தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search
Home > Tamil Language & Literature > Project Madurai > Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > vinayakar akaval of avuaiyAr with the commentary of Guhasri Racapati - ஔவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் (மூலமும் பு.பா.இரசபதி உரையும்) > Auvaiyar & her  Writings  - ஒளவையாரும் அவர் நூல்களும் >

vinayakar akaval of avuaiyAr with the
commentary of Guhasri Racapati

ஔவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்
(மூலமும் பு.பா.இரசபதி உரையும்)
also in pdf


Acknowledgements:
Our sincere thanks go to Mr. P.N. Kumar of Java for the preparation of th etext of the work "auvaiyAr aruLicceita vinAyakar akaval, kukasrI racapati uraiyuTan", amirtavarsini printers, chennai, 1954  This work was posted in several parts in the "agathiyar" mailinglist at Yahoo. PDF and Web versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai 2006
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.  Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


 

மின்பதிப்பாசிரியர் முன்குறிப்பு:

இந்த அருள்நூலைப் பாதுகாத்து வைத்திருந்து அடியேனுக்கு வழங்கி உதவிய கனடா பேராசிரியர் பசுபதி அவர்களுக்கும், 51 பகுதிகளாய்ப் பிரித்து இதனைத் தொடராக, அடியேன் எழுதிய பின்னுரையுடன் சேர்த்து வெளியிட, ஆர்வத்துடன் ஆதரவளித்த அகத்தியர் யாஹூ குழும நடத்துநர் டாக்டர்.ஜெயபாரதி அவர்களுக்கும், மரபிலக்கியம் யாஹூ குழும நடத்துநர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி நவில்கிறேன்! இத்தகு அரிய நூல்களை பரவலாய்ப் படித்துப் பயனுறும் வண்ணம் மின்னேற்றும் மதுரைத் திட்டக் குழுவினர்க்கும் என் மனமார்ந்த நன்றி!

அன்புடன்,
குமார், ஜாவா
(sarabeswar@yahoo.com)



நூல்முகம்

இந்த அருள்நூலுக்கு, மறைமலையாரின் தலை மாணாக்கரும், பல்வேறு அருட்பணிகள் ஆற்றி, பின்னாளில் துறவு பூண்டு, மாம்பாக்கத்தில் திருக்குறள் பீடம் கண்டு, அமைந்தவருமான, பாலசுந்தரனார் என்ற இளவழகனார் அருளிய நூல்முகம்:

திருவருள்

இந்திய நாடு திருவருள் நாடு! காலந்தோறும் குருமார் பற்பலர் தோன்றி, மேலுமேலும் அருள்நலம் பெருக்கிய நாடு. செல்வத்தில் மிதந்து, கல்வியில் திளைத்து, அருளில் அமைதியுற்ற அழகிய நாடு! குறைவொன்றும் இல்லாத குருநாடு!

இந்த நாட்டில் அரும்பி மலர்ந்த திருநெறிகள் பல. அந்நெறிகளின் வழியே திருவருள் வெளிப்பட்டுத் தோன்றிய திருவுருவங்களும் பல. அருள் வெளிப்பட்ட இடங்களில் எழுந்த திருக்கோயில்களும் பல. அவற்றின் வரலாறுகளும் பலப்பல. அழகிய பழம்பெரு மொழிகளில் ஆன்றோர் அருளிய அருள் மணங்கமழும் ஞான நூல்களும் பற்பலவாம்.

தேனினும் இனிய தமிழ் மொழியில் அருள்ஞான நூல்கள் மிகவும் அளவாக உள்ளன. மக்கள் வாழ்நாளில் அமைதியுடைய நாள் மிகச்சில; அச் சில நாளில் நன்கு அறிந்து தெரிந்து கொள்ளத்தக்க வகையில், அளவாய் ஞானநூல்கள் தமிழில் இனிது அமைந்திருக்கின்றன. ஆனால், பொருள் நிறைவுக்கோ, கருத்து ஆழத்துக்கோ, பழக்கப் பயனுக்கோ அவற்றிற் குறைவு ஒன்றுமில்லை. மேலும், தெளிவு மிகுந்து, சுவை உயர்ந்து, மெய் பொலிந்து, அருள் ஒளி விடுவன தமிழ் நூல்கள்.

அத்தகைய அழகிய ஞானநூல்களில் ஒன்று, ஔவையார் அருளிய விநாயகர் அகவல். எளிய நடையில் சிறு பிள்ளைகளும் ஓதி நலம்பெறும் வகையில் அமைந்தது அது. அவ்வாறே, விநாயகர் வழிபாடும், பிள்ளைகட்கும் ஏற்ற இனிய எளிய வழிபாடு. மண்ணைப் பிடித்து, அறுகம் புல்லை எடுத்து இட்டு, உண்டை படைத்து வணங்கும் மிக எளிய வழிபாடு இது.

ஔவையார் சிறுபிள்ளைகட்கு நூல்கள் எழுதுவதில் வல்லவர். சிறுபருவத்திலேயே நெட்டுருச் செய்துகொண்டு நாளுக்கு நாள் மெய்ப்பொருள் உணரும் வகையில், அப்பிராட்டியார் நூல்கள் அருளிச் செய்துள்ளார். பெரிய மூதறிவினரே சிறுவர்க்கும் யாவர்க்கும் நூல்கள் அருளுதற்குரியவர்.

விநாயகர் அகவல் இப்போது உரை விளக்கத்தோடு வெளிவருகின்றது. விளக்கமும் தக்க மூதறிவினரையே ஆசிரியராய்ப் பெற்றிருக்கின்றது. திரு.ரசபதி அவர்கள் இதன் உரையாசிரியர். அவர்கள், மொழித் திறமும், ஞான மெய்ப்பொருள் ஆய்வும், திருவருள் அன்பும், எழுத்து வன்மையும், பல அருள் நூல்களுக்கு உரை வகுத்துதவிய உரைப் பழக்கமும் நன்கமைந்தவர்கள். இன்பத் தமிழுலகு, அப் பேரறிவாளராற் பயன் கொள்ளத் தக்கன பல உள்ளன.

உரையும் நூலுமாக இதனை வெளியீடு செய்யும் புண்ணியத் திருவுடைய 'அமிர்தவசனி' பதிப்பகத்தார், தெய்வமணம் பரவுதலொன்றே நோக்கமும் குறியுமாக உடைய மாட்சியர். நல்லவருலகம், வான்முகில் நோக்கும் பசும்பயிர் போல இப் பதிப்பகத்தார் முகங்கொண்டு வாழ்ந்து வருகின்றது.

இந்நூல் வாழ்க! இதன் செய்கையர் வெல்க! திரு அருள் தழைக!

இளவழகன்,
குருகுலம், மாம்பாக்கம்.
(31.5.1954)


ஆசிரியர் முன்னுரை

இறைவன் திருவருளால், இவ்வுலகம் தோன்றியது; தொழிற்படுகின்றது. அகில உலகில் ஒவ்வொரு செயலிலும், அருள் முத்திரை உளது. அமைதி, இதனை எவர்க்கும் அறிவிக்கும். எளியேனுடைய திண்ணைப் பள்ளி ஆசிரியருள் ஒருவர் பிரமஸ்ரீ கனகசபேசையர் அவர்கள். வைதீகசீலரான அப் பெருந்தகை, அருளொடு தூண்ட, விநாயகர் அகவலை இளமையில் மனனம் செய்தேன். இன்றுவரை அத் தொடர்பு என்னிடம் உளது.

அதன் பயனாக, பல சாதுக்கள் ஆசியையும் பெற்றேன். இன்றைய உலகில், அமயம் வாய்க்கும் போதெல்லாம், நூலின் உள்ளுரையை உணர்ந்து உணர்ந்து நெகிழும் என் உள்ளம். கடலூர் வெள்ளிப் பிள்ளையார் கோயில் நிர்வாகி அன்பர் கணபதி முதலியார் அவர்களும், என் கெழுதகை நண்பரான கிடங்குத்தெரு ஸ்ரீ பாலசுப்பிரமணியம் கம்பெனி அவர்களும், இந்நூலுக்கு உரையெழுதும் வேட்கையை இடையிடை என்னில் எழுப்பினர்.

அமிர்தவசனி தெய்விகத் திங்கள் இதழ் ஆசிரியரும், ஏதாயினும் திருப்பணி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்னும் உணர்வை எவர்க்கும் எழுப்புபவருமான பிரமஸ்ரீ சு.முத்துஸ்வாமி ஐயரவர்கள், 'விநாயகர் அகவல் விரிவுரை, நாட்டிற்குச் செய்யும் நல்லதொரு தொண்டு. இதனில் ஈடுபடுக' என்று ஆணையிட்டனர். இதுகுறித்து டாக்டர் பிரமஸ்ரீ மணி ஐயர் அவர்களும், 'உரைத் திருப்பணி எவ்வளவு நடைபெற்றிருக்கிறது' என்று, இடையிடை அன்பொடு வினவலாயினர். 'செய்கிறேன்' என்னும் என் வாய். நெஞ்சமோ பெரிதும் அஞ்சியது.

உருவிற் சிறியது எனினும், சாதனை பழுத்தவர்க்கே சாத்தியமானது விநாயகர் அகவல். யானோ அருகன்! இனிய ஊக்குதல் தொடர்பு, திருவருள் கட்டளைபோல் இருந்தது.

யாதாயினும் ஆக! கணேசா! அப்பா நீயே துணை என்று நம்பி ஏதோ சிறிது முயன்றேன். முயல்வின் பயன் இச் சிற்றுரை. சாதனா சம்பந்திகளும், அருங்கலை வாணரும், எளியேன் செய்த இச் சிறுபணியை ஏற்க வேண்டுகிறேன். உள்ள குறைகளையும் உணர்த்துவரேல், அந்நன்றியை என்றும் மறவேன்.

விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும் பக்தர்களின் பாததூளியே எளியேன் விழைதரும் பரிசு. கணேசா! வரசித்தி நாதா! திருப்பணியில் ஈடுபட்டுச் செயலாற்றும் அமிர்தவசனி காரியாலயம் வாழ்க என்று வழுத்துகிறேன். தெய்வக் கணபதி அடியார்தம் திருவடிகட்கே அடைக்கலம்.

இங்ஙனம் அன்பன்,
பு.பா.இரசபதி
97, சஞ்சீவிராயன் கோயில் தெரு,
பழையவண்ணை, சென்னை - 21.
(20.9.1954)


விநாயகர் அகவல் - மூலம்


விநாயகர் அகவல் - உரை (குகஸ்ரீ ரசபதி)

இது விநாயகரைப் பற்றிய அகவல் என விரியும். இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; ஆறாம் வேற்றுமைச் செய்யுட்கிழமைப் பொருளாகவும் விரிக்கலாம். விநாயகர் வடசொல். கணேசர்க்கு இப்பெயர் யோகமாக அமைந்தது; ரூடியாகவும் பெறவுளது. இதனால் இது யோகரூடி எனப்பெறும். வி-மேலான; நாயகர்-தலைவர்; எனவே தற்பர கணபதி, தனக்கு மேலொரு தலைவர் இலாதவர் என்றபடி.

'வித்தக விநாயக விரைகழல் சரணே' எனும் இந்நூலின் இறுதிஅடியில் இப்பெயர்ப் பொருள் விரித்துரைக்கப் பெற்றுள்ளது; ஆண்டு அது காணத்தகும்.

விநாயகர் அகவல் என்ற தொடர் அன்மொழித் தொகையாய், விநாயகர் மேல் பாடப் பெற்ற அகவல் பாவால் ஆகிய துதிநூல் எனும் பொருளில் நின்றது. மயில் அகவுவது போலும் ஒலியினது ஆகலின் அகவல் எனப் பெயர் பெறும். அகவல் எனினும் ஆசிரியம் எனினும் ஒக்கும். நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறி மண்டிலம் எனும் நால்வகையுள் இது, இயற்சீர் விரவிய நேரிசை ஆசிரியப்பா எனப் பெறும்.

எழுபத்துஇரண்டு அடிகளைக் கொண்ட இந்நூலைப் பாடியவர் ஔவைப் பிராட்டியார். அற்புதமான அப்பாடலையும், பாடல் பொருளையும், தத்துவக் குறிப்பையும், திருவருள் துணை கொண்டு ஒரு சிறிது காண்போம்.

திருவடிப் பெருமை

உடலில் அரைஞாணிற்குக் கீழ் இருக்கிறது மூலநிலம்; அந்நிலத்தில் திகுதிகு என்று கனல்கிறது மூலக்கனல். உடலில் உள்ள பொறிபுலன் எல்லாம் அக்கனலிலிருந்தே உயிர்க்கின்றன. அற்புத அக்கனலே ஆன்ம வாழ்விற்கு ஆரம்பம்.

ஞானக்கனலான கணபதியின் திருவடிகள், அம்மூலக்கனலின் முன்பிருக்கின்றன. கனல் தணியாதபடி அங்கிருந்து காப்பளிக்கின்றார் கரிமுக வரதர். வெப்பம் காட்டாமல் தட்பம் காட்டும் அவர் திருவடிகளிலிருந்து எழுகின்றது ஏழிசை. எவர் உள்ளத்தையும் வயப்படுத்தும் அந்த ஏழ் இசை எழுகோடி மந்திரம் என நிற்கிறது. அரிய நுட்பம் பல காட்டும் அந்த மந்திர நாதமே, ஊனம் இல்லாத வேதமாக உருக் கொள்கின்றது; சொல் உலகமான வேதங்களுடன், பொருள் உலகமான உயர்ந்த தத்துவங்களும் உயிர்க்கின்றன.

தூயது, தூய்மை அற்றது, இரண்டும் கலந்தது (சுத்த மாயா, ப்ரக்ருதி மாயா, மிஸ்ர மாயா) எனப்பெறும் மூன்று மாயைகளும், அவைகளின் செயலால் உருக்கொள்ளும் உலகங்களும், வித்தக அந்த நாதத்திலிருந்தே விறுவிறு என்று எங்கும் விரிந்து வியாபிக்கின்றன. என்ன அற்புதம்!

- என வரும் கந்தன் அருள்பெறு சந்தமுனிவர் திருப்புகழ்க் குறிப்பு இங்கு எண்ணத் தகும்.

பயனான இவைகள் அனைத்தையும் ஊன்றி நெகிழ்ந்து உருகிய உளத்தொடு பாடுகின்றார் ஔவைப் பாட்டியார். பாடலைச் சிந்தனையுடன் படித்துப் பாருங்கள். என்ன ஆனந்தம்!

1. சீதக் களபச் செந்தா மரைப்பூம்
2. பாதச் சிலம்பு பலஇசை பாட

பதவுரை:
சீதம் - குளிர்ந்த,
களபம் - களப மணம் கமழ்கின்ற,
செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு - சிவந்த கமலம் போன்ற திருவடிகளில் அணிந்துள்ள சிலம்பு என்னும் அணிகள்,
பல இசை பாட - பலவகை இசைப்பாட்டு ஒலிகளை எழுப்பவும் (என்றவாறு).

அருள் நாதத்திலிருந்தே அனைத்தும் தோன்றின எனும் அருள் நூல்கள், எவ்வளவு நுட்பம் உணர்ந்து ஓதியிருக்கின்றன என்பது வித்தக இந்த இரண்டு அடிகளிலிருந்தும் விளங்குகின்றது அல்லவா!

இவ்வளவு செய்திகளையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த இரண்டு அடிகளை என்றும் மறக்கவியலுமோ! இவைகளை நினைவுறுத்தும் இனிய பிராட்டியும் என்றும் நம் நினைவில் இடம் பெறுகின்றார்.

- எனவரும் பெருங்கதையடிகள், இங்கு நாம் நினைவு கொள்ளத் தகும்.

மூலாதாரத்திலிருந்து நாதநயம் பல தோன்ற, இன்ப நிருத்தம் செய்கின்றான் எம்மான். நூல் ஆரம்பத்திலேயே திருவடி தரிசனம் ஆகிறது. திருவடிகளின் செயலை இருபத்துஇரண்டாம் அடியும் அறிவுறுத்துகின்றது. விளக்கம் அங்குளது; ஆண்டு அதைக் காண்டல் நலம்.

திருஇடை

எம்மான்தன் இயற்கைத் திருமேனியில் அரைஞாணும், வெண்பட்டும் இருக்கின்றன. அந்தச் செயற்கைக் கோலத் தெய்வ அழகு, அகில உலகும் அமைதி பெற, வளரும் ஒளியுடன் அழகை வழங்குகின்றது. இந்நிலையை உணரும்போதே பாட்டியின் உள்ளம் படபடக்கின்றது. திருவாளன் தெய்வப் பிரபுத்துவத்தை, மெல்லெனப் பின்வரும் இரண்டடிகளால் அம்மை உரைக்கும் அழகே அழகு!

3. பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
4. வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்ப

பதவுரை:
பொன் அரைஞாணும் - பொன்னால் ஆகிய அரைஞாண் என்னும் அணிகலனும்,
பூந்துகில் ஆடையும் - மென்மையான வெண்பட்டு ஆடையும்,
வன்ன மருங்கில் - அழகிய திரு இடையில்,
வளர்ந்து அழகு எறிப்ப - மென்மேலும் அழகு மிகுந்து ஒளிபரப்ப (என்றவாறு).

பாட்டிக்குப் பாததரிசனம் காட்டிய பரன், கனிவிக்கும் தன் இடையையும் காட்டுகின்றான்.

கணபதி அஷ்டோத்தரம் என்றொரு நூல் உளது. அதனில்,

'ஓம் ஸ்வேத பரிதாநாய நம: என்பது 39'ஆம் மந்திரம்.
'ஓம் சுப்ரப்ரியாய நம: என்பது 27'ஆம் மந்திரம்.

இந்த இரு மந்திரங்களும் வெண்பட்டு ஆடையன் விமலன் எனலை விளக்குகின்றன.
சுப்ரம் என்பது வெண்ணிறப் பொருள்களைக் குறிக்கும்; எனினும் வெண்ணிற ஆடையென்றே இதுவரை பொருள் கொண்டுளர் மேலோர்.

'மின்னா மெனவே விளங்கு பட்டழகும்' என்றார் நக்கீரதேவ நாயனாரும். மின்னல் வெண்ணிற ஒளி. பட்டிற்கு இயற்கை நிறம் வெண்மை. உவகை விளைவிக்கும் இதனை உணர்ந்தே, 'சுக்லாம்பரதரம்' எனும் சுலோகமும் எழுந்தது. 'பூந்துகில் ஆடையும்' என்பதில், துகில் உடையை உணர்த்தாமல், நிறத்தையே உணர்த்திற்று.

- என ஜீவகசிந்தாமணி நாமகள் இலம்பகம் முப்பத்து நான்காம் பாட்டில் வரும் துகில்கொடி என்ற இடத்தில், 'துகில்- வெண்மை செம்மை இரண்டற்கும் பொது' என்று உரைகண்டார் நச்சினார்க்கினியர். இதனால், 'பூந்துகிலாடை' என்பதற்கு, வெண்ணிற ஆடை எனப் பொருள் கோடல் நேர். கணபதிக்குச் செந்நிற ஒளியான ஆடையும் ஒரு சமயத்து அமைதலின், அதுவும் ஒருசார் கொள்ளப் பெறும்.

திருவயிறு

அகில உலகையும் தன்னுள் அடக்கிக் காட்டும் அற்புதத் திருவயிறு, அடுத்துத் தரிசனம் ஆகிறது.

வேதன், மால், உருத்திரன் எனும் முதலாளிகள் மூவர் தவம் முயன்று செய்தனர். அருள்மிக்க ஆனைமுக அம்மான் அவர்கட்கு முத்தொழில் செய்யும் முதன்மை வழங்கினன். விழுந்தனர்; பணிந்தனர்; எழுந்தனர். எங்ஙனம் செய்வது அச்செயல் என விநயமொடு மூவரும் வினவினர். அவ்வளவில், எம்மான் அம்மூவரையும் எடுத்து விழுங்கினன். உள் புகுந்தனர்; அளவிலாத அண்டங்கள், திருவயிற்றுள் இருந்து திகழ்கின்றன. அறிந்து வியந்தனர் அயன் முதலோர். அதனுடன், முத்தொழில் புரியும் பல கோடி மூவரையும் கண்டனர். அவர்கள் செய்யும் உயரிய தொழில் முறைகளை ஊன்றி உணர்ந்தனர். வரத கணபதியின் பிரபுத்வம் அறிந்து வந்தித்தனர். வாயாற வாழ்த்தினர். அவ்வமயம், திருவாயாலும், இரு செவியாலும் வித்தகக் கணபதி வேதன் முதலினோரை வெளிப்படுத்தினர்.

விரிவான இந்த விநாயக புராண வரலாறு, பேழை வயிற்றின் பெருமிதத்தோடு பாட்டியின் நினைவிற் படற்கிறது. அவ்வளவுதானா! இதோ பாருங்கள்!

வதன தந்தம்

ஒடித்த தந்தம் ஒரு கரத்திருப்ப, மற்றொரு கொம்பு திருமுகத்தில் மன்னியுளது. அளவிறந்த மகிமாதிசயங்கள், அதனிலிருந்து வெளியாகின்றன.

'ஒற்றைக் கொம்பன் விநாயகனைத் தொழத்
துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே'
- எனும் பொருள் தோன்ற, 'ஏக தந்தாய விக்ந விநாசினே' எனும் மன்னிய தெய்வ மந்திரம், நம் நினைவில் இங்கு நிழலிடுகின்றது.

திருமுகம்

'வேழக் குரித்தே விதந்து களிறெனல்' என ஒல்காப் புகழ்மிகு தொல்காப்பியனார் ஓதிய வண்ணம், ஆண்மை மிக்க வேழமுகம் விளங்குகின்றது. திருமுக தரிசனம் செய்யச் செய்ய, உயரிய செய்திகள் பல நினைவில் உருண்டோடி வருகின்றன.

சுக்லாம்பரதரம் சுலோகத்தில் 'பிரஸன்ன வதனம்' உளது. இதற்குத் தரிசனமாகும் தெய்வத் திருமுகம் எனல் பொருளெனினும், யானைமுகம் என்றும் இதற்குப் பொருள் உண்டு. அற்புத இப்பெயர்ப் பொருளை, 'ப்ரஸ்ந்நோ மத்த வாரண' என்று நிகண்டு இனிது கூறுகின்றது.

- என்பது விநாயக புராணம்.

மேலும், இயற்கையாக யானைகட்கு இரு தந்தம். ஓங்கார யானைக்கு ஒரு கொம்பு. இதனால் 'ப்ரஸன்ன வதனம்' என்பது, வேழ முகமேயென்றும் நிச்சயிப்பர் மேலோர். இப்பெருமானே தியானத்திற்கு உரியவர் ஆதலின், 'ப்ரஸன்ன வதனம் த்யாயேத்' என்று சொல்கிறது சுருதி.

வித்தக ஞானத் தொந்தியும், தாக்கற நிற்கும் தனியாண்மையும் தெய்வத் தந்தமும் கொண்ட திருமுகத்தில், என்றும் மங்களன் என்பதற்கு அறிகுறியான விமல திலகமும் விளங்குகின்றது. பார்த்த கண் வாங்காமல் பார்த்துப் பூரிக்கும் பாட்டியின் திருவாய் பாடுகின்றது கேளுங்கள்!

5. பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
6. வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

பதவுரை:
பேழை வயிறும் - பெட்டி (அல்லது கூடை) போன்ற திருவயிறும்,
பெரும் பாரக்கோடும் - மிக்க கனம் தங்கிய (திருமுகத்தில் உள்ள) ஒற்றைத் தந்தமும்,
வேழ முகமும் - யானை முகமும்,
விளங்கு சிந்தூரமும் - (அத்திருமுகத்தில்) ஒளிர்கின்ற செந்நிறப் பொட்டும் (என்றவாறு).

அடியும் இடையும் காட்டிய அமலன், வயிறும் தந்தமும் காட்டிய வரதன், முகமும் திலகமும் காட்டிய முதல்வன், தயவு மிகுந்து மற்றைய அங்கங்களையும் தரிசனம் செய்யத் தருகின்றான்; இவைகளை நினைக்கும்போதே நம் மனம் நெகிழ்கிறது அல்லவா!

ஐந்தொழில் செய்யும் ஐங்கரம்

முப்பத்தாறு கருவிகளுடன் சாரும் ஆன்மா, உடல் போகங்களை அறிவது சாக்கிர சிருட்டி.

சாக்கிரத்தில் நுகர்ந்த வாசனையைக் கனவினும் கண்டு நிற்பது கனவுக் காப்பு.

கனவுபோல் சிறிது நிழலெனத் தோன்றி மறைவது சுழுத்தி சங்காரம்.

பிராணவாயு இயக்கம் இல்லாமல் ஒன்றும் தோன்றாது நிற்பது துரிய திரோபவம்.

கருவிகள் ஒன்றும் இன்றி, மல இருள் கெட, மாயையில் உடல் கரணம் முதலிய உதவல்; இருவினை ஒப்பு வருவித்தல்; குருமுகம் காட்டி அருளல் முதலிய துரியாதீத அநுக்ரகம்.

இங்ஙனம் அவத்தை நிலையில் தொழில் ஐந்திருக்கின்றன. இவைகளை ஊன்றிப் படித்தால் உள்ளம் உருகும். ஓட்டத்தில் ஓதினால் ஒன்றுமே விளங்குவதில்லை.

உடல் தோன்றி நின்று அழிவது - படைத்தல் காத்தல் அழித்தல்.
உயிருள் மயக்கமும் தெளிவும் வருவன - மறைப்பு; அருளல்.

இங்ஙனம் உடலில் மூன்றும், உயிருள் இரண்டுமாக வரும் ஐந்தொழிலுமுள.

பொறிகளால் ஆன்மா தொடர்பு கொள்ளல் - படைப்பு
அதனால் அறிவனவற்றை அனுபவித்தல் - காப்பு
அதன் மயமாய் அழுந்தல் - அழிப்பு
அதனின் இன்பமயமாதல் - மறைப்பு
அதனிலிருந்து தெளிவு பிறத்தல் - அருளல்.

இங்ஙனம் பொறிகள் தோறும் வரும் ஐந்தொழிலும் உண்டு.

மனத்தால் ஒரு பொருளை எண்ணல் - படைப்பு
அப்பொருளில் வேட்கை கொள்ளல் - காப்பு
அது என்று கைவரும் என்று திகைத்தல் - அழிப்பு
அப்பொருளின் மேல் மயங்கி நிற்றல் - மறைப்பு
அதைத் தெரிந்து கொள்ளல் - அருள்.

இங்ஙனம் கரணநிலையில் வினை ஐந்தொழில்களும் நடைபெறுகின்றன.

முத்தியில் அருள் வடிவாதல் - படைப்பு
ஆனந்தப் பேறடைதல் - காப்பு
அதனின் அதீதப் படுதல் - சங்காரம்
காண்பான், காட்சி, காணப்படுபொருள் முதலிய மூன்றும் தோன்றாமை - மறைப்பு
இவை நான்கும் எக்காலமும் விளங்கல் - அநுக்ரகம்.

இங்ஙனம் எல்லாம், ஒழிவிலொடுக்க நூல், ஐந்தொழில்களை விவரிக்கின்றது. ஆனந்தமான அருள் மிகுந்து எந்த ஐந்தொழிலையும் செய்பவர் எம் ஹேரம்பர்.

கணபதியின் எழுத்தாணி இருக்கும் திருக்கரம், பயன் விளைவிக்கும் படைப்பைச் செய்கிறது.

கொழுக்கட்டை ஏந்திய திருக்கரம், காப்புக் கருமம் காண்கிறது.

அங்குசக் கரம், அழித்தல் தொழிலை ஆற்றுகின்றது.
பாசத் திருக்கரம் மறைத்தலை விளைவிக்கின்றது.

அமுத கலசத் திருக்கரம், அருளல் செயலைச் செய்கிறது. நினைத்தாலே நெஞ்சம் நெகிழ்கிறதே!

இவைகளால், சிவத்தின் வேறல்லர் சிவசுதர் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது அல்லவா!

கயமுகனைச் சாய்க்க ஒடித்த தந்தத்தை, எழுத்தாணி என்பது மரபு. அது கொண்டே மேருவில் பாரதம் எழுதினாராம் ஹேரம்பர்.

முழு உலகும் அழிய ஒரு காலம் வரும்; அழிந்த உலகை ஆக்க, முன்கூட்டி உலகப் படத்தை எழுதி வைக்கவும் உதவுகின்றது அவ் எழுத்தாணி.

மீட்டும் ஒரு கயமுகன் தோன்றி, இமயவர்க்கு இடுக்கண் விளைவிக்காதபடி, அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது அக்கொம்பு என்றெல்லாம் புகல்கின்றன புராணங்கள். மேலும்,

'ஏர் கொண்ட தன்னைத் தளைப்பவரும் ஊருநரும் இலரென்பது உலகு தேறற்(கு) எடுத்தவெம் பாசமோ(டு) அங்குசம் தன்கரத் தேந்திமத தாரை சிதறி ... பகிரண்ட முற்றும் புகுந்துலாய்க் கலைசையிற் பதியுமோர் களிறு'
- எனும் விநாயகர் பிள்ளைத்தமிழும்,

- எனும் தணிகைப் புராணமும் இங்கு நம் நினைவில் நிழலிடுகின்றன அல்லவா!

அங்குச பாசம்

அநாதி நித்திய ஆணவத்தின் சார்பால், அல்லல் அடைகின்றது ஆன்மா. கலங்க வைக்கும் இந்தக் கண்ணற்ற ஆணவத்தை, மதகரியென்று உருவகிப்பது மரபு. அது தானேயும் அகலாது; விலக்கும் சூழ்நிலையும் விளங்குவது இல்லை. என்ன வேதனை! கண்ணீர் விடுவதுதான் கண்ட பலன்.

'மூலமுதலே! அபயம்! அபயம்!' என்று முடிவில் ஆன்மா முறையிடும். அந்நிலையில் விரைந்து உயிர்க்கு உதவ, வெளிப்படுகின்றார் வேழமுகர்; ஆணவ யானையை அங்குசத்தால் அடக்கி, பாசத்தால் அதைப் பிணித்து, வித்தக உயிர்கட்கு விடுதலை தருகிறார் விமல விநாயகர். இது பிண்ட நுட்பம்.

காந்தக் கதை

எக்கருவியாலும் இறவா வரம் பெற்ற யானைமுக அவுணன் ஒருவன் இருந்தான். உள்ளத் தூயரை அடக்கி ஒடுக்குவது அவன் தொழில். இதனால், தாங்க இயலாமல் வானவர் தடுமாறினர். முதல்வன் திருமுன் முறையிட்டனர். வேழமுகர் வெளிப்பட்டார். திருமுகத் தந்தம் இரண்டனுள் ஒன்றை ஒடித்தார். அது கொண்டு அவனை அடக்கினார். மேலும் அவனைத் தன் அடிப்படுத்தினார். அவனால் விலங்கிடப் பட்டிருந்த விண்ணவரும் விடுதலை பெற்றனர் என்பது அண்ட வரலாறு.

'உகத்தா னவன்றன் உடலம் பிளந்த ஒரு கொம்பனே' என்பது விநாயகர் இரட்டைமணி மாலை.
யோக காலத்தில் உள்முக நாதம் உண்டாகும். அதனால் ஆணவச் செயல் விரிவுகள் எல்லாம் அடங்கும். ஊன்றியிதனை மேலோர் உணர்ந்துளர். ஆங்காரம் எல்லாம் ஓங்காரத்துள் ஒடுங்கும்; இது கணபதி உபாசகர் கண்ட பழமொழி. இவ்வளவு விரிவுகளை உள்ளடக்கிக் குறிப்புத் தோன்றக் கூறுகின்ற முறை கோடி பெறும். கேளுங்கள்!

7. அஞ்சு கரமும் அங்குச பாசமும்

பதவுரை:
அஞ்சு கரமும் - ஐந்து திருக்கைகளும்,
அங்குச பாசமும் - (அவைகளுள் இரு கரங்களின் இருக்கும்) அங்குசம், பாசம் எனும் இரு கருவிகளும் (என்றவாறு).

அங்குசம் ஒரு கரத்தில்; பாசம் மற்றொரு கரத்தில் என்று வெளிப்படையாக விளம்பியவர், ஒரு கரத்தில் மோதகம், ஒரு கரத்தில் எழுத்தாணி, துதிக்கையில் அமுத கலசம் என்பவைகளைக் கூறாதே குறிப்பாக உய்த்துணர வைக்கின்றார்.

நீலமேனி

மின்னுகின்றது மேனி. கண்கட்குக் குளிர்ச்சி தரும் நீலநிறம், காண்பவர் மனத்தைக் கவரும். நிமல கணபதியின் நீலநிறம் வெம்மைப் பிறவியை விலக்கும்.

'த்வம் சிந்மய:'
'த்வம்ஜ்ஞான மய:'

- என்றெல்லாம் வரத கணபதியைச் சுருதி வந்திக்கின்றது. நீலமேனியில் நீறணிந்து, வெள்ளை வாரணர் எனப் பெறுகிறார் விநாயகர். அவர்க்குச் சசிவர்ணர் என்றொரு பெயர் மந்திர சாத்திரத்தில் உளது. சசம் - முயல்; சசி - முயல் களங்கம்; சசிவர்ணர் - முயற்களங்கம் கொண்ட சந்திர நிறத்தர் எனவாம். சந்திரனுடைய இயற்கை நிறம் வெண்மை; காட்சி நிறம் கருமை; இந்த இரு நிறக் கலப்பே சசிவர்ணம்.

- எனும் நம்பியாண்டார் நம்பிகள், இச்செய்தியை எவ்வளவு உணர்ந்து ஓதுகின்றார்!

என்று விநாயக புராண லீலா காண்ட மயூரேசர் திருவவதாரப் படலம் குறிப்பிடுவதும் இங்குக் கருதத் தகும். இவ்வளவும் நினைவில் அரும்பப் பின்வருகின்றது ஔவையாரின் ஒரு வரி.

8. நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

பதவுரை:
நெஞ்சிற் குடிகொண்ட - (அடியர்) உள்ளத்தில் (எப்பொழுதும்) தங்கியிருக்கின்ற
நீல மேனியும் - நீலநிறத் திருமேனியும் (என்றவாறு).

கருணைக் கணபதியின் அருளான அங்கங்களை, அன்பொடு மேலும் காண்கின்றார் அம்மையார்.

நான்ற வாய்

பக்குவிகட்குப் பயன் விளைய, அந்தரங்க மந்திரங்களை நுட்பமாக உயிர்க்கும் திருவாய், கீழ்நோக்கித் தொங்கித் தோன்றுகின்றது. இதனைத் தெய்வ யோகிகள் தெளிந்து உணர்கின்றனர்.

மற்று, வேறு ஒரு வகையில் அத்திருவாய், உயிர்களின் கன்மத்திற்குத் தக்க கட்டளையை விறுவிறு என்று வெளிப்படுத்திக் கொண்டே யிருக்கிறது. அரிய நுண்ணிய கன்ம தேவதைகள், சிரமேற்றுக் கட்டளையைச் செயல் செய்கின்றன. யானை முகத்திற்கு ஏற்பத் தொங்கும் திருவாய், இங்ஙனம் அரிய பல செயல்களை ஆற்றுகின்றது.

- என்று விநாயக புராணம் கூர்த்த உணர்வொடு இதனைக் குறிப்பிடுகின்றது; இவைகளை எல்லாம் நினைத்ததும் உள்ளம் எவர்க்கும் உருகும்; அதனை அத்தன் திருவுளமும் அறியும்.

நாற்புயம்

ஏழாவது அடியிற் கூறியபடி ஐந்து திருக்கரங்களைத் தரிசனம் செய்த அன்னைக்கு, கம்பீரமான நான்கு திருத்தோள்களும் காட்சியாகின்றன.

என்ன இது? ஐந்து கைகட்கு நான்கு தோள்களா? ஆம். வியாபகத்துக்குள் அடங்குவது வியாப்பியம். அவ்வகையில் தோளில் கை வியாப்பியம். துதிக்கையுடன் சேர்த்து ஐங்கரன் என்போர் அறவோர். தும்பிக்கை, துதிக்கை என்பதன்றி, தும்பித்தோள், துதித்தோள் என்ற வழக்காறும் இல்லை.

வாழும் அந்த நாலிரு புயங்கட்கும் வணக்கம் செலுத்துகின்றார். நாலிரு புயமா! ஆம். நான்காகிய பெரிய தோள்கள் என்பதே இதன் பொருள். ஏன், பாட்டி குறித்த நாலிரு புயம் என்பதற்கு, எட்டுத் திருத்தோள்கள் என்று பொருள் கொண்டால் ஆகாதோ எனில், அப்படியும் ஒரு திருமேனி உண்டு. எனினும், ஐந்துகரம் என்பதை உணர்ந்து, இப்பொருள் கொள்வதே தகுவது. 'சுக்லாம் பரதர' சுலோகமும் சதுர்ப்புஜமே கூறுகின்றது. தியானத்திற்கு உரியது நால்தோளும், ஐங்கரமும் ஆன கணபதியின் திருவுருவமே என்பது ஆன்றோர் வழக்கு.

திருக்கண்கள்

அப்ராக்ருத சூர்ய, அப்ராக்ருத சந்திர, அப்ராக்ருத அக்கினி மூன்றும் கணபதியினுடைய திருக்கண்கள். அவை பிண்டத்துள். உயர்ந்த இம்மூன்று கண்களாலும், பிராக்ருத (அண்டத்தின்) பரிதி மதி அக்கினிகள் உய்தி பெறுகின்றன; ஐம்பூத நுட்பங்கள் உயிர்க்கின்றன; கணபதியின் கண்ணருளால், இந்த எட்டுப் பொருள்களும் உஜ்ஜீவிக்கின்றன என்று முழங்குகின்றது முதுமறை. அந்த எட்டின் மயம் இந்த உலகம்.

- என்பது அருள்நூல் முடிவு. கனிந்த உணர்வொடு இவைகளைக் காண்கின்றார் பிராட்டியார்.

மும்மதம்

யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. கணபதிக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேலிருத்தலின், மும்மதத்தன் எனல் பொருந்துமோ என வீணாகப் பலகாலம் விவாதித்து, 'மும்மதம் என்பது யானைக்கு அடைமொழி' என்று முடிவு கட்டுவர் சிலர்.

ஒற்றைக் கொம்பு முதலியன எல்லாம் கணபதிக்கே அடையாக, மும்மதம் மட்டும் யானைக்கு அடையாதல் பொருந்துமோ எனில், அதற்கு இதயபூர்வமான விடை பிறவாது.
'மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம்' என்றார் சிவாக்ர யோகிகள். அங்ஙனமேல், முத்தர் போற்றும் முருகனையும் மும்மதன் எனல் வேண்டும்; அங்ஙனம் கூறும் வழக்காறு இல்லை.

'ஐந்தெழுத்தின் பேதமான நாலெழுத்தும், மூன்றெழுத்தும், இரண்டெழுத்தும், ஓரெழுத்தும், காரண பஞ்சாக்கரம், மகா காரண பஞ்சாக்கரம், முக்தி பஞ்சாக்கரம் என வழங்குவதுபோல், மும்மதத்தின் பேதமான ஒரு மதமும் இரு மதமும், மும்மதம் எனப் பெறுகிறது' என்கிறார் மாதவச் சிவஞான யோகிகள்.

இங்ஙனம் மும்மதம் குறித்துத் தம் மதம் தோன்றப் பலவகையாக அறிவுறுத்தியுளர் ஆன்றோர்.

இது குறித்தொரு வரலாறு

வாழ வைத்தவர் வீழ்க; அப்பொழுதான் என் பெருமை தலையெடுக்கும் என்று எண்ணும் ஏழை மதியர் சிலர், அன்னாளினும் இருந்தனர். அவர்களுள் ஒருவன் சலந்தரன். பேறளித்த சிவத்தின் வீறழிப்பேன் என்று விரைந்தான். நற்கயிலையை நண்ணினான். உத்தம வேதியர் உருவில், அவன் முன் விமல சிவனார் வெளியானார்.

'எங்கு செல்கிறாய் அப்பா!' என்றார் இறைவர். பரத்தின் தரத்தை அழிக்கப் பறந்து வருகிறேன் என்றான் பதகன். நகைத்து நோக்கினர் நம்பர்.

'அப்படியா! ஓ! அதற்கு உரிய ஆற்றல் உன்னிடம் உளதா? அதை நான் முதலில் அறியக் காட்டு' என்று அறிவித்தபடியே, வலது திருவடிப் பெருவிரலால் நிலத்தில் வட்டமாகக் கோடு கீறினார் நிமலர்.

'இவ்வட்டத்தைக் கட்டமின்றி எடுத்து, உன் தலைமேல் வைத்துக் கொள்ள வல்லையேல், வேதம் போற்றும் உயர் பரத்தின் வீறழிக்க உரியவன்தான் நீ என்று உணர்ந்து கொள்வம் யாம்' என்று, உள்நகை செய்து உரைத்து நின்றார் உமாபதி.

தோள் ஆற்றல் மிக்க சலந்தரன், அரும் கடின நிலத்தை அகழ்ந்தான். வாவியெடுத்த வட்டத்தைத் தன் தலைமேல் வைத்தான். அவ்வளவில் கிறுகிறுவென்று சுழன்றது அந்த ஆழி; அவ்வளவுதானா! இமைக்கும் முன், தருக்குடைய சலந்தரன் தலையையும் தடிந்தது. விரிந்து பெருகும் என்று எதிர்பார்த்த அவன் வாழ்வு, அன்றோடு வீழ்ந்தது.

சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், ஐங்கரக் கணபதியை ஆராதித்தது. உடனே பிரசந்நராயினர் பிரசந்நவதனர். எமது ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. உய்ந்தது அதன்மூலம் உலகம். சலந்தரனைத் தடிந்த சக்கரம், அரவணையான் திருக்கரத்தில் அமர்ந்தது; ஆழியின் களங்கத்தையும் அகற்றினன் நம் அத்தன்.

- என இவ்வரலாற்றைக் கருத்தைக் கனிவிக்கும் நடையில் கூறுகின்றது காஞ்சிப் புராணம். இது அண்ட வரலாறு.

ஹேரம்பர் அருளாடல், முழுதும் அறிதற்கு உரியவர்கள் யார்?

'அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணமருள'
முழுயானை உருவாக வந்த மும்மத முதல்வனை,

- எனச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றார் சிவஞான யோகிகள்.

'சதகோடி விததாள சதிபாய முகபாகை குறிபாய்கடாம்
மதகோடி உலகேழும் மணநாற வருயானை வலிபாடுவாம்'
- என ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணியும் வரத கணபதியின் மதமணத்தை வாய் மலர்கின்றது.

- எனும் திருவிளையாடல் புராணம், அறக்கருணை, மறக்கருணைகளை இருமதமா உடையவன் எம்பிரான் எனலை ஆர்ந்த பொருளொடு அறிவிக்கின்றது.

அபரஞான, பரஞானங்களே இரு மதம்; அவைகளை, இலக்கணையால் மும்மதம் என்றல் முறையென்று முடிவுகட்டி உரைப்பாரும் உளர்.

மத நீரைக் குறித்தா இவ்வளவு கூற வேண்டும்! ஆம். பாவ நாற்றத்தைப் பாழ்படுத்தி, அருள்மணம் நாறும் அப்பன் மதநீர் என்று மேலுரைத்த பாக்களையெல்லாம் ஊன்றி உணர்தற்கும் புண்ணியம் வேண்டும். மேலும் இம்மணநலம், தரிசன ஆரம்பத்திலேயே கணபதி உபாசகர் காண்தகு அநுபவம்; இதற்கு அயலாய்ப் பிறிது பேசுவோர் மொழிகள், அவர்கட்குப் புறம். இவ்வளவையும் எண்ணியெண்ணி, நெஞ்சம் இளகிப் பாடும் ஔவையின் இரண்டடிகளைப் படித்துப் பாருங்கள்! அப்போதுதான் தெரியும் அந்த ஆனந்தம்!

9. நான்ற வாயும் நாலிரு புயமும்
10. மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

பதவுரை:
நான்ற வாயும் - தொங்கும் திருவாயும்,
நால் இருபுயமும் - நான்காகிய பெரிய திருத்தோள்களும்,
மூன்று கண்ணும் - மூன்று திருக்கண்களும்,
மும்மதச் சுவடும் - மும்மதம் பொழிதலால் உண்டான தழும்புகளும் (என்றவாறு).

அருள் மதநீர் ஒழுகும் அடையாளம், கணபதி திருமுகத்தில் காணப் படுகிறது எனும் பாட்டியின் பாட்டு, நயமுடன் உணரும் நம் மனத்தில் அன்பின் படபடப்பை அளிக்கின்றது அல்லவா!

இரண்டு செவி

எவர்க்கும் இருக்கின்றது இருசெவி; இருந்து என்ன பயன்? பொருளற்ற ஓசையிலேயே உறவு பூண்டு, புனித வாழ்நாள் கழிந்து போவாரும் உண்டு.

இசையெனும் பெயரால் ஒலியிற் பலநாள் உறவு கொண்டு, நாணற்கு உரிய வசைவாழ்வை அடைந்து அந்தோ, நலிவாரும் உண்டு.

இவைகட்கு அயலாய்ப் பயனான அருள்நாதம் கேட்கும் செவியினர் பரிபாகிகள். இந்த மூன்றாவது இனத்தைச் சேர்ந்தவர் நம் மூதாட்டியார். இவர்கட்குத்தான், எம்மானுடைய அருளான கரசரணாதி அவயங்களின் கருணைச் செயல்கள் காட்சியாகும்.

அசைத்து அசைத்து, அப்ராக்ருத வாயுவை அகிலம் அனைத்தும் பரப்பி, பிராக்ருத வாயுவை உயிர்ப்பித்து, ஆன்ம முறையீட்டை யேற்கும் அற்புதத் திருச்செவிகள் இரண்டு, இறைவன் திருவுருவில் இருக்கின்றன. இவ்வளவுதானா! இதோ பாருங்கள் அத்திருச்செவிகள் செய்யும் திருவருளை!

கரையேற விடும் கருணை

மனம் போன போக்கில் சென்றான் ஒருவன்; கண்ணையிழந்தான். கடலில் விழுந்தான். கரை தெரியவில்லை. கலங்குகிறான். நீருள் போகிறான். மேலே வருகிறான்.
திக்கு முக்காடித் திணறுகிறான். அபாயச் சூழ்நிலை. உடல் துடிக்கிறது. உள்ளம் பதைக்கிறது. அலறுகிறான். அழுகிறான். எதிர்பாராத ஒரு பருத்த மரம், அலைமேல் மிதந்து, எதிரே வருகிறது. காண்கிறான். நம்பிக்கை உதிக்கிறது. ஒரே தாவாகத் தாவி, அதைத் தழுவிக் கொள்கிறான். விட்டால் விபரீதம். இனி யாதாயினும் ஆக என்று அதையே இறுகப் பற்றியிருக்கின்றான்.

எதிர்பாராது எழுந்தது புயல். அலைவு அதிகரிக்கும் அது கண்டு அஞ்சினான். பயங்கரமாக வீசிய புயல் காற்று, அவனை ஒரே அடியாகக் கரையில் போய் வீழச் செய்தது. அந்த அதிர்ச்சியில், தன்னை மறந்தான். சிறிது பொறுத்து விழித்தான். என்ன வியப்பு! தான் கரையில் இருப்பதை அறிந்தான். மகிழ்ந்தது மனம். கட்டையை வாழ்த்தினான்; கரையில் ஒதுக்கிய காற்றையும் வாழ்த்தினான். ஆன்மாவின் வரலாறும், ஏறக்குறைய இதைப் போலவே இருக்கிறது பாருங்கள்!

இருண்ட அறிவால், ஒளிமயமான உணர்வை இழந்தது; அதன் பயனாக, ஆழங்காண முடியாத, முன்னும் பின்னும் தள்ளித் துன்புறுத்தும் வினை அலைகள் நிறைந்த, அநியாயப் பிறவிக்கடலில் வீழ்ந்தது ஆன்மா.

அகங்கார மமகாரங்கள், மாயை, காமக் குரோத லோப மோக மதமாற்சரியங்கள், பின்னி அறிவைப் பிணைத்தன. இவைகளால், கடுமையாக மோதியது கவலைப் புயல். வாழ்க்கையாம் வாழ்க்கை! கண்ணீர் வெள்ளத்தில் மிதந்ததுதான் கண்ட பலன். அமைதியை விரும்பி, எப்புறம் நோக்கினாலும் இடர்ப்பாடு; கற்றவர் உறவில் காய்ச்சல்; மற்றவர் உறவில் மனவேதனை. இனிய அமைதிக்கு இவ்வுலகில் இடமேயில்லை. அவதி பல அடைந்து, பொறுக்க முடியாத வேதனையில், கணபதி திருவடிகளைக் கருதுகிறது.

நினைக்க நினைக்க, நினைவில் நிஷ்காமியம் நிலைக்கிறது. அந்நிலையிலிருந்து, பரம கணபதியைப் பாடுகிறது. உணர்வு நெகிழ்ந்து உள்ளம் உருகிப் பாடும் பாக்களை, பாக்களில் உள்ள முறையீட்டை, கேட்டுக் கேட்டுப் பரம கணபதியின் திருவுளம் மகிழ்கிறது. அருளார்வ அறிகுறியாக அமலன் திருச்செவிகள் அசைகின்றன. அந்த அசைவிலிருந்து எழும் பெருங்காற்று, எங்கும் பரவி, பிறவிக்கடலில் தத்தளிக்கும் ஆன்மாவை, வாரிக் கரையில் சேர வீசி விடுகிறது. அந்நிலையில், முத்திக்கரை சேர்ந்தேன் என்று தன்னை மறந்து தனியின்பங் காண்கிறது அந்த ஆன்மா. இந்த வரலாற்றை,

- என்று கனிவொடு பாடுகின்றது காசிகாண்டம்.

தண்மை தந்த தன்மை

முதிர்ந்த பிறவிக்காடு முறிந்தது; சிவஞானத்தீ சிறந்து ஒளிர்ந்தது; அன்பால் உள்ளம் குழைகின்றார் அடியார்கள். பிறவி வெம்மை அவர்களிலிருந்து பெயர்ந்து ஒழிய, குளுகுளு என்று குளிர்ந்து வருகிறது தென்றல். தெய்வக் கணபதியின் செவியசைவிலிருந்து வருகிறது இத்தென்றல் என்பதை ஊன்றியுணர்கின்றார் மேலோர். முறிய வைத்தபோது உக்ரம்; ஒளிர வைத்தபோது சித்கனல்; தென்றலான போது தெய்வத் தட்பம். இம்மூன்று நிலையும், திருச்செவியசைவின் தெய்விக அநுபவம் என்பதை உணர்ந்து மகிழ்கிறது அவர்கள் உள்ளம்.

- எனும் திருப்புனவாயில் தலபுராணம் இங்கு எண்ணற்குரியது. ஊன்றி இவைகளை உணர்வது நலம்.

இலங்கு பொன்முடி

தேவகணம், மாநுடகணம், பூதகணம், விலங்குகணம் முதலிய எக்கணங்கட்கும் முதல்வர் இவர் எனலை அறிவுறுத்துகின்றது திருமுடி. தகாதவர்க்கு விக்கினங்களைத் தருகிறார்; தக்கவர்க்கு விக்கினங்களை விலக்குகிறார் எனப் பொருளாகும் விக்நேஸ்வர நாமமும், பெருந்தலைவர், வழிகாட்டுபவர் எனப் பொருள் தரும் விநாயக நாமமும் கொண்டவர் இந்த விமலர். அதற்கு ஏற்ப,

- எனப்பாடும் கபிலர் பாக்களும்,

'மணி பூத்த மருமத்து நெடுமால் முதல் புலவர் வான்பதம் வேட்டவர்க்கு,
வழங்குவோனும் தனது பதமிரந்தோர்க்குதவு வள்ளலும் தானே யெனும்,
தணி பூத்த தன் தந்தை போல் பிற குறித்ததூஉம் தற்குறித்து என்ற
தொழிலும், தானே கடைக் கூட்டவல்ல செங்கழுநீர்த் தடங்களிற்றை
யஞ்சலிப்பாம்'
- எனும் மாதவச் சிவஞான யோகிகள் காட்டும் குறிப்பும், கணபதி ஒருவரே
முடிபுனைதற்கு உரிய முதல்வர் என்பதை விளக்குகின்றன அல்லவா!

முந்நூல்

திருமால் பரமாக மூன்றுவிதத்தில் முன்னி, ஸ்ரீருத்ரபரமாக ஆறுவிதத்தில் எண்ணி, பிரம்ம, ஆதித்ய, அக்கினி பரங்களாக ஓரொரு தரம் உணர்ந்து, நலமுறும் அவர் தம் தொடர்பை

- என்பது காயத்ரி மந்திரம்.

ய: - எவன்
ந - எமது
தீய - சிந்தனைகளை
ப்ரசோத யாத் - அருள் ஒளிபெற ஊக்குகின்றானோ (அவனே)
வரேண்யம் - மிகச் சிறந்த
சவிது - சிவ சூரியன்;
ஓம் - (அவனே) ஓங்காரம்;
பூ: - உடல் உலகம்
புவ - உயிர் உலகம்
ஸ¥வ: - மன உலகம் (முதலியவைகளில் விளங்குபவன்) ஆன
தத் - அந்த
தேவஸ்ய - இறைவனுடைய
பர்க - அருள் ஆக்கத்தை
தீமஹி - (என்றும்) தியானம் செய்வம்.

இங்ஙனம் பொருளாகும் இம்மந்திரத்தில், தத் ஸவிது என்பதற்கு, அவரவர் தம்தம் மதம் தோன்றப் பொருள் கூறுவர். பெயரையும் உருவையும் குறித்து எவர்க்கும் கவலை வேண்டுவதில்லை. உள்ளத் தூய்மையுடன் இம்மந்திரத்தை உபாசித்துப் பயன் பெறலே வேண்டப் பெறும். தத் ஸவிது என்பதைக் கணபதி பரமாகக் காண்பர் கணபதி உபாசகர். அதற்கான பயனையும் அடைவர்.

கணபதி சாரூபத்தை அளிக்கின்றது காயத்ரி. காலை மாலைகளில் அன்றி, இவ்வுபதேசம் நடுப்பகலில் செய்வதே என்றும் உள்ள மரபு. திருமணக்காலங்களில் மட்டும், காலக் கணக்கைக் காண்பது இல்லை. காலை பிரமன் சொருபம்; மாலை திருமால் சொருபம்; உச்சிப்பகல் உருத்திர சொருபம் என்று சுருதி உரைக்கும். ஆதலின், நடுப்பகல் உபதேசமே பலவிதத்தும் பாராட்டுப் பெறும். அந்தண்மையாளர் இதனை அறிந்துளர்.

'ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்'
- என்று ஏத்தும் அந்த ஏதமிலாத வேதம், கணபதி காயத்ரிப் பொருளை விரித்து
விளம்புகின்றது. இந்த அருமையை எவரும் உணர, முதலில் தாம் உணர்ந்து
பாடுகின்றார், தவம்நிறை அன்பின் தையலார்.

11. இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
12. திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

பதவுரை:
இரண்டு செவியும் - இரு திருச்செவிகளும்,
இலங்கு பொன்முடியும் - (சிரத்தில்) விளங்கும் பொன்னாலாகிய மகுடமும்,
திரண்ட முப்புரி நூல் - மூன்று புரிகளைக் கூட்டி முறுக்கேற்றிய பூணூல்,
திகழ் ஒளி மார்பும் - ஒளி விளங்கும் திருமார்பும் (என்றவாறு).

கணபதியின் திருமேனியில் உள்ள ஒவ்வோர் உறுப்பும், இங்ஙனம் சிறந்த ஒவ்வோர் உபதேசத்தைச் செய்து கொண்டே யிருக்கின்றன. பயனான இப்பகுதிவரை ஊன்றிப் படித்ததும்,


காலமும் இடமும் கடந்த ‘துரிய மெய்ஞ்ஞானம்’

அக்கப்போர்

'எங்கிருந்து வந்தார் கணபதி? வடநாட்டிலிருந்து.’
‘எக்காலத்தில் வந்தார்? சிறுத்தொண்டர் காலத்தில்.'
- இப்படியெல்லாம் வாதப் போரிடுகிறது பகுத்தறிவு.

'சங்க நூல்களில், அவரைப் பற்றிய குறிப்பொன்றும் இல்லை. அதனால், கணபதி
வழிபாடு தமிழக வழிபாடு அன்று' என்றும், 'விலங்கினத்துள், தோற்றத்தால் பெரிய யானையை ஆதிமனிதன் அறிந்தான்; அஞ்சினான். அதை வணங்கி ஓடி ஒளிந்தான்; அன்றுமுதல் எப்படி எப்படியோ மக்கள், தம் பாவனைக்குத் தக்கபடி, அரிய ஓர் உருவில் யானைமுகம் அமைத்து, கனத்த தொந்தியுடன் கணபதியென்று பெயரிட்டு, வாழும் வழி இ·தென்று அறியாமையால் வழிபடலாயினர்' என்றெல்லாம் போகிறது பகுத்தறிவின் போக்கு.

வீட்டில் கணபதி வழிபாடு; கோயிலில் ஆராதனை; நவீன எழுத்துலகில் மட்டும்
பிள்ளையாரை மறுதலிக்கும் போர்; கற்றோரில் சிலரும், இந்த அற்புத உத்தியோகத்தில் ஆர்வம் கொண்டுளர். இல்லாத பகுத்தறிவை இருப்பதாக எண்ணவைக்கும் மலஇருள் வலியை, இது கொண்டும் உணர்கிறது கணபதி உபாசக இதயம். கணபதியின் சொருபச் செய்திதான் யாது? அமைதியொடு இதனையறிதல் நலம்.

உண்மை ஒளி

இது பெரிய உலகம். இதனில், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்
புலன்களில் உறவு கொள்ளும் ஆன்மா, விழிப்பு நிலையில் விறுவிறுத்து, அதற்கு உரிய வேதனையை அடையும். இந்நிலையை 'ஜாக்ராவஸ்தை' என்பர்.

பருவுலகைவிடப் பெரிதான கனவென்னும் மனவுலகில் அது, தடைப்படலின்றி விரைந்து எங்கும் தாவும்; இதைச் 'சொப்பனாவஸ்தை' என்பர்.

இந்த இரண்டிடமும் சலனநிலை. இந்தச் சலனத்தில் சொற்கட்கு ஆட்சி உண்டு.

ஆழ்ந்த உறக்கம் என்னும் 'சுழுத்தி'யில் சொற்களின் ஆட்சி சோர்வடையும். எனினும் இது ஒரு மறதி நிலை. இதனாலும் பயன் இல்லை.

மனம் பிராணனில் அடங்க, சித்தம் அருள் உணர்வில் ஒன்றி நிற்பது 'துரிய' நிலை. இந்த நான்காம் நிலையில் உயிர் கணபதியை உணரும். வித்தக உணர்வை அங்கு வைத்தவர்கள், இரவு பகல் எனும் கால விகாரம் கடந்தவர்கள்; இன்ப துன்பமாம் மன
விகாரத்தை மாய்த்தவர்கள்; இறப்பு பிறப்பாம் உயிரின் விகாரத்தை ஒழித்தவர்கள். என்ன அருமை!

மேலான அந்த உணர்வில் மெய்ஞ்ஞானம் மேவும்; இது 'துரியாதீத' நிலை. அந்த
இடத்தில் அற்புத அநுபவம் பல வெளியாக, அருள் ஒளி நடுவில் அமர்ந்துளன் நம் ஆனைமுக அத்தன்.

வேண்டுவார் வேண்டுவதை அளிக்கும் வீறுடைய அந்த மூர்த்தியை, கல்மனத்தையும் உருக்கும் கற்பகக் களிறு என்று பெயரிடுகிறார் ஔவைப் பிராட்டியார்.

கல்பகம் - கல்பித்துத் தருவது; அரிய சங்கற்பம் எதையும் அருள்பவர் அவர் என்பது
குறிப்பு. களிறு எனும் பெயர், ஆனந்த ஆண்மையை உடைய யானை எனும் பொருளது. இப்பெருமானை, 'புத்தியி லுறைபவ! கற்பகம் என வினை கடிதேகும்'
என்று பாடுகின்றார், திருப்புகழ் ஓதிய தெய்வ முனிவர். அருணை முனிவர் குறித்த புத்தி, அந்தக்கரணத்தின் ஒன்றன்று; துரிய மெய்ஞ்ஞானத்தையே இங்குப் புத்தி
என்கிறார் அப்பெருந்தகை.

- என அப்பர் அருளிய தனித் திருத்தாண்டகம், 'ஞானமூர்த்தி, சொலற்கரிய சூழலாய், கற்பகமே!' என்று விமல அன்புடன் விளித்தல், இங்கு எண்ணத் தகும்.

படைத்தல் முதலிய தொழில் புரியும் பிரமன், மால், உருத்திரன், மகேசன், சதாசிவம் எனும் ஐவரினும் கடந்த துரியசிவத்தின் அபேத அவதாரம் கணபதி என்று காந்தம் கூறும். அப்பெருமானுக்கு அருவம், உருவம், அருவுருவம் என்பன அருட்கோலங்கள். உயரிய இச்செய்திகளை உணர்ந்து,

- எனும் கணபதி உபநிடதம், இங்குக் கருதத் தகும்.

எனவே, தாய் வயிறு காணாத தருமதுரை நம் கணேசப் பெருமான் என்பதும், எந்நாட்டிற்கும் அநாதி நித்திய தெய்வம் அவர் என்பதும், துரிய நிலத்திலிருந்து அப்பெருமான், உயிர்கள் உய்தி அடைய, மெய்ஞ்ஞானத் திருமேனி தாங்கி அற்புதமாக வெளிப்பட்டு, அன்பர்க்கு அருள்பாலிப்பவர் என்பதும் தோன்ற, பின்வரும் இரண்டு அடிகள், இரத்தினச் சுருக்கமாக, எவ்வளவு அழகாகச் செய்திகளை அறிவிக்கின்றன! பயன் விளைவிக்கும் அவைகளை, அமைதியொடு ஓதிப் பாருங்கள்! என்ன ஆனந்தம்!

13. சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
14. அற்புதம் நின்ற கற்பகக் களிறே

பதவுரை:
சொல் பதம் கடந்த - சொற்களின் அளவிற்கு அப்பால் ஆன,
துரிய மெய்ஞ்ஞான - துரிய நில அருள்ஞான சொருபமாக,
அற்புதம் நின்ற - அற்புதமாக இருக்கின்ற,
கற்பகக் களிறே - கற்பகம் போல் அருள் பாலிக்கும் ஆனந்த ஆண்மையுள யானைமுகப் பெருமானே (என்றவாறு).

துரிய மெய்ஞ்ஞான வடிவன் தந்திமுக எந்தை. அதனாற்றான், திரிகரணமும் ஒருமித்தாலன்றி அப்பரமனைத் தரிசிப்பது ஆவதில்லை. ஞானம் முதிர்ந்த பக்குவிகட்கும், ஒரு சில சமயத்தன்றி அச்சேவை இடையறாது நிகழ்வது இல்லை.

'உணர்ந்தார்க்கு உணர்வரியோன்' எனும் திருக்கோவையாரும், 'ஒருகால் தன்னை உணர்ந்தவர்கட்குப் பின் உணர்தற்குக் கருவியாகிய சித்த விருத்தியும் ஒடுங்குதலால், மீட்டும் உணர்வரியோன்' எனும் அதன் உரையும் இங்கு உணரத் தகும்.

அதனாற்றான், 'கருணைவடிவமே! கணபதியே! நின் சேவை தா!' என்று, இடையிடை மிகுதியும் விழுந்து அழுது தொழுது வேண்டுகின்றார் அம் மேலோர்.

காணும் போது கரிமுகம்; ஊன்றி நோக்கினால் ஞான ஆகாயம். அழுந்தி உணர்ந்தால், பிரணவ ஞானக் கனலே பெருமான் திருவுரு; அதனாற்றான்,

-என்று இனிது கூறுகிறது, விநாயகர் இரட்டை மணிமாலை.

'சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புத நின்ற கற்பகக் களிறே'
- எனும் பகுதியைப் படிக்கும் போதே,
'வாதம் கடந்து, பல மாயை கன்ம
வகையும் கடந்து, அவைசெய்
ஏதம் கடந்து பொருளொன்று மின்றி
எழுகின்ற மம்மர் உயிரின்
போதம் கடந்து, துரியம் கடந்த பொருளோயை
யானும் உணர்வேன்!
வேதம் கடந்த திருமேனி கொண்டேன்
விழிகாண முன்னர் வரலால்.'

'குணமொடு குறிபல கொள்கைகொள் ளாயெனில்
அணிமலர் மணமென ஆக்கையின் உயிரெனப்
பணிஉயிர் அறிவெனப் பயிலும்அத் துவிதமாம்
கணபதி நினதியல் காணவல் லார்எவர்?'

- என்று நம் உள்உணர்வு, பார்க்கவ புராணப் பாக்களைக் கொண்டு பரவசம் மிகுந்து பாடுகின்றது அல்லவா!

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறு, ஆன்மவர்க்கம் தன்னை அறிந்துய்ய, அரிய ஒரு திருவுருவம் கொண்டது.

அத்திருமேனியின் உறுப்புகள் ஒவ்வொன்றினும், எண்ணிறந்த தத்துவங்கள் இருக்கின்றன. அத்திருவுருவின் பாதாதி கேசங்களைப் பன்னிரண்டு அடிகளால் பயபக்தி விநயமொடு பாடிய ஔவையார், அப்பெருமானுக்கு உரிய நிவேதனத்தையும் நிமல சிந்தையுடன் நினைவுறுத்துகின்றார்.


முப்பழம்

போகியாக இருந்து, உயிர்கட்குச் சிவபோகத்தை அருள்பவர் அவரே எனலை அறிவிக்க, முப்பழம் நுகர்பவர் அந்த முதல்வர் என்கிறார். முப்பழம் என்பது, அன்பிற் பழுத்த எவற்றையும் உள்ளடக்கி நிற்கின்றது. கொழுக்கட்டையென்பவை, உலக உருண்டைகள்; அண்டங்களையும், இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் மூன்று காலங்களையும் தன்னுள் கொள்பவர் இத்தற்பரர் எனலை, அவை அறிவிக்கின்றன.

மூஷிக வாகனம்

அண்டங்கள் அனைத்தினும் பெரியன், ஆனைமுக அத்தன். பருமையனாக இருப்பது போன்றே, அணுவினும் சிறியன் அந்த அமலன். பானை வயிறும் யானை முகமும் என உளறி வழியாதீர்! வீண் அச்சமும் வேண்டா! சிறிய ஒன்றும் தாங்கும் அத்துணை லேசுடையவன் காண் எம் அப்பன் என்று, ஏசிப்பேசும் வெள்ளை மதியர் நாண மேலும் விளம்புகின்றார் ஔவையார்.

வழிபாட்டு வளர்ச்சிக்குத் தக்க அளவாக, ஆன்ம இதயத்தில் அருள் விளக்கம் பிறக்கும்; அந்நிலையைச் சத்திநிபாதம் என்பர். சக்தி - அருள்; நிபாதம் - ஒழுக்கம். சத்திநிபாதம் படரும் சமயம், சாதகர்க்குக் குண்டலிக்கனல் குடுகுடு குறுகுறு என்று மேலேறிப் பாயும். பெருச்சாளி ஓட்டம் போல் அதிருகின்றது அவ்வொலி. மூலாதாரத்தில் ஓடிப்பாயும் குண்டலிக் கனலேறி அமர்ந்துளர் பிள்ளையார் என்பது 'பிண்ட நுட்பம்'.

புராண வரலாறு

கடுந் தவத்தர் மாகதர். அவர் மைந்தன் கயமுகன். கிரேதாயுகத்தில், இவன் செய்த கிளர்ச்சி அதிகம். படாத பாட்டை இவனால் அமரர் பட்டனர். எதற்கும் வரம்பு உண்டு. அளவு மீறியது அக்கிரமம். வேத விநாயகர் வெளிப்பட்டார். அநியாயக் கயமுகனை அடக்கினார். சாகாவரம் பெற்ற அச்சதுரன், பெருச்சாளி உருவங் கொண்டு பெருமான் முன் வந்தான்.

'இன்று முதல் நீ எமக்கு ஊர்தி' என்று, அவன்மேல் ஏறியமர்ந்தார் ஆனைமுகர்; இது 'அண்ட வரலாறு'.

அண்டம், பிண்டம் அவ்விரண்டும் சமம் என்று அறிந்து மகிழ்கின்றார் அறவோர்.

- எனும் நம்பியாண்ட