ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள்
பலியாகப்போகும் சமாதானம்
Virakesari - 31 October 2004
இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தொட்டாலே மகா பாவம் என
சிங்கள தேசத்தில் நாளாந்தம் புதுப்புது பரப்புரைகள் செய்யப்படுகின்றன.
பல சிங்கள மேலாண்மைக் கருத்தியலாளர்கள் புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை
வரைவை படிக்காமலேயே அது கிழித்தெறியப்பட வேண்டுமென காரசாரமாக
எழுதிவருகின்றனர்.
புலிகள் கேட்பது போல இந்த வரைபின் அடிப்படையில் அமைதிப் பேச்சுக்களை
மீண்டும் தொடங்குவதற்குப் பதிலாக தமது மாற்று வரைபொன்றைப் பற்றியும்
சமாந்தரமாகப் பேசலாம் என சந்திரிகா அரசு கூறிவருகிறது. ஆனால்لل சிங்கள
தேசத்தில் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை பற்றிக்
கிளப்பப்பட்டு வரும் அனைத்துப் ப10ச்சாண்டிகளும் அடுத்த ஆண்டு ஜனாதிபதி
தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கும் போது தாமாகவே மறைந்துவிடும் என்பதே
உண்மை. எமது பிரச்சினையைத் தீர்த்து வைப்பதை விட சிங்கள அரசியல்
தலைமைகளுக்கு வரப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வெல்வதுلل
எப்படி வியூகம் வகுப்பது என்பன பற்றிய கவலைகளும் அக்கறைகளுமே
மேலோங்கியுள்ளன. இது விடயத்தில் நாம் அனைவரும் தெளிவாயிருக்க வேண்டும்.
அதைவிடுத்து நேரத்துக்கு நேரம் வெளியாகும் சந்திரிகா அரசின்
அறிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் பசப்பு வார்த்தைகளையும் கண்டு
மயங்கி மீண்டும் இலவு காத்த மடக் கிளிகளாவதை நாம் தவிர்க்க வேண்டும்.
புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபின் அடிப்படையில் தாம்
பேசத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது கூறத்
தலைப்பட்டுள்ளமையும் ஒரு நயவஞ்சக நாடகமே. ஏன்? ஜனாதிபதித் தேர்தலில்
சிங்கள வாக்குகளை மட்டுமே நம்பி வெல்லக்கூடிய வாய்ப்பு ஐக்கிய தேசியக்
கட்சிக்கோ சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கோ தற்போது இல்லை. ஹெல உறுமயلل
ஜே.வி.பி. எப்படியான நிலைப்பாடு எடுத்தாலும் சிறிலங்காவின் ஜனாதிபதித்
தேர்தலில் சிங்கள தேசத்தின் வாக்கு பிரிவது தவிர்க்க முடியாது. இதற்கு
முக்கிய காரணம் துரிதமாக உயர்ந்து செல்லும் வாழ்க்கைச்செலவு சந்திரிகா
அரசு மீது சிங்கள மக்களிடையே ஏற்படுத்திவரும் வெறுப்பாகும். இதேவேளை
சந்திரிகா - ஜே.வி.பி அரசின் மீது உள்ள வெறுப்பால் தன்பக்கம்
திரும்பக்கூடிய சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி ஜனாதிபதித் தேர்தலை
வெல்லமுடியாது என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவாகத்தெரிகிறது.
ஆகவே தற்போது இரு பெரும் சிங்களக் கட்சிகளும் ~பிரேமதாசா
சூத்திரத்தின்| மீது நாட்டம் கொள்கின்றன. 1988ம் ஆண்டிலே அப்போது
ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜே.வி.பி. யும்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாக சிங்கள மக்களிடையே பெரும் அரசியல்
கிளர்ச்சியொன்றைக் கிளப்பிக் கொண்டிருந்தன. இலங்கை இந்திய
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம் சிங்கள் தேசத்தை ஐக்கிய
தேசியக்கட்சி இந்தியாவிற்கு விற்றுவிட்டது என அவர்கள் பரப்புரை
செய்தனர். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களுக்கு
ஜே.வி.பி. தடைவிதித்தது. அவற்றை மீறி விற்ற ஒரு சில வர்த்தகர்கள்
சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இப்படியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மாபெரும் வெறுப்பலையொன்று
வீசிக்கொண்டிருந்த நேரத்தில் தான் பிரேமதாசா அதன் ஜனாதிபதி வேட்பாளராக
நிறுத்தப்பட்டார். பிரிந்த சிங்கள வாக்கின் ஒரு பகுதியோடு பிரிபடாத
வடக்குக் கிழக்கு தமிழ் வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும்
இணைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்குத் தேவையான மொத்த வாக்கின்
50 சதவீதத்துக்கு மேல் பெறலாம் என்பது அப்போது பிரேமதாசா போட்ட கணக்கு.
இதையே சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை வெல்வதற்கான பிரேமதாசா
சூத்திரம் என அந்நேரத்தில் சில சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் அழைத்தனர்.
சிங்கள தேசத்தில் எப்படியான எதிர்ப்பலைகள் கிளம்பினாலும் ஐக்கிய
தேசியக் கட்சிக்கு தென்னிலங்கையில் அடிப்படையில் மாறா வாக்கு
வங்கியொன்று இருக்கின்றது. மொத்த வாக்காளர் தொகையில் இது 30-35 சதவீதம்
எனக் கருதப்படுகிறது. இதோடு பிளவுபடாத தமிழர் தாயக மற்றும் முஸ்லிம்
வாக்குகளை பெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள தேசத்தில்
ஏற்படக்கூடிய தனக்கெதிரான எந்த அலையையும் மேவி ஜனாதிபதித் தேர்தலில்
வெல்லலாம் என பிரேமதாசா சூத்திரம் கூறுகிறது.
1988ம் ஆண்டிலே சிங்கள தேசத்தில் வீசிக்கொண்டிருந்த இந்திய
வெறுப்பலைக்கு மத்தியில் பிரேமதாசாவும் அவருடைய அரசியல்
மதியுரைஞர்களும் இரகசியமாக இந்தியத் தூதரகத்தை அணுகினர். வடக்குக்
கிழக்கின் பிரிபடாத தமிழ் வாக்கு மொத்தமாக ஜனாதிபதி வேட்பாளர்
பிரேமதாசாவுக்கு விழுவதற்கு அப்போது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த
இந்திய இராணுவம் ஆவன செய்யவேண்டுமென அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என்.
தீட்சித்திற்கு சில தூதுகள் அனுப்பப்பட்டன. வடக்குக் கிழக்கில்
விழப்போகும் வாக்குகள் பிரேமதாசாவுக்கு வெற்றியை நிச்சயம்
பெற்றுக்கொடுக்குமெனவும் இதன் காரணமாக ~அவர் இந்தியாவிற்கு என்றும்
நன்றியுடையவராக இருப்பார்| ("ர்ந றழரடன டிந நவநசயெடடல பசயவநகரட வழ
ஐனெயை") எனவும் அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் ஒருமுறை 1988
ஜனாதிபதித் தேர்தலைப்பற்றி காரசாரமாக உரையாடிக்கொண்டிருந்த போது
குறிப்பிட்டார். அவர் கூறியது போலவே அந்த ஜனாதிபதித் தேர்தலில்
பிரேமதாசாவுக்கு வடக்கு கிழக்கில் அமோகமான வாக்குகள் கிடைத்தன.
இந்தியப் படைகள் பெட்டி பெட்டியாகத் திணித்த இந்த வாக்குகளே அவருடைய
வெற்றியைத் தீர்மானித்தன. இது முடிந்த கையோடு கொழும்பில் நான்
தற்செயலாக வரதராஜப்பெருமாளைச் சந்திக்க நேர்ந்த போது அவரும்
பிரேமதாசாவைப்பற்றி தீட்சித் சொன்ன அதே வசனத்தைச் சொன்னார். தேர்தலில்
வெற்றிபெற உதவியதற்குக் கைமாற்றாக பிரேமதாசா மாகாணசபை திறம்பட இயங்க
தனக்கு ஆவன செய்வார் என வரதராஜப்பெருமாள் சொன்னார்.
இதையொட்டித்தான் அந்த நேரத்தில் ~நினைத்ததை முடிப்பவர் பிரேமதாசா|
("Pசநஅயனயளய ளை ய பழ பநவவநச") என அவருக்கு பெருமாள் புகழாரம்
சூட்டினார். தனது நன்றிக்கடனை நிறைவேற்ற வடகிழக்கு மாகாண சபைக்கு
பிரேமதாசா வாரி வழங்கிடுவார் என கனவு கண்டார் பெருமாள். அந்த
உற்சாகத்தில் தமிழர் தலைநகர் திருமலையில் சிங்கக் கொடியை ஏற்றி அவர்
~சாதனை| படைத்தார். ஆனால் நடந்ததென்ன? தனது மாகாண சபைக்கு
கொடுக்கப்பட்ட எள்ளளவு அதிகாரங்களைக் கூட பிரேமதாசாவின் ஆட்சி கபளீகரம்
செய்துவிட்டதென அவர் புலம்பியதும் இனித் தமிழீழம் அமைப்பதைவிட வேறு
வழியில்லை என்று பிரகடனம் செய்து இந்தியாவிற்கு ஓடியதும் நாம் யாவரும்
அறிந்த வரலாறு. ~ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி| கடந்த பின்னே நீ
யாரோلل நான் யாரோ?| என்ற கதையை சிங்கள தேசம் அன்று மீண்டுமொருமுறை
அரங்கேற்றியது.
அந்தப் பிரேமதாசா சூத்திரத்தை மீண்டும் தூசுதட்டி கையிலெடுக்க வேண்டிய
கட்டாயம் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா
சுதந்திரக்கட்சிக்கும் தோன்றியுள்ளது. அது எப்படியென்று பார்ப்போம்.
ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் இலங்கையின் மொத்த வாக்குகளில்
50சதவீதத்துக்கு மேலான தொகையை ஒரு வேட்பாளர் பெறவேண்டும். இந்த ஆண்டு
ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்
பார்த்தால் வெற்றி வாய்ப்பு யாருக்கென்பதை நாம் கணக்கிட்டுப்
பார்க்கலாம்.
இந்தத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி - ஜே.வி.பி. கூட்டு பெற்ற
மொத்த வாக்கு 4لل223لل970 அதாவது 45.60 சதவீதம். ஐக்கிய தேசியக் கட்சி
3لل504لل200 அதாவது 37.83 சதவீதம். ஜனாதிபதித் தேர்தலில் ரணில்
விக்கிரமசிங்கா வெல்வதென்றால் மேலும் 12.17 சதவீத வாக்குகளைப்
பெறவேண்டும். விலைவாசி ஏற்றத்தால் சந்திரிகா அரசு மீது ஏற்பட்டுள்ள
வெறுப்பின் காரணமாக சராசரி 5-6 சதவீதமான வாக்கு ஐக்கிய தேசியக்
கட்சியின் பக்கம் தற்போது சாய்ந்துள்ளது எனக் கொண்டாலும் இன்னும் 6-7
சதவீத வாக்குகளை தேட வேண்டிய கட்டாயம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு
உண்டு. 2004 ஏப்ரல் தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற மொத்த வாக்கு
633لل654 அதாவது 6.84 சதவீதம்.
இது பிரிபடாத மொத்த வாக்காக இருக்கிறது. இதைக் கபளீகரம் செய்யாமல்
ஜனாதிபதித் தேர்தலில் வெல்வது கடினம் என ஐக்கிய தேசியக்கட்சி கவலை
கொள்கிறது. ஆகவே அது புலிகளை வசப்படுத்தும் நோக்கத்தில் பல வேலைகளைச்
செய்யவும் ஆசைவார்த்தை பேசவும் இப்போதே தொடங்கிவிட்டது. ஏதோ ஒருவகையில்
புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில்
தமிழ்க் கூட்டமைப்பின் வாக்கு தனக்கே கிடைக்குமென சிறிலங்கா
சுதந்திரக்கட்சி கணக்குப் பண்ணுகிறது. இவையெல்லாம் இறுதியில்
ஆற்றைக்கடந்த கதையாகத்தான் இருக்குமென்பதில் யாரும் எந்தச் சந்தேகமும்
கொள்ளத்தேவையில்லை.
|