Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings by Dharmeratnam Sivaram (Taraki) >கருணா ஓடியது எதற்காக?

Selected Writings by Dharmeratnam Sivaram (Taraki)

கருணா ஓடியது எதற்காக?

Daily Mirror 27 July 2004
தமிழில் - கந்தையா நவரேந்தினர்,
நன்றி: ஈழமுரசு


கருணா இவ்வளவு துரித கதியில் இழிவுடனும் அவமானத்துடனும் பேரிகழ்வுடனும் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் தான் என்ன? அந்த 40 நீண்ட நாட்களாகப் பரபரப்பாக அரங்கேற்றப்பட்டுவந்த தனது வீர பிரதாபங்கள் அனைத்தையும் முற்றாகக் கைவிட்டு, எந்த வேகத்திலேயே தப்பி ஓடினார் இந்த கொள்கை துறந்த - இயக்கத்தை விட்டோடிய தளபதி அந்த நாட்களில் இவரால் வெளிக்காட்டப்பட்ட வியக்கத்தக்க காட்சிச்சாலை விளக்கமேலாண்மை திறனை ஊக்குவித்து வந்த கொழும்பு-சர்வதேச ஊடகவியலாளர்துறைகளைச் சேர்ந்த சிலர், இப்பொழுது ஐயத்துக்கிடமில்லாமல் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எதற்காக அவர் வந்த கதியிலேயே அனைத்தையும் கைவிட்டு ஓடினார் என்ற வினாவே பலதரப்பட்ட சிங்களதேசிய இனவாதிகளிலும் தன்னடக்கமுள்ள எழுத்தாளர்களினதும் மூளைகளை எல்லாம் நச்சரித்துக்கொண்டிருக்கும் வினாவாகும். வேலுப்பிள்ளை பிரபாகரனின் பலம் வாய்ந்த பாரிய இராணுவ அமைப்பிற்கெதிராகப் போர்க்கொடி தூக்கி இவருக்கு நம்பிக்கை அளித்தது எது என்ற விளைவையே நாம் முதலில் வினவவேண்டும். தன்னுடைய உடைமையில் உள்ள ஆயுதங்கள், வன்னியிலுள்ள பாரிய பீரங்கித் தொகுதிகளுக்கும் எறிகணைகளுக்கும் எந்தவிதத்திலும் ஈடாகா என்பது கண்டிப்பாகக் கருணாவிற்குத் தெரியும். அவரது படைத்தளபாடங்களின் தேவை நிரப்பீடு வரையறைக்குட்பட்டது.

வன்னியிலுள்ள உயர் இராணுவ கட்டளை பீடம் வரையறையில்லாத்தேவை நிரப்பீடுகளைக் கொண்டது. அதேவேளை மேலும் கூடுதலான ஆயுத தளபாடங்களைக் கொண்டுவரும் தகமையும் மார்க்கமும் வன்னியிடம் உள்ளது. புலிகளது நுணுக்கமும் நவீனத்துவமும் வாய்ந்த கட்டளை பீடமும் முறையும் வடக்கிலேயே அமைந்துள்ளன. கடந்த 2 வருடங்களாகப் புலிகள் இந்த துறைகளில் கண்ட அளப்பரிய முன்னேற்றத்தைக் கருணா அறிந்திருக்க முடியாது. ஆனால் இதுபற்றி தனது தோழர்கள் மூலம் கேட்டறிந்து கொள்வதற்காக வாய்ப்பு அவருக்கு இருந்திருக்கலாம். வன்னியில் புலிகளால் நவீன ஆயுத தளபாட முறைகள் பெறப்பட்டுள்ளன என்பதையும் கருணா தெரிந்து வைத்திருப்பார்.

எனினும், தனது சொந்த மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களைத் தனது பிடிக்குள் வைத்திருக்கமுடியும் என்று அவர் மிகவும் கூடுதலாகவே நம்பியிருந்தார். கிழக்கு மாகாணப் ப10கோள அமைப்பும், கொழும்பிற்கும் புலிகளுக்குமிடையே இருந்துவரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளும், தனக்கு இராணுவ ரீதியாக அனுகூலமாக உள்ளன என்று அவர் நம்பினார். கிழக்கில் அவரது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்கள் வன்னியிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்து வெலிஓயாவிலிருந்து சேருவில் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்தின் ப10ரண கட்டுப்பாட்டிற்குள் இருந்த பெரிய ஆப்பு வடிவ நிலப்பரப்புக்கள் வன்னியைத் தனிமைப் படுத்தியுள்ளபடியால் தரைவழிமார்க்கமாக விடுதலைப்புலிகள் தங்களது பாரிய ஆயுதங்களையும் ஆயுத தளபாடங்களையும் போர் வீரர்களையும் நகர்த்தித் தனது கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தானும் தாக்குதலை மேற்கொள்ள முடியாது என அவர் ப10ரணமாக நம்பினார்.

போர்நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளின் கீழ் விடுதலை புலிகள் சமாதான அலுவலகத்துடனும் இராணுவத்துடனும் இணக்கம் காணாமல் தமது முழுப்படையணிகளை நகர்த்த முடியாதெனவும் கருணா திடமாக நம்பியிருந்தார். அத்தோடு பாரிய பீரங்கி தொகுதிகளும் எறிகணைகளும் இல்லாத நிலையில் புலிகள் வெருகல் ஆற்றின் வடக்கு கரைகளில்  ஓரிரு படைகளை அனுப்பி தாக்குதல்கள் நடத்தினாலும் நீண்டகால சிறு சிறு மோதல்களே வாகரைப் பகுதிகளில் மட்டும் நிகழ்த்தலாமென முடிவாக நம்பியிருந்தார்.

கருணாவுக்கு அச்சமயம் தெரிந்தமட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் பெரிய சுடுகலன்களையும் தொன் கணக்கிலான எறிகணைகளையும் கரையோரமாகக் கொண்டுசெல்லும் வல்லமை கடற்புலிகளுக்குப் போதாது என்றும் நினைத்தார். சிறீலங்காக் கடற்படையை விழிப்படையச் செய்யாமல் இராணுவ தளபாடங்களையும் போர் வீரர்களையும் கிழக்குக் கரையோரத்திற்கு 2 அல்லது 3 முறைகளுக்குமேல் கொண்டுசெல்லும் நிலையில் கடற்புலிகள் இல்லையென்று கருணா தனது முன் அனுபவத்தின் அடிப்படையில் ஊகித்திருந்தார்.

கருணாவுக்குப் பொருந்தக்கூடிய இன்னுமொரு குறைபாடு புலிகளிடம் இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு மூலையில் தாக்குதல் ஒன்றைத் தொடுக்கவும் அத்தாக்குதலை நிலைகுலையாமல் தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து நடாத்தவும் வெருகல் ஆற்றின் வடக்குக் கரைகளில் அவர்களுக்கு ப10மராதடிச்சேனைக்கும் மாவடிச்சேனைக்கும் இடைப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பே ப10கோள ரீதியாக புலிகளுக்கு இருந்தது. இந்த நிலப்பரப்பிற்குக் கடல்மார்க்கமாகவும், தரைக்கப்பால் உள்ள கொந்தளிப்பான நீர்களுக்கு ஊடாகவுமே தளபாடங்களை அனுப்பவேண்டும். கப்பல்களிலிருந்து இராணுவச் சரக்குகளை இம்மார்க்கமாக இறக்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.

கருணாவின் கணிப்பின்படி புலிகள் வெருகலாற்றைக் கடந்து வாகரைப் பகுதிக்குள் வெற்றிகரமாக ஊடுருவினாலும் யு-11 வாழைச்சேனை - பொலநறுவை நெடும்பாதையைச் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொள்ளாது கடக்க இயலாது. யு-11 பாதைதான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான விநியோகப் பாதையானபடியால் அது இராணுவத்தின் அதியுயர பாதுகாப்பிற்கு உட்பட்டது. புலிகளால் தரவை வடமுனைப் பகுதியைக் (தொப்பிகல காடுகள்) கடல்மார்க்கமாகச் சென்றடைய முடியாது. அந்தப் பகுதியின் கிழக்குப் பக்கம் கடல் ஏரியால் சூழப்பட்டுள்ளது. இதற்கப்பால் உள்ள கரையோரப் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே, தனது கட்டுப்பாட்டில் உள்ள பலமான பகுதிக்குள் கடல்மார்க்கமாகவோ, வாகரைய10டாகவோ போதிய படையணிகளுடனும் படைக்கலன்களுடனும் புலிகளால் வரமுடியாது என்று கருணா நம்புவதற்கு நல்ல காரணம் இருந்ததென்றே கூறவேண்டும். கருணா தனது பாதுகாப்பு நிலையைப் பல அடுக்குகளாக வகுத்து அமைத்திருந்தார். பின்வாங்கும் நிலைகளும், மீண்டும் ஒன்றுகூடும் இடங்களும் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

புலிகளின் தலைமைக்குப் பாதுகாப்புப் போர்முறை தெரியாதென வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடம், அவர்கள் வெளிப்படையாகவே அதிர்ச்சிகொள்ளும் வகையில், பரபரப்பற்ற அமைதியான முறையில் இந்தக் கட்சிமாறிய தளபதி தற்புகழ்ச்சியுடன் கூறிமகிழ்ந்தார். அங்கே நிழற்படக் கருவிகள் நிழற்படங்களை எடுத்தவண்ணம் இருக்க ஊடகவியலாளர்களுடன் உரையாடிக்கொண்டே தோடம்பழச்;சாற்றை உறிஞ்சிக்குடித்துக்கொண்டும், காலை உணவை அருந்திக்கொண்டுமே வன்னியின் இராணுவ மேலாதிக்கம்பற்றி எவ்வித படபடப்பும், குழப்பமும், அச்சமும் இல்லாது இதனை வெளியிட்டார். பெரிய வெள்ளிக்கிழமைப் பதிப்பில் 'ஐ லண்ட்" பத்திரிகை இவருடனான நீண்டதொரு செவ்வியைப் பிரசுரித்தவேளையில் வாகரைப் பகுதியின் வடக்குப் பகுதிக்கு அப்பாலில் இருந்து கருணாவின் பாதுகாப்பு அடுக்குகள் மீது 120 ஆஆ எறிகணைகள் குண்டுமாரி பொழியபப்பட்டது. இக்குண்டுமாரிப் பொழிவு எவரையும் கொல்வதற்காகப் பொழியப்படவில்லை. மாறாக, கருணாவின் ஆட்களை அதிர்ச்சிய10ட்டி மலைக்கவைத்து வேறு திசைமுகப் படுத்தவே பொழியப்பட்டது.

இந்தப் பொழிவின்போது வாகரை தற்பாதுகாப்பிற்குப் பொறுப்பாய் இருந்த கருணாவின் மூத்த சகோதரன் றெஐpயின் கட்டளை மையம் புலிகளின் விசேட படையணிகளால் கைப்பற்றப்பட்டது. கதிரவெளியின் தனது தற்காலிக இருப்பிடத்தில் இருந்த றெஐp, வினோதன், விசாலகன் 2, அன்பரசி படைப்பிரிவுகள் எல்லாம் அமைதியாகிவிட்டதை அறிந்தார். உடனே அவர் குண்டதிர்ச்சியால் வெருட்சிகொண்டு ஓட்டம் பிடித்தார். குண்டுமாரி நிற்பதற்கு முன்னர் புலிகளின் விசேட படைப்பிரிவுகள் இந்தக் கட்டளை மையங்களை அதிசயிக்கும் விதத்தில் அவற்றை செயலற்றவையாக்கிவிட்டுத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அன்பரசி பெண்கள் படையணியைச் சேர்ந்த பெண் தளபதி சாவித்திரியும் வினோதன் படையணியைச் சேர்ந்த பாரதிராஐ_ம் படுகாயமுற்றனர்.

இன்னுமொரு விசேட படையணி சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு வெகு தொகைவில் ஜெயம் என்பவர் பயணம் செய்த வாகனத்தைப் பதுங்கியிருந்து தாக்கியழித்தது. கருணாவினால் கதிரவெளியில் உருவாக்கப்பட்ட முதிர்வுறாத, பயிற்சியற்ற கடற்புலிப் பிரிவின் தலைவரே இந்த nஐயம். ஜெயசிக்குறு படையெடுப்பு நகர்வை மேற்கொண்டபோது புலிகளின் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலாற்படை அமைப்பே ஜெயந்தன் படைப்பிரிவாகும். ஜெயந்தன் படைப்பிரிவால் கருணாவின் படைகள் முடக்கப்பட்டன. சனிக்கிழமை காலை
கருணாவிற்கெதிரான புலிகளின் மட்டக்களப்பு அரசியல் பிரிவுத் தலைவர்கள் வன்னிக்குச் சென்றனர். ஒலிபெருக்கி மூலம் கருணாவின் படையணியைச் சேர்ந்தவர்களைக் கடற்கரைக்கு அண்மையில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் கூடுமாறு அறிவிக்கிப்பட்டது. நண்பகல் மட்டும் 300 இற்கும் அதிகமானவர்கள் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.

இந்நடவடிக்கைகள் அனைத்தையும் நடத்தியவர் தம்பிராஜா ரமேஸ். இவர் கருணாவின் முன்நாள் உப தளபதியாவார். இவ்வாரம் இவர் கேணல் என்ற உயர் நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஜெயந்தன் அணியின் முன்னேற்றத்தைத் தடுக்குமுகமாக ஜிம்கெலி தாத்தாவினதும் றொபேட்டினதும் தலைமைகளில் துணைப் படைப்பிரிவுகளைக் கருணா அனுப்பிவைத்தார்.

வாகரையிலுள்ள கருணாவின் படைகளின் விநியோகப் பாதைகளைத் துண்டிக்கும் முகமாகப் புலிகளின் விசேட படையணிகள் சனிக்கிழமை இரவு பிரதான இடங்களில் தாக்குதல்களை நடாத்தின. பகல்வேளையில் புலிகளின் தேசியப் புலனாய்வு நிலையத்தில் செயற்படும் உளவியல் செயற்பாட்டுப் பிரிவு உட்பகை சார்ந்த போரின் பயனற்ற தன்மையைப் பற்றி உரையாடல்களைத் தொடங்கின. எனவே சனிக்கிழமை பின்னிரவு றெஜியாலும் றொபட்டாலும் ஒழுங்கு செய்யப்பட்ட 2 எதிர்தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன. ஞாயிறு காலை கருணாவின் படைகள் வாகரையை விட்டு சிதறியோடித் தொப்பிகலவுக்குப் பின்வாங்கின. கருணாவின் படையணிகளைத் தேடிக் கொண்டுவரும் புலிகள் யு-11 பாதையைப் பாரியளவில் கடப்பதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு சிறீலங்கா படையின் கூடுதல் படைப்பிரிவுகளை யு-11 பாதையில் நிலைகொள்ள வைக்கப்பட்டன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் இராணுவ பிரிவின் தளபதியும் கருணாவின் எதிர்க்;கிளர்ச்சியின்போது வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்காகச் சென்றவருமான ஐனார்த்தனின் தலைமையில் புலிப்படை பிரிவு ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பின் தெற்கில் 76 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் அரசியற் பிரிவின் தலைவர் குயிலின்பனும் உளவியல் நடவடிக்கைப் பிரிவினரும் ஐனார்த்தனுடன் வந்திருந்தனர். அவர்கள் விடுதலைப்புலிகளின் கஞ்சிகுடிச்சாறில் அமைந்துள்ள தளத்துடனும் வானொலித் தொடர்பை ஏற்படுத்தினர். 24 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள், எதிர்வாதங்கள், மனமாற்றங்களுக்குப் பின்னர் அனைத்துப் பிரிவுத் தலைவர்களும் புலிகளுடன் மீண்டும் இணைய ஒத்துக்கொண்டனர். ஒரு துவக்குசூடாவது சுடப்படவில்லை. அது ஒர் உளவியல் செயற்பாட்டின் வெற்றியாகும்.

கருணாவினுடைய முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தரான ரமணவால் தலைமை வகித்துச் செல்லப்பட்ட புலிகளின் குழு ஒன்று வாகரையில் பெரிய வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு பகுதிகளுக்குள் பிரவேசித்துக் கடற்கரை அப்பாலுள்ள நிலப்பரப்புகளின் பெரும்பாலான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டை நிலைகொள்ள செய்தது. அதே வேளை இயக்கத்தைக் கைவிட்ட தளபதி வாகரையினதும், அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களினதும் வீழ்ச்சியையிட்டு தாறுமாறாகக் குழப்பமடைந்தார். ஆனால் அவர் தொப்பிகலவில் தான் பாதுகாப்பாக இருப்பதாக இன்னமும் நம்பினார்.

கருணா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக்கொண்டிருந்த மேற்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இரகசிய முகாமை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு புலிகளின் விசேட படையணிகளின் தாக்குதல்கள் 2 நடைபெற்றன. இது கட்சிமாறிய தளபதிக்கும் அவரது சகாக்களுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த 2 தெரிவு செய்யப்பட்டுத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் கருணாவை பெரும் பீதிக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கியது. தன்னுடைய பாதுகாப்பு மையங்களுக்குப் புலிகளின் விசேட படையணிகள் ஊடுருவி வந்தமை அவரால் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே அவருக்கிருந்தது. அவர்கள் துரிதமாக நகர்வுகளை மேற்கொண்டனர். இந்த புது போர்முறைகளைக் கருணா அவர்கள் அடிக்கடி செல்லாத வன்னியில் ஒரு தெளிவற்ற முறையில் கேள்விப்பட்டிருந்த போதிலும் அதுபற்றி ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான அவகாசமும் நேரமும் அக்கணத்தில் அவருக்கு இருக்கவில்லை.

தரவை- வடமுனை காடுகளில் அமைந்துள்ள பிரதான முகாம்களின் பிரிவுத் தளங்கள் மீது தொடுக்கப்பட்ட விசேட படையணியின் தாக்குதல்களும் உளவியல் செயற்பாடுகளும் கருணாவைக் கிலிகொள்ளச் செய்து, எத்தகைய சந்தர்பங்களிலும் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் குலையவே, அவர் தனது படையணிகள் மீது கொண்டிருந்த பிடியை இழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்கைமாறிய தளபதி கிட்டத்தட்ட 12 நண்பர்களுடனும் லெப்ரினன்களுடனும் மட்டக்களப்பை விட்டு தப்பி ஓடினார். கிழக்கு மாவட்டத்தின் புலிகளின் பெண்கள் படைப்பிரிவின் தளபதியாகிய நிலாவினியும் இவர்களுடன் சேர்ந்து மட்டக்களப்பைவிட்டுத் தப்பிஓடினார். இவருடைய குறுகிய கால ஆயுளைக்கொண்ட எதிர்புரட்சி உண்மையிலேயே புலிகளுக்கு உதவியது என்றே சொல்லலாம்.

ஏனெனில், அவர்கள் சிறீலங்காவின் அரசியல் இராணுவச் சமன்பாடுகளுக்கு மேலாக ஒரு பலம்வாய்ந்த தடத்துடன் தங்களை வெளிக்காட்ட இது உதவியது என்று துணிந்து கூறலாம். 'நாங்கள் கருணாவை, எங்களுடைய தலைவரின் பணிப்புரைகளுக்கு அமைவாக இரத்தம் சிந்தாமல் வெளியேற்றவே எங்களது நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம். எதிர்காலத்தில் அவர்கள் கனவிலும்கூட எதிர்ப்புக்கொடி தூக்குவதற்குச் சிந்திக்காத வண்ணம் நாங்கள்
எங்கள்; செயற்பாட்டைச் செய்துமுடிப்போம்". என்று கேணல் ரமேஸ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்.

புலித்தலைவரைத் தான் எதிர்த்து நிற்கப்போவதாக கருணா பிரகடனப்படுத்தியபின் ஊடகங்கள் வெளிக்கொண்டு இவரை போற்றிப் புகழும்போதுகூட கருணா இன்று ஒரு சிறந்த தளபதியாக்கிய அவரது குருமாரையும், அவரை இந்நிலைக்கு உருவாக்கிய அறிவுரையாளர் மனோ மாஸ்ரர் அவர்களையும் அவர்கள் மறந்துவிட்டனர்போலும். அவர்கள் மட்டுமல்ல உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்களும்கூட இதனைக் கவனத்தில்கொள்ளவில்லை. கருணாவை உருவாக்கியவர்கள் அனைவரும், மனோ மாஸ்ரர் உட்பட, அவரை நிராகரித்துவிட்டார்கள். கருணா தோற்கடிக்கப்பட்ட முறை புலிகளால் இரண்டு வருடங்களுக்கு முதல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட காலந்தொட்டு அவர்கள் எவ்வளவு தூரம் துணிவும் வீரமும்கொண்டு வளர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒரு சிறிய அளவில் வெளிக்காட்டுகிறது.

கடந்த 2 வருடங்களின்போது பிரபாகரனால் உருவாக்கப்பட்ட விசேட படையணிகளும் உளவியல் செயற்பாடுகளுக்கான பிரிவுகளும் எத்துணை வல்லமை பொருந்தியவை என மூத்த புலிகளின் தளபதியாக இருந்த கருணாவிற்குக்கூடத் தெரிந்திருக்கவில்லை. பிணக்குக்கு நியாயப10ர்மவான தீர்வை எட்டுவதற்குப் பதிலாக சிங்கள அரசு, சீPர்செய்ய முடியாதுபோல் தோற்றமளிக்கின்ற விருப்பு மனச்சார்புடைய கொள்கைகளையே பேணி வளர்த்துவந்துள்ளது. அதனால்தான் அது தமிழர் பக்கம் இருக்கின்ற பிழையான குதிரையை அவ்வப்போது ஊக்குவித்து வருகின்றது. எவரும் தன்னை ஒரு ஒட்டுண்ணியாகப் பாவிக்க முடியாதபடி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எப்பொழுதுமே ஆயத்த நிலையிலேயே
இருந்துகொண்டிருக்கிறார்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home