|
Thirupur Kumaran திருப்பூர்
குமரன்
தோற்றம் - 4.10.1904; மறைவு - 11.1.1932
Tiruppur Kumaran (1904 - 1932) was an
Indian revolutionary, who participated in the Indian independence
movement. Kumaran was born in a small village in the Tamil Nadu region
of south India. Kumaran died from injuries sustained from a Police
assault during a protest march against the British colonial government.
Kumaran died holding the flag of the Indian Nationalists, which had been
banned by the British. Kumaran is revered as a martyr in Tamil Nadu and
is known by the epithet Kodi Kaththa Kumaran - Kumaran who saved the
Flag.
1932
ஆம் ஆண்டு ‘சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும்
அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள்
அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில்
தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது
காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டைபிளந்து, கையில் இந்திய தேசியக்
கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர்
திருப்பூர் குமரன் அவர்கள்.
குறைந்த வருமானத்தைக் கொண்டு வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அவர் நாட்டுபற்று
மிக்கவர். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் தொடங்கப்பட்ட
அறப்போராட்டத்தில் பங்கேற்றுப் பின்னர் போராட்டக் குழுவிற்கே தலைமையேற்றவர்.
விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை
உயர்த்திட்ட வீர மறவருள் ஒருவரான அவர் கொடிகாத்த குமரன் என்ற பெயருடன் இந்திய
வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பவர்
அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் அரசு கோவை மாவட்டம் திருப்பூரில் நினைவு
மண்டபம் அமைத்துள்ளது.
திருப்பூர்
குமரன் நினைவகம், திருப்பூர்,
கோயம்புத்தூர் மாவட்டம்.
1. நினைவிடம் / நினைவகம் பெயர்
திருப்பூர் குமரன் நினைவகம்
2. முகவரி
திருப்பூர் குமரன் சாலை, இரயில் நிலையம் அருகில், திருப்பூர், கோயம்புத்தூர்
மாவட்டம்.
3. மொத்த பரப்பளவு
1207.50 சதுர மீட்டர்.
4. கட்டிடத்தின் பரப்பளவு
214 சதுர மீட்டர்.
5. அரசுடைமையாக்கப்பட்ட நாள்.
7.4.1991
6. திறக்கப்பட்ட நாள்.
7.4.1991
7. நினைவகத்தைப் பற்றிய குறிப்பு
தற்காலிக நூல் நிலையம் உள்ளது படிப்பகம் செயல்பட்டு வருகின்றது. சுதந்திரப்
போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு
உள்ளது. திருப்பூர் நகராட்சியிலிருந்து 1989ஆம் ஆண்டு செய்தி மக்கள்
தொடர்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
|