழுகி நின்ற ஹபீபுமெய் வகுக்க வேண்டி விதியவன் ஜிபுற யீலை விரைந்துமண் கொடுவா வென்றான் துதிபெறு மதினா தன்னிற் றூயவோ ரிடத்திற் றோன்றி யிதமுற வெடுத்துப் போந்தா ரிமையவர் தலைவ ரன்றே. | 1.4. 3 |
| 102 | திறலுறு ஜிபுற யீல்தந் திருக்கையி லேந்திப் போந்த பிருதிவி தனையே மிக்கோர் பெறும்பதி சுவனந் தன்னில் நறைவிரி யமுத மெந்த நாளினு மதுர மாறாத் துறைவிரி நதிக டோறுங் கழுவினர் துலங்க வன்றே. | 1.4. 4 |
| 103 | வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றந் தெரிதர வானோர்க் கெல்லாஞ் சோபனஞ் சிறக்கச் சொல்லி யரியமெய் பூரித் தோங்கி யகத்தினின் மகிழ்ச்சி பொங்கிப் பெரியவன் றிருமன் வைத்தார் பேரொளி யிலங்கிற் றன்றே. | 1.4. 5 |
| 104 | மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனுவா தத்தின் வெந்நிடத் திருத்தி யங்கம் வியனுறும் வடிவ தாகத் தென்னுறு ஜலால் ஜமாலென் றேத்திய திருக்கை யாரத் தன்னிக ரில்லாத் துய்யோன் வகுத்தனன் தழைக்க வன்றே. | 1.4. 6 |
| 105 | மெய்யெழில் வாய்ப்பச் சீவன் விடுத்தனன் விடுத்த போதில் ஐயமற் றெழுந்து சென்னி மூளையி னவத ரித்து வையகஞ் சிறப்ப வானோர் மனங்களிப் பேறி விம்மத் துய்யநற் கலிமா தன்னைச் சொல்லியங் கிருந்த தன்றே. | 1.4. 7 |
| 106 | உரைதெரி கலிமா வோதி யோதியங் கிருந்த சீவன் இருவிழி தனிலி றங்கி யிருந்தகண் விழித்துச் சொர்க்கச் சொரிகதிர் வாயின் மேலாய் நோக்கின சுடர்க டூங்கும் வரியுறு கலிமாத் தன்னை வளம்பெறக் கண்ட தன்றே. | 1.4. 8 |
| 107 | துண்டத்தி னாவி தோன்றத் தும்மலுந் தோன்றிப் பின்பு விண்டுரை பகரு நாவின் மேவியல் ஹம்தை யோதிக் கொண்டபின் பிரத்தி சொன்ன குதாதிரு வசன நோக்கி யண்டர்நா யகனைப் போற்றி யாதமொன் றுரைப்ப தானார். | 1.4. 9 |
| 108 | கணித்தள வறுக்க வொண்ணாக் கடவுளே குதாயே நீங்கா மணிக்கதி ரெறிக்குஞ் சொர்க்க வாயிலி னிலைக்கு மேல்பாற் பணித்தநின் றிருநா மத்தி னுடனொரு பெயரைப் பண்பா யணித்துவைத் திருப்பக் கண்டே னவரெவ ரறியே னென்றார். | 1.4. 10 |
| 109 | மாதர்சூ லகட்டுட் டோன்றா மனுநெறி ஆத மேநின் காதலி லுதவு கின்ற கான்முளை யதிலோர் பிள்ளை வேதநா யகமா யெங்கும் விளங்குதீன் விளக்காய்ப் பின்னாட் பூதல நபியாய்க் காணப் படைத்தனன் புகலக் கேண்மோ. | 1.4. 11 |
| 110 | கலைமறை முகம்ம தென்னுங் காரண மில்லை யாகில் உலகுவிண் ணிரவி திங்க ளொளிருடுக் கணஞ்சு வர்க்கம் மலைகட னதிபா தாளம் வானவர் முதலா யும்மை நிலையுறப் படைப்ப தில்லை யெனவிறை நிகழ்த்தி னானே. | 1.4. 12 |
| 111 | பரத்தினை யிறைஞ்சி வாழ்த்திப் பரிவுபெற் றிருந்த வாதஞ் சிரத்தினி லிருந்த வாவி தேகத்தி னிறைந்த பின்னர் வரத்தினி லுயர்ந்த வண்மை முகம்மது புவியிற் றோன்றத் தரித்தபே ரொளிவுக் கந்தச் சசிகதிர் மழுங்கு மன்றே. | 1.4. 13 |
| 112 | உடலுறைந் துயிருண் டென்னு மொருவடி வில்லான் செவ்வி மடலவிழ் வனச பாத முகம்மதி னொளிவுக் காக வடலுறு மக்கட் கெல்லா மதிபதி யாதத் துக்கே யிடமுறு மமரர் யாரும் சுஜுதுசெய் திடுக வென்றான். | 1.4. 14 |
| 113 | தூயவ னுரைப்பக் கேட்ட சொன்மறா தெழுந்து தங்கள் காயமு மனமும் வாக்குங் கலந்தொன்றாய் மகிழ்வு பொங்கி நேயமுற் றிடப் பணிந்த நிரைநிரைக் கைக ளேந்தி வாயினிற் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கஞ் செய்தார். | 1.4. 15 |
| 114 | வானவர் செய்யு மந்த வணக்கத்தின் முறைசெய் யாமற் போனத னால ஜாசீல் பொறைநிறை யறிவு போக்கி யீனவன் குணத்த னாயி லகுனத்து முனிவும் பெற்றே யானவம் பிபுலீ சென்னும் பெயரும்பெற் றலைந்து போனான். | 1.4. 16 |
| 115 | பொருப்புருக் கொண்ட தன்னப் புயத்தெழி லாதந் தன்னுள் விருப்பெனும் போக முற்றி விழைவுபெற் றிடுத லாலே கருப்பமுற் பவிக்க வேண்டுங் காரண காட்சி யாக மருப்புகுங் குழல்ஹவ் வாவை வல்லவன் பிறப்பித் தானே. | 1.4. 17 |
| 116 | தேங்கமழ் குழலுஞ் சோதித் சிறுபிறை நுதலும் வாய்ப்பப் பாங்கிருந் தமுதஞ் சிந்தும் பனிமொழி மாதை நோக்கி யோங்குநின் பெயரைக் கூறென் றுரைத்திட ஹவ்வா வென்றா ரீங்கிவ ணுறைந்த வண்ண மேதென வாதங் கேட்டார். | 1.4. 18 |
| 117 | செவ்விமன் னெறியா தத்தின் றிருமதி முகத்தை நோக்கி மவ்வலங் குழலா ரிந்த வானகம் புவிமற் றுள்ள வெவ்வையும் படைத்தோ னென்னை வகுத்துநும் வயின்செல் கென்றா னவ்வழி யடைந்தே னென்றா ரழகொளிர் பவள வாயால். | 1.4. 19 |
| 118 | செப்பிய மாற்றங் கேட்டு ரோமங்கள் சிலிர்த்துப் பூரித் தப்பொழு திறையைப் போற்றி யாதம்ஹவ் வாவை நோக்கி மைப்படுங் கரிய கூந்தன் மடமயில் வடிவுட் கொண்டு துப்புறை யமுதந் துய்ப்பத் தொடுவதற் கொருமித் தாரே. | 1.4. 20 |
| 119 | பகரருங் குணமுந் திவ்ய பரிமள மணமு மாறாச் சிகரமு மயங்க வெற்றி திகழ்தரு புயமு நோக்கி நிகரருங் குரிசி லேநன் னிலைபெறு வாழ்வே யென்றன் மகரினைத் தருக பின்னர் வருகவென் றுரைத்திட் டாரே. | 1.4. 21 |
| 120 | கேட்டனர் மகரென் றாதங் கிலேசமுற் றிறைபாற் கெஞ்சி வாட்டமில் லவனே யெந்த வகைமகர் கொடுப்ப தென்றார் நாட்டிய புகழ்சேர் மக்க முகம்மது நபிதம் பேரிற் சூட்டிய சலவாத் தீரைந் துரைமென விறைவன் சொன்னான். | 1.4. 22 |
| 121 | மதிக்கதிர் விலக்குஞ் சோதி முகம்மதின் சலவாத் தோத விதித்தன னிறையென் றாதம் விளங்கொளிச் சலவாத் தோதித் துதித்தனர் ஹவ்வா கேட்டுச் சோபன மகர்பெற் றேனென் றிதத்தித மித்து நெஞ்ச மிருங்களிப் பேறி னாரே. | 1.4. 23 |
| 122 | கடிமலர்க் கொடியுஞ் செவ்விக் கற்பகத் தருவும் போலப் பிடிநடை மயிலும் வெற்றி பெறுந்திற லரசுங் காம மிடையறா தமிர்த போக மினிதுண்டு களித்துப் பொங்கி வடிவுறு மின்ப வெள்ள வாரிக்கு ளழுந்தி னாரே. | 1.4. 24 |
| 123 | துறக்கநன் னகரிற் சேர்ந்து சுகமனு பவிக்கு மாத மறக்கரும் பொருளே வேதம் வருமுறைக் குரிய கோவே பெறற்கருஞ் சுவன வானோ ரனைவரும் பெருது கூண்டென் புறக்கணி னிருப்ப தென்னோ புகலெனப் புகல லுற்றான். | 1.4. 25 |
| 124 | நிதமழ கொழுகி வாச நிறைந்தமெய் முகம்ம தென்னு முதிர்கதிர் விளங்கி நுந்த முதுகிடத் திருக்கை யாலே பதவியி னரிய விண்ணோ ரெண்ணிலாப் பகுப்புக் கூடி யிதமுறத் தெரிசிக் கின்றா ரென்றன னென்று முள்ளோன். | 1.4. 26 |
| 125 | மருள்கடிந் தறிவு பொங்கு முகம்மதி னொளியை யென்மு னருள்கவென் றிருகை யேந்தி யாதநன் னபியுங் கேட்கப் பெரியவன் கருணை கூர்ந்து பெறுமுறை யிதுகொ லென்ன நெரிநடுப் புருவக் கான்மே னெற்றியி லொளிர செய்தான். | 1.4. 27 |
| 126 | வேறு தாதவிழ் மலர்த்தா ராதநன் னுதலிற் றண்ணெனுங் கதிர்கள்விட் டொழுகுஞ் சோதியைத் தெரிசித் தமரர்க ளணுவுந் தோன்றுதற் கிடமற நெருங்கிக் கோதறப் பெருகி முன்னிலை திரண்ட குழுவினைக் கண்டுகண் குளிர்ந்து மாதவம் பெற்றே னெனமன மகிழ்ச்சி வாரியிற் குளித்தன ரன்றே. | 1.4. 28 |
| 127 | அறவரி தான காட்சியும் பேறு மமரர்க ளியாவரும் பெற்றா ரிறைவனே யானும் பெறுவதற் கென்க ணிடத்தினிற் றெரிகிலே னென்றார் நிறைநடு வாகி யுலகெலா நிறைந்த நெடியவ னினிதருள் புரிந்து விறல்புரி யாதம் வலதுகைக் கலிமா விரனகத் திடத்தில்வைத் தனனே. | 1.4. 29 |
| 128 | வரிச்சுரும் பலர்த்தி நறைவிரி துருக்க மருவுபொற் புயத்தெழி லாதம் விரித்தக மகிழ்ச்சி பெருக்கியென் முதுகில் விளங்கொளி யின்னமு முளவோ தெரித்தருள் புரியென் றிறையுடன் மொழியச் செவ்விய முகம்மது நபிதம் முரித்துணைத் தோழர் நால்வருண் டவர்த மொளியுள வெனவுரைத் தனனே. | 1.4. 30 |
| 129 | அப்பெரும் பெயர்க ணான்குபே ரொளியு மகுமதி னொளியடுத் திருப்ப வைப்பையென் விரல்க னான்கினு மென்ன வல்லவ னவ்வழி யமைத்தான் மெய்ப்பொருள் கலிமா விரனடு விரன்மென் விரற்சிறு விரற்பெரு விரல்க ளிப்படி விரல்க ளைந்தினு மைவர் விளங்கொளி யுகிரிலங் கினவே. | 1.4. 31 |
| 130 | பகுத்தொளி விரிக்கு நகத்தொளி விருக்கும் பண்புகண் டதிசயித் தாத மகத்தினின் மகிழ்ந்து கண்ணிணை மலரி னடிக்கடி வைத்துவாய் முத்தி மிகுத்திடும் வரிசை நபிசல வாத்தை விளக்கிவாய் மறாதெடுத் தோதி வகுத்தவல் லவனைப் பணிந்துவா னகத்தில் வாழ்ந்தினி திருக்குமந் நாளில். | 1.4. 32 |
| 131 | மிக்கெழி லாத மேலவன் விதித்த விலகலைப் பொருந்தின படியா லக்கையின் விரல்க ளொளிவுமுன் னிருந்த வணியணி முதுகிடத் தாகித் துக்கமு மிகுந்து சுவர்க்கமு மிழந்து தொல்லுல கடைந்துவெவ் வேறு திக்கினின் மயங்கி யிருவரு மலைத்துத் தீவினைக் குரியவ ரானார். | 1.4. 33 |
| 132 | ஆதியே ஹக்கா றப்பனா விறையே யழிவிலாப் பேரின்ப வாழ்வே நீதியே யெனவும் பலதரந் தவுபா நிகழ்த்தியுந் துன்பம்விட் டொழியாப் போதிலே யெனது முதுகிடத் துறைந்த பொருளொளிச் சிறப்பெனும் பொருட்டாற் சோதியே தவுபாத் தனைக்கபூ லாக்கென் றுரைத்தனர் சுடர்முடி யாதம். | 1.4. 34 |
| 133 | நறைதரு மறுவி கமழ்முகம் மதுநந் நபிதிருப் பெயர்சொலும் பொருட்டா யிறைவனு மாதஞ் செயுந்தவு பாவுக் கிசைந்தினி துறக்கபூ லாக்க வுறைதரு துன்ப மனைத்தையும் போக்கி யூழ்வினை பின்புமொன் றாக்க மறுமதி யகடு தொடுமுடி யறபா மலையினி லிருவருஞ் சேர்ந்தார். | 1.4. 35 |
| 134 | கூடிய விருவர் தாமுஞ்சுத் தாவிற் குடியிருந் திருபது சூலில் நாடிய பொருட்போ னாற்பது பெயரை நன்குறப் பெற்றதின் பின்னர் சூடிய கிரீட பதிநபி யமரர் துரைகனா யகமெனு மிறசூல் நீடிய வொளியு சிறந்தொரு சூலி னிலமிசை சீதுதித் தனரே. | 1.4. 36 |
| 135 | மருமலர்த் திணிதோ ணிறைமதி வதன முகம்மதின் பேரொளி யிலங்கித் தெரிமறை ஆத மக்களிற் சிறந்த சீதுவி னிடத்திருந் ததனாற் பரிவுறு நபிப்பட் டமும்வரப் பெற்றுப் பல்கலைக் குரிசிலென் றேத்த வரியவன் கொடுத்த வரிசைக ணிறைந்த வைம்பது சுகுபிறங் கியதே. | 1.4. 37 |
| 136 | சீதுவி னிடத்தி னிருந்தவர் மதலை சிறந்தமா மணிமுடிக் குரிசின் மாதவர் கமல வதனயா னுசுதம் வயினுறைந் திருந்தணி சிறந்து தாதவிழ் மலர்த்தார்க் குங்குமக் கலவைத் தடப்புயர் யானுசு தருகார் நீதிசேர் ஹயினா னிடத்தினி லிருந்து நிலைபெற விளங்கிய தன்றே. | 1.4. 38 |
| 137 | தண்மணிக் கதிர்விட் டெறிக்கும்வெண் கவிகைக் தடவரை மணிப்புய ஹயினான் கண்மணி மகுலீ லிடத்தினி லிருந்து கவின்குடி கொண்டெழுந் தோங்கி வெண்மணித் தரளத் தொடைப்புய மகுலீல் வேந்தருக் குற்றசே யெனவாழ் உண்மைநன் னெறிசே ரெறுதுவி னிடத்தி னுறைந்தினி திலங்கிய தன்றே. | 1.4. 39 |
| 138 | வடவரை குலுங்க நடமிடு துரங்க மன்னவ ரெறுதுதம் மதலை கடகரிக் குவட்டி னிணையெனப் பணைத்த கதிர்முலைத் துடியிடை மடவார் விடமெனக் கரிய கொலைவிழிக் கணங்கள் வீற்றிருந் திடுமலர்ப் புயத்தார் இடிமுர சதிரு முன்றிலா ருகுநூ கிடத்தினி லிருந்திலங் கியதே. | 1.4. 40 |
| 139 | கடலெனத் தானை யரசர்வந் தீண்டிக் கைகுவித் திருபுற நெருங்கச் சுடர்மணித் தவிசி னுயர்ந்தர சியற்றிச் சுருதிநே ருறையுகு நூகு புடையி |