"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home >
Tamil Language & Literature >
Project Madurai
>Index
of Etexts released by Project Madurai - Unicode & PDF
> மாலை ஐந்து
Maalai ainthu
மாலை ஐந்து
(கயற்கண்ணி மாலை, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை,
திருக்காளத்தி இட்டகாமிய மாலை, பழனி இரட்டைமணி மாலை &
மகரநெடுங்
குழைக்காதர் பாமாலை)
Etext Preparation (input) : Deeptha Thattai, South Carolina, USA
Etext Preparation (proof-reading) : Mr. S. Baskaran, Chennai, India
Etext Preparation (webpage) : Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
மாலை ஐந்து
ஸரீ சுந்தரேசுவரர் துதி
2. களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை
3. திருக்காளத்தி இட்டகாமிய மாலை
4. பழனி இரட்டைமணி மாலை
5. மகரநெடுங் குழைக்காதர் பாமாலை
1. கயற்கண்ணி மாலை
காப்பு
(தரவு கொச்சகக் கலிப்பா)
செம்மைவள மல்கு திருக்கூட
லங்கயற்கண்
அம்மை யடியிணையை யன்பினுடன் யான்பாடத்
தம்மை மறந்த தபோதனர்முன்
வந்தருளும்
வெம்மைதவி ரருட்சித்தி வேழத்தைப் போற்றுவமே.
நூல்
(கட்டளைக் கலித்துறை)
தடையேனைத் தீயவர்ச் சார்ந்துதுன்
மார்க்கஞ் சரிக்கவிழை
நடையேனை
வஞ்சமுஞ் சூதும்பொல்
லாங்கு நறுமொறுப்பும்
உடையேனை
நின்னை யொருகாலத்
தேனு முரைத்தறியாக்
கடையேனைக்
காத்தரு டென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [1]
மாத்தரு நீழ லிடத்தா
னிடத்து வளர்ந்தகிலம்
பூத்தருள்
வாயருள் பூண்டருள்
வாயன்பர் புந்திவிழை
வீத்தருள்
வாயன்பு சற்றுமில்
லேனையு மெண்ணலின்றிக்
காத்தருள்
வாய்வையைத் தென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [2]
நாவார
நின்னை நவிலாது
சைவநல் லாரியர்சொல்
தேவார பாரணஞ்
செய்யாது
வீணரைச் சேர்ந்தொழுகித்
தீவாய்
நரகுக் கிரையாகு
வேனைத் தியங்கவிடேல்
காவாய்
புனல்வையைத் தென்கூடல்
வாழும் கயற்கண்ணியே. [3]
வேஞ்சின மாதி மிகுத்தே
சிதடரை மேவிநிதம்
தாஞ்சிவ பூசை
செயாதே
திரியெனைச் சார்ந்தருள்வாய்
வாஞ்சிய மாதித் தலந்தோறு
மேவிய வள்ளறனைக்
காஞ்சியிற்
பூசிக்குந் தென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [4]
படித்தேன் படித்தவை சொல்லும்
திறமை படைத்தலின்றித்
துடித்தேனி
னன்பர்கள் போலே
யெவரும் சொலும்பொருட்டு
நடித்தே
னினிச்சகி யேனென்னைக்
காத்தரு ணாரணிபூங்
கடித்தே
னுகுபொழிற் றென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [5]
வஞ்சன் பிறரை யிகழ்ந்தேசுந்
தீமை மலிந்தியலும்
நெஞ்சன்
கொடியரைக் கொண்டாடி
வாடுபு நின்னைவிட்ட
தஞ்சனென்
றாலுநின் மஞ்சனன்
றோவெற் றளரவிடேல்
கஞ்சன் புகழ்வுறு
தென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [6]
வாரணி
கொங்கை மடவார்
கலவி மயலிற்பட்டே
தாரணி யேசத்
தளர்வேனைத்
துன்பிடைத் தள்ளிவிடேல்
நாரணி
யாருயிர் நாயக
மேமுன் நரலைதந்த
காரணி கண்ட
ரிடத்தாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [7]
நிந்தனைக் கொள்கல மானேனை
நீசனை நேயமிலாப்
பந்தனைப் பாவியை
மக்கட்
பதடியைப் பார்த்தருள்வாய்
சிந்தனை
வாக்கினுக் கெட்டாத
சிற்பரன் றேவிசெவ்வேற்
கந்தனை
யீன்றரு ளன்னேதென்
கூடற் கயற்கண்ணியே. [8]
பண்ணே
னெனினும் நினைத்துதி
பூசனை பண்ணிப்பின்னர்
உண்ணே னெனினு
முனதடி
யார்தமக் குற்றசெய்ய
நண்ணே
னெனினும் நினைவலஞ்
செய்து நலமடையக்
கண்ணே னெனினு
மருள்வாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [9]
சையந்
தனக்கு நிகராகும்
யான்செ யதன்மமிந்த
வையந் தனக்குப்
பெரும்பார
மாமென் வடிவமந்தோ
உய்யந்த மார்க்க
மறியா
துழிதரு கிற்குமிந்தக்
கையன்
றனைவிட் டிடாதேதென்
கூடற் கயற்கண்ணியே. [10]
பெரியா னெவனம்மி னென்றே
தருக்குபு பேரறத்தில்
தரியா
துழலும் தமியனை
யாளத் தகுமுனக்கே
கிரியா ளரசன்
றவத்தா
லுதித்தருள் கேகயமே
கரியா
னனத்தனைத் தந்தாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [11]
மெய்யா வுரைக்கின் னனா
லவையிடை மேவுதற்கும்
நையாத
செம்பொருட் பாவோது
தற்கு நவிலுதற்கும்
எய்யா துழலுவ
னின்னன்றி
யோர்துணை யானறியேன்
கையா வமுதக்
கடலேதென்
கூடற் கயற்கண்ணியே. [12]
மாணாத
புல்லர்கள் கூட்டங்
கெழுமி மகிழ்ந்துநின்னைப்
பேணாத
நாயிற் கொடியே
னெனினும் பெரிதுமஞ்சி
நாணாது
நின்னைச் சரண்புக்
கமையினிந் நாயினுக்குக்
காணாத
காட்சி யருள்வாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [13]
இன்னம்ப ராதி யிடந்தோறு
நாளு மெழுந்தருளும்
நின்னன்
பருக்குப்பிச் சாடன
நாமமென் நீக்கிலைநீ
முன்னம் படிதனை
யீந்து
மிதனை மொழிந்திடுவாய்
கன்னன்
மொழியுடைக் கிள்ளாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [14]
மருவழி யாத்தளிர் மாநிழ
லூடென்றும் வாழ்பவன்சொல்
இருபடி
முன்ன மளித்தா
னெனின்மற் றியைபறச்சொல்
ஒருபடி
நீயளித் திட்டதென்
னேயிஃ துரைத்தருள்வாய்
கருவழித்
தாளு மமுதேதென்
கூடற் கயற்கண்ணியே. [15]
எல்லா
வுலகு மளித்தர
சாளு மியல்புடைநீ
மல்லார்
திணிபுயப் பாண்டிய
னாட்டினை மட்டுமணி
வில்லார்
முடியணிந் தேயர
சாளும் விதமென்கொலோ
கல்லார்க்
கணுகருந் தேனேதென்
கூடற் கயற்கண்ணியே. [16]
மலையத் துவச வழுதிக்குப்
பின்னலை வாரிதிசூழ்
வலையத்தை
நீபரித் தாண்டருள்
செய்த வகையறிந்தும்
அலையத்தை மேவு
மறிவோ
ரபலையென் பாரதென்னே
கலையத்தை நானவி
லேன்வையைக்
கூடற் கயற்கண்ணியே. [17]
புவிபாலர் முன்னம் பொருந்தியஞ்
சாது புகன்றிடவும்
குவியாதென்
புந்தி குசைநுனி
போன்மிகக் கூர்ந்திடவும்
தவியாது
கேட்பவர்க் கெல்லா
மினிதுறச் சாற்றவுநாற்
கவிபா
டவுமருள் செய்வாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [18]
தனிவா
யமல னிடம்பிரி
யாதென்றுந் தங்கியநீ
பனிவா யிமயப்
பருப்பத
ராசன்றன் பாவையென
நனிவாய்
விறற்பஞ்ச வன்பாவை
யென்ன நணுகியதென்
கனிவாய்
மலர்ந்தருள் செய்வாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [19]
நாவலன் றோழமை வாய்ந்தே
கவிஞர்க ணாயகனாம்
பாவல னென்றும்
வருவா
னளகைப் பதியரசற்
காவல னாயர சர்க்கர
சாயு மணைகுவனின்
காவலன் யாவுநின்
சீரேதென்
கூடற் கயற்கண்ணியே. [20]
புனல்வாய் பவர்சடைச் செம்மேனிப்
பன்னகப் பூண்டிசைத்தூ
சனல்வாய்
விழிமுத் தலைவா
யயிற்படை யண்ணலென
இனல்வாய் மலையத்
துவசன்
பெருமகிழ் வெய்துறவெங்
கனல்வாய்
உதித்தனை யன்றோதென்
கூடற் கயற்கண்ணியே. [21]
முனைவாய்க் கவைச்சிகை யங்கியி
னூடு முளைத்ததுதான்
தினைவாய்
புனத்துச் சிலம்பன்
மகிழச் சிமயமலைச்
சுனைவாய்ச்செந்
தாமரை யூடுறு
தோற்றந் துலக்கியதால்
கனைவாய்
அளிமுரல் பூங்காத்தென்
கூடற் கயற்கண்ணியே. [22]
சென்னி யிடைவிண் ணதிசூடு
மண்ண றிருக்கரத்து
வன்னிவைத்
தானென்ன வோநீயுஞ்
செங்கையில் வன்னிகொண்டாய்
உன்னி
வழிபடு வார்க்கொரு
வாதரு ளுத்தமியே
கன்னி யிளங்குயி
லேபுனற்
கூடற் கயற்கண்ணியே. [23]
வரைவேந்தன் புத்திரி யாய்மரை
யூடுமுன் வந்ததற்கும்
தரைவேந்தன்
புத்திரி யாய்த்தழ
லூடு சனித்ததற்கும்
நிரைவேந்
துரிமைபெற் றேயர
சாள னினக்குறுமால்
கரைவேந்தர்
போற்றும் பதத்தாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [24]
அறையணி சார லிமவான்
புரிந்த வருந்த வம்போல்
நிறையணி
செல்வச் செழியற்
கிலைகொ னிகழ்த்திடுவாய்
மறையணி
நின்மணங் காணாமை
யாற்பய வாரிவரு
கறையணி கண்ட
ரிடத்தாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [25]
அனகப்
பரமனுன் சாயற்கு
நெஞ்சக மஞ்சுமென்றோ
பனகப் பணியையஞ்
சாதணிந்
தானிதைப் பன்னியருள்
எனகத்
துயர்ப்பிணிக் கோர்மருந்
தேயன்ப ரெய்ப்பில்வைப்பே
கனகச்
சிலம்படித் தேனேதென்
கூடற் கயற்கண்ணியே. [26]
எண்ணி
னயனத் தினுக்குப்
மானங்க ளெண்ணிலவால்
மண்ணி னவற்றுட்
கயலென்ன
தன்மம் வகுத்ததுவோ
பெண்ணின்
மணிநின் றிருவிழி
யோடுறப் பெற்றமையால்
கண்ணின்
மணியுறை பாவாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [27]
முற்றா தரவு படைத்தேநின்
பாத முளரிதனைப்
பற்றா வனுதின
மெண்ணுபு
போற்றுமிப் பாதகன்பாற்
சற்றா
தரவும் படைத்தா
யிலையித் தரணியுளோர்
கற்றாவென்
பார்நினை யென்னேதென்
கூடற் கயற்கண்ணியே. [28]
சீதங்
கமழும் பிறையணி
செஞ்சடைச் செல்வரொடும்
ஏதங் கமழு
மிருளாரென்
னுள்ளத் தெழுந்தருள்வாய்
வேதங்
கமழும்செவ் வாயர்க்குப்
பாலருள் வித்தகியே
காதங் கமழும்
பொழில்சூழ்தென்
கூடற் கயற்கண்ணியே. [29]
அண்டார் புரஞ்செற்ற வெம்மானோ
டுன்னை யபேதமென
விண்டார் சமழ்ப்புற
நீகன்னி
யாகி விரிதிரைசூழ்
ஒண்டா ரணியை
நெடுங்கால
மாண்ட வுதுவென் கொலோ
கண்டார்
மொழியுடைக் கிள்ளாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [30]
முன்ன
மதனின் மணக்கோலங்
கண்டிட முப்புவனம்
மன்னு மனைவரும்
வந்து
மகத்திய மாதவன்றான்
என்னந்த
வுத்தரத் தேகா
திருந்தன னென்றெய்வமே
கன்னங்
கறுத்த குழலாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [31]
செய்தவ மேது மறியே
னினைத்துதி செய்தறியேன்
வெய்தவ
மாற்ற விழைவே
னினதருள் மேவுவனோ
மைதவழ கோதண்ட
வெற்பண்ணல்
வாமம் வளர்கரும்பே
கைதவன் செய்தவப்
பேறேதென்
கூடற் கயற்கண்ணியே. [32]
மாட்சி பெறுகவி வல்லோர்கள்
யாரும் வணங்கியுனை
ஆட்சி யடைந்தனர்
நாயடி
யேனு மதுநினைந்தே
நீட்சி பெறுமின்
புறுகவி
பாட நிகழ்த்துதற்குக்
காட்சி
யளித்தரு டென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [33]
முளைமதி வேணிய னீயர
சாளு முறைமையுன்னா
தளைமணி மாட
மறுகூடு
பாத வலர்வெதும்ப
வளைவிற்று
மிந்தனம் விற்று
முழன்ற வகையென்கொலோ
களைதவிர்த்
தாளு மமுதேதென்
கூடற் கயற்கண்ணியே. [34]
எல்லாஞ்செய் சித்த ரெனவேயக்
காலத் தெழுந்தருளும்
அல்லார்
களத்தர்க்கிப் பொல்லானை
யாளுமென் றன்னவரோ
டுல்லாச மாக
விருக்கும்
பொழுதி லுரைத்தருள்வாய்
கல்லார்
தமையும் புரப்பாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [35]
அற்பக
னின்ற னடித்தா
மரையிணைக் கன்புசெய
நிற்பதன்
றால்நெஞ்ச மென்செய்கு
வேனிதை நிற்கவருள்
வெற்பக மேய
கிளியே
வருண்மழை மின்னிடையே
கற்பக மேதெள்
ளமுதேதென்
கூடற் கயற்கண்ணியே. [36]
வெள்ளிப் பிறங்கலை யில்லாவில்
லாக்கொண்டு மேருவினைத்
துள்ளித்
திரிவிடைச் சொக்கேசர்
வீதிக டோறுமிரந்
தள்ளிக் கொடுமென
வேற்றிடு
வாரைய மாங்கதென்னே
கள்ளக் கயவர்க்
கரியாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [37]
ஒண்ணுதன் மங்கையர் போர்க்கோலந்
தாங்கி யுடன்வரப்போய்
விண்ணுதல்
வெள்ளி விலங்கற்
கணங்களை வென்றுபின்னும்
அண்ணுதல்
செய்து சினங்காட்டி
நின்றிடு மாற்றல்கண்ட
கண்ணுத
லுண்மகிழ் வென்னோதென்
கூடற் கயற்கண்ணியே. [38]
மனையொடு மக்களு நிச்சய
மென்று மனங்கொடுன்னைத்
தினையள வேனு
நினையாத
பாவியைச் சிந்திப்பையோ
வனைமறை
யந்தமு மன்பர்க
ணெஞ்சமும் வாழ்மணியே
கனைகடல்
சூழ்புவி யேத்துதென்
கூடற் கயற்கண்ணியே. [39]
உயல்விளை யாடு மனத்தாரை
யென்று முறுதலின்றி
அயல்விளை யாடு
மனவண்டுன்
பாத வலர்பற்றுமோ
புயல்விளை யாடு
மிமவான்
பயந்திட்ட புத்தமுதே
கயல்விளை
யாடும் வயல்சூழ்தென்
கூடற் கயற்கண்ணியே. [40]
வண்டேன் முடியிம வானுக்கும்
வீர வழுதிக்குநீ
ஒண்டே னலர்வா
யெரிவாய்
மகளா யுதித்தமையால்
பண்டே யுறுமடி
யார்க்கௌி
யாயெனப் பன்னுவதைக்
கண்டேனுன்
பாலடி யேன்புனற்
கூடற் கயற்கண்ணியே. [41]
திரையற்ற தோற்றக் கடல்வீழ்ந்து
வான்கரை சேர்தலின்றி
வரையற்ற துன்ப
மடைந்தேனுக்
காரருள் வைப்பதென்றோ
உரையற்ற
மாற்றுயர் பொன்னேமின்
னேரிடை யுத்தமியே
கரையற்ற வின்பக்
கடலேதென்
கூடற் கயற்கண்ணியே. [42]
ஏகுற்ற வென்மன வானர
முன்ற னிருகமல
வாகுற்ற பாத
மலர்பற்று
மோவிம வான்மகளாய்ப்
போகுற்ற செல்வி
புராதனன்
வாமம் பொருந்தனமே
காகுத்தன் சோதரி
தென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [43]
குயவாய் மகளிர் நலவாய்
நுடங்கு கொடியிடைவாய்
நயவா
யுறுசெய்ய வாய்நசை
மேவுபு நான்மெலிந்தேன்
பயவாய்
விழுந்து வருந்தா
வணமருள் பாலிப்பையே
கயவாய்க்கு
முத்தி தருங்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [44]
கூற்றான தொன்றுண்டென் றெண்ணாது
வீணசை கொண்டுநல்லோர்த்
தூற்றா
வுழலுமிந் நாயேனை
யாளத் துணிவைகொல்லோ
நீற்றா னிடமுறு
நின்மலை
யேபன் னியமமுந்தென்
காற்றான்
மணங்கமழ் தென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [45]
சென்னித் தலத்து மதியணிந்
தாடுஞ் சிவபெருமான்
வன்னித் திருநய
னத்தான்
மதன்றனை மாய்த்ததுதான்
என்னித்
திலவெண் ணகையா
யியம்புதி யென்றனக்குக்
கன்னிப்
பெடையனப் பூந்தடக்
கூடற் கயற்கண்ணியே. [46]
ஆரா
வமுத மனையநின்
சீரை யடிக்கடியான்
பாரா யணஞ்செயச்
செய்வாய்பின்
னாற்கவி பாடச்செய்வாய்
நாரா யணனுக்
கருமைச்
சகோதரி நாரணிநீர்க்
காராருஞ் சோலை
புடைசூழ்தென்
கூடற் கயற்கண்ணியே. [47]
ஆண
மிலாத மடவோர்கள்
கூட்டத் தகப்பட்டுளக்
கோணன்
மரீஇக்குலை வுற்றன
னாலைய கோவென்செய்வேன்
பேண வருமருந்
தேயிம்
மயக்கப் பிசாசொழியக்
காண
விழைந்தனன் றென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [48]
திருவளிப் பாய்மிடித் தீர்வளிப்
பாயெனைச் சேர்ந்தவருக்
குருவளிப்
பாய்நல் லுணர்வளிப்
பாய்கவி யோதத்திறம்
மருவளிப்
பாய்நன் மனமளிப்
பாய்மிக வாதைசெயும்
கருவழிப்
பாய்புனற் றென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [49]
எண்ணிற் கடங்குத லின்றாற்
றுயர மிருமிடியும்
புண்ணிற்
றழற்சுடு கோல்நுழைந்
தாங்குப் புகுந்தலைக்கும்
மண்ணிற்
றுணையுனை யல்லாம
லாரிதை மாற்றியருள்
கண்ணிற்
பருகுசெந் தேனேதென்
கூடற் கயற்கண்ணியே. [50]
தீதுந் துயர்செயுங் காமாதி
யாறுமென் சிந்தைநின்று
போதும்
படிக்குக் கருணைசெய்
வாய்முப் புவனமுமீன்
றேது முதுமை
யுறாதுறை
கன்னி யிளமயிலே
காதும் பவப்பகை
யேபுனற்
கூடற் கயற்கண்ணியே. [51]
ஓயாது
பாழுக் குழைத்தே
நலத்தை யொழித்துநன்னூல்
ஆயாது வீயு
மடியேனைச்
சீறி யகற்றிவிடேல்
தேயா மதிமுகச்
செவ்வா
யருள்விழிச் சிற்றிடையாய்
காயா
மலர்நிறத் தாயேதென்
கூடற் கயற்கண்ணியே. [52]
ஆவா
மனத்திற் கடிமைப்பட்
டேபுல னைந்தின்வழி
ஓவா துழலு
மடியேற்குன்
சேவை யுறுதலுண்டோ
நீவா வருள்புரி
வாயெனப்
போற்றி னிலத்தொருவர்
காவாருண்
டோமலர்க் காவார்தென்
கூடற் கயற்கண்ணியே. [53]
வெங்கைக் கடகளி றன்னாரோ
ரைவர் மெலிவுறுத்தச்
சங்கைக் கரிய
துயரடைந்
தேனெனைத் தாங்குதியால்
செங்கைப்
பசுங்கிளித் தாயே
யடியர்கள் சிந்தையுறை
கங்கைச்
சடாதரன் வாழ்வேதென்
கூடற் கயற்கண்ணியே. [54]
வானேய் கரமுடை யாயென
மூடரை வாழ்த்திநொந்து
யானேய்
துயரத்திற் கெல்லையுண்
டோமுக்க ணெந்தையிடத்
தேனே
திசைதொறுஞ் சென்றே
யமரர்ச் செயித்தவிறற்
கானேய்
குழற்குயி லேகூடல்
வாழுங் கயற்கண்ணியே. [55]
சமலனின் றாளிணை தன்னை
யுளத்திற் றரித்துறையும்
அமலரை
யிம்மி யளவேனுங்
கூடி யறிந்திலனால்
விமல மடைகுவ
தென்றுகொ
லோவலை மெல்லியல்வாழ்
கமல மனையகண்
ணாய்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [56]
தெம்முகஞ் சென்று சிறுநகை
செய்து சினந்தெரித்த
ஐம்முகன்
றன்னோ டமரேற்ற
மேன்மை யறிவன்கொலோ
வெம்முக வேற்கை
யறுமுகத்
தானையும் வெய்யதுதிக்
கைம்முகத்
தானையு மீன்றாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [57]
ஊனப்
பிறவி பலகோடி
மேவி யுறுகணடைந்
தேனப்பிறவித்
துயர்தனை
மாற்றிடத் தெண்டனிட்டேன்
வானப்
பிறைநுத லன்னா
யிராவணன் வாழ்த்துமறைக்
கானப்
பிரிய னிடத்தாய்தென்
கூடற் கயற்கண்ணியே. [58]
மட்டுறு கூந்தல் மடவார்
நயன மயல்வலையிற்
பட்டுறு நெஞ்சம்
பலவிடத்
தோடுதல் பன்னவும்யான்
எட்டுணை யேனு
மிரங்கா
திருந்தனை யீதழகோ
கட்டுரைத்
தேனினிக் கூறேன்றென்
கூடற் கயற்கண்ணியே. [59]
பேணா
தவனின் றிருவடித்
தாமரை பேணியன்பு
பூணா தவனின்
னடியார்க்கண்
டேயச்சம் பூண்டுமிக
நாணா தவனெனி
னுந்துணை
வேறிலை நாயன்றுயர்
காணாத வாறென்
கொலோகூடல்
வாழுங் கயற்கண்ணியே. [60]
அசடர்கள் கூட்டங் கெழுமி
யவருள் ளவாவலுற
நிசமணு வேனு மிலாம
னவின்று நிதநிதமும்
வசைமிகத் தேடி
மெலிந்தேனந்
தோநல் வழியறியாக்
கசடனை ஆள்வைகொல்
லோகூடல்
வாழுங் கயற்கண்ணியே. [61]
இரியாத தீப்பழி யெய்தின
னானின்னன் பெள்ளளவும்
தரியாத பாவி
யெனினும்
விடேல்விடிற் றாரணியில்
உரியா
ரெவர்நின்னை யல்லாது
பின்னு முரைப்பதென்னே
கரியா னனத்த
னனையேதென்
கூடற் கயற்கண்ணியே. [62]
எண்ணிய வெண்ணிய வெல்லாந்
தவிரவிவ் வேழைதனைப்
பண்ணிய
கூத்திவை போதுமன்
னேயினிப் பார்த்தருள்வாய்
புண்ணியர் முச்சுடர்க் கண்ணினர்
வாமத்துப் புத்தமுதே
கண்ணிய
பல்வளத் தென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே. [63]
ஆமனை
நீரென் றுலுத்தரைப்
பாடி யவர்வசிக்கும்