பாடல் 23 - மணமகளுக்கு அறிவுரைகள்
அடிகள் 1 - 478 : கணவனின் வீட்டில் எவ்விதம் வாழ வேண்டும் எவ்விதம் ஒழுக
வேண்டும் என்று மணமகளுக்கு அறிவுரை கூறுதல்.
அடிகள் 479 - 850 : ஒரு
வயோதிபப் பெண் தான் பெற்றோருக்கு மகளாகவும் கணவனுக்கு மனைவியாகவும் கணவனைப் பிரிந்த
பின் தனியாகவும் வாழ்ந்த அனுபவங்களைக் கூறுதல்.
அரிவைக்(கு) இப்போ தறிவுரை தேவை
மணமக ளுக்கு வழிமுறை தேவை
அரிவைக்
கறிவுரை யளிப்பவ ரெவரோ?
பாவைக்குப் புத்தி பகர்பவர் யாரோ?
ஒஸ்மோ மகளெனும்
ஒண்செழிப் பரிவை
கலேவா மகளெனும் கவினுறு நங்கை
அவள்தான் பெண்ணுக் கறிவுரை
சொல்வாள்
அனாதைக் கவளே அளிப்பாள் வழிமுறை
விவேகமாய் வாழ்ந்திடும் விதம்எது
என்பதை
மாசில்லா தெங்ஙனம் வாழ்வது என்பதை 10
விவேகமாய்க்
கணவனின் வீட்டிலும் எங்ஙனம்
மாசில்லா தெங்ஙனம் மாமியார்
வீட்டிலும்.
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில்
இவ்விதம் மொழிந்தாள்:
"அருமண மகளென் அன்புச் சோதரி!
இதயம் நிறைந்த இனியளே,
அன்பே!
நான்மொழி கையிலே நன்குநீ கேட்பாய்
வெவ்வேறு விதமாய் விளம்ப
நீகேட்பாய்.
மலரேயிப் போது மனைவிட் டகில்கிறாய்
சிறியசெம் **பழம்நீ
செல்லப் போகிறாய் 20
தடித்த துணிநீ தான்நகர்
கின்றனை
**'வெல்வெட்' துணியே வெகுதொலை போகிறாய்
எழில்புகழ் பெற்றஇவ் வில்லத்
திருந்து
தொல்லெழில் வாய்ந்தஇத் தோட்டத் திருந்து;
இன்னோ ரிடத்து இல்லம்
வருகிறாய்
அன்னிய மானதோர் அகல்இல் வருகிறாய்
மாறு பட்டதோர் மனைக்குநீ
வருகிறாய்
மற்றவர் மத்தியில் **மறாளாய் வருகிறாய்;
சிந்தித் தடியிடல் சீரா
யிருக்கும்
கவனமாய் அங்குநீ கருமம் செய்வாய், 30
அப்பாவின்
நிலத்தில் அமைந்தது போல(ல்)ல
உரிமைத் தாயின் தரைபோ லிருக்கா(து)
பள்ளத்
தாக்கிலே பாட்டுகள் பாடியும்
வழிகளில் கூவியும் வாழ்வது அரிது.
இந்த
வீட்டி லிருந்துநீ போகையில்
உனது பொருள்கள் அனைத்தையு மெடுப்பாய்
ஆயினும்
வீட்டில்விட் டகல்கவிம் மூன்றையும்
பகலிலே தூங்கும் பழக்கமஃ தொன்று,
அன்புறு
மன்னையின் அறிவுரை, அடுத்தது
சுத்தமாய் கடைந்த சுவையுறும் வெண்ணெய்.
40
ஆனஇல் லப்பொருள் அனைத்தையும் நினைவாய்
எனினும் துயிலதை எளிதினில்
மறப்பாய்
இருக்கட் டுமது இல்வாழ் மகளிர்க்(கு)
இருக்க(ட்டும்) அடுக்களை இதமூ
லையிலே;
பாடல்கள் ஆசனப் பலகைதங் கட்டும்
இருக்க(ட்டும்) சாளரத் தினியநற்
கதைகள்
தூரிகைப் பிடியிலே **ஆர்கசின் னவள்இயல்(பு)
கேலியும் கிண்டலும்
போர்வையின் விளிம்பிலே
ஆன தீப் பழக்கமே அடுக்களைப் பீடமாம்
உனதுசோம் பலைநிலத்
துறும்படி விட்டுவை 50
அல்லது திருமணத் தோழிக்(கு)
அளித்திடு
அவளது கைகளில் அவற்றையே சுமத்திடு
புற்றரை மேட்டிடைப் போகட்டு(ம்)
கொண்டவள்
புதருக்குச் செல்கையில் கோக(ட்டும்) கூடவே.
நற்புது முறைகளை
நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
அப்பாவின் அன்பை
அகற்றிடல் நன்று
மாமனின் அன்பை மனங்கொளல் நன்று
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு
நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல் வேண்டும். 60
நற்புது
முறைகளை நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
அன்னையின் அன்பை
அகற்றிடல் நன்று
மாமியின் அன்பை மனங்கொளல் நன்று
பழக்கத்தில் வேண்டும்
பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல் வேண்டும்.
நற்புது முறைகளை
நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
சகோதரன் அன்பைத்
தள்ளிடல் நன்று
மைத்துனன் அன்பை மனங்கொளல் நன்று
70
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல்
வேண்டும்.
நற்புது முறைகளை நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும்
வேண்டும்
சகோதரி அன்பைத் தள்ளிடல் நன்று
மைத்துனி அன்பை மனங்கொளல்
நன்று
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல்
வேண்டும்.
உன்வாழ் நாளில் என்றுமே வேண்டாம்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு
தெல்லாம் 80
பொல்லா நினைவுடன் புக்ககம் செல்லுதல்
திறமை
இல்லையேல் திருமணம் வேண்டாம்.
இல்லத்து வாழ்ந்திட இனியவை தேவை
நலமுறு
வீட்டில் நன்பண்பு தேவை
கணவனாய் வந்தவன் கடிதுசோ திப்பான்
அறிவுடைக் கணவனும்
அங்ஙனம் செய்வான்;
அறிவும் கவனமும் அவசியம் நினக்கு
நீபுகும் வீடு நிலையிலா
திருந்தால்,
வலியும் விவேகமும் வரனுலக் கவசியம்
தரங்கெட்ட கணவன் தன்திசை
மாறின். 90
மூலைஓ நாய்போல் முதியவன் இருப்பினும்
மொய்புதர்க்
கரடிபோல் முதியவள் இருப்பினும்
அரவுபோல் களஞ்சிய அறையில் மைத்துனன்
மைத்துனி
தோட்டத்து நத்தையா யிருப்பினும்
சமமதிப் பினைநீ சளைக்கா தேகொடு
பணிவான நடத்தை
பழக்கத்து வேண்டும்
அம்மா விடத்தில் அமைந்ததைப் பார்க்கிலும்
அப்பாவின்
வீட்டில் அமைந்ததைப் பார்க்கிலும்
பிதாவிடம் காட்டிய பணிவைப்
பார்க்கிலும்
மாதாவுக் கீந்த மதிப்பைப் பார்க்கிலும்.
100
எப்போது முனக்கு இவையிவை தேவை
தெளிவுறு தலையும் திகழ்தர
அறிவும்
நிதானம் கண்டிப்பு நிறைந்தசிந் தனையும்
விளம்பலைச் செயலை **விளங்கும்
ஆற்றலும்,
மாலையில் கூர்மை மலர்விழிக் கவசியம்
மனையிலே விளக்கு மங்கா
திருக்க,
காலையில் செவியில் கவனமும் அவசியம்
சத்தமாய்ச் சேவலின் தனிக்குரல்
கேட்க;
சேவல் முதல்முறை கூவிய பின்னர்
சேவலின் அடுத்த கூவலின்
முன்னர் 110
இளையவர்க் கதுவே துயிலெழும் நேரம்
முதியவர்க்
கதுவே ஓய்வுகொள் நேரம்.
சேவலும் ஒருநாள் கூவா திருந்தால்
தலைவனின் பறவை
ஒலிதரா விட்டால்
திங்களை உந்தன் சேவலாய்க் கருது
தாரகைக் குலம்வழி காட்டியா
யாக்கு
வெளியே அடிக்கடி விரைந்தெழுந் தேகி
சந்திரன் திகழ்வதைச் சரியாய்ப்
பார்ப்பாய்
வழிவகை தாரகை வண்குலத் தறிவாய்
விண்மீ னிடத்தே விதிமுறை
கற்பாய். 120
**விண்மீன் குலமும் விளக்கமாய்த்
தெரிந்து
அவற்றின் கொம்புகள் அவைதெற் கமைந்து
வடதிசை பார்த்து வாலும்
இருந்தால்
உனக்கது துயிலெழ உகந்தநல் நேரம்
இளமண வாளன் இனிதரு
கிருந்து
செந்நிறத் தோனின் திகழ்அரு கிருந்து
சாம்பரைக் கிளறித் தகிஅனல்
மூட்ட
தீக்கற் பெட்டியில் தீப்பொறி யாக்க
ஊதி விறகில் உறுகனல்
மூட்ட
பக்கம் நெருப்பும் பரவா தமைப்பாய்.
130
சாம்பரில் நெருப்புத் தானிலா திருந்தால்
பெட்டியி லிருந்தும் பெயரா
விடிற்பொறி
அன்புறு கணவனை அன்புடன் கேட்பாய்
எழிலுறும் கணவனை இவ்விதம்
கேட்பாய்:
'அன்புக்(கு) உரியரே, அழல்சிறி தருளிரோ,
செஞ்சிறு பழமே, செந்தீ
தாரிரோ?'
சிறியதீக் கல்லைப் பெறுவையப் போது
தீக்கல் மிகமிகச் சிறியதைப்
பெறுவாய்
தேய்த்துப் பொறியை ஆக்குதீக் கல்லில்
காய்ந்த குச்சியில் கனலதை
மூட்டு 140
வெளியில் சென்று தொழுவதும் பெருக்கு
உணவைக்
கால்நடை உண்ண அளித்திடு;
பக்கம் மாமியின் பசுவொன் றலறும்
கவின்மா மன்பரி
கனைக்கு(ம்)முன் னின்று
மைத்துனன் பசுவும் வந்த லறும்முன்
மெதுவாய் மைத்துனி
பசுக்கன் றலறும்
மென்மைவைக் கோலை வீசவை கட்கு
அள்ளிச் சற்றே **மணப்புல்
நீகொடு
பாதையில் சற்றுப் பணிவுடன் சென்று
நுழைந்து கால்நடைத் தொழுவிற்
குனிந்து 150
பசுவுக்(கு) உணவைப் பதமாய் வைத்து
ஆட்டுக் குணவை
அன்பா யூட்டு;
சரியாய் வைக்கோல் தந்தா வுக்கு
மெலிந்தகன் றுக்கும் மிதநீர்
கொடுத்து
தெரிந்த வைக்கோல் பரிக்குட் டிக்கும்
இடுவாய் செம்மறிக் குட்டிக்
கிதப்புல்;
ஏனக் குழாத்தை ஏசுதல் கூடா(து)
வராகக் குட்டியை உதைத்தலும்
ஆகா(து)
பதவூண் தொட்டியைப் பன்றிக்(கு) ஈந்து
குட்டிக் குணவுத் தட்டத்தைத்
தருவாய். 160
ஓய்தல் தகாது கால்நடைத் தொழுவில்
சோம்பலும்
தகாது செம்மறித் தொழுவில்
கால்நடைத் தொழுவில் கருமம் முடிந்ததும்
அனைத்து
மந்தையின் அலுவல் முடிந்ததும்
அவ்விடம் விட்டு அகன்றுநீ செல்வாய்
பனிப்புயல்
போலே படர்வாய் வீட்டுள்
அங்கொரு பிள்ளை அழுதுகொண் டிருக்கும்
போர்வையின்
உட்சிறு பிள்ளை யிருக்கும்
பேதைக் குழந்தை பேச வராது
நாவாற் சொல்லும்
நயம்தெரி யாது 170
கூறா(து) குளிரெனக் கூறா(து)
பசியென
அல்லது வேறென்ன சொல்லா தெதனையும்
பழகிய யாரும் பக்கம்
வரும்வரை
தாயின் குரலும் காதில் விழும்வரை.
நேரே இல்லுள் நீவரும்
போது
உறுநாற் பொருளில் ஒன்றென வருவாய்
நீர்நிறை வாளி நின்கரத்
திருக்கும்
குளியற் **தூரிகை கக்கத் திருக்கும்
எயிற்றின் இடையினில்
இருக்கும்தீக் குச்சி
நான்காம் பொருளென நனிநீ யிருப்பாய்.
180
பெருநிலம் அடுத்துப் பெருக்கிக் கூட்டி
நிலத்துப் பலகையை நீசுத்
தம்செய்;
தண்ணீர் அள்ளித் தரையிலே வீசு
குழந்தையின் தலையில் கொட்டி
விடாதே;
குளிர்தரை நீயொரு குழந்தையைக் கண்டால்
மைத்துனி பெற்ற மழலையஃ
தாயினும்
பிள்ளையைத் தூக்கிப் பீடத் திருத்தி
கண்களைக் கழுவிக் காண்தலை
வருடி
குழந்தைக்கு ரொட்டி கொடுத்துக் கையில்
கொஞ்சம் ரொட்டிமேல்
கொழுவெ(ண்)ணெய் பூசு 190
இல்லத்து ரொட்டியும் இல்லாது
போனால்
மரக்குச்சி யொன்றை மழலைகை வைப்பாய்.
வீட்டில் கழுவுதல் மேசைகள்
என்றால்
கூடிய காலம் வாரத் தொருநாள்,
கழுவு மேசையைக் கரையையும்
நினைவாய்
கழுவவும் வேண்டும் கால்மறக் காமல்;
ஆசனப் பலகையை நீரினாற்
கழுவு
சுவரெல்லாம் துடைத்துச் சுத்தமாய்ச் செய்து
ஆசனப் பலகையின் அருகெலாம்
கழுவி
கழுவு சுவரையும் காண்சுவர் மூலையும்
200
மேசையின் மேலே தூசுகள் படிந்தால்
சாளர மேலே சார்அழுக்
குறைந்தால்
துடைப்பத் தோகையால் துப்புர வாக்கி
ஈரத் துணிகொண் டெடுப்பாய்
அழுக்கை
அப்போ தழுக்குகள் அயற்புறம் போகா
தூசுகள் பறந்து கூரையிற்
படியா.
கூரையில் சேர்ந்த குப்பையைக் கூட்டி
அடுப்பங் கரையின் அசுத்தம்
நீக்கு
கதவின் நிலைகளில் கவனம் வைத்திரு
உத்தரம் யாவையும் நித்தமும்
நினைவாய் 210
அப்போ(து) குடிவாழ் குடிலா யதுவரும்
வாழத் தகுந்த
வதிவிட மாய்வரும்.
நான்மொழி கையிலே நங்கைநீ கேட்பாய்
நான்மொழி கையிலும்
நான்உரைக் கையிலும்!
வெளியா டையிலா(து) வெளிச்செல் லாதே
மேலாடை யின்றி
வெளியலை யாதே
எங்கும் **கைத்துணி யின்றியே காதே
காலணி யின்றிக் காலாற
நடந்திடேல்:
மாப்பிள்ளை பார்த்தால் மகாசினம் கொள்வார்
இளமைக் கணவர்
எதுவெனும் சொல்வார். 220
அந்தச் செடிகளில் அதிகவ
னம்வை
பெருந்தோட் டம்வளர் **பேரிச் செடிகளில்;
தோட்டத் துப்பேரி தூய்மையே
யானது
பேரியின் கிளைகள் பெரிதும் புனிதம்
கிளைகளின் இலைகளும் உளமிகப்
புனிதம்
அதன் சிறுகனிகளே அனைத்திலும் புனிதம்,
இளங்கொடி அறிவது இவற்றினால்
எதுவெனில்
இருப்பவள் அனாதைபோல் எதுகற்ப தோவெனில்
வருமிளங் கணவனை மகிழச்செய்
வகையதே
மணமகன் உளமதை மகள்தொடு விதமதே. 230
செவியிலே வேண்டும்
எலியதன் கூர்மை
பாதத்தில் வேண்டும் முயற்பரி சுத்தம்:
பருவக் கழுத்துப்
பணிந்து பின்புறம்
வனப்புறும் கழுத்து வளைதலும் நன்று
சிலிர்ப்பொடு முளைவிடு
**செடிசூ ரையைப்போல்
பசுமை வளர்சிறு பழச்செடி யைப்போல்.
விழிப்புணர்
வுனக்கு வேண்டும் வழக்கில்
கணந்தோறும் விழிப்புணர் கவனமும் வேண்டும்
ஆசனம்
பொழுதெலாம் அமர்தலும் வேண்டாம்
பலகையில் நீளப் படுத்தலும்
வேண்டாம் 240
போர்வையுள் சதாநீ புதைதலும்
வேண்டாம்
படுக்கைநா டிப்புறப் படலதும் வேண்டாம்.
வருவான் உழுதலை
மைத்துனன் முடித்தபின்
வருவார் வேலியை மாமன்கட் டியபின்
வெளிப்புற மிருந்துன்
கொழுநன் வருவார்
அடர்கான் திருத்திஉன் அழகனும் வருவார்;
கலயம் ஒன்றிலே
புனலினைக் கொணர்வாய்
கைத்துணி ஒன்றையும் அத்துடன் கொணர்வாய்
தலையைச் சிறிது
தாழ்த்தியே பணிந்து
அன்புறும் சொற்களை அருமையாய்க்
கூறு. 250
மாமியார் களஞ்சியக் கூடத்தால் வருவார்
அரைத்தமாக்
கூடை இருக்கும் கக்கம்
மாமியை எதிர்கொள ஓடுமுற் றத்தே
தலையைச் சற்றுத்
தாழ்த்திப் பணிந்து
கேட்டுநீ கக்கக் கூடையை வாங்கு
இல்லத்தின் உள்ளே எடுத்ததை
ஏகு.
ஊகிக்கச் சிந்திக்க உனக்கிய லாவிடில்
சுத்தமாய் விளங்குதல்
மெத்தவும் சிரமமேல்
எந்தெந்தப் பணியை எப்போது செய்வது
எதையெதைத் தொடங்கி
இனிதியற் றுதலென 260
வீட்டின் முதியளை வினயமாய்க்
கேட்பாய்:
'ஓ,என் அன்பு உடைய மாமியே!
எங்ஙனம் வேலைகள் இங்கே
நடப்பது
எவ்விதம் முடிவெடுத்(து) இயற்றுதல் ஒழுங்காய்?'
முதியவள் இங்ஙனம்
மொழிவாள் மறுமொழி
மாமியார் இவ்விதம் மறுமொழி சொல்வாள்:
'இப்படித் தான்செயல்
இங்கே நடப்பது
இவ்விதம் முடிவெடுத்(து) இயற்றுதல் ஒழுங்காய்
இடித்தல்
குத்துதல் அரைத்தல்இங் குண்டு
கல்லின் திரிகையைக் கைகளால் சுற்றலும்
270
அத்துடன் தண்ணீர் அள்ளி வருதலும்
பசையாய் மாவைப் பிசைதலும்
இங்குள;
விறகை எடுத்து வீட்டுட் கொ(ண்)டுசெலல்
அடுப்பை மூட்டி அனலையுண்
டாக்கல்,
அடுத்து ரொட்டிகள் அடுப்பில் சுடலுள
கனமாம் பெரிய பணிய()ரம்
சுடலுள
கலயம் சட்டிகள் கழுவு் செயலுள
ஊண்மரத் தட்டை உடனலம்
பலுமுள.'
முதியவ ளிடத்தே முயற்சிகள் கேட்டதும்
ஒழுங்காய் மாமியார்
உரைத்தலும் அலுவலை 280
காய்ந்த தானியம் கணப்பில்நீ
யெடுத்து
அரைக்கும் குடிற்கு அவசரம் ஏகுவாய்;
அந்த இடத்தைநீ சென்று
அடைந்தபின்
அரைக்கும் குடிற்கு அவசரம் வந்தபின்
குயிற்குர லெடுத்துக் கூவுதல்
கூடா
கண்டக் குரலால் கத்தலும் ஆகா
கூவலைத் திரிகைக் கைப்பிடிக்
களித்திடு;
பாடலைத் திரிகைக் கைப்பிடிக் களித்திடு;
பலமிகும் ஒலியில்
புலம்பலும் கூடா(து)
திரிகைக் கல்மேல் சேர்ந்தூத லாகா(து)
290
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து)
இருக்க
பலமாய்ச் சினங்கொடு புலம்பினாய் நீயென
நெஞ்சம் வெறுப்பொடு
நெட்டுயிர்த் தாயென.
அரைத்த மாவை அரித்தெடுத் தருமையாய்
தட்டிலே வைத்து
வீட்டுள் கொணர்வாய்,
மென்மை ரொட்டிகள் மெதுவாய்ச் சுடுவாய்
கவனமாய்ப்
பிசைந்தமாக் களியிலே யிருந்து,
அங்கிங்கு கட்டிமா அமைதல்கூ டாது
புளித்தமாச்
சேராது போகலா காது. 300
சரிந்ததோர் தொட்டியாங் கிருந்திடக்
காண்பாய்
தொட்டியைத் தூக்கியுன் தோளிலே வைத்து
கைவாளி யொன்றைக் கக்கத்
தெடுத்து
புனலள் ளிவரப் போதுறை நோக்கி
தொட்டியை யழகாய்த் தோளில்நீ
சுமப்பாய்
கொளுவிநீ சுமந்தாய் கொண்டோ ர் **காத்தடி
வாயுபோல் விரைந்துநீ வீடு
திரும்புவாய்
குளிர்ருதுக் காற்றெனக் குறுகுவாய் கடிதில்
சற்றும் சோம்புதல்
நீர்த்துறைக் கூடா(து)
அத்துடன் ஓய்வுறல் ஆகா(து) கிணற்றடி
310
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து)
இருக்க
உன்மத்த மாயினாய் உன்னுருப் பார்த்தென
உன்னையே பார்த்துநீ உளமகிழ்ந்
தனையென
உன்செந் நிறத்து உருவம் தண்புனல்
மருண்டனை கிணற்றிலுன் வளர்எழில்
கண்டென.
நீள்விற கடுக்கில் நீபோய் நிற்கையில்
விறகை யெடுக்க விரும்புமவ்
வேளையில்
நிந்தையாய் விறகை நீநோக் காதே
**அரசம் விறகை அளவொடு
நீபெறு 320
விறகை மெதுவாய் வீழ்த்திடு
மண்ணில்
ஓசைகடுமையாய் ஒன்றும் வராமலே
ஏனெனில் மாமனார் நினையா(து)
இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
வெறுப்பினால் விறகதை விட்டெறிந்
தாயென
கடுஞ்சின மதாலெழுங் கடுமொலி யதுவென.
நெடுங்களஞ் சியவறை நீசெ(ல்)ல
நேர்ந்தால்
அரைத்தமா அள்ளிநீ அயல்வரப் போனால்
களஞ்சியத் தில்வீண் காலம்போக்
காதே
களஞ்சியப் பாதையில் கழியேல் வெகுகணம் 330
ஏனெனில் மாமனார்
நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
பலருக்கு மாவைநீ
பங்கிட் டாயென
கொடுத்தனை கிராமக் கோதையர்க் கேயென.
சமையல் பாத்திரம்
சரியாய்க் கழுவையில்
மரத்தட் டுகளை மற்றுநீ யலம்பையில்
கழுவிடு குடுக்கைகள்
கைபிடி யதனொடே
கலய(த்து)க் குழிவிழும் கரையையும் கழுவுநீ
மறவா(மல்) சாடியின்
மறுபுறம் கழுவுநீ
கைபிடி நினைவில்வை கரண்டிக ளாகிடில்.
340
கரண்டிகள் தொகையைக் கவனத்(து) இருத்துக
எண்ணிடு பாத்திரம் எல்லாம்
பக்குவம்
அல்லது நாயெடுத் தவைசெல வழியுள
பூனையும் சிலதைப் புறங்கொடு
போகலாம்
குருவிகள் பறவைகள் கொடுசெல வாய்ப்புள
நிலத்திலே பரப்பியே நீக்கலாம்
பிள்ளைகள்
இருக்கிறார் கிராமம் ஏர()ளம் பிள்ளைகள்
சிறுதலை படைத்திட்ட
சிறுவர்ஏ ராளம்
சிறுவர் சாடிகொடு செல்வராங் கிருந்து
அச்சிறார் எடுத்தெறிந்
தகப்பைகள் பரப்புவார். 350
நீராவிக் குளியல் நேரமா
லையிலே
சுத்தநீ ரிறைத்துத் **தூரிகை கொணர்ந்து
அவைமெது வாக்கி ஆயத்த
மாக்கி,
புகைவெளி யேற்றிப் பொருந்தும் பதமதை,
நீள்கணம் சவுனா(வில்) நிற்றலும்
கூடா(து)
அதற்கா யாங்கிருந் தகல்தலு மாகா(து)
ஏனெனில் மாமனார் நினையா(து)
இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
சவுனாப் பலகையில் சாய்நதிருந்
தாயென
குதித்துப் பலகையில் **கும்மலித் தாயென. 360
மீண்டுநீ
அங்கிருந்(து) வீட்டுள் வந்ததும்
மாமனார் குளிக்க மனமுவந் துரைப்பாய்:
'ஓ,என்
அன்புடை உயர்மா மாவே!
ஆவிக் குளிப்பறை ஆயத்த முள்ளது
தூயநீ ரிறைத்துத் தூரிகை
வைத்துள்ளேன்
பலகைகள் யாவையும் பாங்காய்ப் பெருக்கினேன்
மனம்நிறை யும்வரை
மகிழ்வாய்க் குளிப்பீர்
நினைப்புபோல் நிறைவாய் நீரா டுங்கள்
நீராவி இயக்கம்
நேர் கவனிப்பேன்
நீள்மே டையின்கீழ் நின்றே இயக்குவேன்.'
370
நிதம்நூல் நூற்கும் நேரம் வந்திடில்
நெய்தல்வே லைக்கு நேரம்
வந்திடில்
கிராமம் வென்று கேளேல் கருத்து
அறிவுரை வேண்டி **அகழ்கடந்
தேகேல்
அடுத்தவர் வீட்டுக் கதுகேட் டேகேல்
**பாவுநூல் கேட்டுப் படரேல்
புதுவிடம்.
நூற்றெடுப் பாய்நீ நூலை உனக்காய்
நெசவு(ப்)பா வுநூலை நீஉன்
விரல்களால்
சற்று(ப்)பா வுநூலைத் தளர்ச்சியாய் நூற்று
இறுக்கமாய் இழைநூல்
என்றும் பின்னு; 380
உறுதியாய்ப் பந்துபோல் உடன்அதைச்
சுற்றிநீ
உருளையில் பலமாய் உடனதைச் சேர்த்து
திருகு விட்டத்தில் திடமிணைத்
ததனை
நெய்யும் கருவியில் நேராய்ப் பூட்டுவாய்; கைத்தறிச் சட்டம் கனபலத்
தியக்கி
ஊடிழைக் **கயிற்றை உடன்மெது விழுப்பாய்
அடுத்ததாய் இ(ல்)லப்பல்
லாடைகள் நெய்வாய்
கம்பளித் துணியிலே கவின்பா வாடைசெய்
அவ்வா றோராட்டு
உரோமத்(தால்) ஆக்குவாய்
ஒருகுளிர் ருதுஆட்(டு) உரோமத் திருந்து
390
வசந்தச் செம்மறி மணிக்குட்(டி) இருந்து
வளர்கோ(டைச்) செம்மறி மறியாட்
டிருந்து.
நான்கூ றுகையில்நீ நனியிவை கேட்பாய்
இன்னமும் சொல்வதை
இப்போ(து) கேட்பாய்
பார்லி(த்)தா னியத்திலே 'பீர்'நீ வடிப்பாய்
பகர்சுவை
மாவூ(றற்) பானம் வடிப்பாய்
ஒருமணிப் பார்லியாம் அரிசியி லிருந்து
பாதியாம்
மரமதன் படுவிற கெரித்து.
பார்லிப் பானம் பக்குவம் செய்கையில்
மாவூ(றற்)
பானம் வளர்சுவை யாக்கையில் 400
கொளுவியால் நீயதைக் கிளறுதல்
ஆகா(து)
குச்சியால் கிளறுதல் கூடா(து) நீயதை
உன்கை முட்டியால் கிளறுதல்
வேண்டும்
கிண்டுதல் வேண்டும் கொண்டுள் ளங்கை;
அடிக்கடி ஆவிக் குளிப்பறை
செல்வாய்
முளைத்த முளையெதும் மழுங்கா தமைப்பாய்
அமர்தல் பூனைகள் ஆகா(து)
முளைமேல்
கூடா(து) பூனையின் குட்டிகள் படுத்தல்
ஓடியே வந்திடும் ஓநாயென்
றஞ்சிடேல்
பயப்பட வேண்டாம் பருவிலங் குறுமென 410
நீராவிக்
குளிப்பறை நீசெல்லும் போது
நடுச்சாமத் தினிலும் நடக்குமட
போதுநீ.
வெளியார் எவரும் வீட்டுக்கு வந்தால்
வெளியாரை என்றும் வெறுத்த
லாகாது
எப்போதும் நலமுடை இல்லத் துளது
வரவேற்க வெளியார் வகையாம்
பொருட்கள்
இறைச்சித் துண்டுகள் இருக்கும்ஏ ராளம்
எழிலார் பலக()ரம்
இருக்கும்எவ் வளவோ.
அன்னியர் வந்தால் அடுத்தம ரச்சொல்
அவரோ டமைதியாய்
உரையா டிடுவாய் 420
சுவையா(க) யூட்டு சொற்கள்வந்
தவர்க்கு
ஊண்ரசம் தயாராய் உற்றிறக் கும்வரை.
அவர்பின் இல்விட் டகலும்
வேளை
எழுந்து 'போய் வருவேன்' எனப்பிரி நேரம்
வந்தவர் பின்போய் வழியனுப்
பாதே
வெளிப்பட வேண்டாம் வழிவாய் நுழைந்து
ஆத்திரம் கொள்வார் அரியஉன்
கணவர்
அழகுறும் உன்னவர் அருவருப் பாரதை.
சிலகணம் நின்மணம் சித்தமா
யானால்
எங்கெனும் பக்கத் தேகவேண் டுமென 430
பரிவொடு போக
விடையது கேட்பாய்
அயல்வீட்(டில்) உரையசெய அனுமதி கேட்பாய்;
அவ்வா றுரையசெய
அயல்வீ டேகினால்
கவனமாய்ப் பொருளு(ள்)ள கதைகளைச் சொல்வாய்
உள்ளகக்
குறைகுற்றம் உரைத்தல்ஆ காது
இறக்கமாய் மாமியை இயம்பல்ஆ காது.
வளம்நீ போம்இல்
மருகியார் கேட்பார்
கேட்பார்கள் எவரெனும் கிராமமங் கையர்கள்;
'உனக்கிங்
கீவாளா உயர்வெ(ண்)ணெய் மாமி
உன்இல் முன்நாள் அன்னையைப் போல?'
440
ஒருக்காலும் இவ்வாறு உரைக்கா தேபதில்:
'மாமியார் எனக்குங்(கு)
வழங்கார் வெண்ணெய்!'
அவளுனக் கென்றும் அளிப்பளே என்பாய்
அகப்பையில் நிறைவாய்
அளிப்பளே என்பாய்
ஒருகால் கிடைத்திடும் உயர்கோ டையிலே
குளிர்நாளி **லிருந்தது
கூடவே இருமை.
இன்னும் நான்சொல இவைநீ கேட்பாய்
இனியும் சொல்வதை இப்போ(து)
கேட்பாய்
இந்தஇல் லகத்திலே யிருந்துநீ ஏகி
மற்றொரு வீடு வரும்போ
தினிலே 450
உனையீன் அன்னையை ஒருகா(லும்) மறவேல்
தாயவள்
உள்ளம் தளரவை யாதே;
உனைவளர்த் தெடுத்தவள் உனதுதா யன்றோ
முலையால் இனிதாம்
அமிழ்துதந் துயர்த்தினள்
தரமாம் உடலால் தனையே தந்தாள்
வெள்ளையாம் உடலால்
விரும்பிய தீந்தாள்;
இரவுகள் எத்தனை உறங்காக் கழித்தாள்
எத்தனை நாள்ஊணை
எடுத்துண மறந்தாள்
தனித்ததொட் டிலில்உனைத் தாலாட்டு கையில்
சீராட்டி
வளர்க்கையில் சிசுவாய்த் தானும். 460
தத்தம் அன்னையை தாம்எவர்
மறப்பரோ
தாயவள் இதயம் தளர்வுறச் செய்வரோ
மரண உலகவர் புகாதிருக்
கட்டும்
தூயநன் நெஞ்சோடு துவோனியின் உலகு:
மரண உலகம் கடும்விலை
கொடுக்கும்
துவோனியின் உலகு கொடும்பரி சளிக்கும்
தாயினை மறந்த தரங்கெட் டோ
ர்க்கு
தாய்தளர்ந் திடச்செய் தீமனி தர்க்கு;
துவோனியின் மகளார் சொலிலிகழ்ந்
தேசுவார்
கன்னியர் சாப்புவிக் கலகஞ்செய் திடுவர்: 470
'அன்னையை
மறத்தலும் எங்ஙனம் ஆனது?
தன்தாயை எவ்வாறு தளரவிட லானது?
அன்னையே உழன்றாள்
அளவிலாத் துன்பம்
பெற்றவள் பட்டது பெருந்துய ரன்றோ
நீராவி யறையில் நீண்(டு)சய
னித்தாள்
பரப்பிவைக் கோலைப் படுத்தாள் அதன்மேல்
அப்போ துனையீன் றளித்தவந்
நாளில்
எளிய பிறவியே எடுத்துனைச் சுமக்கையில்!' "
முன்நிலத் தங்கோர்
முதியோள் இருந்தாள்
மேலா டைதரி(த்த) வியன்முது கிழவி 480
கிராமக்
களஞ்சியம் திரிந்து வருபவள்
அந்தவூர் வீதி அலைந்தே திரிபவள்
இந்தச் சொற்களில்
இயம்பினள் அவளே
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"சேவலொன் றினியதன் சோடிக்
குரைத்தது
கோழியின் குஞ்சுதன் அழகுக் குரைத்தது
காகம் **பங்குனி மாதம்
கரைந்தது
இனிய வசந்தத் திசைத்துப் பறந்தது;
பாடலை நானே பாடுதல்
வேண்டும்
அடுத்தவர் பாடலை நிறுத்தலும் வேண்டும்: 490
அன்புளோர்
உண்டு அவரவர் வீட்டில்
அன்புளோர் அவரவர் அருகிலே யுள்ளார்
எனக்கிலை அன்புளோர்
இல்லமு மில்லை
என்றுமே அன்புளோர் இல்லா துள்ளேன்.
நீகேள் சோதரி நான்கூ
றுகையில்
கணவனின் இல்நீ கால்வைக் கையிலே
ஏற்று நடந்திடேல் எண்ணம்
கணவனின்
நான்பேதை ஏற்று நடந்ததைப் போல
**வானம் பாடிநா மணாளனின்
எண்ணம்
என்பெருங் கணவனின் இதய மதுவே. 500
என்வாழ்
நாளில் இருந்தேன் மலர்போல்
பற்றையில் வளர்ந்த பசும்புலா
யிருந்தேன்
முன்வெடித் தெழும்பிய முளையா யிருந்தேன்
முகைத்து நீண்ட மொட்டா
யிருந்தேன்
**தேன்சிறு பழமெனச் செப்பிடப் பட்டேன்
பொன்னெனப் பெருமையாய்ப்
புகன்றிடப் பட்டேன்
தந்தையார் தோட்டக் காட்டுவாத் தானேன்
தாரா வாய்த்திரிந்
தேன்தாய் நிலத்தில்
சகோதரன் அருகுநீர்ப் பறவையா யானேன்
சகோதரி பக்கம்
தனில்சிறு **புள்நான்; 510
பாதையின் வழியில் பூவாய்
நடந்தேன்
வயல்வெளி களிற்சிறு பழமா யிருந்தேன்
தொடர்நீர்க் கரைமணல் துள்ளித்
திரிந்தேன்
மலர்நிறை மேடெலாம் மகிழ்ந்தா டிட்டேன்
பள்ளத் தாக்கிலே பாடித்
திரிந்தேன்
ஒவ்வொரு குன்றிலும் உயர்ந்திசை பாடினேன்
வளமுறு சோலைகள் விளையாட்
டிடமாய்
மகிழ்ச்சியின் இடமாய் மாறின தோப்புகள்.
தன்வா யாலே தான்நரி
வீழ்ந்தது
கீரிதன் நாக்கால் கெட்டகப் பட்டது 520
கணவனின்
வீட்டைக் காரிகை எண்ணினள்
மற்றொரு இ(ல்)லிற்கு வழிமுறை தேடினள்:
ஆதலால்
மகளிர்க் காம்இயல் நெறியிது
மகளாய்ப் பிறந்தவள் மாறியே மனம்பின்
மணாளன்
வீட்டிலே மருமக ளாவதும்
அடிமையாய் மாமியார் அகத்துக்(கு)
ஏகலும்.
விழுந்தேனொர் அந்நிய வியன்நிலம் பழமென
மற்றொரு சிறுபழ
மாய்ப்புனற் கிடந்தேன்
தண்செம் **பழம்நான் சஞ்சலங் கொண்டேன்
நிலநலப்
**பழம்நான் நிந்தனை கண்டேன் 530
ஒவ்வொரு மரமும் உடனெனைக்
கடிக்கும்
இன்னொரு **வகைமரம் என்னையே கிழிக்கும்
மிலாறு மரமது மிகஎனை
வருத்தும்
**அரசெனைப் பார்த்து அதிரக் குரைக்கும்.
மணந்தபின்
மாப்பி(ள்)ளை மனைக்குச் சென்றேன்
மாமியின் மனைக்கு மகிழ்ந்துகொண்
டேகினர்
இங்ஙனம் அப்போ தெனக்குக் கூறினர்
மணந்தபின் அங்கே மணப்பெண்
சென்றால்
ஆறாம் தேவதா ரமைத்தநல் வீடுகள்
அறைகளின் தொகையோ அதிலிரு
மடங்காம் 540
காட்டின் எல்லையில் களஞ்சியக் கூடம்
பாதையின்
மருங்கில் பன்மலர் மேடை
பள்ளத் தரையில் பார்லி வயல்கள்
புல்வெளி யருகினில்
**புல்லரி சிப்புனம்
தொட்டிகள் நிறையத் தூற்றிய தானியம்
தூற்றாத் தானியத்
தொட்டிகள் அனேகமாம்
கிடைத்த **காசுகள் இதுவரை நூறாம்
இனிவரப் போவன இன்னொரு
நூறாம்.
பேதைநான் சென்றதும் பெற்றது பலவகை
ஏழைநான் கையினில் எடுத்தது
ஒருவகை: 550
அகமதைத் தாங்கிய தாறே தூண்கள்
ஏழு மரங்களில் இல்லம்
இருந்தது
கருணையில் லாமை காட்டில் இருந்தது
அன்புஇல் லாமை அமைந்தது
தோட்டம்
பாவியென் பேணலில் பாதைகள் இருந்தன
தீய நினைவுகள் சோலைகள்
அனைத்திலும்
தொட்டிகள் நிறையத் துயர்தரும் தொல்லைகள்
துயர்தரப் போகும்
தொட்டிகள் அனேகம்
இகழ்வாம் சொற்கள் இதுவரை நூறாம்
இனிவரப் போவன இன்னொரு
நூறாம். 560
எதையுமே பொருட்டாய் எண்ணிய தில்லைநான்
மாசில்லா
வாழ்வை வாழமுற் பட்டேன்
முழுமதிப் பைப்பெற முயன்றனன் அங்கே
விரும்பினேன்
அன்பை வென்றிட இவ்விதம்
வீட்டுள்ளே தீயினால் வெப்பமுண் டாக்கினேன்
விறகுச்
சுள்ளிகள் சிராய்கள் பொறுக்கினேன்
நெற்றியைக் கதவில் நெட்டி
முட்டினேன்
தலையைக் கதவு நிலையில் மோதினேன்;
அக்கத வம்வழி அன்னிய
விழிகள்
நெருப்பிட மூலையில் நெருக்குறு நோக்கு 570
கூடத்து
மத்தியில் கூர்கடை விழிநோக்(கு)
வெளியிலே இருப்பதோ வெறுப்பு
நிறைந்தது;
வாயிலே வெந்தீ வரும்வெளி வீச்சு
நாக்கின் அடியிலே தீச்சுடர்
பறக்கும்
கொடிய தலைவனின் தடிவா யிருந்து
அன்பிலா நாவின் அடிப்புற
மிருந்து.
எதையும் பொருட்டாய் எண்ணிய திலைநான்
எப்படி யாயினும் ஒப்பேற்ற
முயன்றேன்
அவர்களின் மத்தியில் அன்பாய் வாழ்ந்திட
சாந்தமாய் சுத்தமாய்
தாழ்மையாய் வாழ்ந்திட; 580
முயலின் பாதமாய் முன்குதித்
தோடினேன்
கீரியின் பாத நேர்சுவட் டேகினேன்
வெகுபொழு தாகி வீழ்ந்தேன்
படுக்கையில்
இயைவை கறையில் எழுந்தேன் விழித்து;
ஆயினும் பேதைக் கங்கிலை
மதிப்பு
ஏழைநான் அன்பை எங்கும் கண்டிலேன்
ஒருமலை பெயர்த்து உருட்டி
யிருக்கலாம்
உயர்கல் இரண்டாய் உடைத்து மிருக்கலாம்.
வீணாய் ப் போனது
நான்மா வரைத்தது
தானியம் கொழித்தது போனது பயனற 590
ஆங்கா ரங்கொள்
மாமியின் ஊணாய்
கனலாம் தொண்டையால் கடித்தே விழுங்க
நீண்டமே சையிலே நேர்தலை
யிடத்தே
தங்க விளிம்புத் தகுகிண் ணங்களில்;
பாவ மருமகள் யானோ
உண்டது
திருகைக் கல்லில் சிதறிய மாவிலே
அடுப்படிப் பலகையே ஆனஎன்
மேசை
மரத்தின் அகப்பைதான் வனப்புறென் கரண்டி.
எழுந்தது அடிக்கடி இன்னல்
மனதிலே
மணாளன் வீட்டில் மருமக ளானதில் 600
படர்சதுப்
புநிலப் பாசியை எடுத்தேன்
அவற்றில் ரொட்டியை அமைத்தேன் எனக்கு
கிணற்று நீரைக்
கொணர்ந்தேன் வாளியில்
அதையே பானமாய் அருந்தினேன் நானும்;
பேதைநான் உண்டது
தசைமீன் மட்டுமே
ஒருவகை **மீனையே உண்டேன் அபலையங்(கு)
மீன்வலை மீதுநான்
மெதுவாய்ச் சாய்கையில்
நடுவில் தோணியில் நான்தள் ளாடையில்;
என்றும் பெற்றதே
இல்லையோர் மீனும்
மாமியார் எனக்கு வழங்கிய உணவில் 610
ஒருநாள்
தேவைக் குகந்த மீனினையோ
ஒருபொழு துணவுக் குகந்த மீனினையோ.
கோடையில்
கால்நடைக் குணவு தேடினேன்
குளிரில் **கவர்க்கோல் கொடுதொழி லாற்றி
ஊதியம்
பெற்றிடும் ஊழியர் போலவும்
கூலிக்கு வந்தகொத் தடிமையைப் போலவும்;
என்றும்
மாமியின் இல்லக மதனிலே
எனக்குக் கிடைத்தவை இவையிவை அலுவல்கள்
சூடடிக்
களம்மிகப் பெரியசூ டடிக்கோல்
சவுனா(வில்) கிடைத்தது தனிக்கன
நெம்புகோல் 620
கடற்கரை வேலைக்(குக்) கடினமாய் ஒருதடி
பண்ணைமுற்
றத்திலோர் பரும்எரு வாரி
நான்சோர் களைப்பை நம்பினோர் இலையே
இளைத்தி(ன்)னற்
பட்டதை எண்ணினோர் இலையே
வீரர்கள் களைத்து விறலறச் சோர்ந்துளர்
பரிக்குட்
டிகளும் படுவதுண் டிளைத்தி(ன்)னல்.
ஏழைப்பெண்நான் இங்ஙனம்
நாள்தொறும்
வேலைநே ரத்தில் வேலைகள் செய்துளேன்
தோளால் யாவையும் தூக்கிச்
சுமந்துளேன்;
அக்கா லம்போய் அடுத்து வந்தது 630
தகிஅனற்
கிடங்கெனைத் தள்ளினர் இப்போ(து)
தீயதன் கரங்களில் திணித்தனர்
இப்போ(து).
ஆத()ரம் இன்றி அலம்பும் கதைகள்
இகழும் கதைகள் இசைத்தனர்
நாவால்
ஒழுங்குறும் எனது பழக்கத் தெதிராய்
வாகார் புகழ்கொளென் மதிப்பிற்
கெதிராய்;
தலையில் வார்த்தை மழையாய்ப் பொழிந்தன
மொழியொடு பேச்சும் கதையாய்
வளர்ந்தன
கொடிய நெருப்பின் கொழுங்கனற் பொறிபோல்
இரும்புறை விண்மழை பொழிந்தது
போல. 640
ஆயினும் எனையிது அறமாற் றிலது
இப்படிச் சென்று
என்நாள் கழிந்திடும்
ஆங்கா ரங்கொள் அக்கிழத் துதவியாய்
அனல்தொண் டைக்கு
ஆனகூட் டாளியாய்;
ஆயினும் எனக்கின்னல் ஆனது இவ்விதம்
பெருந்துயர் வந்து
பெருகிய திவ்விதம்
மணாளர் எனக்கு(ஓ) நாயாய் மாறினார்
கவினுறும் என்னவர்
கரடியாய் மாறினார்
புறங்காட்(டித்) துயின்றார் அருகிலே
அயின்றார்
புறங்காட்(டிச்) செய்தனர் புரியும் செயலெலாம். 650
இதையே
எண்ணிநான் இருந்தழு தரற்றினேன்
களஞ்சிய அறையில் கடிதுசிந் தித்தேன்
நடந்த
நாட்களை நான்நினைந் திட்டேன்
இளமைப் பொழுதெலாம் எண்ணிப் பார்த்தேன்
தந்தையின்
நீண்ட முன்றில் பரப்பினில்
அன்புறும் அன்னையின் அகத்து வெளியினில்.
இவ்வா
றடுத்து இயம்பத் தொடங்கினேன்
நானே கூறினேன் நனியிஃ துரைத்தேன்
'எனது அன்னை
என்பவள் அறிவாள்
அப்பிளை எங்ஙனம் அடைவது என்பதை 660
வளர்ப்பது
எங்ஙனம் வளர்முளை என்பதை,
ஆயினும் செடிநட அவளோ அறியாள்:
எழிலுறும் முளையை
இவ்விதம் நட்டனள்
தீமை நிறைந்த தீய இடங்களில்
கொடுமை நிறைந்த கொடிய
இடங்களில்
மிலாறு வேர்விட்ட மிகக்கடு மிடங்களில்
ஆயுள் முழுவதும் அழுவதற்
காக
புணர்வாழ் நாளெலாம் புலம்புதற் காக.
என்தகு திக்கு இருக்கலாம்
ஒழுங்கொடு
நன்மை நிறைந்த நல்ல இடங்களில் 670
பரந்தமுற்
றத்துப் படர்நீள் வெளிகளில்
அகன்று விரிந்த அணிநிலத் தரைகளில்
சீரியர்
ஒருவரின் சிறந்த துணையாய்
சென்னிறங் கொண்டவர் சீருறும் துணையாய்;
எனினும்
மந்தர் இவருட னிணைந்தேன்
கொழுத்துப் பருத்த கொழுநரைச் சேர்ந்தேன்:
காணும்
இவருடல் காகம் போன்றது
அண்டங் காக அகல்மூக் குடையவர்
ஓடிஇரைக் கலை ஓநாய்
போன்றவர்
புறத்தோற் றமெலாம் கரடியைப் போன்றது.
680
பெற்றிருப் பேனே இப்படியொ ருவரை
ஆனகுன் றினிலே அலைந்து
திரிந்து
தேவ தாருவைத் தெருவினில் எடுத்து
பூர்ச்சங் கட்டையைத் தோப்பினில்
எடுத்து
ஒருபிடி புல்லால் உறுமுகம் செய்து
தாடியை அழுகிய பாசியால்
படைத்து
பாறையால் வாயும் பதக்களித் தலையும்
கனலின் கரியினால் கண்களும்
அமைத்து
மிலாறுவின் கணுக்களால் மிளிர்செவி செய்து
**மரக்கவர்க் கால்களும்
அமைத்திருந் தாலே.' 690
இத்துணை துன்பத் திவ்விதம்
பாடினேன்
பெருந்துயர் வந்ததால் பெருமூச் செறிந்தேன்
எழிலார் என்னவர் இதுகேட்க
நேர்ந்தது
சுவரின் அருகிலே அவர்நிற் கையிலே;
அவ்விட மிருந்து அவர்வரும்
வேளை
கூடத்துப் படிகளில் காலடி வைக்கையில்
அறிவேன் வருபவர் அவரே
என்பதை
காலடி ஒலிஅடை யாளம் தெரியும்:
காற்றில் லாமலே கலைந்தது
கேசம்
குழல்காற் றோட்ட மின்றி(யே) குலைந்தது 700
படர்சின முற்றதால்
பல்லீறு தெரிந்தது
வெகுளியால் வெளியே விழிகள் வெறித்தன
கரத்திலே ஒருசிறு
மரக்குச் சிருந்தது
வளைந்தகோ லொன்று மறுகக் கத்திலே
அதனால் என்னை அடிக்க
விரைந்தனர்
தலையில் ஓங்கித் தந்து முடித்தனர்.
அந்திப் பொழுது அடுத்தே
வந்தது
படுக்கைக் கென்னவர் படர்ந்தபோ தினிலே
கூடவே சாட்டையைக் கொண்டே
சென்றார்
கொளுக்கி லிருந்த கொழுந்தோற் சாட்டையை 710
அதுவேறு
யார்க்கு ஆகவு மல்ல
ஏழைப் பெண்ணாள் எனக்குத் தானது.
படுக்கைக் கியானும்
படர்ந்தேன் பின்னர்
சென்றேன் உறக்கம் அந்தியில் வேண்டி
படுத்தேன் மணாளர்
படுக்கையில் அருகில்
எனது மருங்கிலே என்னவர் படுத்தார்
முழங்கையால் எனக்கு
முழுமையும் தந்தார்
வெறுப்புறும் கைகளால் வெகுவாய்த் தந்தார்
கொடிச்செடிக்
குச்சியால் கொடுத்தார்எவ் வளவோ
கடற்பசு எலும்பின் கைப்பிடிச்
சவுக்கிலும். 720
படுகுளிர் அவரது பக்கத்
தெழுந்தேன்
இருங்குளிர்ப் படுக்கையி லிருந்தே எழுந்தேன்
மணாளர் துரத்தி
வந்தார் எனையே
வைதே விரட்டினர் வாயிலில் வெளியே
குறுகிக் கரங்களென் கூந்தலுள்
நுழைந்தன
கையால் கூந்தலைக் கலைத்துத் துளாவினார்
குலைத்தனர் அலையக் கூந்தலைக்
காற்றில்
பரந்து வளியிலே விரிந்திடச் செய்தனர்.
இதன்பின் செய்வது எவ்வழி
முறைநான்
எவ்வறி வுரையினை ஏற்று நடப்பது? 730
உருக்கின் காலணி
உண்டென் னிடத்திலே
இருந்தது செப்பினால் இயைந்த பட்டியும்
அவ்வீட் டின்சுவர்
அருகினில் நின்றேன்
பாதை எல்லையின் ஓசையைக் கேட்டேன்
கோபம் சிலகணம்
குறைந்திடு மென்றும்
ஆத்திரம் அடங்கிடும் அவர்க்கென எண்ணினேன்
ஆயினும்
அவர்சினம் அடங்கவே யில்லை
அமைதியோர் காலும் அடைந்ததே யில்லை.
கடையில்
என்னைக் கடுங்குளிர் பிடித்தது
வெறுப்பு வந்து வேகமாய்ச்
சேர்ந்தது 740
அவ்வீட் டின்சுவர் அருகில்நான்
நிற்கையில்
கதவின் அருகிலே காத்துநிற் கையிலே;
சிந்தனை செய்தேன் சீருற
நினைத்தேன்:
இங்ஙனம் பொறுத்து இருப்பது சிரமம்
கடினம் சுமப்பது காலநீள்
வெறுப்பை
இகல்நீள் கால இகழ்ச்சியை ஏற்பது
இந்தப் பிசாச எதிர்க்கண
மத்தியில்
அரக்கர்கள் வாழ அமைந்தஇக் கூட்டினில்.
எழிலுறும்
எனதுஇல்ல(த்)தை விட்டேன்
அருமையில் லத்தை அகன்று விலகினேன்
750
பலமிலா நிலையிலும் அலையத் தொடங்கினேன்
அலைந்தேன் சேற்றிலும் அலைந்தேன்
நிலத்திலும்
பரந்தஆ ழத்து புனலிலும் அலைந்தேன்
சென்றேன் சகோதரன் செறிவயல்
எல்லையும்;
காய்ந்த மரங்களும் கூவின அங்கே
இசைத்தது முடியுடை எழில்தேவ
தாரு
காகங்கள் எல்லாம் கரைந்தன கூடி
**பறவைகள் கூடிப் பண்ணொடு
பாடின:
'இங்கே இருப்பதுன் இல்லமே யல்ல
இங்கே இருப்பதுன் பிறப்பிடம்
அல்ல.' 760
எனக்குஅக்கறை இவைகளில் இல்லை
அண்மினேன்
சகோதரன் அழகில்(ல) முற்றம்;
வீட்டின் வாயில் விளம்ப லாயிற்று
முற்றமும்
என்னிடம் முறப்பா டுரைத்தது:
'இல்ல(த்)தை நோக்கி எதற்காய் வந்தனை
எளிய
பிறப்பே எதுகேட் டிவர்ந்தனை?
நின்(தந்)தை யிறந்து நெடுநா ளானது
உனைச்சுமந்
தழகிபோய் ஓய்ந்ததே பலநாள்
நினக்கோர் அந்நியன் நிகர்த்தவன் சோதரன்
அவன்மனை(வி)
ரஷ்ஷியா நாட்டாள் அனையளே.' 770
எனக்கு அக்கறை இவைகளில்
இல்லை
வாயில் வழியாய் வந்தேன் வீட்டினுள்
கதவின் கைப்பிடி கடிதே
பற்றினேன்
கைபிடி எனக்குக் கனகுளி ரானது.
வாயிலின் வழியாய் வந்ததும்
வீட்டினுள்
கதவின் பக்கமாய் காத்துநின் றேன்கணம்;
வீட்டின் தலைவி மிகுகர்
வத்தாள்
அருகெனை வந்து அணைக்கவு மில்லை
வரவேற் றுக்கரம் வழங்கவு
மில்லை;
நானும் அவள்போல் நல்லகர் வத்தாள் 780
அருகுநான் அவளை
அணைக்கவு மில்லை
கைகொடுத் தவளைக் கணிக்கவு மில்லை;
அடுப்பின் மீது அங்கைகள்
வைத்தேன்
அடுப்பின் கற்கள் அனைத்தும் குளிர்ந்தன
திருப்பினேன் கைகள்
நெருப்பின் பக்கமாய்
நெருப்பின் கரிகள் நேராய்க் குளிர்ந்தன.
வாங்கிலே
சகோதரன் சோம்பி யிருந்தான்
அடுப்பின் பீடம் வெறித்துப் பார்த்தான்
பணைத்தோள்
கரித்துகள் பலவடி யுயரம்
பருவுடல் இருந்ததோ பலசாண் அளவு
790
உயர்தலைச் தூசு ஒருமுழத் தளவு
கரிப்புகைப் படிவு அரையடி
யளவு.
சகோதரன் அதிதி தன்னையே கேட்டான்
என்னையே புதிதாய் எழுந்ததாய்க்
கேட்டான்:
'அன்னியர் எங்கிருந்து அலைகடந் தெழுகிறார்?'
அதற்குநான்
உத்தரம் அளித்தேன் இவ்விதம்:
'தெரிந்தில தோவுடன் பிறந்தசோ தரியை
அறிந்திலை
யோஉன் அன்னைபெற் றவளை?
ஒருதாய் வயிற்றுப் பிறந்தபிள் ளைகள்நாம்
ஒருபுள்(தா)
லாட்டில் உயர்ந்தவர் நாங்கள் 800
ஒருவாத் தடைகாத் துதித்தகுஞ்
சுகள்நாம்
ஒருகான் கோழியின் குடம்பையில் வளர்ந்தவர்.'
அப்போ(து) சோதரன்
அழுதனன் இரங்கி
கண்களில் பெருகிக் கண்ணீர் வடிந்தது.
சகோதரன் பின்னர்
தன்மனைக் குரைத்தான்
இனியதன் மனைவிக் கிவ்வா றியம்பினன்:
'என்சகோ தரிக்கு
எடுத்துவா உணவெதும்!'
ஏளன விழியுடன் எடுத்துவந் தாள்மனை(வி)
அடுக்களை
யிருந்து **இலைக்கறி ரசத்தை
ரசத்துக் கொழுப்பைச் சுவைத்திருந்
ததுநாய் 810
நாயொன்று உப்பை நக்கி யிருந்தது
கறுப்புநாய் உணவை
ருசிபார்த் திருந்தது.
சகோதரன் பின்னர் தன்மனைக் குரைத்தான்
இனியதன்
மனைவிக் கிவ்வா றியம்பினன்:
'விருந்தா ளிக்கு அருந்து'பீர்' கொண்டுவா!'
ஏளன
விழியுடன் எடுத்துவந் தாள்மனை(வி)
விருந்தா ளிக்கு வெறும்நீர்
மாத்திரம்
அதுவும் சுத்தமாய் அமைந்திட வில்லை
கண்களைச் சகோதரி கழுவிய
நீரது
அரியமைத் துனிமுகம் அலம்பிய நீரது. 820
சகோதரன் இல்லம்
தனிலிருந் தகன்றேன்
பிறந்தகம் விட்டுப் பிறிதிட மலைந்தேன்
பேதைநான் நடந்து
பிறநிலந் திரிந்தேன்
அலைதலும் திரிதலும் அதுபே தைக்காம்
நீர்க்கரை யோரம்
ஏழைநான் நடந்தேன்
ஏழைநான் அலைந்து என்றும் திரிந்தேன்
என்றும் அன்னியர்
இல்லத்து வாயிலில்
வெளியார் வாயிலின் வெளிக்கத வருகில்
எதிர்க்கரை வாழும்
ஏழைப் பிள்ளையாய்
கிராமமா தரிக்கும் கீழ்நிலைப் பேதையாய்.
830
இப்போ(து) பலரைநான் என்கணாற் பார்க்கிறேன்
எத்தனை யோபேர் இவ்வித
முள்ளனர்
வெறுப்புறும் குரலிலே வீசுவோர் வார்த்தைகள்
கொடிய குரலினைக் கொண்டு
தாக்குவர்;
ஆயினும் இல்லையே அதிகபேர் என்னிடம்
அன்புறும் சொற்களை அளிக்கும்
மானுடர்
இனியநல் வாயால் இதமாய்ப் பேசுவார்
அடுக்களை யதற்கே அன்பா
யழைப்பவர்
மழையிலே நனைந்துநான் வந்திடும் வேளை
கொடிய குளிரில்நான் கொடுகிய
நேரம் 840
ஆடையை உறைபனி மூடிய போது
பனிமழை ஆடையில் படிந்திட்ட
காலை.
இளமையாய் ஒருகால் இருந்தநாட் களிலே
இப்படி வருமென இருந்திலேன்
நம்பி
நூறுபேர் ஒன்றாய்க் கூறிய போதிலும்
நாக்குகள் ஆயிரம் நவின்றிட்ட
போதிலும்
இத்துணை துயரம் ஏற்படும் எனக்கென
இந்தநாட் களிலே இப்படி
வருமென
எனினும் வீழ்ந்தது என்தலை வீழ்ந்ததே
சுமைகளை என்கரம் சுமந்தது
சுமந்ததே." 850
பாடல் 24 - மணமகனும் மணமகளும் புறப்படுதல்.
அடிகள் 1 - 264 : மணமகன் மணமகளை எவ்விதம் நடத்த வேண்டும் என்றும் அவளைக்
கொடுமைப் படுத்தக் கூடாது என்றும் மணமகனுக்கு அறிவுரை கூறுதல்.
அடிகள் 265 -
296 : ஒரு முதியவன் தனது மனைவியை, தன்னை விரும்பும்படி எப்படி மாற்றினான் என்ற
அனுபவத்தைக் கூறுதல்.
அடிகள் 297 - 462 : மணமகள் தனது பிறந்தகத்தை விட்டு
நிரந்தரமாகப் பிரிவதை உணர்ந்து அனைவரிடமும் கண்ணீருடன் விடை
பெறுகிறாள்.
அடிகள் 463 - 528 : இல்மரினன் மணமகளைச் சறுக்கு வண்டியில்
ஏற்றிப் பயணித்து மூன்றாம் நாள் மாலை வீட்டை அடைகிறான்.
அரிவைக் கிப்போ(து) அறிவுரை கிடைத்தது
மணமகள் தனக்கு வழிமுறை
கிடைத்தது;
அரியஎன் சோதரற் கடுத்துநான் சொல்வேன்
வாயினால் எனது மாப்பிளைக்
குரைப்பேன்:
"மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
சோதர னைவிடத் தூயசீ
ருடையரே!
அன்னையின் மக்களில் அன்புமிக் குடையரே!
பிதாபெற்ற மகவில்
பெரும்பண்பு உடையரே!
நான்மொழி கையிலே நன்குநீர் கேட்பீர்,
நான்மொழி கையிலும்
நான்உரைக் கையிலும், 10
இசைபாடு மிச்சிறு **இளம்புள்
பற்றி,
கொண்ட நின்சிறிய கோழியைப் பற்றி.
நவிலுக மாப்பிளாய், நன்றிநின்
அதிர்ஷ்டத்(துக்கு)
நல்லதோர் பேற்றின் நலம்கிடைத் ததற்கு
நன்றி புகல்கையில்
நன்கதைக் கூறும்:
நலத்தையே பெற்றீர் நலம்சந் தித்தீர்
படைத்தவன் உமக்குப்
பயனுள தளித்தான்
இரக்கமுற் றிடுமவன் இனியதொன் றீந்தான்!
மனையாள் பிதா(வு)க்கு
மனம்நிறை நன்றிசொல்(க)
அதற்கும்மே லாக அன்னைக்கு நன்றிசொல்(க)
20
பெண்ணையித் தகையளாய்ப் பேணிய செயற்கு
மணப்பெண்இத் தகையளாய் மாண்பொடீன்
றதற்கு.
இருப்பவள் அருகில் இளம்புனி தப்பெண்
உம்முடன் இணைந்தவள் உள்ளொளி
நிறைந்தவள்
வாய்த்தவள் உமக்கு வண்ணமாம் வெண்மையள்
அழகுளாள் நும்காவ லதனுளே
வந்தவள்
உன்மருங் கிருப்பவள் உறுதிமிக் குடையவள்
காரிகை நின்அயல் கன்னமே
சிவந்தவள்
போரடி களத்திலே புதுப்பலப் பாவையள்
வைக்கோல்தூற் றிடவ(ல்)ல வனப்பான
வனிதையள் 30
துணிமணி அலம்பலில் துடிப்பான தையலாள்
துணிகளை
வெண்மையாய்த் தோய்த்திடும் திறனுளாள்
நூல்நூற்றல் நுட்பமே மேலாகக்
கற்றுளாள்
கருமமாம் துணிநெய்தல் தரமிகச் செயவலள்.
கைத்தறி அச்சொலி கனதொலை
ஒலிக்கும்
குயிலொன்று மலையுச்சி கூவிடும் ஒலிபோல்;
நுவல்மகள் கைத்தறி நூனாழி
கலவெனும்
காட்டுளே ஒருகீரி கலகலத் திடல்போல்;
நூல்சுற்றும் சில்சுற்றி
நுட்பமாய்ச் சுழலும்
அணில்வாயில் சுழல்கின்ற **கூம்புக்காய்
அதுபோல்; 40
அக்கிரா மத்தோர் அமைதியாய்த் துயின்றிலர்
நாட்டின்
மாந்தர்கள் நன்றாய்த் துயின்றிலர்
சட்டம்கைத் தறியினில் சடசட
ஒலியினால்
நுவல்மகள் கைத்தறி நூனாழி ஓசையால்.
மாப்பிள்ளை யாரே, வளர்இள
மையரே!
கணவரா னவரில் கவினுடை யவரே!
அரிவாள் கூர்மையாய் ஆக்குவீர்
உருக்கில்
சிறப்புமிக் கொருபிடி யதற்கிணைத் திடுவீர்
வைப்பீர் செதுக்கி
வாயிற் புறமதை
மரத்துக் கட்டையில் அடித்திறுக் கிடுவீர்;
50
பகலொளி வந்து பட்டொளிர் நேரம்
புற்றரை நிலத்துப் போவீர்
மாதுடன்
பார்ப்பீர் அங்கே படபடக் கும்புல்
கடின வைக்கோல் கலகலப்
பதனை
கிளர்கோ ரைப்புல் கிலுகிலுப் பதனை
**காரப் பூண்டுகள் கவின்மெது
வசைவதை
மேட்டு நிலங்கள் மிகுமட்ட முறலை
நாற்றுச் செடிகள் நனிமுறி
படலை.
மற்றொரு நாளிவ் வாறே வந்ததும்
நல்ல நூனாழி நங்கைக்
களிப்பீர் 60
அடர்பா(வு) பலகையும் அளிப்பீர்
பொருத்தமாய்
தரப்பா வோடுஞ் சட்டமும் தருவீர்
மெல்லநற் செதுக்கிய மிதிக்கும்
பலகையும்
கைத்தறிக் கான கனபொருள் தருவீர்
பூவையைக் கைத்தறிப் பொறியிலே
நிறுத்தி
பாவோடு பலகையைப் பைங்கரத் தளிப்பீர்:
அப்போநூ னாழி அசையும்
ஒலியெழும்
கைத்தறிப் பொறியும் கடகடத் தோடும்
கிராமம் கைத்தறிச் சத்தம்
கேட்கும்
அதையும் மிஞ்சும்நூ னாழியின் ஓசை.
70
வயதுறும் பெண்கள் வியப்பாய் நினைப்பர்
கிராமப் பெண்கள் கேட்பர்இவ்
வாறு:
'நேராய் யார்துணி நெய்வ(து) இப்போது?'
தகுந்ததோர் பதிலைத் தருவிர்அப்
போது:
'சொந்தஎன் அன்பவள் துணிகள் நெய்கிறாள்
இதயத் தினியவள் எழுப்புவள்
ஓசை;
எங்கெனும் துணியில் இயைஒழுங் கிலதா
அசைவில்நூ னாழி இழைதப்
பியதா?'
'இல்லை துணியில் ஒழுங்கழிந் திலது
அசைவில்நூ னாழி இழைதப்
பியதிலை: 80
நேர்நிலா மகளார் நெய்தது போல
பெருங்கதிர் மகளார்
பின்னிய வாறு
**தாரகைக் குலத்தின் தரமார் கைத்திறன்
விண்மீன் மகளின் மிகுவனப்
புச்செயல்.'
மாப்பிள்ளை யாரே, மதிப்புளச் சோதர!
கணவரா னவரில் கவின்படைத்
தவரே!
இப்போ திங்கிருந்(து) எழப்போ கின்றீர்
இப்போ திங்கிருந்(து) எழுகிறீர்
பயணம்
உமக்கு வாய்த்த ஒளிரிளம் பெண்ணுடன்
அழகு படைத்த அருங்கோ
ழியுடன் 90
**சிட்டுக் குருவியை விட்டிடீர்
அலைய
இசைபாடு மிந்த இன்சிறு **பறவையை
நன்நீர்க் கரைவழி நகரவிடாதீர்
வேலி
மூலையில் விடாதீர் செல்ல
அடிமரக் கட்டைகள் அமைந்த இடத்திலும்
பாறை
நிலத்திலும் படர விடாதீர்.
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
தொடரன்
பன்னையின் தோப்பிலும் இல்லை
நவில்நீர்க் கரைவழி நகர்ந்ததே யில்லை
வேலியின்
மூலைக் கேகிய தில்லை 100
அடிமரக் கட்டைகள் அமைந்த
இடத்திலும்
பாறை நிலத்திலும் படர்ந்ததே யில்லை.
மாப்பிள்ளை யாரே,
மதிப்புள சோதர!
கணவரா னவரில் கவின்படைத் தவரே!
இப்பெண் உமதவள் ஏகவி
டாதீர்
அன்புக் குரியளை அகலவி டாதீர்
திகழ்கோடி மூலையில் திரியவி
டாதீர்
அமைகோடி மூலையில் அலைய விடாதீர்.
என்றுமே தந்தையின் இல்லத்தி
லில்லை
முந்திய அன்னையின் இல்லத்தி லில்லை 110
திகழ்மூலை
கோடியில் திரிந்ததே யில்லை
அமைகோடி மூலையில் அலைந்ததே யில்லை;
இருப்பாள்
சாளரப் பீடம்மெப் போதும்
இருப்பாள் நிலத்தில் எழில்தரை மத்தியில்
மாலை
தந்தையின் மகிழ்ச்சி வடிவாய்
அதிகாலை அன்னை அன்புமா
யிருப்பாள்.
அதிர்ஷ்டமில் கணவ அனுதினம் வேண்டாம்
இந்தக் கோழியை என்றும்
அனுப்புதல்
**சேம்பங் கிழங்கு தேர்ந்திடிக் கும்உரல்
மரப்பட்டை ரொட்டிக்
கரைக்கும் மடைத்தொழில் 120
**வைக்கோல் அரைத்துமா ரொட்டி
சுடற்கு
இடித்திடத் தேவ தாரெழிற் பட்டை.
என்றுமே தந்தையின் இல்லத்தி
லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
சேம்பங் கிழங்கு தேர்ந்திடிக்
கும்உரல்
மரப்பட்டை ரொட்டிக் கரைக்கும் மடைத்தொழில்
வைக்கோல் அரைத்துமா
ரொட்டி சுடற்கு
பட்டைத்தா ரிடிக்கவும் படர்ந்தன ளேயிலை.
ஆயினும் நீரிக்
கோழியை அனுப்பலாம்
குவியலாய்த் தானியம் குவிந்துள்ள மேடு
130
ஒருகொள் கலத்தை வெறுமையாக் கற்கும்
தானியக் கலத்தில் தானியம்
பெறற்கும்
பருமனாய் ரொட்டி பலசுட் டெடுக்கவும்
தானியப் பானம் தரமாய்
வடிக்கவும்
தட்டிமாக் கோதுமை ரொட்டிகள் சுடவும்
உணவுக்கு மாப்பசை அமைக்கவு
மனுப்பலாம்.
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
இக்கோ ழிக்கு இந்நிலை
வேண்டாம்
எங்கள்இவ் வாத்துக் கிந்நிலை வேண்டாம்
ஏங்கித் துயருற் றிவளழ
வேண்டாம் 140
ஒருக்கால் துயருறும் ஒருநிலை வந்தால்
வனிதைக்
கேக்கமும் வருத்தமும் வந்தால்
புகல்பழுப் புப்பரி பூட்டுமேர்க் காலில்
அல்லது
வெள்ளைக் கலங்கா ரம்செய்(க)
தந்தையின் இல்லம் தையலைக் கொணர்க
அவளே பழகிய
அன்னையின் இல்லம்.
இக்கோ ழிக்கு இந்நிலை வேண்டாம்
இசைபாடு **பறவைக்
கெப்போதும் வேண்டாம்
நீர்பெறும் அடிமையாய் நினைக்கவும் வேண்டாம்
கூலிக்கு
வந்தளாய்க் கொள்ளவும் வேண்டாம் 150
தடைபோட வேண்டாம் களஞ்சியக்
கூடம்
பூட்டவும் வேண்டாம் புறவெளி நிறுத்தி!
என்றுமே தந்தையின் இல்லத்தி
லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
தம்முடை அடிமையென் றெண்ணிய
தில்லை
கூலிக்கு வந்ததாய்க் கொண்டது மில்லை
தடைபோட்ட தில்லைக் களஞ்சியக்
கூடம்
பூட்டவு மில்லைப் புறவெளி நிறுத்தி.
கோதுமை ரொட்டியைக் கொள்துண்
டாக்குவள்
கோழிமுட் டைகளைத் தேடிப் பொறுக்குவள் 160
பாற்கலங்
களையெலாம் பார்த்தே அத்துடன்
கலங்களில் மதுவையும் கண்கா ணிப்பாள்
காலையில்
திறபடும் களஞ்சியக் கூடம்
மாலையில் பூட்டுதல் மட்டுமே
வழக்கமாம்.
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
கணவரா னவரில் கவின்படைத்
தவரே!
பக்குவ மாகவே பார்த்தால் பெண்ணைநீர்
நினைவில்அவ் வளவும் நிற்கும்
நன்மையாய்:
மாமனார் வீடு நீர்வரும் வேளையில்
அன்பு மாமியின் அகம்வரு
வேளையில் 170
உண்டிடச் சிறந்த உணவுகள் கிடைக்கும்
உண்டிட உணவுடன்
அருந்திடப் பானமும்
ஆனஉம் குதிரைக் கவிழ்த்தலங் காரம்
தொழுவம் அதனைத் தொட்டே
கொணர்ந்து
உண்ணவும் அருந்தவும் உகந்தெலா மீந்து
**உதவலாம் கூலப்புல்
லரிசியோர் பெட்டியும்.
எங்கள் பெண் பற்றி இவ்விதம் சொ(ல்)லாதீர்
இசைபாடு
மெம்சிறு **பறவையைப் பற்றி
உறவினர் அவட்கு உற்றிலர் எ(ன்)னாதீர்
உயர்சுற்
றத்தார் இலர்என் றுரையீர்; 180
எமதிப் பெண்மணிக் கிருக்கிறா
ரனைவரும்
உயர்சுற் றத்தார் உறுபெரு மினசனம்
**ஒருபடி **யவரை உயர்விதை
விதைத்தால்
ஒருவர் பெறுவது ஒருமணி மட்டுமே!
ஒருபடி சணல்விதை உவந்தே
விதைத்தால்
ஒருவர் பெறுவது ஒருநார் மட்டுமே!
அதிர்ஷ்டமில் மணாள, அறவே
வேண்டாம்!
சுந்தரி இவளைத் துன்புறுத் தாதீர்
அடிமைச் சவுக்கால் அறிவுரை
வேண்டாம்
தோற்சவுக் காலிவள் தேம்பிட வேண்டாம் 190
ஐந்துசாட்
டைகளால் அழவிட வேண்டாம்
குடிசையின் வாசலில் குழறவைக் காதீர்
என்றுமே இவளுக்
கிவ்விதம் நேர்ந்ததில(து)
தாதையின் வீட்டிலோர் போதுமே நிகழ்ந்தில(து)
அடிமைச்
சவுக்கால் அறிவுரை புகன்றிலர்
தோற்சவுக் காலிவள் தேம்பிட வைத்திலர்
ஐந்துசாட்
டைகளால் அழவும் வைத்திலர்
குடிசையின் வாசலில் குழறவும் வைத்திலர்.
அவளின்
முன்னால் சுவர்போல் நிற்பீர்
நிற்பீர் கதவின் நிலைபோல் அவள்முன்
200
அடிக்கும் மாமியின் அல்லல்வை யாதீர்
மாமனார் ஏச்சால் மலங்கவைக்
காதீர்
வேறெவ ராலும் வெறுக்கச்செய் யாதீர்
அயல்வீட் டார்குறை கூறவை
யாதீர்!
அடிக்கலாம் என்று அறைந்தனர் வீட்டார்
துன்புறுத் தலாமெனச் சொல்லினர்
மறுசிலர்
ஆயினும் பெண்ணைநீர் அடிக்கவே முடியா
ஏழையாள் துன்புற இதயம்நீர்
தாங்கீர்
ஆண்டொரு மூன்று அவட்காய் இருந்தீர்
வெகுநாள் அவளை விரும்(பி)எதிர்
பார்த்தீர். 210
மங்கைக் கறிவுரை வழங்குக,
மாப்பிள்ளாய்!
**அப்பிள் பழம்போல் அவள்கற் பிப்பீர்
அரிவைக் கமளி(யில்)ஆ
லோசனை புகல்வீர்
கதவின் பின்புறம் கற்பிப் பீர்பெண்
ஓராண்(டு) காலம் ஓரிடம்
பயிற்றுவீர்
வாய்ச்சொலால் முதலாம் ஆண்டுகற் பிப்பீர்
இரண்டாம் ஆண்டுகண்
சிமிட்டால் புகட்டுவீர்
மூன்றில் கால்நிலத் தூன்றிப் பயிற்றுவீர்.
காரிகை
இனைத்தையும் கவன மெடாமல்
அவதான மின்றி அசட்டை செய் திட்டால்
220
**கோரை னத்திலோர் கொழும்புல் பறிப்பீர்
**பரிவால் ஒன்றைப் பற்றையில்
ஒடிப்பீர்
அதைக்கொண் டவளுக் கறிவுரை புகல்வீர்
நான்காம் வருடம் நாரிக்
கோதுவீர்
பரிவால் கொண்டு பைய அடிக்கலாம்
குற்றுவீர் மங்கையைக் கோரையின்
நுனியால்
ஆயினும் சவுக்கால் அடித்த லாகாது
கோல்கொ(ண்)டு திருத்துதல் கூடா
தரிவையை.
காரிகை இன்னும் கவன மெடாமல்
அவதானம் சற்றும் அவள்கொளா
திருந்தால் 230
பற்றையில் ஒருசிறு குச்சியை ஒடிப்பீர்
மிலாறுவை
ஒடிப்பீர் வெங்கான் பள்ளம்
மடிப்பில்மேற் சட்டையில் மறைத்ததைக்
கொண்டு
அயல்இல் மனிதர் அறியா(து) வருவீர்;
நச்சினாள் பார்க்கவே குச்சியைக்
காட்டுவீர்
ஆசைத்துக் காட்டுவீர் அடித்தல் ஆகாது.
காரிகை இன்னும் கவன
மெடாமல்
அவதானம் சற்றும் அவள்கொளா திருந்தால்
கோல்கொண் டவட்கு கூறுவீர்
அறிவுரை
மிலாறுவின் கிளையால் நடத்துவீர் பாடம் 240
நான்கு
சுவர்களின் நடுவில் நடத்துவீர்
கூறுவீர் பாசியால் **மூடிய அறையிலே
அடித்திடல்
புற்றரை மேட்டி லாகாது
அகல்வயற் காட்டிலும் அடித்த லாகாது:
சத்தமும் கிராமம்
சாரும் அவ்விதம்
பக்கவீட் டுக்குப் படர்ந்திடும் கலகம்
அரிவையின் அழுகை
அயல்வீ டடையும்
குழப்பம் பெரிதாய்க் கொழுங்கா டார்ந்திடும்.
என்றும்
தோள்களில் வெப்பம் ஏற்றிடும்
மெல்லியள் பின்புறம் மென்மையா கட்டும்
250
கண்ணிலோர் போதும் தண்டனை ஆகா(து)
அவ்விதம் காதிலும் அறைதலா
காது:
திரட்சியாய் ஏதெனும் புருவத் தேற்படில்
கண்களில் நீலமாய்க் கட்டிகள்
வந்தால்
மைத்துனர் அதனை வந்தாய்ந் திடுவார்
மாமனார் ஏதெனும் மனத்தெண்
ணிடுவார்
கிராமத் துழவோர் இருகண்(ணால்) பார்ப்பார்
நங்கையர் கிராமத்(தில்)
நகைப்பரிவ் விதமே:
'சண்டைக் கிவளெங் கேனும் போனளோ
போரில் சமரில் போய்ப்பங்
கேற்றளோ 260
அல்லது ஓநாய் அருகுபோய்க் கிழித்ததோ
அல்லது கரடியும்
அறைந்ததோ காட்டில்
அல்லது கீறிய ஓனாய் கணவனோ
கணவனே காட்டிக் கரடியா யினனோ?'
"
அடுப்பிலே முதியதோர் ஆடவன் இருந்தான்
இருந்தான் தேசாந் திரியவன்
கணப்பில்
அடுப்படி முதியவன் அங்கே சொன்னான்
சொன்னான் தேசாந் திரியவன்
கணப்பில்:
"ஏழைமாப் பிள்ளாய், இவ்விதம் செய்யேல்,
மாதவள் கருத்து மதிப்புத்
தராதீர் 270
மகளிரின் கருத்து **முகிற்புள்
நாக்கு
அதிர்ஷ்டமில் பயல்நான் முடித்ததைப் போல!
வாங்கினேன் இறைச்சி
வாங்கினேன் ரொட்டி
வாங்கினேன் வெண்ணெய் வாங்கினேன் 'பீரு'ம்
எல்லா வகையாம்
நல்மீன் வாங்கினேன்
பலபல சுவையுறும் பல்பொருள் வாங்கினேன்
சொந்தஎன் நாட்டில்
தோன்றிய 'பீரு'ம்
அயல்நாட்(டுக்) கோதுமை அதையும் வாங்கினேன்.
ஆயினும்
நன்மை(யாய்) ஆனதொன் றில்லை
பயனுள கருமம் செயலெதும் நிகழ்ந்தில;
280
அரிவையும் வீட்டின் அகப்புறம் வந்திடில்
புரிகுழல் பிய்ப்பவள் போல
வருவளே
வதனம் மாற்றி மறுவடி வாக்குவள்
உருட்டி விழிகளைத் திரட்டியே
நோக்குவள்
ஏசுவள் ஆத்திரம் எப்போதும் கொ(ண்)டே
வெறுப்புறும் வார்த்தைகள்
புறப்படும் அக்கணம்
உடலால் பருத்த உலுத்தனென் றழைத்தாள்
மரமண் டையென
வார்த்தையால் குரைத்தாள்.
முறையொன்(று) புதிதாய் மூண்டது
மனத்தில்
வகையுறக் கண்டனன் மறுவழி யொன்றை: 290
மிலாறுக்
கிளையை முறித்தஅவ் வேளை
அருமப் பறவையென் றணைத்திட வந்தாள்;
சூரைச் செடியின்
தொடுமுடி யொடிக்கையில்
அன்பே யென்று அவள்தலை குனிந்தாள்;
அலரிச் செடியின்
தடியினால் வைக்கையில்
கழுத்தை யணைத்தாள் கட்டி பிடித்தாள்."
பேதையிப்
போது பெருமூச்செறிந்தாள்
கடுமூச் செறிந்து களைத்துச் சோர்ந்தாள்
அவள்பின்
அழுது விழிநீர் விட்டாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
300
"மற்றயோர் புறப்படும் மணிப்பொழு தணைந்தது
மற்றயோர் காலமும் நேரமும்
வந்தது
என்புறப் பாட்டு இரும்பொழு தணைந்தது
என்கால நேரம் இங்குவந்
தடுத்தது
பிரிந்து புறப்படல் பெருந்துய ராயினும்
விடைபெற் றேகுமிவ் வேளையும்
நேரமும்
கீர்த்திகொள் இந்தக் கிராமத் திருந்து
அழகாய் அமைந்தஇவ் வகல்தோப்
பிருந்து
வனப்பாய் நானும் வளர்ந்தவிவ் விடத்தில்
இனிப்பாய்ச் சிறப்பாய்
எழுந்தவிவ் விடத்தில் 310
வளர்ந்து வந்தஎன் வாழ்நாள்
முழுவதும்
குழந்தைப் பருவம் கழித்தநாள் முழுவதும்.
இதற்குமுன் என்றுமே
எண்ணிய தில்லை
என்றும்என் வாழ்நாள் நம்பிய தில்லை
இனிவிடை பெறுவனென் றெண்ணிய
தில்லை
பிரிந்துபோ வேனெனத் தெரிந்துநம் பியதிலை
அரியஇக் கோட்டையின் அயற்புறத்
திருந்து
பரந்த இம்மேட்டின் படர்புயத் திருந்து;
இப்போ நினைக்கிறேன் என்விடை
பெறலை
இப்போ(து) பிரிந்து ஏகல்நம் புகிறேன் 320
வெறுமையா யினபிரி
யாவிடைச் சாடிகள்
விடைபெறும் 'பீரு'ம் முடிந்தது குடித்து
வண்டியும் விரைவில்
வழிதிரும் பிடலாம்
முன்புறம், வெளியே பின்புறம் வீட்டே
ஒருபுறம் தந்தையின்
உயர்களஞ் சியவறை
மறுபுறம் தொழுவம் வழிபார்த் திருக்கும்.
இப்போ(து)
பிரிந்துநான் எதைக்கொண் டேகுவேன்
பேதைப் பெண்நான் பிரிவிடைச்
செல்கையில்
தாய்ப்பால் விலைக்குத் தருவது எதைநான்
அத்துடன் தந்தையார்
ஆற்றுநன் மைக்கெலாம் 330
சகோதரன் அன்புக்(கு) தருவது
எதுகொல்
சகோதரி காட்டிய கனிந்த பண்புக்கு?
தந்தாய், உமக்குச் சாற்றுவேன்
நன்றி
முன்னாள்(என்) வாழ்வு முழுதும் மகிழ்ந்ததால்
சென்றநாட் களில்நான்
உண்டஊண் அதற்கு
சிறப்பாய்க் கிடைத்த சிற்றுண்(டி) வகைக்கு.
தாயே, உமக்குச்
சாற்றுவேன் நன்றி
இளமைதா லாட்டில் எனைவளர்த் ததற்கு
ஏந்தியே சிறுநாள்
எனைவளர்த் ததற்கு
முலைப்பா லுட்டி முன்வளர்த் ததற்கு.
340
சோதரா, அடுத்துநான் சொல்லுவேன் நன்றி
என்னருஞ் சோதரா, என்னருஞ்
சோதரி,
குடும்பத் தோர்க்கெலாம் கொடுப்பேன் திருப்பி
என்னோடு வளர்ந்த எல்லா
ருக்கும்
என்னோடு வாழ்ந்த எல்லா ருக்கும்
வாழ்வில் கூடிநான் வளர்ந்தஎல்
லார்க்கும்.
என்இன் தந்தையே இப்போ(து) வேண்டாம்
என்அன் பன்னையே இப்போ(து)
வேண்டாம்
என்பெருஞ் சுற்றத்து எவருஞ்செய் யாதீர்
இரும்புகழ் பெற்றஎன் இனசனக்
கணத்தில் 350
மனதிலே யாருமே வருத்தம்
கொள்ளாதீர்
இனிப்பெரும் துயருக்கு இடம்கொடுக் காதீர்
வேறொரு நாடுநான்
ஏகவிருப் பினும்
பிரிந்து புறப்பட்டுப் போக விருப்பினும்!
இயற்றியோன்
பருதி என்றுமே ஒளிரும்
இயற்றியோன் மதியும் என்றுமே திகழும்
சுவர்க்கத்து
விண்மீன் சுடரும்எப் போதும்
விரிந்தெங்கும் பரவும் விண்மீனின்
கூட்டம்
விண்ணின்வே றேயோர் விரிபக் கத்திலும்
வையத்தின் வேறோர் வளர்பக்
கத்திலும் 360
தந்தையார் முற்றம் தனில் மட்டுமல்ல
வளர்ந்தஎன்
தோட்டம் மட்டுமே யல்ல.
இப்போ(து) புறப்பட் டிங்கிருந் தகல்வேன்
அன்பாய்நே
சித்த அகத்தினி லிருந்து
தந்தையார் அமைத்தவித் தனியகத் திருந்து
கருணையன்
னையின்நிறை களஞ்சியத் திருந்து;
என்சதுப் புத்தரை எழில்நிலம்
விடுகிறேன்
என்புற் றரைமேட் டியைபுவி விடுகிறேன்
என்வெண் புனல்விட் டிங்கே
பிரிகின்றேன்
மணல்நிறை என்புனல் வளர்கரை விடுகிறேன் 370
கிராம
மதில்வாழ் கிழவிகள் குளித்திட
மந்தைமேய்த் திடுமிடை மாந்தர்கள்
சிந்திட.
சதுப்பு நிலத்தை மிதித்திடு வோர்க்கும்
அலைந்திடு வோர்க்கும்
நிலங்கள் விடுகிறேன்
இளைப்பாறி ஏகுவோர்க் கிரும்**பூர்ச்ச மரங்களை
உலாவித்
திரிவோர்க் குயர்பைம் புற்றரை
அடிவைத்(துத்) திரிவோர்க் ககல்வே
லிப்புறம்
பயணித்துச் செல்வோர்க்(கு) பாதைமூ லைகளை
நடந்தோடிச் செல்வோர்க்(கு)
நல்லநீள் முற்றம்
நெடுஞ்சுவர்ப் பக்கம் நிற்போர்க்(கும்) விடுகிறேன்
380
சுத்தம்செய் வோர்க்கு நிலத்தடிப் பலகையை
பெருக்கிவைப் போர்க்கு
பெருந்தரைப் பகுதியை
கலைமான் ஓட வயல்களை விடுகிறேன்
**சிவிங்கிகள் திரியத்
திகழ்வனப் பகுதிகள்
வாத்துகள் வாழ வளமார் புல்வெளி
பறவைகள் ஓய்வுறப் பாங்குள
சோலைகள்.
இப்போ(து) புறப்பட் டிங்கிருந் தகல்வேன்
புறப்பட் டேகும்
பிறிதொரு துணையொடு
இலையுதிர் கால இரவணைப் புக்கு
பசிய வசந்தப் பனித்திண்
பரப்பு(க்கு) 390
பனித்திண் மத்திலே படிசுவ டெதுமிரா(து)
பாதைப்
பரப்பினில் பாதச் சுவடிரா(து)
பாவாடை நூலிழை பனித்துளி களிலிரா(து)
ஆடைக்
கரைச்சுவ(டு) அப்பனி யிலேயிரா(து).
பின்னர்நான் திரும்பிப் பிறந்தஇல்
வருகையில்
விருந்தாளி யாயென் வீடு வருகையில்
என்தாய்க் குக்குரல் எதுவுமே
கேளா(து)
அழுமொலி தந்தை அறியவும் வாய்ப்பிலை
மூலையில் நின்றுநான் முனகிப்
புலம்பினும்
அவர்களின் தலைமுன் னாலே பாடினும்;
400
இளையபுல் மேடு எழுந்துயர்ந் திருக்கும்
சூரையின் நாற்று துளிர்த்துயர்ந்
திருக்கும்
எனைவளர்த் தவளின் இதவுடல் தோலிலே
எனைச்சுமந் தவளின் எழில்முகப்
பரப்பிலே.
பின்னர்நா னிங்கு பெயர்ந்திடும் வேளை
மிகநீண் டகன்று
விரிந்தவிம் முன்றிலில்
அடுத்தவர்க் கென்னை அறிமுக மிராது
ஆயினும் என்னையே
அறியுமிவ் விருபொருள்
ஒன்று வேலியில் தாழ்வரிச் சுமரம்
வயல்வெளித் தூர(வேலி)
மரம்மற் றொன்று 410
சிறுமியாய் இருக்கையில் சீராய்
நட்டவை
கன்னிகை யானபின் கைபட நட்டவை.
வளர்த்தனள் அன்னை மலட்டுஆ
அறியும்
அதற்குநீர் இளமைப் பருவத் **தருத்தினேன்
கன்றா யிருக்கையில் கவனமாய்
வளர்ந்துளேன்
கண்டால் கிட்டக் கதறியோ டிவரும்
குப்பை நிறைந்த தோப்பின்
மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால நிலத்தில்
அப்பசு வெனையே அறியு
மெப்போதும்
இந்தவில் லத்திலே இருந்ததோர் மகளென.
420
தந்தையின் கிழட்டுத் தனிப்பொலிக் குதிரை
உணவதற் கூட்டிய(து) உண்டிள
வயதில்
அளித்துளேன் புல்ஊண் அரிவையா யானபின்
கண்டால் அருகே கனைத்தோடி
யேவரும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால
நிலத்தில்
என்றுமப் பரிதான் எனையே அறியும்
இந்தவில் லத்திலே இருந்ததோர்
மகளென.
நித்திய வயதில் நற்சோதரன்நாய்
ஊட்டிவந் ததுவூண் உண்டிளம்
பருவம் 430
கற்பித்த துண்டு கன்னிகை யானபின்
கண்டால் குரைக்கும்
கடிதிலே யருகுறும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த
குளிர்கால நிலத்தில்
அந்தநாய் எனையே அறியு மெப்போதும்
இந்தவில் லத்திலே
இருந்ததோர் மகளென.
ஏனைய எவையும் எனையறி யாவே
திரும்பிநான் என்இல்
சேரும்வே ளையிலே
தோணிகள் கரைபுகும் தொல்லிட மாயினும்
முன்னர்நான் வாழ்ந்தஇந்
நன்னிட மாயினும் 440
வெண்ணிற மீனினம் விளையாடி யேவரும்
பலவலை
விரியும் பரந்தநல் இடத்திலும்.
விடைபெறு கின்றேன், வீடே, போய்வர!
பலகைகள்
கூரை பரப்பிய இல்லமே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல்
நற்றிறச் செயலாம்.
வாயிற் கூடமே, போய்வர விடைதா!
பலகைகள் பரப்பிப் பதித்தமண்
டபமே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல் நற்றிறச்
செயலாம். 450
முன்றிலே, போய்வர முழுவிடை பெறுகிறேன்,
நிறைந்த
பேரி வளர்ந்துள முன்றிலே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப்
பயிலல் நற்றிறச் செயலாம்.
அனைவரும் நல்விடை அருளினீர் போய்வர,
நிலத்தும்,
சிறுபழம் நிறைவனத் திருந்தும்
மலர்ந்திடும் பூக்கள் வழிகரை
யிருந்தும்
பசும்புல் வளர்புதர்ப் பற்றையி லிருந்தும்
நூறுபல் தீவுகொள்
ஏரிகளி லிருந்தும்
நிதம்வெண் மீனுலா நீரிணை யிருந்தும் 460
ஊசி
யிலைமர உயர்மே டிருந்தும்
மிலாறுவின் தழைகிளை முழுதிலு
மிருந்தும்!"
அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
வனிதையைப் பற்றினன்
வண்டியி லேற்றினன்
சாட்டையால் குதிரையைச் சாடி யடித்தனன்
உரைத்தான் ஒருசொல்
உரைத்தான் இவ்விதம்:
"ஏரிக் கரைகளே, இதோவிடை பெற்றேன்!
ஏரிக் கரைகளே,
எழில்வயல் எல்லைகாள்!
உயர்மலை வளர்ந்த ஊசி(யி)லை மரங்காள்!
தாருவின்
தோட்டத்து நீடிய மரங்களே! 470
வீட்டின் பின்**சிறு மிகுபழச்
செடிகளே!
பாதைக் கிணற்றடிச் சூரைச் செடிகளே!
தரையெலாம் பரந்த சிறுபழக்
காம்புகாள்!
சிறுபழக் காம்புகள் திகழ்புல் தாள்களே!
அலரிப் புதர்களே,
அலர்தாரு வேர்களே!
பூர்ச்சந் தழைகளே, பொன்மிலா றுரிகளே!"
அதன்பின்
கொல்லன் அவன்இல் மரினன்
வடபால் முற்ற மதைவிட் டகன்றான்
பிள்ளைகள் நின்று
பிரிபாட் டிசைத்தனர்
சிறார்கள் இசைத்துச் செப்பினர் இவ்விதம்:
480
"இனியதோர் கரும்புள் இவ்வழிப் பறந்தது
வியன்வனத் தூடாய் விரைந்தே
பறந்தது
வாத்தையெம் மிடத்தால் மயக்கிப் பிரித்தது
வளர்சிறு பழத்தினை
மருட்டிப் பறித்தது
அப்பிளை எம்மைவிட் டதுஎடுத் தகன்றது
புனல்மீ னெடுத்தது
போட்டது தரையிலே
சிறுபணம் காட்டி அவளைஏ மாற்றிய(து)
வெள்ளிப் பணத்தினால்
வஞ்சக மிழைத்தது;
யாரெமை யிப்போ(து) நீர்க்கொண் டேகுவார்?
ஆற்றிடைப் படுத்த
ஆர்தான் இங்குளார்? 490
தண்ணீர்க் கலயம் தாம்ஓய்ந்
திருக்குமே
**காவுதண் டங்கள் சோர்வடைந் திருக்குமே
பலகைகள் துடைக்கப் படாதங்
கிருக்குமே
நிலம் பெருக்காமல் நலமற் றிருக்குமே
**குவளை விளிம்புகள்
அழுக்கடைந் திருக்குமே
கைப்பிடிச் சாடியில் கறைபடிந் திருக்குமே!"
அவனே
கொல்லன் அவ்வில் மரினன்
தன்பரு வத்துத் தையல் தன்னுடன்
தனது வழியில்
தான்விரைந் தேகினன்
வடபால் நிலத்து வளர்கரைப் பாதையில்
500
நறைபோல் இனிய நிறைநீ ரிணைவழி
மணல்நிறை மேட்டை வாகாய்க்
கடந்து;
சிறுகல் சலசல மணல் கலகலக்க
வண்டி உருண்டது வளர்வழி
ஒளிர்ந்தது
பரியதன் இரும்புப் பட்டி ஒலித்தது
மிலாறுவின் சறுக்கு வில்கட
கடத்தது
வளைந்த சலாகை மரம் படபடத்தது
பழமரப் பட்டம் முழுதா
யசைந்தது
சாட்டையின் சுழற்சியில் சதாஒலி எழுந்தது
செப்பிலாம் வளையம் சேர்ந்தே
யசைந்தது 510
உயர்குலப் புரவி ஓடிய போதினில்
வெண்சுட்டிப் புரவி
விரைந்தவே ளையிலே.
ஒருநாள் சென்றனன் இருநாள் சென்றனன்
மூன்றாம் நாளும்
முன்விரைந் தேகினன்
கையொன் றுபரிக் கடிவ()ளம் பிடித்தது
மறுகை மங்கையின்
மருங்கினை யணைத்தது
ஒருகால் வண்டியின் ஒருபுறத் திருந்தது
தளவிரிப் பின்கீழ்
மறுகால் இருந்தது
பரியும் விரைந்தது பயணம் தொடர்ந்தது
நீள்நாள் கழிந்தது
நெடுந்தொலை குறைந்தது 520
மூன்றா வதுநாள் முன்வரும்
போதினில்
சூரியன் கீழே தொடர்ந்துசெல் நேரம்
கொல்லனின் இல்லம் நல்விழித்
தெரிந்தது
*இல்மா(வின்) இல்லமும் எதிர்த்தோன் றியது:
நூலிழை போல மேலெழுந்
ததுபுகை
தடித்த புகையும் தான்வெளிப் போந்தது
இல்லதன் உட்புறத் திருந்தே
வந்தது
மேகத்தை நோக்கி மேலெழுந் ததுவே.