Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings by Dharmeratnam Sivaram (Taraki) > Sinhala Nation seeks Foreign Military Intervention

Selected Writings by Dharmeratnam Sivaram (Taraki)

அந்நிய இராணுவ தலையீட்டை விரும்பும் சிங்கள தேசம்
5 September 2004
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு

To read the Tamil script you may need to download and install a Tamil Unicode Font from here


இலங்கையின் படைவலுச் சமநிலை பற்றி கடந்த வாரம் பார்த்ததில் ஒரு முக்கியமான கேள்வி தோன்றுகிறது. அதாவது புலிகள் எவ்வளவுதான் தமது படைவலுவை சிறிலங்கா இராணுவத்திற்கு சமனானதாக பேணிவந்தாலும் எமக்குச் சார்பற்ற எந்தவொரு சிறு வெளிநாட்டுப் போர்த் தலையீடும் அதை இலகுவாக மாற்றிவிட வாய்ப்பிருக்கிறதே என்ற கேள்வி போனகிழமைக் கட்டுரையை கவனமாகப் படித்த எவருக்கும் கட்டாயம் தோன்றியிருக்கும். இந்தச் சிக்கல் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் தற்போது நிலவும் அமைதிச் சூழலுக்கு அடிப்படையாக புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான போர்நிறுத்த ஒப்பந்தமே அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அத்திவாரமாக இருதரப்பிற்குமிடையிலான போர்வலுச் சமநிலையே இருக்கின்றது. எனவே இச்சமநிலை பாதிக்கப்பட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் நிலைப்பது கடினமாகிவிடும். இந்தவகையில் சிறிலங்கா அரசு புலிகளுடன் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு முன்னர் வெளிநாடுகளோடு அது செய்துகொள்ளக்கூடிய எந்தவொரு நேரடிப் படைத்துறை ஒப்பந்தமும் (Defence Treaty) இலங்கையின் படைவலுச் சமநிலையை பாதிக்கும்.

இதனாலேயே புலிகளோடு ஒருபுறம் அமைதிப் பேச்சுக்களை நடத்திக்கொண்டு மறுபுறம் அமெரிக்காவோடும் இந்தியாவோடும் படைத்துறை ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட கடும் பிரயத்தனங்கள் இலங்கையின் படைவலுச் சமநிலையையும் அதன் காரணமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் பாதிக்குமென அந்நேரத்தில் புலிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

புலிகளுக்கும் தனக்குமிடையில் படைவலுச் சமநிலை காணப்படுவதாலேயே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது ஒரு இராணுவத் தீர்வை திணிக்கலாம் என்ற தனது பாரம்பரிய எண்ணத்தை கைவிட்டு அரசியல் தீர்வில் நாட்டங்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுகின்றது என்ற கருத்து இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இலங்கை அவதானிகளிடம் காணப்படுகிறது. இலங்கையின் படைவலுச் சமநிலை தமக்குச் சார்பாக இருக்கின்றது என சிறிலங்கா அரசும் அதன் பின்னிற்கும் சிங்கள பௌத்த மேலாண்மையாளரும் திடமாக நம்புவார்களேயானால் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை காண பின்னடிப்பார்கள் என்ற உண்மையையும் சில நாடுகள் உணரத் தவறவில்லை.

அமெரிக்காவோடு Access and Cross Servicing Agreement என்ற பாரதுரமான படைத்துறை ஒப்பந்தத்தை செய்துகொள்ள ஐக்கிய தேசியக் கட்சி காட்டிய அவசரமும் வேகமும் அதேகாலத்தில் பேச்சுவார்த்தையில் காட்டவில்லை என்ற உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அதேபோலத்தான் ரணில் விக்ரமசிங்கவின் அரசு இந்தியாவுடன் படைத்துறை கூட்டுறவு ஒப்பந்தத்தைச் செய்ய பெருமுனைப்புடன் செயற்பட்டது. மேற்படி முயற்சிகளை சந்திரிகா அரசும் தொடர்வதை நீங்கள் அறிவீர்கள்.

இத்தீவின் படைவலுச் சமநிலையை தமது சொந்த முயற்சியில் உள்நாட்டிலேயே தனக்குச் சாதகமாக திருப்பமுடியாது என்பதை தீச்சுவாலை நடவடிக்கையின் தோல்வியோடு நன்றாக உணர்ந்துகொண்ட சிங்களதேசம், வெளிநாட்டுத் தலையீடு மட்டுமே இனி புலிகளின் படைவலுவை குறைக்க உதவும் என திடமாக நம்பிச் செயற்படுகின்றனர். அதாவது வெளிநாடுகளோடு செய்கின்ற படைத்துறை ஒப்பந்தங்கள் மூலம் தமக்குச் சாதகமாக இலங்கையின் படைவலுச் சமநிலையை மாற்றவேண்டும் என்பதில் சிங்களத் தலைமைகளுக்கு உள்ள ஆர்வம், அரசியல் தீர்வை நோக்கி செயற்படுவதில் இல்லை என்ற உண்மைபற்றி தமிழருக்கு எவ்விதமான மயக்கமும் இருத்தலாகாது.

வெளிநாட்டு இராணுவத் தலையீடு மட்டுமே தமது கையை மீண்டும் மேலோங்க வைக்கும் என சிங்கள தேசம் நம்புவதால் இவ்வாறானதொரு சிக்கல் எதிர்காலத்தில் தோன்ற வாய்ப்புண்டா என்பதையும் அவ்வாறு ஏற்படக்கூடிய ஒரு தலையீட்டை நாம் முன்தடுக்க முடியுமா என்பதையும் ஆராய்ந்தறிய வேண்டிய கட்டாயம் எமது சமூகத்திற்கு இன்றுண்டு.

இவ்விடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பிரித்தானியர் இத்தீவை விட்டகன்ற பின்னர் இன்றுவரையிலான 56 ஆண்டுகளில் சிறிலங்கா அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டமே தமிழ் மக்களுக்கு அரைகுறைச் சுயாட்சியை வழங்கவேனும் சிங்கள அரசியற் தலைமையால் கொண்டுவரப்பட்ட ஒரேயொரு சட்டமாகும். இதுவொரு உப்புச் சப்பற்ற பம்மாத்துச் சுயாட்சியையே தந்ததாயினும் இதை நடைமுறைப்படுத்துவதற்குக் கூட தமிழீழ விடுதலை இயக்கங்களின் போரியல் அழுத்தங்களுக்கு மேலாக இந்தியாவின் நேரடி வான்படை அச்சுறுத்தலும் தேவைப்பட்டன என்ற வரலாற்று உண்மையை நாம் ஆராய்வோமேயானால் படைவலுச் சமநிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். மேலும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், தனியார் வீடுகள், வயல்கள், தோட்டங்கள் என்பவற்றிலிருந்து கொள்கையளவில் வெளியேறவும் தமிழ் மக்களை கால் நு}ற்றாண்டு காலமாக சீரழித்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தவும் சிறிலங்கா அரசு உடன்பட்டதற்கு ஒரேயொரு காரணம் 2001 ஏப்ரல் மாதம் தோன்றிய படைவலுச் சமநிலையே என்ற விடயத்தை மேற்குறிப்பிட்ட வரலாற்று உண்மையோடு தொகுத்துப் பார்க்க வேண்டும்.

அங்ஙனம் பார்க்கையில் இலங்கையின் படைவலுச் சமநிலை தமிழருக்குச் சார்பாக மேலோங்கினால்தான் இனி சிங்கள தேசம் ஒரு நியாயமான தீர்வை எம்முடன் பேசி நடைமுறைப்படுத்த முன்வரக்கூடும் என்ற தரவு பெறப்படுகிறது. அதாவது ஏப்ரல் 2001இலிருந்து தோன்றிய படைவலுச் சமநிலை இராணுவ வழிமுறைகளின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணலாம் என்ற சிங்கள தேசத்தின் நம்பிக்கையை சற்று வலுவிழக்கச் செய்துள்ளதே தவிர நியாயமான அரசியல் தீர்வொன்றை தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற எண்ணத்தை அது சற்றேனும் ஏற்படுத்தவில்லை என்ற மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையே போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை வெளிப்பட்டு நிற்கின்றது.

எனவே தமிழ் மக்களுக்கு ஏற்புடைய ஓர் அரசியல் தீர்வை வழங்கியே ஆகவேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை சிங்களதேசத்தில் ஏற்படுத்துவதானால் இலங்கையின் படைவலுச் சமநிலையில் தமிழ்த்தரப்பின் கை இன்னும் கணிசமான அளவு மேலோங்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்ற விடயம் வருங்காலங்களில் இன்னும் தெளிவாகத் தென்படும் என்பதில் ஐயமில்லை.

தமிழர் தரப்புப் படைவலு இனி கணிசமாக - அதாவது சிங்கள தேசத்தை ஓர் அரசியல் தீர்வை நோக்கி அழுத்தக்கூடிய வகையில் - மேலோங்க வேண்டுமாயின் புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போதுள்ள தமிழர் தாயகப் பரப்பு மேலும் விரிவடைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.

அரசியல் தீர்வை நோக்கிய முன்னெடுப்புகளை காலவரையறையின்றி இழுத்தடித்தால் மேற்படி கட்டாயத்திற்கு புலிகள் ஆட்படுவர். அப்படி அவர்கள் ஆட்பட்டால் அதை சாட்டாக வைத்து முழுமையான அல்லது வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு இராணுவத் தலையீட்டை ஏற்படுத்தி இலங்கையின் படைவலுச் சமநிலையை நிரந்தரமாக தம்பக்கம் திருப்பிக் கொள்ளலாம் என பல சிங்கள பௌத்த மேலாண்மையாளர் இன்று கணக்குப் போடத் தொடங்கியுள்ளனர்.

இங்கு ஒரு வரலாற்றுத் திருப்புமுனையான கேள்வியை அல்லது இருதலையை (Dilemma) தமிழர் தேசம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதாவது சிங்கள தேசத்தை ஒரு நியாயமான அரசியல் தீர்வை நோக்கி அசைப்பதற்கு இலங்கையின் படைவலுச் சமநிலை எமக்குச் சார்பாக திரும்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துவதானால் அதையே சிங்கள மேலான்மைளாளர் எமக்கெதிரான ஒரு பொறியாகப் பயன்படுத்திவிடுவார்கள் என்பதே நாம் இன்று எதிர்கொள்ளும் இருதலை.

எமக்கு தவிர்க்கமுடியாதபடி ஏற்படக்கூடிய வரலாற்றுக் கட்டாயத்தை பயன்படுத்தி வெளிநாட்டு இராணுவ தலையீடு இங்கு ஏற்படவும் அதன் மூலம் எமது உரிமைப் போராட்டம் பலவருடங்கள் பின்தள்ளப்பட்டு எமது அரசியல் பேரம்பேசும் வலு ஒரேயடியாக முடக்கப்படவும் ஆவன செய்ய சிங்கள மேலாண்மையாளர் தவற மாட்டார்கள் என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

தற்போது அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சிங்கள தேசம் காலவரையறையின்றி தொடரப்போகின்றது என்பதற்கான அறிகுறிகளே நு}ற்றுக்கு தொன்னூற்றொன்பது வீதம் காணப்படுகின்றது. இந்த நிலையில் நாம் மேற்கூறிய அரசியல் இராணுவப் பொறியை எவ்வாறு சரியாகப் புரிந்துகொண்டு தகர்க்கப்போகிறோம் என்பது நாம் ஒவ்வொருவரும் ஆராயவேண்டிய விடயமாகும். ஏனெனில் எதிர்காலத்தில் இது நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நேரடியாகவும் பயங்கரமாகவும் பாதிக்கக்கூடிய விடயம் என்பதை நாம் உணர வேண்டும்.

இதுசம்பந்தமாக மூன்று விடயங்களை விரிவாக ஆராயவேண்டியுள்ளது.

ஒன்று - தமிழ்த் தரப்பிற்குச் சார்பாக இலங்கையின் படைவலுச் சமநிலை கணிசமான அளவு திரும்புகின்ற ஒரு நிலை ஏற்படும்போது இந்தியா அதைத் தடுக்க எந்தளவிற்கு இராணுவ ரிதியாகத் தலையிட தயாராகவுள்ளது என்ற விடயம்.

இரண்டு - மேற்படி நிலை ஏற்படும்போது இந்தியா தலையிடாவிடின் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் சிறிலங்கா அரசின் சார்பாக தலையிட எந்தளவு வாய்ப்புண்டு என்பது.

மூன்று - எந்தவொரு வெளிநாடும் இங்கு இராணுவ ரிதியாகத் தலையிட முற்றாகத் தயங்குமளவிற்கு தமிழர் தரப்பிடம் சமச்சீரற்ற முன்தடுப்பு வலு (Asymmetrical Deterrence Capability) எந்தளவிற்கு உள்ளது என்ற விடயமாகும். இவற்றை வருகின்ற கிழமைகளில் பார்ப்போம்.


English Translation by M.Thiru, Singapore

An important question arises when we look at the military balance in SriLanka. Though the LTTE maintains its military strength on par with Sri Lankan Army (SLA), any military intervention by a foreign country which does not sympathise with the Tamils, can easily tilt the balance in favour of the Sri Lankan Government. (SLG) This question would have arisen in the minds of readers who read our analysis last week. This complex peace process issue was pointed out by us many times when the UNP was in power.

The Cease Fire Agreement ( CFA) is the basis for the current peace environment prevailing in SL. The Military balance between the SLA and the LTTE is the foundation for this CFA. If this balance is tilted in favor of either of the parties, the CFA will be hard to maintain. Therefore, in this respect, any Defense Treaty signed between a foreign country and SL, before a negotiated permanent settlement is reached between the LTTE and the SLG, will affect the military balance. The LTTE strongly opposed the many attempts made by the UNP Government to enter into a Defense Treaty with the US and India, when the peace talks were going on. The reason was that such treaties will affect the military balance and thus the CFA.

Because of the current military balance alone, the SLG has given up their traditional idea of the need for military action against the Tamils and are interested in a political solution. This is the view of Sri Lanka watchers from many foreign countries including India. If the SLG, and the Sinhala Buddhist supremacists behind it, believe firmly that the military balance is in their favour, then they will retreat from offering any political solution acceptable to the Tamil people. Only some foreign countries have not failed to understand this hard fact.

We have to focus on the fact that the UNP Government did not show the same urgency and expediency with the peace talks as they did with trying to sign that Access and Cross Servicing Agreement with the US. Similarly, Ranil's government made a great effort to sign a Defence Treaty with India. The same efforts are being continued by Chandrika's Government.

After the "Gini... "[Agni Kheela battle of 2001] defeat, the Sinhala Nation has realised they cannot tilt the military balance in their favour with their own effort. Now they strongly believe that only with the help of foreign military involvement can they weaken the LTTE's current military strength. The Sinhala nation is studiously acting along that line now. Sinhalese Leaders are now not showing the same interest in finding a political solution as they are to signing defence treaties with foreign countries. Tamils should not have any confusion in understanding these hard facts.

Since the Sinhala nation strongly believes in foreign military intervention to have an upper hand over Tamils, a critical stage has come, where we the Tamil community has to analyse and find out if there will be any possibility of foreign involvement. If so, what measures do we have to take and how can we prevent such a difficult situation arising?

At this juncture we have to note one thing. Since the British left this island, the only constitutional change brought by the Sinhalese political leaders in the last 56 years, to grant at least half-baked self-rule to the Tamils, is the 13th Amendment. Though the 13th Amendment gave a bland, pseudo self-rule, the implementation of the Amendment needed pressure from the presence of the Indian Air Aorce, combined with pressure from various Tamil liberation organizations. If we analyse these historical facts we can realise the importance of military balance.

The reason for the agreement in principle for the withdrawal of the SL Armed Forces from the schools,temples & churches, hospitals, private houses, paddy fields & farmlands and the reason for agreeing to temporarily suspend the Prevention of Terrorism Act which took away the freedom and normal life of the Tamil-speaking people for the last 25 years, is solely due to the military balance achieved in April 2001. Thus, again, we have to look at the withdrawal by correlating it to the historical facts mentioned earlier.

If we look accordingly, we would arrive at the conclusion that, only if we tilt the military balance in favour of the Tamils, will the Sinhala Nation come for a talk with us to agree and implement an equitable political solution.

The undeniable fact which emerges from the period starting from the date of signing of the CFA to date is: The current military balance reached in April 2001 has only weakened the Sinhala Nation's belief that there is a solution to the ethnic issue through war. But it has not transformed the Sinhala nation's conscience for them to think seriously about granting a just political solution acceptable to the Tamil-speaking people.

Therefore, if we have to create a mindset among the Sinhala nation, that they have no choice but to grant a just political solution acceptable to Tamil people, then there is a compulsion for the Tamils to take an upper hand in the military balance. There is no doubt this will become more clear in the near future.

If the Tamils' military strength is what is necessry to push the Sinhala nation to move towards a political solution, then the Tamils' traditional homeland areas occupied by the LTTE may have to be extended by necessity.

If the Sinhala nation drags the peace process indefinitely, the LTTE will be compelled to do the above. If the LTTE is compelled to do that, with that as an excuse, the Sinhala Buddhists supremacists will try to tilt the military balance permanently in their favour, with full or limited support from foreign military intervention. These Sinhala Buddhist supremacists have started doing their calculations along these lines already.

In this current situation, the Tamil nation has been forced into a dilemma will result in a historical turning point. That is, if we shift the military balance in our favour and compel the Sinhala nation to move towards a just political solution, then that move could result in Sinhala supremacists using it as a trap against us. That is the dilemma we face today.

If such an unavoidable historical compulsion happens, the Sinhala supremacists would not fail to try to use foreign military intervention to push back our liberation struggle by many years or even permanently crush our strength and ability to engage in political negotiations. We have to take these facts under consideration.

The Sinhala nation is going to continue with the current stalemate in the peace process for an indefinite period. This is evident from the 99% telltale signs that have been emerging. In such a current situation, how are we going to evaluate the above-said political cum military trap and find an effective solution to destroy such a trap? This is what each and every one of us has to analyse because in the future it is going to seriously affect the lives of each and every one of us either directly or indirectly.

In view of the above, there are three issues we have to analyse in depth :

1. To what extent will India militarily intervene/interfere, if the current military balance tilts substantially in favour of the Tamils side?

2. To what extent or what is the possibility of the US and its allies interfering in support of the SLG, in case India does not interfere in a situation mentioned above in 1?

3. What asymmetrical deterrence capability does the Tamils side have to dissuade any foreign country from militarily interfering in support of the SLG ?

We shall look into the above issues in the coming weeks.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home