படம்: புதிய பறவை - வருடம் 1964
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
(எங்கே)
எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே.
(எங்கே)
பழைய பறவைபோல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை
மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே!
(எங்கே) |