|
Papanasam Sivan
3.1. ராகம் மாயாமாளவ கெளளை தாளம் ஆதி
பல்லவி
மாயம் ஏதோ ஸவாமி வாதும் சூதும் நானறியேன்
வண்ண மயில்மேல் தன்னந்தனிமையில்
வந்து மயங்கி மறைந்தாய் கந்தா
அனுபல்லவி
ஓயாப் பிரிவாம் நோயைத் தாய்க்கும்
ஒளித்து உள்ளம் உருகினேனே
ஓ முருகா ஒரு பெண் பாவம் உன்னை
லேசில் விடாது குஹா உள்ளமிரங்கு
சிட்டைஸவரத்தின் ஸாகித்யம்
உனது கருணை சிறிதில்லையெனில் பரவுமிவ்
வுலகு மிகவும் பயங்கரமல்லவோ
தனமும் மெய்யழகும் பொன்னணி பணிகளும்-இருந்
தொரு பயனும் உளதோ நீ இதையறியாயோ (மாயம்)
சரணம்
ஆறுமுகா புகல் வேறறியேன் - என (தாறு முகா)
சரணஸவரங்களின் ஸாகித்யங்கள்
தூயா வேல்முருகா மாயோன் மால் மருக (ஆறு)
நங்கை வள்ளி தெய்வானை நாளும் மகிழ்
நாத வேதம் போற்றும் ஷண்முக நாத (ஆறு)
ஸகல உலகுயிர்க்கும் அனை உமையவளுக்கும்
பரம சிவனுக்கும் அருமை மகனே குஹனே (ஆறு)
கமலப் பதம் பணி மெய்யடியர் தமக்கருள் செய்
குமர குபரனே குளிரிள நகை தவழ் (ஆறு)
ஆறுபடை வீடும் அன்பருள்ளமும்
கோயில் கொண்ட குமரேசனே
வள்ளி தெய்வானை யெனுமிரு மாதர் மனோஹரனே கருணாகரனே
உள்ளங்கனிந்து விரைந்தருள்வாய் ஜகன் மோஹனனே மயில்வாஹனனே-சூர
ஸம்ஹார வீர சிங்கார வேல சிவபால பக்தபரிபாலா சீல (ஆறு)
3.2. ராகம் பந்துவராளி தாளம் ஆதி
பல்லவி
நீயே பேதை முகம் பாரா யேல் நீதியோ மா கருணை
நிதி என்பார் நம்பும் அன்பர்க்கு நவ நிதியென்பார் பசுபதி
என்பார் (நீயே)
அனுபல்லவி
தாயும் தந்தையும் நீ என்று தாளினைத் தஞ்ச மென்றடைந்தேன்
தாயுமை நாயகா தீனஜன பாலகா வேறு புகலே தய்யா
சரணம்
வெள்ளியங்கிரி வாஸனே திரு உள்ளம் இரங்கு மஹேஸனே
3.3. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி
பல்லவி
கணபதியே கருணாநிதியே
கடைக்கண் பார்த்தருளே ஸ்ரீ மஹா (கணபதியே)
அனுபல்லவி
துணையடி தொழும் அன்பர் துயர் துடைக்கும் துய்யா
ஸ¤ந்தர சரணார விந்தத் துதிக்கையா (கணபதியே)
சரணம்
ஸகல ஸ¤ராஸ¤ரர் பணிமலர்ப் பதனே
சங்கரன் உமையும் மனமகிழ் ஸ¤தனே
ஜகம் முழுதும் நிறையானை முகவனே
தாள் பணிந்தேன் தஞ்சம் நீயேபகவனே (கணபதியே)
3.4. ராகம் மத்யமாவதி தாளம் ஆதி
பல்லவி
சரவண பவ குஹனே-ஷண்முகனே தயாபரனே (சர)
அனுபல்லவி
சரண கமலம் சரணம் சரணம் என்று
இரவு பகல் பஜிக்கும் ஏழைக்கருள் மால் மருகனே (சர)
சரணம்
பன்னிரண்டு கண்களால் அடிமையைப் பார்த்திரங்க திருவுள்ளமுமிலையோ
பரிந்தருள் புரிந்திடாவிடில் வேறெவரிடம் முறையிடுவேன்
அன்னையோடு தந்தை நீ வாழ்வினில் அனைத்தும் நீயென்று நம்பினேனே
அகில லோக நாயகா வள்ளி, தெய்வானை மணாள மயில் வாஹன-முருகனே (சர)
3.5. ராகம் தோடி தாளம் ஆதி
பல்லவி
தணிகேசனைப் பணிந்து பாடத்
தணியும் மனக்கவலை - திருத் (தணி)
அனுபல்லவி
பிணி ஆயிரம் ஒருசேர - உடலைப்
பீடை செய்தாலும் உயிர் வாடச் செய்தாலும் (தணி)
சரணம்
வேத சாஸத்ர புராணங்களை நம்பமாட்டேனென்கிறாய்
மேலோர் அனுபவ வாயிலாய் புகல்வதெல்லாம் மடமையென்கிறாய்
நாதனை வள்ளி தெய்வானை மணாளனை முருகனை ஒருமுறை பஜனை செய் மனமே
நாடு முழுதுமுனைப் போற்றிப் புகழும் நலமெல்லாம் தேடிவருமே
(திருத்)
3.6. ராகம் ஹிந்தோளம் தாளம் ஆதி
பல்லவி
திருப் பரங் குன்ற வேலா திரு ஆலவாய்-பர
சிவனோடங்கயற்கண்ணி கொஞ்சி முத்தாடும்-பால (திருப்)
அனுபல்லவி
விருப்புறும் விண்ணோர்க்கும் கிடைக்கரும் தீந்தமிழ்
திருப்புகழ் பாட நின் திருவருள் தா சீர்மிகும் (திருப்)
சரணம்
அமரர் முனிவரும் மெய்யடியவரும் வணங்கி
குமரா குமரா என்று துதிக்கக் கோயில் கொண்ட (திருப்)
ராமதாஸன் பணியும் தாமரஸப் பாதனே
மாமயில் வாஹனா வள்ளி தெய்வானை மோஹனா (திருப்)
3.7. ராகம் காம்போஜி தாளம் ஆதி
பல்லவி
நீயே சரண் ஷண்முகா கருணைநிதி
நீ அருள்வாய் அனகா நின்னடிமைக்கு (நீயே)
அனுபல்லவி
சேய் யாரிடமும் செல்லுமோ ஈன்ற தாயல்லால்
திருமால் மருகனே வடிவேல் முருகனே (நீயே)
சரணம்
ஸவாமி நாத மாமயூரவாஹா
சங்கர கெளரி குமாரவிசாகா
ராமதாஸன் பணியும் குஹா-ஸ¤ர
ராஜ பூஜித பதாம் புருஹா-ஐயா (நீயே)
3.8. ராகம் கேதாரகெளளை தாளம் ருபகம்
பல்லவி
பால ஸ¥ப்ரமண்ய, தீன சரண்ய-கெளரீ
பால, பக்த ஜன பரிபாலக கருணாலய பாலய (பால)
அனுபல்லவி
நீல மனோஹர மயூர வாஹன ஸமா ரோஹண
கோலாகல அந்தரங்க குஸ¤மசர ஸன்னிப சுபாங்க (பால)
சரணம்
சரவணபவ நிஷகளங்க சரத் சந்த்ர ஷடானன
தாரகாதி கோராஸ¤ர மாதங்க குல ம்ருகேந்த்ர
சரணம் நோஜானே ஸவாமி சைல வாஸ விதி ஸ¤ரபதி
வினுத கனக மகுட சீர்ஷ கலசஸம் பவாதி வரத
மத்யமகாலம்
ஸவாமி நாத பரசிவ குருநாத வல்லீ தேவஸேனா
நாதாகில ஸ¤ரநாத ஜகன்னாத
ராமதாஸ ஸந்தத வினுதார்த்தி ஹர கார்த்திகேயா
ராத்ரிஞ்சர பீகர வர சக்த்யாயித காங்கேய (பால)
3.9. ராகம் தன்யாசி தாளம் ஆதி
பல்லவி
வாணீ அருள் புரிவாய் அளிகுல
வேணீ மலரயன் ராணி உயர்க்கலை (வாணீ)
அனுபல்லவி
பேனிப் புகழும் பாவாணர்க் கருளும்-சுக
பாணி ஸ¥ரர் தொழும் புராணி சரணம் கலை (வாணி)
சரணம்
வீணா புஸதக தாரிணி பூரணி
வித்யா ருபிணி துக்க நிவாரணி
காணேன் உனையல தோர் துணை பாரதி
கருணாகரி எம்மைக்காத்தருள் நீ கதி (வாணி)
3.10. ராகம் ஸரஸவதி தாளம் ஆதி
பல்லவி
ஸரஸவதி தயை நிதி நீ கதி
தண்ணருள் தந்தருள்வாய் பாரதி (ஸரஸவதி)
அனுபல்லவி
கரமலர் மிளிர் மணி மாலையும் வீணையும்
கருணை பொழியும் கடைக் கண்ணழகும் வளர் (ஸரஸவதி)
சரணம்
நின்னருள் ஒளி இல்லையானால்-மன இருள்
நீங்குமோ ஸகல கலை மாதே-வெள்
ளன்ன வாஹனி வெண் கமல மலர் வளரும்
வாணி வெள்ளைக் கலையணி புராணி (ஸரஸவதி)
3.11. ராகம் சங்கராபரணம் தாளம் மி-சாபு
பல்லவி
மஹாலக்ஷமி ஜகன் மாதா
மனமிரங்கி வரமருள் (மஹா)
அனுபல்லவி
மஹாவிஷணுவின் மார்பெனும்
மணி பீடமதனில் அமர்ந்தருள்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயா நிதியே மஹா மாயே (மஹா)
சரணம்
பாற்கடல் தரும் க்ருபாகரி
பரிந்து வந்தெனை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே - கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும் (மஹா)
3.12. ராகம் அடாணா தாளம் ஆதி
பல்லவி
நீ இரங்காயெனில் புகலேது அம்ப
நிகில ஜகன்னாதன் மார்பில் உறை திரு (நீ)
அனுபல்லவி
தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
ஸகல உலகிற்கும் நீ தாயல்லவோ - அம்ப (நீ)
சரணம்
பாற் கடலில் உதித்த திருமணியே - ஸெள
பாக்ய லக்ஷமி என்னைக் கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்ஞ்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்ப (நீ)
3.14. ராகம் சங்கராபரணம் தாளம் ஆதி
பல்லவி
அகிலாண்ட நாயகி-அம்புலிங்கத் தலம் வளரும் (அகி)
அனுபல்லவி
ஜகதீசன்-ஜம்புகேசன்-உளங்கவர்
திருவானைக் காவல் பதிதனில் எழுந்தருள் ஜகஜஜனனீ (அகி)
சரணம்
உபய காவேரி மத்தியில் ஒரு யானை
ஒரு சிலந்திக்கும் முக்தியளித்த மஹேசனை
உள்ளம் விரும்பி தவம் புரிந்தாள் உமை
அன்னையே நித்திய கன்னிகையே
அபயம் தந்தருள் அடிமலர் தஞ்சம் - அ
டைந்தேன் அடியவர்க்கருள் வரதே - அ
னந்த குணாகரீ அம்பா சங்கரீ
ஆதி அந்தமில் த்ருபுவன ஸ¤ந்தரி
மத்யம காலம்
ஹர ஹர சங்கர பகவத் பாதாள்
அன்பில் ப்ரதிஷடை செய்த அற்புத
ரத்னதாடங்க ஒளி உமிழ் அழகிய
இரு செவியொடு குளிர் நகை தவழும் மதிவதன (அகி)
3.15. ராகம் ராமப்ரியா தாளம் ஆதி
பல்லவி
என்னளவில் சிறிதும் - கருணை
இல்லாத தேனம்மா - ஏழை (என்னளவில்)
அனுபல்லவி
உன்னடி மலரினை ஒருகணம் மறவா
உனதடிமை நானன்றோ - அம்மா (என்னளவில்)
சரணம்
உள்ளும் புறமும் நிறை உந்திருவருளை
மறந்து திருந்ததென் - மனக்குரங்கு
உள்ளம் முழுதும் நிறை கள்ளங்கபடந்தனக்
கெல்லையில்லை அடிமை எனக்கிரங்கு
எள்ளளவும் நன்னெறி செலாவிலங்கு
நேரெனைக் காவாததும் தர்மமோ
தெள்ளுமறை புகழ் திருப்பெருந்துறை
தேவி யோகாம்பிகே - பேதை (என்னளவில்)
3.16. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி
பல்லவி
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே என்னை நீ (என்ன)
அனுபல்லவி
சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்
சினன் தெனை அடித்தாலும் பரிந்தெடுத்தணைத்தாலும் இனி (என்ன)
சரணம்
முன் வினையால் இன்ப துன்பங்கள் விளைந்திட
முடமதி கொண்டுன்னை நோவதென் பேதமை
என் விதியால் இடராயிரம் சூழினும்
எல்லாம் உன் திருவிளையாடலென் றெண்ணி இனி (என்ன)
3.17. ராகம் ஆரபி தாளம் ஆதி
பல்லவி
கற்பக வல்லியின் சரண கமலந்தனைக்
கனவிலும் மறவாதே நெஞ்சே (கற்பக)
அனுபல்லவி
பற்பல பிறவி எடுத்தது போதும்-ப
வக்கடல் தாண்டி மகிழ்வுறலாம்-ஸ்ரீ (கற்பக)
சரணம்
காரிருள் சூழ் காடுபோலும் வாழ்க்கை
கவலை வறுமை நோய் கரடி வேங்கைபயம்
தீரக் கருணையுடன் திருமயிலையில் வந்து
தெரிசனம் தரும் தயைநிதி என் அன்னைக் (கற்பக)
3.18. ராகம் கானடா தாளம் மிச்ரசாபு
பல்லவி
காந்தி மதி அன்னை நீ கதி
காத்தருள் கருணா நிதி அம்ப (காந்தி)
அனுபல்லவி
சாந்தி பெற எங்கும் தேடி வந்தடைந்த
கும்ப முனிக் கருள் சம்பு உளங்கவர் (காந்தி)
சரணம்
கண்ய மிகு திரு வீதிகளிலங்கும்
கனியினும் இனிய தமிழ் மறை முழங்கும்
புண்ய நதியிற் சிறந்த தாமிர
பர்ணி வடகரை நெல்லை பதி வளர் (காந்தி)
3.19. ராகம் ஸாவேரி தாளம் ஆதி
பல்லவி
காமாக்ஷ¢ கெளரி காஞ்சி புர நாயகி வரதாயகி
கருணாபயோ நிதி உனையலது இல்லையோர் கதி (காமாக்ஷ¢)
அனுபல்லவி
ஆமோ உனக்கென் மீது பராமுகம்
ஆமோ அம்மா மெய்யன்பரை ஆளும் (காமாக்ஷ¢)
சரணம்
மாமரத்தடியில் எழுந்தருளும் ஏகாம்பரேஸவர பூமிலிங்க முர்த்தி
மனோஹரி ராஜராஜேஸவரி ஸ்ரீத்ரிபுர ஸ¤ந்தரி
ஸ்ரீ மஹா லக்ஷமி கலைமகள் பணி பத தாமரை புகல் திருவுள்ளமறியாதா
ஸ்ரீ வரத ராஜ ஸோதரி சங்கரி ராமதாஸன் பணியும் புவனேஸவரி
(காமாக்ஷ¢)
3.20. ராகம் தோடி தாளம் ருபகம்
பல்லவி
தவ சரணெள மம சரணம்
சா முண்டேச்வரி சங்கரீ (தவ)
அனுபல்லவி
பவ ஸாகர நாவெள
பாப அடவீ தாவெள (தவ)
சரணம்
நவ ஸரசிஜ லாவண் யெள
நத ஸாதுஜன சரண்யெள
சிவ வாமார்ஜித புண்யெள
சிந்தித ப்ரத காருண்யெள (தவ)
3.21. ராகம் பேகடா தாளம் ஆதி
பல்லவி
தேவி நின் வடிவழகைப் பருகி-மஹா
தேவன் மதி மயங்கினான்-த்ருபுர ஸ¤ந்தரி (தேவி)
அனுபல்லவி
முவுலகும் தொழும் முக்கண்ணன் உனைப்பிரிந்தே
முல்லை நகை முகம் காணாதேங்கினான்-உமா (தேவி)
சரணம்
வெற்றுடல் தாங்கவே சக்தியில்லாமல் எங்கும்
வெறிகொண்டு பித்தாகி சுற்றியலைந்தே
குற்றமில் மன்மதன்மேல் எரிந்து வீழ்ந்தான் உந்தன்
குறுநகை கண்டன்றோ சினந்தணிந்தான் கெளரீ (தேவி)
3.22. ராகம் மணிரங்கு தாளம் ஆதி
பல்லவி
பரதேவதே பதம் நம்பினேன்
பாரில் வேறுயாரும் இல்லை அம்பா (பர)
அனுபல்லவி
வரதாயகி ஜகன்ன்னாயகி
மன நோயறவே வந்தருள் தாயே (பர)
சரணம்
ஸ¤க துக்க மெல்லாம் உன் அருள் தானே
ஸ¤ஸவர நாத ஸங்கீத விநோதினி
ஸ¤க துக்கமோ டெது நேரினும்
துணையுன் பஜன கான அம்ருதமே (பர)
3.23. ராகம் ஷண்முகப்ரியா தாளம் ஆதி
பல்லவி
யாரம்மா நீ கடைக்கண் பாரம்மா வேறே கதி
யாரம்மா எந்தன் துயர் தீரம்மா என்போல் பாரில் பேதை (யாரம்ம)
அனுபல்லவி
தீரம்மா ஸம்ஸாரநோய் கோரம் ஏழை எஞ்செய்வேன்
காரம்மா அன்பர்க் கின்ப மாரி பொழியும் தெய்வம் (யாரம்மா)
சரணம்
எத்தனையோ துன்பச் சூறாவளிதாக்க
இணையடித்யான பஜனம்வந்து கைதூக்க
எத்தனையோ இன்பச் சூழலில் அமைதி தேக்க
ஹருதயாலயத்துள் வந்தெழுந்தருளொடு காக்க வேறு (யாரம்மா)
3.24. ராகம் பிலஹரி தாளம் ஆதி
பல்லவி
அஞ்சலென்றே ஆண்டருள்வாய்
அடிமலர் தஞ்சமை யா அடிமை என்னை (அஞ்ச)
அனுபல்லவி
பஞ்ச நதீச்வரா பரம தயாகர
ப்ரண தார்த்திஹரா பார்வதி மனோஹரா என்னை (அஞ்சே)
சரணம்
அறம் வளர்த்த அம்பிகை என் அன்னை
அமரும் அர்த்த நாரீச்வரனே
மறம் வளர் மாய ஐம்புலன் வசமாய் புவியில்
பிறந்து பிறந்துழலும் பேதையை மனமிரங்கி (அஞ்சே)
3.25. ராகம் முகாரி தாளம் ருபகம்
பல்லவி
அடிமை என்னை ஆண்டவனே ஆனந்த தாண்டவனே
அடிமலர் மறவாத வரம் அருள்வாய் புகல்யாருமிலை (அடிமை)
அனுபல்லவி
கடிமலர் இட்டேத்திப் பணிந்த கண்ணப்பருக்கருள் தயாளா (அடிமை)
சரணம்
திருநீல கண்டனார்க்கும் திருநாளைப் போவார்க்கும்
திருவளர்ச்செய் கருணையிலோர் திவலையருள் தேவேசா
திருச் சிற்றம்பலந்தனிலே திருநடம்செய் நடராஜா
சிவகாமி மனோஹரா ராமதாஸன் பணியும் இறைவா (அடிமை)
3.26. ராகம் பந்துவராளி தாளம் ஆதி
பல்லவி
ஆடிய பாதத்தை தரிசிக்க வேணுமென்
றாவலொன்றே உள்ளம் நிறைந்ததே-ஐயன் (ஆடிய)
அனுபல்லவி
பாடிய பக்தர்கள் ஹரோம் ஹரோம் என பஜிக்க
பாத சிலம்புகள் கலீர் கலீர் என ஒலிக்க (ஆடிய)
சரணம்
செஞ்சடாடவியிலே கங்கையெனும் தெய்வநதி தோயுமாம்
சீறுமரவுமதில் நெளியுமாம் ஒரு சிற்றம்புலியும் பாயுமாம்
நஞ்சணிந்த நீலகண்டமாம் வெண்ணீரளைந்த திருமேனியின் ஒளியாம்
நடராஜமுர்த்தி அயன்மாலும் போற்றும்
சிவகாமிநேசன்-பொன்னம்பலந்தனில் (ஆடிய)
3.27. ராகம் சிவரஞ்ஜனி தாளம் ஆதி
1. ஆண்டவன்பே சக்தி தரும்
ஆண்டவனன்பே சித்தி தரும்
ஆண்டவனன்பே புத்தி தரும்
ஆண்டவனன்பே முக்தி தரும்
2. ஆண்டவனன்பே புகழளிக்கும்
ஆண்டவனன்பே மகிழ்வளிக்கும்
ஆண்டவன் அன்பால் சீர் பரவும்
ஆண்டவன் அன்பால் பேர் பரவும்
3. ஆண்டவன் அன்பால் காமமறும்
ஆண்டவன் அன்பால் தீமையறும்
ஆண்டவன் அன்பால் சிறுமையறும்
ஆண்டவன் அன்பால் வறுமையறும்
4. ஆண்டவன் அருளால் குணம் பெறலாம்
ஆண்டவன் அருளால் மணம் பெறலாம்
ஆண்டவன் அருளே கல்வி தரும்
ஆண்டவன் அருளே செல்வம் தரும்
5. ஆண்டவன் அன்பில்மனப் பேயகலும்
ஆண்டவனன்பில் கன நோயகலும்
ஆண்டவன் அருளே ஸத்தியமே
ஆண்டவன் அருளே நித்தியமே
3.28. ராகம் ஸஹானா தாளம் ஆதி
பல்லவி
இடையறாதுன் மலரடி பஜிக்கும்-அந்
நாளே இன்பநாள் மனமே (இடை)
அனுபல்லவி
நெடுநாள் தழைத்து வளர்ந்து-எட்டி
பழுத்தென்ன ஓதி பருத்தென்ன பயன் (இடை)
சரணம்
முவாசைப் பேய்பிடித்து மறைசொல்லும்
முறை தவறி விலங்கு போலலைந்தாய்
நாவாரச் சிவசிவ என்றய்யன்
நாமம் உரைக்கவும் நாணுகின்றாய்
பூவாழ்வோ சதமென்று பொழுதெல்லாம்
பாழாய்க் கழிந்தது போதாதோ
தேவாதி தேவன் அம்மையும் அப்பனும்
ஆன சிவபிரான் தஞ்சமென நம்பி (இடை)
3.29. ராகம் சக்ரவாகம் தாளம் மிச்ரசாபு
பல்லவி
உனை நம்பி ஏமாந்தேன் ஐயா
உள்ளே விஷத்தை வைத்து சிரிப்பிலே நெருப்பைக் கக்கும் (உனை)
அனுபல்லவி
வினை வசமே தெய்வமென்றுன்னை எல்லோரும்
வேதமும் புகழவே பேதை மக்டியால் நானும் (உனை)
சரணம்
பித்தம் பிடித்தவன் பாதி உடலிலொரு
பெண்ணைச் சுமந்தவன் தலைமேலும்-ம
றைத்தொரு பெண் வைத்த குறைமதி கொண்டவன்
பித்தலாட்டம் ஒன்றும் அறியாமல் சிவனே (உனை)
தெகிடு தத்தம் செய்தன்று கல்லாலும் வில்லாலும்
செருப்பாலும் உதைபட்ட கதையறியாமல்
தெகிடு தத்தோம் தீமென்று தில்லைச் சுடுகாட்டில்
ஆடும் அநாதி ஓராண்டி என்றறியாமல் (உனை)
3.30. ராகம் பேகடா தாளம் ஆதி
பல்லவி
உன்னைப் பஜிக்க வரம் தா வாழ்வில்
ஒரு நாளும் இறைவாநின் திருத்தாளை மறவாமல் (உன்னைப்)
அனுபல்லவி
அன்னை கல்பக வல்லி மருவும் மணாள
கபாலி அபார க்ருபாகர ஹர என்று (உன்னைப்)
சரணம்
இவ்வுலகம் தனில் உள்ள விஷயபோகம்
எல்லாம் அனுபவித் தலுத்தேனையா
கவ்வும் ஐம்புலன் என்னைக் கட்டியிழுக்கு தின்னும்
கலங்கு மடிமை பொல்லாக்குரங்கு மனமடங்க (உன்னைப்)
3.31. ராகம் பூர்விகல்யாணி தாளம் ஆதி
பல்லவி
ஐயன் திருவடியை விடமாட்டேன்
யாரென்ன மொழிந்தாலும் ஆவியழிந்தாலும் (ஐயன்)
அனுபல்லவி
வையத்து வாழ்வே மடித்து முடிந்தாலும்
வானமிடிந்து தலை மீது வீழ்ந்தாலும் (ஐயன்)
சரணம்
நானாவித நோய்கள் எல்லாம் ஒன்றுகூடி
நாடி நரம்பிகளோ டெலும்பையும் உருக்கினாலும்
மானாபிமான மிழந்துடலுயிர் துடித்தாலும்
மறுபடி ஆயிரம் பிறவிக ளெடுத்தாலும் (ஐயன்)
3.32. ராகம் ஹரிகாம்போஜி தாளம் ஆதி
பல்லவி
கல்ப காம்பிகா ரமண கபாலீ
கருணை புரிந்தருள்வாய் ஸ்ரீ (கல்ப)
அனுபல்லவி
தொல் பவச்சுழலிலே சிக்கி-சு-
ழன்று நொந்து மனம் துடிக்குதே ஸ்ரீ (கல்ப)
சரணம்
திக்குத் திசையெல்லாம் தேடியலுத்தேன்
திருவடி துணையென் றுன்னை அடுத்தேன்-இ
ரக்க மோடபம் அளித்தெனைக் காத்தருள்
ராம தாஸன் போற்றும் திருமயிலைக் (கல்ப)
3.33. ராகம் காபி தாளம் ஆதி
பல்லவி
காமாந்தகா நின் கழலே துணை
கருணாகரா கன் முன்றுடையாய் (காமாந்தகா)
அனுபல்லவி
காமாந்தனாய் உழலா தென்னைக்
காப்பதுன் பாரம் தேவா என் குலதெய்வமே (காமாந்தகா)
சரணம்
பற்றின்றி உள்ளத் துறவுடன் உன் புகழ்
பாடுவதன்றோ பேரின்பம்
சிற்றின்பமே விரும்பிச் சிந்தை
சிதறியுன்னை மறவாத திடமருள் ஐயனே (காமாந்தகா)
3.34. ராகம் ஸாவேரி தாளம் க. ஜம்பை
பல்லவி
கபாலி இருக்க வீண் கலக்கமேன் உனக்கு
கல்பகாம்பிகை நாதன் காம ஸம்ஹாரனாம் (கபாலி)
அனுபல்லவி
பாப வினை தீர்த்தருளும் பரம கருணாநிதி
பக்த பரி பாலகன் பரமேச்வரனுமான (கபாலி)
சரணம்
மயில் வாஹன் கணபதியும் மலைமகள் கற்பக அன்னையும்
மைத்துனன் மாதவனோடறு பத்துமுவரும் தொடர
கயிலை விட்டு மயிலை வந்த கருணையொன்றே போதாதோ
கலை மகளும் திருமகளும் கலந்துவாழ் திருமயிலைக் (கபாலி)
3.35. ராகம் அடாணா தாளம் ஆதி 2 களை
பல்லவி
தன்னை பஜிக்கலாகாதா தயைநிதியாம் கபாலி (தன்னை)
அனுபல்லவி
அன்னை தந்தை போலும் அருள் சுரந்தாண்டவன்
சென்னை திருமயிலை தன்னில் வளர் கபாலி (தன்னை)
சரணம்
அவனருளின்றி ஓர் அணுவும் அசையாதெனும்
ஆன்றோர் மொழி உணர்ந்தும் அறிவிழந்தாய் அந்தோ
சிவனைப் பாடத்தந்த நாவினால் கல்லை முள்ளைச்
சிறுமதியால் காக்கை குருவியைப் பாடுகின்றாய்
தெய்வம் உண்டெனும் விவேகம் இதன்று
நன்றிகொன்ற சிவ தூஷணை அன்றோ
உய்வழியின்றி பவச்சுழலில் சிக்கி
உழலாதே ராமதாஸன் தொழும் தெய்வம் (தன்னை)
3.36. ராகம் வராளி தாளம் ஆதி
பல்லவி
திக்கு வேறில்லை திருவடியல்லால்
திரு மயிலா புரி வளர் கபாலி (திக்கு)
அனுபல்லவி
(ருத்திரா) அக்க மாலை வெண்ணீர் அணியேன்-மெய்
அன்புமிலேன் பேரின்பம் விரும்பினேன் (திக்கு)
சரணம்
சிவ சிவ என்றுந்தன் திருநாம கோஷஞ் செய்யும்
சிவ நேசச் செல்வருடன் சேர்ந்திலேன்
பவச் சுழலில் சிக்கி அவலப் பொழுது போக்கி
பாழானேன் புழுவில் கீழானேன் ஏழைக்கு (திக்கு)
3.37. ராகம் ஸ்ரீரஞ்ஜனி தாளம் ஆதி
பல்லவி
நம்பு மன்பரைக் காத்தருள் ஆண்டவன்
நளின மலர்ப்பதம் பணி மனமே (நம்பும்)
அனுபல்லவி
சம்பு ப்ரபஞ்சம் எங்கும் நிறை ப்ரபு
தாய் வயிற்றில் பிறவா ஒரே ஸவயம்பு (நம்பும்)
சரணம்
மாலு மயனும் எங்கள் தெய்வ மென்பார்
வானோர் முனிவர் எங்கள் தெய்வ மென்பார்
நாலு மறையும் எங்கள் தெய்வ மெனுமே
நமது தெய்வமும் சிவனவனே என்று (நம்பும்)
3.38. ராகம் ஸாவேரி தாளம் ஆதி
பல்லவி
பத மலரிணை பணி மனமே திரு
மயிலை நாதன் அன்னை உமையின் நாதன் (பத)
அனுபல்லவி
சதமல்ல இவ்வுலக வாழ்வு-சர
ணடைந்தோரைப் பரிந்தாளும் ஐயன் (பத)
சரணம்
நாம் புரிந்த நல்வினையும் தீவினையும்
அன்றி வழித்துணை ஒன்றுமிலை
ஸாம்ப சிவனை அன்புடன் பணிவோர்க்கு
ஜனன மரண பயமும் துயரும் இல்லை (பத)
3.39. ராகம் கல்யாணி தாளம் ஆதி
பல்லவி
பதம் நம்பினேன் சங்கரா-க
பாலீ க்ருபாகரா உந்தன் (பதம்)
அனுபல்லவி
நிதம் உல ஸ¤கம் சதம் என நினைந்து
நெறி தவறி நடந்தேன் மன்னித்தருள்-மலர்ப் (பதம்)
சரணம்
கண்டதையே கண்டு அலுப்பு சலிப்பின்றி
உண்டதையே உண்டு வெட்கம் சிறிதுமின்றி
கண்டதே காட்சி கொண்டதே கோலமாய்
காலங் கழித்ததையும் மன்னித்தருள்-மலர்ப் (பதம்)
3.40. ராகம் சங்கராபரணம் தாளம் ஆதி
பல்லவி
பதி பதம் பணிவது நமது கடன்
பவ மெனும் கொடும் வெயிலற நிழல் தரும்-பசு (பதி)
அனுபல்லவி
துதி செயும் அடியார் கதியெனும் கருணா
நிதி விதியும் ரமாபதியும் தொழும் உமா (பதி)
சரணம்
அன்ன மய கோச உடலெனும் கூண்டில்
மன்னும் உயிர்ப்பறவை தன்னைக்குறி வைத்து
தென்னவன் எனும் வேடன் தருணம் பார்த்திருக்கின்றான்
இன்னல் சூழும் மின்னல் வாழ்வு முடியுமுன் (பதி)
3.41. ராகம் பரஸ தாளம் ஆதி
பல்லவி
பரசு பாணி பசுபதே
பதமலர் துணை தயைநிதே (பரசு)
அனுபல்லவி
விரி சடையிலே கங்கையும்-இளம்
திங்களும் அணியும் ஸங்கர விபோ (பரசு)
சரணம்
தேவன் மாலும் பணியும் பாதா
பேதை எனக்குன் திருவருள் தா
ஆதி தேவா கெளரீ நாதா
அடிமை ராமதாஸன் போற்றும் (பரசு)
3.42. ராகம் முகாரி தாளம் ஆதி
பல்லவி
பராமுகம் தகுமோ உந்தன்
பதம் சரணடைந்த ஏழைபால் (பரா)
அனுபல்லவி
வரா பயம் தரும் கரார விந்தம்-இ
ரண்டு மெனைக் கண்டஞ்சி ஒளிந்ததேன் (பரா)
சரணம்
ஸ¤ரா ஸ¤ரரும் விரி தரா தலம் ஸகல
சரா சரம் பணி மயிலாபுரியில் வளர்
பராத் பரா கல்பகாம்பிகா ரமண
ஹரோம் ஹரோம் என்றிராப் பகல் பஜித்தும் (பரா)
3.43. ராகம் தர்பார் தாளம் ஆதி
பல்லவி
பாலனை(னம்) புரிவ தோர் பாரமா
பரமசிவா பார்வதீபதே என்னைப் (பாலனை)
அனுபல்லவி
ஆலம் அமுதென உண்டகிலாண்டம்
ஆண்டவன் நீயன்றோ அடிமை என்னை (பாலனை)
சரணம்
முவினையும் பிறவித் தளையும் அறுத்து ஜீவன்
முக்தியளிக்கும் முழு முதல் கடவுளே
தீவினை விளைநிலம் என்றெனைத் தள்ளினால்
திருவருட் கழகல்ல எனக்குமோர் புகலில்லை (பாலனை)
3.44. ராகம் பேகடா தாளம் ஆதி
பல்லவி
விசாலாக்ஷ¢ நாயகன் அர
விந்தப் பதம் பணி நெஞ்சமே (விசா)
அனுபல்லவி
கஜானனனொடு குஹனை ஈன்ற
கருணையங் கடல் தனை உலகெலாம்
இசை பரவு காசி நகரெழுந்தருள்
அன்ன பூரணி என்னும் அன்னை (விசா)
சரணம்
பாசவலையில் சிக்கிச் சுழலில்
பஞ்சு போல் நொந்துழல வைத்தாய்
ஈசனையும் மறந்த மட நெஞ்சே
எனக்கும் சுகமில்லை உனக்கும் சுகமில்லை
மோசம் போனது போதுமே - மும்
முர்த்திகளுள் முதல் முர்த்தியை - விஸ
வேஸவரனை இறைவா அபயமென்று
விரைந்து மலரடி பணிந்து நில் ஸ்ரீ (விசா)
3.45. ராகம் மோஹனம் தாளம் ஆதி
பல்லவி
செளந்தர்ய வெள்ளந்தனில் என் உள்ளம்-ம
யங்கி விழுந்து அமிழ்ந்ததே-ஐயன் (செளந்தர்ய)
அனுபல்லவி
காந்த சக்தியால் ஊசிபோல - பி
க்ஷ¡டனக் கோலமான கபாலியின் (செளந்தர்ய)
சரணம்
மாலயனும் நான் மறையும் தேடிக்
காணாத மலரடி இரண்டி னழகும்
வரிப்பிலித்தோல் ஆடையழகும்-நவ
மணிமாலை தலை மாலை மார்பழகும்-மிளிர்
நீல கண்டமும் அருள் மழை பொழி-குறு
நகை நிலா வீசும் மதிமுக அழகும்
பாலசந்திரன் அரவுநதி அணிசடையும்
ராமதாஸன் இரு கண்குளிரக் கண்ட
3.46. ராகம் சக்ரவாகம் தாளம் ஆதி
பல்லவி
அவாங் மனஸ கோசரம் சங்கரம்
ஹரம் பஜத ம்னுஜா பவஹரம் (அவாங்)
அனுபல்லவி
பவானி மானஸார விந்த
பாஸகரம் க்ருபாகரம் புரஹரம் (அவாங்)
சரணம்
அனாத்யந்தம ஜனீம் ப்ரணதார்த்தி
ஹரம் ஹரி விரிஞ்சார்ச்சித சரணம்
ஸனாதனம் சந்த்ர கலாதரம் - நிடில
நேத்ரம் பஸமோ தூளித காத்ரம்
3.47. ராகம் ஹிந்தோளம் தாளம் ஆதி
பல்லவி
கைலாஸாசல வாஸா சர்வேசா
கபாலீ கல்பகாம்பிகேசா (கை)
அனுபல்லவி
சைலாதி ராஜஸ¤தா ப்ராணேச
சரணாகத பரிபாலக பூலோக (கை)
சரணம்
பக்த வத்ஸல விபோ சம்போ
அனாத நாத ப்ரபோ ஸவயம் போ (கை)
பஸமோ தூளித காத்ரா த்ரி நேத்ரா
பரம தயாளோ பவித்ர சரித்ரா (கை)
ராம தாஸ வந்தித சரணா
காமாந்தகா த்ருபுராரே பாஹிமாம் (கை)
3.48. ராகம் பைரவி தாளம் ஆதி
பல்லவி
ஸ்ரீ விஸவனாதம் ப ஜே
ஸ்ரீ விசாலாக்ஷ¢ ஸனாதரம் (ஸ்ரீ)
அனுபல்லவி
பூவிஸருத வாராணசி
புரவரஸதனம் ஸ¤ந்தர வதனம் (ஸ்ரீ)
சரணம்
அன்ன பூர்ணேஸவரி ப்ராணேஸம்
அக ஹர கங்காதீர நிவேஸம்-ப்ர
ஸன்னம் அலங்க்ருத காசி நகரம்
சங்கரம் ஹரம் சிசி கலா தரம்
மத்யம காலம்
ஸர்வ ஜகன் மங்களகர தீக்ஷம்
ஸகல மனுஜ குல க்ருபா கடாக்ஷம்
கர்வித கால ஹரம் நிடி லாக்ஷம்
கால கண்டம் ஆருட மஹோக்ஷம்
3.49. ராகம் ராகமாலிகை தாளம் ஆதி
ராகம் - பெளளி
பல்லவி
கற்பக வல்லீ வாம கபாலின்
கருணயா பாலய சம்போ (கற்)
சரணம்
அஜ ஸ¤ரபதி முரஹர முக ஸகல ஸ¤
ராஸ¤ர பூஜித சரண விபோ
ஆகம வேத புராணஸ¤ கீர்த்தித
நாக பூஷண சங்கர போ (கற்)
ராகம் - கேதாரம்
இந்து கலா புஜகேந்த்ர ஸ¤ராபஹா
லங்க்ருத ஸ¤ந்தர சீர்ஷ விபோ
ஈச லலாட விலோசன பஸித- வி
ராஜித தவள களேபர போ (கற்)
ராகம் - பிலஹரி
உடுபதி ஹ¤தபுக் தினமணி நயன-க்ரு
பாகர- சங்கர ஸாம்ப விபோ
ஊர்த்வ நடன கோலா ஹலஹருதய-வி
நோத ஸவயம்போ ஸதாசிவா (கற்)
ராகம் - தேவகாந்தாரி
ரிஷிவர ஸனகாதிக ஸம்ஸய ஹர
சின்முத்ராங்கித கர கமலா
ரிக் ப்ரப்ருதி ஸருதி வர்ணித வைபவ
வ்ருஷப த்வஜ வ்யோ மகேச சம்போ (கற்)
ராகம் - அஸாவேரி
ஏனாங்க மனோஹர ஸ¤ஸமித வத
னார விந்த பரசிவ சம்போ
ஜல பில ஸக கைலாஸாலய
சைல ஸ¤தா ரமண சிவ சம்போ (கற்)
3.50. ராகம் நடபைரவி தாளம் ஆதி
பல்லவி
பஜனை செய்வோம் வருவீர் - ராம (பஜனை)
அனுபல்லவி
நிஜ ஸ¤கம் வேண்டின் நெஞ்சம் தனிலே
நிர்மல மெய்யன்புடனே ஸீதா ராம (பஜனை)
சரணம்
பொருளொன்றே பல பெயர் கொண்டாலும்
பொதுவாம் தெய்வமும் ஒன்றே - அதனால் (பஜனை)
ஸகல உயிர்க்குமவன் தந்தையைப் போன்றவன்
ஜாதி மதம் முதல் உபாதியறியான் ஸீதாராம (பஜனை)
3.51. ராகம் மாயாமாளவ கெளளை தாளம் ஆதி
பல்லவி
மஹிமையறியத் தரமா ராமா-என்-பி
ழை மன்னிப்பதோர் பாரமா-மறை புகழும் நின் (மஹிமை)
அனுபல்லவி
ஸகல ஜகன்னாதா யுக ப்ரளயத்திலும்
ஸாது ஜனங்கள் ஸதா பஜிக்கும் திருநாம (மஹிமை)
சரணம்
காகாஸ¤ரன் கொடும் பிழை நினைந்த் தொருபுல்லை
வெங்கணை யெனத் தொடுத்தாய்-ஈரேழுலகில் புகலின்றி
காகா தயாகரா அன்னை ஸ¤தா மனோஹரா
எனக்கதற இரங்கி-ஓர் கண்ணோடுயிர் கொடுத்தாய் நின் (மஹிமை)
3.52. ராகம் மாண்டு தாளம் ஆதி
பல்லவி
ராமனை பஜித்தால் நோய்வினை தீரும்-வீண்
சஞ்சலம் |