|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Diaspora - a Trans State Nation > Tsunami Disaster & Tamil Eelam > Tsunami & an Outpouring of Poems - Kavithaikal - சுனாமி கவிதைகள்
An Outpouring of Poems
சுனாமி
கவிதைகள்
" The healing power of poetry - the Truth that lives within each and every one of us;
the Truth that always liberates and never dies..." - Jamie Walker
[see also Eelam Tamil Literature]
|
|||||||||||||
அரசில் அரங்கேறி அமர்ந்திருக்கும் அம்மணியே - உன் அறாயகத்தின் காலமிதா? அவலம் எம் தொடர்கதையா? ஆழக்கடல் வந்து - எம் ஈழக்கரை கொள்ள வாழும்வழியற்று வருந்துகிறாற் எங்களினம் - நீ மீளக்கிழம்புகிறாய் - எம் வாழ்வழிக்கும் போரிற்காய் உதவிக்கு அழைக்கிறாய் உலக நாடுகளை - எம் இதயத்தை கிழிப்பதற்கு இதுவும் உன் சதிவலையோ? தந்திரத்தால் புலியை வெல்ல பரப்புகிறாய் பொய் வதந்தி எந்திரமான இவ்வுலகி;ல் எடுபடுமா உன் வதந்தி உறங்கினான் தமிழன் என்று உன்நினைப்பு - அதனால் இறங்கி வருவான் என்றோற் இனிய கனவோ? அழிவு கண்டு புனரமைக்க அன்னியத்து படைகள் வாறான் மகிழ்வு கொண்டு ஏற்போமா மானமுள்ள தமிழர்நாம் சுனாமி அடித்து ஓய்ந்துபோச்சு ஆமி அலைகள் தொடருதிங்கே ஆடுகள் நனையுதென்றே அழுகிறது ஓநாய்கள் பசித்தாலும் புல்தின்னா பாயும்புலி தமிழன் என்று பரந்திருக்கும் உலகறியும் புரியவில்லை உனக்குமட்டும்
ஆழிக்கடல் பேரலையே
ஆள் வைத்தடிக்கும் சண்டியன் போல் அலை வைத்தடித்த கடலே அனர்த்தம் தந்தாய் அதில் ஆனந்தம் கண்டாய் தரைக்கும் தரைக்கும் தகராறு அதில் உனக்கு வந்த கோபம் ஆயிரம் மைல் ஓடியும் ஆவேசம் அடங்கவில்லை பொங்கி எழுந்து பொழுது புலர்வதுக்குள்;; உன் பணி முடித்தாய் உலகையே உலுக்கி விட்டாய் வலை எறிந்து வந்ததை அள்ளுவது போல் அலை எறிந்து அத்தனையும் எடுத்தாய் உயிர் எடுத்து உடல் எறிந்தாய் சட்டி சருவம் போல் கவிட்டும் பிரட்டியும் உருட்டியும் போட்டுவிட்டு உன்பாட்டிலே போய்விட்டாய் சொல்லாமல் வந்து - எதுவுமே இல்லாமல் செய்துவிட்டாய் என்ன சுகம் கண்டாய் உடுதுணியில்லை உணவில்லை உறக்கமில்லை நடைப்பிணமாய் பித்துப்பிடித்து பிணக்காட்டில் பிதற்றித்திரிகின்றார் உடன் பிறப்புகள் நஞ்சை சுமந்தவர் அஞ்சார் சாதலுக்கு காரணத்தோடு மரணமா கவலையில்லை ஏற்றிடுவோம் ஆனால் காரணமில்லாமல் உயிர்;; காவு கொடுத்திருக்கின்றோம் சி-ஆமியால் முடியாததை சுனாமி நீ முடித்துள்ளாய் அடையாளம் தெரியாமல் அடித்து துவைத்துவிட்டாய் ஆனாலும் என்ன எழுந்து வருவோம் எதிர்காலம் எதிர்கொள்வோம் வருங்காலம் உனக்கு ஏமாற்றமேதான் உன் காண்டம் எம் கையில் நீ வரும் சேதி அறிவோம் வந்து சேரும் தேதியும் சொல்வோம் அடுத்த சந்திப்பு என்று ஒன்று இனி வேண்டவே வேண்டாம் அளவாய் அலை மோதி அழகாய் இருந்துவிடு.
பூமித்தாய் குலுங்கியதால் பொங்கு கடல் அன்னையவள் காளியவள் உருக்கொண்டு கரையெல்லாம் தாக்கியதும் காய்களும் பிஞ்சுகளும் கனியுடனே பூக்களுமாய் எங்கள் குல மாந்தரெல்லாம் இருந்தவிடம் தெரியாமல் கனத்தவிவ் வனர்த்தத்தால் கண்மறைந்து போனதுவும் பார்த்திருந்தும் பகலவன் நீ பரிதவிக்கும் மக்கள் முன் பொங்கல் நாள் பார்த்திடவும் புரவியிலே வருவாயா. உழுது பயிரிட்டு உரம்போட்டு நீர்ப் பாய்ச்சி செந்நெல் எடுத்துச் சிறுதானியம் சேர்த்து கன்னஞ்; சாற்றோடு கலந்து செய்த பொங்கலுன்முன் வைத்தவர்க் கெல்லாம் வரங்கொடுத்த வைகறை நீ வருவாய்தான் இம்முறையும் வரம் வேண்டும் மக்களில்லை. களனிகள் எல்லாம் கடலாகிப் போயின. கட்டுமில்லைلل வரப்புமில்லை காணிகளின் இடமுமில்லை. பிணங்களெல்லாம் புதைபட்டுப் பேயலையும் இடமாச்சு. உழுதுதந்த மாடுகளும் உயிரோடு போயாச்சு. அழுகின்ற உளவர்களின் அவலக் குரல் ஒலிக்கும் தைப்பொங்கல் தினம்தான் தமிழ் மண்ணில் காண்பாய் நீ வருவாய்தான் இம்முறையும் வரவேற்க மக்கள் இல்லை. பட்டாசு கொழுத்துதற்குப் பையன்கள் இங்கில்லை. கூட்டி மெழுகிக் கோலமிடும் பெண்கள் இல்லை. தேங்காய் திருவி உடன்; திகட்டாத சர்க்கரையும் பாகாக்கித் தந்த பாட்டியும் இன்று இல்லை. தட்டுமுட்டு வேலை செய்த தாத்தாவையும் காணோம் தான் செய்கிறேன் என்று தகராறு பண்ணிவிடும் சின்னஞ் சிறிய சிட்டுகளும் போயாச்சு. இழவு வீடாக இருக்கையிலே எம்ஈழம் வருவாய்தான் இம்முறையும் வடம் பிடித்துப் பரித்தேரில். ஆதவனே உந்தனக்கு அரியதொரு சேதி சொல்வோம் வானமது வீழ்ந்தாலும் வையமது பிளந்தாலும் ஏழ்கடலும் சூழ்ந்து எம்மெதிரே வந்தாலும் நாமதிர மாட்டோம.; நலிந்துவிட்ட தேசமதை வானுயர வைத்து வளம் பெருக்கி வாழவைப்போம். நவக்கிரக நாயனனே நல்லாசி தா எமக்கு.
|
-ரத்னா
-சுவிசிலிருந்து சுபாஸ்
-தி.குன்றன்
ஒளிவிழா வந்து
To see the beaches which were
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் வந்துடிச்சி ஆரத்தி ஏத்தி வச்சி ஆண்டவனை கும்பிட எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு பொல்லாத கடலும் பொங்கி வந்து அழிச்சதாலே திருநாளு கொண்டாட்டம் துண்டிச்சு போயாச்சி என்வூட்டு மக்களெல்லாம் மண்ணுக்கு போனபின்னே இனி பொங்கி வச்சாலும் திங்க யாரிருக்கா? போகி பண்டிகைக்கு பழசெல்லாம் போக்கணும்தான் பழசுன்னு நெனச்சு ஒரு பாகத்தையே அழிச்சிட்டியே பாற்கடலே உன் வேகம் தீராத பெரும் பாவம் வெள்ள அடிச்ச சொவரு வீதியில மாக்கோலம் பழசெல்லாம் எரியவச்சி விடியகால கூடும் கூட்டம் ஒண்ணயும் காணோமே இது என்ன திருநாளு? வெளஞ்ச பயிர்களின் வௌரம் கூட்டி வச்சி புதுப்பானை மேலேத்தி பொங்கி வரும் நாள்தானே பொங்கல் திருநாளு? வெளஞ்ச பயிரெல்லாம் வெள்ளதுல போயிடுச்சேன்னு புலம்பி நான் நிக்கயிலெ ஆளுக்கு அரக்கிலோ அரசாங்கம் அரிசிதர புரட்டாசி கொண்டாட்டமா பிச்சை எடுத்து பொங்கி திங்க? எம்மனசு ஒப்பல எதயும் நான் ஏக்கலே எழவு வூட்டுல எதுக்கு புதுப்பானை? மாட்டுப் பொங்கலுக்கு மாடாச்சும் மிஞ்சுதான்னு தேடிப் பாத்தா ஒரு தடயமும் கெடைக்கலே மாவீரன் சுனாமின்னு மார்தட்டி பேர்வாங்க மயானமாக்கிப்புட்டு மறைஞ்சே போயிட்டான் பாலு பொங்கலான்னா பசுமாட்ட இங்க காணோம் வீட்டுல கட்டிபோட ஒத்த மாடும் பொழைக்க காணோம் எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு கலர் கலரா துணிபோட்டு மொகம் பூரா சிரிப்போட ஊரு கொழந்தைங்க வீடு வீடா ஓடிவந்து கால்தொட்டு கும்பிட்டு ஆசி வாங்கயில அவுத்து கொடுக்கணும்னு சீலயில முடிஞ்சு வச்ச சில்லற கனக்குதே சிறுசுங்க காணலியே காணும் பொங்கலிலும் காண முடியலியே கலங்கும் எம்மனச கட்ட முடியலையே இனி என்ன கொண்டாட்டம்? எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு.
-
கருணாநிதி,
தி.மு.க. தலைவர் | ||||||||||||