|
கட்டோடு குழலாட ஆடஆட
கண்ணென்ற மீனாட ஆடஆட
கொத்தோடு நகையாட ஆடஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு! (கட்டோடு)
பாவாடை காற்றோடு ஆடஆட
பருவங்கள் பந்தாட ஆடஆட
காலோடு கால்பின்னி ஆடஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு! (கட்டோடு)
முதிராத நெல்லாட ஆடஆட
முளைக்காத சொல்லாட ஆடஆட
உதிராத மலராட ஆடஆட
சதிராடு தமிழே நீ ஆடு! (கட்டோடு)
தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப்
புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு!
கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு! (கட்டோடு)
பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு!
வள்ளி மனம் நீராடத் தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நானாட சொந்தமே நீ ஆடு! (கட்டோடு)
|