|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம் முன்னுரை > அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி > பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' > சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் > 'நற்போக்கும்' 'முற்போக்கும்' > 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் > சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் > சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் > பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
20th Century Eelam Tamil Literature at Project Madurai
![]() EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam
To view the Tamil text correctly you
need to set up the following: i). You need to have Unicode fonts
containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi,
Code2000, UniMylai,...) installed on your computer and the OS
capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen
as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha
font may be downloaded from
here] 1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி 2. பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' 3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் 4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்' 5. 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் 6. சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் 7. சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் 8. பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு 3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் 'முற்போக்கு' அடிப்படையில் பார்க்கும்போது கைலாசபதி செய்த இலக்கியத்
தொண்டின் முக்கியத்துவம் சுருங்கிவிடுகிறது என்று முன்பு கூறினேன்.
அவருடைய தனிப்பட்ட குறைகளை ஆராய்வதற்கு முன்னர் அதை விளக்குவது நன்று.
பழைய தமிழ் இலக்கிய அறிவு மட்டுமல்ல மற்ற நாட்டு இலக்கியங்களைப் பற்றித் தொ¢ந்திருக்கும் ஓர் ஒப்பிலக்கியப் பார்வையும் தேவை என்ற நல்ல கொள்கையும் அதனால் தேயத் தொடங்கிவிட்டது. பின்பு, அது பின்னர் வந்த பிஞ்சுகளிடம் அகப்பட்டபோது தேய மட்டும் செய்யவில்லை, தேய்ந்து சிதைந்து கோரமாகியும் விட்டது. 'தினகரனி'ல் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசி¡¢யர்' என்ற தொடரை இப்போ நினைத்துப் பார்த்தால் கைலாசபதி கொண்டுவந்த பார்வையின் ஆரம்ப நிலையையும் அது பின்னர் அடைந்த தி¡¢பையும் யூகிக்கலாம். அதோடு, கைலாசபதியும் சா¢, சிவத்தம்பியும் சா¢, அவரோடு ஒட்டிவந்த மற்றவர்களும் சா¢, ஆரம்பத்தில் கட்சி இலக்கியத்தில் அவ்வளவு அக்கறைப்பட்டிருக்கவில்லை என்பதையும் உணர முடியும். அந்த வியாதி, அவர்களோடு ஒட்டிக்கொண்ட பழைய 'முற்போக்கு' எழுத்தாளர்களிடமிருந்துதான் தொற்றியிருக்கிறது. கோர்க்கி, சொலொக்கோவ், ஹெரன்பேர்க், கொன்ஸ்ரான்டின் பெடின், லியோனிட் சொபலோவ், லியோனிட் லெனோவ் போன்ற ரஷ்ய சோஷலிஸ்ட் யதார்த்த நாவலாசி¡¢யர்களைப்பற்றியும் 'நான் விரும்பும் நாவலாசி¡¢யர்' தொடா¢ல் எழுதப்படவில்லை. கைலாசபதி, ஜொய்ஸைப்பற்றித்தான் எழுதினார். ஜொய்ஸ.¢ற்கும் 'முற்போக்கு' வாதத்திற்கும் எட்டாம் பொருத்தம். இன்றுவரை அவரை ரஸ்ஸ.¢ய எழுத்தாளர் சங்கம் ஏற்றுக்கொண்டதில்லை. அவர்களின் சுலோகப்படி ஜொய்ஸ் மேற்கத்தைய அழிவின் அல்லது அழியும் மேற்கத்தைய நாகா¢கத்தின் (Decadent West) பிரதிபிம்பம் தான். காவலூர் ராசதுரை எமிங்வேயைப்பற்றித்தான் எழுதினார். எமிங்வே பா...¢...த்துக்கு எதிராகப் போராடத்தான் செய்தார். ஆனால்,
அதற்காகவேதான் அவர் எந்தக் கட்சிக்குள்ளும் தன்னைப் புகுத்திக்கொள்ள
விரும்பவில்லை அதுவும் இயந்திரம் போன்று இறுகித் தனிமனிதனைச்
சாகடித்துவிடும் அமைப்புக்கும் கட்சிக்கும் எமிங்வே ஒரு முழு விரோதி.
அதை ரஸ்ஸ.¢ய 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கே ஞாபகமூட்ட அவர் தவறியதில்லை.
ஆனால், சிவத்தம்பி அவர்களை விட்டு விட்டு கோல்ட்வெல்லைத்தான் எடுத்தார். அ.ந. கந்தசாமி கூட சோலாவைப்பற்றித்தான் எழுதினார். சோலா இயற்கைவாதியே ஒழிய சோ...லிஸ்ட் யதார்த்தவாதியல்ல. அதோடு அப்படி ஒருவரைத்தான் தேடவேண்டுமென்றால் மார்க்ஸே. புகழ்ந்த பால்சாக்கைப் பிடித்திருக்கலாம். ஆனால் அவர் சோலாவைத்தான் பிடித்தார். பொன்னுத்துரை மொராவியாவைப் பற்றி எழுதினார். க்னேஷியஸ் சைலோனைப் பற்றி அல்ல. சிவகுமாரன் டிக்கன்ஸைப்பற்றி எழுதினார். எனவே கைலாசபதிக்கும் அவரது குழுவுக்கும் ஆரம்பத்தில் திட்டவட்டமான கட்சிக்குள்ளாக லக்கியத்தைப் பார்ப்பதை விடகட்சிக்கு வெளியால் பார்க்கும் ஒரு பார்வைதான் அதிகமாகத் தொ¢ந்திருக்கிறது. சோ...லிஸ்ட் யதார்த்த இலக்கியத்தையும் அந்த ரக எழுத்தாளர்களையும் பற்றி வடிவாக இவர்கள் தொ¢ந்திருக்கவில்லை என்று கூடச் சொல்லாம். இப்பவும் கூடதே நிலைதான். அதனால் அப்படி ஒரு மெல்லிய சாயல் தொ¢யும் மேற்கூறிய நாவலாசி¡¢யர்களில் திருப்திப்பட்டிருக்கிறார்கள். இளங்கீரன் மட்டும் (அவர் பழைய 'முற்போக்கு'க் கட்சி எழுத்தாளர், கைலாசபதியோடு வந்த புதிய விமர்சகர் அல்ல என்பது வித்தியாசத்துக்கு¡¢ய காரணத்தை விளக்கும்.) 'முற்போக்கு' என்று சொல்லக்கூடிய தகழி சிவசங்கரம்பிள்ளையைப் பற்றி எழுதினார். ஆனால் மேற்கத்தைய தத்துவம், மனோவியல் போன்றவற்றைத் தொ¢ந்து எழுதும் தகழியை, அவை எதுவும் தொ¢யாத இளங்கீரனால் பு¡¢ந்துகொள்ள முடியவில்லை. 'செம்மீன்'ப்பற்றி இளங்கீரனுக்கு எதுவும் விளங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ('செம்மீன்', 'நீதியே நீ கேள்', 'குட்டி' ஆகியவற்றைப்பற்றி 'மூன்று முற்போக்கு நாவல்கள்' என்ற தலைப்பில் ஓர் விமர்சனம் எழுத நான் எண்ணியுள்ளேன். அப்போ அதை இன்னும் விளக்க முடியும்.) எனவே, கைலாசபதியும் அவரது விமர்சக சகாக்களும் பழைய 'முற்போக்கு' எழுத்தாளர்களுடன் கொள்கைப்பிணைப்பு ஏற்படுத்தியபோது ஒரு பார்வைக் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேலோட்டமாகவாவது அவர்களுக்குத் தொ¢ந்திருந்த மேற்கத்தைய இலக்கியத்தையும் இலக்கியாசி¡¢யர்களையும் போல், சோஷலிஸ்ட் யதார்த்த இலக்கியாசி¡¢யர்களையும் அந்த ரக எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்கள் தொ¢ந்திருக்கவில்லை. பழைய 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கும் கூட 'முற்போக்கு' என்ற சுலோகத்தில் இருந்த மோகத்திற்கு ஏற்ப அந்த இலக்கியத்தைப் பற்றியோ எழுத்தாளர்களைப் பற்றியோ எந்தத் தரமான அறிவும் இருக்கவில்லை. அதோடு வேறு வெளிநாட்டு இலக்கியங்களைப் பற்றிய ஞானமும் இவர்களுக்குச் சூனியந்தான். எனவே, கடைசியில் இரு சாரரும் சேர்ந்து 'முற்போக்கு இலக்கியம்' என்று சொல்வதன் மூலம் ஒரு பார்வைக் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒருவகை வலுவற்ற improvised 'முற்போக்கு' இலக்கியம். அதில் ஆரம்பத்தில் கைலாச பதிக்கும் அவரது சகாக்களுக்கும் தொ¢ந்த கட்சியைத் தாண்டிய ஒரு பரந்த பார்வையுமில்லை; சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் என்பதற்கு¡¢ய உண்மையான அர்த்தமுமில்லை. ஆனால், அதேசமயம் இரண்டும் சிதைந்துபோய்க் கலந்தும் காணப்படுகின்றன. ஒருவகைச் சாம்பாறு. அதனால்தான் அவர்களை விட அதிகம் தொ¢ந்த கனக ரத்தினாவை அத்தனை சீக்கிரத்தில் அவர்கள் மறைமுகமாக முற்போக்கு இலக்கியக் கூட்டிலிருந்து துரத்திவிட்டனர். இல்லாவிட்டால் தங்கள் பொட்டுக்கேடு தொ¢ந்துவிடும் என்ற பயம். அதனால்தான் சோஷலிஸ்ட் யதார்த்த வாதத்த்துக்கு¡¢ய முக்கிய ஒரு பண்பான கூட்டுத் தோற்றம் அல்லது கூட்டுப் பிம்பம் (Collective image) என்பது இங்கு கொஞ்சஞ்கூடக் கேள்விப்படாத ஒரு பொருளாகப் போய்விட்டது. அதனால்தான் எல்லா நாட்டு இலக்கியத்துக்கும் தொ¢ந்த பிரதேச மணம்,
பிரதேசப் பேச்சு என்பவை இங்கு பொ¢ய கண்டுபிடிப்புகளாகப்
போற்றப்படுகின்றன. ஏதோ அவைதான் 'முற்போக்கு' என்பவை போல. அதே நடையை
இங்குள்ள அத்தனை பிஞ்சு 'முற்போக்கு' எழுத்தாளர்களாலும் அத்தனை
அடிமைத்தனமாக அபிநயிக்க முடிகிறது. அதனால்தான் அதே அபிநயத்தைக்
கடைசியில் ஜேம்ஸ் ஜொய்ஷ.¢ன் நடை என்று சொல்லி மற்றவர்களுக்குச் சி¡¢ப்பூட்டவும்
அவர்களால் முடிகிறது. தனியனாகவே சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் இந்தக்
காலத்தில் செல்லுபடியாக மாட்டாது. அப்படியிருக்கையில் இந்தச் சாம்பாறுத்
தோற்றத்தின் நிலையைச் சொல்லத் தேவையில்லை. அதன் காரணமாய்
இங்குள்ள கதைகளில் இங்கு இருக்காத ஆலை முதலாளி - தொழிலாளி சண்டை
தலைதூக்கியது. அதோடு மனோவியல் தத்துவ ஆழமோ இலக்கியத்தரமோ எதுவுமற்ற
பிரசாரக் கதைகளுக்கு இடம் கிடைத்தது. மற்ற நாட்டு இலக்கியங்களைத்
தாங்களே படித்திராதபடியால் மற்றவர்கள் சொல்ல மட்டும் கேட்டு எழுதும்
பழக்கம், தங்களுக்குத் தொ¢யாதவற்றை 'அமொ¢க்கக் காப்பி' என்று சுலோகம்
பாடும் அறியாமைக்கு வித்திட்டுவிட்டது. அதோடு அதே அறியாமை --
வெளிநாட்டவரையும் வெளிநாட்டு விசயங்களையும் கண்டு பயப்படும் பொதுவுடமை
நாட்டவர்க்கே உ¡¢ய வெருட்சியைப் போல் (Xenophobia) - இங்குள்ள
'முற்போக்கு' எழுத்தாளர்களிடம், அவர்களை விட முற்போக்கான, அவர்களை
விடஆழமும் தரமும் கூடியவர்களான வேறு எழுத்தாளர்களின் கருத்துகளைக்
கண்டு வெருண்டு அவர்களைக் கள்ளர்கள் என்று திட்டும்
குழந்தைப்பிள்ளைத்தனக் குமுறல்களுக்கும் வழிவிட்டிருக்கிறது. அந்த மாற்றமும் மறுப்புமே இலக்கிய
வளர்ச்சிக்குத் தடையாவதற்குப் போதுமானவை. ஆனால் அதோடு அந்த
'முற்போக்கு' விமர்சனமே, 'முற்போக்கையும்'யும் சரி, மற்றவற்றையும் சரி
செவ்வையாகத் தெரிந்துகொள்ளாமல் ஒரு improvised பாணியில்
செய்யப்படும்போது, அதோடு அப்படி ஒரு விமர்சனம் வேண்டுமென்றே
மற்றவர்களின் கருத்துகளையும் எழுத்துகளையும் கயிறிழுப்புகளாலும்
குறுக்கு வழிகளாலும் அமுக்கிவிட்டு நடைபெறும்போது அதில் இலக்கியச்
சேவையே இல்லாமல் போய்விடுகிறது. இந்த வீழ்ச்சிக்குக் கைலாசபதி பெரிதும்
உதவியிருக்கிறார். அவரின் தனிப்பட்ட குறைகளும் சேர்ந்து அதற்கு
உதவியிருக்கின்றன. இலக்கிய விமர்சகர் என்ற அடிப்படையில் அந்தத்
தனிப்பட்ட குறைகளை ஆராயும்போது அது நன்கு தெரியவரும். இனி அவற்றை
ஆராயலாம். அவர் எழுதிய விமர்சனம், கட்டுரைகள் மிக மிகச் சொற்பமானவை மட்டுமல்ல, மிக மிக ஆழமற்றவையுங்கூட. திட்டவட்டமாகத் தர்க்கரீதியாகவும் நேர்மையாகவும் கட்டுரை எழுதித் தன்னை விளக்கிக்கொள்ள கைலாசபதி அவ்வளவு தூரம் முயன்றிருக்கிறார். விசயதானங்களின் மூலதனத்தில் அவர் தன் செல்வாக்கை நிறுவிக்கொள்ள முயன்றதில்லை. இதற்குக் காரணம் அவர் சேர்ந்துவிட்டிருந்த கட்சியின் இலக்கியக்கொள்கை தர்க்க ரீதியாகத் தன்னை நியாயமாக்கிக்கொள்ள முடியாதது என்பது மட்டுமல்ல, ஆழமான விமர்சனக் கட்டுரைகள் எழுதினால் அவர் தூக்கிவிட முயன்ற அதே எழுத்தாளர்களின் சிருஷ்டிகளில் ஆழமற்ற தன்மையைத்தான் முதலில் சுட்டிக் காட்ட வேண்டி வரும் என்ற தயக்கம் மட்டுமல்ல, அவையுந்தான். ஆனால் அவற்றுக்கும் மேலாக அவரிடம் உள்ள தனிப்பட்ட குறைகள்தான் முக்கியமாக நிற்கின்றன. கைலாசபதி தன் செல்வாக்கைப் பதித்துக் கொள்ள முயன்ற முறையையும் அவர் எழுதிய சொற்பக் கட்டுரைகளையும் பார்க்கும்போது அவர் வேண்டுமென்றே மற்றவர்கள் தன்னில் குறைபிடிக்காமல் தப்பிக்கொள்ள முயன்றவராகவே தெரிகிறார். பிடிபடாமல் நழுவிவிடும் ஒரு முயற்சி. நிரந்தரமாகத் தன் கருத்துக்களை அச்சில் விட்டுவைக்க அவர் விரும்பவில்லை, ஆரம்பத்தில் பத்திரிகாசிரியர் என்றபடியால். ஆனால் கட்சி சார்பற்ற வேறு விஷயங்களில்கூட அந்த நழுவல் வரும்போது அதுவல்ல முக்கிய காரணம் என்பது தெரியவரும். பெரும்பாலும் தன் கருத்துகளை மற்றவர்கள் மூலமாகவேதான் அவர் பரப்ப முயன்றிருக்கிறார். அதனால் மற்றவர்களின் நிரந்தர நன்றியும் கடமைப்பாடும் கூட்டு வழிபாடும் நியாயப்படுத்தப்படும் சமயத்தில் அவரின் கருத்துகளின் குறைகள் வெளியே தெரியவராமல் பாதுகாக்கப்படுவதோடு, அப்படி வரும்போது மற்றவர்களின்மேல் அவை சுமத்தப்படக் கூடியவையாகவும் மாறிவிடுகின்றன. தன் சக்தியையும் உருவத்தையும் விட மிகப் பெரிதான, அவற்றின் குறைகள் தெரியாத, யாருக்கும் பிடிபடாத நழுவலான ஒரு பெருநிழலை கைலாசபதியே மிக ராஜதந்திரமாக வளர்த்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கட்சி முறையில்
பெரும்பாலும் வெளியே தெரிய வராத அந்தரங்கக் கூட்டங்களின் மூலமே
இலக்கியம் வளர்க்கப்படும்போது இப்படி ஒரு நழுவலான நிழலையே உருவமாக
வளர்ப்பது இலகுவானது. அதற்குத் தடையாக வரக்கூடிய, கைலாசபதியை விடக்
கெட்டிக்காரர்களான கனகரத்தினா, பொன்னுத்துரை போன்றவர்கள் மெதுவாகக்
கட்சியிலிருந்து அதே ராஜதந்திர முறையில் அகற்றப்பட்ட பின் அதன்
வளர்ச்சிக்கு உத்தரவாதம் கிடைத்துவிட்டது. கடைசியில் க.கைலாசபதி என்ற
பெயர் கைலாசபதியின் பெருநிழலுக்கு மட்டும் உரித்தாகிவிட்டது. அதாவது
அவரிடம் இருப்பதாக மற்றவர்கள் எதிர்பார்ப்பதற்குரிய பெயர், உண்மையாக
இருப்பதின் பெயரல்ல. பின்பு கட்சி அங்கத்தவர்கள் விசாரணையற்ற பக்தியோடு
அவரின் புகழ் பாடித் திரியத் தொடங்கியபோது கைலாசபதி ஒரு
புராணமாகிவிட்டார். அந்தப் புராணப் போர்வைக்குள்ளே கைலாசபதி தன் சொந்த
இயலாமையையும் ஆழமின்மையையும் மிகக் கெட்டித்தனமாக மறைத்துக் கொண்டார்.
ஆனால் அதே சமயம், எவருடைய எதிர்ப்பும் வெளிக் கிளம்பாது
என்று நிச்சயமாகச் சொல்லலாம். கைலாசபதி காட்டிய இலக்கிய விமர்சனத்தின்
அடுத்த பண்பு அது. அதாவது அடுத்த குறை. அவரின் தனிப்பட்ட குறை. அதனால்
இலக்கிய விமர்சனம் என்பது விளக்கமற்ற நிழல் போராட்டங்களாக இங்கு
மாறிவிட்டது. பின்பு அவரைப் பின்பற்றிய அகஸ்தியர் போன்ற விமர்சனக்
கற்றுக்குட்டிகளும் (அகஸ்தியரைச் சிருஷ்டி எழுத்தாளர் என்ற ரீதியில்
இங்கு குறிப்பிடவில்லை) 'தேசாபிமானி' போன்ற பத்திரிகைகளும்
('தேசாபிமானி'க்கு இலக்கிய விஷயங்களைப்பற்றி மட்டுமல்ல அரசியல்
விஷயங்களைப்பற்றிக்கூட எதையும் தரமாகச் சொல்வதற்கு தகுதியில்லை. ஆனால்
உதாரணத்துக்காக இங்கே அதைக் குறிப்பிடுகிறேன்.) இந்த நழுவல் முறையை
அதன் உச்சத்துக்கே கொண்டுபோய் விட்டார்கள். அதோடு அவர்களுக்குப்
போட்டியாக வந்த "நான்தான்" பேர்வழியும் பண்டிதர் பரசுராமனும்,
பால்ராஜுவும் அதன் அடுத்த உச்சத்தையும் காட்டிவிட்டனர். கடைசியில்
இவையெல்லாம் இங்கு விமர்சனமாகி விடுகின்றனவென்றால் அதற்கு முழுக்
காரணம் கைலாசபதியேதான். அது ஒரு அற்ப
விவகாரம் என்ற நினைவை விட தன் பெயருக்கு ஆபத்து வரலாம் என்ற பயந்தான்
அந்த நழுவலுக்கு முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும். இதே
சந்தர்ப்பத்தில் அண்மையில் எழுந்த எதிர் முற்போக்கு வேகத்திற்குப் பின்
கா.சிவத்தம்பியின் பெயர் அதிகமாக அடிபட கைலாசபதி பின்னால் போய்விட்டார்
என்பதையும் கவனித்தல் நல்லது. முழுப் பொறுப்பையும் சிவத்தம்பியிடம்
ஒப்படைத்துவிட்டு (இங்கிலாந்துக்குப் போகுமுன்பே) கைலாசபதி தப்பிவிட
முயன்றிருக்கிறார் போலவே அது உணர்த்துகிறது. அதோடு கைலாசபதியை விடத்
துணிவும் தன்னம்பிக்கையும் சிவத்தம்பியிடம் அதிகம் உண்டு என்று
அதேவாக்கில் சொல்லவும் இப்போ இடமுண்டு. 'முற்போக்கு' வாதத்தை எதிர்த்தவர்கள் அதற்கு முன்பே இங்கு பலபேர் இருந்தாலும் ஈழத்தில் முதல் முறையாக தரத்தோடு நியாயமாக அச்சில் ஏறிய எதிர்ப்பு அதுவேதான். அதற்குப் பின்புதான் மற்றவர்களுக்குத் தைரியம் பிறந்தது. நேரடியாக இப்போ பெரும் துணிச்சலோடு பலர் எதிர் 'முற்போக்கு'க் கட்டுரைகள் எழுதுகிறார்கள் என்றால் அதற்கு வழிகாட்டி, 'கலைச்செல்வி'யில் வந்த 'முற்போக்கு' இலக்கியம் என்ற விவாதமேதான். அந்த விவாதத்தில் கைலாசபதியும் பங்கு பற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் நேரம் வந்தபோது அவர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் காட்டிய காரணம் பின்பு அந்த விவாதத்தில் பங்கு பற்றிய சோ. நடராசா personal ஆக எழுதிவிட்டார் என்பதுதானாம். ('கலைச்செல்வி' ஆசிரியர் கூறினார்) கைலாசபதியின் இலக்கியக் கொள்கைக்கும் அவரின் கட்சிக்கும் முதல் முதலாக ஒரு தரமான எதிர்ப்புக் கிளம்பியபோது அதைச் சமாளிக்க அவர் கையாண்ட இந்த முறை பரிதாபமானது. ஆனால் அவரைப் பொருத்தவரையில் அது வழக்கமான ஒன்றே. Personal என்று சொல்லி விசயத்தை விட்டு நழுவுவது அவருக்குரிய ஒரு பண்பு. அந்தக் கட்டத்தில் அதன் அர்த்தம் நிழல் போராட்டம் ஆட முடியவில்லை என்பதுதான். ஆனால் 'கலைச்செல்வி'யில் நிழல் போராட்டம் ஆடாவிட்டாலும் அதற்குப் பின் 'தினகரனி'ல் அவர் ஆடாமல் இல்லை. முன்பு கூறிய அதே இந்திய விமர்சகரின் வார்த்தைகளில் சொல்லப்போனால், இன்றுங்கூடத் 'தினகரனு'க்கு கைலாசபதிதான் ஒரு father figure. எனவே, அதில்தான் அவர் பதிலளித்தார். 'எழுத்தாளர்களும் சதந்திரமும்' என்பது அந்தக் கட்டுரை. என் பெயர், ஊர் சொல்லாமல் நான் 'கலைச்செல்வி'யில் பாவித்த இரண்டொரு சொற்களை மேற்கோள்குறிக்குள் மாட்டி 'தனித்தன்மை' என்பதைச் 'சுதந்திரம்' என்று திரித்து அதைச் சூனியத்துள் புகுத்தி குழந்தைப்பிள்ளைத் தனமாய் எழுதினார். கடைசியில் கைலாசபதியின் கொள்கைப் பிரகடனம் என்றாகிவிட்டது!
அதைப் படித்த போதுதான் நான் 'கலைச்செல்வி'யில் 'முற்போக்கு இலக்கியம்'
பற்றி எழுதி அதுவரை ஒரு செத்த பாம்பை அடித்துக்கொண்டிருக்கிறேன் என்பது
எனக்குத் தெரிய வந்தது. ஆனால் அந்தச் செத்த பாம்புதான் அதுவரை ஒரு பெரு
நிழலாக, ஒரு புராணமாக நின்றிருக்கிறது. கைலாசபதியின் நிழல் போராட்டமும்
நழுவல் விமர்சனமும் அப்போதுதான் விசயத்தில் அககறை கொண்ட
மற்றவர்களுக்கும் தெரியவந்திருக்க வேண்டும். கடைசியில் கைலாசபதி
காட்டிய நழுவல் விமர்சனத்தால் தன்னை நியாயமாக்கிக்கொள்ள முடியவில்லை.
அது நிர்வாணமாக்கப்பட்டுவிட்டது. |