|
உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார்
(2)
என் உள்ளமென்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்
(உன்னைத்தான்)
யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம் (2)
நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து வந்தோம் (2)
ஒன்றையே நினைத்து வந்தோம் ஒன்றாகக் கலந்து வந்தோம்
(உன்னைத்தான்)
காதலித்தல் பாவமென்றால் கண்களும் பாவமன்றோ? (2)
கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ? (2)
பெண்மையே பாவமென்றால் மன்னவனின் தாய் யாரோ?
(உன்னைத்தான்)
|