மயக்கமென்ன இந்த
மௌளனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா - என்
காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலமாய் விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் கட்டியணைத்து கவி பாட
(மயக்கமென்ன)
அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொட
மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் புன்னகை எடுத்து மதுவருந்தாமல் விட
மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
- உன்
உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன்
(மயக்கமென்ன)
|
Mayakkam enna indha mounam enna
mani maaligai thaan kanne
thayakkam enna indha Salanam enna
anbu kaanikkai thaan kanne
karpanaiyil varum kadhaigalile
naan kettadhundu kanna - en
kaadhalukke varum kaanikkai enre
ninaithadhillai kanna
thaer pole oru ponnoonjal adhil
dhevadhai pole nee aada
poovadai varum meniyile un
punnagai idhazhgal vilaiyaada
kaarkaalam ena virindha koondhal
kannaththin meedhe kolamida
kai valaiyum mai vizhiyum
kattiyanaithu kavi paada
annathai thotta kaigalinaal
madhu kinnathai ini naan thoda maatten
kannathil irukkum kinnathai eduththu
madhuvarundhaamal vida maatten
unnaiyallal oru pennai ini
naan ullathinaalum thoda maatten - un
ullam iruppadhu ennidame adhai
uyir ponaalum thara maatten
|