தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan >   Theelepan Lives

Theelepan Lives
அணையாத்தீபம்

A poem by Raj Swarnan

19 September 1999

அணையாத் தீபமே..
ஒளிர்க.. உன்
கனவுகள் நனவாகும்
காலம் வரும் நாள்
கடி தூரமில்லை..
அகிம்சைக்கு அடித்தளமிட்ட
அண்ணலின் தேசத்தின்
அகங்காரப் போக்கினால் ..
உன்
ஆருயிர் போனது..
நீரைத் துறந்து
உணவைத் துறந்து
நீ நடத்திய வேள்வி
கற்பனைகளுக்கு
அப்பாற்பட்டது..
உன் குடல்களுடன்
நீ நடத்திய
மரணப் போராட்டம்
உன் இனத்துக்கு
எழுச்சியைத் தந்தது..
நீயும் நானும்
ஒருதாய் மக்களல்லவாவென
ஓர் புத்தபிட்சுவையே
புகழ வைத்தது..
ஐய..
ஒளிர்க..
உன் தியாகச் சுடரின்
ஒளியின் வழியில்
உரிய பாதையைக்
கண்டுகொள்வர் உன் மக்கள்..
உன் உடலை உருக்கி
நீ சொரிந்த நெய்யால் - வான்
உலகே தீய்ந்தது..
ஆயினும்
வல்லான் ஒருவன்
நம் மத்தியில் உளதால்
வானவர் எதற்கென
நினைந்தோ என்னவோ
வந்திலர் தேவர்
இதுநாள் வரையும்..
வருந்தற்க..
நீ தொடக்கிய வேள்வி
இன்னும் முடியவில்லை..
முடியும் நாளில்..
வானவர் வந்து
வரிசையில் நிற்பர்..
அவருடன் சேர்ந்து
உன் தேசமே
அவ் வேள்வியில்
அவி பெற்று வாழும்..
அதை..
வானத்திலிருந்து
உன் தோழர்களுடன் நீ
கலந்தே காண்பாய்..
மெலிந்து வாடிச்
சோர்ந்து போனாலும்
உறுதி குலையாது
நீ ஆற்றிய அந்த
இறுதி உரைகள்
இன்னும் எம் காதுகளில்
அலைபாய்ந்த வண்ணம்..
நல்லூர் முருகன்
வாழ்வது நிசமானால்,
அவன் வாசலில் நீ
நடத்திய யாகத்துக்கு
நற்பலன் கிடைக்கும்..
நம்பு ஐய, நம்பு..

 

Mail Us up- truth is a pathless land - Home